மார்க்சிய தத்துவத்தின் அடிப்படை

தனக்கு முந்திய வரலாற்று வளர்ச்சிக்‌ காலம்‌ முழுவதிலும்‌ முற்போக்குச்‌ சமூகச்‌ சிந்தனையால்‌ உருவாக்கப்பட்ட சிறந்தவற்றை எல்லாம்‌ மார்க்ஸீயம்‌ தன்‌னுள்‌ நிறைத்துக்கொண்டது. “மார்க்ஸீயம்‌ பூர்ஷ்வாச்‌ சகாப்‌தத்தில்‌ பெறப்பட்ட மதிப்பு மிக்க சாதனைகளை முற்றும்‌ நிராகரித்து ஒதுக்கவில்லை. மாறாக, மனிதச்‌ சிந்தனை, பண்பாடு ஆகியவற்றின்‌ இரண்டாயிரம்‌ அண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியில்‌ இருந்த விலைமதிப்புள்ள அம்சங்களை எல்லாம்‌ உட்கிரகித்து தமக்கு ஏற்றவகையில் ஏற்றுக் கொண்டது. புரட்சிகரப்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ தத்துவம்‌ என்ற முறையில்‌ மார்க்ஸியம்‌ உலக வரலாற்று முக்கியத்துவம்‌ பெற்றதற்குக்‌ காரணம்‌ இதுவே”என்றார்‌ லெனின்‌.  

இயக்கவியல்‌ வரலாற்றுப்‌ பொருள்முதல்வாதம்‌ இதன் அடிபடையில் உருவாக்‌ கப்பட்டது. மார்க்ஸியத்தின்‌ வேறு இரண்டு உள்ளுறுப்புக்களான மார்க்ஸியப்‌ பொருளாதாரப்‌ போதனை, விஞ்ஞான சோஷலிஸத்தின்‌ சித்தாந்தம்‌ ஆகியவை உருவாக்கப்பட்டதுடன்‌ தணிக்க முடியாதவாறு தொடர்பு கொண்டிருந்தது. "அரசியல்‌ பொருளாதாரம்‌ அனைத்தையும்‌ அதன்‌ அடிப்படையிலிருந்து தொடங்கிச்‌ செப்பம்‌ செய்வதற்கும்‌ வரலாற்றுக்கும்‌ இயற்‌கை விஞ்ஞானத்துக்கும்‌, தத்துவத்துக்கும்‌ தொழிலாளி வர்க்கதின்‌ அரசியலுக்கும்‌ செயல்முறைக்கும்‌ பொருள்முதல்வாத இயக்கவியலைப்‌ பயன்படுத்துவதுதான்‌ மார்க்ஸுக்கும்‌ எங்கெல்ஸாக்கும்‌ எல்லாவற்றையும்‌ விட அதிக அக்கறைக்கு உரியனவாக விளங்குகின்றன. அவர்கள்‌ உட்புகுத்திய யாவற்‌விலும்‌ முக்கியமான, யாவற்றிலும்‌ புதிய அம்சங்கள்‌ இவையே. புரட்சிகரச்‌ சிந்தனையின்‌ வரலாற்றில்‌ அவா்களது மேதை வாய்ந்த முன்னடிவைப்பு இவற்றிலேயே உள்ளது”? என்று எழுதினார்‌ வி. இ. லெனின்‌.(வி. இ. லெனின்‌. முழு நூல்திரட்டு, தொகுதி 24, பக்கம்‌ 264).

வரலாற்று இயக்கவியல்‌-பொருள்முதல்வாத முறையில்‌ புறிந்து கொள்ளப்பட்டது, முதலாளித்துவத்தின்‌ ஆழ்ந்த முரண்பாடுகளும்‌ அதன்‌ வளர்ச்சிக்குரிய விதிமுறைகளும்‌ திறந்து காட்டப்‌பட்டது, இவற்றின்‌ விளைவாக முதலாளித்துவம்‌ தவிர்க்க இயலாது மடிந்து ஓழியும்‌, அடுத்துவரும்‌ சோஷலிஸப்‌ புரட்சியில்‌ அது அழிக்கப்படுவது வரலாற்று ரீதியில்‌ இன்றியமையாதது.  

