பாராளுமன்றம் பற்றி மார்க்சியம்...
உலகில் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஒரே தத்துவம் மார்க்சிய லெனினியம் மட்டுமே.
இந்த பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
மார்க்சிய அடிப்படையில் புரிந்துக் கொள்ள முயவோம்
தமிழ் நாட்டு தேர்தல் களத்தில் உள்ள ஒவ்வொரு ஓட்டரசியல் கட்சியும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களே. அவர்களின் நோக்கம் இந்த அமைப்புமுறையை கட்டிக்காப்பதே அதற்காக இலவசங்களின் பெயரில் மக்களின் வாக்குக்களை விலை பேசுகின்றனர். அதேநேரத்தில் சீமான் இனவாத அடிப்படையில் மக்களின் வாக்கை பெறும் உத்திதானே தவிர இந்த சுரண்டலை ஒழிக்கும் எந்த திட்டமும் இல்லை அவரின் கட்சியும் இந்த அமைப்பின் சுரண்டலை ஏற்றே மக்களுக்கான திட்டங்கள் பேசுகின்றன. கார்ப்ரேட் கொள்ளைகளை எதிரிக்கும் நாம் தமிழர் அதே கொள்ளை கூட்டத்தின் நலனுக்கான ஆட்சி அமைத்து என்ன செய்ய போகிறார்? சினிமா கவர்ச்சியின் அடிப்படியில் களமிறங்கியுள்ள விஜய், பல்வேறு புதிய கட்டுமானங்களை பேசினாலும்; இச்சமூகம் ஏற்றுக் கொண்ட பல தலைவர்களின் படங்களை அடையாளப்படுத்தி அரசியல் மேடைகளில் அலங்கரிக்கும் விஜ்யின் மாற்று அரசியல் என்ன? இதே பழைய குடுவையில் புதிய சரக்கை ஊற்றி மக்கள் மத்தியில் கடை பரப்பியுள்ளார்.
ஆக கம்யூனிஸ்டுகளின் நிலைதான் என்ன? அன்றைய சிபிஐ தொடங்கி இன்று தேர்தல் சீர்திருத்ததிற்கு அலையும் குழுவரை புரிந்துக் கொள்ளாதவை பேசுவோம் தோழர்களே வாருங்கள்...
மார்க்சிய வரையறையின்படி, முதலாளித்துவ சமூகத்தில் பாராளுமன்றம் என்பது "முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கத்தைப் பாதுகாக்கும் ஒரு கருவி" ஆகும். இது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் கூடி விவாதிக்கும் இடமாகத் தெரிந்தாலும், நடைமுறையில் ஆளும் வர்க்கத்தின் (முதலாளிகளின்) நலன்களுக்காகச் சட்டங்களை இயற்றும் இடமாகவே செயல்படுகிறது. லெனின் இதை "பேசும் மன்றம்" (Talking shop) என்று விமர்சித்தார்.
பாராளுமன்றம் குறித்த ஒரு கம்யூனிஸ்டின் புரிதல் பின்வரும் அடிப்படைகளில் இருக்க வேண்டும்:
அரசு ஒரு கருவி: அரசு என்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான கருவி. பாராளுமன்றம் அந்த அரசின் ஒரு அங்கம்.
பாராளுமன்ற மாயை (Parliamentary Cretinism): தேர்தல் மூலம் மட்டுமே சமூக மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று நம்புவது ஒரு மாயை. உண்மையான அதிகாரம் என்பது பாராளுமன்றத்தில் இல்லை; அது ராணுவம், காவல்துறை, நீதித்துறை மற்றும் பெரும் முதலாளிகளின் கைகளிலேயே உள்ளது என்பதை உணர வேண்டும்.

சில சூழ்நிலைகளில் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தில் பெரும் பான்மை
பெற்றதாலோ, அல்லது தேர்தலில் வெற்றி பெற்றதன் விளைவாக அரசில் பங்கு கொண்டதாலோ பாராளுமன்றத்தின் முதலாளித்துவத் தன்மைகளையோ அதன் பல்வேறு அம்சங்களையோ அதனால் மாற்ற இயலாது. இந்நிலையில், பழைய அரசு நிறுவனங்களையும் அதிகார வர்க்கத்தையும் ஒழித்துப் புதியதை உருவாக்குவதென்பது நடக்கவே நடக்காது. அடிப்படை சமுதாய மாற்றத்தை முதலாளித்துவப் பாராளுமன்றங்களையோ அரசுகளையோ சார்ந்திருப்பதன் மூலமாகக் கொண்டு வருவது என்பது முடியவே முடியாத காரியமாகும். பிற்போக்குவாத முதலாளிகள் அரசின் நிறுவனங்களையும், இராணுவத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தேர்தலைச் செல்லாததாக்கிப் பாராளுமன்றத்தைக் கலைத்துக் கம்யூனிஸ்டுகளை அரசிலிருந்து வெளியேற்றி, கம்யூனிஸ்ட் கட்சியயைத் தடை செய்துவிட முடியும். மேலும் மக்களையும் முற்போக்கு சக்திகளையும் நசுக்கி மிருகத்தனமான பலாத்காரத்தை மேற்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment