தொன்மைக் கிரேக்கர்களின் எளிய பொருள்முதல்வாதமும் இயக்க இயவியலும்.
இந்திய தத்துவங்களான ஆதிகால பல போக்குகளை இங்கு கவனத்தில் கொண்டால் இந்த இரு போக்குகள் முதன்மையாக இருப்பதை காணலாம்.
தொன்மைக் காலக் கிழக்கு நாடுகளான எகிப்து, பாபிலோனியா, இந்தியா,
சீனா ஆகியவற்றிலும் கிரீஸ், ரோம் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் அடிமைச் சொந்தக்காரச் சமூகம் நிலவியது
என்பது வரலாற்றிலிருந்து தெரிகிறது. செல்வர்சுளான அடிமைச் சொந்தக்காரர்களும் மதகுருமாரும் வர்த்தகார்களும் இந்தச் சமூகத்தில் சுரண்டும் வர்க்கத்தினராக விளங்கினார்கள். உரிமைகள்
அற்ற அடிமைகள், சொற்ப நிலம் படைத்த குடியானவர்கள்,
கம்மியர்கள் ஆகியோரின் உழைப்பைச் சுரண்டி
இவர்கள் வாழ்ந்துவந்தார்கள். தங்களுக்குள்
பகைமை கொண்டு, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தின்
பொருட்டு உக்கிரமான போராட்டம் நிகழ்த்தி வந்த அடிமைச் சொந்தக்காரார்களது
குழுக்களின் கொள்கைவாதம் என்ற வகையில் தத்துவம் இந்நாடுகளில் தோன்றி வளர்ந்தது.
அடிமைகளையும் சுதந்திரக் குடிமக்களில் ஏழைகளையும்
பொறுத்தவரையிலோ,
அவர்கள் தேவைகளாலும் அளவிட இயலாதவாறு கடினமான உழைப்பினாலும்
நசுக்கப்பட்டு, விஞ்ஞானத்திலோ தத்துவத்திலோ
ஈடுபடும் வாய்ப்பே அற்றவர்களாக இருந்தார்கள். அடிமைச் சொந்தக்காரச் சமூகத்தில்
நிலவிய மத-கருத்து முதல்வாதகப் பிரபஞ்ச அறிவு, பிரபுவம்சத்தினரான
ஒருசில அடிமைச் சொந்தக்காரர்களுக்கு லாபகரமான பிற்போக்குள்ள அரசாட்சி முறை
வடிவங்களை என்றென்றும் நிலையாக வைத்திருப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஆயினும் நெடுங்காலத்துக்கு முற்பட்ட அந்தச்
சகாப்தத்திலும் சமூகத்தில் முன்னணிச் சக்திகளும் நிலவின, கொடுங்கோல் ஆட்சிமுறைகளை இவை எதிர்த்தன.
பிரபஞ்சம் பற்றிய கருத்து முதல்வாத, மத-புராணக்
கற்பனைகளை எதிர்த்து இவை போராடின. பல்வேறு சாயல்கள் கொண்ட தத்துவச் சிந்தனைகள் இத்தப்
போராட்டத்தில் உருவாயின. நாளடைவில் இவை வெவ்வேறு தத்துவப் போக்குகளாக
வளர்ந்தன. அடிமைச் சொந்தக்காரச் சமூக நிலைமைகளில் தத்துவச் சிந்தனை சிறப்பாக
உயர் வளர்ச்சி பெற்றது தொன்மைக் கிரீஸ் நாட்டில் ஆகும்.
தொன்மைக்காலக் கிழக்கு நாடுகளில் திரட்டப்பட்டிருந்த
இயற்கை விஞ்ஞான அறிவையும் தத்துவக் கருத்துக்களையும் புரிந்துகொண்டு தொன்மைக்
கிரேக்கச் சிந்தனையாளர்கள் அவற்றை மேலும் வளர்த்தார்கள்.
அப்போதுதான் தோன்றியிருந்த விஞ்ஞானத் துறையிலும் தத்துவத் துறையிலும் பல
புதுமைகளை அவர்கள் புகுத்தினார்கள். தொன்மைக் கிரேக்கத்
தத்துவத்தின் பிரதிநிதிகள் பொருள்முதல்வாதத்தையும் இயக்க வியலையும் உருவாக்குவதில் ஆற்றிய பங்கை முதன்மையாகக் கருத்தில் கொண்டே அந்தத்
தத்துவத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் நிச்சயிக்கிறோம். பண்டைக்
கூட்டுச் சமூக அமைப்புக்குப் பதிலாக அடிமைச் சொந்தக்கார அமைப்பு வந்த காலப்பகுதியில் தோன்றியது தொன்மைக் கிரேக்கத் தத்துவம். தொன்மைக்
கிரீஸின் முதல் தத்துவ அறிஞர்கள் இயல் பாயெழுந்த பொருள்முகல்வாதிகள் ஆவர்.
