தோழர்களே.!
1. அப்பு, பாலன் போன்ற தியாகத் தோழர்களின் லட்சியத்தை அடைவதில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம்? முன்னேறவில்லை, மாறாக பின்னடைந் துள்ளோம்.
2. உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்கி அவர்களை வழிநடத்துவதற்கான தகுதியை நாம் எந்தளவுக்கு வளர்த்துள்ளோம்? உண்மையில் அதற்கான தகுதியை நாம் இழந்துள்ளோம்.
3. உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள் என்ற சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் முழகத்தைப் புரிந்துகொண்டு அதற்கு நாம் எந்தளவு விசுவாசமாக உள்ளோம். ஆனால் இதற்கு மாறாக நமது சொந்த சகோதரர்களாகிய கம்யூனிஸ்டுகளுக்குஇடையேஒன்றுபடாமல் பல சிறு குழுக்களாகத்தானே பிளவுபட்டுள்ளோம்.
4. மார்க்சிய லெனினிய ஆசான்களான லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர் களின் தலைமையில் மக்கள் நடத்திய போராட்டங்களின் வெற்றியடைந்த வரலாறு நமக்குத் தெரியுமா? அதேபோல் எம்.எல். கட்சித் தலைவர்களான தோழர்கள் அப்பு பாலன் போன்றவர்களின் தலைமையில் நடந்த மக்களின் போராட்டங்களில் கிடைத்த வெற்றிகளின் வரலாறு நமக்குத் தெரியுமா? வெற்றி பெற்ற போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து நாம் ஒன்றுபட்டு எதிரியை எதிர்த்துப் போராடினால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துள்ளோமா? இல்லை நம்பிக்கை இழந்து சோர்வடைந்துள்ளோம்.
5. பிளவுபட்ட நாம் ஒன்றுபட வேண்டியது அவசியமே. அதற்கு மார்க்சிய லெனினியத்தை ஏற்றுக்கொண்டு அதில் உறுதியாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டும். இதற்கு மாறாக மார்க்சிய லெனினியத்தை ஏற்காத அடையாள அரசியல்வாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளோடும், மார்க்சிய ஆசான்களான ஸ்டாலின், மாவோ போன்ற கம்யூனிசத் தலைவர்களைப் பற்றி குறைசொல்லிக்கொண்டு ஏகாதிபத்தியங்களுக்கு குற்றேவேல் புரியும் எதிர்ப்புரட்சிகர டிராட்ஸ்கியவாதிகளுடன் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டுமா? கூடாது என்பதுதான் நமக்கு நம்முடைய ஆசான் லெனின் காட்டிய வழியாகும். ஆகவேதான் நாம் லெனினைப் பின்பற்ற வேண்டுமானால் நாம் லெனினை படிக்க வேண்டும் என்கிறோம்.
6. நாம் மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் நமது அமைப்பிற்குள் மார்க்சியத்தை மறுக்கும் டிராட்ஸ்கியவாதிகள் ஊடுருவ முடியும், டிராட்ஸ்கியவாதிகள்போன்றதுரோகிகளும், அடையாள அரசியல் வாதிகளும் மக்களின் செல்வாக்கைப் பெற முடியும். இதுதான் சமீப காலங்களில் நமது நாட்டில் நடந்துள்ளது. இதற்கு டிராட்ஸ்கிய வாதிகள் போன்றவர்களின் வலிமை காரணம் இல்லை. உண்மையில் அவர்களுக்கு எவ்விதமான வலிமையும் இல்லை. நம்மிடமுள்ள பலவீனத்தைத்தான் அவர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே நாம் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியல் அறிவையும், சர்வதேச பொதுவுடமை இயக்க வரலாற்றில் நமது எதிரிகளைவீழ்த்தியதையும் கட்சிக்குள் இருந்த டிராட்ஸ்கி போன்ற துரோகிகளை
அம்பலப்படுத்தி விரட்டியடித்ததையும் நாம் புரிந்துகொண்டால் நம்மால் மக்களைத் திரட்டி எதிரிகளை வீழ்த்தவும் துரோகிகளை விரட்டியடிக்கவும் முடியும்.இவையே நமது தியாகிகளுக்கு நமது அஞ்சலியாகவும் ஒரு புரட்சிக்கான பங்களிப்பில் நமக்கான முன்னெடுப்பாக இருக்குமென்று இலக்கு இணைய இதழ் ஆசிரியர் குழுவின் ஆலோசனையாகமுன்வைக்கிறோம்.
