நாம் வாழும் வர்க்க சமூகத்தில் இரு வேறு வர்க்கங்கள் உள்ளன . இடுக்கும் வர்க்கம் என்றும் ஒடுக்கப்படும் வர்க்கம் என்று இரண்டாக பிரிக்கலாம் அதில் ஒடுக்குபவன் ஒடுக்கப்படுபவன் ஆகிய இரு வர்க்கங்களுக்கு உள்ளே தான் பல்வேறு பிரிவான வர்க்கப் பிரிவுகள் உள்ளன.
இங்கே நாம் எந்த வர்க்க பிரிவு ஆட்சியில் இருந்தாலும் அவை சர்வாதிகாரத்தை பயன்படுத்தி மற்ற வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி தன் வர்க்க நலனுக்காக செயல்படுகிறது.
தனி சொத்துடமையை பாதுகாக்கும் இன்றைய அரசு வடிவம் சொத்தற்றவர்களையும் உழைக்கும் பிரிவினர்களையும் அடக்கி ஒடுக்க தத்துவதளத்தில் பிற்போக்கு சமூக பழைய நடமுறைகளையும் புதிய சுரண்டல்முறையையும் ஒன்றிணைக்கும் தத்துவம் அவை எவையாக இருப்பினும் ஆளும் வர்க்கத்தை கட்டிக்காக உள்ள கருத்தியலே அவை கருத்துமுதல்வாத புதை சேற்றிலிருந்து உதித்தவையே அதன் வர்க்க அடிபடை உள்ளதை கட்டி காப்பதே அவை அண்டவெளி மட்டுமல்ல உலகையே பேசினாலும் பெரும்பான்மையிலான உழைக்கும் மக்களை உழைத்து உழைத்து தன் எஜமானர்களுக்கு சேவகம் செய்ய சொல்லும் பொழுதே அதே ஆன்மீகவாதிகளின் தத்துவத்தை தவிர வேறில்லை.
ஆனால்
மார்க்சிய-லெனினியத் தத்துவம் உலகை அறிதல் புரட்சி கரமாக மாற்றி அமைத்தல் ஆகியவற்றுக்குரிய பொதுச்சித்தாந்கக் கோட்பாடுகளை ஆதாரபூர்வமாக நிலை நாட்டுகிறது, இயற்கை, சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சி பற்றிய மிக மிகப் பொதுவான விதிகளைத் தெளிவுபடுத்துகிறது, சோஷலிஸ அமைப்பின் மேம்பாட்டையும் கம்யூனிஸ சமூக உறவுகள் உருவாவதன் சாத்தியக்கூற்றையும் புலப்படுத்துகிறது. மார்க்சிய-லெனினியத் தத்துவக் கல்வி மக்களுக்குக் கொள்கை பற்றிய ஆழ்ந்த திட நம்பிக்கை ஏற்படுத்துகிறது. அறிவும் செயலும் ஒன்றாயிருத்தல், கம்யூனிஸக் குறிக்கோள்கள் பற்றிய தெளிந்த உணர்வு, அவற்றைச் செயல்படுத்துவதற்கான தீவிரப் போராட்டம் ஆகியவற்றில் இந்தத் திட நம்பிக்கை வெளிப்படுகிறது. வாழ்க்கைப் போக்குடன் இணைந்து முன்செல்ல விரும்பும் எல்லோருக்கும் மார்க்சிய-லெனினியக் தத்துவ அறிவு இன்றியமையாதது ஆகும். யாவற்றிலும் சிக்கலான இடையூறுகளையும் கஷ்டங்களையும் சமாளிப்பதற்கு வேண்டிய வலிமையையும் தன்னம்பிக்கையையும் அது மனிதனுக்குத் தருகிறது. அவன் செயலாக்கமும் லட்சியத்தை நோக்கிய முன்னேற்றமும் வாய்ந்தவன் ஆவதற்கு உதவுகிறது. ஆவேசம் பொங்கும், உண்மைத் தேட்டங்களும் படைப்புத் துணிவும் நிறைந்த இளமைப் பருவத்திலும் சரி, ஆழ்ந்த சிந்தனையும், அனுபவங்களையும் உண்மை நிலவரங்களையும் நிகழ்ச்சிகளையும் நிதானமாகப் பகுத்தாயும் பான்மையும் வாய்ந்த, பயன்பாடுள்ள படைப்புக்கள் புரியும் முதிர்ந்த பருவத்திலும் சரி, தத்துவம் மனிதனது நம்பகமான வழித்துணை ஆகும்.
