இந்தப்பகுதி மாவோவின் தேர்ந்தெடுத்தப்பட்ட படைப்புகள் 2 மற்றும் சில இயக்க தோழர்களின் எழுத்துகளை தொகுத்தன் அடிப்படையில்.இதிலிருந்து இலக்கு 44 இணைய இதழ் கட்டுரையே
கம்யூனிஸ்ட் கட்சியும் அமைப்பு கோட்பாடுகளும்-சிபி
முன்னுரை:- கடந்த ஒரு நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் பல
ஆயிரங்கள், இலட்சம் போராட்டங்கள் நடத்தியும்,
பங்கு கொண்டு இருக்கிறது.
மக்கள் திரள்களின்,
சமூக இயக்கங்கள்,
அரசியல் இயக்கங்களுடன் கம்யுனிஸ்டுகள்,
கம்யூனிஸ்ட்கட்சிகள்குழுக்கள் இணைந்து இவைகள்
நடைபெற்றன. இன்றும் நடைபெற்று வருகின்றன.
இன்று உள்ள பல பொருளாதார சமத்துவ,
சமூக நீதி,
மனித உரிமைகள்,
அதற்கான பல சட்டங்களும் இந்த போராட்டங்களால்
தான் ஆளும் வர்க்கங்கள், அதிகார வர்க்கங்கள் மக்களுக்கு அளித்துள்ளன.
தலைவர்களின் தனிப்பட்ட கருணையால்,
தாராளகுணத்தினால் அவைகள் கிடைக்கவில்லை.
இந்த போராட்டங்கள் கம்யூனிஸ்டுகள் இன்னுயிர்களை
ஈந்தும், வாழ்க்கையை இழந்து,
உறவுகளை இழந்து,
செல்வத்தை இழந்து,
பெரும் உழைப்பு செல்வத்தை ஈடாக கொடுத்தும்,
கொடூர சித்ரவதைகள் அனுபவித்தும்,
பெருந்துயர் பட்டும் நடத்தப்பட்டவைகள்.
அவர்களின் இலட்சியங்களும்,
விழுமியங்களும் தான் இவைகளை முன்கொண்டு நடத்தின.
இவைகள்கம்யூனிஸ்டுகளின்ஒளிபொருந்திய,
புகழ் மிக்க,
பெரு மதிப்பு மிக்க வரலாற்று பங்களிப்புகளாகும்.
இந்த அடிப்படையான புரிதல் கண்ணோட்டத்தின்
மீதுதான் இந்த கம்யூனிச இயக்கத்தின் பிளவுகள் பின்னணியும் அவைகளின் ஒர்மையும்
இருக்கும் என்பதை அனைவருக்கும் நினைவு படுத்திக் கொள்ள்ள வேண்டும்.
கோட்பாடுகள்,அரசியல், தனிமனித காரணங்களால் கம்யூனிஸ்ட் கட்சிகள்,
குழுக்கள்,
இயக்கங்கள் பிளவு படுகின்றன.
இந்த பிளவுகள் சமூகத்திலும்,
மக்கள் மத்தியிலும்,
தோழர்களிடம் குறிப்பாக கம்யூனிஸ்ட் தோழர்களிடம்
ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை.
ஆழ்ந்த துயரத்தை தருபவை.
தனிப்பட்ட முறையிலும்,
பல்வேறு கட்சிகளின்
பிளவுகளின்சந்தர்ப்பங்களில்அத்தோழர்களின் மனநிலையை பாதித்தவை என்னவென்று சொல்ல?
சரி கம்யூனிசம் என்பது என்ன என்பதற்கு தோழர் மாவோவின் எளிய
ஆனால் காத்திரமான பதில் “தனி மனிதனை சமூக மனிதனாக மாற்றுவது”
அதாவது இதற்கு முந்தைய வளர்ச்சியின் அனைத்து
வளங்களையும் தன்மயமாக்கிக் கொண்ட மனிதன்ஒருசமூகஉயிரியாக,
உண்மையான மனிதஉயிரியாக ஒரு முழுமையான,
உணர்வுபூர்வமான உயிரியாக திரும்ப வருவதுதான்
என்பதாகும். இதைதான் மாமேதை கார்ல் மார்க்ஸ் விரிவாக விளக்க
முயன்றார். அதுதான் மார்க்சிய தத்துவம்.
இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாத கோட்பாடு.
மக்கள் திரள்தான் புரட்சி செய்யும்!
கம்யூனிஸ்ட் கட்சியும்,
அதன் தலைமையும் அதற்கு வழிகாட்டும்!
அதாவது கோட்பாட்டு -
அரசியல் -
போர் தந்திரம் செயல் தந்திரம் - திட்ட வரையறைகள் கம்யூனிஸ்ட் கட்சியும்,
அதன் தலைமையும் பருண்மையான தரவுகளுடன் ஆய்வு
செய்து வரையறை செய்து மாநாடுகளில் இறுதி செய்யும்.
இந்த திட்டத்தை பரப்புரை செய்து நடைமுறையில்
கம்யூனிஸ்ட் கட்சியும், அதன்
தலைமையும் வழிகாட்டும். தோழர்
மாவோ, “புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த
கேள்வியே யார் நமது எதிரிகள் ? யார் நமது நண்பர்கள்?
என்பதாகும்”. முந்தைய அனைத்து புரட்சிகரப் போராட்டங்களிலும் மிகச் சிறிய
அளவே சாதிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணம்.
உண்மையான எதிரிகளைத் தாக்குவதற் கேற்ற உண்மையான
நண்பர்களுடன் தம்மை ஒன்றிணைத்து கொள்ளத் தவறியது ஆகும்.
புரட்சிகர கட்சி ஒன்றே மக்கள் திரளுக்கு
வழிகாட்டி. அந்த புரட்சிகர கட்சி அவர்களுக்குத் தவறானதாக
வழிகாட்டும் போது எந்தப் புரட்சியும் எப்போதும் வெற்றி பெறுவதில்லை வெற்றி அடைய,
மக்கள் திரளைத் தவறாக வழி நடத்தாமல்,
நமது உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கு,
நமது உண்மையான நண்பர்களுடன் ஒன்றிணைவதற்கு நாம்
அவசியம் கவனம் செலுத்துவது என்பதன் மூலம் நமது புரட்சியில் வெற்றியைத்
திட்டவட்டமாகச் சாதிப்போம்.
ஒரு பாட்டாளி வர்க்க கட்சி தனது திட்டத்தையும்
செயல்திட்டத்தையும் செயல்படுத்த வேண்டுமானால் அது ஒரு சரியான அமைப்பு கோட்பாட்டை
பெற்றிருக்க வேண்டும் கட்சியின் வேலை திட்டம் செயல்தந்திரம் அமைப்பு கோட்பாடுகளை
ஏற்று கட்சியின் ஒரு அமைப்பில் உறுப்பினராக செயல்படுத்தி கட்சி உறுப்பினர்
தகுதியும் ஆகும். ஆக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகவும்
முன்னேறிய முதல் படைப்பிரிவாகவும்கட்சியானது நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கும்
கட்சியுனுடைய நடவடிக்கைக்களின் குறிக்கோளாகும்.