ஆகவே நாம் மார்க்சிய லெனினிய மாவோவின் படைப்புகளை படித்து நமது மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சர்வதேசத்தில் நடந்த புரட்சியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக ரஷ்யாவிலும் சீனாவிலும் நடந்த புரட்சியிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக கட்சிக்குள் ஒரு தோழரை எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் சுய வெறுப்பின் காரணமாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி தண்டிக்கக் கூடாது என்கிறார் சௌ என் லாய். ஆகவே சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளும் சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையில் கம்யூனிஸ்டு கள் செயல்பட்டுள்ளார்கள். அது தவறானது என்று சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் உணர்ந்து அந்தத் தவறை சீனக் கம்யூனிஸ்டுகள் செய்யக்கூடாது என்று போதித்து வழிகாட்டியுள்ளார்கள். ஆனாலும் அவர்கள் அன்று செய்த தவறையே நாம் இன்று செய்கிறோம். என்றால் என்ன பொருள்? மார்க்சிய ஆசான்களது போதனைகளை நாம் கற்கவில்லை, மேலும் அதனை பின்பற்றவில்லை என்பதுதானே அதன் பொருள். ஆகவே நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகளை மார்க்சிய ஆசான்கள் சந்தித்துள்ளனர். அந்தப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுகளை கண்டு தீர்த்துள்ளனர். அந்த அனுபவங்களை நாம் புரிந்து கொண்டால் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை நம்மால் எளிதாக தீர்க்க முடியும்.
அந்த வகையில் நாம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனை களில் மிகவும் கடுமையானது என்ன? நாம் பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறோம். இந்தப் பிளவுகளை முறியடிக்க வேண்டும். அடுத்ததாக நாம் ஒன்றுபட வேண்டும். இந்த ஒற்றுமையை நாம் எப்படி சாதிப்பது? இந்த கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டும். இதற்கான விடையை ஒவ்வொருவரும் தன்மனப்போக்கில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு தன்மனப்போக்கில் சிந்தித்து முடிவெடுப்பதால் எவ்விதமான பயனும் இல்லை. மாறாக இதுபோன்ற பிரச்சனைகளை மார்க்சிய ஆசான்கள் எவ்வாறு தீர்த்தார்கள்? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் நாம் சிந்தித்து விவாதித்து முடிவெடுத்தால் நாம் சந்திக்கும் இந்தப்பிரச்சனையை தீர்க்க முடியும் என்று இலக்கு ஆசிரியர் குழு கருதுகிறது.
ஆகவே இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மார்க்சிய ஆசான்கள் காட்டியுள்ள வழிமுறைகளை நாம் தேடி கண்டுபிடித்து அதன் அடிப்படையில் சிந்தித்து விவாதித்து முடிவிற்கு வரவேண்டும். அதுதான் சரியானது என்று நாங்கள் கருதுகிறோம்.
கம்யூனிஸ்டுகள் பிளவுபடுவதற்கு முதன்மையான காரணம் குறுங்குழுவாதம் என்று நாங்கள் கருதுகிறோம்.
குறுங்குழுவாதம் பற்றி சீனக் கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பலவாறு போதித்துள்ளனர். அந்த போதனைகளை படித்துத்தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.
கம்யூனிச குழுக்களில் நடந்த பிளவுகளின் வரலாற்றிலிருந்தும் நாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். ஆகவே பிளவுக்கான காரணத்தை சான்று களிலிருந்தும் மார்க்சிய ஆசான்களது போதனைகளிலிருந்தும்தான் நாம் தேட வேண்டும். நம்மிடத்திலுள்ளகுறைகளும் தவறுகளும்தான் இதற்குக் காரணமாகும். நம்மிடம் எத்தகையகுறைகள் இதற்கு காரணமாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து பட்டியலிட வேண்டும். அந்தக் குறைகளை நாம் களைவதன் மூலமே நாம் பிளவுகளை தவிர்க்க முடியும். இவ்வாறு நாம் சொல்லுவதால் நமது குறைகளை எல்லாம் களைந்து முடிந்தவுடன்தான் பிளவுகளை தவிர்க்க முடியும் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நமது தவறுகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் அதன் பிறகு அதனை களைவதற்கான இயக்கத்தை நடத்திட வேண்டும். தவறுகளை களைய வேண்டுவதற்கான இயக்கம் இல்லாமல் பிளவுகளை தவிர்க்க முடியாது என்பதே இதன் பொருளாகும். கம்யூனிஸ்டுகளை ஒன்றுபடுத்தியவர் லெனின். அவரது அனுபவத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் எடுத்துக்கொண்டு செயல்படுவதன் மூலமே நாம் ஒன்றுபட முடியும். இதற்கு மாறாக தன்மனப்போக்கில் நாம் ஒன்றுபட நினைத்தால் அந்த ஒற்றுமை நிலைக்காது அல்லது நாம் ஒன்றுபட்டு மார்க்சியத்துக்கு எதிரான மக்களின் எதிரியாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதற்கு நமக்கு லெனின் வகுத்து கொடுத்த கோட்பாடு நாம் ஒன்றுபடுவதற்கு முன்பு நாம் ஒரு எல்லைக் கோட்டை வகுத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒன்றுபடுவதற்கு முன்பு எல்லைக் கோட்டை வகுத்துக்கொள்ள வேண்டும். அந்த எல்லைக்கோடு என்ன? என்பதை இன்றைய சூழலிருந்து நாம் சிந்தித்து விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்று இலக்கு ஆசிரியர் குழு கருதுகிறது.
குறுங்குழுவாதம் எப்படி ஒரு கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.
