மாவோவின் சிந்தனைகள்- நூல் பிடிஎப் வடிவில்

 

புரட்சியா? சீர்திருத்தமா?

கடந்த காலத்தின் குறிப்பிட்ட மிச்ச சொச்சங்களே, உதாரணமாக, முடியாட்சி, நிரந்தரப் படை முதலியவற்றை சார்ந்திருப்பது முதலாளி வர்க்கத்துக்கு சாதகமானது பாட்டாளி வர்க்கத்துக்கு பாதகமானது. 

முதலாளி வர்க்கப் புரட்சி கடந்த காலத்தின் மிச்ச சொச்சங்கள் அனைத்தையும் அவ்வளவு உறுதியாகத் துடைத்தெறியாமல், அவற்றில் சிலவற்றை விட்டுச் சென்றால், அதாவது, இந்தப் புரட்சி முழுமையான உறுதிப்பாட்டுடன் நடைபெருவிட்டால்,  இது திடசங்கல்பத்துடனும், இடையீடு இன்றியும் நடைபெருவிட்டால், . அது முதலாளி வர்க்கத்துக்கு சாதகமானது. முதலாளித்துவ ஜனநாயகத் திசையில் தேவையான மாற்றங்கள் புரட்சி மூலம் நடவாமல், சீர்திருத்தங்கள் மூலம் மெது மெதுவாக, படிப்படியாக, மேலும் அபாயமின்றி, மேலும் மென்மை யாக நடைபெற்றால். இந்த மாற்றங்கள் பொது மக்களின், அதாவது விவசாயிகளினதும், சிறப்பாக தொழிலாளர்களினதும் க்தந்திரமான புரட்சிகர நடவடிக்கை, முன்முயற்சி, ஆற்றல் ஆகியவற்றை சாத்தியமான அளவு சிறிது சிறிதாக வளர்த்தால், அது முதலாளி வர்க்கத்துக்கு மேலும் சாதகமானது; அவை துரிதமாக வளர்ந்தால், தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், பிரெஞ்சு மக்கள் கூறுவதுபோல், துப்பாக்கியை ஒரு தோளிலிருந்து மறு தோளுக்கு மாற்றுவது வெகு சுலபமாகும்; அதாவது, முதலாளித்துவ புரட்சி தமது கைகளில் கொடுக்கும் துப்பாக்கிகளை, புரட்சி தமக்கு வழங்கும் சுயாதீனத்தை, அடிமைமுறை இல்லாத அடிப்படையிலிருந்து தோன்றும் ஜனநாயக உரிமைகளை, முதலாளி வர்க்கத்துக்கு எதிராகத் திருப்புவது வெகு சுலபமாகும். மறுபுறம், முதலாளித்துவ ஜனநாயகத் திசையில் தேவையான மாற்றங்கள் சீர்திருத்தங்கள் மூலம் நடவாமல், புரட்சி மூலம் நடைபெறுவது, தொழிலாளர் வர்க்கத்துக்கு மேலும் சாதகமானதாகும். காரணம், சீர்திருத்த வழி என்பது தாமத வழியாகும்; காலத்தைக் கடத்தும் வழியாகும்; தேசிய சேதனப் பொருள்களின் துர்நாற்றம் வீசும் பகுதிகளின் நசிவை கஷ்டப்பட்டு தாமதமாக்கும் வழியாகும். அவை வீசும் துர்நாற்றம் முதன்முதலாகவும், எல்லாவற்றுக்கும் மேலாகவும் பாட்டாளி வர்க்கத்தையும், விவசாயி வர்க்கத்தையும்தான் துன்புறுத்தும். புரட்சி வழி என்பது விரைந்து துண்டிக்கின்ற, பாட்டாளி வர்க்கத்துக்கு மிகக் குறைந்த கஷ்டமுடைய வழியாகும். ஒற்றையாட்சிக்கும் அதோடு சம்பந்தப்பட்ட மிக வெறுக்கத்தக்க, இழிந்த, உழுத்துப்போன, நோய் பரப்புகின்ற நிறுவனங்களுக்கும் மிகக் குறைந்த அளவு சலுகை கொடுக்கின்ற, மிகக் குறைந்த அளவு அக்கறை செலுத்துகின்ற வழியாகும்.