கம்யூனிஸ உலகக்‌ கண்ணோட்டத்தின்‌ பொதுச்‌ சித்தாந்த அடிப்படையாகத்‌ தங்கள்‌ தத்துவமுறையை உருவாக்கியதன்‌ வாயிலாக மார்க்ஸியம்‌ எங்கெல்லாம்‌ கருத்துமுதல்வாத இயக்கவியல், மாறாநிலைவாதப்‌ பொருள்முதல்வாதம்‌ ஆகியவற்றின்‌ கோளாறுகளையும்‌ குறைகளையும்‌ அகற்றுவதிலும்‌ முந்திய தத்துவத்தில்‌ இயக்கவியலுக்கும்‌ பொருள்‌ முதல்வாதத்துக்கும்‌ இடையே நிலவிய பிளவை நீக்குவதிலும்‌ மிகப்‌ பெரிய தொண்டு ஆற்றினார்கள்‌.

நாம்‌ புரிந்துக் கொள்ள, மார்க்ஸீயத்‌துக்கு முற்பட்ட பொருள்முதல்வாதம்‌ இயக்கவியல் தொடர்பு அற்றதாக, வரலாற்றுத் தொடர்பு அற்றதாக இருந்‌தது. வளர்ச்சியை அது மிக எளிய வகையில்‌ புரிந்துகொண்டது. வளர்ச்சி பற்றிய போதனை பிரதானமாக ஹெகலின்‌ இயக்கஇயல்‌ உருவாக்கப்பட்டது, ஆனால்‌ அது கருத்துமுதல்‌வாத பார்வை கொண்டிருந்தது. எங்கெல்ஸ்‌ குறிப்பிட்டது போல, “ஹெகலின்‌ இயக்கவியலில்‌ இருந்த திரிபின்‌ அடிப்‌படை என்னவென்றால்‌, ஹெகலின்‌ கருத்துப்படி அது கருத்தின்‌ சுயவளர்ச்சியாக இருக்க வேண்டும்‌ என்பதே. இதன்படி, பொருள்களின்‌ இயக்கவியல்‌ கருத்தின்‌ பிரதிபலிப்பே ஆகும்‌. உண்மையிலோ, நமது மூளையில்‌ தோன்றும்‌ இயக்க இயல்‌, இயற்கைப்‌ பிரபஞ்சத்திலும்‌ மனித சமூகத்திலும்‌ ஏற்படுவதும்‌ இயக்க இயல்‌ வடிவுக்கு உட்பட்டதுமான எதார்த்த வளர்ச்சியின்‌ பிரதிபிம்பமே.”(கார்ல்‌ மார்க்ஸும்‌ பிரெடெரிக்‌ எங்கெல்ஸும்‌. நூல்திரட்டு, தொகுதி 38, பக்கம்‌ 177). மார்க்ஸீயத்தின்‌ ஸ்தாபகர்கள்‌ ஹெகலின்‌ கருத்துமுதல்‌வாத இயக்கவியல் மீது விமர்சனரீதியில்‌ மீண்டும்‌ சிந்தனை செலுத்தி, பொருள்முதல்வாத இயக்கவியலை உருவாக்கினார்கள்‌. இது பண்பளவில்‌ புதிய இயக்கவியல்‌ “எனது இயக்க இயல் முறை தன்‌ அடிப்படையில்‌ ஹெகலின்‌ முறையிலிருந்து வேறானது மட்டும்‌  அல்ல, அதன்‌ நேர்‌ எதிர்நிலை ஆகவும்‌ விளங்குகிறது” 1 என்று எழுதினார்‌ மார்க்ஸ்‌. பொருள்முதல்வாத இயக்க இயல்வாதத்தைச்‌ செவ்வை யாக உருவாக்குகையில்‌ மார்க்ஸும்‌ எங்கெல்ஸும்‌ 19ம்‌ நூற்‌ ருண்டின்‌ மிகப்‌ பெரிய இயற்கைவிஞ்ஞானக்‌ கண்டுபிடிப்புக்‌ களை ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள்‌. அங்கஜீவிகளின்‌ உயிரணுக்‌ கட்டமைப்பு பற்றிய சித்தாந்தம்‌, ஆற்றலின்‌ அழியாமையையும்‌ மாற்றத்தையும்‌ பற்றிய விதி, விலங்கினங்‌ கள்‌, தாவர இனங்கள்‌ ஆகியவற்றின்‌ தோற்றத்தையும்‌ வளர்ச்‌ சியையும்‌ குறித்த டார்வினது போதனை, இவற்றை அவர்கள்‌ முதன்மையாக ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள்‌. பொருளி யல்‌ பிரபஞ்சம்‌ ஏதோ சதா சர்வ காலத்திற்கும்‌ நிலைத்திருப்பது என்றும்‌ மாறுதல்‌ அற்றது என்றும்‌ கருதிய மாறாநிலைவாதக்‌ கண்‌ணோட்டத்தை இந்தக்‌ கண்டுபிடிப்புக்கள்‌ அதாரத்துடன்‌ மறுத்துவிட்டன. பிரபஞ்சத்தின்‌ பொருள்களும்‌ நிகழ்ச்சிகளும்‌ மாறுதலும்‌ வளர்ச்சியும்‌ கொண்டவை, ஒன்றானவை, பரஸ்பரத்‌ தொடர்பு உள்ளவை என்ற இயக்க இயலின்‌ அடிப்படைக்‌ கோட்பாடுகளை இவை உறுதிப்படுத்தின்‌. இந்தக்‌ கண்டுபிடிப்புக்‌ களின்‌ தத்துவ முக்கியத்துவம்‌ முதன்மையாக இவ்விஷயத்‌தில்‌ தான்‌ அடங்கியுள்ளது.