ஒரு அமைப்பிற்குள் தோழர்கள் ஒற்றுமையாக இருந்து, அமைப்பிற்குள் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடையாத சூழலிலும், சுயநலவாத குறுங்குழுவாதிகள் (தலைவர்கள்) அவர்களுக்கு தேவையான பதவிக்காகவும் செல்வாக்குக்காகவும்,அமைப்பிற்குள் தனக்கானவர்களைக் கொண்ட கோஷ்டியை உருவாக்குவார்கள், அவர்கள் மூலம் அமைப்பை உடைத்து ஒற்றுமையை சீர்குழைப்பார்கள். ஆகவே அமைப்பிற்குள் இருக்கின்ற குறுங் குழுவாத சிந்தனைமுறையை எதிர்த்துப் போராடி முறியடிக்காமல் அமைப்புகள் பிளவுபடுவதை நம்மால் தடுக்க முடியாது, கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமை என்பது தனிநபரின் தலைமை அல்ல. மாறாக கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைதான் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு தலைமை. அதாவது தனிநபர் தலைமை அல்ல மாறாக சித்தாந்தத் தலைமைதான் கம்யூனிச அமைப்பின் தலைமையாகும். மாபெரும் சிந்தனையாளரான தோழர் லெனினது கொள்கை கோட்பாட்டைத்தான் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டார்கள். இதற்கு மாறாக லெனினை புகழ்பாடுவது கம்யூனிஸ்டு களின் நோக்கம் அல்ல. லெனினும் தனக்கு புகழ் வேண்டும் என்றும் தன்னை பலரும் புகழ வேண்டும் என்று விரும்பியவர் அல்ல. ஆனால் இங்குள்ள குறுங்குழுவாதத் தலைவர்கள் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் புகழ் வேண்டும் என்று விரும்புகிறார்கள். தன்னைப் பற்றி மிகையாக மதிப்பிடுகிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்தைத்தான் அமைப்பிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களது கருத்திற்கு மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை அமைப்பிற்குள்ளேயே இருந்தாலும் அவர்களை எதிரிகளாகவே கருதுகிறார்கள். அவர்களை தோழர்களாக கருதி அவர்களது கருத்துக்களையும் பரிசீலித்து விவாதிப்பது இல்லை. அதற்கு மாறாக தனக்குப் பிடிக்காதவர்களை எதிர்த்து ஒரு கோஷ்டியை உருவாக்கி தோழர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து, கட்சித் தோழர்கள் மத்தியியில் குறிப்பிட்ட தோழரின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். அதன் மூலம் தனக்கு பிடிக்காதவர்களை கட்சியிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் விரட்டியடிக்கிறார்கள். அதன் விளைவாக அமைப்பு பிளவுபடுகிறது. இந்த முறையில்தான் குழுக்கள் பிளவுபட்டது.
கம்யூனிஸ்டுக் கட்சியின் திட்டம் மற்றும் கொள்கைகளை உழைக்கும் மக்களிடம் விவாதிக்க வேண்டும் என்று மார்க்சிய ஆசான்கள் போதித்தார்கள். கட்சியின் கொள்கைகளை செயல்படுத்துபவர்கள் கட்சி உறுப்பினர்களும் மக்களுமே ஆவார்கள். ஆகவே கொள்கையை செயல்படுத்தும் இவர்களுக்கு கொள்கை புரியவில்லை என்றால் இவர்களால் அந்த கொள்கையை எப்படி செயல்படுத்த முடியும்?, மேலும் செயல்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களை அவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? இதனை நன்கு உணர்ந்த மார்க்சிய ஆசான்கள் கட்சியின் கொள்கையை மக்களிடம் விவாதிக்க வேண்டும் என்றும் மக்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் சந்தேகங்களை தீர்க்க வேண்டும்என்று மார்க்சிய ஆசான்கள் நமக்குப் போதித்துள்ளனர். இந்த போதனையை குறுங்குழுவாதிகள் புரிந்துகொண்டு பின்பற்றவில்லை.
இங்கே குறுங்குழுவாதத் தலைவர்கள் அவர்களுக்குள் ஒரு கோஷ்டியை அமைத்துக் கொண்டு அந்த கோஷ்டிக்குள் விவாதித்து கொள்கை முடிவெடுத்து, அந்தக் கொள்கையை கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு செம்மறி ஆட்டுக் கூட்டம் போல் ஏற்றுக்கொண்டு செயல்பட வைக்கிறார்கள், மேலும் கட்சி உறுப்பினர்கள் தன்னை புகழ்ந்து புகழ்பாட வைக்கிறார்கள். அவ்வாறு கட்சி உறுப்பினர்கள் செம்மறி ஆடாக இருக்க வேண்டுமானால் கட்சி உறுப்பினர்கள் பொதுவான மார்க்சிய லெனினிய அறிவை பெற்றிருக்கக்கூடாது. எனவே கம்யூனிஸ்டு அமைப்பின் உறுப்பினர்களுக்கு பொதுவான மார்க்சிய லெனினிய தத்துவ அரசியல் அறிவை போதிப்பதில்லை. மேலும் அத்தகைய போதனை அவசியம் இல்லை என்கிறார்கள். கட்சி உறுப்பினர்களுக்கு பொதுவான மார்க்சிய லெனினிய அறிவு உள்ளதாக பொய் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். குறுங்குழுவாதிகளை தலைவர்களாகக் கொண்ட கம்யூனிச அமைப்பில், இந்த தலைவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு. இவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமான தலைவர்களாக கட்சி உறுப்பினர்கள் கருதுகிறார்கள். இதன் அடிப்படையில்தான் கட்சி உறுப்பினர்கள் வளர்க்கப்படுகிறார்கள். இந்தத் தலைவர்கள் கெட்டது மட்டுமல்லாமல் கட்சி உறுப்பினர்களையும் சுயசிந்தனையற்ற மூடர்களாக மாற்றப்படுகிறார்கள்.