ஓரே முழுமை என்ற வகையில் பிரபஞ்சம் என்ன என்று புரிந்துகொள்ளவும் எல்லா
இயற்கைப் பொருள்களுக்கும் முதல் அடிப்படையை, முதல் தொடக்கத்தைக் கண்டுகொள்ளவும் அவர்கள் முயன்றார்கள்.
தொன்மைக் கிரேக்கப் பொருள்முதல்வாகத்துக்கு வித்திட்ட வராக தேலீஸ் (Thales)
என்பவா் (சுமார் கி. மு. 624-527)கருதப்படுகிறார்.
நிலவுபவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆவது நீர் என அவர் கருதினார். அவருடைய
கருத்துப்படி எல்லாப் பொருள்களுக்கும் நீரே பொருளியல் முதல்தொடக்கம் ஆகும்:
எல்லாம் அதிலிருந்தே தோன்றுகின்றன, எல்லாம் அதாகவே
மாறுகின்றன. அவருக்குப் பின் வத்தவரான அனாக்ஸி மாண்டர் (Anaximander) (சுமார்
கி.மு 610—546) வரையறையற்ற ஊடகத்தை (அப்பெய்ரோன்) அடிப்படையாக
எடுத்துக் கொண்டார். இந்த ஒரே பொருளியல் முதல்தொடக்கம் எப்போதும் இடையருத
இயக்கத்தில் இருப்பதாக அவர் காட்டினார். அனாக்ஸிமாண்டரின் எண்ணப்படி
அப்பெய்ரோனிலிருந்து எதிர்நிலைகள் உண்டாகின்றன. இவை ஒன்று கூடுவதனாலேயே பொருள்களின்
பல்வகைத் தொடக்கங்கள்(நிலம், நீர், நெருப்பு) உருவாகின்றன. அனாக்ஸிமாண்டரின் சீடரான அனாக்ஸிமெனிஸ் (சுமார் கி. மு,
588-525) நிலவுவை யாவற்றுக்கும் முதல்தொடக்கம் காற்றே என்று
கருதினார். அவரது கருத்துப்படி, காற்றே எல்லாப்
பொருள்களதும் அடிப்படையின் எல்லையற்ற, பண்புகள் அற்ற
அடிப்படை. அது வெவ் வேறு நிலைகளில் காணப்பட வல்லது. அடர்த்தி குறைந்ததும் அது
நெருப்பாக மாறுகிறது. அடர்ந்து இறுகியதும் அது வீசு காற்று, நீர், கல் முதலியன ஆகிறது. பிரபஞ்சத்தின்
ஒருமையையும் பல்வகைத் தன்மையையும் எல்லாப் பொருள்களும் எதனால் அனவை
என்பதையும் பற்றித் தொன்மைக் கிரேக்கத் தத்துவ
அறிஞர்கள் கொண்டிருந்த கருத்துக்கள் இத்தகையன. இந்தக் கருத்துக்கள் இன்னும்
தொடக்க நிலையில் இருந்தன. தெளிவற்ற அனுமானங்களின் தன்மையைக் கொண்டிருந்தன.
ஆயினும் சுற்றியுள்ள பிரபஞ்சம் அவற்றின் உதவியால் புரிந்துகொள்ளப்பட்டது.
பிரபஞ்சத்தில் நிகழும் பல்வித மாற்றங்களின் அடிப்படையில் இருந்த பொதுமை
கிரகித்துக்கொள்ளப்பட்டது. இயற்கையின் விதி முறைக்குட்பட்ட
மாறுதல்களை விளக்குவதற்கு முதல் முயற்சிகள் செய்தவர்கள்
தொன்மைக் கிரேக்கத் தத்துவ அறிஞர் களே ஆவர்.
