ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்-லெனின்
இது நவீனகால சோஷலிசத்துக்குரிய அடிப்படைப் பிரச்சினையாகும். முதலாவதாக, நாம் வாழும் இச்சகாப்தமும் தற்போது நடைபெறும் யுத்தமும் ஏகாதிபத்தியத் தன்மை வாய்ந்தவை என்பதையும், இரண்டாவதாக, சமூக-தேசியவெறியும் சந்தர்ப்பவாதமும் பிரிக்க முடியாதவாறு வரலாற்று வழியில் இணைந்திருக்கின்றன என்பதையும், மற்றும் அரசியல் சித்தாந்தத்தில் உள்ளார்ந்த முறையில் இவை ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன என்பதையும் நமது கட்சி வெளியீடுகளில் முழு அளவுக்கு நிலைநாட்டிவிட்ட நாம், இந்த அடிப்படைப் பிரச்சினையைப் பகுத்தாராய முற்படலாம், அவசியம் முற்பட்டாகவும் வேண்டும்.
ஏகாதிபத்தியம் குறித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு துல்லியமான, முழுமையான இலக்கணத்தை அளித்து நாம் இந்தப் பகுப்பாய்வைத் தொடங்க வேண்டும். ஏகாதிபத்தியமானது முதலாளித்துவத்தின் தனியொரு வரலாற்றுக் கட்டமாகும். அதன் தனித்தன்மை மூன்று வகைப்பட்டது: ஏகாதிபத்தியமானது (1) ஏகபோக முதலாளித்துவமாகும்; (2) புல்லுருவித் தனமான, அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமாகும்; (3) அந்திமக்கால முதலாளித்துவமாகும். தடையற்ற போட்டி நீக்கப்பெற்று அதற்குப் பதிலாய் ஏகபோகம் வளர்ச்சியுறுவதானது ஏகாதிபத்தியத்தின் அடிப்படைப் பொருளாதார இயல்பு, அதன் சாரப்பொருள். ஏகபோகத் தன்மை பிரதானமான ஐந்து வடிவங்களில் வெளிப்படுகிறது: (1) கார்ட்டல்கள், சிண்டிகேட்டுகள், டிரஸ்டுகள்—முதலாளிகளது இந்த ஏகபோகக் கூட்டுகள் தோற்றுவிக்கப்படும் அளவுக்குப் பொருளுற்பத்தியின் ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுகிறது; (2) பெரிய பாங்கிகளின் ஏகபோக நிலை—அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் மூன்று, நான்கு அல்லது ஐந்து பகாசுர பாங்கிகள் நாட்டின் பொருளாதார வாழ்வு அனைத்தையுமே தம் பிடியில் இறுத்திக் கொண்டு ஆட்டிப் படைக்கின்றன; (3) மூலப் பொருள்களுக்கான ஆதாரங்களை முதலாளித்துவ டிரஸ்டுகளும் நிதி ஆதிக்கக் கும்பலும் (financial oligarchy) கைப்பற்றிக் கொண்டுவிடுகின்றன (நிதி மூலதனம் என்பது பாங்கி மூலதனத்துடன் இணைந்த ஏகபோகத் தொழில்துறை மூலதனமாகும்); (4) சர்வதேசக் கார்ட்டல்கள் உலகைத் தம்மிடையே (பொருளாதாரக்) கூறுபோட்டுப் பாகப் பிரிவினை செய்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது. இவ்வகைச் சர்வதேசக் கார்ட்டல்கள் ஏற்கனவே ஒரு நூறுக்கு மேற்பட்டவை உள்ளன; இவை உலகச் சந்தை அனைத்தையுமே தமது ஆதிக்கத்திற்கு உட்படுத்திக் கொண்டு, அதனை “இணக்கமுடன்” தம்மிடையே பாகப் பிரிவினை செய்து கொள்கின்றன —யுத்தத்தின் மூலம் அது மறுபிரிவினை செய்யப்படும் வரை இந்த ஏற்பாடு நீடிக்கிறது. ஏகபோகமல்லாத முதலாளித்துவத்தில் நடைபெற்று வந்த பண்ட ஏற்றுமதியைப் போலல்லாது இப்பொழுது மூலதனமே ஏற்றுமதி செய்யப்படுவதானது இக்கட்டத்துக்குரிய தனி விசேஷமாகும்; இது பொருளாதார வழியிலும் பிரதேச-அரசியல் வழியிலும் உலகின் பாகப் பிரிவினையுடன் நெருங்கிய முறையில் இணைந்த நிகழ்ச்சியாகும். (5) உலகின் பிரதேசம் (காலனிகள்) பங்கிட்டுக் கொள்ளப்படுதல் நிறைவுற்றுவிட்டது.
முதலாளித்துவத்தின் உச்ச கட்டமான ஏகாதிபத்தியம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், பிற்பாடு ஆசியாவிலும் 1898-க்கும் 1914-க்கும் இடையில் இறுதி உருப் பெற்றது. ஸ்பானிய-அமெரிக்கப் போர் (1898), ஆங்கிலோ-போயர் போர் (1899-1902), ருஷ்ய-ஜப்பானியப் போர் (1904-05), 1900-ல் ஐரோப்பாவில் வெடித்த பொருளாதார நெருக்கடி ஆகிய இவை, உலக வரலாற்றின் இந்தப் புதிய சகாப்தத்திற்குக் குரிய முக்கிய மைல்கற்களாகும்.
புல்லுருவித்தனமுடையதாகிவிட்ட அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமே ஏகாதிபத்தியம் என்பது உற்பத்திச் சாதனங்களில் தனியார் உடைமை நிலவும் அமைப்பில் ஒவ்வொரு ஏகபோகத்துக்குமுரிய குண விசேஷமாய் அமைந்துவிடும் அழுகல் போக்கில் யாவற்றுக்கும் முதலாய் வெளியாகிறது. ஜனநாயகக் குடியரசுவாத ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும், பிற்போக்கு-முடியரசுவாத ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவிடுகிறது; இரு வகையினருமே உயிருள்ள நிலையிலேயே அழுகத் தொடங்கிவிட்டதே இதற்குக் காரணம் (ஆனால் தொழில்துறையின் தனிப்பட்ட கிளைகளிலும், தனிப்பட்ட சில நாடுகளிலும், தனிப்பட்ட சில காலங்களிலும் முதலாளித்துவம் அசாதாரண வேகத்தில் வளர முடியாது என்பது இதன் அர்த்தமல்ல). இரண்டாவதாக, தமது மூலதனத்தைக் கொண்டு கூலிகளாய்ச் “சீட்டுக் கத்தரித்து” ஜீவிக்கும் முதலாளிகளின் ஒரு பெரும் பிரிவு தோற்றுவிக்கப்படுவதில் முதலாளித்துவத்தின் அழுகல் தன்மை வெளியாகிறது. இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்சு, ஜெர்மனி—தலைமையான இந்த நான்கு ஏகாதிபத்திய நாடுகளில் ஒவ்வொன்றிலும் பணவுறுதிச் சீட்டுகளில் [securities] 10,000 அல்லது 15,000 கோடி பிராங்க் வரை மூலதனம் போடப்பட்டிருக்கிறது; இதிலிருந்து இந்நாடு ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஐந்நூறு கோடியிலிருந்து எண்ணூறு கோடிக்குக் குறையாமல் வருமானம் பெறுகிறது. மூன்றாவதாக, மூலதன ஏற்றுமதியானது புல்லுருவித்தனம் உச்ச நிலைக்கு உயர்ந்துவிடுவதைக் குறிக்கிறது. நான்காவதாக, “நிதிமூலதனம் ஆதிக்கத்துக்காகப் பாடுபடுகிறதேயன்றி சுதந்திரத்துக்காக அல்ல”. அரசியல் பிற்போக்கு சர்வாதிகாரமாகிவிடுவது ஏகாதிபத்தியத்துக்குரிய குண விசேஷமாகும். பிரம்மாண்ட அளவிலான லஞ்சமும் ஊழலும் சகல வகையான பணய விவகாரங்களும் மலிந்துவிடுகின்றன. ஐந்தாவதாக, ஒடுக்கப்படுகிற தேசங்களின்மீதான சுரண்டலும் — அது நாடிபிடித்து இணைக்கும் முயற்சிகளுடன் இரண்டறக் கலந்ததாகும் — இன்னும் முக்கியமாய் ஒருசில “பேரரசுகள்” காலனிகளில் புரியும் சுரண்டல், “நாகரிக” உலகினைக் கோடிக்கணக்கான பின்தங்கிய தேசத்தாரின் குருதியை உறிஞ்சும் புல்லுருவியாக மேன்மேலும் மாற்றிவருகிறது. நேசப்பான்மையும் பாட்டாளி சமுதாயத்தின் செலவில் வாழ்ந்தான்; ஆனால் நவீன காலச் சமுதாயம் நவீன காலப் பாட்டாளியின் செலவில் வாழ்கிறது. சிஸ்மோண்டியினுடைய பொருட் செறிவுள்ள இந்த வாக்கியத்தை மார்க்ஸ் வலியுறுத்திக் குறிப்பிட்டார். ஏகாதிபத்தியமானது இந்நிலையை ஓரளவுக்கு மாற்றியுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தில் சலுகை படைத்த மேல்தட்டுப் பகுதி ஓரளவுக்கு, கோடிக்கணக்கான பின்தங்கிய தேசத்தவர்களின் செலவில் வாழ்கிறது.
ஏகாதிபத்தியமானது அந்திமக்கால முதலாளித்துவமாய், சோஷலிசத்துக்கு மாறிச் செல்வதற்குரிய முதலாளித்துவமாய் இருப்பது ஏனென்பது நன்கு விளங்குகிறது: முதலாளித்துவத்திலிருந்து முளைக்கும் ஏகபோகமானது ஏற்கனவே மரிக்கத் தொடங்கிவிட்ட முதலாளித்துவத்தை, சோஷலிசத்துக்கு அது மாறிச் செல்வதற்கான கட்டத்தின் துவக்கத்தைக் குறிப்பதாகும். ஏகாதிபத்தியத்தால் உழைப்பு மகத்தான அளவுக்குச் சமூகமயமாக்கப்படுவதாலும் (ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களான முதலாளித்துவப் பொருளியலாளர்கள் இதனைப் “பின்னிப்பிணைதல்” என்பதாகக் குறிப்பிடுகிறார்கள்) இதே விளைவு உண்டாகிறது.