மனிகு உணர்வின் தன்மை. அதன் ஆக்கத் தொண்டு:-
நிலவுலகில் உயிர்களின் பரிணாமம் அடைந்துள்ள மிக உயர்ந்த நிலையாக விளங்குபவன் சிந்திக்கும் மனிதன். சமூகப் பண்புகளின் வாகியாக இருப்பதனால் மனிதன் பிரபஞ்சத்தில் சிறப்பான இடம் பெற்றுள்ளான். சமூகக் காரணிகளின் பாதிப்பு மனிதனுடைய பரிணாமத்தைக் கணிசமாகக் துரிதப்படுத்தியது, அவனது உணர்வின் வளர்ச்சியில் மிகப் பெரும் பங்கு ஆற்றியது. மனிதன் சமூகப் பிராணி.அவனது உணர்வும் சமுதாய-வரலாற்று நிகழ்ச்சியாக விளங்குகிறது. மனித உணர்வின் இந்தச் சிறப்புத் தன்மையை முதன்முதலாக ஆழ்ந்து அராய்ந்தவர்கள் மார்க்ஸீயத்தின் ஸ்தாபகர்களே ஆவர். உணர்வு தொடக்கத்திலிருந்தே சமூக விளைபொருளாக உள்ளது, மனிதர்கள் நிலவும் வரை அது அவ்வாறே இருந்துவரும் என்று எழுதினார்கள் கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்ஸும்.
மனிதனுடைய உணர்வு அவனது உழைப்புச் செயலின் போக்கில் தோன்றி வளர்ந்தது. உற்பத்தி உழைப்பே மனிதனை உருவாக்கியது. ஆனால் உழைப்பு கூட்டத்துக்குப் புறம்பாக, சமூகத்துக்கு வெளியே நடக்க முடியாது. எனவே மக்களுக்கிடையே தொடர்பும் உறவும் இன்றி, அதாவது மொழி இன்றி அது நடக்க முடியாது. உணர்வு போன்றே மொழியும் மக்களின் உழைப்புச் செயலின் போக்கில் பிறந்து வளர்கிறது. “உணர்வு போலவே மொழி தொன்மையானது. மொழி என்பது மற்ற மனிதர்களுக்காக நிலவுவதும் அந்தக் காரணத்தினால் மட்டுமே எனக்காகவும் நிலவுவதுமான நடை மூறை எதார்த்த உணர்வு ஆகும். உணர்வு போன்றே மொழி மற்ற மனிதர்களுடன் உறவுகொள்வதன் தேவையிலிருந்தே, அத்தியாவசியத்திலிருந்தே தோன்றுகிறது.”(கார்ல் மார்க்ஸாம். பிரெடெரிக் எங்கெல்ஸாம். “ஜெர்மன் கொள்கைவாதம்”, தொகுதி 7. லு. பாயர்பாக். நூல்திரட்டு, தொகுதி 4, பக்கம் 29). உழைப்பு சமூகத்துக்கு வெளியே நிலவ முடியாது என்பதையும், அதே போல, சமூகமும் மனிதர்களின் உழைப்புச் செயல் இல்லாமல் நிலவ முடியாது என்பதையும் நிலைநாட்டிய பின், மனிதனுடைய உடல், அறிவுத் திறன்களைச் செவ்வைப் படுத்துவதில், அவனது மூளையை வளர்ப்பதில், உழைப்பும் மொழியும் ஆற்றியுள்ள தொண்டையும் மார்க்ஸீயத்தின் ஸ்தா பகார்கள் அராய்ந்தார்கள். இந்தக் காரணிகளின் பாதிப்பினால் மனிதனுடைய