மனித இனம் தோற்றம் வளர்ச்சி- இன கொள்கையும் அவை யாரின் தேவைகானது?-1

 மனித இனப்‌ பிரச்சினையின்‌  உயிரியல்‌ அம்சங்கள்‌ குறித்த யோசனைகள்

பின்‌ இணைப்பு 1

(யுனெஸ்கோ. மனித இனப்‌ பிரச்சினையின்‌ உயிரியல்‌ அம்சங்கள்‌ குறித்து நிபுணர்களின்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌, மாஸ்கோ, 12-18 ஆகஸ்டு, 1964) மனித இனப்‌ பிரச்சையின்‌ உயிரியல்‌ அம்சங்கள்‌ குறித்துத்‌ குங்கள்‌ கருத்துக்களைக்‌ தெரிவிப்பதற்காகவும்‌ அதோடு, மனித இனத்தையும்‌ இன வேறுபாடுகளையும்‌ பற்றி 1957ல்‌ தயாரிக்கப்‌ பட்ட அறிக்கையை விரிவுபடுத்தி, மனித இனத்தையும்‌ இனக்‌ காழ்ப்புக்களையும்‌ பற்றி 1966ல்‌ வெளியிடுவதாகதச்‌ இட்டமிடப்‌ பட்ட அறிக்கையில்‌ சேர்க்க உத்தேசித்துள்ள உயிரியல்‌ பிரிகளைத்‌ குயாரிப்பதற்காகவும்‌ யுனெஸ்கோவால்‌ அழைக்கப்பட்ட, கீழே பெயர்கள்‌ குறிக்கப்பட்டுள்ள நிபுணர்கள்‌ பின்வரும்‌  யோசனைகளை ஒரு மனதாக ஏற்றுக்‌ கொண்டார்கள்‌.

1. தற்கால மனிதர்கள்‌ அனைவரும்‌ Homo sapens என்னும்‌ ஓரே இனவகையைச்‌ சேர்ந்தவர்கள்‌, ஒரே மூலத்திலிருந்து தோன்‌றியவர்கள்‌. மனிதர்களின்‌ குழுக்கள்‌ எப்படி, எப்போது தனிப்‌ பிரிந்தன என்பது விவாகுத்துக்கு இடமான பிரச்சினை.

2. மனிதர்களுக்கு இடையே உயிரியல்‌ வேறுபாடுகள்‌ மரபுவழி வந்த கட்டமைப்பில்‌ உள்ள வேறுபாடுகளாலும்‌ மரபுவழி வந்த அடிப்படை மீது சூழ்நிலையின்‌ செயல்பாட்டாலும்‌ அமைகின்றன. இவ்விரு காரணிகளின்‌ பரஸ்பர வினைப்பாட்டால்‌ தோன்றுகின்றன இவற்றில்‌ பெரும்பகுதி வேறுபாடுகள்‌.

3. ஒவ்வொரு மனிதக்‌ குடியிலும்‌ மரபுவழி வந்த இயல்புகளின்‌ விரிவான பல்வகைப்பாடு காணப்படுகிறது. பாரம்பரியத்தில்‌ ஓரே மாதிரியான குடி. என்ற அர்த்தத்தில்‌ தாய் இனம்‌ மனிதனுக்குக்‌ கிடையாது.

4. புவிக்‌ கோளத்தின்‌ வெவ்வேறு பகுதிகளில்‌ வாழும்‌ குடியினருக்கு இடையே உடல்‌ அடையாளங்களின்‌ சராசரி அளவுகளில்கணிசமான வேற்றுமைகள்‌ காணப்படுகின்றன. பல சந்தர்ப்பங்‌களில்‌ இந்த வேற்றுமைகள்‌ அடிப்படையில்‌ மரபுவழி வந்த அம்சத்தையும்‌ கொண்டிருக்கின்றன. மரபுவழி வந்த ஒரே அடையாளங்கள்‌ வெவ்வேறு தொகையினரிடையே தோன்று வதில்‌ இந்த வேற்றுமைகள்‌ மிக அடிக்கடி புலப்படுகின்‌ றன.