மார்க்ஸீயகத்‌ தத்துவப்‌ பொருள்முதல்வாகமும்‌ பழைய பொருள்முதல் வாதத்தின்‌ மறுஉயிர்ப்பாக மட்டுமே இருந்து விடவில்லை. 19ம்‌ நூற்றாண்டின்‌ இயற்கை விஞ்ஞானக்‌ கண்டுபிடிப்புக்களைப்‌ பயன்படுத்திக்கொண்டு மார்க்ஸும்‌ எங்கெல்‌ ஸும்‌ பழைய, மாறாநிலைவாதப்‌ பொருள்முதல் வாகத்தை அடியோடு மாற்றிச்‌ சீரமைத்தார்கள்‌. பொருள்முகல்வாதத்தை இயக்கஇயலுடன்‌ ஒன்றிணைத்து இயக்கஇயல்‌ பொருள்‌ முதல்வாதத்தை அவர்கள்‌ உருவாக்கினார்கள்‌. பிரபஞ்சத்தை மாற்றி அமைப்பதற்கான சித்தாந்தக்‌ கருவி என்ற வகையில்‌ இயக்கஇயல்‌ பொருள்முதல்வாதம்‌ உருவாக்கப்பட்டது தத்துவச்‌ சிந்தனை தோன்றிய காலம்‌ முதற்கொண்டு அதன்‌ வரலாறு முழுவதிலும்‌ அதனுடைய மிகப்‌ பெரும்‌ நிறைவேற்றமாகவும்‌ தத்துவத்தில்‌ புரட்சிகர மாற்றமாகவும்‌ திகழ்த்தது. 

