ஞானத்தின் முகநூல் விமர்சனம்

இங்கே கட்டுரையின் அறிமுகத்தை எழுதவும்...

ஞானத்தின் சுயவிமர்சனமாம்

//”உண்மையில் நீண்ட மௌனதிற்கு பிறகான இந்த விமர்சனம் சிறப்பு ஆனால் இவனை போன்ற ஈனர்களை வளர்தெடுத்தவரை பற்றியும் விமர்சனம் வேண்டும்”// -- பழனிசின்னசாமி.
எனக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் விவாதத்தின் ஊடே புகுந்து, சந்தடி சாக்கில் தோழர் ஏ.எம். கே. வை விமர்சித்து எழுதக் கோருகிறார் பழனி சின்னச்சாமி
.
எந்தவொரு தோழரும் விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்டவர்கள் கிடையாது. விமர்சனங்கள் சரி,தவறு ஆகிய இரு அம்சங்களையும் கணக்கில் கொண்டு வைக்கப்பட வேண்டும். அத்தோடு புறநிலை சமுதாய வளர்ச்சிப் போக்கு, அதில் உருவாகும் இயக்கங்கள், அந்த இயக்கங்களை உருவாக்கிய பிதாமகர்களின் சிந்தனைத் தாக்கம், இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு விமர்சிக்கும் போதுதான்,சரியானவற்றை எடுத்துக் கொண்டு, தவறானவற்றைக் களைந்து முன்னேற வழி ஏற்படும். இவை எதனையும் பரிசீலிக்காமல் வெறுப்பின் உச்சத்தில் நின்று கொண்டு காழ்ப்புணர்வைக் கொட்டுவது மார்க்சிய முறையியல் அல்ல!
“இவனைப் போன்ற ஈனர்களையும் வளர்த்தெடுத்த யைப் பற்றியும் விமர்சனம் வேண்டும்” பழனிசின்னச் சாமியின் வேட்கை புரிகிறது. நீங்கள் ஏ.எம். கே.வை கல்லைக் கட்டி அடிப்பதற்கு தரவுகளை எதிர் பார்க்கிறீர்கள். விஷயம் அவ்வளவு குறுகியது அல்ல.‌
எனக்கு ஏ.எம்.கே. மீது விமர்சனங்கள் உண்டு.‌ அவற்றை சாதகம்,பாதகம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
மாணவப் பருவத்தில்- 17 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவேண்டும் என தோழர் ஜீவா விடம் சண்டைபோட்டு பின்னர் இணைந்தவர். பொதுவுடைமைக் கட்சியின் மாணவர் அமைப்புக்கு முதல் கல் நட்டவர். சட்டம் படித்தாலும் தொழில் செய்து பிழைக்க விரும்பாமல், தொழிலாளர் மத்தியில் பணியாற்றியவர். சி. பி.எம்.‌இன் மொழிக் கொள்கையை எதிர்த்து கலகம் செய்தவர். 60 களிலேயே "ஒருமொழிக்" கொள்கையை உயர்த்திப் பிடித்தவர். தோழர் குசேலரோடு இணைந்து பல தொழிலாளர் சங்கங்களை அமைத்தவர். போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டங்களைக் கட்டியமைத்தவர். சென்னை செங்கை மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக தன் திகழ்ந்தவர். வசதியான வாழ்க்கை அமைத்துக் கெள்ள வாய்ப்பிருந்தும் அதை நாடாமல் பொதுவுடைமைக் கொள்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சி.பி.எம்., கட்சியின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து கொண்டவர். பெயரளவிற்கு குடும்பம் நடத்தியவர். 3 பெண் குழந்தைகளுக்கு தந்தையானார் என்றாலும் பொதுவுடமைக் கட்சிக்காக இல்வாழ்வைத் துறந்தவர். வாழ்நாள் முழுதும் மக்களுடனும் தோழர்களுடனும் வாழ்ந்தவர். சாதி ரீதியாக தன்னை தாழ்த்தப்பட்ட வராக மாற்றிக் கொண்டவர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.‌இப்படி தோழர் ஏ.எம்.கே.வின் அர்ப்பணிப்பு , போர்க்குணம், விடா முயற்சி ஆகிய புரட்சிகர பண்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட ஒரு இளம் புரட்சியாளராக வளர்ந்து வந்த நிலையில், சி.பி.எம். கட்சிக்குள் சித்தாந்தப் போராட்டம் வெடிக்கிறது.‌ குருஷேவின் நவீன திருத்தல்வாதத்தை எதிர்த்து நாடெங்கும் தோழர்கள் போர்க் கொடி உயர்த்தினர். அப்படிப் போராடிய தோழர்களில் இருவர் குறிப்பிடத்தகுந்தவர்கள். கொங்கு நாட்டில் தோழர் L. அப்பு. தொண்டை நாட்டில் தோழர் ஏ.எம்.கே.!
