கம்யூனிஸ்டுகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த மார்க்சிய விரோதிகளுடன் அணி சேர்வதல்ல

இன்று வரை இந்தியாவில் புரட்சியும் நடைபெறவில்லை அதே போல் புரட்சிகர கட்சியும் பலப் பட இல்லை.

பாராளுமன்ற முறையிலான சுரண்டும் வர்க்கம் ஒழிக்கப்படவில்லை மக்கள் ஜனநாயக குடியரசு ஆகவும் மாறவில்லை ஆயினும் உலக கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட கதி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏற்பட்ட திரிபுவாதம் இடதுசாரி குறுங்குழுவாதம் வறட்டு வாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் தனக்கான பணியை செய்யாமல் முடங்கிக் கிடக்கிறது.

இந்திய கம்யூனிஸ்டு இயக்கமானது இன்றுவரை அதற்கான பணியான மக்கள் ஜனநாயக புரட்சியையோ அல்லது சோசலிசத்தை அமைக்கும் பணியையோ இன்றுவரை நிறைவேற்றாமல் அவை கனவாகவே உள்ள நிலையில் , உலகின் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டு வெற்றிகரமாக புரட்சியை முடித்து சோசலிசத்தை கொணர்ந்து, உலகில் உயர்ந்த நிலையில் அச் சமூகம் இருந்தது, ஆனால் அங்கு இன்று திரிபுவாதமும் சோசலிசத்தை பின்னடையச் செய்து முதலாளித்துவ நிலைக்கு சென்றுவிட்டது.

இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் தான் சிக்குண்டு இருக்கும் நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது . நூறு ஆண்டுகால கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் 54 ஆண்டுகால மார்க்சிய- லெனினிய வரலாறு உட்பட ஒரு அகில இந்திய கட்சியை கட்டுவதும் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்திற்கு புரட்சிகரமான தலைமை அளிப்பதும் அரசியல் அதிகாரம் வென்றெடுப்பதற்கும் இன்றளவும் இயலாத நிலையில் உள்ளது .இந்த தடைகள் கடக்கப் பட்டாக வேண்டும்.

இதனை நாம் புரிந்துக் கொள்ள நமது ஆசான்களிடம் செல்வோம் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்கு வழிகாட்டியது இந்த அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில் லெனின் வரையறுத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி பாதை குடியேற்ற நாடுகளுக்கு அரசியல் திசை வழியை அமைந்தது . குடியேற்ற நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒற்றுமை ஏற்படுத்துதல் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் இணைவதன் மூலமாக குடியேற்ற நாடுகளில் நடைபெறும் போராட்டமானது ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக போராட்டமாக இருக்கும். இந்த வழியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சரியாக புரிந்துகொண்டு சீனாவின் குறிப்பான நிலைமைக்கு ஏற்ப புதிய ஜனநாயக அரசை அமைத்தது.குடியேற்ற நாடாக இருந்து இந்தியாவுக்கு இந்த வழி பொருந்தக்கூடியது அகிலம் தனது பிரதிநிதிகள் மூலமாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.கம்யூனிஸ்ட் அகிலத்தின் திசை வழியை புரிந்து கொள்வதிலும் அமுல்படுத்துவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிக்கல்களை எதிர் கொண்டது.தங்களுக்கான திட்டம் முன் வைத்து எல்லா ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் தன் தலைமையில் ஒருங்கிணைத்து புதிய ஜனநாயக இந்தியாவை படைக்க தயார் அற்ற நிலையில் இருந்தது .

பிரிட்டிஷ் இந்தியாவில் முதலாளிய உறவுகள் மேலும் அதிக வளர்ச்சி பெற்றவையாக இருந்தன பெரும் முதலாளிகள் மேலும் அதிகமாக அய்க்கியப்பட்டிருந்தனர். ஒரு தனி ஏகாதிபத்தியத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனர். சீனாவைப் போல் போட்டியாக ஏகாதிபத்திய அரசுகளிடையே அவர்கள் பிரிக்கப்பட்டு இருக்கவில்லை. அதேவேளையில் நிலவுடமை உறவுகள் குறிப்பாக சுதேசி அரசுகளில் தொடர்ந்து நிலவின. மற்றொருபுறம் பாட்டாளி வர்க்கம் விவசாய வர்க்கத்தினுடன் ஒரு அணியை நிறுவ தவறியது.