ஒரு நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவது
என்பது அந்தந்த நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளுடன் புரட்சியின் யுத்த
தந்திரத்துடன் இணைக்கப்பட்ட விஷயமாகும். நாடுமுழுவதும் அதற்கான அரசியல் தயாரிப்பு கட்டம் ஒன்று
தேவைப்படுகிறது.
யுத்த தந்திரம் செயல் தந்திரம்
பாட்டாளிவர்க்க இயக்கமானது இரு பக்கங்களை பெற்றுள்ளது ஒன்று
அகவயமானது மற்றொன்றுபுறவயமானது. இயக்கத்தின் புறவய நிகழ்ச்சிப் போக்கானது மார்க்சியத்
தத்துவத்தினாலும் மார்க்சிய திட்டத்தினாலும் முதலாவதாக ஆராயப் படுகின்றது.
யுத்ததந்திரம் செயல்தந்திரம் ஆகியவற்றின் செயல்
களமானது இயக்கத்தின் அகவயத்தோடு நின்று விடுகிறது.
எனவே யுத்த தந்திரமானது மார்க்சிய
தத்துவத்தினாலும் மார்க்சிய வேலை திட்டத்தினாலும் அளிக்கப்படுகின்ற விவரங்களை
அடிப்படையாக கொள்ள வேண்டும்.
போர்தந்திரமானது பாட்டளி வர்க்கம் தனக்கான இறுதிலட்சியமான பொதுவுடைமை
சமூகத்தை அடைய வகுக்கும் நீண்டகாலயுத்தியாகும்,
செயல் தந்திரமானதுகுறைந்தகாலநடவடிக்கையின்
அடிப்படையில் அமைந்தவையாகும்.
ஊழியர்களுக்கும் அமைப்பிற்கும் இடையே உள்ள உறவு அமைப்பிற்கு
அப்பாற்பட்டு ஒரு ஊழியர் இருப்பதாக நம்மால் சிந்திக்க முடியாது.
ஏனெனில் ஊழியர் அமைப்பின் ஓர் அங்கமாகவே
இருக்கின்றார். ஒரு ஊழியர்ஒருதிட்டவட்டமானஅமைப்பிற்குள்தான்
ஒரு அமைப்பாக இயங்குகின்ற ஒரு நிறுவனத்தில்தான் வாழ்கின்றார்,
இயங்குகின்றார்.
ஆகையால் ஊழியரை பற்றிய பரிசீலனை அமைப்பை பற்றிய
பரிசீலனையை யிலிருந்தே துவங்க வேண்டும்.
அமைப்புமக்களால்தான்உருவாக்கப்படுகின்றது மக்கள் தான் ஒரு
அமைப்பின் பிரதான அம்சமாக இருக்கின்றனர். ஒர் அமைப்பு மக்கள் இன்றி இயங்க முடியாது.
மக்களின் ஒரு படைப்பாக இருக்கின்ற அமைப்பு,
அவ்வமைப்புற்குட்பட்ட மக்களையும் அவர்களுடைய
குணாதிசயங்களையும் மற்றும் அவர்களின் திறமைகளையும் சார்ந்து இயங்குகின்றது .
மறுபுறம் ஒரு அமைப்பு அது நிலைத்திருப்பதற்கான
உரிமை பெற்ற ஒரு தனிப் பொருளாக ஆகிவிட்ட பிறகு அதுவே மக்களின் மீது ஒரு
தீர்மானகரமான பாதிப்பை ஏற்படுகின்றது. அமைப்பைச் சேர்ந்தவர் கள் எவரெவர் என்னென்ன செய்ய வேண்டும்.
அதன் செயல் பாட்டிற்கான நிறுவனத்தில் ஒருவர்
எந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் இப் பணியைஆற்றவேண்டும் என்பதை தீர்மானிக்கின்றது.
அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களின் செயல்பாட்டின்
திசையையும் இலக்கையும் முன்கூட்டியே அது வரையறை செய்கின்றது.
அவர்களை இயக்குவிக்கின்றது.
ஒருவர் என்ன செய்ய வேண்டும் அல்லது எதை செய்யக்
கூடாது என அவருக்கு பணிக்கிறது.ஒரு அமைப்பு அதனுடைய செயல்பாட்டின் மூலமாக அவ்வமைப்பு
சேர்ந்தவர்களிடம் ஒரு திட்டவட்டமான குணாம்சத்தை தரத்தை ஏற்படுகின்றது.
அது அவர்களைப் பயிற்றுவிக்கின்றது.
மக்களின் செயலாற்றும் திறனும் பண்பும் அவர்களின் அமைப்பு
திறனைப் பொறுத்தே இருக்கின்றது. அமைப்பு ஒரு புதிய பண்பை(தரத்தை) உண்டாக்குகிறது என்றார் மார்க்ஸ்.
அமைப்பு பற்றிய மேற்கூறப்பட்டவை அனைத்தும் ஊழியர் பிரச்சினைப்
பற்றியப் பரிசீலனை செய்தல் மற்றும் அதற்கு தீர்வு காணுதல் ஆகியவற்றோடு நேரடியான
தொடர்புடையதாகும். உதாரணமாக
கட்சி ஊழியர்களின் பலமான அம்சங்களைப் பற்றியும் அல்லது பலவீனமான அம்சங்களைப்
பற்றியும் நாம் பரிசீலனை செய்யும்போது அமைப்பு பற்றி பிரச்சினைகளிலிருந்து
பிரித்து தனியாக ஊழியர்களின் தத்துவ அரசியல் தரத்தைப் பற்றி பரிசீலனை செய்வோமானால்
ஊழியர் மீது அமைப்பு செலுத்தும் செல்வாக்கையும் பாதிப்பையும் நாம் பார்க்கத்
தவறினால் ஊழியர் பிரச்சினை பற்றிய சரியான பரிசீலனை செய்வதற்கு தீர்வு காண்பதற்கும்
தேவைப்படுகின்ற ஒரு முக்கியமான ஆதாரத்தை நாம் புறக்கணிப்போர் ஆவோம்.
ஒரு பலமான கட்சிக்கிளையும் ஒரு பலமான கட்சி நிர்வாகக்
குழுவும் வலுவான கட்சி உறுப்பினர்களும் ஊழியர்கள் தோன்று வதற்கு வாய்ப்பு
அளிக்கின்றது. எங்கெல்லாம் கட்சிக்கிளையும் நிர்வாகக்
குழுவும் சீராக செயல்படவில்லையோ அங்கெல்லாம் உறுப்பினர்களும் ஊழியர் களும் போராட்ட
வலிமை குன்றி தரங்கெட்டு பின்னடைந்து போவதற்கு ஏதுவாகின்றது.
இதற்கு நேர் எதிராக கட்சி உறுப்பினர்கள்
ஊழியர்களின் செயலற்ற தன்மையில் கட்சியமைப்புகளும் சீரழிந்து போவதும் நடக்கக்கூடிய
ஒன்றுதான் . ஏனெனில் கட்சி ஊழியர்களுக்கும் அமைப்பிற்கும்
இடையிலான உறவில் ஊழியர்கள் (ஒரே நேரத்தில் விளைவாகவும் காரணமாக இருக்கின்றார்கள்)
காரணியாக இருக்கும் போது விளைவாகவும்
இருக்கின்றார். எப்படி இருப்பினும்,
அமைப்பின் ஸ்திரத்தன்மை யற்ற நிலைக்கு ஒரு
தனிநபரே காரணம் இருந்தாலும் கூட சாராம்சத்தில் அது ஒரு அமைப்பு பிரச்சினையேயாகும்.