எடுத்துக்காட்டாக அனாக்ஸிமாண்டர், உயிர்களின் தோற்றத்தை
விளக்க முயல்கையில், சூரிய வெப்பம், ஈரம்
இவை காரணமாகவே உயிர் தோன்றியது என்று வலியுறுத்தினார். வானவில், மின்னல், பூகம்பம், சூரிய
கிரகணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் காரணங்களைத் தொன்மைக் கிரேக்கர்கள் தேடினார்கள். விண்ணக ஒளிக் கோளங்களின் தோற்றம் பற்றி அவர்கள் ஆழ்ந்து
சிந்தித்தார்கள். பொருள்முதல்வாதமும் இயக்கவியல் பற்றிய கருத்தை
மேற்கொண்டு விரிவுபடுத்தியவர் ஹெராக்ளிட்டஸ் (Heraclitus) (சுமார் கி.மு. 544—483) என்பவர். நிலவுபவை எல்லாவற்றுக்கும்
அடிப்படையாக ஹெராக்ளிட்டஸ் நெருப்பை எடுத்துக்கொண்டார். இயற்கையின் ஒரே பொருளியல் அடிநிலைப்பொருள் நெருப்பே என அவர் கருதினார். “எல் லாம் சேர்ந்த ஒருமையான பிரபஞ்சம் தேவர்களில் எவராலும் மனிதர்களில்
எவராலும் படைக்கப்படவில்லை. விதிமுறைக் கிணங்க மூண்டெரிவதும் விதிமுறைக்கிணங்க
அனைவதுமான உயிர்த்தியங்கும் நெருப்பாக அது இருந்தது,
இருக்கிறது, என்றென்றும் இருந்துவரும்”
என்பது ஹெராக்ளிட்டஸின் புகழ்பெற்ற அடிப்படைக் கருத்து ஆகும்.
இது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடக்கம் குறித்த மிகச்
சிறந்த விளக்கவுரை என்று வி. இ. லெனின் கூறினர். இயற்கையில் விதிமுறை நிலவுவதை
ஹெராக்ளிட்டஸ் சுட்டிக்காட்டினார். இந்த விதிமுறையை அவர் “லோகோஸ்” என அழைத்தார். பிரபஞ்சத்தில் எல்லாம் நிரந்தர இயக்க நிகழ்முறையில்
இருக்கின்றன, எல்லாம் பெருகுகின்றன, விதி
முறைக்கு, “லோகோஸாக்கு” இணங்க எல்லாம்
மாறிக்கொண்டிருக்கின்றன என்னும் கருத்தை அவர் விரித்துரைத்தார். இந்த மாற்றங்கள்
எதிரெதுரான சக்திகளின் செயல்பாடுகளது விளைவு என்று அவர் கருதினார். அனைத்தும்
போராட்டத்தின் ஊடாகச் செல்கின்றன என்றும் புதுப்பிக்கப்படுதல் இன்றியமையாமை காரணமாகவே தொடங்குகிறது என்றும் அவர் கூறினர். வளர்ச்சி
என்பது வெறும் மறுநிகழ்வு அல்ல என்று ஹெராக்ளிட்டஸ் குறித்தார். சூரியன்
ஒவ்வொரு நாளும் மட்டும் புதியது அல்ல, என்றென்றும்
இடையீடின்றிப் புதியது என்றார் அவர். பிரபஞ்சம் ஏதோ
பொருளியலானது, மாறுதலும் புதுமைப்பாடும் வளர்ச்சியும்
கொண்ட நிரந்தரப் பெருக்கில் இருப்பது என்ற “கருக்கே
ஹெராக்ளிட்டஸின் தத்துவத்தில் உள்ள மதிப்புயர்ந்த சாரம்
ஆகும்”.
அடுத்துவந்த விஞ்ஞான ரீதியான தத்துவம் இதையே ஏற்றுக்கொண்டு
எல்லா அம்சங்களிலும் விரிவுபடுத்தியது. பிரபஞ்சத்தை அறிவது இயலும்
என்று ஹெராக்ளிட்டஸ் உறுதியாக நம்பினார். மனித அறிவுக்கு வரம்பு கிடையாது என அவர் கருதினார். அதே சமயம், உண்மையை
அறிவதன் கஷ்டத்தையும் சிக்கலையும் அவர் கண்டார். இயற்கை ஒளிந்துகொள்வதை
விரும்புகிறது என்றார் அவர். ஆகவே, ஞானியும் அறிஞனும்
ஆவதற்குக் கண்களையும் காதுகளையும் திறப்பது போதாது; மனிதனது
மாபெரும் நற்பண்பான பகுத்தறிவால், சிந்தனைத் திறனால்
இயற்கையை அறிந்துகொள்ள வேண்டும் என அவார் வலியுறுத் தினார். தொன்மைக்கால
அடிமைச் சொந்தக்காரச் சமூகத்தின் சமூக உற்பத்தி, விஞ்ஞானம்
இவற்றின் தாழ்ந்த தரம் ஹெராக்ளிட்டஸ் செய்த தத்துவப் பொதுமைப்பாடுகளது
தன்மையைக் குறிப்பிடத்தக்க அளவு பாதித்தது என்பது கூறாமலே
விளங்கும். அவரது கருத்துக்கள் பிற தொன்மைக்காலச்
சிந்தனையாளர்களின் கருத்துக்கள் போன்றே பல அம்சங்களில் எளிமையானவை, குறைபாடுள்ளவை. இருப்பினும் ஹெராக்ளிட்டஸ் மிகப் பெரிய தொன்மைக் கிரேக்கப்
பொருள்முதல்வாததக் தத்துவ அறிஞராகவும் தொன்மை இயக்க இயல்வாதத்தின் மிகத் தலைசிறந்த பிரதிநிதிகளில் ஒருவராகவும் நம் முன்
காட்சியளிக்கிறார். பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றியவர்
டெமாக்ரிட்டஸ் (சுமார் கி. மு. 460-470). வர்க்தக, கைத்தொழில் வளர்ச்சியில் அக்கறை கொண்ட
அடிமைச் சொந்தக்கார வட்டாரத்தினரின் விழைவுகளை வெளியிடுபவராக அவர் விளங்கினார்.