மூளை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை “குரங்கிலிருந்து மனிதனாக மாறிய செயல்முறையில் உழைப் பின் பாத்திரம்” என்னும் தமது நூலில் பிரெடெரிக் எங் கெல்ஸ் காட்டினார்: “தொடக்கத்தில் உழைப்பு, அதன்பின்னும் அதனுடன் தெளிவான ஒலிப்புக்கள் கொண்ட பேச்சு, இந்த இரு பிரகானத் தூண்டல்களின் பாதிப்பினாலேயே குரங்கின் மூளை மனித மூளையாகப் படிப்படியாக மாறியது. மனித மூளை குரங்கின் மூளையை எவ்வளவுதான் ஓத்திருந்தாலும் அளவிலும் செவ்வைப்பாட்டிலும் அதை மிக மிக விஞ்சிவிடுகிறது”(கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்ஸும், "இயற்கை யின் இயக்க இயல்”, நூல்திரட்டு, தொகுதி 80, பக்கம் 490. )மனித மூளை உழைப்பு, தெளிவான ஒலிப்புக்கள் கொண்ட பேச்சு ஆகியவற்றின் காரணமாக எதார்த்தத்தின் பொதுமைப் படுத்தும் பிரதிபலிப்பைக் கருதுகோள்களிலும் அபிப்பிராயங்களிலும் தீர்மானங்களிலும் வெளியிடும் திறன் உள்ளது.
மூளையில் நடக்கும் நரம்புச் செயல்முறைகளே மனிதச் சிந்தனையின் உடலியல் அடிப்படையாக விளங்குகின்றன என்று தற்காலஇயற்கை விஞ்ஞான விவரங்கள் காட்டுகின்றன. மனிதனுடைய மூளை வெவ்வேறு அமைப்புப் படிவுகளால் ஆனது. சில மில்லிமீட்டர்கள் பருமனுள்ள அதன் மேற்படிவு சிறப்பான பங்கு ஆற்றுகிறது. இந்தப் படிவு பெருமூளைப் புறணி எனப்படும். கோடானுகோடி நரம்பணுக்களால் ஆனது இது. இவை பெருந் தொகையான கிளைகளால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன. மிக மிகப் பெருத்த எண்ணிக்கையுள்ள தொடர்புகளை உருவாக்கவும் நரம்பணுக்களின் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவுக்கு நரம்பு உந்தல்களை ஒரு நொடியில் மாற்றவும், வரும் சங்கேதங்களை எல்லாக் கோணங்களிலிருந்தும் பகுத்தாயவும் இந்த நரம்பணுக்கள் வல்லவை. புறணியடிப் படிவுகளும் முக்கியப் பங்கு ஆற்றுகின்றன. மூளைப் புறணியின் முறையான செயல் பாட்டை இவை உறுதிப்படுத்துகின்றன. அமைப்பில் வெவ்வேறான பகுதிகள் (புலங்கள்) புறணியில் உள்ளன. இவற்றில் ஓவ்வொன்றும் ஒவ்வொரு வகைச் செயலை நிறைவேற்றுகிறது. ஓவ்வொரு பகுதியும் ஒரு குறித்த விதமான தூண்டல்களை (பார்வை, ஒலியுணர்வு முதலியன) பகுத்தாயவும் பொதுமைப்படுத்தவும் திறன் உள்ளது.