ஏனெனில் அன்நிலைக்குக் காரணமாக இருக்கும் அந்த
நபர்கள் அமைப்பின் உறுப்பினர் களாக இருந்தும் அமைப்பின் தேவை களுக்கு எதிராக
சிந்தித்து செயல் படுகின்றார்கள் என்றால் அவ்வமைப்பு....
அமைப்பு தனது செயல்பாட்டிற்கு தேவையான அளவுகோல்களை (தகுதிகளை) அல்லது விதிமுறைகளை உத்தரவாதம் செய்து கொள்ளவில்லை அல்லது
அமைப்பின் முடிவுகளையும் தீர்மானங்களையும் செயல்படுத்தும் படி அந்த நபர்களை
நிர்ப்பந்திக்கும் வலிமை அமைப்பதற்கு இல்லை என்பதே காரணமாகும்.
எனவேதான் ஊழியர் பிரச்சினை பற்றிய பரிசீலனை
தீர்வும் அமைப்பிலிருந்து துவங்க வேண்டும் தனிநபர் பிரச்சினையும் சாரம்சத்தில் ஒரு
அமைப்பை பிரச்சினை ஆகும் என நாம் உணர வேண்டும் தனிநபர்களின் பொறுப்பை
தீர்மானிக்கும் போது நாம் அவ்வமைப்பின் தேவைகளையும் அவ்வமைப்பின் அளவு கொள்கை
களையும் கோட்பாடுகளையும் அவ்வமைப்பின் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்
இதுவே கோட்பாட்டு ரீதியில் அமைந்த வேலை முறையாகும் .
அதற்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பவர்களை அதை ஆழமாக
புரிந்து கொண்டு வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு போரிட உறுதிபூண்ட வர்களை
கட்சியின் முன்வைக்கப்பட வேண்டும். அனைத்து கடமைகளை நிறைவேற்றுவதற்கு உறுதிபூண்டவர் களை
கட்சியின் வழி அல்லது கோட்பாட்டு அடிப்படையில் திடசித்தத்துடன் மதிநுட்பத் துடன்
ஆக்கபூர்வமான முறையில் கையாளும் திறமை உள்ளவர்களை ஊழியர்கள் பெரும் தொகையில்
பெற்றிருப்பது அவசியமானதாகும். ஒரு நபரின் வலிமை அமைப்பில் தான் தங்கியிருக்கின்றது
தனிநபர்களின் வலிமையில் கூட்டுத் தொகையை விட தரத்தில் முற்றிலும் வேறுபட்ட ஒரு
புதிய வலிமையை அமைப்பு உருவாக்குகின்றது இப்பிரச்சினையில் உள்ள இயக்கவியல்.
பின்வரும் கற்றலில் அடங்கி இருக்கின்றது.
ஒரு வலுவான அமைப்பு தனிநபர்களின் வலிமையை
உத்தரவாதம் செய்கின்றது. தனிநபர்களின் வலிமை அமைப்பை வலுவானதாக ஆக்குகின்றது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனி குணாதி சயமும் திறமையும் உண்டு.
ஆகவே தான் ஒரு அமைப்புக்குள் தனிநபர்களுக்கு பாத்திரம் இல்லை என நாம் கூற முடியாது ஒரு அமைப்பில் உள்ள
உறுப்பினர் அனைவரும் எத்திறனுமற்றவர்களாக இருப்பார்கள் என்றால் அந்த அமைப்பு
நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் ஒரு அமைப்பு உண்மையில் பல நபர்களின் சேர்க்கையாகவே
இருக்கின்றது. உண்மையில் உறுப்பினர்கள் ஆற்றல் அற்றவர்களாக
இருப்பார்களானால் அவ்வமைப்பின் கூட்டுத்திறன் எங்கிருந்து கிடைக்கும்.
உட்கட்சி இயங்கியலும் ஜனநாயக மத்தியத்துவமும்.
பாட்டாளி வர்க்கம் பிறரை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டு
தன்னையும் மாற்றி அமைத்துக் கொள்கிறது. விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டில் ஒவ்வொரு நேரங்களில்
ஒவ்வொன்று முதன்மையாக இருக்கும் எனினும் கட்சி என்ற விதத்தில் புரட்சியின் அகசக்தி
என்ற விதத்தில் சுய விமர்சனமே முதன்மையானது இதுவே மாற்றி அமைப்பது பற்றிய உட்கட்சி
இயங்கியல் அணுகுமுறை .
புற உலகமானது மனிதர்களது விருபத்திற்கு அப்பாற்பட்டு மாறிக்
கொண்டே இருக்கிறது. அடிப்படை
சமூக மாற்றமான புரட்சிக்கு தலைமை தாங்க முன்வரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு
மாறாமல் இருக்கும் போதே சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக் கொண்டு
அவ்வப்போதைய குறிப்பான கடமைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் .
பொருளானது என் நேரமும் மாறிக் கொண்டே
இருக்கின்றது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள் முதல்வாத கண்ணோட்டம்.
வளர்ச்சியின் விதிகளோடு சேர்த்தே பொருளைப்
புரிந்து கொள்வதே இயங்கியல் பொருள்முதல்வாதம்.
இயங்கியல் பார்வையும் பொருள்முதல்வாத சித்தாந்தமும்
ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை ; ஒன்றைஒன்று நிறைவு செய்பவை.
இயங்கியல் பார்வையற்ற மாறா நிலையில் இருந்து
பொருளை பரிசீலிக்கும் போது நாம் புறப்பொருளை சரியாக புரிந்து கொள்ளாததுடன் புறவய
விதிகளில் இருந்து இல்லாமல் நமது அகவய விருப்பங்கலிருந்து கட்சியை கட்டுவது முதல்
கடமைகளை வகுத்து கொள்வது வரை நடக்கின்றன .இது தத்துவத் துறையில் கருத்துமுதல் வாதத்திற்கு இடம்
கொடுக்கிறது. அதேபோல் பொருள் முதல்வாத அடிப்படையில் இருந்து
பிரித்து இயங்கியலை பிரியோகிப்பதால் அது மாறாநிலை கண்ணோட்டத்தையே பலப்படுத்துகிறது.
இது கட்சிக்குள் நிகழும் மாற்றங்கள் பற்றியது.
கட்சியின் வழியை செயல்படுத்துவதில்
வளர்ச்சியும் பின்னடைவும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைக்கின்றன.
இவை பின்னிப் பிணைந்து வெளிப்படுகின்றன.
இவற்றை சரியாக பரிசீலித்து ஆய்வு செய்து
அனுபவத்தை தொகுக்க வேண்டுமெனில் கீழே இருந்து மேல் வரை தகவல்கள் அளிக்கும்
முறையும் மேலிருந்து கீழ்வரை கமிட்டி முறையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அப்போதுதான் நிஜ விவரங்களிலிருந்து உண்மைகள்
காண இயலும் .