தொன்மைக் காலத்துச் சிந்தனையாளர்கள் பலர்போன்றே டெமாக்ரிட்டஸ் தத்துவ அறிஞராக மட்டும்
இன்றி இயற்கைவிஞ்ஞானச் சோதனையாளராகவும் இருந்தார். பொருளியல் வஸ்துக்களின்
உள் கட்டமைப்பு பற்றிய கருத்தை ஆதாரபூர்வமாக நிலைதாட்டியது தத்துவத்துக்கும் விஞ்ஞானத்துக்கும்
அவர் புரிந்த தொண்டு ஆகும். எல்லா வஸ்துக்களும் கண்ணுக்குப் புலப்படாத
எண்ணிறந்த துகள் களால் ஆனவை, இந்தத் துகள்களே அணுக்கள்,
இவை என்றும் உள்ளவை, மாறுதல் அற்றவை,
துளைக்கவோ பகுக்கவோ முடியாதவை என்று டெமாக்ரிட்டஸ் நிருபித்தார்.
சூறாவளி வேகத்தில் சுழன்று வெறும் வெளியில் இடம் பெயர்ந்தவாறு அணுக்கள்
இடையறாது இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த இயக்கத்தின் போது அவை தமக்குள்
ஒன்றிணைந்து நெருப்பு, நீர், காற்று,
மண் ஆகிய எல்லாக் கலப்புக்களையும்
உண்டாக்குகின்றன. டெமாக்றிட்டஸின் கருத்துப்படி அணுக்கள்--- இருத்தல், வெற்று வெளியோ-- சூனியம். மேற்கூறியவற்றால் தெரிவது போல, சடப் பொருள் நிலவும் பொது வடிவங்களான இயக்கம், இடவெளி,
நேரம் போன்றவற்றை வேறு பிரித்துக் காண டெமாக்ரிட்டஸ் முயன்றார். இவ்வாறு செய்கையில் அவர் அணுக்கள் இல்லாமல், அதாவது எவ்வகைச் சடப் பொருளும் இல்லாமல் இடவெளி நிலவ முடியும் என்ற
தவறான கருத்துக்கு இடம் கொடுத்துவிட்டார். எனினும், இதுவும்
வேறு அனேகத் தவறான அனுமானங்களும் எனினும், இதுவும் வேறு
அனேகத் தவறான அனுமானங்களும் கொண்டது ஆயினும், டெமாக்ரிட்டஸின்
அணுக்கொள்கை விஞ்ஞானத்தின் வழிகாட்டும் வடமீனாகப் பல நூற்றாண்டுகளாகக்
தொண்டாற்றியது.
அணுக்கள் பற்றிய தற்காலப் போதனை டெமாகீரிட்டஸின்
கருத்திலிருந்து சாராம்சத்தில் வேறானது என்பது கூறாமலே விளங்கும். ஆனாலும்
பொருளியல் அணுக்கள் புறநிலையாக நிலவுவது பற்றிய அவரது பொதுத் தத்துவ முடிவு
விஞ்ஞானம், தத்துவம்
இவற்றின் வரலாற்றில் மிகப் பெரிய பங்கு ஆற்றியது. அறிதல் பற்றிய பொருள்முதல்வாதச்
சித்தாந்தத்தை டெமாக்ரிட்டஸ் விரிவுபடுத்தினார். புறநிலையாக நிலவும் அணுக்கள்
உணர் உறுப்புக்கள் மீது செயல்படுவதன் விளைவே மனிதனது உணர்வு ஆகும் என அவர்
கருதினார். ஆனால் இந்தச் செயல்பாட்டை அவர் எளிமைப்படுத்திப் புரிந்துகொண்டார்.