இவர்களைப் போல் பல இளைஞர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில்- மேற்கு பிராந்தியம், தருமபுரி, வட ஆற்காடு ,தஞ்சை,தென் ஆற்காடு, நெல்லை, முகவை என பல மாவட்டங்களில் பல தோழர்கள் நவீன திருத்தல் வாதத்தை எதிர்த்துக் கிளம்பினார்கள். அப்படிக் கிளம்பிய இளைஞர்களில் பலர் மார்க்சிய சித்தாந்தத் தலைமை அளிக்கக் கூடிய அளவுக்கு வளரும் வாய்ப்புள்ள தோழர்கள் பலர் இருந்தனர்.
இருந்த போதிலும் இந்தியத் துணைக் கண்டத்தில் லெனினைப் போன்ற மாவோ வைப் போன்ற தலைவரகள்- மார்க்சிய சித்தாந்தத்தையும் நடைமுறையையும் ஒருங்கிணைத்து ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டமுடியாமல் போனதற்கான காரணங்களை எங்கிருந்து தேடுவது? தனி நபர்களிடமிருந்தா?
சித்தாந்த அரசியல் தெளிவு போதாமையிலிருந்தா?
இந்தியத் துணைக் கண்டத்தில் “கட்சி” கட்டிய முறையிலிருந்தே சிக்கல் தோன்றுகிறது.
ரஷ்யாவில் பொதுவுடைமைக் கட்சி அரும்பிய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் சித்தாந்தங்களுக்கிடையிலான போராட்டங்கள் -விவாதங்கள் மேலோங்கியிருந்ததன் விளைவாக அந்தப் போராட்டப் பெரு நெருப்பில் மார்க்சியம் மிளிர்ந்தது.‌ மார்க்சிய சித்தாந்தத்தை இயங்கியல் பொருள் முதல்வாதப்‌ பார்வை அடிப்படையில் சமூகப் பொருளாதாரப் படிவம் குறித்த கோட்பாடுகள்‌உருவாக்கப்பட்டு பருண்மையான ஆய்வின் அடிப்படையில் திட்டம், செரல்தந்திரம் அமைப்புக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு கட்சி கட்டப்பட்டது. விரைவாகவே புரட்சி நடந்தேறியது .
ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில்?
அக்டோபர் புரட்சியின் தாக்கம் இங்கு கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட ஒரு புறநிலைத் தூண்டுதல் என்றாலும், அது சரியான கட்சியாக உருவெடுக்காமல் போனதற்கு, இந்தியாவில் மேலோங்கியிருந்த ஏகாதிபத்திய சீர்திருத்தவாதம் முதன்மைப் பங்காற்றியது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த ஏகாதிபத்திய சீர்திருத்த வாதம் தான் குருஷேவிய நவீன திருத்தல் வாதம் வேர்விடக் காரணம் என்பதையும் பார்க்கத் தவறக் கூடாது.
இப்படிப்பட்ட பின்புலத்தில் உருவாகும் தோழர்கள் எப்படி ஒரு தத்துவத் தலைமையாக உருவெடுப்பார்கள் ?
ஏகாதிபத்திய சீர்திருத்தவாத்தின் ஒரு முகம் வலது சந்தர்ப்ப வாதம்! அதற்கு எதிர் வினையாய் உருவாகும் இன்னொரு முகம் இடது அராஜகம்.இந்த இருவகை சித்தாந்தப் போக்கை புரிந்து கொண்டு அவற்றிலிருந்து மீளும் ஆற்றல் மிக்க தோழர்கள் மட்டுமே சிறந்த மார்க்சியத் தத்துவத் தலைவர்களாக பரிமளிக்கிறார்கள். அப்படிப் பரிமளிக்கக்கூடிய அளவுக்கு தலைவர்கள் உருவாகாமல் போனதற்குக் காரணம் தனி நபர்களா?
எந்த ஒரு தனி நபரையும் சித்தாந்த அரசியல் அமைப்புக்கு உட்படுத்தித்தான் மதிப்பீடு செய்ய வேண்டும். விமர்சனம் செய்ய வேண்டும். படிப்பினைகளை கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும்.
இந்த அடிப்படையில் தோழர் ஏ.எம்.கே. வைப் பற்றிய எனது பார்வைப் பதிவைத் தொடர்வேன்….

முக்கியத் தலைப்பு 2

விவரங்களை இங்கே இடவும்.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்