எனவே ஒரு அமைப்பு வலுவானதாக இருக்க வேண்டுமானால் அது வலுவான
நபர்களை பெற்றிருக்கவேண்டும். ஒரு அமைப்பு ஒரு சரியான பாட்டாளிவர்க்க அமைப்பாக இருக்க
வேண்டுமானால் அது சரியான பாட்டாளி வர்க்கசிந்தனையாளர்களை தனது உறுப்பினர்களாகக்
கொண்டு இருக்க வேண்டும் .இது நம்மை ஜனநாயக மத்தியத்துவ பிரச்சினைக்கும் அமைப்பு கோட்பாடுகளுக்கும்
இட்டுச்செல்கிறது. கம்யூனிஸ்ட்
கட்சியும் ஒரு பொருள் என்ற விதத்தில் இயங்கு இயல் பொருள் முதல்வாதக்
கண்ணோட்டத்தில் கட்சி அமைப்பிற்கான கோட்பாடுகளை வகுப்பது அவசியமாகிறது .
ஜனநாயக மத்திய துவ கோட்பாட்டின் நான்கு விதிகளான.
1).
தனிநபர் கமிட்டிக்கு கட்டுப்படல்.
2).சிறுபான்மை பெரும்பான்மைக்கு கட்டுப் படல்.
3).
கீழ் கமிட்டி மேல் கமிட்டிக்கு கட்டுபடல்.
4).அனைத்தும் மத்திய கமிட்டிக்கு கட்டுப்படல்.
என்பவற்றை நாம் அறிவோம் இவற்றை எப்படிப் பார்ப்பது ஜனநாயக
மத்தியத்துவம் என்றால் என்ன? ஜனநாயகத்திற்கும் மத்தியதுவத்திற்கும் உள்ள உறவு யாது ?
கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த முன்னோடிகள் மனப்பூர்வமாக இணைந்து கூட்டு
நடவடிக்கையில் ஈடுபடுகின்ற அமைப்பாதலால் கொள்கை வழிப்பட்ட அரசியலால் வழி
நடத்தப்படுவது அவசியமாகிறது .
உறுப்பினர்களின் புரட்சிகர நடவடிக்கை களை மையப்படுத்தி
ஒருமுகப்படுத்துவதே ஜனநாயக மத்தியதுவம் அல்லது
மத்தியதுவப்பட்டஜனநாயகம்நடவடிக்கையில் இயங்குவதற்கான ஜனநாயகமும் ஒருமுகப் படுத்த
படுகின்ற மத்தியதுவமும் இணைந்து ஒரு முழுமையாகின்றது.
இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதது
ஒன்று மற்றொன்று நிறைவு செய்கின்றது. மத்தியதுவம் என்பது உண்மையிலே நிலவ வேண்டுமெனில் அந்த
மையப்படுத்தப்பட்ட தலைமை கட்சியின் பரந்துபட்ட உறுப்பினர்கள் தமது கூட்டு
நடவடிக்கையில் போராட்டங்களில் மிகவும் சிறப்பாக பயன் தருகின்ற கருவியாக உணரும்போதே
தாமும் கூட மக்களுக்கு சிறப்பாக தலைமை அளிக்க இயலும்.
அப்போது தான் உண்மையான அரசியல் மத்தியதுவம்
இருக்கும். இது உறுப்பினர்களுக்கு உட்கட்சி ஜனநாயகத்தை
உறுதிப்படுத்தும் போதே சாதிக்க முடியும் .
ஜனநாயகத்தில் இருந்து பிரிக்கப்படாமல்
மத்தியதுவம் தனது உயிர் பண்பான வழிகாட்டும் திறனை இழந்துவிடுகிறது.
அப்போது அது பாட்டாளி வர்க்க மத்தியதுவமாக
இராமல் உத்தரவு போடுகின்ற அதிகாரவர்க்க முறையாக முதலாளித்துவ எதேச்சதிகாரமாக அதீத
மத்தியதுவமாக மாறிவிடுகிறது. அதேபோல உட்கட்சி ஜனநாயகம் என்பது உண்மையிலே நிலவ
வேண்டுமெனில் நிலைமைகளை புரட்சிகர திசையில் மாற்றிக்கொண்டே நெளிவு சுளிவாகவும்
செயலாற்றும் திறன் மிக்க வலுவான தலைமை உருவாகி கட்சியின் நடவடிக்கைகளில்
ஒருமுகப்படுத்துவது அவசியம். திட்டவட்டமான ஒரு கொள்கை வழிப்பட்ட அரசியல் வழி
காட்டப்படும் போது உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளில் முன் முயற்சியை கை கொள்வதும்
நடைமுறையில் எழுகின்ற பிரச்சினைகளை கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுத்து
தீர்ப்பதும் சாத்தியமாகிறது. இதுதான் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகும்.
எந்த கருத்து வேண்டுமானாலும் கொண்டு இருக்கலாம்
என்று சம்பிரதாயமாக கூறுகின்ற பூர்சுவா ஜனநாயக நடைமுறையில் கட்சியின் அடிப்படைக்
கொள்கைக்கு எதிரான கருத்தை கொண்டிருக்கும்.
உண்மையான ஜனநாயக மத்தியதுவம் தொடர்ச்சியான
கூட்டு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான கூட்டுப் போராட்டத்திலும் தான் அடைய முடியும் .
இதை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
கட்சியினுள் இயங்கும் அமைப்புகளுக்கும்
உறுப்பினர்களுக்கும் இடையேயும் மற்றும் கட்சிக்கு வெளியில் உள்ள மக்கள்
திரளுக்குமிடையேயும் உயிருள்ள இணைவுகளையும் பரஸ்பர உறவுகளை வளர்த்து பராமரிப்பது
இதனை உறுதிப்படுத்துவதற்கான அவசியமும் நிபந்தனைகள் ஆகும்.
என அகிலத்தால் நிறைவேற்றப்பட்ட கட்சி அமைப்பு
கோட்பாடுகள் கூறுகின்றது. இதைத்தான் கட்சியினுள் வெகுஜன மார்க்கம் என மாவோ
பெயரிடுகிறார் .
அதாவது உண்மையில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு அமைப்பில்
உறுப்பினராக இருக்கும்போது அவரது கடமைகள் மட்டுமின்றி உரிமைகளும் உறுதிப்
படுத்தப்படுகின்றன. மற்றவை பற்றி வரும் இதழில் காண்போம் முதலில் ஊழியர் கொள்கை
பற்றி இந்த இதழில் தொடர்ந்து விவாதிப்போம்.
ஊழியர் கொள்கை
நமது கட்சி தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டுமானால்
திறமையுடன் அரசியல் நேர்மை கொண்ட பெரும் தொகையான
தலைசிறந்த தலைமை ஊழியர்கள் அதற்கு தேவைப்படுகின்றது.
நமது கட்சியின் ஊழியர்கள் தீரமிக்கவர்களாகவும்
அர்ப்பணிப்பு உடையவர்களாக இருந்தால் மட்டும் போதாது.