அவரது எண்ணப்படி ஓவ்வொரு பொருளிலிருந்தும் அணுக்களின் பிரவாகங்கள் எல்லாத்
திசைகளிலும் பெருகுகின்றன. இந்த அணுக்கள் உணர் உறுப்புக்களின் ஊடாக
உட்புகுந்து புலனுணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன. பண்படாத நிலையிலுள்ள இந்த
எண்ணத்தில் ஓர் ஆழ்ந்த கருத்தும் அடங்கியிருக்கிறது. பொருளியலான இயற்கை
புறநிலையாக நிலவுகிறது, நமது சிந்தனைகள் புறநிலைப்
பிரபஞ்சத்தையே பிரதிபலிக்கன்றன என்பது அந்தக் கருத்து. நமது பார்வை, கேள்வி, நுகர்வு, சுவை,
தொடுதல் அகிய உணர்வுகளுக்கு உரிய உறுப்புக்கள் சில பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் மட்டுமே புரிந்துகொள்ள வல்லவை,
எல்லாவற்றையும் அல்ல என்ற அறிவை டெமாக்ரிட்டஸ் அணுகினார். மனிதனால்
காணவோ, தொட்டுணரவோ, சுவையால் அறியவோ முடியாத
பொருள் பிரபஞ்சத்தில் உள்ளது, அது மிக மிகச் சொற்பமானது
என்று அவர் சொன்னார். இம்மாதிரி விஷயங் கை மனிதன் அறிந்துகொள்வது எவ்வாறு?
இந்தக் கேள்விக்கு விடையளிக்கையில் டெமாக்ரிட்டஸ் பகுத்தறிவின்
திறனை மேற்கோள் காட்டினார். புலன்களின் அறிவுக்கு அகப்படாமல் நழுவிச் செல்பவை
யாவும் பகுத்தறிவால் வெளிப்படுத்தப்படக் கூடும், வெளிப்படுத்தப்பட
வேண்டும். உதாரணமாக அணுக்கள் பற்றிய அறிவு பெறுவது சிந்தனைத் திறனின்
உகவியாலேயே, அறிவுக்கண்களாலேயே சாத்தியம் ஆகும்.
டெமாக்ரிட்டஸின் கருத்திற்கிணங்க, இயற்கையின் மர்மங்களைச் சிந்தனைத் திறன் கொண்டே அறியமுடியும்.
பகுத்தறிவு என்பது அறிதலுக்கான மிகச் செவ்விய கருவி, மிக
நுண்ணிய அறிதல் உறுப்பு ஆகும். சிறிது காலத்துக்கு முன்புதான் உதித்திருந்த
பொருள் முதல்வாத, இயக்கவியல் பிரபஞ்ச
அறிவு, விஞ்ஞானம், நடைமுறை இவற்றின்
விவரங்களா ஆதாரமாகக் கொண்டு பிரபஞ்சத்தின் அந்தரங்க மர்மங்களுக்குள் இவ்வாறு படிப்படியாக மேலும் ஆழ்ந்து புகுந்து மக்களுக்கு
மெய்ஞானம் புகட்டியது. கருத்துமுதல்வாதப் பிரபஞ்சக் கண்ணோட்டத்தின்
ஆதரவாளர்கள் பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சியை மிகத்
தீவிரமாக எதிர்த்தார்கள். கி. மு. 5—4ம் நூற்றாண்டுகளில்
வர்க்க முரண்பாடுகள் தொன்மைச் சமூகத்தில் மிகக் கடுமையாக வெளிப்பட்டன. அடிமைச்
சொந்தக்கார ஐனநாயகத்துக்கும் அடிமைச் சொந்தக்கார உயர்குடிமக்களாட்சிக்கும்
இடையே அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் கூர்மையாயிற்று. கருத்துமுதல்
வாதத்துக்கும் பொருள்முதல் வாதத்துக்கும் இடையே போராட்டம் அந்த
நூற்றாண்டுகளில் சிறப்பாகக் கொடிய உக்கிரத்துடன் நடந்தது.