5. மரபுவழி வந்த உடல்‌ அடையாளங்கள்‌ பற்றிய விவரங்களை அடிப்படையாகக்‌ கொண்டு மனித குலத்தைப்‌ பெரிய இனங்களாகவும்‌ பெரிய இனங்களை இன்னும்‌ குறுகிய உட்பிரிவுகளாகவும்‌ (குடிகளின்‌ குழுக்களையோ அல்லது சில வேளைகளில்‌ ஒரே குடியையோ கொண்ட இனங்களாகவும்‌) பிரிக்கும்‌ வெவ்வேறு யோசனைகள்‌ முன்‌ வைக்கப்பட்டன. அனேகமாக எப்போதும்‌ குறைந்த பட்சம்‌ மூன்று பெரிய இனங்கள்‌ தனியாகப்‌ பாகுபடுகின்‌றன. இனங்களைப்‌ பாகுபாடு செய்வதில்‌ பயன்படுத்தப்படும்‌ அடையாளங்களின்‌ பூகோள வேற்றுமைகள்‌ சிக்கலானவை. அவற்றில்‌ துலக்கமான பிளவுகள்‌ காணப்படுவதில்லை. எனவே இந்தப்‌ பாகுபாடுகளை, அவை எத்தசையவையாக இருந்தாலும்‌ சரி, மனித குலத்தைக்‌ கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட வகைப்‌ பிரிவுகளாகப்‌ பகுக்க முடியாது. மனிதகுல வரலாற்றின்‌ சிக்கல்‌ காரணமாக, இனப்‌ பாகுபாட்டில்‌ சில குழுக்களின்‌ இடத்தைச்‌ சிரமத்துடனேயே நிர்ணயிக்க முடியும்‌. இடைநிலையில்‌ உள்ள குடிகளின்‌ விஷயத்‌தில்‌ இத்தகைய இடர்ப்பாடு சிறப்பாக நேர்கிறது. பல மானிடஇயலார்‌ மனிதர்களின்‌ மாறுந்‌ தன்மை பெருத்த முக்கியத்துவம்‌ உள்ளது என்று ஒப்புக்‌ கொள்கிறார்கள்‌. ஆனால்‌ இந்தப்‌ பாகுபாடுகளின்‌ விஞ்ஞான மதிப்பு அளவறுத்தது என்றும்‌, அளவுமீறிய பொதுமைப்பாட்டுக்குத்‌ தூண்டுவதால்‌ இவை அபாயமானவைகூட என்றும்‌ அவர்கள்‌ கருதுகிறார்கள்‌. ஒரே இனத்தை அல்லது ஓரே கூடியைச்‌ சேர்ந்த தனி நபர்‌களுக்கு இடையே காணப்படும்‌ வேற்றுமைகள்‌, இனங்களுக்கு இடையிலோ அல்லது குடிகளுக்கு இடையிலோ சராசரி அளவில்‌ காணப்படும்‌ வேற்றுமைகளைக்‌ காட்டிலும்‌ அடிக்கடி அதிகமாய்‌ இருக்கின்றன. இனத்தின்‌ தன்மைச்‌ ித்திரிப்புக்குப்‌ பயன்படுத்தப்படும்‌ மாறுந்தன்மை கொண்ட தனிச்‌ இறப்பு இயல்புகள்‌, ஒன்றுக்கு ஒன்று சார்பு இல்லாமல்‌ மரபு வழியில்‌ பெறப்படுகின்றன, அல்லது ஒவ்வொரு குடிக்கு உள்ளேயும்‌ வெவ்வேறு அளவில்‌ நிலவும்‌ பரஸ்‌பரத்‌ தொடர்பைக்‌ காட்டுகின்றன. எனவே, பெரும்பாலான தனி நபர்களிடமுள்ள அடையாளங்களின்‌ சேர்க்கை, இனத்தின்‌ மாதிரித்‌ தன்மைச்‌ சித்திரிப்புக்குப்‌ பொருந்துவது இல்லை.