தங்களை எதிர்நோக்கும்
புரட்சி பணிக்கு ஈடு கொடுப்பவர் களாகவும் அதிலும் குறிப்பாக
புரட்சியின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஆற்ற வேண்டிய அரசியல் பணிகளில் உள்ளடக்கத்தை
உணர்ந்து அதை நிறைவேற்றும் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஏனெனில் புரட்சியின் ஒவ்வொரு கட்டமும் தனக்கே
உரித்தான குணாம்சங்களை பெற்றிருப்பதுடன்அதன் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அரசியல்
பணியில் உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கிறது.
ஆகையால் கட்சி ஒரு சரியான ஊழியர் கொள்கையை
வகுத்துக் கொள்வதற்கு; இக்கட்டத்தில்
ஆற்றவேண்டிய புரட்சி பணிகளின் உள்ளடக்கம் தன்மை மற்றும் அதன் இயல்பையும் புரிந்து
கொண்டால் மட்டும் போதாது, இந்தியப் புரட்சியின் யுத்த தந்திர போர்த்தந்திர
கோட்பாடுகளையும் புரட்சியின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆற்றவேண்டிய அரசியல்
பணிகளில் உள்ளடக்கத்தையும் அதன் தேவைகளை பற்றி ஒரு சரியான புரிதலையும் பெற்றிருக்க
வேண்டும் . இத்தகைய புரிதல் ஊழியர் பிரச்சினையைப் பற்றிய
பரிசீலனை செய்வதற்கும் அதற்கு ஒரு சரியான தீர்வைக் காண்பதற்கும் தீர்மானகரமான
அம்சமாக இருக்கின்றது. ஆகையால்
தான் "அரசியல் மார்க்கம்
தீர்மானிக்கப்பட்டதும், ஊழியர்கள்
ஒரு தீர்க்கமான அம்சம் " என மாவோ கூறினார் .
ஊழியர்களுக்கும் அரசியல் வழி மற்றும் கடமைகளுக்கும் இடையில்
ஊழியர் களுக்கும் இயக்கத்திற்கும் இடையிலும் மிக நெருங்கிய ஒரு இயங்கியல் ரீதியான
தொடர்பு உண்டு. இத்தகைய பன்முக உறவுகளின் வரம்பிற்குள்தான் ஒரு
ஊழியரின் வாழ்வும் இயக்கவும் அமைகின்றது. இத்தகைய உறவுதான் ஒருவரை உண்மையில் ஒரு ஊழியராக ஆகின்றது.
ஊழியர்களுக்கும் அரசியல் வழி மற்றும் கடமைகளுக்கும்
இடையிலான உறவு ஒரு சரியான அரசியல் வழி சிறந்த ஊழியர்களை உருவாக்குகின்றது.
ஒரு சரியான வழிகளில் ஊழியர்களுக்கு நன்கு
பயிற்சி பெற்று முதிர்ச்சி அடைகின்றனர். இது ஊழியர் பிரச்சினையில் உள்ள ஒரு அம்சமாகும்.
ஊழியர்கள் ஒரு அரசியல் வழியை உருவாக்குவதிலும்
அதை வளர்த் தெடுப்பதிலும் பங்கு கொள்கிறார் கள்.
அவ்வழியை ஒரு எதார்த்தமாக்கு வதற்கு உத்தரவாதம்
செய்கின்றார்கள் .இது
ஊழியர் பிரச்சினையில் உள்ள மற்றொரு அம்சமாகும்.
கட்சி ஒரு சரியான அரசியல் வழியை வகுத்துக் கொண்டாலும் கூட
அவ் வழியை நடைமுறைப்படுத்துவதற்கு (செயல் படுத்துவதற்கு)
திறமையான ஊழியர்களை பெற்று இருக்காவிட்டால்
அவ்வழி ஒரு வெற்றுஉரையாகிவிடும் .பயனற்றதாகிவிடும். ஊழியர்கள் மோசமானவர்களாக இருந்தால் அவர்கள் அவ்வழிக்கு
தீங்கு விளைவிப்பார்கள். கட்சியின் ஊழியர்கள் நல்லவர்களாக வல்லவர்களாக இருந்தால்
அவர்கள் அரசியல் வழியை ஒரு ஆக்கபூர்வமான முறையில் நிறைவேற்றத் துணை புரிவதுடன்
அவ்வழியை வளர்ப்பதற்கும் பங்காற்றுவார்கள் .
கட்சியின் அரசியல் வழியே அமைப்பின் தன்மையும்
வளர்ச்சியையும் ஊழியர் களின் வர்க்க சிந்தனையையும் ஒழுக்க நெறிகளையும் ஆற்றலையும்
தீர்மானிப் பதில் தீர்க்கமான அம்சமாக இருக்கின்றது.
எந்த ஒரு அரசியல் வழியையூம் ஊழியர்கள் நன்கு புரிந்துகொண்டு
அதை தனதென கருதி தன்னலமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் திறமையுடன் நிறைவேற்ற உறுதி
பூண்டிருந்தால்தான் அதை செயல்படுத்த முடியும்.எனவே தான் சிறந்த ஊழியர் களை பெற்றிருப்பதற்கு ஒரு சரியான
அரசியல் முன்நிபந்தனையாகும்.
ஒரு சரியான அரசியல் வழியினால் உருவாக்கப்பட்ட இயக்கமானது
வலிமையான வெகுஜன இயக்கமாக கட்சியால் உருவாக்கப்பட்டு இருந்தால் பெரும்பான்மையான
கட்சி ஊழியர்கள் கட்சியின் சரியான அரசியல் வழியில் நின்று உறுதியாக போராடினால்
கட்சி ஊழியர்களை தீய போக்குகள் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைக்கப்
படுவதுடன் அத்தீய போக்குகள் கட்சி ஊழியர்களால் தனிமைப்படுத்தப்பட்டு அவை
இயக்கத்திலிருந்து தூக்கி எறியப்படும். இதற்கு மாறாக அரசியல் வழியிலேயே பிழைகள் செய்யப் படுமானால்
நிலைமைகள் வேரொன்றாகிவிடும். தவறான வழி ஊழியர்களை ஒரு சரியான திசையில் இருந்து விலக்கி
அவர்களை "பொருளாதார வாதம்,
வர்க்க சமரசம்,
அராஜகவாதம்,
தன்னெழுச்சி போக்கு,
சந்தர்ப்பவாதம் ,
சகாசவாதம்"
போன்ற தவறான பாதைக்கு கொண்டு செல்லும்.
அணிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.
ஏராளமான ஊழியர்களை தவறுகளை செய்வதற்கு
தள்ளிவிடும். இத்தகைய சூழ்நிலையில் சரியானது தவறான பிரித்துப்பார்க்க
சரியானதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்து உண்மையாக போராடுவோர் நிச்சயமாக
இருப்பார்கள் ஆயினும் புரட்சி இயக்கத்தை மீண்டும் ஒரு சரியான பாதைக்கு கொண்டு
வருவது இயக்கம் ஒரு உயர்ந்த விலையை செய்து செலுத்த வேண்டியிருக்கும்.
அமைப்பு பணியின் உள்ளடக்கம் மற்றும் குணாம்சம் அதன்
வாய்ப்பெல்லை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் அமைப்பு பிரச்சினை
முழுவதையும் வெறும் ஊழியர் பிரச்சினையாக எளிமைப்படுத்தி பார்த்து விட முடியாது.
அமைப்பு அதற்கே உரித்தான சுயேட்சையான
பாத்திரத்தை வகுக்கின்றது ஊழியர்கள் வாழ்விலும் அது ஒரு தீர்மானகரமான
முக்கியத்துவமுடைய பாத்திரத்தை வகிக்கின்றது.
இப் பிரச்சனையை அமைப்புப் பிரச்சனையை பற்றி
விவாதிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் .
ஊழியர்கள் வழியை நிறைவேற்றுபவோர் என்ற முறையில் அவர்கள் ஒரு
வழியில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றார்கள் என கூறலாம்.
வழியை அமல்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான பயனுள்ள
முறையில் அமைப்பு படுத்துவதன் மூலம் அவர்கள் பெற்றிருக்கும் செழுமையான அனுபவத்தை
அபிவிருத்தி செய்வதற்கும் வளர்த்தெடுப்பதற்கு மற்றும் அதை சரியான ஒன்றாக
ஆக்குவதற்கு தங்களை பங்களிக்கின்ற இவ்வாறு செய்வதுதான் ஒரு ஊழியரிடம் என்று
கூறப்படும் ஒரு முக்கியமான தகுதியாகும். இவ்வாறு செய்வது தான் ஒரு ஊழியருக்கு இருக்க வேண்டிய ஒரு
முக்கியமான தகுதியாகும்.
ஊழியர்கள் பிரச்சினை பற்றிய பரிசீலனையும் தீர்வும் அரசியல்
வழியில் இருந்தே துவங்க வேண்டும் இவ்வாறு கூறுவதன் பொருள் என்னவென்றால் நமது
ஊழியர் தொடர்பான பணியும் ஊழியர் கொள்கையும் இவ்வழியை வெற்றிகரமாக அமல்படுத்துவதை
உத்தரவாதம் செய்வதாக இருக்க வேண்டும் . இதன் பொருள் இந்த அரசியல் வழியை எதார்த்தம் ஆக்குவதற்கு
திறமை பெற்ற ஊழியர்களை அதற்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பவர்களை அடையாளப்படுத்தி
புரிந்துகொண்டு வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு போரிட உறுதி பூண்டவர்களை
கட்சியின் வழியை ஒரு கோட்பாட்டு அடிப்படையிலும் திட சித்தத்துடனும்
மதிநுட்பத்துடனும் ஆக்கப்பூர்வமான முறையிலும் கையாளும் திறமை உள்ளவர்களை
ஊழியர்களாக
பெரும் தொகையில் பெற்றிருப்பது அவசியமானதாகும் என்பதேயாகும்.
இதன் பொருள் ஊழியர்களை நியமித்தல்
பயிற்றுவித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றி லிருந்து ஊழியர்களை மதிப்பீடு
செய்தல் உயர்த்துதல் ஆகிய வரை எல்லா அம்சங்களிலும் நமது ஊழியர் கொள்கையையும்
ஊழியர் தொடர்பான பணியும் மேற்கூறப்பட்ட அவற்றை பிரதான அளவுகோலாகக் கொண்டு இருக்க
வேண்டும் என்பதேயாகும். இதன்
பொருள் ஊழியர் பிரச்சினையை ஒரு குறிப்பிட்ட முறையில் பரிசீலனை செய்யவேண்டும்.
பண்பாடு அல்லது வர்க்க நிலைப்பாடு பற்றிய
பொதுவாக கருத்துக்களுக்கு நாம் திருப்திக் கொள்ளக் கூடாது என்பதே ஆகும் .
வர்க்க நிலைப்பாடும் புரட்சிகர பண்புகளும்
வரலாற்று வளர்ச்சியின் விதிகளுக் கேற்ப்ப புரட்சியின் மூலம்
உலகையும் சமூகத்தையும் மற்றும் மனிதனை மாற்றி அமைக்கும் தத்துவமாக விளங்கும்
மார்க்சிய-லெனினிய சீடர்கள் என்ற முறையில் நாம் ஒழுக்க
நெறிகளை ஒழுக்கநெறிகள் ஆகவே கருதவில்லை வர்க்க நிலைப்பாட்டையும் நாம் சரியாக ஒரு
விஞ்ஞான ரீதியில் பொருள் புரிந்து கொள்ள வேண்டும் .
வர்க்கம் என்பதை நாம் தனித்தனியான நபர்களின் கூட்டுத்
தொகையாக கருதவில்லை அதற்கு மாறாக சமுதாய உற்பத்தி முறையில் ஒரு திட்டவட்டமான
இடத்தை வகிக்கும் ஒரு சமூகக் குழுவே வர்க்கம் என நாம் கருதுகிறோம்.
பாட்டாளி வர்க்கம் கூட அது தானேயான ஒரு
வர்க்கமாக இருந்ததில் இருந்து தனக்கேயான ஒரு வர்க்கமாக மாறிய பிறகே அதாவது அது
வர்க்க உணர்வு பெற்ற பிறகே பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கமாக ஆக உருவெடுத்தது .
இந்த உணர்வும் கூட தனிநபர் உணர்வுகளின் ஒரு எளிமையான
கூட்டுத்தொகை அல்ல அதற்கு மாறாக இது முழு வர்க்கத்தின் வரலாற்று ரீதியான
நிலைமையையும் மற்றும் அதன் கடமையும் பற்றிய உணர்வே ஆகும்.
ஆகையால் வர்க்க நிலைப்பாடு என்பது
அவ்வர்க்கதத்தின் அரசியல் நிலைப்பாடு ஆகும்.
வர்க்க உணர்வு என்பது அவர்களின் ஒட்டுமொத்தமான
அடிப்படையான மற்றும் நீண்ட கால நலன்களைப் பற்றிய உணர்வும் இந்த நலன்களை
பாதுகாத்துக் கொள்வதற்கு அது கொண்டுள்ள திடமான உறுதியும் ஆகும்.
தொழிலாளி வர்க்கத்தை பொறுத்த மட்டில் அது தனது வரலாற்று
ரீதியான நிலையையும் கடமையை உணர வேண்டுமானால் அது தன்னை மார்க்சிய-லெனினியதால் ஆயுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
சமூக வளர்ச்சி விதிகளை சரியாக பிரதிபலிக்கின்ற
மா-லெ தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக
இருப்பதுடன் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாட்டின் உண்மையான விஞ்ஞானபூர்வமான
உள்ளடக்கமாகவும் அமைந்திருக்கின்றது. தொழிலாளர் இயக்கம் மார்க்சிய-லெனினியத்துடன் இணையும் போதுதான் அது பாட்டாளி வர்க்கத்தின்
அரசியல் கட்சியாக அமைகின்றது. தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வும் வர்க்க நிலைப்பாடும்
அதி உயர்ந்த முழுமையான முதிர்ச்சி அடைந்த நிலையின் வெளிப்பாடுதான் கட்சி
அமைப்பாகும். முன்னேறிய தத்துவமான மா -லெ ஆயத்தம் செய்யப்பட்ட ஒரு கட்சியின் மூலம் மட்டுமே
தொழிலாளி வர்க்கம் புரட்சி தலைமை பாத்திரத்தை வழங்கும் ஒரு முன்னோடி வர்க்கமாக
திகழ முடியும். அத்தகைய நிலையில்தான் தொழிலாளி வர்க்கத்தின்
வர்க்க நிலைப்பாடு உண்மையாக உருவாக முடியும்.