இந்தச் சூழலை பயன்படுத்தித்தான் தனக்குப் பிடிக்காதவர்களையும் தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களையும் தலைமை வழிபாடுகொண்ட உறுப்பினர் களின் துணையோடு கட்சியை விட்டு வெளியேற்றி கட்சியை பிளவுபடுத்து கிறார்கள். ஆகவே கட்சி உறுப்பினர்கள் மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் எப்போதும் சுயசிந்தனையில்லாத முறையில் தலைவர்களை சார்ந்தே இருக்க நேரிடும். கட்சியானது தலைவரை சார்ந்தே இயங்க வேண்டிய நிலை ஏற்படும். தலைவர் தவறான கொள்கையாளராக இருந்தால் கட்சியும் தவறான வழியிலேயே பயணிக்கும். அதனை எதிர்த்துப் போராடுபவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். அதன் விளைவாக கட்சியானது பிளவுபடும். இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டியுள்ளார்கள். அதாவது ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும்கட்சியின் கொள்கைகளை கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களிடம் விவாதிக்க வேண்டும்.
குறுங்குழுவாதத் தலைவர்கள் கட்சி உறுப்பினர்களை தலைமை வழிபாட்டாளர் களாகவும்,சுயசிந்தனை அற்றவர்களாகவும், கட்சித் தலைமையின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டவர் களாகவுமே வளர்க்கிறார்கள். அதன் மூலம்மட்டுமே தனது தலைமைப்பதவியை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று கருதுகிறார்கள். இந்த தலைவர்கள் கம்யூனிச அமைப்பின் தலைமையை தனிநபர் தலைமையாகவே கருதுகிறார்கள். ஆனால் இவர்கள் வெளியே பேசும்போது சித்தாந்தத் தலைமை என்று பேசி அணிகளை ஏமாற்றுவார்கள். இவர்களின் தவறுகளை யாராவது சுட்டிக் காட்டிவிட்டால் அவர்களை ஓரம்கட்டி விரட்டியடிப்பார்கள். இவர்களது இந்த செயலை தலையாட்டி பொம்மைகளான கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதன் விளைவாக கட்சியானது பிளவுபடும். இவ்வாறுதான் கம்யூனிச அமைப்புகள்பிளவுபட்டது. இவ்வாறுதான் இத்தகைய சுயநலவாதத் தலைவர்களால் புரட்சிகரமான கொள்கை கள் கைவிடப்பட்டு முதலாளிகளோடு சமரசம் செய்து கொள்ளும் திருத்தல்வாதக் கொள்கைகளை கம்யூனிச அமைப்புக்குள் கொண்டுவந்து கம்யூனிஸ்டுக் கட்சியானது திருத்தல்வாதக் கட்சியாகமாற்றப்பட்டது.
ஆகவே, கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் தலைமை வழிபாட்டை கைவிட்டுவிட்டு, எது சரியானது எது தவறானது என்பதையும் எது உண்மை எது பொய் என்பதையும் பிரித்துப் பார்த்துப் புரிந்துகொள்வதற்கான அறிவைப் பெற வேண்டும். அதற்கு மார்க்சிய ஆசான்களது நூல்களை படிக்க வேண்டும். அப்போதுதான் குறுங்குழுவாதத் தலைவர்களின் சதிகளைப் புரிந்து கொண்டு அவர்களை எதிர்த்துப் போராடி அமைப்பு பிளவுபடுவதை தடுக்க முடியும். மேலும் கட்சியானது திருத்தல்வாதக் கட்சியாக மாறுவதையும் தடுக்க முடியும். கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் எந்த அளவுக்கு மார்க்சிய லெனினிய அறிவுள்ளவர்களாக வளர்க்கப்படுகிறார் களோ அந்தளவுக்கு ஒரு ஒன்றுபட்ட பலம் வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியை நாம் கட்ட முடியும். ஆகவே கட்சிக்குள் தனிநர்கள் அல்ல முக்கியமான பிரச்சனையாகும். கொள்கைதான் முதன்மையான பிரச்சனையாகும் என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உணர்ந்துகொள்கைகளில் எது சரியானது எது தவறானது என்பதை வேறுபடுத்திப் பார்க்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்குமாறாக தனக்குப் பிடித்தவர்கள் சொல்வதெல்லாம் சரி என்று கண்மூடித் தனமாக நம்பக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த மார்க்ஸிஸ்ட் கட்சியாகட்டும் நக்கசல்பாரி யின் தொடர்சியாக தோன்றிய கட்சி குழுக்களாக மாறியது ஏன் தமிழகத்தில் மக்கள்யுத்த குழு மற்றும் பிற குழுக்கள் பிளவுண்டதற்கு அரசியல் முரண்பாடுதான் காரணம் என்று பலரும் பிரச்சாரம் செய்கிறார்கள். அது உண்மையல்ல. அரசியல் சித்தாந்த முரண்பாடுகளை ஒரு அமைப்பிற்குள்ளேயே, அந்த அமைப்பு பிளவுபடாமலேயே தீர்த்துக் கொள்வதற்கு உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் நடத்துவது என்ற வழிமுறையை மார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள். மேலும் அதனை நடைமுறையில் செயல்படுத்தி அவர்கள் செயல்பட்ட கம்யூனிச அமைப்பிற்குள்ஒற்றுமையைசாதித்து நிரூபித்துள்ளார்கள். ஆகவே பிளவுபட்ட கம்யூனிச அமைப்புகளின் தலைவர்கள் மார்க்சிய ஆசான்களின் இந்த போதனைகளை பின்பற்ற தவறியதால்தான், கம்யூனிச அமைப்பு பல சிறுசிறு குழுக்களாகப் பிளவுபட்டது என்ற உண்மையை இவர்கள் மூடிமறைக்கிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம் இந்த அமைப்புகளில் நிலவும் குறுங்குழுவாதமே ஆகும். இந்த குறுங்குழுவாதத்துக்கான வர்க்க அடிப்படை குட்டி முதலாளித்துவம். அதற்கான சிந்தனைமுறை சுயநலவாதத்தின் அடிப்படையிலான தனிவுடமை சிந்தனைமுறையாகும்.
ஆகவே இந்த தலைவர்கள் அவர்களிடமுள்ள சுயநலத்தை கைவிட்டுவிட்டு பொதுநல வாதிகளாக முதலில் மாறவேண்டும். தனிவுடமை சிந்தனைமுறையை கைவிட்டு விட்டு மார்க்சிய லெனினிய சிந்தனை முறையை கற்று அதன் அடிப்படையில் சிந்தித்து செயல்படுபவராக அதாவது உண்மையான மார்க்சிய லெனினிய வாதியாகமாறவேண்டும்.குட்டிமுதலாளித்துவ வர்க்க நிலையை கைவிட்டுவிட்டு பாட்டாளிவர்க்க நிலைக்கு அவர்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். அமைப்பிற்குள் நிலவும் குறுங்குழு வாதத்திற்கு எதிராகப் போராடி அதனை முறியடித்து ஜனநாயகத்துக்காகப் பாடுபட்டு நிலைநிறுத்த வேண்டும். அத்தகைய ஜனநாயகத்தை நிலைநாட்டாமல் மத்தியத்துவத்தை மட்டும் வலியுறுத்துவது அராஜகவாதமே ஆகும். ஆகவே இந்தக் குழுக்களின் தலைவர்கள் தனது சொந்தத் தவறுகளை சுயவிமர்சனம் செய்து முதலில் களைய வேண்டும். அந்த தவறுகளுக்கு மாற்றாக மார்க்சிய ஆசான்களின் போதனைகளின் அடிப்படையில் சிந்தித்து உறுதியாக செயல்பட்டால் மட்டுமே கம்யூனிஸ்டுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட முடியும். இந்தத் தவறுகளை களையாமல் இவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இவர்களிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
குழுக்கள் பிளவுபடும் போது யாரும் அரசியல் முரண்பாடுகளை முன்வைத்து அமைப்பிற்குள் போராடவில்லை. அற்ப விசயங்களை முன்னிறுத்தியும் தனிநர்கள் மீது குற்றச் சாட்டுகளை முனைவைத்துமே போராடினார்கள். சில அரசியல் பிரச்சனைகளை பேசிய போதும் அதற்கு எவ்விதமான முன்னுரிமையும் கொடுத்து போராட்டங்கள் நடத்தப்படவில்லை. ஆனால் பிளவுபட்ட பின்பு ஒவ்வொருவரும் வெவ்வேறான அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தி அவர்களின் பின்னால் வந்த உறுப்பினர்களை சமாதானப்படுத்தி தக்கவைக்க முயற்சிசெய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு இடையிலான முரண்பாடு அடிப்படையில் தனிநபர் முரண்பாடாகவே முதன்மையாக இருக்கிறது. எனவேதான் இதுவரை ஒரே அமைப்பில் ஒன்றுபட்டு செயல்பட்டுவிட்டு தற்போது பிரிந்தவுடன் ஒருவர் முகத்தை பிறர் பார்க்க மறுப்பதும், ஒருவரோடு ஒருவர் பேச மறுப்பதையும் இங்கு காணமுடிகிறது.