6. விலங்குகளில்‌ போலவே மனிதனிலும்‌, ஒவ்வொரு குடியின்‌ பாரம்பரிய அமைவும்‌ சூழலுக்குத்‌ தகவமைப்பு பெறுவதை நோக்கமாகக்‌ கொண்ட இயற்கைத்‌ தேர்வின்‌ பல்வேறு காரணி கள்‌, பாரம்பரியத்தை நிர்ணயிக்கும்‌ டிஸாக்ஸிரிபோ நுக்ளேனிய அமில(DNA) கூட்டணுக்களில்‌ ஏற்படும்‌ மாறுதல்களின்‌ காரணமாகிகழும்‌ தற்செயலான சடுதி மாற்றங்கள்‌, முடிவில்‌ குடியின்‌ அள வையும்‌. அந்தக்‌ குடிக்கு உள்ளே குடும்பங்களின்‌ அமைவையும்‌ பொறுத்து மரபு வழியான பண்பு அடையாளங்களின்‌ தொடர்‌ நிகழ்வில்‌ ஏற்படும்‌ தற்செயல்‌ மாறுதல்கள்‌ ஆகியவற்றின்‌ மாறுபடுத்தும்‌ பாதிப்புக்கு உள்ளாகிறது. சில உடல்‌ அடையாளங்கள்‌, எந்தச்‌ சூழலில்‌ ஆயினும்‌ மனிதன்‌ உயிர்‌ வாழ்வதற்குச்‌ சர்வவியாபகமான, அடிப்படை உயிரியல்‌ முக்கியத்துவம்‌ உள்ளவை. இனப்‌பாகுபாடுகள்‌ ஆதாரமாகக்‌ கொள்ளும்‌ வேற்றுமைகள்‌ இம்மாதிரி அடையாளங்களைச்‌ சேர்ந்தவை அல்ல. எனவே, உயிரியல்‌ நோக்கில்‌ இந்த வேற்றுமைகள்‌ ஓர்‌ இனத்தின்‌ பொதுவான உயர்வையோ அல்லது முழுமதிப்பு இன்‌ மையையோ பற்றிப்‌ பேசுவதற்கு எந்த வகையிலும்‌ இடம்‌ தருவது இல்லை.

7. மனிதனின்‌ பரிணாமம்‌ தனக்கே உரிய முதன்மை முக்கியத்துவம்‌ உள்ள தனிச்‌ சிறப்புக்களைக்‌ காட்டுகிறது. இன்று பூமியின்‌ மேற்பரப்பு முழுவதிலும்‌ பரவி இருக்கும்‌ மனித இன வகையின்‌ கடந்த காலம்‌ குடிபெயர்வுகளும்‌, மனிதன்‌ பரவி வாழ்ந்த நிலப்பரப்புக்களின்‌ விரிவுகளும்‌ குறுக்கங்களும்‌ நிறைந்தது. இந்தக்‌ காரணத்தால்‌ குறித்த நிலைமைகளுக்குத்‌ கேற்பதகவமைத்து கொள்ளும்‌ ன்மையைவிட, பல்வேறு வாழ்க்கை நிலைமைகளுக்குப்‌ பொதுவாகத்‌ தன்னை இசைவித்துக்‌ கொள்ளும்‌ திறனே மனிதனிடம்‌ மேலோங்கி இருக்கிறது. மனிதனால்‌ எந்தத்‌ துறையிலும்‌ பெறப்பட்ட வெற்றிகள்‌ பல்‌லாயிரம்‌ ஆண்டுக்‌ காலத்தில்‌, பிரத்தியேகமாக இல்லாவிட்டாலும்‌ முதன்மையாக, பண்பாட்டுத்‌ துறையில்‌ பெற்ற முன்னேற்றங்களின்‌ விளைவாக அடையப்பட்டனவே தவிர பாரம்பரியத்தின்‌ விளைவாக அல்ல. இந்தக்‌ காரணத்தினால்‌ தற்கால மனிதனில்‌ இயற்கைத்‌ தேர்வின்‌ பங்கு மாறிவிட்டது. மனிதார்களின்‌ குடிகளது இடம்பெயரும்‌ தன்மையின்‌ விளைவாகவும்‌ சமூகக்‌ காரணிகளின்‌ பாதிப்பினாலும்‌, பல்வேறு குழுக்களின்‌ கலப்பு விலங்கின வரலாற்றில்‌ ஆற்றியதைக்‌ காட்டிலும்‌ மனித இனத்தின்‌ வரலாற்றில்‌ மிக முக்கியமான பங்கு ஆற்றியது. இந்தக்‌ கலப்பின்‌ விளைவாக, முன்பு உருவாகியிருந்த வேற்றுமைகள்‌ மறைந்துவிட்டன. கடந்த காலத்தில்‌ எந்தக்‌ குடியும்‌, எந்த மனித இனமும்‌, பற்பல கலப்பு நிகழ்ச்சிகளுக்கு உள்ளாயிற்று. இத்‌தகைய கலப்பு மேலும்‌ தீவிரமாகும்‌ போக்கு கொண்டிருக்கிறது. மனிதர்கள்‌ கலப்பதற்கு, சமுதாய, பண்பாட்டுத்‌ தடைகள்‌, பூகோளத்‌ தடைகளைவிடக்‌ குறைந்தவை அல்ல. *

