இந்த இதழில் பேசப்பட்டுள்ள பகுதி
1). தோழர் அப்பு பாலன் எனும் அணையா நெருப்பு
2). இந்தியாவில் பொதுவுடமை இயக்கம் வளராமல் முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
3).இந்திய பொதுவுடமை இயக்கம் சந்திக்கும் பிளவுகளுக்கு காரணம் என்ன?
4). குறுங்குழுவாதம் பற்றி மார்க்சியம் -தேன்மொழி
5). ரசிய சீன புரட்சியின் வழிகாட்டுதலும் இந்திய புரட்சியில் இடதுசாரி இயகத்தின் முன் உள்ள படிப்பினைகளும்
இலக்கு இணையஇதழின் எமதுநோக்கம்:- “புரட்சிகர ஜனநாயக சிந்தனையாளர் களுக்கான களமாக "இலக்கு" இணையஇதழ் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் மார்க்சிய லெனினிய வழியிலான தத்துவ அரசியல் பொருளாதார கலை இலக்கிய மேம்பாட்டுக்கான புரிதலும் வளர்த்தெடுத்தலும் விவாதிபதற்கான தளமாக பயன்படுத்த நினைக்கிறோம். உங்களின் மேலான விவாதங்கள் மூலம் ஒரு சரியான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பாதையில் பயணிக்க முயற்சிக்கலாம் என்பதே எமது நோக்கம்.
இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வ கண்ணேட்டத்தில் அணுகி மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் புரட்சிகர அரசியல் அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை நடுவதும், நடை முறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மா- லெ-மா அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர அறிவு ஜீவிகளை வளர்ப்பதும், “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்.”.
முதலாளித்துவம் அமைதியான முறையில் சோஷலிசமாக மாறும் என்ற கட்டுக் கதையும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற பித்தலாட்டம் இன்னும் பல சந்தர்ப்பவாத போக்குகளும் இரண்டாம் அகிலத்தில் நிலவியது இன்றும் நிலவுகிறது அவை மார்க்சிய வகைபட்டதல்ல..
சர்வதேச அளவில் சந்தர்ப்பவாத போக்குகளை எதிர்த்துப் போரிட்ட லெனின், சோவியத் ரஷ்யாவில் பிரிந்து கிடந்த குழுக்களை இணைத்து பலம்வாய்ந்த ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கட்சி கட்டி புரட்சி நடத்தி காட்டினார். லெனினியத்தின் கொள்கை சர்வதேச மதிப்புள்ளதாக மாறியது. மார்க்சியத்தின் நிலைப்பாடுகளை நடைமுறையில் நிரூபித்தது அக்டோபர் புரட்சி. சந்தர்ப்பவாததின் மீது லெனினிய வெற்றியாக அமைந்தது. அக்டோபர் புரட்சி மூன்றாம் அகிலம் அமைப்பதற்கான சூழல் மிகவும் பிரகாசமாக இருந்தது இன்று நிலை என்ன? ஏன் இவை சிந்தியுங்கள் தோழர்களே!
ஆளுக்கொரு கட்சி ஆளுக்கொரு தத்துவம் மார்க்சியம் போதிக்கவில்லை பருண்மையான குறிப்பான சூழ்நிலைக்களுக்கேற்ப ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுபடுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியான மார்க்சியம் என்பது இல்லை.
கம்யூனிஸ்டுகள் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளாததால், அவர்களிடம் மார்க்சிய லெனினியம் அல்லாத, அல்லது அதனை மறுக்கின்ற மற்றும் எதிர்க்கின்ற கண்ணோட்டம் கொண்டவர்களாகவே பலரும் இருக்கிறார்கள்...
பின்னர் கம்யூனிஸ்ட்கள் எப்படி ஒன்றிணைய முடியும்?
No comments:
Post a Comment