ஏகாதிபத்தியத்துக்கு நாம் அளித்திடும் இந்த இலக்கணம் நம்மைக் கார்ல் காவுத்ஸ்கியிற்கு நேர்முரணான நிலைக்குக் கொண்டு வருகிறது. ஏகாதிபத்தியத்தை “முதலாளித்துவத்தின் ஒரு கட்டமாகச்” கருதக் காவுத்ஸ்கி மறுக்கிறார்; நிதி மூலதனத்தால் “உகந்ததென விரும்பி ஏற்கப்படும்” ஒரு கொள்கை என்று, “தொழில்துறை” நாடுகள் “விவசாய” நாடுகளைப் பிடித்துத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்குரிய ஒரு போக்கு என்று அதற்கு அவர் இலக்கணம் கூறுகிறார்.* காவுத்ஸ்கி கூறும் இலக்கணம் தத்துவார்த்தக் கண்ணோட்டத்தில் முழுக்க முழுக்கப் பொய்யானது. ஏகாதிபத்தியத்தை இனம் கண்டு கொள்வதற்குரிய அடையாளமாய் இருப்பது தொழில்துறை மூலதனத்தின் ஆதிக்கம் அல்ல, நிதி மூலதனத்தின் ஆதிக்கமே ஆகும்; குறிப்பாய் விவசாய நாடுகளை மட்டும் அல்ல, எல்லா வகையான நாடுகளையும் பிடித்துத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியே ஆகும். “படைக்கலைப்பு”, “அதீத-ஏகாதிபத்தியம்” இத்யாதி அபத்தங்களைப் போன்ற கொச்சையான அவரது முதலாளித்துவச் சீர்திருத்தவாதத்துக்குப் பாதையைச் செப்பனிடும் பொருட்டு காவுத்ஸ்கி ஏகாதிபத்திய அரசியலை ஏகாதிபத்தியப் பொருளாதாரத்திலிருந்து பிரித்து விலக்குகிறார்; அரசியல் துறை ஏகபோகத்தைப் பொருளாதாரத் துறை ஏகபோகத்திலிருந்து பிரித்து விலக்குகிறார். இந்தத் தத்துவார்த்தப் பொய்க் கூற்றுகளின் நோக்கம் எல்லாம், அவற்றின் உட்பொருள் எல்லாம், ஏகாதிபத்தியத்தின் மிகவும் ஆழமான முரண்பாடுகளை மூடிமறைத்து, அதன் மூலம் ஏகாதிபத்திய ஆதரவாளர்களான அப்பட்டமான சமூக-தேசிய வெறியர்களுடனும் சந்தர்ப்பவாதிகளுடனும் “ஒன்றுபடுவ”தென்ற தத்துவத்துக்கு நியாயம் கற்பிப்பதுதான்.
இவ்விவகாரத்தில் காவுத்ஸ்கி மார்க்சியத்திலிருந்து முறித்துக் கொண்டு சென்றுவிடுவது குறித்து சொத்தியால்-டெமக்ராத், கம்முனீஸ்ட் இதழ்களில் போதுமான அளவுக்கு விவரமாய் எடுத்துரைத்திருக்கிறோம். நமது ருஷ்ய காவுத்ஸ்கிவாதிகள் — அக்ஸெல்ரோத், ஸ்பெக்டேட்டர் இவர்கள் தலைமையிலுள்ள நிர்வாகக் கமிட்டி ஆதரவாளர்கள், (மார்த்தோவ் உட்படச் சேர்ந்து) — இதைப் பற்றிப் பெரும்பாலும் மௌனம் சாதிக்கவே விரும்புகின்றனர். ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவத்தின் ஒரு கட்டம் என்று எவர் கூறினாலும் அவர் மார்க்சியத்தை விடுகிறார் என்றும், காவுத்ஸ்கியினைப் பின்பற்றாதவர் எவருமே மார்க்சியத்தின் ஏபிசிடி-யினைக் கூடப் புரிந்துகொள்ளாதவர் என்றும், இப்படிப் பலவாறாக இத்தகைய போக்கினர் அம்பேத்கர் மற்றும் மார்க்சியத் தத்துவங்களைச் சிதைப்பதாக லெனின் குறிப்பிடுகிறார்.* [அடிக்குறிப்பு: * “அதிக வளர்ச்சி பெற்றுவிட்ட தொழில்துறை முதலாளித்துவத்தின் ஒரு விளைவே ஏகாதிபத்தியம். தொழில்துறை முதலாளித்துவத் தேசம் ஒவ்வொன்றும் மேன்மேலும் பெரிய அளவில் விவசாயப் பிரதேசங்களை, அவற்றில் வாழும் தேசத்தவர்களைப் பற்றிக் கருதாமலே, கீழ்ப்படுத்திச் சுவீகரித்துச் சேர்த்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில்தான் இது அடங்கியுள்ளது” (Die Neue Zeit, 1914, செப்டம்பர் 11 இதழில் காவுத்ஸ்கி எழுதுவது).]
ஏகாதிபத்தியத்தைப் பற்றிக் காவுத்ஸ்கியிலுள்ள “கடுந்தேற்றம்”—ஏகாதிபத்தியத்துக்கு மெழுகு பூசுவதற்கு ஒப்பானதே இது—ஹில்பர்டிங்கின் நிதி மூலதனத்துடன் ஒப்பிடும்போது மட்டுமின்றி (ஹில்பர்டிங் இப்பொழுது எவ்வளவுதான் அரும்பாடுபட்டுக் காவுத்ஸ்கியையும் சமூக-தேசிய வெறியர்களுடன் “ஒன்றுபட” வேண்டுமென்பதையும் ஆதரித்து வாதாடினாலும் இது மாறிவிடாது!) சமூக-லிபரல் ஜே. ஏ. ஹாப்சனுடன் ஒப்பிடும்போதுகூடப் பின்னோக்கிச் செல்வதாயுள்ளது. பிரிட்டிஷ் பொருளியலாளரான இந்த ஹாப்சன் எவ்வகையினும் தம்மை மார்க்சியவாதியாகக் கூறிக் கொள்ளவில்லை. அவருங்கூட 1902-ல் வெளியான ஒரு புத்தகத்தில்* மேலும் ஆழமான முறையில் ஏகாதிபத்தியத்துக்கு இலக்கணம் கூறி, அதன் முரண்பாடுகளை வெளிப்படுத்திக் காட்டுகிறார். காவுத்ஸ்கியின் சாத்வீகவாத, “இணக்கம் காணும்” சுயமைக் கருத்துக்களில் அனேகமாய் யாவற்றையுமே அவருடைய புத்தகத்தில் காணலாம். ஏகாதிபத்தியத்தின் புல்லுருவித்தனம் என்னும் மிக முக்கியப் பிரச்சினை குறித்து ஹாப்சன் எழுதியதாவது:
ஹாப்சனின் கருத்துப்படி இருவித நிலைமைகளால் பழைய பேரரசுகள் பலம் இழந்தவையாயின: (1) “பொருளாதாரப் புல்லுருவித்தனம்”, (2) சார்பு நாடுகளின் மக்களிடமிருந்து சேனைகள் திரட்டப்படுதல். “பொருளாதாரப் புல்லுருவித்தனத்துக்குரிய பழக்கம் முதலாவதாகும். ஆதிக்கம் புரியும் அரசு தனது ஆளும் வர்க்கத்தைச் செல்வச் செழிப்புடையதாக்கிக் கொள்வதற்காகவும், தனது கீழ்நிலை வர்க்கங்களுக்கு லஞ்சம் கொடுத்து அவற்றை நமக்கு இணங்கி நடக்குமாறுச் செய்வதற்காகவும் தனது மாநிலங்களையும் காலனிகளையும் சார்பு நாடுகளையும் பயன்படுத்திக் கொள்வதே இது”. இரண்டாவது நிலைமை குறித்து ஹாப்சன் இவ்வாறு எழுதுகிறார்:
“கிரேட் பிரிட்டனும் பிரான்சும் ஏனைய சாம்ராஜ்ய ஆதிக்கத் தேசங்களும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்ணை மூடிக் கொண்டு இந்த ஆபத்தான சார்பு நிலைப் பாதையில் போய்க் கொண்டிருப்பதானது, ஏகாதிபத்தியத்தின் கபோதித்தனத்துக்கு மிகவும் வினயமான ஓர் அறிகுறியாகும் [ஏகாதிபத்தியவாதிகளுடைய “கபோதித்தனம்” பற்றிய இந்தப் பல்லவி சமூக-மிதவாதி ஹாப்சனுக்கு வேண்டுமானால் பொருத்தமுடையதாய் இருக்கலாம், “மார்க்சியவாதி” காவுத்ஸ்கியிற்குச் சிறிதும் பொருத்தமுடையதன்று]. இப்பாதையில் கிரேட் பிரிட்டன் மிக நெடுந் தொலைவு சென்று விட்டது. நமது இந்திய சாம்ராஜ்யத்தைப் பெறுவதற்காக நடைபெற்ற போர்களில் மிகப் பெரும்பாலானவை சுதேச மக்களாலேயே நடத்தப்பட்டவையாகும். இந்தியாவிலும் இன்னும் அண்மைக் காலத்தில் இதே போல எகிப்திலும் பெரிய பெரிய நிரந்தர சேனைகள் பிரிட்டிஷ் தளகர்த்தர்களுக்கீழ் வைக்கப்பட்டிருக்கின்றன; நமது ஆப்பிரிக்க சாம்ராஜ்ய உடைமைகள் சம்பந்தமான போர்களில் அனேகமாய் யாவுமே, தென் பகுதியில் நடைபெற்றவற்றைத் தவிர்த்து, நமக்காகச் சுதேச மக்களால் நடத்தப்பட்டவையே ஆகும்.”