8. மனிதக்‌ குடிகளின்‌ பாரம்பறிய பண்புகள்‌ கலப்பின்‌ விளைவாகவும்‌ மேலே விவரிக்கப்பட்டுள்ள வேறுபடுத்தும்‌ வினைக்கூறுகளின்‌ விளைவாகவும்‌ எல்லாக்‌ காலங்களிலும்‌ உறுதியற்ற சமநிறை நிலையில்‌ இருக்கின்றன. தமக்கு இயல்பான தனித்‌ தன்மைகளின்‌ கூட்டால்‌ நிர்ணயிக்கப்படும்‌ பொதுமைகள்‌ என்ற வகையில்‌ மனிதஇனங்கள்‌ உரு ஆக்கமும்‌ உருச்‌ சிதைவும்‌ பெற்ற வண்ணமாய்‌ இருக்கின்றன. மனித இனங்கள்‌ பல விலங்கு இனங்களைக்‌ காட்டிலும்‌ மிகக்‌ குறைந்த அளவே துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. குறித்த நோக்கங்களுடன்‌ செய்யப்படும்‌ தேர்வின்‌ விளைவால்‌ தோன்றும்‌ வளர்ப்பு விலங்கு வகைகளுடன்‌ மனித இனங்களை எந்த விதத்திலும்‌ ஒன்றாசுக்‌ கருத முடியாது.

9. கலப்பு பொதுவாக மனிதகுலத்துக்கு உயிரியல்‌ நோக்கில்‌ இங்கு விளைக்கிறது என்று ஒருபோதும்‌ நிரூபிக்கப்படவில்லை, மாறுக, சுலப்பு, மனிதர்களின்‌ குழுக்களுக்கு இடையே உயிரியல்‌ தொடர்புகளை நிலை நிறுத்துவதற்கும்‌, விளைவாக, பல்வகைப்பாட்‌டில்‌ மனிதகுலத்தின்‌ ஒருமையைக்‌ காப்பாற்றுவதற்கும்‌ விரிவாக உதவுகிறது. உயிரியல்‌ நோக்கில்‌ மணத்தின்‌ விளைவுகள்‌, மணம்‌ புரிவோரின்‌ தனிப்பட்ட பாரம்பரியப்‌ பண்புகளைப்‌ பொறுத்திருக்கின்றனவே தவிர அவர்களுடைய இனங்களை அல்ல. எனவே, வெவ்வேறு இனங்‌களைச்‌ சேர்ந்தவர்களுக்கு இடையே மணங்களைத்‌ தடை செய்ய உயிரியல்‌ காரணங்கள்‌ எவையும்‌ இல்லை. இத்தகைய மணங்களுக்கு எதிராகக்‌ கூறப்படும்‌ ஆலோசனைகளுக்கும்‌ உயிரியல்‌ காரணங்‌ சுள்‌ கிடையா.

10. மனிதன்‌ பிறந்த கணம்‌ முதலே, பாரம்பரியத்‌ தன்மை அற்ற தகவமைப்புக்குத்‌ தேவைப்படும்‌ பண்பாட்டுச்‌ சாதனங்‌ சளைப்‌ பெற்று விடுகிறான்‌. இந்தச்‌ சாதனங்களின்‌ செயல்‌ வன்மை நாளுக்கு நாள்‌ மிகுந்து கொண்டு போகிறது.