- லெனின்

மக்கள் படை ஒன்று இல்லாவிட்டால், மக்களுக்கு ஒன்றுமே இல்லை.

- மாஓசேதுங்

ஆயுதங்களின் உபயோகத்தை அறிந்துகொள்ள, ஆயுதங் களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்காத ஒரு அடக்கி ஒடுக்கப் பட்ட வர்க்கம் அடிமைகளாய் நடத்தப்படுவதற்கு மாத்திரம் தகுதியானது. நாம் முதலாளித்துவ சாந்திவாதிகளாய், சந்தர்ப்ப வாதிகளாய் இருந்தால் ஒழிய, நாம் வர்க்க சமுதாயத்தில் வாழ் கின்ருேம், வர்க்கப் போராட்டத்தின் மூலமன்றி இந்த சமுதா யத்திலிருந்து வெளியேற வழியே இல்லை, இருக்கவும் முடியாது என்பதை நாம் மறக்க இயலாது. ஒவ்வொரு வர்க்க சமுதா யத்திலும், அது அடிமை முறை, பண்ணை அடிமைமுறை, அல்லது இன்றுபோல கூலி உழைப்பு-இவற்றில் எதை அடிப் படையாகக் கொண்டிருந்தாலும் சரி, அடக்கி ஒடுக்கும் வர்க்கம் எப்பொழுதும் ஆயுதபாணியாகவே இருக்கின்றது. 'பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்கி, முதலாளி வர்க்கத்தை நிராயுத பாணியாக்குவது' என்பதே நமது சுலோகமாகும்.

-


மார்க்ஸிஸம்-லெனினிஸ தத்துவத்தால் ஆயுதபாணியாக்கப் பட்ட, சுயவிமர்சன முறையைப் பயில்கின்ற, பொது மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய, சிறந்த கட்டுப்பாடுடைய ஒரு கட்சி; இத்தகைய கட்சியின் தலைமையிலுள்ள ஒரு ராணுவம்; இத்த கைய கட்சியின் தலைமையிலுள்ள புரட்சிகர வர்க்கங்கள், புரட்சி காக் குழுக்கள் எல்லாவற்றினதும் ஒரு ஐக்கிய முன்னணி - இந்த மூன்றும்தான் நாம் எதிரியைத் தோற்கடித்த மூன்று பிரதான ஆயுதங்கள்.

-மாஒசேதுங்

இவை அறிமுகவுரை  தோழர் சண்முகதாசன் அவர்களுடையது.

நூல் அலைகள் வெளியீட்டகத்தில் உள்ளன.

நூலினை பிடிஎப் வடிவில் பெற இந்த லிங்க் அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே


இந்த ஆவணமானது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நா. சண்முகதாசன் அவர்களால் எழுதப்பட்ட 'மாவோவின் சிந்தனை' என்ற நூலின் சுருக்கமாகும். இது 1969-ம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசின் 20-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டது.


இந்த நூலின் முக்கிய சாராம்சங்கள் பின்வருமாறு:

  • மாஓசேதுங் சிந்தனை: மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் சிகரமாக மாஓசேதுங் சிந்தனை கருதப்படுகிறது. இது ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடைந்து சோஷலிசம் வெற்றிபெறும் காலகட்டத்தின் புரட்சிகர தத்துவமாகும்.
  • புரட்சிகரப் பாதை: முதலாளித்துவ சீர்திருத்தங்களை விட, புரட்சியே பாட்டாளி வர்க்கத்திற்கு சாதகமானது. புரட்சியின் வெற்றிக்காக மார்க்ஸிஸம்-லெனினிஸ தத்துவத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட கட்சி, ராணுவம் மற்றும் ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று ஆயுதங்கள் அவசியமாகும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்