சீன பங்கீட்டுப் பிரித்துக் கொள்ளப்படும் நிலைமை ஏற்பட்டபோது, ஹாப்சன் இது குறித்துப் பின்வருமாறு எழுதினார்: “அப்பொழுது மேலை ஐரோப்பாவின் பெரும் பகுதி, இங்கிலாந்தின் தென்பகுதியிலும், ரிவீராவிலும், உல்லாசப் பயணிகளாலோ, அல்லது குடியிருப்புக்கு வசதியான இடங்களாகிய இத்தாலி, ஸ்விட்ஸர்லாந்து இவ்விரு நாடுகளின் பகுதிகளிலும் ஏற்கனவே காணக் கூடியதாகிவிட்ட அதே தோற்றத்தையுடைய தன்மையைப் பெற்றுவிடும்; அதாவது தொலைக் கிழக்கிலிருந்து லாபம் பெறுவோரும் பென்ஷன்களும் பெறும் செல்வச் சீமான்களது சிறு தொகுதிகளும், இன்னும் சற்று அதிக அளவிலான உத்தியோகப் பரிவாரத்தினரும் வணிகர் கூட்டத்தினரும், மேலும் கூடுதலான வீட்டுவேலையாட்களாலும் போக்குவரத்துத் துறையிலும் விரைவில் கேட்டுப் போகவிடும் பண்டங்களது உற்பத்தியின் இறுதிப் பிரிவுகளிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களாலும் ஆன தொகுதிகளும் வாழும் திட்டுகளாகிவிடும். பிரதானத் தொழில்கள் யாவும் மறைந்து போயிருக்கும்; முக்கிய உணவுப் பொருள்களும் பகுதியளவு தயாரான செல்பொருள்களும் ஆசியாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் கப்பலாக வந்து குவிந்து கொண்டிருக்கும்.... மேலும் பெரிய அளவிலான மேலை அரசுகளது கூட்டணி ஒன்று, ஐரோப்பியப் பேரரசுகளது கூட்டு ஒன்று உதிக்கலாம் என்ற சாத்தியப்பாடும் இருந்து வருகிறது. இந்தக் கூட்டு உலக நாகரிக லட்சியத்தை முன்னுக்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாய், மேலையப் புல்லுருவித்தனத்தாலான பயங்கர அபாயத்துக்குத்தான் வழி செல்வதாய் இருக்கும். தொழில்துறையில் முன்னேறிய தேசங்களாலாகிய இந்தக் கூட்டைச் சேர்ந்த நாடுகளது மேல்வர்க்கங்கள் ஆசியாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் அளவிலாத கப்பம் வசூலிக்கும். இந்தக் கப்பத்தைக் கொண்டு இவ்வர்க்கங்கள் பணிந்து நடக்கும் பரிவாரத்தினரின் பெருந்திரளுக்குத் தீனி போட்டுக் கட்டிக் காக்கும். இப்பரிவாரத்தினர் இனி செய் பொருள் உற்பத்தி, விவசாயம் போன்ற பிரதானப் பொருளாதாரக் கிளைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார் [அடிக்குறிப்பு: * J. A. Hobson, Imperialism (ஜே. ஹாப்சன், “ஏகாதிபத்தியம்” லண்டன், 1902,—பதிப்பாசிரியர்.)].
பொருளாதார மதிப்பீடு செய்தார்: "அப்பொழுது மேற்கு ஐரோப்பாவின் பெரும் பகுதி, இங்கிலாந்தின் தென் பகுதியிலும், ரிவீராவிலும், உல்லாசப் பயணிகளால் மண்டியுள்ள, அல்லது குடியிருப்புக்கு வசதியான இடங்களாகிய இத்தாலி, ஸ்விட்ஸர்லாந்து இவ்விரு நாடுகளின் பகுதிகளிலும் ஏற்கனவே காணக் கூடியதாகிவிட்ட அதே தோற்றத்தையுடைய தன்மையைப் பெற்றுவிடும். அதாவது தொலைக் கிழக்கிலிருந்து லாபப் பங்கீடுகளும் பென்ஷன்களும் பெறும் செல்வச் சீமான்களது சிறு தொகுதிகளும், இன்னும் சற்று அதிக அளவிலான உத்தியோகப் பரிவாரத்தினரும் வணிகர் கூட்டத்தினரும், மேலும் கூடுதலான வீட்டுவேலையாட்களாலும் போக்குவரத்துத் துறையிலும் விரைவில் கேட்டுப் போய்விடும் பண்டங்களது உற்பத்தியின் இறுதிப் பிரிவுகளிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களாலும் ஆன தொகுதிகளும் வாழும் திட்டுகளாகிவிடும். பிரதானத் தொழில்கள் யாவும் மறைந்து போயிருக்கும்; முக்கிய உணவுப் பொருள்களும் பகுதியளவு தயாரான செல்பொருள்களும் ஆசியாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் கப்பலாக வந்து குவிந்து கொண்டிருக்கும்.... மேலும் பெரிய அளவிலான மேலைய அரசுகளது கூட்டணி ஒன்று, ஐரோப்பயப் பேரரசுகளது கூட்டு ஒன்று உதிக்கலாம் என்ற சாத்தியப்பாடும் இருந்து வருகிறது. இந்தக் கூட்டு உலக நாகரிக லட்சியத்தை முன்னுக்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாய், மேலையப் புல்லுருவித்தனத்தாலான பயங்கர அபாயத்துக்குத்தான் வழி செய்வதாய் இருக்கும். தொழில்துறையில் முன்னேறிய தேசங்களாலாகிய இந்தக் கூட்டைச் சேர்ந்த நாடுகளது மேல்வர்க்கங்கள் ஆசியாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் அளவிலாத கப்பம் வசூலிக்கும். இந்தக் கப்பத்தைக் கொண்டு இவ்வர்க்கங்கள் பணிந்து நடக்கும் பரிவாரத்தினரின் பெருந்திரளுக்குத் தீனி போட்டுக் கட்டிக் காக்கும். இப்பரிவாரத்தினர் இனி செய்பொருள் உற்பத்தி, விவசாயம் போன்ற பிரதானப் பொருளாதாரக் கிளைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். அதற்குப் பதில் புதிய நிதியாதிக்கப் பிரபுக்களின் கட்டுப்பாட்டின்கீழ் தனிநபர்களுக்கான பணிவிடைகளிலும் சிறு சேவைத் தொழில்களிலும் இப்பரிவாரத்தினர் ஈடுபடுத்தப்படுவர். இது போன்ற ஒரு தத்துவம் [சாத்தியக்கூறு என்பதாக அவர் சொல்லியிருக்க வேண்டும்] பரிசீலனைக்குத் தகுதியுடைத்ததல்ல என்று ஒதுக்க விரும்புவோர், ஏற்கனவே இந்த நிலைமைக்குத் தாழ்த்தப்பட்டுவிட்ட இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில் உள்ள பொருளாதார, சமூக நிலைமைகளை ஆராய வேண்டும். இத்தகைய நிதியாதிக்கத்தினர், முதலீட்டாளர்கள் [சுகஜீவிகள்], அரசியல், தொழில் அதிகாரிகள் ஆகியோரது கோஷ்டிகள் சீனாவைத் தமது பொருளாதாரப் பிடிக்குக் கீழ்ப்படியச் செய்து, இதுவரை உலகம் கண்டிராத அளவுக்கு லாபம் திரட்டுவதற்கான பிரம்மாண்டமானதோர் ஆதாரமாய் அமையவல்ல இந்தக் கருவூலத்தைத் துடைத்து அள்ளி ஐரோப்பாவுக்குக் கொண்டுவந்து அனுபவிக்கும்படியான இந்நிலைமையால், மேற்கூறியது போன்ற ஓர் அமைப்பு எல்லையின்றி விஸ்தரிக்கப்படுவது சாத்தியமே என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வருங்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றிய இந்த விளக்கமோ, அல்லது வேறு எந்தவொரு விளக்கமோ அப்படியே உண்மையாகிவிடும் என்று கூற முடியாதபடி நிலைமை மிகமிகச் சிக்கலாய் இருக்கிறது, உலக சக்திகளது செயற்பாட்டின் விளைவுகள் கணித்துச் சொல்ல முடியாதனவாய் உள்ளன. ஆனால் இன்று மேலைய ஐரோப்பாவின் ஏகாதிபத்தியத்தை ஆட்டிப்படைக்கும் சக்திகள் இத்திசையிலேதான் போய்க் கொண்டிருக்கின்றன; எதிர்த்தடிக்கப்பட்டால் ஒழிய, அல்லது திசை திருப்பிவிடப்பட்டால் ஒழிய அவை மேற்கூறிய விளைவையே உண்டாக்கும்."
சமூக-மிதவாதியான ஹாப்சன், இவ்வாறு "எதிர்த்தடிப்பது" என்பது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் ஒன்றால் மட்டுமே முடியும், சமுதாயப் புரட்சியின் வடிவில் மட்டுமே இது நடைபெற முடியும் என்பதையும் மறைமுகத் தாளிக் கொண்டுள்ளார்; ஆனால் அவர் சமூக-மிதவாதியாதலால் இதை விவரிப்பதில்லை. இதற்கிடையேயோ 1903 ஆம் ஆண்டிலேயே அவர் "ஐரோப்பிய ஐக்கிய நாடுகள்" என்பதன் உட்கருத்தை அறிந்திருந்தார்; அதன் விளைவுகள் குறித்தும் தெளிந்த அறிவுடையவராக இருந்தார் (காவுத்ஸ்கிவாதியான பொத்ரேசோவைப் போன்றோரோ இதைக் குறிப்பிட்டாக வேண்டும்!). மற்றப் பல்வேறு நாடுகளையும் சேர்த்து வட அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தற்போது மூலோபாய வழி வரைபட உட்பொருளையும் விளைவுகளையும்; அதாவது ஆசியா, ஆப்பிரிக்காவின் முதுகிலே அமர்ந்த ஏகாதிபத்திய ஐரோப்பிய ஒன்றைத் தோற்றுவிக்கும் ஒரே நோக்கத்திற்காகத்தான் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தாருடன் சந்தர்ப்பவாதிகள் (சமூக-தேசியவெறியர்கள்) ஒத்துழைக்கிறார்கள், எதார்த்த நோக்கத்துடன் பார்க்கும்போது சந்தர்ப்பவாதிகள் குட்டி பூர்ஷ்வாக்களையும், ஏகாதிபத்திய உபரி லாபங்களில் துளி கொண்டு எஞ்சும் நல்வாழ்வு வாழ்ந்தபடி முதலாளித்துவத்தின் காவல் நாய்களாகவும் தொழிலாளர் இயக்கத்தைப் பாழ்படுத்தும் மோசடிக்காரர்களாகவும் மாற்றப்பட்டிருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினரையுமே சேர்ந்த பகுதியோரே ஆவர் என்ற இவ்வுண்மையின் உட்பொருளையும் விளைவுகளையும் பற்றி அன்றே ஹாப்சன் தேர்ந்த நிபுணத்துவமுடையவராய் இருந்தார்.
ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும், தொழிலாளர் இயக்கத்தில் வெற்றி பெற்றுவிட்ட (எவ்வளவு காலத்துக்கு இவ்வெற்றி நீடிக்கப் போகிறது?) சந்தர்ப்பவாதத்திற்கும் இடையிலுள்ள பொருளாதார இணைப்பை, மிகவும் ஆழமான இணைப்பை, நாம் கட்டுரைகளில் மட்டுமல்ல, நமது கட்சியின் தீர்மானங்களிலும் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வந்திருக்கிறோம். இதிலிருந்து நாம் சமூக-தேசியவெறியர்களிடமிருந்து பிளவுபடுவது தவிர்க்க முடியாததென்ற முடிவுக்கு வந்ததையும் இங்கு எடுத்துரைக்கலாம். ஆனால் நமது காவுத்ஸ்கிவாதிகள் இப்பிரச்சினையைத் தட்டிக் கழித்தே வந்துள்ளனர்! எடுத்துக்காட்டாக மார்த்தாவ் அவருடைய விளக்கக் கட்டுரைகளில் மூர்க்கவாதம் புரிந்தார்;
நிறுவனம் மற்றும் இதழியல் (சமூக-ஜனநாயக இதழ், அக்டோபர் 4, 1918 மற்றும் 10) இது இவ்வாறு மாற்றியமைக்கப்படுகின்றது:
"...இதற்கு வருங்காலத்தில் அறிவுத்துறையினரும் மிகவும் அதிக அளவில் வந்து சேரலாம்; மிக உயர்ந்த தேர்ச்சியுடைய தொழிலாளர் இயக்கமும் (தொழிலாளர் மேல்தட்டுப் பிரிவு) விடுபடுவதைத் தடுக்க முயலும் தாராள சமூக ஜனநாயகத்திலிருந்தும் விலகி சந்தர்ப்பவாதத் தத்தை ஏற்கும்: (புலமைத்துவவாதிகளாயின்) அது சமூக ஜனநாயகத்தில் இலட்சியத்துவத்துக்கு நல்லதல்ல, ஏன் மிகப் பெரும் ஆபத்துமே ஆகிவிடும்...."
"நிதிநிலை போல் தடுக்க முடியாது" என்ற அந்த அசட்டுத் தொடரின் மூலமாகவும், "கைச் சாமானியத்தாலும்" தொழிலாளர் மத்தியில் ஒரு பகுதியினர் சந்தர்ப்பவாதத்தாலும் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தையும் மற்றும் பிறரை ஒன்றாகவே இணைச் செல்லவிடலாம் என்னும் உண்மையை இவ்வாறு அவர் கமுமியில் விடுகின்றார். நிர்வாகக் கமிட்டியின் மூர்க்கவாதிகளும் இதே உண்மையைத்தான் கமுமியில் விட்டுவிட விரும்புகின்றனர்! பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையையும் புரட்சிகரப் போக்கின் வெற்றியையும் எதார்த்த நிலைமைகள் உத்தரவாதம் செய்கின்றன என்பதாக காவுத்ஸ்கிவாதியான ஹில்பர்டிங்கும் மற்றும் பலரும் தற்போது ஆடம்பரமாகக் கூறிவரும் "அனுபவ பூர்வமான நன்னம்பிக்கை"யை வெளியிடுவதோடு அவர்கள் நின்றுவிடுகிறார்கள்! பாட்டாளி வர்க்கம் குறித்து நன்னம்பிக்கை மிக்கவர்கள்தாம், ஐயமில்லை!
ஆனால் உண்மையில் இந்த காவுத்ஸ்கிவாதிகள் எல்லோருமே ஹில்பர்டிங்கும் நிறுவனத் தவிப்புநிலையும் மார்த்தாவ் கூட்டத்தாரும் நன்னம்பிக்கை மிக்கவர்களாய் இருப்பது சந்தர்ப்பவாதம் குறித்து ஆகும். சாரப்பொருள் இதுவே!
பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தில் — ஐரோப்பிய முதலாளித்துவம் அல்லது ஏகாதிபத்திய முதலாளித்துவம் மட்டுமின்றி உலக முதலாளித்துவம் அனைத்திலும் — பிளவுயாகும். உலக அளவில், ஐம்பது ஆண்டுகள் முந்தியோ ஐம்பது ஆண்டுகள் பிந்தியோ — உலக அளவில் பார்க்கையில் இது சிறு விவகாரமேயாகும் — "பாட்டாளி வர்க்க ஒற்றுமை" அடைந்துவிடும் என்பதிலும், புரட்சிகர சமூக-ஜனநாயகம் "தவிர்க்க முடியாதபடி" அதனால் வெற்றிய வாகை சூடிவிடும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் எதார்த்த வாத கனவான்களே, அதுவல்ல விவகாரம். தற்போது விவகாரம் என்னவெனில் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய நாடுகளில் நீங்கள் சந்தர்ப்பவாதிகளுடன் குலாவிக் கொண்டிருக்கிறீர்கள் — இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு வர்க்கம் என்ற முறையில் புறம்பானவர்கள்; இவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் தூதர்கள், அதன் கையாட்கள், அதன் செல்வாக்கைக் கொண்டுவந்து பரப்பும் சாதனங்களாகப் பணியாற்றுகிறவர்கள். தொழிலாளர் இயக்கம் அவர்களைத் தன்னிடமிருந்து களைந்தெறியாதவரை, அது முதலாளித்துவ தொழிலாளர் இயக்கமாகவே இருக்கும். சந்தர்ப்பவாதிகளுடன் — லேகின்ஸுடனும் டேவிட்ஸுடனும் பிளெஹானாவ்களுடனும் ச்செய்ட்மேன்களுடனும் பத்ரேஸோக்களுடனும், இன்ன பிறருடனும் — "ஒற்றுமையை" ஆதரித்து வாதாடுவதன் மூலம் நீங்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர் இயக்கத்திலுள்ள தனது சிறந்த கையாட்களின் துணையுடன் தொழிலாளர்களை அடிமைப்படுத்திக் கொள்வதை எதார்த்த வழியில் ஆதரிக்கிறீர்கள். புரட்சிகர சமூக-ஜனநாயகத்தின் உலக அளவிலான வெற்றி தவிர்க்க முடியாததுதான்; ஆனால் அது உங்களை எதிர்த்துத்தான் நடைபெறுகிறது, இனியும் நடைபெறும்; உங்களை எதிர்த்துத்தான் முன்னேறிச் செல்கிறது. இனியும் முன்னேறிச் செல்லும்; அது உங்கள் மீதான வெற்றியாகவே திகழும்.
இன்றையத் தொழிலாளர் இயக்கத்திலுள்ள இவ்விரு போக்குகளையும் — இவ்விரு கட்சிகளையும் என்றுகூடச் சொல்லலாம் — உலகெங்கும் 1914-16ல் தெட்டத் தெளிவாகப் பிரிந்து விலகிச் சென்றுவிட்ட இவ்விரு போக்குகளையும் பல நூற்றாண்டுகள் அடங்கிய காலப் பகுதியில், ஏறத்தாழ 1858லிருந்து 1892 வரை, எங்கெல்சும் மார்க்சும் இங்கிலாந்தில் கண்ணுற்று விவரித்துக் கூறினார்.
உலக முதலாளித்துவத்தின் ஏகாதிபத்தியச் சகாப்தம் தொடங்கிய காலத்தில்தான் மார்க்சோ, எங்கெல்ஸோ உயிருடன் இருக்கவில்லை. இச்சகாப்தம் 1898-1900க்குப் பின்னர்தான் ஆரம்பமாகவில்லை. ஆனால் இங்கிலாந்தின் விசேஷம் என்னவெனில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே அது குறைந்தபட்சம் ஏகாதிபத்தியத்துக்குரிய இரண்டு முக்கியத் தனி இயல்புகளை வெளிப்படுத்தி வந்தது: (1) மிகவும் பரவலான காலனிகள், (2) ஏகபோக லாபம் (உலகச் சந்தையில் அதற்கிருந்த ஏகபோக நிலையே இதற்குக் காரணம்). இவ்விரு இயல்புகளிலும் அன்று இங்கிலாந்து முதலாளித்துவ நாடுகளிடையே ஒரு விதிவிலக்காய் விளங்கிற்று; இந்த விதிவிலக்கைப் பரிசீலனை செய்த எங்கெல்ஸும் மார்க்சும் ஆகப்பல தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் பெற்று (தற்காலிக) வெற்றியுடன் இதற்குள்ள தொடர்பைத் தெட்டத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் சுட்டிக்காட்டினார்.
1858 அக்டோபர் 7 தேதியிட்டு மார்க்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் எங்கெல்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "...ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் மெய்யாகவே மேலும் மேலும் முதலாளித்துவமயமாகி வருகிறது; எல்லாத் தேசங்களிலும் மிகவும் முதலாளித்துவமயமான இங்கிலாந்து இவ்வாறாக முதலாளித்துவ வர்க்கத்தையும் கூடவே ஒரு முதலாளித்துவப் பிரபுக் குலம் ஒன்றையும், முதலாளித்துவப் பாட்டாளி வர்க்கம் ஒன்றையும் பெற வேண்டுமென்று இறுதிக் குறிக்கோளைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அனைத்து உலகையும் சுரண்டும் ஒரு தேசத்துக்கு இது ஓரளவு நியாயமே." — "ஆங்கிலேயத் தொழிலாளர் தலைவர்கள் தங்களை விலைக்கு விற்றுக் கொண்டுவிட்டனர்" என்று கூறியதற்காக மார்க்சை எதிர்த்த ஹேல்ஸ் (Hales) அகிலத்தின் சமூகக் கவுன்சிலில் ரகளை செய்ததாகவும், மார்க்சின்மீது ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் லோர்க்கேவிற்கு 1872 செப்டம்பர் 21 தேதியிட்ட தமது கடிதத்தில் எங்கெல்ஸ் தெரிவிக்கிறார். 1874 ஆகஸ்டு 4ல் லோர்க்கேவிற்கு மார்க்ஸ் இவ்வாறு எழுதினார்: "இங்கே [இங்கிலாந்தில்] நகரத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இந்தத் தலைவர்கள் கூட்டுக் கும்பல் முழுதுமே பாராளுமன்றத்துக்குப் போய்ச் சேராதது வருந்தத்தக்கதே. இக்கும்பல் முழுவதையும் தொலைத்துத் தலை முழுக அது சாலச்சிறந்த வழியாக இருந்திருக்கும்". 1881 ஆகஸ்டு 11 தேதியிட்டு மார்க்சுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் எங்கெல்ஸ் "முதலாளித்துவ வர்க்கத்தினால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்ட அல்லது அவர்களால் ஊதியம் அளிக்கப்பட்டு வருகிற ஆட்கள் தமக்குத் தலைமை தாங்க அனுமதிக்கும் அந்தப் படுமோசமான ஆங்கிலேயத் தொழிற் சங்கங்கள்" என்பதாகக் குறிப்பிடுகிறார். காவுத்ஸ்கியிற்கு 1882 செப்டம்பர் 12 தேதியிட்ட கடிதத்தில் எங்கெல்ஸ் எழுதினார்: "காலனிக் கொள்கை குறித்து ஆங்கிலேயத் தொழிலாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கிறீர்கள். என்ன நினைக்கிறார்களோ, பொதுவாக அரசியலைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அதுவேதான். இங்கு தொழிலாளர் கட்சி என்பதாக எதுவும் இல்லை, கான்சர்வேட்டிவ்கள், மிதவாத-தீவிரவாதிகள் மட்டுமேதான் உள்ளனர்; தொழிலாளர்களைப் பொறுத்தவரை உலகச் சந்தையிலும் காலனிகளிலும் இங்கிலாந்துக்குள்ள ஏகபோகத்தின் விருந்துணவில் அவர்கள் பங்கு பெற்றுக் களிப்புறுகின்றனர்".
