இன்றைய இலங்கை அதிபர் தேர்தலை மார்க்சிய லெனினியவாதி எப்படி பார்பது?
மத்திய கால நிலையுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு மாபெரும் வரலாற்று முன்னேற்றமாக இருந்த போதிலும், அது எப்போதும் முதலாளித்துவத்தின் கீழ் கட்டாயமாயும் வரையறுக்கப்பட்ட மொட்டையான பொய்யான போலியான ஒன்றாகவும் செல்வந்தர்களுக்கு ஒரு சொர்க்கத்தையும் சுரண்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாயப்பொறியமைவையும் மோசடியாகவும் நிலவும். ஒவ்வொரு முதலாளித்துவ ஜனநாயகம் செல்வந்தருக்குகந்த ஜனநாயகமாயாகும்.
ஜனநாயகத்தூண்களான முதலாளித்துவ நாடாளுமன்றத்தை எடுத்துக் கொள்வோம். ஜனநாயகம் எவ்வளவு அதிகம் உயர்வாக வளர்ச்சி அடைகிறது அவ்வளவு அதிக அளவில் முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் பங்கு மார்க்கெட் மற்றும் வங்கி அதிபர்களால் ஆட்படுத்தப்படுகின்றன. ஆக முதலாளிகளால் வழங்கப்படும் ஜனநாயகம் ஆனது ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கானவை அல்ல. மார்க்சிய ஆசான்களின் வார்த்தையே.
ஆக இங்கு பாராளுமன்றம் யாருக்காந்து என்பதனை தெளிவாக நமது ஆசான்கள் வரையறுத்துள்ளனர் அதனை இங்குள்ள இடதுசாரி என்பவர்கள் எந்தளவு புரிந்துள்ளனர் என்பது அவர்களின் செயலில் புரிந்துள்ளவையே.
ஆக நமக்கான வழிகாட்டுதல் என்ன?
மக்களை வெறும் ஓட்டு போடும் இயந்திரமாக சிந்திக்கின்றனர் ஆட்சியாளர்கள், அந்த ஓட்டை பெருவதற்காகவே இங்கே ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் நகர்வும் உள்ளது. ஓட்டை பெருவதும் நாட்டில் ஆட்சியை பிடிப்பதும் நோக்கமாக கொண்ட இந்த ஓட்டரசியல்கட்சிகள் இங்குள்ள மக்கள் உண்பதை பற்றியோ வாழ்வதை பற்றியொ தவறியும் பேசுவதில்லை.பேசினாலும் செயல்படுவதில்லை, அதற்கான திட்டவரைவு அவர்களிடம் இல்லை.
முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதி களுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது "முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும், பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும். தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும், ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம் சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .மேலும் லெனின் கூறினார்,"புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளி வர்க்கத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" ( லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).
1871 ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூனில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ அமைப்பை அப்படியே பயன்படுத்தி கொள்ள முடியாது என்றும், பாட்டாளி வர்க்கம் தனக்கான பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவிக் கொள்வதே முதலாளித்துவ அரசதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இயலும் என்றும் மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்.
“அனைவருக்கும் வாக்குரிமை எனபது நமது எண்ணிக்கையை ஒருமுறை கணக்கு பார்க்க அனுமதிக்கிறது என்பதைவிட வேறெந்த பலனும் இல்லை. மக்கள் அனைவர் முன்பும், நமது தாக்குதலை எதிர்த்துத் தமது கருத்துகளையும், செயல்களையும் தாங்கி தற்காத்து முன்வரும்படி எல்லா கட்சியையும் கட்டாயப் படுத்தியது.நமது எதிரிகளுடனும் அதற்கு வெளியே மக்களிடையும் பேசுவத்ற்க்கு ஒரு மேடையை தந்தது. பத்திரிக்கை மூலமோ கூட்டங்கள் மூலமோ கருத்து வெளியிடுவதை விடவும் முற்றிலும் வெறுபட்ட அதிகார பலத்தோடும், சுதந்திரமாயும் பேசுவதற்க்கு வகை செய்தது”-எங்கெல்ஸ் (பிரான்சில் வர்க்க போராட்டங்கள் 1848-1850 நூலுக்கான முன்னுரையில்). முதலாளித்துவ நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எங்கெல்ஸ் கூறுவதைக் கொண்டு புரட்சியைக் கைவிட வேண்டும் என ஒருபோதும் அர்த்தப் படுத்தி கொள்ளக் கூடாது. அவர், புரட்சிதான் தொழிலாளி வர்க்கத்தின், ஒரே உண்மையான வரலாற்று உரிமை என்று கூறினார்.
பாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும், முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாது. குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் உறுப்பினராய் இருந்து கொண்டுதான் முதலாளித்துவ சமுதாயத்தையும் பாராளுமன்ற முறையையும் எதிர்த்துப போராட்டம் நடத்த முடிகிறது. போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும் - முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத் தேவையில்லை - உபயோகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள் அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்."
(லெனின் பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2).
இங்கே பாராளுமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் மக்கள் பிரதிநிதிகளை(?)
தேர்தல் என்பதே ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்வதற்குதான் எனும் பொழுது அவை வெளித்தோற்றத்தில் பார்க்கும்பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு போல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு, அதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள் நலனுக்கு விரோதமான செயலில் இறங்கினாலோ, அவரை ஒன்றும் செய்ய இயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை.
முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மேம்போக்காக தொழிலாளர்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்களின் சில சீர்த்திருத்த நலன்கள் குறித்து பேசினாலும் கூட அவை ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டே அதை செய்கின்றன. இந்த கட்சிகள் தற்போது நிலவி வரும் சமூக அமைப்பே (சுரண்டல் தன்மையுடைய) அத்தனை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் என்றும், தனிச் சொத்துடைமையை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ சமூகமே மக்களின் நலன் காக்கும் சமூகம் என்று பறைச்சாற்றி ஆளும் வர்க்கங்களை தாங்கி பிடிக்கின்றன.
வறுமை, வேலை இல்லாத நிலை, விலையேற்றம், ஊழல், இலஞ்சம், அரசின் அடக்குமுறை உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே ஒரு எழுச்சிகரமான சூழல் உருவாகும் போது, சாதி, மத, இன, மொழி, வட்டார சிக்கல்களை முன்னுக்கு நிறுத்தி அடித்தட்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குகிறது. மேலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அணுகுமுறை தான் சமூக சிக்கல்களுக்கு காரணம் என்று கூறி புதிய கட்சிகளை (முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்) முன்னுக்கு கொண்டு வந்து அவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்றி தன்னுடைய வர்க்க நலன்களை முதலாளித்துவ வர்க்கம் காப்பாற்றி கொள்கிறது. இதன் மூலம் முதலாளித்துவமானது தன் மீது இருக்கும் எதிர்ப்பை தற்காலிகமாக மட்டுப்படுத்தி, திசைதிருப்புகிறது. தன்னுடைய வீழ்ச்சியை, அழிவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.
அவைதான் இன்றைய இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்.
நீங்கள் அதனை தினம் அவரின் செயலில் காண நேரிடும்.
தொடர்ந்து விவாதிப்போம் வாருங்கள் தோழர்களே.
No comments:
Post a Comment