இது நமது சமூகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் பிளவு ஏற்படும் போதும், நண்பர்களுக்கு இடையில் பிளவு ஏற்படும் போதும் ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் முறையாகவே இருப்பதை நாம் காண முடியும். நிலவுகின்ற தனிவுடமை சமூகத்தில் நிலவுகின்றதுவே இங்கே பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஆகவே இந்த கம்யூனிஸ்டுகள் இந்த தனிவுடமை சமூகத்திலிருந்து கற்றுக் கொண்ட பிற்போக்கான சிந்தனைமற்றும் பழக்கவழக்கங்களை கைவிடவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்த அமைப்புகளின் தலைவர்கள் தனிவுடமை சிந்தனைமுறையையும் பழக்க வழக்கங்களையும் கைவிடாதது மட்டுமல்லாமல் கட்சி உறுப்பினர்களும் இவர்களைப் போலவே பிற்போக்கு சிந்தனையாளர்களாகவே வளர்த்துள்ளார் கள் என்பதை நாம் பார்க்கமுடிகிறது. திட்டம் போர்த்தந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் இவர்கள்,சரியானது எது? தவறானது எது? என்று பிரித்துப் பார்க்கும் மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கட்சி உறுப்பினர்களும் வளர்த்துக்கொள்வதற்கு முயற்சி செய்யாமல் ஏதேதோ பேசி தங்களை பெரிய அறிவாளிகள் போல் கட்சி உறுப்பினர் களிடம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். கட்சிக்குள் நான் பெரிய அறிவாளியா? அல்லது நீ பெரிய அறிவாளியா? என்ற போட்டி உருவாகி தனிநபர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுவிட்டால் அமைப்பு பிளவில் போய் முடிந்துவிடுகிறது.
இந்த அமைப்புகளின் பிளவிற்கான வரலாற்றை நாம் ஆராய்ந்து பார்த்தால் தனிநபர்களுக்கு இடையிலான முரண்பாடே பிளவுகளுக்கு பெரும்பாண்மையாக காரணமாக இருப்பதை நாம் அறியலாம். இதற்கு எதிராக நாம் போராட வேண்டுமானால் மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழியில் நாம் மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை வளர்க்க வேண்டும், சுய வளர்ச்சி பயிற்சியைப் பெற வேண்டும். இவ்வாறு பல சிறுகுழுக்களாக பிளவுபட்டவர்களால் எதையுமே சாதிக்க முடியாது என்பதுஇவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருந்த போதிலும் இவர்கள் குழுவாகவே நீடிக்க விரும்புகிறார்களே ஏன்? இவர்களது நோக்கம் மக்கள் விடுதலையோ சமூக மாற்றமோ அல்ல. மாறாக இவர்களை சிலர் புகழ வேண்டும், இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களது லட்சியம். இத்தகைய தலைவர்களையும் இத்தகைய அமைப்பையும் நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதாகவே அமையும். எனினும் இந்தத் தலைவர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து மார்க்சிய லெனினிய வழியில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு முயற்சி செய்வாகள் என்றால் அவர்களை நாம்ஆதரிக்கலாம், வரவேற்கலாம்.
ஆகவே குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாத பண்புகளை நாம் பட்டியலிட வேண்டும். உதாரணமாக தான் என்ற அகம்பாவம், பிறரை மதிக்காத தன்மை, தனது கருத்துக்கு மாறுபட்ட கருத்துக்கொண்டதோழர்களை பகையாகப் பார்ப்பது, பிடிக்காதவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவதூறு செய்வது, மார்க்சியத்தைப் படிக்காமல் தன்மனம்போல் பேசுவது, தலைமைப் பதவிப் பித்துப்பிடித்து திரிவது, தலைமை பதவியை அடைவதற்கு சதிவேலைகளில் ஈடுபடுவது, பொதுநல உணர்வின்றி இருப்பது.
சுயநலவாதியாகவே இருப்பது. தனது நலனுக்காக எதிரியோடு உறவு கொள்வது. மார்க்சியத்துக்கு எதிரான சித்தாந்தங்களையும் அத்தகைய சித்தாந்தவாதிகளையும் எதிர்த்துப் சித்தாந்தப் போராட்டம் நடத்தி முறியடிக்க முயற்சி செய்யாமை, இதற்கு மாறாக தனக்குப் பிடிக்காத தோழர்கள் மீது மார்க்சிய மற்றும் கட்சியின் எதிரி என்று முத்திரை குத்துவது. இது போன்ற பல்வேறுவிதமான குறைகள் குறுங்குழுவாதிகளிடம் காணப்படுகிறது. இத்தகைய குறுங்குழுவாதத் தவறுகளை கம்யூனிஸ்டுகள் செய்தால் கட்சி பிளவுபடும். ஆகவே கம்யூனிஸ்டுகள் இத்தகைய குறுங்குழுவாதத் தவறுகளை செய்யக் கூடாது என்பதை போதித்து, இந்த தவறுகளை களைந்திடுவதற்கான இயக்கத்தை கட்சியானது தொடர்ந்து நடத்தி முறியடிக்க வேண்டும். இது ஒரு எளிமையான பணி இல்லை. இதற்காக நாம் தொடர்ந்து விடாப்பிடியாகப் போராட வேண்டும். மேலும் பிளவு ஏற்படும் சூழலில் பிளவிற்காக முயற்சி செய்பவர்களை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் நடத்தி கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு கண்டு ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட நாம் என்ன செய்ய வேண்டும்.?
நமது லட்சியம் போல்ஷ்விக் பாணியிலான கம்யூனிஸ்டுக்கட்சியை உருவாக்கு வதாகவே இருக்க வேண்டும். ஆகவே போல்ஷ்விசம் பற்றிய லெனினது போதனைகளை நாம் படித்துப் புரிந்துகொள்வது முதன்மையானதாகும்.