1889 டிசம்பர் 7ல் ஸோர்க்கேயிற்கு எங்கெல்ஸ் எழுதினார்: "...இங்கே [இங்கிலாந்தில்] மிகவும் அருவருக்கத்தக்கது என்னவெனில், தொழிலாளர்களுடைய இரத்தத்திலேயே கலந்துவிட்ட இந்த முதலாளித்துவ உயர்குல மனப்பான்மை [respectability].... இவர்களில் மிகச் சிறந்தவராய் நான் கருதும் டாம் மானுங்கூட மேன்மை தங்கிய நகர மேயருடன் விருந்துண்ணப் போவதாகக் கூறிக் கொள்வதில் தனி மகிழ்ச்சி காண்கிறார். பிரெஞ்சு நாட்டவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எப்படியும் புரட்சியால் விளையும் நன்மையை நன்கு உணரலாம்". 1890 ஏப்ரல் 19 தேதியிட்ட ஒரு கடிதத்தில்: "ஆனால் மேல்மட்டத்துக்கு அடியில் இந்த இயக்கம் [இங்கிலாந்துத் தொழிலாளி வர்க்க இயக்கம்] நடந்து கொண்டுதான் இருக்கிறது; மேலும் மேலும் விரிவான பகுதிகளை ஆட்கொண்டு வருகிறது; இதுவரை தேங்கிய நிலையில் இருந்துள்ள அடி மட்டத்து [அழுத்தம் எங்கெல்சினுடையது] பகுதிகளே மிகவும் அதிகமாய் ஆட்கொள்ளப்படுகின்றன. இந்தப் பெருந் திரள் திடீரெனத் தன்னைத் தானே உணர்ந்து கொள்ளப் போகும் நாள், இயங்கிச் செல்லும் இந்தத் திரண்டெழுந்த நாள் தூரத்தில்தான் என்ற உணர்வு அதற்குத் திடீரெனப் போகும் நாள் இனி தொலைவில் இல்லை", 1891 மார்ச் 4ல்: "சிதைந்து போன துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் தோல்வி; செல்வாக்குள்ளவர்களாகவும் ஆகவே கோழைத்தனமானவர்களாகவும் இருக்கும் 'பழைய', பழமை வாதத் தொழிற் சங்கங்கள் தனித்து நிற்கின்றன...." 1891 செப்டம்பர் 14ல்: நியூகாசில் தொழிற் சங்க காங்கிரஸில் எட்டு மணிநேர வேலைநாளின் எதிர்ப்பாளர்களான பழைய தொழிற்சங்கவாதிகள் தோற்கடிக்கப்பட்டனர்; "முதலாளித்துவப் பத்திரிகைகள் இத்தோல்வி முதலாளித்துவத் தொழிற்கட்சிக்குக் கிடைத்த தோல்வியாகும் என ஒத்துக் கொள்கின்றன" (அழுத்தங்கள் யாவும் எங்கெல்சினுடையவை)....
பல பத்தாண்டுகளாய் மீண்டும் மீண்டும் எங்கெல்ஸ் கூறி வந்த இந்தக் கருத்துக்கள் பகிரங்கமாய்ப் பொது வெளியீடுகளிலும் அவரால் எடுத்துரைக்கப்பட்டன என்பதற்கு, இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூலின் இரண்டாம் பதிப்பிற்கான (1892) அவருடைய முன்னுரை சான்றாகும். இதில் அவர் "தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பெரும் திரளினோரைப்" போலல்லாது "தொழிலாளி வர்க்கப் பிரபுக்குலத்தோர்" குறித்தும், "தனிச் சலுகை படைத்த சிறுபான்மைத் தொழிலாளர்கள்" குறித்தும் கூறுகிறார். 1848-68ல் இங்கிலாந்தின் தனிச் சலுகைக்குரிய நிலையால் "தொழிலாளி வர்க்கத்தில் 'சலுகை படைத்த பாதுகாப்புள்ள ஒரு குறுகிய சிறுபான்மை' மட்டும்தான் 'நிரந்தர ஆதரவடைந்தது'"; "மிகப் பெருவாரியான தொழிலாளர் சிறந்த நிலைமையிலுங்கூட தற்காலிக மேம்பாடு தான் பெற முடிந்தது".... "அந்த [இங்கிலாந்தின் தொழில்துறை] ஏகபோகம் தகர்ந்ததும், ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் தனிச் சலுகைக்குரிய நிலையினை இழந்துவிடும்...." புதிய தொழிற்சங்கங்களின், அதாவது தேர்ச்சியற்ற தொழிலாளர்களது சங்கங்களின் உறுப்பினர்கள் "ஒரு பெரும் இந்த அனுகூலமுடையவர்களாவர்: அவர்களுடைய மனம் வசதிக்குரிய நிலைமையில் இருந்த 'பழைய சங்கங்களின் உறுப்பினர்களது' சிந்தனைக்கு இடையூறாய் இருந்த மரபுரிமையாக வந்த 'உயர்குல' முதலாளித்துவத் தப்பெண்ணங்களால் சிறிதும் களங்கமுறாத கன்னி நிலமாகும்".... இங்கிலாந்தில் "தொழிலாளர் பிரதிநிதிகள் எனப்படுவோர்" எத்தகையோர் என்றால், "தாம் தொழிலாளர்கள் என்பதற்குரிய தன்மையைத் தமது மிதவாதமெனும் கடலிலே முழ்கடித்துவிட விரும்புகிறவர்கள், அதனால் தொழிலாளி வர்க்க உறுப்பினர்களாய் இருப்பதற்காக மன்னிப்பளிக்கப்பட்டவர்கள்"....
மார்க்ஸ், எங்கெல்ஸ் இவர்களது நேரடியான எழுத்துக்களிலிருந்து வேண்டுமென்றேதான் விரிவான மேற்கோள்கள் எடுத்துச் கூறியுள்ளோம். வாசகர் இவற்றை ஒரு மொத்தமாய் பரிசீலனை செய்து பார்க்கும் பொருட்டே இவ்வாறு செய்துள்ளோம். இவை அவசியம் படித்தறிய வேண்டியவை. ஏனெனில் தொழிலாளர் இயக்கத்தின் போர்த்தந்திரத்துக்கு, ஏகாதிபத்தியச் சகாப்தத்தின் எதார்த்த நிலைமைகளால் அவசியமாக்கப்படும் இந்தப் போர்த்தந்திரத்துக்கு அச்சாணியாக அமைந்தவை இவை.
இங்குங்கூட காவுத்ஸ்கி பிரச்சினையைக் குழப்பிவிடவும், மார்க்சியத்துக்குப் பதிலாய்ச் சந்தர்ப்பவாதிகளுடன் மனங்கனிந்து இணக்கம் காணும் போக்கை அனுசரிக்கவும் முயலுகிறார். ஜெர்மனி யுத்தத்தில் இறங்கியது இங்கிலாந்தின் ஏகபோகத்தை ஒழித்திடுவதற்கான ஒரு மார்க்கமாகுமெனக் கூறி அதற்கு நியாயம் கற்பிக்கும் சிறுபிள்ளைத்தனமான அப்பட்ட சமூக-ஏகாதிபத்தியவாதிகளை (லென்ச் போன்றோர்) எதிர்த்து வாதாடும் காவுத்ஸ்கி, அப்பட்டமான இந்தப் பொய்க்கூற்றை இதே போன்று அப்பட்டமான மற்றொரு பொய்க்கூற்றைக் கொண்டு "திருத்திச் சரி செய்கிறார்". அகோரமான ஒரு பொய்க்கூற்றுக்குப் பதிலாய் அவர் நசுக்கான ஒரு பொய்க்கூற்றைக் கையாளுகிறார்! இங்கிலாந்தின் தொழில் துறை ஏகபோகம் நெடுங்காலத்துக்கு முன்பே முறியடிக்கப்பட்டு விட்டது, நெடுங்காலத்துக்கு முன்பே ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும், ஒழிப்பதற்கு இனி எதுவும் விட்டுவைக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.
ஏனெனில், முதலாவதாக, இது இங்கிலாந்தின் காலனித்துறை ஏகபோகத்தைக் கவனியாது ஒதுக்கிவிடுகிறது. ஆயினும் நாம் மேலே கண்டது போல, எங்கெல்ஸ் 1882 லேயே, முப்பத்தினான்கு ஆண்டுகளுக்கு முன்பே இதை மிகத் தெளிவாய் எடுத்துரைத்திருந்தார்! இங்கிலாந்தின் தொழில்துறை ஏகபோகம் ஒழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் காலனித்துறை ஏகபோகம் அழியாதிருப்பதோடு மேலும் கடுமையாய் உக்கிரமாகியுள்ளது, ஏனெனில் அனைத்துலகும் ஏற்கனவே பிரித்துப் பங்கிடப்பட்டுக் கொண்டுவிட்டது! இந்த நயக்கால பொய்யின் மூலம் காவுத்ஸ்கி "போராடுவதற்கு ஒன்றுமில்லை" என்பதான முதலாளித்துவ-சாத்வீகவாத, சந்தர்ப்பவாத-குட்டிபூர்ஷ்வாக் கருத்தைக் கள்ளத்தனமாய்ப் புகுத்திவிடுகிறார். இக்கருத்துக்கு நேர் மாறாய், இப்பொழுது முதலாளிகள் போராடுவதற்கு நிறைய இருப்பதுடன், முதலாளித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமாயின் அவர்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை; ஏனெனில் காலனிகளைப் பலவந்தமாய் மறுபங்கீடு செய்யாமல் புதிய ஏகாதிபத்திய நாடுகள் பழைய (பலவீனமாகிவிட்ட) ஏகாதிபத்திய அரசுகள் அனுபவிக்கும் தனிச் சலுகைகளைப் பெற முடியாது.