சில புலங்கள் (உதாரணமாக, பேச்சு-இயக்க, பேச்சு-ஒலியுணர்வு, பேச்சு-பார்வைப் புலங்கள்) தமக்குரிய உறுப்புக்களுடன் ஏராளமான வேறு நரம் பணுக்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றன. மிகச் சிக்கலான கட்டமைப்பு உள்ள புறணிப் பகுதிகள் நரம்பு மண்டலத் தனது வளர்ச்சியின் கடைசிக் கட்டங்களில் தோன்றின என விஞ்ஞானத்தால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. மனிதனால் வெளிப் பிரபஞ்சம் பிரதிபலிக்கப்படும் சிக்கலான செயல்முறையில் பின்வரும் கட்டங்கள் வேறுபடுத்திக்காணப்படுகின்றன: சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தின் பொருள்கள். நிகழ்ச்சிகளின் பாதிப்பினால் ஏற்படும் தூண்டல்கள் கிரகிக்கப்படுதல்; இந்தக் தூண்டல்கள் நரம்பு உந்தல்களின் வடிவில் மூளைக்குக் கொண்டுசெல்லப்படுதல்; மறுவினைச் செயல்பாடு, புலனுணர்ச்சிகள், எண்ணங்கள், கருதுகோள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எதார்த்தப் பொருள்கள், நிகழ்ச்சிகள் பற்றிய கருத்து மாதிரிகள் உருவாதல்; வருங்காலத்தில் யாவற்றிலும் சாத்தியமான நிலைமையை முன்காணலும் அதை மதிப்பிடலும் அதற்கேற்ற செயல்திட்டம் வகுத்தலும்; செயல்களின் விளைவுகளை முன்காணல்; செயலின் நிகழ்முறையும் அதன் போக்கையும் விளைவுகளையும் பற்றிய தகவலும்; நோக்கங்களின் நிறைவேற்றம். நிலைமையின் சிக்கலைப் பொறுத்துச் சில தனிக் கட்டங்கள் அதிக அல்லது கூறைந்த நேரம் எடுத்துக்கொள்ளக் கூடும். தவிர, சில செயல்முறைகள் உணர்வுபூர்வமாக அன்றித் தாமாகவே சாதாரணமாக நிகழ்கின்றன.
மனிதர்களின் உளச் செயல்களின் சிறப்புத்தன்மைகள் குறித்துச் சர்ச்சை செய்கையில் இ. பெ. பாவ்லவ் பின்வருமாறு எழுதினார்: எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதற்கு, விலங்குகளுடன் ஒப்பிடுகையில் பண்பளவில் புதிய மண்டலம் ஓன்று வரலாற்று வளர்ச்சிப் போக்கில் மனிதனிடம் உருவாயிற்று. இது இரண்டாவது சங்கேத மண்டலம் எனப்படும். பேச்சு, சொல் இது. முதலாவது சங்கேத மண்டலத்தால் (புலனுணர்ச்சி, புலனறிவு, எண்ணம் ஆகியவற்றால்) பெறப் படும் ஏராளமான விவரங்களைப் பண்படுத்துவகன் அடிப்படையில் எதார்த்தம் பொதுமைப்படுத்திப் பிரதிபலிக்கப்படுவதே இரண்டாவது சங்கேத மண்டலத்தின் சிறப்பான அம்சம் ஆகும். மொழியை, பேச்சைப் பயன்படுத்துவதன் வாயிலாக இந்தச் செயல் நிறைவேற்றப்படுகிறது. புலன்களின் மூலம் பெறப்படும் ஸ்தூலமான அறிவு, எண்ணங்கள், இவற்றிலிருந்து பொதுக் கருதுகோள்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் முடிவுகளுக்கும், அதாவது இந்தனைக்கு மனிதன் சொல்லின் உதவியால் பரிணமிக்கிறான். எதார்த்தத்தின் பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் குறிக்கும் வெளித் தூண்டுவிப்பியாகச் சொல் மனிதனால் புரிந்துகொள்ப்படுகிறது. நம்மில் ஒவ்வொருவரும் சொற்களைக் கேட்கையில் அல்லது படிக்கையில் எதார்த்தப் பொருள்களையும் நிகழ்முறைகளையும் கற்பனை செய்துகொள்கிறோம், நமது மூந்திய அனுபவங்களை நினைவுபடுத்திக்கொள்கிறோம். ஆகவே, புறநிலைப் பிரபஞ்சத்தின் பொருள்களுடனும் நிகழ்ச்சிகளுட னும் மனிதனது சிந்தனையின் உறவு சொற்களையே ஊடகமாகக் கொண்டிருக்கிறது. மொழி சிந்தனையைக் கடத்துவதற்கான சாதனமாக, சிந்தனையின் நேர்ப் பொருளியலான, புலன்களால் புரிந்தகொள்ளப்படக் கூடிய மேலுறையாக விளங்கு கிறது.