பழைய பொருள்முதல்வாதத்தின்‌ வரையறுத்த இயல்பு மாறாநிலைவாதத்‌ தன்மை கொண்டிருந்ததில்‌ மட்டுமே அடங்கியிருக்கவில்லை. அது கடைசிவரை ஒத்தியைந்ததாகவும்‌ இருக்கவில்லை, ஏனெனில்‌ மார்க்ஸீயத்துக்கு முந்திய பொருள்முதல்‌வாதிகள்‌ அதைச்‌ சமூக நிகழ்ச்சிகளுக்குப்‌ பொருந்தச்‌ செய்யத்‌ திறனற்றவர்களாக இருந்தார்கள்‌. மார்க்ஸும்‌ எங்கெல்ஸும்‌ பொருள்முதல்வாதக்தகை உச்சிவரை "நிறுவிப்‌ பூர்த்தி செய்தார்கள்‌". அவர்கள்‌ வரலாற்று ரீதியான பொருள்முதல்‌ வாதத்தை உருவாக்கினார்கள்‌. சமூக வளர்ச்சிக்குரிய மிகப்‌ பொதுவான விதிகள்‌ பற்றிய விஞ்ஞானம்‌ இது. தத்துவத்தில்‌ அவர்கள்‌ நிகழ்த்திய புரட்சிகரமான மாறுதலின்‌ வெளியீடாக இதுவும்‌ விளங்கியது. மார்க்ஸீயத்‌ தத்துவம்‌ வெவ்வேறு வர்க்கங்களின்‌, முதன்‌மையாகத்‌ தொழிலாளி வர்க்கத்தின்‌ வாழ்க்கைக்குரிய சமூக நிலைமைகளை எல்லாக்‌ கோணங்களிலிருந்தும்‌ ஆராய்ந்து, வரலாற்றில்‌ உழைப்பாளி மக்கள்‌ ஆற்றியுள்ள உண்மையான பங்கையும்‌ அவர்களது புரட்சிகரச்‌ செயல்களின்‌ முக்கியத்‌ துவத்தையும்‌ காட்டியது. மார்க்ஸீயத்தின்‌ தோற்றத்துக்குப்‌ பின்‌ தத்துவம்‌ விரிவான மக்கள்‌ திரளின்‌ உடைமை, கோடானு கோடி மக்களது போராட்டக்‌ கொடி ஆகிவருகிறது. விஞ்ஞானச்‌ சித்தாந்தத்தையும்‌ புரட்சி நடைமுறையையும்‌, தத்துவத்தையும்‌ அரசியலையும்‌ மார்க்ஸீயம்‌-லெனினீயம்‌ இணையுறுப்புக்களாக ஓன்று சேர்த்துவிட்டது. மார்க்ஸியத்‌ தத்துவத்தின்‌ புரட்சிகரமான மாற்றியமைக்கும்‌ பங்கு கார்ல்‌ மார்க்ஸின்‌ பின்வரும்‌ கருத்துக்களில்‌ வெளியிடப்பட்டுள்ளது: "முந்திய தத்துவ அறிஞர்கள்‌ வெவ்வேறு விதமாகப்‌ பிரபஞ்சத்‌தை விளக்க மட்டுமே செய்தார்கள்‌; உண்மையிலோ, பிரபஞ்‌சத்தை மாற்றுவது தத்துவ அறிஞனின்‌ வேலையில்‌ அடங்கியது. மார்க்ஸீயத்‌ தத்துவத்தின்‌ வலிமையும்‌ உயிரோட்டமும்‌ சமூகத்தைப்‌ புரட்சிகரமாகப்‌ புதுக்கி அமைப்பதற்குரிய திட்ட வட்டமான கடமைகளுடன்‌ அதன்‌ தொடர்பிலேயே உள்ளன. பிரபஞ்சத்தை அறிவதற்கும்‌ மாற்றி அமைப்பதற்குமான முறை என்ற வகையில்‌ மார்க்ஸீயத்‌ தத்துவ விஞ்ஞானம்‌ மக்கள்‌ திரளின்‌ புரட்சிப்‌ போராட்ட அனுபவம்‌, விஞ்ஞானமும்‌ நடைமுறையும்‌ அளிக்கும்‌ மதிப்புயர்ந்த படிப்பினைகள்‌ ஆகிய வற்றின்‌ அடிப்படையில்‌ இடையறாது வளர்ச்சியும்‌ வளமும்‌ பெற்று வருகிறது. தனது இயல்பு காரணமாகவே அது படைப்புக்‌ தன்மை கொண்ட விஞ்ஞானமாக விளங்குகிறது". மார்க்ஸீயத்தின்‌ பொதுச்‌ சித்தாந்த அடிப்படையான இயக்கஇயல், வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதம்‌ உட்பட அதன்‌ எல்லா உறுப்புப்‌ பகுதிகளையும்‌ மேற்கொண்டு விரிவும்‌ வளமும்‌ படுத்தியவர்‌ ரஷ்ய, சர்வதேசப்‌ பாட்டாளி வர்க்கத்‌ தலைவரும்‌ ரஷ்யக்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியையும்‌ சோவியக்‌ அரசையும்‌ ஸ்தாபித்தவரும்‌ ஆன விளாதீமிர்‌ இல்யீச்‌ லெனின்‌ ஆவார்‌. மார்க்ஸீயத்‌ தத்துவத்தில்‌ லெனினது காலக்‌ கட்டம்‌ பாட்டாளி வர்க்கச்‌ சர்வாதிகாரத்தின்‌ பொருட்டும்‌ சோஷலிஸத்தின்‌ வெற்றியின்‌ பொருட்டும்‌ தொழிலாளி வார்க்கத்தின்‌ தலைமையில்‌ உழைப்பாளி மக்கள்‌ திரளின்‌ போராட்டத்தில்‌ புதிய வரலாற்றுச்‌ சகாப்தத்தைக்‌ குறிக்கிறது.

மார்க்ஸீய-லெனினீயத்‌ தத்துவம்‌ ஆழ்ந்த கட்சித்தன்மை கொண்ட விஞ்ஞானம்‌ ஆகும்‌. அதாவது இந்தத்‌ தத்துவம்‌ வர்க்கத்தன்மை கொண்டது, தொழிலாளி வர்க்கத்துக்கு, உழைப்பாளி மக்களுக்குக்‌ தொண்டு ஆற்றுகிறது. எந்தத்‌ தத்துவமும்‌ ஏதாவது ஓரு வகையில்‌ ஒரு குறிப்பிட்ட வர்க்கத்‌ தின்‌ நோக்கையும்‌ நலன்களையும்‌ வெளியிடுகிறது. அனால்‌ தொழிலாளி வர்க்கத்தின்‌ நலன்கள்‌ பூர்ஷ்வாக்களின்‌, சுறண்டுவோரின்‌ நலன்களிலிருந்து பண்பில்‌ வேறுபடுகின்றன. தற்காலச்‌ சமூகத்தில்‌ தனது எதார்த்த நிலை காரணமாக, சுற்றியுள்ள உண்மை நில்மையைச்‌ சரியாக, விஞ்ஞானரீதியில்‌ புரிந்து கொள்வதிலும்‌ அதைப்‌ புரட்சிகரமாக மாற்றி அமைப்பதிலும்‌ அக்கறை கொண்ட ஓரே வர்க்கம்‌ பாட்டாளி வர்க்கமே. எனவே மார்க்ஸீய-லெனினீயத்‌ தத்துவத்தில்‌ கட்சித்தன்மை உண்‌மையான விஞ்ஞான எதார்த்தத்துடன்‌ முற்ற முழுக்கப்‌ பொருந்துகிறது. தொழிலாளி வர்க்கத்தின்‌ புரட்சிகர உலகக்‌ கண்ணோட்டம்‌ எல்லாம்‌ வல்லது, ஏனெனில்‌ அது சரியானது.

மார்க்ஸீய-லெனினீயகத்‌ தத்துவத்துக்கு மாறாக பூர்ஷ்வாத்‌ தத்துவமும்‌ மொத்தத்தில்‌ பூர்ஷ்வாக்‌ கொள்கைவாகும்‌ அனைத்‌துமே சுறண்டும்‌ வர்க்கங்களின்‌ நலன்களுக்குத்‌ தொண்டாற்றுகின்றன. திரிபான பிரபஞ்ச அறிவு இந்த வர்க்கங்களுக்குச்‌ சாதகமானது. தனித்‌ தனி பூர்ஷ்வாக்‌ கொள்கைப்‌ பிரசாரகர்‌களின்‌ அகநிலை விருப்பங்களோ முயற்சிகளோ இதற்கு அவ்‌வளவு காரணம்‌ அல்ல. சுறண்டுவோர்‌ சமூகத்தில்‌ அவர்கள்‌ வகிக்‌ கும்‌ எதார்த்த நிலைகளே இதற்கு முக்கியக்‌ காரணம்‌. இந்த உண்மைக்குக்‌ தெட்டத்‌ தெளிவான உதாரணங்களாக விளங்‌குகின்றன தற்கால பூர்ஷ்வாத்‌ தத்துவமும்‌ சமூக இயலும்‌. இவை புறநிலை விஞ்ஞானங்களாக இருந்த காலம்‌ எப்போதோ போய்விட்டது. முதலாளித்துவச்‌ சமூகத்தின்‌ பிற்போக்குச்‌ சக்திகளின்‌ மக்கள்‌ விரோதக்‌ கொள்கையை நியாயப்படுத்துவகுற்கு இவை போட்டி போட்டுக்கொண்டு முயல்கின்றன. நிகழ்ச்சிகள்‌ வர்க்க நோக்கில்‌ மதிப்பிடப்பட வேண்டும்‌ என்றும்‌ கம்யூனிஸ எதிர்ப்பின்‌ எல்லாவகைத்‌ தோற்றங்களுக்‌கும்‌ எதிராக, பூர்ஷ்வாக்‌ கொள்கைவாதத்துக்கும்‌ அதன்‌ சந்தர்ப்பவாதக்‌ குற்றேவலர்களான வலதுசாரி “இடதுசாரித்‌ திரிபுவாதிகளுக்கும்‌ எதிராகச்‌ செயலூக்கத்துடன்‌ இடையருத போராட்டம்‌ நடத்தப்பட வேண்டும்‌ என்றும்‌ மார்க்ஸீயத்‌ தத்துவத்தின்‌ கட்சித்தன்மைக்‌ கோட்பாடு கோருகிறது.