இரண்டாவதாக, இங்கிலாந்தின் ஏகபோகம் இங்கிலாந்தில் சந்தர்ப்பவாதத்தின் (தற்காலிக) வெற்றிக்குக் காரணமாவது எப்படி? எப்படியெனில், ஏகபோகத்தால் உபரி லாபங்கள் கிடைக்கின்றன, அதாவது உலகெங்கும் முறையாகவும் வழக்கமாகவும் கிடைக்கும் முதலாளித்துவ லாபங்களைக் காட்டிலும் அதிகப்படியான லாபங்கள் கிடைக்கின்றன. முதலாளிகள் இந்த உபரிலாபங்களில் ஒரு பகுதியை (அது ஒன்றும் சிறிய பகுதியல்ல!) தமது சொந்த நாட்டுத் தொழிலாளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக, பிற நாடுகளுக்கு எதிராய் அந்த நாட்டின் தொழிலாளர்களுக்கும் அவர்களது முதலாளிகளுக்கும் இடையே ஒரு கூட்டுக்கு ஒப்பானதொன்றை (வெபுக்கள் விவரித்த ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான பெயர்பெற்ற "கூட்டுகள்" நினைவுகூரத்தக்கவை) தோற்றுவிப்பதற்காக உபயோகித்துக் கொள்ள முடிகிறது. இங்கிலாந்தின் தொழில்துறை ஏகபோகம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியுள்ளாகவே ஒழிக்கப்பட்டுவிட்டது. இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இது எப்படி நடந்தேறியது? ஏகபோகத்தின் எல்லா வகைகளுமே மறைந்துவிட்டனவா?
அவ்வாறு மறைந்திருப்பின், (சந்தர்ப்பவாதிகளுடன்) இணக்கம் காண்பதென்ற காவுத்ஸ்கியின் "தத்துவம்" ஓரளவு நியாயமானதாய் இருக்கும். ஆனால் அது அவ்வாறு மறைந்துவிடவில்லை: இதுவே இங்குள்ள விவகாரமாகும். ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவம் ஆகும். ஒவ்வொரு கார்ட்டலும், டிரஸ்டும், சிண்டிகேட்டும், பூதாகாரமான ஒவ்வொரு பாங்கியும் ஒரு ஏகபோகமே ஆகும். உபரிலாபங்கள் மறைந்துவிடவில்லை. இன்னமும் அவை இருந்து வருகின்றன. தனிச் சலுகை பெற்று நிதித் துறையில் செல்வந்தராயுள்ள ஒரு நாடு ஏனைய எல்லா நாடுகளையும் சுரண்டுவது மறையாமல் தொடர்ந்திருப்பதுடன் மேலும் கடுமையாயும் ஆகியுள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில செல்வந்தர் நாடுகள்—சுயேச்சையான, மெய்யாகவே பிரம்மாண்டமான, "நவீன" செல்வத்தையே குறிப்பிடுவதாயின் நான்கே நான்கு நாடுகள் மட்டும்தான் உள்ளன: இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்க ஐக்கிய நாடு, ஜெர்மனி—பிரம்மாண்ட அளவுகளுக்கு ஏகபோகத்தை வளர்த்துக் கொண்டுவிட்டன; பத்துக் கோடிக் கணக்கில்—நூறு கோடிக் கணக்கில் இல்லை யேல்—செல்லும் உபரிலாபங்கள் பெற்று வருகின்றன; பிற நாடுகளைச் சேர்ந்த கோடானு கோடியான மக்களின் "முதுகிலே சவாரி செய்கின்றன"; மிகவும் செழிப்பான; மிகவும் கொழுத்த, மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய கொள்ளையெய்ப்பைப் போட்டுக் கொள்வதற்காகத் தம்மிடையே சண்டையிட்டுக் கொள்கின்றன.
உண்மையில் இதுவே ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல் சாராம்சமாகும்: இதன் ஆழமான முரண்பாடுகளை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாய்க் காவுத்ஸ்கி மூடிமெழுகிவிடுகிறார்.
ஏகாதிபத்திய "வல்லரசு" ஒன்றின் முதலாளித்துவ வர்க்கத்துக்குக் கிடைக்கும் உபரிலாபங்கள் பெரும்பாலும் நூறு கோடிப் பிராங்க் கணக்கில்தான் இருக்குமாதலால், அதனால் ஆண்டுக்குப் பத்துக் கோடிப் பிராங்கு வீதம் செலவிட்டுத் "தனது" தொழிலாளர்களின் மேல்தட்டினருக்குப் பொருளாதார வழியில் லஞ்சம் கொடுத்து அவர்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டுவிட முடியும். இந்தச் சோம்பேக்கைக் கூலி தொழிலாளர் அமைச்சர்கள், "தொழிலாளர் பிரதிநிதிகள்" (இப்பதத்துக்கு எங்கெல்ஸ் அளித்த ஒப்பற்ற விளக்கத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்), இராணுவ-தொழில் கமிட்டிகளின்* தொழிலாளர் உறுப்பினர்கள், தொழிலாளர்-அதிகாரிகள், குறுகிய தொழிலுக்கான சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அலுவலகச் சிப்பந்திகள் போன்ற பல தரப்பட்டோரிடையினும் எப்படிப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது இரண்டாந்தரப் பிரச்சினையே ஆகும்.
1848க்கும் 1868க்கும் இடையினும், ஓரளவுக்கு அதற்குப் பிற்பாடுங்கூட இங்கிலாந்து மட்டும்தான் ஏகபோக நிலை அனுபவித்து வந்தது: எனவேதான் அங்கு பல பத்தாண்டுகளுக்குச் சந்தர்ப்பவாதம் வெற்றியடைய முடிந்தது; வேறு எந்த நாடும் மிகுந்த வளமுடைய காலனிகளோ, தொழில்துறை ஏகபோகமோ பெற்றிருக்கவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி மூன்றாம் கூறில் புதிய, ஏகாதிபத்தியச் சகாப்தத்துக்கான மாற்றம் ஏற்பட்டது: ஒரு வல்லரசல்ல, ஒரு சிலவே ஆயினும், பல வல்லரசுகளது நிதி மூலதனம் இப்பொழுது ஏகபோக நிலை அனுபவிக்கலாயிற்று. (ஜப்பானிலும் ருஷ்யாவிலும் இராணுவப் பலம், பெரும் பரப்புகள் அல்லது சிறுபான்மைத் தேசிய இனங்களையும் சீனாவையும் இன்ன பிறவற்றையும் சூறையாடுவதற்கான தனி வசதிகள் முதலியவற்றாலான ஏகபோகம், நவீன கால, நூதன நிதி மூலதனத்தின் ஏகபோகத்துக்கு ஓரளவு இணையாகவும் ஓரளவு பதிலாகவும் செயல்படுகிறது.) இங்கிலாந்தின் ஏகபோக நிலை பல பத்தாண்டுகளாய் எதிர்ப்பின்றியே இருக்க முடிந்ததற்கு இந்த வித்தியாசமே காரணமாகும். நவீன கால நிதி மூலதனத்தின் ஏகபோகத்துக்கு மூர்க்கத்தனமான எதிர்ப்பு மூண்டு வருகிறது; ஏகாதிபத்திய யுத்தங்களுக்கான சகாப்தம் தொடங்கிவிட்டது. அந்நாட்களில் ஒரு நாட்டின் தொழிலாளி வர்க்கத்துக்குப் பல பத்தாண்டுகளுக்கு லஞ்சம் கொடுத்துக் கெடுத்து வருவது சாத்தியமாயிருந்தது. இப்பொழுது இது அசாத்தியமாகிவிடவில்லை என்றாலுங்கூட எதிர்பார்க்கத்தக்கதல்ல. ஆனால் ஏகாதிபத்திய "வல்லரசு" ஒவ்வொன்றும் (1848-68ல் இங்கிலாந்தில் முடிந்ததைவிட) சிறிய பிரிவான "தொழிலாளர் பிரபுக்குலத்தினருக்கு" லஞ்சம் தர முடிகிறது, தரவும் செய்கிறது. முன்பெல்லாம் "முதலாளித்துவத் தொழிற் கட்சி"—எங்கெல்ஸின் பொருட்செறிவு வாய்ந்த தொடரில் சொல்வதெனில்—ஒரேயொரு நாட்டில் மட்டும்தான் தோன்ற முடிந்தது, ஏனெனில் இந்த ஒரு நாடு மட்டும்தான் ஏகபோக நிலைக்குரியதாய் இருந்தது. ஆனால் இங்கு அந்தக் கட்சி நீண்ட காலத்துக்கு நீடிக்க முடிந்தது. இப்பொழுது ஏகாதிபத்திய நாடுகள் யாவற்றிலும் "முதலாளித்துவத் தொழிற் கட்சி" தவிர்க்க முடியாததும் இந்நாடுகளுக்குரிய குணாதிசயமாகவும் இருந்து வருகிறது; ஆனால் கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்வதற்காக இந்நாடுகள் மூர்க்கமாய்ப் போராடுவதால், இத்தகைய ஒரு கட்சி அதிக காலத்துக்குப் பல நாடுகளில் வெற்றியடையுமென எதிர்பார்ப்பதற்கில்லை. ஏனெனில் டிரஸ்டுகளும் நிதியாதிக்கக் கும்பலும் உயர்ந்த விலைகளும் இன்ன பிறவும் மேல் மட்டத்துப் பிரிவில் ஒரு சிலருக்கு லஞ்சமளித்து விலைக்கு வாங்க வகை செய்யும் அதே நேரத்தில், பாட்டாளி வர்க்கத்தினரிலும் பாதியளவு பாட்டாளி வர்க்கத்தினராய் இருப்போரிலும் மிகப் பெருந்திரளானோரை மேலும் மேலும் ஒடுக்கி நசுக்கி ஒட்டாண்டிகளாக்கி வாட்டி வதைத்து வருகின்றன.
ஒருபுறத்தில் சலுகை படைத்த செல்வமிக்க ஒருசில தேசங்களை மனிதகுலத்தின் பிற பகுதியின் இரத்தத்தை உறிஞ்சும் "நிரந்தரப்" புல்லுருவிகளாய் மாற்றுவதற்கும், நவீன இராணுவத் துறை வழங்கிடும் படுநாசத்துக்குரிய சிறந்த ஆயுதங்களின் துணை கொண்டு நீக்ரோக்களையும் இந்தியர்களையும் ஏனையோரையும் அடக்கியொடுக்கிச் சுரண்டிக் கொழுத்துச் சுகவாழ்வு நடத்த முயலும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் சந்தர்ப்பவாதிகளுக்குமுள்ள போக்கு செயல்படுகிறது. மறுபுறத்தில் முன்னிலும் கடுமையாக ஒடுக்கப்பட்டு, ஏகாதிபத்திய யுத்தங்களின் முழுச் சுமையாலும் வருந்தப்படும் மக்கள் திரள் இந்த அடிமைத் தளங்களைத் தகர்த்தெறியவும் முதலாளித்துவ வர்க்கத்தைத் தனிமைப்படுத்தவும் போராடும் போக்கு செயல்படுகிறது. இந்த இரு போக்குகளினாலுமான போராட்டத்தில்தான் தவிர்க்க முடியாதபடி இப்பொழுது தொழிலாளர் இயக்கம் வளர்ச்சிபெற்றாக வேண்டும். ஏனெனில் முதலாவது போக்கு தற்செயலாய்த் தோன்றியதல்ல: இது முதலாளித்துவ வர்க்கத்தில் பொருளாதார ரீதியிலான "வேர்கள்" பெற்றுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்கனவே தனக்கு சமூக-தேசியவெறியர்களது "முதலாளித்துவத் தொழிற் கட்சிகளைத்" தோற்றுவித்து ஊட்டி வளர்த்து நிலைபெறச் செய்து கொண்டுவிட்டது. திட்டவட்டமாய் உருவாகிவிட்ட ஒரு கட்சிக்கும் — உதாரணமாகப் பகுதியளவிலேனும் பிளெஹானாவ் வகையினரின் கட்சிக்கும் — பகுதியளவிலே அங்கே உருவாகியுள்ள கட்சியை ஒத்த நிறுவன அமைப்புகளுக்கும் — உதாரணமாகப் பத்ரேஸோவ்கள், மூசோஸ்தியோவ்கள், புல்கின்கள், சிஹெரித்ஸேவ்கள், ஸ்கோபெலேவ்கள் முதலான கோஷ்டிகளுக்கும் — இருக்கும் வேறுபாடு பொருட்படுத்தக்கூடிய ஒரு வேறுபாடல்ல. முக்கிய உண்மை என்னவெனில், பொருளாதார வழியில், தொழிலாளர் பிரபுக்குலம் ஒன்று பிளந்து சென்று முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சேர்ந்துவிடும் நிகழ்ச்சி முதிர்ச்சியுற்று எதார்த்த நிலைவரமாகிவிட்டது. இந்தப் பொருளாதார உண்மை, வர்க்க உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த மாறுதல், எந்த விசேஷ "இடர்ப்பாருமின்றி" ஏதேனும் ஒருவித அரசியல் வடிவம் பெற்றுவிடும்.
மேற்கூறிய பொருளாதார அடிப்படையின்மீது நவீன கால முதலாளித்துவத்தின் அரசியல் ஏற்பாடுகளான பத்திரிகைகள், பாராளுமன்றம், கழகங்கள், காங்கிரஸ்கள் முதலானவை உயர்குல மனப்பான்மையும் பணிவுமுடைய சீர்திருத்தவாத, தேசபக்த அலுவலகச் சிப்பந்திகளுக்கும் தொழிலாளர்களுக்கும், பொருளாதாரச் சலுகைகளுக்கும் ரொட்டித் துண்டங்களுக்கும் ஏற்றதான அரசியல் சலுகைகளை வழங்குகின்றன. ரொட்டித் துண்டுகளையும் படைத்திருக்கின்றனர். பாராளுமன்றத்திலோ, இராணுவ-தொழில் கமிட்டியிலோ, பாராளுமன்றச் சர்க்காரிலோ, மன்றத்திலோ, பல்வேறு வகையான கமிஷன்களிலோ, சட்ட முறைப்படி வெளிவரும் "கௌரவமான" பத்திரிகைகளின் ஆசிரிய குழுக்களிலோ, இதேபோல கௌரவமான "முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பணிந்து நடக்கும்" தொழிற் சங்கங்களின் நிர்வாகக் குழுக்களிலோ கொழுத்த சம்பளத்துக்குரிய சொகுசான பதவிகள் தரப்படுகின்றன — ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் இந்த இரையை வைத்துத்தான் "முதலாளித்துவத் தொழிற் கட்சிகளின்" பிரதிநிதிகளையும் ஆதரவாளர்களையும் கவர்ந்திழுத்துச் சன்மானம் அளிக்கின்றனர்.
அரசியல் ஜனநாயகத்தின் இயங்கு அமைப்பும் இதே திசையில்தான் செயல்படுகிறது. நாம் வாழும் இக்காலத்தில் தேர்தல்களின்றி எதுவும் நடைபெறாது: மக்கள் திரளின்றி அணுவும் அசையாது. அச்செலுத்துக்கும் பாராளுமன்ற முறைக்குரிய இச்சகாப்தத்தில், புகழ்ச்சி, பொய், பித்தலாட்டம், செல்வாக்கு மிக்க புதிய மோஸ்தராகிவிட்ட மினுக்குச் சொற்களாலான வாய்ச்சவடால், தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தைக் கவிழ்ப்பதற்கான புரட்சிப் போராட்டத்தைத் தவிர்க்கும் வரை அவர்களுக்கு எல்லா வகையான சீர்திருத்தங்களையும் வசதிகளையும் செய்து தருவதாய்க் கண்ணை மூடிக் கொண்டு வாக்குறுதியளித்தல் ஆகிய யாவும் அடங்கலாய் நன்கு அமைந்து பாங்குடன் நிர்வகிக்கப்படும் விரிவான வலைப்பின்னல் அமைப்பு இல்லாமல் மக்கள் திரளினரைத் தன்னைப் பின்பற்றும்படிச் செய்வது சாத்தியமன்று. ஆங்கிலேய அமைச்சர் லாயிட் ஜார்ஜின் பெயரில் இந்த அமைப்பை லாயிட்-ஜார்ஜியம் என்றழைக்கலாம். இவர் "முதலாளித்துவத் தொழிற் கட்சிக்கான" முதற்பெரும் நாட்டில் இவ்வமைப்பின் உன்னதமான கைதேர்ந்த பிரதிநிதிகளில் ஒருவராவார். முதல் தர முதலாளித்துவச் சூழ்ச்சிக்காரரும், சாமர்த்தியமான அரசியல்வாதியும், நீங்கள் கேட்க விரும்பும் எந்த விதச் சொற்பொழிவையும், தொழிலாளர் கூட்டத்துக்குரிய பு-ர்-ர்-ரட்சிகரச் சொற்பொழிவுகளையும்கூட, நிகழ்த்தக்கூடிய செல்வாக்கு மிகுந்த பேச்சாளரும், சொன்னபடி கேட்கும் தொழிலாளர்களுக்கு சமூக சீர்திருத்தங்களின் வடிவில் (இன்ஷூரன்ஸ் முதலான வசதிகளின் வடிவில்) பெரிய பெரிய ரொட்டித் துண்டங்கள் கிடைக்கச் செய்யக் கூடியவருமான லாயிட் ஜார்ஜ் முதலாளித்துவ வர்க்கத்துக்குச் சிறப்பான முறையில் சேவை புரிகிறார்;* அதுவும் தொழிலாளர்களிடேயே சென்று முதலாளித்துவத்துக்குச் சேவை புரிகிறார். முதலாளித்துவ வர்க்கத்துக்கு அதன் செல்வாக்கைப் பாட்டாளி வர்க்கத்தினுள் பரவச் செய்வதுதான் மிகவும் தேவைப்படுகிறது: பாட்டாளி வர்க்கத்தில்தான் அதற்கு மக்கள் திரளைத் தார்மிக வழியில் தனக்கு அடிப்பணிய வைப்பது மிகவும் கடினமாயுள்ளது. லாயிட் ஜார்ஜ் குறியில் இதே பாட்டாளி வர்க்கத்திடம்தான் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கை எடுத்துச் சென்று பரவச் செய்கிறார்.
இந்த லாயிட் ஜார்ஜுக்கும் ஷைடெமன்கள், லேகின்கள், ஹெண்டர்சன்கள், ஹைண்ட்மன்கள், பிளெஹானவ்கள், ரெனெடேல்கள் முதலானோருக்கும் இடையே அப்படி பெரிய வித்தியாசமா இருக்கிறது? பின்னவர்களில் சிலர் மார்க்சின் புரட்சிகர சோஷலிசத்துக்குத் திரும்பி வந்துவிடுவார்கள் என்பதாக ஆட்சேபம் எழுப்பலாம். சிலர் திரும்புவது சாத்தியமே. ஆனால் இப்பிரச்சினையை அதன் அரசியல், அதாவது வெகுஜன, கோணத்திலிருந்து பார்க்கையில் இதனால் ஏற்படும் வித்தியாசம் அற்பமானதே. தற்போது சமூக-தேசியவெறித் தலைவர்களாய் இருப்போரில் சிலர் பாட்டாளி வர்க்கத்துக்குத் திரும்பி வரக் கூடும். ஆனால் சமூக-தேசியவெறி அல்லது சந்தர்ப்பவாத (இரண்டும் ஒன்றேதான்) போக்கு மறையப் போவதுமில்லை, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்குத் "திரும்பிவரப்" போவதுமில்லை. எங்கெல்லாம் தொழிலாளர்களிடையே மார்க்சியம் செல்வாக்கு மிக்கதாயுள்ளதோ, அங்கு இந்த அரசியல் போக்கு, இந்த "முதலாளித்துவத் தொழிற் கட்சி" மார்க்சின் பெயரில்தான் ஆணையிட்டுச் செயல் புரியும்; இதைச் செய்யக் கூடாதென அதற்குத் தடை விதிக்க இயலாது. வர்த்தகக் கம்பெனி ஒன்று எந்தவொரு முத்திரையையோ, குறியையோ, விளம்பரத்தையோ உபயோகிக்கக் கூடாதெனத் தடை விதிப்பது எப்படி சாத்தியமற்றதோ அதே போலத்தான் இதுவும். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடையே செல்வாக்கு பெறும் புரட்சிகரத் தலைவர்கள் இறந்தபின், அவர்களுடைய பகைவர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ஏமாற்றும் பொருட்டு அவர்களது பெயர்களைத் தமதாக்கிக் கொண்டு பயன்படுத்த முயலுவது வரலாற்றில் எப்பொழுதுமே சகஜமாய் இருந்துள்ளது.