தொன்மைக் கிரீஸில் கருத்துமுதல்வாதத் தத்துவத்துக்கு மிகப் பெரும்
பிரதிறநிதியாகத் திகழ்ந்தவர் பிளேட்டோ (கி. மு.427--347). இவர் அடிமைச் சொந்தக்கார உயர் குடியில் பிறந்தவர். அடிமைச்
சொந்தக்கார அரசின் பிற்போக்கு ஆட்சி முறைக்குச் சித்தாந்த ஆதாரத்தை இவர்
கருத்துமுதல்வாதத்தில் தேடினார். பொருள்முதல்வாதத்துக்கு எதிரான போருக்கு இவர்
பகிரங்கமாகத் தலைமை தாங்கினார். பொருள்முதல் வாதத் தத்துவத்தின் பாதிப்பினால்
இளஞர்கள் நாஸ்திகரா்கள் ஆகிவிடுவகாக முறையிட்டார். பிளேட்டோ புறநிலைக்
கருத்துமுதல்வாத முறையை வகுத்தார். புலனுணர்வுக்கு உட்படும் பொருள்கள் கொண்ட பிரபஞ்சமும்
கருத்துக்களின் பிரபஞ்சமும் அதாவது பொருள்களின் பருமையற்ற நுண் வடிவங்கள்
கொண்ட பிரபஞ்சமும் எதிர் எதிராக நிலவுவதாக அவர் கருதினார். கருத்துக்கள் புறநிலையாக,
இயற்கைமீதும் பொருள்கள்மீதும் சார்பு இன்றி, நிலவுகின்றன என அவர் வலிந்துரைத்தார். எதார்த்தப் பொருள்கள் கொண்ட
பிரபஞ்சத்தை நிழல்கள் கொண்ட பிரபஞ்சம் எனப் பிளேட்டோ அழைத்தார். பொருள்கள்
கருத்துக்களின் மங்கிய பிரதிகளே, நிழல்களே என அவர்
கூறினார். பிளேட்டோ வின் கொள்கைப்படி, மனிதனால் புரிந்து
கொள்ளப்படும் இயற்கை எந்த அளவுக்குக் கருத்துப் பிரபஞ்சத்தின் உறுப்பு அம்சமாக
இருக்கிறதோ அந்த அளவுக்கு மட்டுமே உண்மையானது. கருத்துக்கள் பொருள்களின்
நித்தியமான மூன்மாதிரி கள். அவை சிந்திக்க மட்டுமே படுகின்றன, காணப்பட முடியாது. அவற்றின் நிழல்கள் -- புலப்படும் பொருள்கள் --
காணப் படுகின்றன, ஆனால் உண்மையான இருத்தல் அவற்றுக்குக் கிடையாது.
மனித உள்ளம் அல்லது ஆன்மா உடலின் சார்பு இன்றியே, புலனறிவுக்கு
அப்பாற்பட்ட கருத்துப் பிரபஞ்சத்தில் நிலவுகிறது. அது பொருளியலற்றது, நித்தியமானது- இவ்வாறு போதித்தார் பிளேட்டோ.
ஆன்மாவின் அமரத்தன்மை பற்றிய கற்பனை இவ்விதமாகப் பிரமாணப்படுத்தப்பட்டது.
ஆன்மா தாற்காலிகமாக மட்டுமே மனிதனில் குடிபுகுவதாகவும் பிறகு அனந்தம் என்னும்
அகாதத்துக்குத் திரும்பிவிடுவதாகவும் கூறப்பட்டது.
பிளேட்டோவின் தத்துவம் ஒருங்கியைந்த கருத்துமுகல் வாதம் ஆகும்.
கருத்தியலானதைப் பொருளியலானிலிருந்தும், எண்ணத்தைச்
சடப்பொருளிலிருந்தும், பொதுக் கருதுகோள்களை (தானேயான “பழம்” தானேயான “வீடு”) எதார்த்தப் பொருள்களிலிருந்தும் அது துணித்துவிடுகிறது. பிரபஞ்சம் நிலவுகிறது,
அதன்மீது சார்பு இன்றியே பிரபஞ்சம் பற்றிய கருத்தும் கடவுளும்
நிலவுகின்றன என்றும், மனிதன் நிலவுகிறான், அவன்மீது சார்பு இல்லாமலே ஆன்மா நிலவுகிறது.
என்றும் அது முடிவுக்கு வருகிறது. கருத்துமுதல்வாதம் மதத்துடன்
எவ்வாறு சேர்ந்துகொள்கிறது என்பது இந்த உதாரணத்தில் துலக்கமாகப் புலப்படுகிறது.
பிளேட்டோவும் அவருடைய சீடர்களும் கடவுளை “டெமியுர்க்” அதாவது படைப்பு
முதல்வன், பிரபஞ்சத்தை, இயற்கையைச் சிருஷ்டித்தவன்
எனக் கருதினார்கள். சுற்றியுள்ள பிரபஞ்சத்தை மக்கள் எதார்த்தமானது எனக் கருதிவிடலாகாது
என்றும், பொருளியல் பிரபஞ்சத்தின் வஸ்துக்களில் தன்மையை
அவர்கள் தேடக்கூடாது என்றும் உண்மையான, கருத்தியல் இருத்தல் எனப்படுவதை அறிய அவர்கள் முயல வேண்டும் என்றும்
அதன் பொருட்டு “தெய்விக ஒழுங்கை” அவர்கள் தியானிக்க வேண்டும் என்றும்
மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதே பிளேட்டோவின் கருத்துமுதல்வாதத் தத்துவத்தின் நோக்கம். புலன்கள் எதார்த்தத்தைப்
பற்றிய தகவல்களை மனிதனுக்குத் தருவதில்லை எனப் பிளேட்டோ எண்ணினார். அவருடைய
அபிப்பிராயப்படி நித்தியமான கருத்துக்களின் புலன்களுக்கு அப்பாற்பட்ட
சாம்ராஜ்யம் பற்றிய ஞானமே மெய்ஞானம். புலன்களின் அறிவு ஆற்றும் பங்கை, அவதானிக்கை, அனுபவம் ஆகியவற்றின் பங்கை
இழிவுபடுத்த அவர் முயன்றார். நமக்கு உண்மையைக் காட்ட அவற்றால் இயலாது என்றும்
ஆன்மா ஒன்றுதான் புலன்களுக்கு அப்பாற் பட்ட பிரபஞ்சத்தை உட்புகுந்து அறிய வல்லது
என்றும் அவா் கூறினார். எதார்த்தமான அறிதல் செயல்முறை பிளேட்டோவின்
கற்பனையில் இவ்வாறு திரிபான வடிவம் பெற்றது.