சீனாவை காட்டிலும் இங்கு எதிர்ப்பு சக்திகள் கூடுதலான பலமும் புரட்சிகர சக்திகள் கூடுதல் பலவீனமும் பெற்றிருந்தன. இதன் விளைவாக தேசிய இயக்கத்தின் தலைமையை முதலாளிவர்க்கம் தக்க வைத்துக் கொண்டு நிலபிரபுத்துவம் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டது. சர்திருததவாதம் மேலோங்கியது அதன் வாலாக இன்றும் ஆளும் வர்க்க பிரதிநிதிகளை முற்போக்காளர்களை கம்யூனிஸ்ட்டுகளாக புரட்சியாளர்களாக வரிந்துக் கட்டி நிற்கும் போக்கு தொடரதான் செய்கிறது. உழைக்கும் மக்களின் நண்பர் யார் எதிரி யார் என்று அறினுக் கொள்ளாமையின் விளைவே இவை.

கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்றனர். மக்கள் கம்யூனிசத்தின் பக்கம் வர தயங்குகின்றனர். நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் இங்குள்ள இடதுசாரிகள் எனும் சிபிஅய், சிபிஎம் மற்றும் சிபிஎம் எம் எல் பாராளுமன்ற பாதையில் பயணிக்கும் இவர்கள்  முதலாளி வர்க்கத்தின் தரப்புக்கு ஓடிச்சென்று பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு துரோகமிழைக்கின்றனர்( இதனை நாம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலைப்புக்கு இட்டுச் சென்ற காவுஸ்திகியால் தலைமை தாங்கப்பட்ட இரண்டாம் அகிலத்தின் துரோகத்தைதோடு பொறுத்தி பார்க்க வேண்டும்).

இன்றைய உலக மய சூழலில் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் புதிய காலனிய முறையில் மேலும் மேலும் தீவிரப்படுத்தும் ஒடுக்குமுறை போர்களும் வரலாறு காணாத கொள்ளையும் நடைபெறுகின்றன. ஆனால் இதை எதிர்த்து சவால் விடுவதற்கு சோசலிச நாடுகளும் இல்லை கம்யூனிச நாடுகளும் இல்லை .

அப்படியே உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலவீனப்பட்டு பிளவுண்டு பல்வேறு விதத்தில் இருக்கிறது, மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்க திறன் இல்லை உண்மைதான்.

ஆக ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியம் நமக்குள்ளது அதற்கு சரியான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடித்து மா-லெ தத்துவ ஒளியில் புரட்சிக்கான கட்சி வேண்டும் அதற்கு நாம்

ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு தோழர் லெனின் வழிகாட்டியுள்ளார். மேலும் அதனை நடைமுறையில் ரஷ்யாவில் சாதித்துக் காட்டினார். மேலும் பாட்டாளிவர்க்க கட்சி எப்படி இருக்க வேண்டும் அது எப்படி செயல்பட வேண்டும் என்று உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு லெனின் வழிகாட்டினார்.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒன்றுபடுவதற்கு நாம் தெளிவான எல்லைக் கோட்டை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றார் லெனின்.

அதன்படி மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலை ஏற்றுக்கொண்டு அதில் உறுதியாக நிற்பவர்களையும், தங்களுக்கிடையே வரும் கருத்து முரண்பாடுகளை மார்க்சிய லெனினிய கோட்பாட்டு வெளிச்சத்திலேயே விவாதித்து ஒரு சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் தீர்த்துக்கொள்வதில் உறுதியாக இருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையேதான் ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு கம்யூனிஸ்டுகள் முயற்சி செய்ய வேண்டும் என்றார் லெனின்.

மேலும் மார்க்சிய லெனினியத்தை மறுக்கும் அல்லது எதிர்க்கும் மார்க்சிய விரோதிகளின் கொள்கை கோட்பாடுகளையும், அந்த நபர்களையும் மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிப்பதில் உறுதியாக நின்று போராடுபவர்களோடு ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்றார் லெனின்.

ஆனால் இங்குள்ள குறுங்குழுவாதிகள் பிற அமைப்பைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளையும், எந்த அமைப்பிலும் சேராத மார்க்சிய லெனினிசத்தை நேசிக்கும் கம்யூனிஸ்டுகளுடன் ஒன்றுபடுவதற்காகப் தயார் இல்லை.

இந்த குறுங்குழுவாதிகளின் நோக்கம் கம்யூனிஸ்டுகளிக்கு இடையிலான ஒற்றுமை ஏற்படுததும் விருப்பம் இல்லை. ஏனெனில் கம்யூனிஸ்டுகளை ஒன்றுபடுத்தினால் இவர்களின் ஏகபோக உரிமையான தனது குழு மறையும் மார்க்சிய அடிப்படையில் இவர்கள் செய்யும் தவறுகளை விமர்சிக்கபடும் என்ற அச்சத்திலிருந்து இந்த குறுங்குழுவாதிகள் கம்யூனிஸ்டுகளை ஒன்றிணைக்க மறுக்கிறார்கள்.

அதேவேளையில் இதற்கு மாறாக பின்நவீனத்துவவாதிகள், அடையாள அரசியல்வாதிகள், இனவாதிகள், தலித்தியவாதிகள், கலைப்புவாதிகள், திருத்தல்வாதிகள், டிராட்ஸ்கியவாதிகள் போன்ற மார்க்சியத்தை மறுக்கின்ற எதிரிகளோடும் துரோகிகளோடும் கூடிக் குலாவுகிறார்கள் ஒன்றிணைபதன் பெயரில் அந்த ஒன்றிணைப்பு யாருக்கு பயனளிக்கும் இவர்களுக்கு தெரியாதா?

இந்த குறுங்குழுவாத கூட்டத்தின் நோக்கம் கூட்டம் சேர்ப்பதாகவே இருக்கிறது. இதனால் ஒரு புரட்சிக்கான ஆயத்த பணியை இவர்களால் செய்ய முடியுமா? இவர்களின் கூட்டாளிகள் மார்க்சிய வழியை மறுத்து ஒடுக்கும் ஒட்டுண்ணி கூட்டத்தின் கருத்தியலை ஏற்கும் பொழுது இவர்கள் ஏகாதிபத்திய ஆதரவும் ஆளும் வர்க்க சேவையையுமே செய்ய முடியும் என்பது திண்ணம் பின்னர் இந்த ஒன்று சேர்க்கை தங்களின் இருப்பை பறைசாற்றி கொள்வதற்கே அன்றி வேறில்லை

ஆனால் ஒருசிலரே ஆனாலும் கம்யூனிச லட்சியத்தில் உறுதி கொண்டவர்களின் பலம் ஆயிரக்கணக்கான மார்க்சிய விரோதிகளின் கூட்ட பலத்தைக் காட்டிலும் சிறப்பானதாகும்.

உண்மையில் மார்க்சிய லெனினிய அறிவுடன் அதில் உறுதியாக நின்று செயல்படுபவர்களால் உழைக்கும் மக்களை பெருவாரியாகத் திரட்டிட முடியும். இதற்கு மாறாக பல்வேறுவிதமான பிற்போக்காளர்களுடன் ஒன்றுபட்டு மக்களுக்கான இயக்கத்தை கம்யூனிஸ்டுகளால் நடத்தவே முடியாது என்பதை குறுங்குழுவாதிகளால் புரிந்துகொள்ள முடியாது.

ஆகவே கண்ட கழிசடைகளுடன் நாம் கூட்டு சேருவதை தவிர்த்துவிட்டு முதலில் கம்யூனிஸ்டுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்காகப் பாடுபடுவதே நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.

எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதற்கு லெனின் இஸ்கரா பத்திரிக்கையிலிருந்து துவங்க வேண்டும் என்றார். லெனினது வழியில் நின்று நாம் சிந்திக்கும் போது நாம் மார்க்சிய லெனினிய பள்ளியிலிருந்து துவங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.(தோழர் ரவீந்திரன் அவர்களின் முகநூல் பகுதி சற்று எனது திருதங்களுடன்)

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்