நாம் ஒன்றுபடுவதற்கு முன்பு தெளிவான எல்லைக் கோட்டை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றார் லெனின். தற்போது மார்க்சிய லெனினியம் தனது செல்வாக்கை இழந்துள்ளது. மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான பின்நவீனத்துவம், அடையாள அரசியல், டிராட்ஸ்கியம், சீர்திருத்தவாதம், திருத்தல்வாதம், கலைப்புவாதம், ஏகாதிபத்தியத்தை மறுக்கும் அரசியல், ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கும் அரசியல், தலித்தியம், சுற்றுச்சூழலியம், போன்ற மார்க்சியத்தை மறுக்கும், கொச்சைப் படுத்தும், எதிர்க்கும் அரசியல் தத்துவங்கள்தான் செல்வாக்கோடு வளர்ந்துகொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் மார்க்சிய லெனினியவாதிகள் ஒன்றுபட்டு தங்களை வளர்த்துக் கொள்வது முதன்மையான கடமையாக உள்ளது. இதற்கு மாறாக மார்க்சிய லெனினிய வாதிகள் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தை முன்வைத்து மார்க்சிய லெனினியவாதிகள் அதனை எதிர்க்கும் பிறறோடும் ஒன்றுபட வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றினால் கம்யூனிஸ்டுகள் வளர முடியாது.அதுமட்டுமல்ல கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாகவே இருக்க முடியாது, தொடரவும் முடியாது. மார்க்சிய லெனினியத்துக்குப் புறம்பானவர்கள், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மக்களின் செல்வாக்கு என்ற அடிப்படையிலும் மார்க்சிய லெனினிய வாதிகளைக் காட்டிலும் பலம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் நம்மை சாப்பிட்டு செரித்துவிடுவார்கள். இதுதான் கடந்தகால அனுபவமாகும். நாம் உடனடியாக ஒன்றுபட வேண்டும் என்று கருதி, மார்க்சிய லெனினியத்தை ஏற்காதவர்களுடனும் ஒன்றுபட வேண்டும் என்று அவசரமாக ஒன்றுபட்டால் அதன் விளைவு உழைக்கும் மக்களுக்குஎதிரானதாகவே அமையும். நமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான காலம் மேலும் தள்ளிப்போகும். ஆகவே நிதானமாகவே உண்மையான நேர்மையான மார்க்சிய லெனினிய வாதிகள் அவர்கள் சிறிய எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் ஒன்றுபட்டு மார்க்சிய லெனினிய அடிப்படையில் மார்க்சிய லெனினியத்தை மறுக்கும் அரசியல் கொள்கை கோட்பாடுகளை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். அதேபோல் மார்க்சிய லெனினியத்தை மறுக்கும் அரசியல்வாதி களையும் மக்களிடம் அம்பலப்பத்தினால், மார்க்சிய லெனினியத்தை மறுக்கும் கொள்கைகளை மக்களும் புறக்கணிப்பார்கள். இதுவரை அந்தக் கொள்கையின்அடிப்படையில் செயல்பட்ட அரசியல்வாதிகளை பின்பற்றியவர்களும் அவர்களை புறக்கணித்து கம்யூனிஸ்டு களின் பின்னால் அணிதிரள்வார்கள்.
.ஆகவே தற்போது மார்க்சிய லெனினியத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் சிறிய எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் ஒன்றுசேர்ந்து மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப்பிடித்து பிரச்சாரம் செய்தால் நாம் வளர முடியும். மார்க்சிய லெனினியத்தை மறுப்பவர்கள் அதிகமான எண்ணிக்கை கொண்டிருந்தாலும் அவர்களை நம்பும் மக்களுக்கு வழிகாட்ட அவர்களால் முடியாது. எனினும் அவர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்களை உதாரணமாக தலித்துகள் ஒடுக்கப்படுவதை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற கொள்கைகளை நாம் ஆதரிப்பதோடு அதற்காக உண்மையாகவே போராடுவோம் என்பதை நமது தியாகத் தோழர்களின் வழியில் நின்று செயல்பட்டு தலித் மக்களின் செல்வாக்கை நம்மால் பெற முடியும். மேலும் இது போன்ற ஒவ்வொரு பிரச்சனை களுக்கான தீர்வை நாம் முன்வைத்து அதனை நமது திட்டத்தில் சேர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இத்தகைய பிரச்சனைகளை எல்லாம் தீர்ப்பதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்கு பொறுத்தமான அமைப்பு நிலவுகின்ற பாராளுமன்றம் இல்லை. மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் உரிமையும் அதிகாரமும் கொண்ட கம்யூன் அமைப்புதான் நமக்குத் தேவை என்பதையும், அத்தகைய கம்யூன்அமைப்பை மக்கள்தான் உருவாக்க வேண்டும் என்பதை மக்களிடம் பிரச்சாரம் செய்து கம்யூன் அமைப்பை உருவாக்குவதற்கு நாம் பாடுபட்டால் மக்கள் நம்மீது நிச்சயமாக நம்பிக்கை வைப்பார்கள். ஏற்கனே மக்கள் மார்க்சியத்தை மறுக்கும் அரசியல்வாதிகளின் மீது வெறுப்புக் கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கான அரசியல்வாதிகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே மக்கள் மீது நம்பிக்கை கொண்ட உண்மையான நேர்மையான மார்க்சியவாதிகள்தான் உடனடியாக ஒன்றுபட வேண்டும்.