பிளேட்டோவின் பிற்போக்குக் கருத்துக்கள் கருத்துமுதல் வாதத்
தத்துவ அறிஞர்களால் சென்ற காலத்தில் விரிவாகப் பயன்படுத்தப்பட்டன. இம்மாதிரிக்
கருத்துக்களின் பல்வகை வேறுபாடுகள் தற்கால பூர்ஷஸ்வாத் தத்துவத்திலும் மிக அடிக்கடி
எதிர்ப்படுகின்றன. பிளேட்டோவினது புறநிலைக் கருக்துமுதகல்வாதத்தின் பற்பல
அடிப்படைக் கருத்துக்களின் ஆதாரமற்ற தன்மையைச் சுட்டிக்காட்டினார் மாபெரும்
தொன்மைக் கிரேக்கச் சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் (கி. மு. 484-322).
பருமையற்ற நுண்ணிய கருத்துக்களே முதன்மையானவை
என்ற கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்தை அரிஸ்டாட்டில் தமது
பெருந்தொகையான நூல்களில் தக்க ஆதாரங்களுடன் மறுத்தார். தத்துவ
நூல்களும்(”மாறாநிலைவாதம்” ஆன்மாவைப் பற்றி”) இத்தகைய நுரல்களில் அடங்கும்.
பொதுவான கருதுகோள்களைப் புலன்களால் உணரப்படும் பொருள்களிலிருந்து
வேறுபடுத்துவது கூடாது என்று பிளேட்டோவை விமர்சிக்கையில் அரிஸ்டாட்டில் சரியாகக்
குறிப்பிட்டார். கருத்துக்கள் பொருள்களின் தன்மையே ஆதலால் பொருள்களிலிருந்து தனிப் பிரிந்து
நிலவ அவற்றால் இயலாது என்றார் அவர், எனினும்
இவ்விஷயத்தில் அரிஸ்டாட்டில் முடிவுவரை ஒத்திசைந்த தர்க்க முறையைக் கடைப்பிடிக்கவில்லை. அடிப்படையான அனேகத் தத்துவப்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கையில் கருத்துமுகல் வாதுத்துக்கும்
பொருள்முதல்வாதத்துக்கும் இடையே உசலாடினார். எல்லா வஸ்துக்களுக்கும் எல்லா வகை
இருத்தலுக்கும் அடிப்படை என்ற வகையில் சடப்பொருளை அவர் ஏற்றுக் கொண்டார்
ஆயினும், சடப்பொருள் திட்டவட்டமான அல்லது எதார்த்தமான
இருத்தல் அல்ல என்றும் அது ஏதோ வடிவற்ற, செயலற்ற, உயிரற்ற அடிநிலைப்பொருளே என்றும் கூறினார். சடப்பொருள் செயலுள்ளது
ஆவதகுற்கு, உயிராற்றல் பெறு வகுற்கு அது வடிவில் உருவாக
வேண்டும் என்றார் அவர். அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி வடிவம் என்பது ஒவ்வொரு
பொருளினதும் இருத்தலின் சாரம், அதன் பொதுவான, முதன் மையான தன்மை ஆகும். வடிவத்துடன் ஒன்றுபடுகையிலேயே சடப்பொருள்
புலனறிவுக்கு உட்படும் எதார்த்தப் பொருள்களில் தோற்றம் அளிக்கிறது.