உணர்வு மனித மூளையினது செயல்பாட்டின் விளைவே என்றும், புலனுணர்ச்சிகள், எண்ணங்கள், கருதுகோள்கள் ஆகிய வற்றின் வடிவில் எதார்த்தத்தின் கருத்தியல் பிரதிபலிப்பு மூளையில் நடக்கும் நரம்புச் செயல்களின் காரணமாகவே நிகழ்கிறது என்றும் விஞ்ஞானம் மறுக்க முடியாதவாறு நிரூபிக்கிறது. சமூக இருத்தலின் மொத்தத் தொகுப்பாக விளங்கும் சமூகக் காரணிகளின் குறிப்பிட்ட பாதிப்பினால் சிந்தனை உறுப்பு என்ற வகையில் மனிதனுடைய மூளை வளர்ச்சி அடைந்தது. இந்தச் சமூக இருத்தலின் அடிப்படையாகத் கதொண்டாற்றுகிறது. பொருளியல் உற்பத்தி, சமூக உழைப்பின் போக்கில் உற்பத்திக் கருவிகள் செவ்வைப்படுத்தப் படுகின்றன. உற்பத்தித் துறையில் மேலும் மேலும் புதிய இயற்கைப் பொருள்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. உற்பத்தித் தொடர்புகளின் புதிய வடி வங்களும் புதிய சமூக அலுவலகங்களும் ஸ்தாபனங்களும் உருவாகின்றன. இவற்றோடு கூடவே மனிதனும் செவ்வைப்படு இரான். அவனுடைய மூளையும் உணர் உறுப்புக்களும், அவனது உணர்வும் அறிவும் செப்பம் அடைகின்றன.
மனிதனுடைய உணர்வு எதைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பு எவ்விதம் நிகழ்கிறது என்பதை இதுவரை விவரித்தோம். ஆனால் மனித உணர்வு வெளிப் பிரபஞ்சத்தின் செயலற்ற பிரதிபலிப்பு மட்டுமே அல்ல. இயற்கைமீது அது எதிர்ப் பாதிப்பும் நிகழ்த்துகிறது. பிரபஞ்சத்தில் தனது இடத்தையும் தனது செயலையும் (அதே போல மற்ற மனிதர்களின் செயலையும்) மனிதன் புரிந்துகொள்வது மனித அறிவின் மிக முக்கியமான அிறப்பு. பிரபஞ்சத்துடன் மனிதனுடைய உறவு, எதார்த்தம் பற்றிய ஒருமுனைப் பாடுள்ள ஞானமும், அதோடுகூட, எதார்த்தத்தை நோக்கத்துக்குப் பொருந்த ஊக்கமாக மாற்றி அமைத்தலும் கொண்ட செயல்முறை ஆகும்.