11. சமுதாய, பூகோளத்‌ தடைகளைத்‌ தகர்த்து விடும்‌ பண்‌பாட்டுக்‌ காரணிகள்‌ மண உறவுகளின்‌ எல்லைகளை விரிவாக்கி வருகின்றன. இவ்வாறு அவை தற்செயல்‌ ஊசலாட்டங்களைக்‌ குறைத்து (பாரம்பரிய மிதவை நிலை), குடிகளின்‌ பாரம்பரிய அமைவு மீது பாதிப்பு நிகழ்த்துகின்றன.

12. வழக்கமாக, பெரிய இனங்கள்‌ விரிந்து பரந்த நிலப்பரப்‌ புக்களில்‌ பரவியுள்ளன. மொழியிலும்‌ பொருளாதார அமைப்பி லும்‌ பண்பாட்டிலும்‌ பிறவற்றிலும்‌ வெவ்வேறான மக்கள்‌' இனங்‌ கள்‌ இந்த நிலப்பரப்புக்களில்‌ வாழ்கின்றன. எந்த நாட்டின, மத, பூகோள, மொழி, அல்லது பண்பாட்டுக்‌ குழுவும்‌ அந்தக்‌ காரணத்தினாலேயே இனமாக ருவாகிவிடுவது இல்லை. இனம்‌ என்ற கருதுகோள்‌ உயிரியல்‌ பண்புகளை மட்டுமே குறிக்கும்‌, ஆயினும்‌ ஒரே மொழி பேசுபவர்களும்‌ ஓரே பண்பாடு கொண்‌டவர்களும்‌ அன மனிதார்கள்‌ தமக்குள்‌ மணங்கள்‌ செய்து கொள்கிறார்கள்‌. இவற்றின்‌ விளைவாக ஒரு புறம்‌ உடல்‌ அடையாளங்களும்‌ மறுபுறம்‌ மொழி, பண்பாட்டு அடையாளங்களும்‌ ஒருங்கு சேர்வது ஓரளவுக்கு நிகழக்‌ கூடும்‌. ஆனால்‌ இவற்றுக்கு இடையே உள்ள காரணத்‌ தொடர்பு ஒருவருக்கும்‌ தெரியாது. பண்பாட்டுச்சிறப்புக்களை மரபுவழி வந்த இயல்புகளாகக்‌ கருத எதுவும்‌ இடம்‌ ருவது இல்லை.