அதற்கு உண்மையான நேர்மையான மார்க்சிய லெனினியவாதிகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களிடத்தில் சித்தாந்த ஒற்றுமையை ஏற்படுத்து வதற்கான வழிமுறைகளை மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
ஆகவே நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது.
1. மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை வளர்ப்பது.
2. கட்சிக்குள் நிலவும் குறுங்குழுவாத்த்தை எதிர்த்துப் போராடுவதற்கான இயக்கத்தை முன்னெடுப்பது.
3. நமது கருத்து வேறுபாடுகளை மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் சித்தாந்தப் போராட்டம் நடத்தி தீர்வு காண்பது.
4. மார்க்சிய லெனினியத்தை மறுக்கும் எதிர்க்கும் சித்தாந்தங்களை அம்பலப்படுத்தி முறியடிப்பது.
5. சமூகத்தில் காணப்படும் சாதி, மதம், தேசிய இனம் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் விஞ்ஞானப்பூர்வமான தீர்வுகளை கண்டுபிடித்து அதனை நமது கொள்கையாக அறிவித்து பிரச்சாரம் செய்வது.
6. சமூகத்தில் காணப்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனித்தனியான தீர்வு இருந்த போதிலும் அதனை தனித்தனியாக பாதிக்கப்பட்ட மக்களை தனித்தனியாகத் திரட்டி போராடி வெல்ல முடியாது என்ற உண்மையை பிரச்சாரம் செய்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரு கொள்கை தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பாதிப்பு கொடுக்கும் எதிரிகளை எதிர்த்துப் போராடித்தான் வெல்ல முடியும் என்பதை அனைத்து மக்களையும் உணரவைக்க வேண்டும்.
7. மார்க்சிய லெனினியத்தின் மீது உறுதியான பற்றுக்கொண்ட மார்க்சிய லெனினியவாதிகளை ஒன்றுபடுத்துவது. மார்க்சிய லெனினியவாதிகள் ஒன்றுபட்டு பலம் பெற்று மக்களின் செல்வாக்கை வளர்த்துக்கொண்ட பின்புதான் எதிரியை எதிர்த்த போராட்டத்தில் மார்க்சிய லெனினிய மல்லாதவர்களோடு ஐக்கிய முன்னணி கட்டுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதுவரை நமது பலத்துக்கு ஏற்ப எதிரியை எதிர்த்தப் போராட்டத்தில் இணைந்து நடைமுறையில் போராட்டங்களில் ஈடுபடலாம். இதற்கு மாறாக அவர்களையும் இணைத்துக்கொண்டு ஒரு அமைப்பை கட்டுவது என்பதும் அதுவே இடதுசாரிகளின் ஒருங்கிணைப்பு என்று சொல்வதும் மார்க்சியம் அல்ல.அது மார்க்சிய ஆசான்களது போதனைகளுக்கு எதிரானதாகும்.
கூட்டம் அல்ல முக்கியம் கொள்கைதான் முக்கியம். ஆகவே மார்க்சிய லெனினியவாதிகள் மட்டும் உடனடியாக ஒன்றுபட வேண்டும் என்பதே இலக்கு ஆசிரியர் குழுவின் நிலைபாடு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இடதுசாரி கட்சிகளாகப் பார்க்கப்படும் சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் புரட்சிக்கானப் பாதையை கைவிட்டுவிட்டு பாராளுமன்றப் பாதையை தேர்ந்தெடுத்த தன் மூலம் லெனினது வழிகாட்டுதலை கைவிட்டுவிட்டார்கள். அறியாமையின் காரணமாக மக்கள் இந்த பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள், ஆகவே கம்யூனிஸ்டுகள் இந்தப் பாராளுமன்றத்துக்குள்ளும் சென்று இந்த பாராளுமன்றத்தின் போலித் தன்மையை அம்பலப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்று லெனின் சொன்னார். இந்த போதனையை புறக்கணித்துவிட்டு பாராளுமன்ற சகதிக்குள்ளேயே மூழ்கிவிட்டார்கள். இந்த பாராளுமன்ற ஆட்சிக்கு மாற்று கம்யூன் முறையிலான ஆட்சிதான் என்று பிரச்சாரம் செய்து அதற்காகப் இன்றுவரை பாடுபட மறுக்கிறார்கள். இத்தகைய திருத்தல் வாதத்தையே மார்க்சியம் என்று சொல்லி கட்சி உறுப்பினர்களையும் மக்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு இந்த தலைவர்கள் நடந்து கொள்வதற்கும் குட்டிமுதலாளித்துவ சுயநலம்தான் காரணமாகும். இந்த முறையில் இவர்களிடத்திலுள்ள குறுங் குழுவாத சிந்தனைமுறைதான் திருத்தல் வாதத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது.
தொடர்ந்து விவாதிப்போம்… தோழர்களே...
No comments:
Post a Comment