பிரபஞ்சத்தைத் தீவிரமாக மாற்றி அமைக்கும் செயல் முறை மனித அறிவின் ஆக்கத் தொண்டை வெளியிடுகிறது. இயற்கையை நடைமுறையில் மாற்றி அமைக்கையில் மனிதன் தனது உழைப்பால் புதிய வஸ்துக்களை நிறுவுகிறான். அவனுடைய உணர்வு இவற்றில் ஒரு விதத்தில் பதிவு செய்யப்படுகிறது. அல்லது, வழக்கமாகச் சொல்வதுபோல, இவற்றில் பிரத்தியட்சம் ஆகிறது, பருப்பொருள் ஆகிறது. மனிதனது கை வேலை யாக விளங்கும் பொருள்களின் உலகம்-- எளிய உழைப்புக் கருவிகள், கட்டிடங்கள், கட்டுமானங்கள் முதல் விண்வெளி விமானங்களை உள்ளிட்ட மிக மிகச் சிக்கலான இயந்திர சாதனங்கள், உபகரணங்கள் வரை--முடிவாகப் பார்க்கும்போது இந்தப் பொருள்களில் உருப்பெற்றுள்ள மனிதச் சிந்தனையே தான். மனிதனால் நிறுவப்பட்டுள்ள வெளிப் பிரபஞ்சம், எத்தனையோ தலைமுறைகளினது திரண்ட அனுபவத்தின் உண்மையான கலவையாகும். மனித அறிவின் சிறந்த திறமை களுக்கும் அவனது புதுப்புனைவு ஆற்றலுக்கும் படைப்புத் திறனுக்கும் இது சான்று பகர்கிறது. “மனிதனுடைய உணர்வு புறநிலைப் பிரபஞ்சத்தைப் பிரதிபலிப்பது மட்டுமல்ல, படைக்கவும் செய்கிறது”(வி. இ. லெனின். முழு நூல்திரட்டு, தொகுதி 29, பக்கம் 194.) என்று எழுதினார் வி. இ. லெனின். நாம் ஏற்கனவே கூறியதுபோல, சிந்தனையின் பொருளியல் வெளியீடாக விளங்குகிறது பேச்சு, மொழி, சொல் சிந்தனையை நிலைப்படுத்துகிறது, பதிவுசெய்கிறது. சிந்தனையை வெளியிடுவதற்கான சொல் வடிவத்தின் உதவியால் மக்கள் முந்திய தலைமுறைகளால் திரட்டிச் சேர்க்கப்பட்ட அனுபவத்தையும் ஞானத்தையும் சேமித்து வைக்கிறார்கள், எதார்த்தத்தை மேலும் மாற்றி அமைப்பதற்கு அவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறார்கள். இயற்கையை மட்டுமே அல்ல, சமூகத்தையும் மனிதன் மாற்றி அமைத்திருப்பதில் வெளியாகிறது உணர்வின் ஆக்கத் தொண்டு. சமூக இருத்தலை, முதன்மையாகச் சமூகத்தில் நிலவும் பொருளாதார உறவுகளையும் புறநிலையான வாழ்க்கை நிலைமைகளையும் சமுதாய எதார்த்தத்தின் வளர்ச்சிக்கு உரிய விதிமுறைகளையும் பிரதிபலிப்பதுடன் மனிதர்களின் உணர்வு சமூகத்தின் வாழ்க்கை முழுவதையும் தீவிரமாகப் பாதிக்கிறது. சமுதாய மாற்றங்களுக்கான உடனடித் தேவைகளை வெளியிடும் முற்போக்குக் கருத்துக்கள் சமூக வளர்ச்சிமீது சிறப்பாகப் பெருத்த செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் முற்போக்குக் கருத்துக்கள் சமூகத்தின் வளர்ச்சியில் ஆக்கத் தொண்டு தாமாகவே புரிந்துவிடுவதில்லை. வரலாற்றை உண்மையில் ஆக்குபவர்களான பொதுமக்களின் உடைமை ஆகும்போதே அவை அவ்வாறு தொண்டு ஆற்றுகின்றன. பொது மக்களை ஆட் கொண்டுவிட்ட முற்போக்குக் கருத்துக்கள், சமூக வளர்ச்சியைப் புரட்சிகரமாக்கி விரைவுபடுத்தும் விறல்மிக்க பொருளியல் ஆற்றல் ஆகிவிடுகின்றன.
No comments:
Post a Comment