13. கூறப்படும்‌ பெரும்பாலான இனப்‌பாகுபாடுகள்‌, இனங்‌களைப்‌ பிரிக்கும்‌ அடையாளங்களில்‌ உளப்‌ பண்புகளைச்‌ சேர்த்துக்‌ கொள்வதில்லை. தற்காலத்தில்‌ கையாளப்படும்‌ சில உளவியல்‌ பரீட்சைகளுக்கு விடைகள்‌ அளிக்கையில்‌, ஓரே குடியைச்‌ சேர்ந்த நபர்கள்‌ காட்டும்‌ வேறுபாடுகள்‌ பாரம்பரியத்தின்‌ பாதிப்பினால்‌ ஏற்பட்‌ டிருக்கலாம்‌ ஆயினும்‌, இந்தப்‌ பரிட்சைகளால்‌ மதிப்பிடப்‌ பெறும்‌ இயல்பு களைப்‌ பொறுத்தவரை, மனிதக்‌ குழுக்களின்‌ பாரம்பரியப்‌ பண்புகளுக்கு இடையே வேற்றுமை இருப்பதாக ஒருபோதும்‌ நிரூபிக்கப்‌ படவில்லை. அதே சமயம்‌, இந்தப்‌ பரிட்சைகளுக்கு அளிக்கப்பட்ட விடைகளில்‌ வேற்றுமை இயற்கை, பண்பாட்டு, சமூகச்‌ சூழலின்‌ விளைவாக ஏற்பட்டிருப்பது விரிவாகக்‌ காட்டப்பட்டிருக்கிறது. பண்பாட்டு நோக்கில்‌ வெவ்வேறான குடிகளின்‌ பொதுவான அறிவு வளர்ச்சிச்‌ சோதனைகள்‌ எனப்படுவற்றின்‌ விளைவுகளுக்கு இடையே காணப்படும்‌ சராசரி வேற்றுமைகளில்‌ பாரம்பரியத்தின்‌ சாத்தியமான பங்கைப்‌ பிரித்துக்‌ காண்பது அசாதாரணச்‌ சிக்கல்‌ நிறைந்ததாய்‌ இருப்பதால்‌ இந்தப்‌ பிரச்சனையை ஆராய்வது கடினம்‌ ஆகிறது மனித இனத்துக்கு இயல்பான சில உடலமைப்புத்‌ தன்மைகள்‌ போலவே, அறிவுத்‌ திறன்கள்‌ மலர்வதற்கு உரிய பாரம்பரியச்‌ சாத்தியக்கூறுகள்‌, எந்த இயற்கை, பண்பாட்டுச்‌ சூழலிலும்‌ இன வகை நிலவுவதற்கு இன்றியமையாத அளவுக்கு, சார்வவியாபகமான முக்கியத்துவம்‌ உள்ள உயிரியல்‌ பண்புகளைச்‌ சேர்ந்தவை ஆகும்‌ உல௫ன்‌ மக்கள்‌ இனங்கள்‌ நாகரிகத்தின்‌ எந்தத்‌ தரத்தையும்‌ எட்டுவதற்கு ஒரு நிகரான உயிரியல்‌ வாய்ப்புக்களை இப்போது பெற்றிருக்கின்றன என்று எண்ணப்படுகிறது. வெவ்வேறு மக்கள்‌ இனங்களின்‌ சாதனைகளுக்கு இடையே நிலவும்‌ வேற்றுமைகளுக்குக்‌ காரணம்‌ அவற்றின்‌ பண்பாட்டினது வரலாறே ஆகும்‌. ஓர்‌ அல்லது மற்றோர்‌ மக்கள்‌ இனம்‌ னிப்பட்ட உளப்‌பண்புகள்‌ கொண்டிருப்பதாகச்‌ சி வேளைகளில்‌ கூறப்படுகிறது. இந்தக்‌ கூற்றுகள்‌ எத்த அளவுக்கு ஆதாரம்‌ உள்ளவை என்து ஒருபுறம்‌ இருக்க, இத்தப்‌ பண்புகள்‌ பாரம்பரியத்தைச்‌ சேர்ந்தவை என்பதை, எதிரான சான்றுகள்‌ கிடைக்கும்‌ வரை, ஏற்க முடியாது. பொது அறிவு வளர்ச்சிக்கு உரிய மரபுவழி வந்த வாய்ப்புக்‌களையும்‌ பண்பாட்டுச்‌ சாதனைகள்‌ பெறுவதற்கு ஏற்ற திறமைகளையும்‌ பொறுத்தவரை, உடல்‌ இயல்‌ அடையாளங்கள்‌ விஷயத்தில்‌ போலவே, “உயர்ந்த'' இனங்களையும்‌தாழ்த்தஇனங்களையும்‌ பற்றிய கருத்தை அவற்றால்‌ நியாயப்படுத்த முடியாது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உயிரியல்‌ விவரங்கள்‌ இனக்‌ கொள்கைக்‌ கருத்துக்களுக்குத்‌ துலக்கமாக முரண்படுகின்றன. இனக்‌ கொள்கைக்கு ஒரு வகையிலும்‌ விஞ்ஞான ஆதாரங்கள்‌ காட்ட முடியாது. ஆராய்ச்சிகளின்‌ விளைவுகள்‌ விஞ்ஞானக்‌ ன்மை அற்ற நோக்கங்களுக்காகத்‌ திரிக்கப்படுவதை எதிர்ப்பதற்கு முழுமூச்சாகப்‌ பாடுபடுவது மானிட இயலாரின்‌ டமை ஆகும்‌.

ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌

கலந்து கொண்ட நிபுணர்கள்





No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்