அரசியல் நிகழ்ச்சி என்ற முறையில் "முதலாளித்துவத் தொழிற் கட்சிகள்" முதன்மையான முதலாளித்துவ நாடுகள் யாவற்றிலும் ஏற்கனவே நிறுவப் பெற்றுவிட்டன. இக்கட்சிகளை — இவை கட்சிகளாய் இராமல் கோஷ்டிகள், போக்குகள் முதலியனவாய் இருந்தாலும் ஒன்றுதான் — எதிர்த்து உறுதியாகவும் விடாப்பிடியாகவும் நெடுதினம் போராட்டம் நடத்தினால் ஒழிய, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்துக்கோ, மார்க்சியத்துக்கோ, சோஷலிசத் தொழிலாளர் இயக்கத்துக்கோ வழி இல்லை. ருஷ்யாவிலுள்ள சிஹெயீத்ஸே கோஷ்டியும்* நாஷே தேலோவும் கோலஸ்துருதாவும்*, வெளிநாடுகளிலுள்ள நிறுவனக் கமிட்டிக்காரர்களும் இத்தகைய கட்சியின் பல்வேறு வகைகளேயன்றி வேறல்ல. சமுதாயப் புரட்சிக்கு முன்னதாகவே இக்கட்சிகள் மறைந்துவிடுமென நினைக்கச் சிறிதும் நியாயம் இல்லை. இதற்கு மாறாக, புரட்சி நெருங்க நெருங்க, அது மேலும் தீவிரமாய் மூண்டெழுந்து, அதன் வளர்ச்சியில் மாற்றங்களும் பாய்ச்சல்களும் மேலும் திருதிப்பென்றும் வன்மை மிக்கதாகவும் ஆக ஆக, சந்தர்ப்பவாதக் குட்டிபூர்ஷ்வா பெருக்கினை எதிர்த்துப் புரட்சிகர வெகுஜனப் பெருக்கு நடத்தும் போராட்டத்துக்குத் தொழிலாளர் இயக்கத்திலுள்ள பங்கும் மேலும் மேலும் அதிகரித்துச் செல்கிறது. காவுத்ஸ்கிவாதம் சுயேச்சையான ஒரு தனிப் போக்கல்ல, ஏனெனில் அதற்கு மக்கள் திரளிடத்தோ, முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் ஓடிவிட்ட சலுகை படைத்த பிரிவினரிடத்தோ வேர்களில்லையே. ஆனால் காவுத்ஸ்கிவாதத்தின் அபாயமெல்லாம் கடந்த காலச் சித்தாந்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாட்டாளி வர்க்கத்தினை "முதலாளித்துவத் தொழிற் கட்சியுடன்" இணக்கம் பெறச் செய்வதிலும், அக்கட்சியுடன் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், இக்காலகட்டத்தில் அக்கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும் அது மேற்கொள்ளும் முயற்சிகளில் அடங்கியிருக்கிறது. நாடறிந்த சமூக-தேசியவெறியர்களை இப்பொழுது மக்கள் திரள் பின்தொடர்ந்து செல்வதில்லை: இங்கிலாந்தில் தொழிலாளர் பொதுக் கூட்டங்களில் லாயிட் ஜார்ஜ் பேச முடியாதபடி எதிர்ப்புக் கூச்சல் போடப்பட்டிருக்கிறது: ஹைண்ட்மன் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்; ரெனெடேல்களும் ஷைடெமன்கள் பத்ரேஸோக்களும் குலோஸ்தியோவ்களும் போலீஸாரது பாதுகாப்பில் இருக்க வேண்டியதாகியுள்ளது. காவுத்ஸ்கிவாதிகள் மறைமுகமாய் சமூக-தேசியவெறியர்களுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் அளிப்பதானது மேலும் அதிக அளவுக்கு அபாயகரமானதாகும்.
"மக்கள் திரள்" என்பதாகப் பேசுவது காவுத்ஸ்கிவாதத்தின் சகஜமான குதர்க்கவாதங்களில் ஒன்றாகும். மக்கள் திரளிடமிருந்தும் வெகுஜன நிறுவனங்களிடமிருந்தும் தாம் முறித்துக் கொள்ள விரும்பவில்லை என்று காவுத்ஸ்கிவாதிகள் கூறுகிறார்கள்! ஆனால் எங்கெல்ஸ் இப்பிரச்சினையை எப்படி அணுகினார் என்பதைக் கவனிக்க வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயத் தொழிற் சங்க "வெகுஜன நிறுவனங்கள்" முதலாளித்துவத் தொழிற் கட்சியின் பக்கம் இருந்தன. இக்காரணத்தால் மார்க்சும் எங்கெல்ஸும் அதனுடன் இணங்கிச் சென்றுவிடவில்லை; அதற்குப் பதில் அவர்கள் அதை அம்பலப்படுத்தி வந்தனர். முதலாவதாக, தொழிற் சங்க நிறுவனங்கள் பாட்டாளி வர்க்கத்தில் ஒரு சிறுபான்மைப் பகுதியை மட்டுமே தம்முள் நேரடியாகக் கொண்டிருந்தன என்பதை அவர்கள் மறக்கவில்லை. அன்று இங்கிலாந்தில், தற்போது ஜெர்மனியில் இருப்பது போலவே, பாட்டாளி வர்க்கத்தினரில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேற்படாதோர்தான் நிறுவன ஒழுங்கமைப்புடையோராய் இருந்தனர். முதலாளித்துவத்தில் பாட்டாளி வர்க்கத்தினரில் பெரும்பான்மையோரை நிறுவன ஒழுங்கமைப்புக்குள்ளே கொண்டு வர முடியுமென யாரும் மெய்யாகவே கருத முடியாது. இரண்டாவதாக — இதுவே இங்குள்ள பிரதான விஷயம் — முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது நிறுவனத்தைச் சேர்த்த உறுப்பினர்களின் எண்ணிக்கையல்ல, அதன் கொள்கையின் மெய்யான, எதார்த்த உள்ளடக்கமே ஆகும்: அதன் கொள்கை மக்கள் திரலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா, அது அவர்களுக்குச் சேவை புரிகிறதா, அதாவது அவர்களை முதலாளித்துவத்திலிருந்து விடுவிப்பதைப் நோக்கமாய்க் கொண்டுள்ளதா, அல்லது சிறுபான்மையோரின் நலன்களையும் முதலாளித்துவத்துடனான அதன் இணக்கத்தையும் பிரதிபலிக்கிறதா? பின்னைதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்த நிலைமை: தற்போது ஜெர்மனியிலும் வேறு பல நாடுகளிலும் இருக்கும் நிலைமை.
எங்கெல்ஸ் சலுகை படைத்த சிறுபான்மையோரான பழைய தொழிற் சங்கங்களது "முதலாளித்துவத் தொழிற் கட்சியையும்" மெய்யான பெரும்பான்மையோரான "கீழ் மட்டத்துப் பெருந்திரளையும்" வேறுபடுத்தி, "முதலாளித்துவ உயர்குல மனப்பான்மையால்" நஞ்சூட்டப்படாத பின்னையோருக்கே வேண்டுகோள் விடுக்கிறார். இதுவே மார்க்சியப் போர்த்தந்திரத்தின் சாராம்சம்!
பாட்டாளி வர்க்கத்தில் திட்டவட்டமாய் எந்த அளவுள்ள பகுதி சமூக-தேசியவெறியர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் பின்பற்றுகிறது, இனி பின்பற்றப் போகிறது என்று நம்மாலோ அல்லது வேறு எவராலுமோ கணக்கிட்டுக் கூறிவிட முடியாது. இது போராட்டத்தின் மூலம்தான் புலப்படுத்தப்படும்; சோஷலிசப் புரட்சியால் மட்டும்தான் இது திட்டவட்டமாய் முடிவு செய்யப்படும். ஆனால் ஏகாதிபத்திய யுத்தத்தில் "தாயகப் பாதுகாப்பாளர்கள்" சிறுபான்மையோரை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது நமக்கு நிச்சயமாய்த் தெரியும். ஆகவே, நாம் சோஷலிஸ்டுகளாய்த் தொடர்ந்து இருக்க விரும்பினால், கீழ்மட்டத்துக்கும் ஆழ்மட்டத்துக்கும், அதாவது மெய்யான மக்கள் திரளிடையே செல்வது நமது கடமையாகும். சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் உள்ளடக்கமும் இதுவேதான். சந்தர்ப்பவாதிகளும் சமூக-தேசியவெறியர்களும் உண்மையில் மக்கள் திரளுடைய நலன்களுக்குத் துரோகமிழைக்கின்றனர், விலை பேசி அவற்றை விற்கின்றனர் என்பதையும், தொழிலாளர்களில் ஒரு சிறுபான்மையோரின் தற்காலிகச் சலுகைகளைப் பாதுகாத்து நிற்கிறார்கள் என்பதையும், முதலாளித்துவக் கருத்துக்களையும் செல்வாக்கையும் பரப்பும் சாதனங்களாவர் என்பதையும், உண்மையில் முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டாளிகளும் கையாட்களுமாவர் என்பதையும் அம்பலம் செய்வதன் மூலம் நாம் மக்கள் திரளுக்கு அவர்களது மெய்யான அரசியல் நலன்களை உணர்ந்து கொள்வதற்கும், ஏகாதிபத்திய யுத்தங்கள், ஏகாதிபத்தியப் போர்நிறுத்த உடன்பாடுகள் இவற்றாலான நீண்டநெடிய துயரப் பாதை நெடுகிலும் சோஷலிசத்துக்காகவும் புரட்சிக்காகவும் போராடுவதற்கும் கற்றுத் தருகிறோம்.
சந்தர்ப்பவாதத்திடமிருந்து பிளந்து செல்வது தவிர்க்க முடியாதது, இன்றியமையாதது என்பதை மக்கள் திரளுக்கு விளக்கிக் கூறுவதுதான், சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து அயராத போராட்டம் நடத்துவதன் மூலம் அவர்களுக்குப் புரட்சிக்கான போதம் பெறும்படிச் செய்வதுதான், யுத்த அனுபவங்களைத் தேசிய-மிதவாதத் தொழிற் கட்சிக் கொள்கையின் பரிபூரண இழிநிலையை மூடிமறைப்பதற்காக இல்லாமல், அதனை அம்பலப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதுதான் உலகத் தொழிலாளர் இயக்கத்தில் பின்பற்ற வேண்டிய ஒரேயொரு மார்க்சிய வழி.
அடுத்த கட்டுரையில், இந்த வழியைக் காவுத்ஸ்கி வாதத்திலிருந்து வேறுபடுத்தும் பிரதான இயல்புகளைத் தொகுத்துக் கூற முயலுவோம்.
1916 அக்டோபரில் எழுதப்பெற்றது 1916 டிசம்பரில், ஸ்போர்னிக் "சொத்தியால்-டெமக்ராத்தா," இதழ் 2ல் வெளிவந்தது
ஒப்பம்: நி.லெனின்
நூல் திரட்டு,
தொகுதி 30,
பக்கங்கள் 163-179
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக