புரட்சிகர சக்திகளையும் பிற்போக்கு சக்திகளையும் எவ்வாறு கணிப்பது

 புரட்சிகர சக்திகளையும் பிற்போக்கு சக்திகளையும் எவ்வாறு கணிப்பது

 மாவோவின் நூலின் சிலப்பகுதிகளை சிறிய நூல் வடிவில் கொண்டு வர நினைக்கிறேன் அந்த பிரசுரத்தின் முக்கிய பகுதி “புரட்சியின் சக்திகளையும் பிற்போக்கின் சக்திகளையும் எவ்வாறு கணிப்பீடு செய்வது” என்பது இன்னும் சீனாவிலும் அத்துடன் உலகம் முழுவதிலும் ஒரு பிரதான பிரச்சினையாகவே உள்ளது. பலரால் இதை ஒருபோதும் சரியாகச் செய்ய முடியவில்லை. ஏகாதிபத்தியமும் எல்லா நாடுகளிலும் உள்ள அதன் அடிவருடிகளும் மேற்கு வானில் அஸ்தமிக்கும் சூரியனைப் போன்றவர்கள், சோஷலிஸமும் அதன் ஆதரவைப் பெற்றவையான தேசிய புரட்சிகர இயக்கங்களும் கிழக்கு வானில் உதித்தெழும் சூரியனைப் போன்றவை. இதுவே எமது காலத்தின் குணாதிசயம், ஏகாதிபத்தியவாதிகள் எங்கு விரும்பினாலும் அட்டகாசம் செய்து திரியக்கூடியதாக இருந்த நாட்கள் என்றென்றைக்கும் போயே போய் விட்டன; (இவை மாவோ எழுதிய காலத்திய நிலைஅன்று வாலை சுருட்டிக் கொண்டிருந்த ஏகாதிபத்தியம் சோசலிச முகாம் எங்கும் இல்லை என்ற நிலையில் கொக்கரிக்கிறது இருந்தும் அதன் முடிவு நிச்சயம் என்பதனை புரிந்துக் கொள்வோம்) இன்று அவர்கள் தங்கள் கடைசி மூச்சை வாங்குகின்றனர். பிற்போக்காளர்களே புரட்சிகர சக்திகளுக்குப் பயப்பட வேண்டும், மறுபுறமாக அல்ல (ஆனால் ஏகாதிபத்தியங்கள் செய்யும் சூழ்ச்சி வலையில் சிக்குண்டுகிடக்கும் பல புரட்சியை நேசிப்போர் புரிந்துக் கொள்க). தற்போது இதைக் காண இன்னும் தவறுகின்றவர்கள், இன்னும் குருட்டுத்தனமான நம்பிக்கையையும் பிரமைகளையும் பாராட்டுபவர்கள், இன்னும் ஏகாதிபத்தியத்தை, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை, கண்டு கிலிகொண்டு நிற்பவர்கள், கணிசமானோர் இருக்கின்றனர். இவர்கள் இந்தப் பிரச்சினையின் முன்னிலையில் இன்னும் செயலற்று இருக்கின்றனர். பரந்த வெகுஜனங்கள் புரட் சிகர நம்பிக்கையும் உறுதியும், புரட்சிகர முன்னறிவிப்பு திடமும் பெறக்கூடியதாக எல்லா முற்போக்காளர்களும் எல்லா மாக்ஸிஸ்டுகளும் எல்லாப் புரட்சியாளர்களும் இந்த நபர்கள் மத்தியில் சிறிதளவு மனமாற்றும் பிரசாரம் செய்ய வேண்டும். இது புரட்சிகர இலட்சியத்தின் வெற்றிகரமானமுன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒரு ஆத்மீகத் தேவை.

 ஒரு பிரச்சினையைச் சிந்தித்துப் பார்க்கையில் ஒருவர் அதன் சாராம்சங்களைத் தெளிந்து கொள்ள வேண்டும், மேலெழுந்தவாரியான அம்சங்களால் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது எனத் தோழர் மாசே-துங் நமக்குப் பலமுறை கூறியுள்ளார். கடந்த முப்பது சொச்ச ஆண்டுகளாக(மாவோவின் அனுபவத்தை) தமது நாட்டிலான வர்க்கப் போராட்டத்தில் ஒவ்வொரு கேந்திரமான தருணத்திலும் தோழர் மா சே துங் மார்க்சிய லெனினிய விஞ்ஞானத்தின் அடிப்படையில் போராட்டத்தின் நிலைமை பற்றி ஆழமாக ஊடுவி ஆராய்ச்சியை செய்தும், பிற்போக்காளர்கள் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள், புரட்சிகர இலட்சியம் வென்றே தீரும் என்று காண்பித்தும் உள்ளார். அவர் சக்திமிக்கவையாகத் தென்படுகின்ற, ஆனால் உண்மையிற் பலவீனமானவையான ஏகாதிபத்தியத்தையும் பிற்போக்கு சக்திகளையும் வர்ணிக்கக் ''காகிதப் புலி" என்ற பதத்தை உபயோகிக்கிறார்; புதிதாக ஜனித்த சக்திகள் புரட்சியின் ஊடாக நாளுக்கு நாள் வளர்வதைக் குறிக்க "ஒரே ஒரு பொறி காட்டுத் தீயை உண்டுபண்ண முடியும்" என்ற முதுமொழியை உபயோகித்து, இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் தன் மூல- உபாயோகித்தத் திட்டங்களைத் தீட்டுகிறார். புரட்சியின் சக்திகள் தோற்கடிக்க முடியாதவை, பிற்போக்கு சக்திகளோ தற்காலிக மாகச் சக்திமிக்கவையாக இருப்பினும் வீழ்ச்சி அடைந்தே தீரும் என்ற தோழர் மாசே-துங்கின் கருத்து சீன கம்யூனிஸ்டுகளை ஆயுதபாணிகளாக்கியும்(கருத்தே கவனிக்க வேண்டியவை), சீன மக்களுக்குப் போதமூட்டியும் உணர்வூட்டியும், தங்களையும் தங்களது மகத்தான வெற்றிகளுக்கு இட்டுச் சென்றது. ''ஏகாதிபத் தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகள் என்ற தோழர் மாசே-துங்கின் அறிவு பொதிந்த இத் தத்துவம் ஏற்கனவே சீனப் புரட்சியின் வெற்றியால் நிரூ பிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து சோசலிசபுரட்சியால் முழு உலகிலும் புரட்சி இலட்சியத்தின் வெற்றிகரமான வளர்ச்சியால் நிரூபிக்கப்படும்.

 

உலக கலாச்சாரம் என்ற இருவார இதழின் ஆசிரியர் குழுவிற்கு தோழர் மாவோவின் கட்டுரைகளிலும் உரைகளிலும் கூற்றுகளிலுமிருந்து ''ஏகாதிபத்தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகளே'' என்ற விஷயத்தைப் பற்றியவையான பகுதி களைத் தொகுத்துப் பிரசுரித்துள்ளதுள்ள இந்தப் பகுதியை நான் இங்கே உங்கள் முன வைக்க முயற்சிக்கிறேன்.

இது அரசியல் முக்கியத்துவம் கொண்ட ஒரு காரியம். இது ஏகாதிபத்தியத்தின், விசேஷமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் எதிரான மக்களின் போராட்டத்திற்கு மிக மதிப்பு வாய்ந்தது. தொகுக்கப் பட்ட விஷயங்களை, சம்பந்தப்பட்ட சில முக்கிய விஷயங்களையும் சேர்த்து, நடையில் சில மாற்றங்களோடும் பத்திகளைப் சரிப்படுத்தியும், இங்கு பிரசுரிக்கிறோம்.

 

இந்த விஷயங்கள் மூன்று பகுதிகளாகப் பகுபடுகின்றன.

முதலாவது பகுதி, உழுத்துப்போன சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏகாதிபத்தியத்திற்கும் எல்லாப் பிற்போக்காளர்களுக்கும் வருங்காலம் இல்லை, அவற்றின் இன்றைய ஆவேசத்திற்கு அர்த்தம் அது அவற்றின் மரணத் தறுவாயிலான மூர்க்கத்தனமேயன்றி வேறல்ல என்பதே என்றகருத்துச் சம்பந்தமானது. இரண்டாவது பகுதி, ஏகாதிபத்தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் வெளித் தோற்றத்தில் பலமானவர்கள் ஆனால் உள்ளூறப் பலவீனமானவர்கள், அவர்களை மக்கள் துச்சம் செய்வதற்கு எல்லாக் காரணங்களும் உள்ளன, இருந்தும் அதே நேரத்தில் மக்கள் ஒவ்வொரு குறிப்பான போராட்டத்திலும் அவர்களைப் பூரணமாகக் கணக்கில் எடுக்க வேண்டும் எனச் சுட்டிக் காட்டுகிறது.

மூன்றாவது பகுதி, கீழைக் காற்று மேலைக்காற்றை மிஞ்சி வீசுகின்ற, அல்லது வேறு வார்த்தைகளிற் கூறினால், சோஷலிஸ சக்திகள் ஏகாதிபத்தியவாத சக்திகளை மிஞ்சிவிட்ட, தற்போதைய சர்வதேச நிலைமையின் சாராம்சமான தன்மைகளை வர்ணிக்கிறது.