மா-லெ பற்றியும் புரட்சிகர விஞ்ஞானத்தைப் பற்றிய ஒருதெளிவான
அறிவு இன்றி தொழிலாளி வர்க்கத்தின் நிலைப்பாடு முன்னோடி வர்க்கத்தின் நிலைப்பாடாக
இருக்க முடியாது. எனவே தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாடு
என்பது மா-லெ நிலைபாடு ஆகும்.
தவிர இந்தத் தத்துவத்தினால் ஆயத்தம்
செய்யப்பட்ட கட்சியின் அரசியல் வழியும் நடவடிக்கைகளும் தான் அந்த நிலைப்பாட்டின்
குறிப்பானா தெளிவான வெளிப்பாடுகளாகும். சுருங்கக்கூறின் வர்க்க நிலைப்பாடு என்பது மார்க்சிய
லெனினியத்தால் ஆயத்தம் செய்யப்பட்ட பாட்டாளி வர்க்க கட்சியின் அரசியல் வழியையும்
அவ்வழியை நடைமுறைப்படுத்துவதற்கான புரட்சிகர நடவடிக்கைகளையும் சரியான புரட்சிகர
முறைகளையும் உள்ளிட்டதே ஆகும்.
ஒரு தன்னெழுச்சியான இயக்கத்தின் மூலம் தொழிலாளி வர்க்கம்
தொழிற்சங்க உணர்வை தான் பெறமுடியும். லெனின் வார்த்தையில் கூறினால் "தொழிற்சங்க வாதம் என்பது தொழிலாளி வர்க்கத்தின்
தத்துவார்த்த ரீதியில் முதலாளித் துவத்திற்கு அடிமைப்படுத்துவதேயாகும்".
தொழிலாளர்களிடையே தன்னெழுச்சி யாக பாட்டாளி வர்க்கத்தின்
புரட்சிகர நிலைப்பாட்டை அடைய முடியாது என்றால் விவசாயிகளால் எளிய நிலமற்ற
விவசாயிகள் இருந்தாலும் சரி நிலமற்ற கூலி விவசாயிகளாக இருந்தாலும் சரி
தன்னெழுச்சியாக தொழிலாளி வர்க்க நிலைப்பாடு பெற்றுவிட முடியாது.
கட்சியின் வழியை அமல்படுத்துவதற்காக
மேற்கொள்ளப்படும் புரட்சிகர நடவடிக்கை கள் மற்றும் சரியான புரட்சிகர முறைகளின்
மூலம் மட்டுமே ஏழை நிலமற்ற விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தொழிலாளி
வர்க்க நிலைப்பாட்டை அடைய முடியும்.
வர்க்க நிலைப்பாட்டையும் ஏதோ ஒரு காலத்திற்கும் களத்திற்கு
அப்பாற்பட்ட பொதுவான ஒன்றாக நம் கருதக்கூடாது.
வர்க்க நிலைப்பாட்டை நாம் ஒரு குறிப்பான
வரலாற்று ரீதியான கண்ணோட்டத்தில் இருந்து கிரகித்துக் கொள்ள வேண்டும்.
நமது நிலைப்பாடும் மா-லெ- யத்தால் வகுக்கப்பட்டுள்ள சமுதாய வளர்ச்சி பற்றி விதிகளின்
அடிப்படையில் தான் வெல்ல முடியும். இதுவே நமது வர்க்க நிலைப்பாட்டிற்கும் ஒழுக்க நெறி பற்றிய
கருத்தாக்கம் அடிப்படையாக அமையும்.
எனவே புரட்சியின் இன்றைய கட்டத்தில் தன்னலம் கருதாமல்
நாட்டின் விடுதலைக் காகவும் மக்களின் ஜனநாயகதிற்காகவும் பிறப்பால் ஏற்றத் தாழ்வு
கற்பிக்கும் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் சாதிமுறை ஒழித்து நாட்டு மக்களுக்
கிடையில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காகவும் ஆண் ஆதிக்கத்தை ஒழித்து பெண்களுக்கு
விடுதலை பெறுவதற்காகவும் மக்களின் நல் வாழ்விற்காகவும் போராடுவதில்தான் வர்க்க
நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் அடங்கியிருக்கின்றது.
வேறுவிதமாக கூறினால் நமது வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க
நெறியும் ஏகாதிபத்தியத்தினதும் பெரு முதலாளிகளின் சர்வாதிகாரத்தை எதிர்த்து
அவர்களின் கூட்டு சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்துவிட்டு பாட்டாளி வர்க்கத்தின்
தலைமையிலான மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போரிடுவதில்தான்
அடங்கி இருக்கிறது.
நமது கட்சியின் அனைத்து வழிகளும் கொள்கைகளும் இந்த இலக்கை
அடைவதையே தனது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
எனவேதான் நமது கட்சியின் வர்க்க நிலைப்பாடும்
ஒழுக்க நெறியும் உண்மையிலே கட்சியின் வழியையும் கொள்கையையும் கட்சியின்
முன்வைக்கப்படும் கடமைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி
முடிப்பதற்கான போராடுவதில்தான் அடங்கி இருக்க வேண்டும்.ஒரு ஒரு அமைப்பில் பணியும் கடமைகளும் தெளிவாக
வகுக்கப்படவில்லை என்றாலோ, வேலை பிரிவினை முறையாக செயல்படவில்லை என்றாலோ வேலை முறையும்
பொறுப்புகளை வழங்குதலும் ஒன்றாக வரையறை செய்யப்படவில்லை என்றாலோ பல்வேறு
பகுதிகளுக்கு இடையில் உறவுகள் சரியாக இல்லை அவற்றுக்கிடையில் நல்லிணக்கமும் இல்லை
என்றாலோ அதில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு நபரும் செயலாற்றவராகவோ அல்லது திறமை
அற்றவராகவோ ஆகிவிடக் கூடும். ஏனெனில் அவ்அமைப்பு ஒரு பலவீனமான அமைப்பாக இருக்கின்றது .