உதாரணமாகப் பளிங்குப் பாறையில் மனித உருவத்தைச் செதுக்குவதன் வாயிலாகச்
சிற்பி அதற்குத் திட்டவட்டமான வடிவத்தை அளிக்கிறான். இந்த வடிவமே சிலையின்
உள்ளர்த்தமாக அமைகிறது. இதேபோல, வடிவம் சடப்பொருளுக்குக்
திட்டவட்டமான உள்ளடக்கத் கைத் தருவதனாலேயே இயற்கை வளர்ச்சி அடைகிறது என்பது அரிஸ்டாட்டிலின்
கருத்து. இதை ஆதாரமாகக் கொண்டு அவர் ஒரு தவரான முடிவுக்கு வந்தார். இயற்கையில்
உள்ள எல்லாத் தோற்றங்களும் அறிவுசான்ற செயல்புரியும் ஆற்றலை, குறிக்கோளை (entelechy) உள்ளடக்கியிருக்கின்றன
என்பது அத்த முடிவு. அரிஸ்டாட்டிலின் கருத்திற்கு இணங்க, இருத்தலின்
இந்தக் குறிக்கோளாகவும் தனமையாகவும் விளங்குவது வடிவம்
ஆகும். பிரபஞ்சத்தில் நிகழும் மாறுதல்களுக்கும் ஊற்றுக்கண்
எது என்று விஞ்ஞான ரீதியில் விளக்கும் நிலையில் அரிஸ்டாட்டில் இல்லை. எனவே
அவர் இந்த ஊற்றுக்கண்ணைச் சடப்பொருளுக்கு வெளியே, புலனுணர்வுக்கு
அப்பாற்பட்ட வடிவத்தில் தேடினார். எல்லா வடிவங்களின் வடிவமாகவும் இயற்கை
அனைத்தினதும் முதல் இயக்கு சக்தியாகவும் திகழ்வதே கடவுள்
என்று அவர் வலிந்துரைத்தார். நிலவுபவை யாவற்றையும் படைத்த அறிவுசான்ற
சிருஷ்டிகர்த்தாவை மேற்கோள் காட்டுவது அப்புறம் பிற்போக்குத் தத்துவத்தில் விரிவாக
வழங்கலாயிற்று. அறிதலைப் பற்றிப் பல ஆழ்ந்த கருத்துக்களை அரிஸ்டாட்டில்
வெளியிட்டார். பொதுவான கருதுகோள்களும் வகைப் பிரிவுகளும் (பண்பு, தொகை, தன்மை, காலம் முதவியன)
இருத்தலின் இயல்பையும் உறவையும் வெளியிடுகின்றன என்று அவர்
குறித்தார். அரிஸ்டாட்டில் இயக்க இயலின் பல பிரச்சினைகளை ஆழ்ந்து ஆராய்ந்தார்.
சிந்தித்தலின் விதிகலாயும் வடிவங்களையும் பற்றிய போதனையை உருவாக்கினார்.
அவருடைய தார்க்க ஆராய்ச்சிகள் இன்றளவும் மதிப்பு மிக்கவையாகத் திகழ்கின்றன. இவ்விதமாக,
தொன்மைக் கிரேக்கச் சிந்தனையாளர்கள் மதிப்புயர்ந்த பல தத்துவக்
கருத்துக்களை வெளியிட்டார்கள். பிரபஞ்சத்தின் பொருளியல் ஒருமை குறித்தும்,
உணர்வுக்கும் சடப்பொருளுக்கும் உள்ள பரஸ்பர சம்பந்தம் குறித்தும்,
சடப்பொருளின் கட்டமைப்பு குறித்தும் தொன்மைக்காலப் பொருள்முதல்வாதிகளின்
அடிப்படைக் கருத்துக்கள் தத்துவத்தின் அடுத்துவந்த வளர்ச்சிமீது சிறப்பாகப்
பயன் விளைக்கும் பாதிப்பை ஏற்படுத்தின. இயற்கையின் இயக்கப் போக்கு, பிரபஞ்சத்தின் நிரந்தர மாறுதலும் வளர்ச்சியும், எல்லா
நிகழ்ச்சிகளுக்கும் உரிய இயல்பான விதிமுறை, காரணச் சார்பு ஆகியவை பற்றிய அவர்களது அனுமானங்கள் பெருத்த முக்கியத்துவம் உள்ளவையாக
விளங்கின.
தொன்மைக் தத்துவ அறிஞர்கள் பிரபஞ்சத்தை அறிவது இயலும் என்பதை ஆதார பூர்வமாக
நிரூபித்தார்கள், உணர்வுகளுக்கும் பகுத்தறிவுக்கும்,
புலனுணர்ச்சிகளுக்கும் சிந்தனைகளுக்கும் உள்ள பரஸ்பர உறவுகளில்
நிலவும் சில சிறப்புத் தன்மைகளைக் கவனித்துக் குறித்தார்கள், அனேகத் ததுத்துவக் கருதுகோள்களையும் வகைப்பிரிவுகளையும்
வேறுபடுத்திக் கண்டார்கள்.
அடுத்துவந்த வரலாற்றுக் காலப்பகுதிகளில் உருவாக்கப் பட்ட
பல்வேறு தத்துவ முறைகளின் அம்சங்கள், கருத்துகள், தொன்மைக்
கிரேக்கச் சிந்தனையாளர்களின் கருத்துக்களில் அடங்கியிருந்தன.
No comments:
Post a Comment