 "..கறாராகச் சொன்னால் மாமனிதன் எனப்படுபவன் துவங்கி வைப்பவன்தான். ஏனெனில் மற்றவர்களை விட அவன் அதிக தூரம் பார்க்கிறான். மற்றவர்களை விட அவன் விசயங்களை அதிக ஆர்வத்துடன் விரும்புகிறான். சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியின் முந்தைய போக்கினால் முன்வைக்கப்படுகிற விஞ்ஞானப் பிரச்சினைகளுக்கு விடை அளிக்கிறான். சமுதாய உறவுகளின் முந்தைய வளர்ச்சியால் படைக்கப்பட்ட புதிய சமுதாயத் தேவைகளை அவன் சுட்டிக் காட்டுகிறான். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவன்தான் முன்முயற்சி செய்கிறான்." (பிளெகானவ், வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பாத்திரம்).

உலகமயம் பற்றிய அரசியல் பொருளாதார ஆய்வை முதலாளித்துவத்தின் இயல்புகளில் ஒன்றாக அணுகி விளக்கியவர்கள் காரல் மார்க்சும் எங்கெல்சும் ஆவர்.

உற்பத்தி கருவிகளை தொடர்ந்து மேலும் மேலும் உற்பத்திதிறன் உள்ளதாக மாற்றியதன் விளைவாக உற்பத்தி உறவுகளை மாற்றி .... சமூகத்தின் ஒட்டுமொத்த உறவுகளை மாற்றினால் .... என்று தொடங்கும் சமூக விதிகளை பற்றிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசித்த முதலாளித்துவம் தனக்கான விதிகளை உலகமயமாக்கல் மூலம் செயல்படுத்திக் கொண்டுள்ளது.

செய்தி தொடர்பு சாதனங்களின் மிகப் பரந்த அளவில் மேம்பாடுஅடைந்துள்ளதால்முதலாளித்துவவர்க்கமானது எல்லா நாடுகளையும் மிகவும் பின்தங்கி அநாகரிக நாடுகளைக் கூட நாகரீகத்துக்கு கட்டி இழுத்து வருகிறது அதன் உற்பத்தி பண்டங்களின் மலிவான விலைகள் சீன சுவர் போன்ற பெரும் தடை சுவர்களை தகர்த்தெறியும் பீரங்கிகள். அதை வேற்று நாட்டின் பால் அநாகரிக மக்கள் கொண்டுள்ள மிகவும் பிடிவாதமான முகத்தைக் கூட மண்டியிட செய்கின்றன. ஏற்காவிடில் அழிவது உறுதி என்று அச்சுறுத்தி எல்லா நாடுகளையும் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையை ஏற்க வலியுறுத்துகிறது. அவ்வர்க்கம் எதை நாகரிகம் என்றும் கருதுகிறதோ அதை அவர்களிடம் புகுத்துகிறது. சுருங்கச் சொன்னால் தன் சாயலாகவே ஒருவரைப் படைத்து விடுகிறது.

நவீன உற்பத்தி பொருள்களுக்கு வேண்டிய சந்தை சந்தையை தேடிய உலகப் பயணம் விளைவு உற்பத்தியும் விநியோகமும் நுகர்வும் உலகெங்கும் முதலாளித்துவ தன்மையில் ஆனதாக மாற்றப்படுகிறது.

மக்கள் தொகையும் உற்பத்தி சாதனங்களும் சொத்தும் சிதறுண்டு கிடக்கும் நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் முடிவு கண்டு வருகிறது. அது மக்களை ஓரிடத்தில் குவித்துள்ளது. உற்பத்தி சாதனங்களை மையப்படுத்தி உள்ளது. ஒரு சிலர் கைகளில் சொத்தை குவித்துள்ளது. இதன் இயல்பான கட்டாய முடிவாக அரசியல் அதிகாரமும் ஒரு மையத்தில் குவிக்கப்பட்டு விட்டது (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை).

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்