இங்கு இந்தபபகுதி மாவோவின் தொகுப்பின் அடிவொற்றியே பிரசுரிக்கப்படுகின்றன என்ற போதிலும், இவை புதிய  புரட்சிகர சக்திகள் பலமிழந்தும் மிகைமதிப்பிட்டால் மக்களிடம் செல்லாமல் ஏகாதிபத்தியம் தோற்றி வைக்கும் எல்லா முரண்பாடுகள் முன் செயலற்று கிடக்கின்றனர். இதற்குக் காரணங்கள் ஒருபுறம் ஏகாதி பத்தியத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும் மறுபுறம் எல்லா நாடுகளினதும் மக்களுக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடு இன்னும் தீர்க்கப்படாததும், அமெரிக்க ஏகா திபத்தியம் தன் ஆக்கிரமிப்புத் தன்மை முழுவதையும் காட்டுகின்றமையாலும் உலக சமாதானத்தை அணு யுத்தத்தால் அச்சுறுத்துகின்றமையாலும் ஒடுக்கப்பட்ட, அச் சுறுத்தப்படுகின்ற மக்கள் - இந்த நெருக்கடியான நிலைமையால் முழுக் கவனமும் ஈர்க்கப்பட்டவர்களாய் - அந்த முரண்பாட்டின் தீர்வை அவசரமாகக் கோருவதுமாகும். ஆகவேதான் வாசகர்கள், இயற்கையாகவே, இந்த முரண் பாட்டின் தீர்வுக்குச் சம்பந்தமுடைய பல்வேறுபட்ட பிரச்சினைகளில் முதன்மையானதும் பிரதானமானதும் ஆகிய பிரச்சினையான, ஏகாதிபத்தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகளா? இல்லையா? என்ற, இந்தப் பிரச்சினை பற்றிய தோழர் மா சே-துங்கின் விளக்கத்தில் அக்கறை கொண்டுள்ளனர்.

 

1940, ஜனவரியில் பிரசுரிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டுரையான புதிய ஜனநாயகம் பற்றி என்ற கட்டுரையிற் தோழர் மா சே-துங் முதலாளித்துவம் அழுகுவதும் சாவதுமான கட்டத்தை அடைந்திருக்கையில் கம்யூனிஸமோ ' 'பெருவெள்ளத்தின் வேகத்தோடும் இடியுடன் வலிமையோடும் உலகெங்கும் பரவி வருகுகிறது'' எனச் சுட்டிக் காட்டினார்: கம்யூனிஸம் ஒரே முழுமையான தொழிலாளி வர்க்கத் தத்துவார்த்த அமைப்பும் ஒரு புதிய சமூக அமைப்புமாகும். அது மற்றெந்தத் தத்துவார்த்தத்தையும் அல்லது சமூக அமைப்பையும் விட வேறுபட்டதும், மானுட வரலாற்றிலேயே மிகப் முழுமையானதும் முற்போக்கானதும் புரட்சிகரமானதும் பகுத்தறிவு ரீதியானதுமான அமைப்புமாகும். நிலப்பிரபுத்துவத்தின் (சமூக) தத்துவம் இன்றைய சமூக அமைப்பில் அதற்கான இடம் பொருட்காட்சிச்சாலையில்தான் இடமிருக்கிறது.(நமது நாட்டில் நிலப்பிரப்புதுவத்தின் சில கூறுகள் இன்னும் உயிருடன் இருபதற்கு காரணம் இங்குள்ள ஆட்சியாளர்கள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக அவர்களின் கழுத்தை நெறித்துக் கொண்டுள்ளனர் அதனை முறியடிக்காமல் இவை நடந்தேறாதூதான் எனலாம்) முதலாளித்துவத்தின் தத்துவார்த்த  சமூக அமைப்பும் உலகின் ஒரு பகுதியில் (சோவியத் யூனியனில்) ஒரு பொருட்காட்சிச்சாலைப் பொருளாக ஆகிவிட்டது; மற்ற நாடுகளிலோ அது 'மேற்கில் அஸ்தமிக்கும் சூரியனைப் போல் விரைவாக அமிழ்கின்ற சாகும் மனிதனை ஒத்திருக்கிறது. விரைவில் பொருட்காட்சிச்சாலைக்கு அனுப்பட்டுவிடும்.

கம்யூனிஸ தத்துவ சமூக அமைப்பு ஒன்றே உயிரோட்டமாகவும் இளமையோடும் உள்ளது, பெருவெள்ளத்தின் வேகத்தோடும் இடிமின்னலின் வலிமையோடும் உலகில் பெருகி பரவுகிறது என்கிறார் மாவோ.

புதிய ஜனநாயகம் பற்றி என்ற கட்டுரையிற் தோழர் மா சேதுங் மேலும், அழிந்துப் போகும் சக்திகளை பிரதிநிதித்துவம் செய்பவர்களான எல்லாப் பிற்போக்காளர் களினதும் கட்டுபாடற்ற பலாத்காரத்தின் அர்த்தம் அது அவர்களின் மரணத் தறுவாயிலான மூர்க்கத்தனம் என்பதே என்றும் சுட்டிக் காட்டினார்:

உள் நாட்டிலாயினும் வெளிநாட்டாயினும் எல்லா இருண்ட சக்திகளினதும் கட்டுபாடற்ற பலாத்காரம் நமது நாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துக் கொண்டுள்ளது : ஆனால் இருண்ட சக்திகளுக்கு இன்னும் சிறிது பலம் எஞ்சி யிருப்பினும் அவை ஏற்கனவே தங்கள் மரண அவஸ்தையில் உள்ளன என்றும் மக்கள் சிறிது சிறிதாக வெற்றியை நெருங்கி வருகின்றனர் என்றும் இந்தப் பலாத்காரமே காண்பிக்கிறது. இது சீனாவிற்கும், கீழைத்தேசங்கள் முழுமைக்கும், முழு உலகிற்கும் பொருந்துவது ஆகும்.

தொடரும்...

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்