நாம் அமைப்பு பணியை செம்மையாக செய்தால் ஒழிய,
அமைப்பை நன்றாக புரிந்து கொண்டு அதை உறுதியாக
கட்டுப்படுத்தினால் ஒழிய நம்மால் ஊழியர் பணியை செம்மையாக செய்ய முடியாது.ஊழியர் பணி அமைப்பு பணியோடு நெருக்கமாக இணைந்து
இருக்கின்றது மறுபுறம் ஒரு அமைப்பை எவ்வாறு நடத்த வேண்டும் எவ்வாறு கட்டுப்படுத்த
வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறும்போது ஒரு அமைப்பின் கட்டுமானம்
நிறுவனம் நபர்கள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதையும்
இயக்குவதையும் பற்றி மட்டுமே கூறவில்லை. அத்துடன் அவ்வமைப்பின் பணி கடமை வழி நோக்கம் மற்றும் அதன் வேலைமுறையாகியவற்றை
நாம் ஆழமாக உணர்ந்து இருக்க வேண்டும் தெளிவாக கிரகித்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இருக்கும் போது தான் ஊழியர் பணியை செம்மையாக செய்ய
முடியும். என்னென்ன பணிகளை நிறைவேற்றுவதற்கு எத்தனை
ஊழியர்கள் எந்த வகையான ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் என்ற வினாவிற்கு விடை காண்பது
ஊழியர்களைப் பற்றிய சரியான முடிவை அடைவதற்கு துவக்க புள்ளியாகும்.அமைப்பின் தேவைகளின் அடிப்படையில் ஊழியர்களை அமர்த்தும்
போது தான் நபர்களைப் பற்றி நாம் முழுமையாகவும் துல்லியமாகவும் புரிந்து கொள்ள
முடியும். அத்தகைய நபர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை (அளவுகோல்களை) சரியாக வகுக்க முடியும்.
என்ன வேலைகளை எத்தனை வேலைகளை அவர்கள் செய்ய வேண்டும்.
எதையெல்லாம் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
என்ன விதிமுறைகளை அவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
யாருக்கு அவர்கள் பொறுப்பாளி அவர்களுடைய
பொறுப்புகளும் அதிகாரங்களும்என்ன?.பிற ஊழியர்களுடன் அமைப்புகளுடன் அவர்களை எவ்வாறு
சம்பந்தப்பட்டிருக் கிறார்கள்? அவர்களை நியமிப்பதற்கும் விலக்குவதற்கும் உரிமை பெற்றவர்
யார்?. இன்னும் பிற இந்த விதிமுறைகளை நடைமுறையில்
பிரயோகிப்பதன் மூலமாகத்தான் நம்மால் ஒரு ஊழியரை கண்காணிக்கவும்
சோதிக்கவும் அவருடைய திறமைகளையும் தகுதிகளையும் ஒழுக்க நெறிகளையும் அறிந்து கொள்ள
முடியும்.
ஊழியர்களுக்கும் அரசியல் வழி மற்றும் கடமைகளுக்கும்
இடையிலும் ஊழியர்களுக் கும் அமைப்பிற்கும் இடையிலும் ஊழியர்களுக்கும் புரட்சிகர
வெகுஜன இயக்கத்திற்கும் இடையிலும் நிலவுகின்ற நெருங்கிய ஒரு இயக்கியல் ரீதியான
உறவுகளைப் புரிந்து கொண்டு தோழர் மாவோவினால் வகுத்து கொடுக்கப்பட்ட ஊழியர்
கொள்கையை நாம் குறிப்பாக நிலைமைகளுக்கு ஏற்றவாறு செயல்படுத்த வேண்டும் .
இன்னும் சில படிபினைக்காக:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர்களின் ஒருவராக தோழர்
முஜாபர் அகம்மது தனது நினைவாக சீன கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் போல் இந்தியாவின்
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு போதிய கோட்பாட்டு புரிதல் இல்லை என்பதுடன்,
ஜனநாயகப் புரட்சியில் தொழிலாளர் வர்க்க தலைமை,
சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவு,
தேசிய இனங்கள் பற்றிய புரிதல்,
சர்வதேசியத்திற்கும் தேசியத்திற்கும் உறவு,
முதலாளித்துவத்தின் பங்கு போன்றவைகளில் மிக
குறைவான மார்க்சியப் புரிதல் மட்டுமல்ல, மார்க்சியம் அல்லாத புரிதலும்,
இயங்கவியலுக்கு எதிரான புரிதலும் இருந்தன என்று
குறிப்பிடுகிறார்.
தோழர் ஸ்டாலின் இறப்புக்கும் 1952க்கும் தோழர் மாவோ மறைவுக்கும் 1975
க்கும் இடையிலான காலம் உலக நாடுகளில்
கம்யூனிஸ்ட் கட்சிகள் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமானது.
இந்த காலத்தில் நடந்த விவாதங்கள்,
திசை போக்குகள்,
வலது-இடது திரிபுகள் அனைத்தும் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிக்குள்பிரதிபலித்தன,பிரதிபலிக்கின்றன.
நக்சல்பாரி எழுச்சியின் பொழுது எழுந்த மக்கள் திரள் உடன்
இணைந்த வீர செறிந்த போராட்டங்கள் இ.க.க.(மா-லெ) கட்சியாக மாறிய பிறகு மக்கள் திரள் பாதையை விட்டு
அழித்தொழிப்பு பாதை ஒன்றை மட்டுமே தங்களது செயல் தந்திரமாக மாற்றியது.
சீனாவின் நீண்ட மக்கள் யுத்த பாதை என்னும் போர்
தந்திரம் இங்கு தனிநபர் அழித்தொழிப்பு பாதையாக இ.க.க.(மா-லெ) கட்சியின் தலைமை மாற்றி சுருக்கி சிதைத்து விட்டது.
இந்த பாரதூரமான தவறான திசைவழியில் சென்றதோடு
மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போய்விட்டது அதாவது இதன் விளைவாக நக்சல்பாரிகள்
தலைமையில் இருந்த தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், மக்கள் திரள் அமைப்புகள் தமிழ்நாட்டிலும்,
பிற மாநிலங்களிலும் கலைக்கப்பட்டன அல்லது
திருத்தல்வாத தலைமையை ஏற்க்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.
1971-72
க்குள் இந்திய அளவில் இ.க.க.(மா-லெ) கட்சியின் தலைமையும்,
தொண்டர்களும் பலர் ஆட்சியாளர்களால்
கொல்லப்பட்டு தியாகியானார்கள்.
தமிழ்நாட்டில் நிலப்பிரபுகளை அழித்தொழிப்பு பாதை முதன்மையான
தாக்கப்பட்டு சில அழித்தொழிப்பு நிகழ்வுகள் நடந்தன.
இதனை காரணமாக்கி அன்றைய கருணாநிதி ஆட்சி பெரும்
அடக்குமுறையை ஏவியது. கியு
பிரிவு என்ற சட்டவிரோத உளவு பிரிவை உருவாக்கியது.
இன்றுவரை ஈழப்போராளிகள்,
தமிழ்தேசிய அமைப்புகள்,
சிறுபான்மையினரை,
பல நேரங்களில் எதிர் கட்சிகளையும் கூட ஒடுக்க
கியு பிரிவு பயன்படுத்தப்படுகிறது. 70 களில் அடக்குமுறை அதிகமாகி பெரும் பின்னடைவை இ.க.க.(மா-லெ) கட்சி தமிழ்நாட்டிலும்,
இந்திய அளவிலும் சந்தித்தது.
குறிப்பு:-இந்தப்பகுதி
மாவோவின் தேர்ந்தெடுத்தப்பட்ட படைப்புகள் 2 மற்றும் சில இயக்க தோழர்களின் எழுத்துகளை
தொகுத்தன் அடிப்படையில்.இதிலிருந்து
நாம் கற்ற பாடம் எனக்கு தெரியவில்லை ஏனெனில் நான் கோட்பாட்டுவாதியாக பேசிக் கொண்டுள்ளமையால்.
இன்னும் தொடரும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment