தாராளியத்தை முறியடிப்போம்.- மாவோ.
நாம் செயலூக்கமான கருத்தியல் போராட்டத்திற்காக நிற்கிறோம். ஏனெனில் அது நமதுபோராட்டத்தில் கட்சிக்குள்ளும் புரட்சிகர அமைப்புகளுக்குள்ளும் ஐக்கியத்தை உத்திரவாதப்படுத்துவதற்கான ஆயுதம் ஆகும்.ஒவ்வொரு கம்யூனிஸ்டும் புரட்சியாளரும் இந்த ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும்.
ஆனால்,தாராளியம் (liberalism)கருத்தியல் போராட்டத்தை நிராகரித்து கொள்கையற்றசமாதானத்திற்கு நின்று கட்சியிலும் புரட்சிகர அமைப்புகளிலும் உள்ள சில அலகுகளிலும் தனிநபர்களிடையேயும் அழுகிய,பண்பற்ற கண்ணோட்டத்தை தோற்றுவித்து அரசியல் சீரழிவை கொண்டு வருகிறது.
தாராளியம் பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது.
ஒரு நபர் தெளிவாக தவறாக இருக்கிறபோது அவர் நன்கு பரிச்சமானவர், சக நகரவாசி,பள்ளித் தோழர், நெருக்கமான நண்பர், நேசிக்கப்படுபவர், பழைய சகா அல்லது பழையகீழ்பணியாளர் என்பதால் மன அமைதிக்காகவும் நட்பிற்காகவும் விஷயங்களை நழுவவிடுதலும் கொள்கைரீதியாக வாதிடுவதிலிருந்து தவிர்த்தலும் ஆகும். அல்லது நல்ல உறவுகளைதக்கவைப்பதற்காக,விஷயத்திற்குள் முழுமையாக செல்வதற்குப் பதிலாகமேலோட்டமாக அதை தொடுதலே ஆகும் விளைவு அமைப்பு பாதிக்கப்படுகின்றது மற்றும்தனிநபர் பாதிக்கப்படுகின்றார். இது தாராளியத்தின் ஒரு வகை.
ஒருவர் அமைப்பிற்கு பரிந்துரைகளை செயலூக்கமாக முன்வைப்பதற்கு பதிலாக பொறுப்பற்றவிமர்சனத்தில் தனியே ஈடுபடுதல்;முகத்திற்கு நேராக எதுவும் பேசாமல் முதுகுகளுக்குப்பின்புறம் பேசுதல் அல்லது கூட்டத்தில் எதுவும் பேசாமல் பிற்பாடு புறம் பேசுதல்;கூட்டுவாழ்க்கை கொள்கை நெறிகளுக்கு மதிப்பினைக் காட்டாமல் ஒருவரின் சொந்த விருப்பத்தை கடைபிடித்தல்;இது இரண்டாவது வகை. விஷயங்கள் தனிப்பட்டரீதியாக பாதிக்காமல் இருந்தால் அவற்றை அனுமதித்தல்;என்ன தவறு என்று நன்றாக அறிந்திருக்கையில் சாத்தியமான அளவிற்கு குறைவாகப் பேசுதல்;பழி சுமத்துதலை தவிர்க்க மட்டுமே சொல்லளவில் இருந்துகொண்டு தீங்குறாதவாறு செய்ய விரும்புதல். இது மூன்றாவது வகை.
உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல் ஒருவர் தன் சொந்த கருத்துக்களுக்கு பெருமையினைஅளித்தல்.அமைப்பிலிருந்து சிறப்பு கவனிப்பை கோரி அதன் கட்டுப்பாட்டை நிராகரித்தல்.இது நான்காம் வகை. ஐக்கியம் அல்லது முன்னேற்றத்திற்காக அல்லது பணியினை முறையாக செய்யவைப்பதற்காக சரியற்ற கருத்துக்களுக்கு எதிராக வாதத்தில் நுழைந்து போராடுவதற்குப் பதிலாக தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட்டு சச்சரவுகளை மேற்கொண்டு தனிநபர் வன்மத்தை வெளியிடுதல் அல்லது பழிவாங்க முனைதல். இது ஐந்தாம் வகை.
சரியற்ற கருத்துக்களை மறுக்காமல் கேட்டல் மற்றும் எதிர் புரட்சிகர விமர்சனங்களை கட்சிக்கு தெரிவிக்காமலும் கூட கேட்டல்.ஆனால்,அதற்கு பதிலாக எதுவுமே நடைபெறாமல்இருந்தாற்போன்று அவற்றை அமைதியாக எடுத்துக்கொள்ளல்.இது ஆறாவது வகை. மக்கள் திரள்களிடையே இருந்து அவர்களிடையே பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி நடத்த அல்லது கூட்டங்களில் பேச அல்லது அவர்களிடையே ஆய்வுகளையும் விசாரணைகளையும் நடத்த தவறி அதற்குப் பதிலாக, கம்யூனிஸ்ட் என்பதை மறந்து அவர்களிடம் அலட்சியமாக இருந்து அவர்களின் நலத்தில் அக்கறை எதையும் காட்டாமல் சாதாரண கம்யூனிஸ்டு அல்லாத சாதாரணமானவராக நடந்துகொள்ளுதல். இது ஏழாவது வகை.
யாராவது மக்கள் திரள்களின் நலன்களுக்குத் தீங்கு செய்வதை பார்த்துக்கொண்டு ஆனால் கோபமாக உணராமை அல்லது அவரை செய்யவிடாமல் அல்லது நிறுத்தாமல் அல்லது அவரைத் தொடர அனுமதித்தல். இது எட்டாவது வகை.
திட்டவட்டமான திட்டமோ திசையோ இன்றி அரை மனதுடன் வேலை செய்தல்; “துறவியாக இருக்கும் வரை மணியடித்தல்” என்பதைப் போன்று கடமைக்காக (கடனுக்காக) வேலை செய்து தெளிவான நோக்கமோ திட்டமோ இன்றி செய்தல். இது ஒன்பதாம் வகை.
புரட்சிக்குப் பெரும் சேவை ஆற்றுவதைப் போன்று தன்னைக் கருதிக் கொள்ளுதல், நீடித்த அனுபமுடையவராக இருத்தல் குறித்து தற்பெருமை கொள்ளல், பெரிய கடமைகளுக்கு பொருத்தமில்லாமல் இருக்கும்பொழுது சிறு பணிகளை ஒப்படைத்தாலும் கூடஅதில் கவனம் செலுத்தாமை.பணியில் கவனமில்லாது இருத்தல் மற்றும் படிப்பில் தளர்வாக இருத்தல். இது பத்தாம் வகை.
சொந்தத் தவறுகளை அறிந்தே இருத்தல் மற்றும் அவற்றை சரிசெய்ய முயற்சி எதையும் மேற்கொள்ளாமல் தன்னை நோக்கி தாராள கண்ணோட்டத்தை மேற்கொள்ளல். இது பதினோராம் வகை.நாம் அதிகமானவற்றை குறிப்பிட இயலும். ஆனால் இப்பதினொன்றும் முதன்மையானவகைகளாக உள்ளன.
இவை அனைத்தும் தாராளியத்தின் வெளிப்பாடுகள்.
புரட்சிகர கூட்டுச் செயற்பாட்டில் தாராளியம் தீவிரமாக தீங்கானது. அது அரிக்கக் கூடியது.
அது ஐக்கியத்தை சாப்பிடுகிறது; ஒன்றியிருத்தலை (ஒற்றுமையாக இருத்தலை) குழிதோண்டி புதைக்கிறது. பற்றின்மையை ஏற்படுத்துகிறது. அதிருப்தியை உருவாக்குகிறது. அது உறுதியான அமைப்பின் புரட்சிகர அணிகளையும் கறார் கட்டுப்பாட்டையும் பறித்தெடுத்து கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதிலிருந்து தடுத்து மக்கள் திரள்களை வழிநடத்துவதிலிருந்து கட்சி அமைப்புகளை அன்னியமாக்குகிறது. இது தீவிரமான தீயமனப்பாங்கு.
தாராளியம் குட்டி முதலாளிய தன்னலத்திலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவதாகவும் புரட்சியின் நலன்களை இரண்டாவதாகவும் வைக்கிறது. இது கருத்தியல்ரீதியிலான(தத்துவரீதியான)அரசியல்ரீதியிலான மற்றும் அமைப்பு ரீதியிலான தாராளியத்தை தோற்றுவிக்கிறது.
தாராளியவாதிகள் மார்க்சியக் கொள்கைகளை அரூவமான வரட்டுச் சூத்திரமாகப் பார்ப்பார்கள். அவர்கள் மார்க்சியத்தை அங்கீகரிப்பார்கள்; ஆனால்,அதை நடைமுறைப்படுத்தவோ முழுமையாக நடைமுறைப்படுத்தவோ தயாரில்லாமல் இருப்பார்கள்; அவர்கள் தாராளியத்தின் இடத்தில் மார்க்சியத்தை வைக்கத் தயாரில்லாமல் இருப்பார்கள்; அவர்கள் மார்க்சியத்தையும் கொண்டிருப்பர்;ஆனால்,அதே சமயத்தில் தங்களது தாராளியத்தையும் கொண்டிருப்பார்கள் - அவர்கள் மார்க்சியத்தைப் பேசி தாராளியத்தை நடைமுறைப் படுத்துவார்கள்; அவர்கள் பிறருக்கு மார்க்சியத்தையும் தங்களுக்கு தாராளியத்தையும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இருவகைப்பட்ட சரக்குகளைக்கொண்டிருந்து அதன் ஒவ்வொன்றையும் பயன்படுத்துவார்கள். சிலரின் மனங்கள் எவ்வாறு வேலை செய்கின்றது என்பது இதுவே.
தாராளியம் வாய்ப்பியத்தின் அதாவது சந்தரப்பவாதத்தின் (Opportunism) வெளிப்பாடாகஇருப்பதுடன்மார்க்சியத்தோடு அடிப்படையில் முரண்படுகிறது. அது எதிர்மறையானதுடன்புறவயமாக எதிரிக்கு உதவக் கூடிய பாதிப்பைக் கொண்டிருக்கிறது; அதனால்தான் நம்மத்தியிலே அதன் இருத்தலை எதிரி வரவேற்கிறான். அதன் இயல்பு (nature) இத்தகையதாக இருக்கையில் புரட்சிகர அணிகளிடையே அதற்கு இடம் இருந்திடக்கூடாது அதாவது அதற்கு நாம் இடம்தரக்கூடாது.எதிர்மறையான தாராளியத்தை வெல்ல மெய்க்கருத்தில் (தத்துவம்) நேர்மறையாக உள்ள அதாவது உண்மையாக உள்ள மார்க்சியத்தை நாம் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.
ஒரு கம்யூனிஸ்ட் பரந்த மனத்தினை கொண்டிருக்க வேண்டும். அவர் உறுதியாகவும்செயலூக்கத்துடன் இருந்திட வேண்டும். அவர் புரட்சியின் நலன்களை தன் வாழ்க்கையாகவேபார்த்து தன் தனிநபர் நலன்களை புரட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படுத்த வேண்டும்.அவர்கட்சியின் கூட்டு வாழ்க்கையினை திடப்படுத்தவும் கட்சிக்கும் மக்கள் திரளுக்கும்இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்தவும் எப்பொழுதும் எங்கேயும் சரியற்ற அனைத்துக்கருத்துக்களுக்கும் செயல்களுக்கும் எதிராக கொள்கையை பற்றிப்பிடித்து ஓய்வற்ற போராட்டத்தை தொடுக்க வேண்டும்;அவர் எந்தவொரு தனிநபரையும்விடவும் கட்சி மற்றும் மக்கள் திரள்களைப் பற்றியும் தன்னைவிட பிறரைப் பற்றியும் அதிகம் கவலைப்பட்டிடவேண்டும்.இவ்வாறு இருத்தல் மட்டுமே அவரை கம்யூனிஸ்டாகக் கருதப்பட இயலும்.விசுவாசமான,நேர்மையானசெயலூக்கமான மற்றும் நிமிர் நேர்வான அதாவது உண்மையான கம்யூனிஸ்டுகள் அனைவரும் நம்மிடையே சிலரால் காட்டப்படுகின்ற தாராளமனப்பாங்குகளை எதிர்க்கவும் அவர்களை சரியான பாதையில் தெளிவுபடுத்தவும் கட்டாயம் ஐக்கியமாக வேண்டும்.இது நம் கருத்தியல்ரீதியான அரங்கு பற்றிய கடமைகளில் ஒன்று.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
1. மார்க்சிய லெனினியவாதிகளான கம்யூனிஸ்டுகள் எதையும் புனிதமானதாகப்பார்ப்பதில்லை. ஆகவே எந்தவொரு தனி மனிதர்களையும் புனிதமானவர்களாகப்பார்ப்பதில்லை. எந்தவொரு மனிதரும் தவறு செய்யக்கூடியவர்கள் என்றே மார்க்சியம்பார்க்கிறது. ஆனால் தான் செய்யும் தவறுகளை உணர்ந்து அந்தத் தவறுகளை களைந்துகொள்பவர்களை சிறந்த மனிதராகவும்,அவ்வாறு தனது தவறுகளை களைந்திட மறுக்கும் மனிதர்களை தவறான மனிதர்களாகவும் மார்க்சியம் பார்க்கிறது.இதன் அடிப்படையில் கம்யூனிஸ்டுக் கட்சியையும் மார்க்சியம் புனிதமானததாகப் பார்க்கவில்லை.
கம்யூனிஸ்டுக் கட்சியும் தவறு செய்யும் என்றே மார்க்சியம் பார்க்கிறது. ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சியானது தனது தவறகளைஎந்தஅளவுக்குகளைந்துகொண்டு புதிய கொள்கை மற்றும்நடைமுறையை வகுத்துக்கொண்டு செயல்படுகிறதோ அந்த அளவுக்கு கட்சியானது தனதுலட்சியத்தை நோக்கி முன்னேறும் என்றும் தனது தவறுகளை களைய மறுக்கும் கட்சியானதுதனது லட்சியத்தை அடைவதற்கு மாறாக தோல்வியடைந்து மக்களின் நம்பிக்கையைஇழக்கும் என்றுமார்க்சியம் போதிக்கிறது.இந்த கண்ணோட்டத்திலிருந்து தாராளியம் என்றதவறான கண்ணோட்டம் மற்றும் செயல்பாடானது கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் உழைக்கும்மக்களுக்கும் பல்வேறு வகையான தீங்குகளை உண்டாக்கும் என்று மாவோ தாராளியத்தை முறியடிப்போம் என்ற கட்டுரையில் விளக்குகிறார். நம்மில் பலர் கம்யூனிஸ்டுக் கட்சியில்சேர்ந்து செயல்படுபவர்களையும், கம்யூனிஸ்டுக் கட்சியையும் புனிதமானதாகவும் அப்பழுக்கற்றதாகவும் பார்க்கிறார்கள். அந்தப் பார்வை தவறானது என்பதை மாவோ இந்தக் கட்டுரையில் விளக்குகிறார். மேலும் 11 வகையான தாராளியத் தவறுகளை இந்தக்கட்டுரையில் மாவோ சுட்டிக்காட்டுகிறார். (மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 2ல் பக்கம் 36ல் இக்கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது) இந்தக் கட்டுரையை கம்யூனிசத்தைவிரும்பும் ஒவ்வொரு தோழரும் படித்து நாம் செய்யக்கூடிய தவறுகளைப் புரிந்து கொண்டு, அந்தத் தவறுகளை நாம் செய்யாமல் தவிர்க்க வேண்டும். மேலும் இந்தத் தவறுகளுக்கு மாற்றாக நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து நமது செயல்பாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். 2. கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் கருத்தியல்ரீதியிலான சித்தாந்தப் போராட்டம் நடத்தப்படுவது அவசியமாகும்.அதன் மூலம் மட்டுமே கட்சிக்குள்ளும் புரட்சிகர அமைப்புகளுக் குள்ளும் ஐக்கியம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.ஒவ்வொரு புரட்சிகர கம்யூனிஸ்டுகளும் சித்தாந்தப் போராட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து போராட்டத்தை நடத்துவதன் மூலம் கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலும் கம்யூனிச அமைப்புகளுக்கு இடையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
3.தாராளியம் நமக்குள் நடத்தப்படும் கருத்தியல் சித்தாந்தப் போராட்டத்தை நிராகரிக்கிறது.இதற்கு மாறாக நமக்குள் கொள்கையற்ற சமாதானம் ஏற்பட வழிவகுக்கிறது. அதன் மூலம் நம்மை மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கொள்கையற்ற நபர்களாக மாறுவதற்கு காரணமாக இருக்கிறது.ஆகவே நம்மிடத்திலுள்ள இந்த தாராளிய சிந்தனை மற்றும் நடைமுறையை கைவிடுவதற்கு எப்போதும் நாம் முயற்சி செய்திட வேண்டும்.
4.ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் செயல்படும் ஒரு தோழர் அல்லது அந்த அமைப்பின் தலைவர் தவறான கருத்துக்கொண்டவராக இருந்துகொண்டு அந்த தவறான கருத்துக்களை அமைப்பிற்குள் கொண்டுவந்து அதனை அமைப்பிலுள்ள தோழர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினால் அவர் கட்சியின் தலைவராக இருக்கிறார் என்பதற்காகவும் மிகவும் சிறந்த தோழராக இருக்கிறார் என்பதற்காகவோ அவரால் முன்வைக்கப் படும் தவறான கருத்தை எதிர்த்துப் போராடாமல் இருப்பது தாராளவாதத் தவறாகும். அந்தத் தவறான கருத்தை எதிர்த்துப் போராடினால் தலைவரை பகைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதனால் கட்சியானது சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்று கருதி தவறான கருத்தை எதிர்த்துப் போராடத்தவறினால் அந்த தவறான கருத்தை செயல்படுத்தி கட்சியானது தோல்வியைச் சந்திக்கும். இத்தகைய தாராளியத்தை கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் பின்பற்றக் கூடாது. மாறாக கட்சியின் தலைவராக இருந்தாலும்,தலைவரது கருத்து தவறாக இருந்தால் அதனை எதிர்த்துப் போராட வேண்டியது ஒரு கம்யூனிஸ்டின் கடமையாகும்.ஆனால் இந்தியாவிலுள்ள கம்யூனிச அமைப்பிற்குள் உள்ள தலைவரை ஒரு தோழர் விமர்சித்துவிட்டால் அந்தத் தோழர் கட்சியையே விமர்சித்து விட்டதாகவும் கட்சியை உடைக்க முயற்சிப்பதாகவும் கட்சியிலுள்ள தோழர்களை தூண்டிவிட்டு தலைவரை விமர்சித்த தோழர் மீது அவதூறு செய்வதை நாம் காணலாம்.இது தாராளவாதத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக தாராளவாதத்தை ஆதரிக்கும் செயலாகும்.இதன் காரணமாக தோழர்கள் தலைவரின் மீதும் கட்சியின் மீதும் நம்பிக்கை இழந்து கட்சியைவிட்டு வெளியேறுகிறார்கள்.கட்சியும் பிளவுபடுகிறது.ஆகவே ஒரு கம்யூனிஸ்டு உறுப்பினர் அந்த கட்சியின் தலைவர்களையும் விமர்சிக்கத் தயங்கக் கூடாது.
5.ஒரு கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் அமைப்பிற்கு செயலூக்கமுள்ள பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும். அதற்கு மாறாக பொறுப்பற்ற அற்பமான விசயங்களை விமர்சனமாக வைக்கக் கூடாது. எந்தப் பிரச்சனையையும் வெளிப்படையாக முகத்திற்கு நேராகவே வைக்கவேண்டும். அதற்கு மாறாக புறம் பேசுதல் கூடாது. இவ்வாறு பொறுப்பற்ற அற்பத்தனமான விமர்சனங்களை வைப்பதும், அமைப்பிற்குள் பேசாமல் புறம் பேசுவதும் தாராளியமாகும்என்றார் மாவோ. உதாரணமாக ஒரு அமைப்பிற்குள் ஒருவர் செயலூக்கமுள்ள பரிந்துரைகளை முன்வைத்தார். ஆனால் கட்சித் தலைமையானது அவரது பரிந்துரைகளை பரிசீலிக்காமல் அந்தப் பரிந்துரைகளை எல்லாம் தலைமையின் மீதும் கட்சியின் மீதும் வைத்த குற்றச்சாட்டாகக் கருதி பரிந்துரை செய்த தோழர்,ஒரு NGOஎன்றும் அமைப்பிற்குள் ஊடுருவி அமைப்பை உடைக்க முயற்சிக்கும் துரோகி என்றும் அவர் மீது அவதூறு பிரச்சாரம் செய்தது. அந்த தோழரை ஆதரித்த மற்ற தோழர்களையும் புறக்கணித்துவிட்டு ரகசியமாகக் கூடி புதியதலைமை அமைப்பை உருவாக்கி அமைப்பை பிளவுபடுத்தியது. ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் கட்சிக்கும் செயலூக்கமான பரிந்துரைகளை கொடுக்கவும் அற்பமானபிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்களை முன்வைப்பதை தவிர்க்கவும் முயற்சி செய்ய வேண்டும்.மேலும் செயலூக்கமுள்ள பரிந்துரைகளை முன்வைப்பவர்களை கட்சிக்கு எதிரானவர்கள் என்று தவறாக கருதாமல் அந்தப் பரிந்துரைகளை விமர்சனப் பூர்வமாக விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.அதோடு கூடவே இத்தகைய செயலூக்கமுள்ள பரிந்துரை வைக்கும் தோழர்களை பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.
6.ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் செயல்படும் உறுப்பினர் அவருக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படாத பிரச்சனையில் மட்டும் கவனம் செலுத்துதல். அவருக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு கொடுக்கக் கூடிய பிரச்சனையை தவிர்த்தல் என்பது தாராளியமாகும்.ஒன்றை தவறு என்று உறுதியாகத் தெரிந்திருந்தாலும் அது பற்றி பேசுவதை தவிர்த்தல் அல்லது குறைவாக பேசுவதும் தாராளியமாகும்.ஒருவரைப் பற்றி விமர்சித்தால் அவர் மீது பழி சொல்வது போலாகும் என்று கருதி பிரச்சனை ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று தவறுகளை விமர்சிக்காமல் பூசி மொழுகுதலும் தாராளியமாகும். ஆகவே ஒரு கம்யூனிஸ்டு இத்தகைய தாராளியத் தவறுகளை தவித்துவிட்டு தனக்கு ஒரு தனிப்பட்டபாதிப்பு ஏற்படும் என்றாலும் மக்களின் நலன்களை முன்நிறுத்தி செயல்பட வேண்டும். ஒரு விசயம் தவறு என்று உறுதியாகத் தெரிந்தால் அந்தத் தவறை எதிர்த்து உறுதியாக விடாப்பிடியாகப் போராட வேண்டும்.தவறு செய்யும் தோழரின் தவறை சுட்டிக்காட்டிப் போராடுவதை அவர் மீது பழிபோடுவதாகக் கருதக் கூடாது மாறாக தவறு செய்யும் தோழரை திருத்துவதற்கான முயற்சியாகவே கருத வேண்டும்.
7.ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைமையின் உத்தரவுக்கு கீழ்படியாமல் தனது சொந்தக் கருத்தின் அடிப்படையில் செயல்படுவதும் தனது சொந்த கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம்கொடுப்பதும்,தனது சொந்தக் கருத்துதான் சரியானது என்று அதனை கட்சி அல்லது கட்சியிலுள்ள தோழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் தாராளியமாகும்.இத்தகையதாராளியவாதிகள் எப்போதும் கட்சி அமைப்பின் பெரும்பான்மையினர் எடுத்தமுடிவுகளுக்கு கட்டுப்படாமல் தனது சொந்த கருத்தை செயல்படுத்துவதற்கு முயலுவார்கள்.
மேலும் தனது சொந்தக் கருத்தை ஆதரித்து செயல்படுத்துவதற்கு கட்சிக்குள் கோஷ்டியை உருவாக்குவார்கள். அதன் காரணமாக கட்சி பிளவுபட்டு தோழர்களுக்கு இடையிலான ஒற்றுமை குழைந்துவிடும். ஆகவே இது போன்ற கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சொந்தக் கருத்தை செயல்படுத்தும் காரியத்தை ஒரு கம்யூனிஸ்ட் ஒருபோதும் செய்யக் கூடாது.
ஏனென்றால் கட்சியின் கட்டுப்பாடு என்பது கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையினரது கருத்தாகும். இதற்கு மாறாக ஒரு கம்யூனிஸ்டு, கட்சி எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். சொந்தமான மாற்றுக் கருத்தை கட்சிக்குள் முன்வைத்து அந்தக் கருத்தை பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்வதற்காகப் பாடுபட வேண்டும்.மாறாக ஒருபோதும் கோஷ்டி சேர்த்து கட்சியை பிளவுபடுத்தும் துரோகச் செயலில் ஈடுபடக் கூடாது.மேலும் அவ்வாறு கோஷ்டி உருவாக்குவதை எதிர்த்துப் போராட வேண்டும்.
8.ஒரு கம்யூனிஸ்டு எப்போதும் கட்சிக்குள் செயல்படும் தோழர்கள் மத்தியில் ஐக்கியத்திற்காகப் பாடுபட வேண்டும்.இத்தகைய ஐக்கியத்திற்கு எதிரான கருத்துக்களையும் செயல்முறையையும் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதை எதிர்த்துப் போராடாமல் தனது சொந்த நலத்தை முன்நிறுத்தி கட்சிக்குள் சரியாக செயல்படும் தோழர்களை எதிர்த்து தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதும் தாராளியமாகும். இத்தகைய தாராளிய முறையை ஒரு சரியான கம்யூனிஸ்டு ஒருபோதும் செய்யக் கூடாது. மாறாக கட்சிக்குள் உருவாகும் தவறான கருத்துக்களுக்கு எதிராக மார்க்சிய லெனினிய ஆசான்களின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு கருத்தியல் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி தவறான கருத்தை முறியடிக்க வேண்டும்.இதற்குமாறாக தனிநபர் தாக்குதலில் ஒருபோதும் ஈடுபடக் கூடாதது மட்டுமல்லாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுபவர்களை எதிர்த்தும் போராட வேண்டும்.
9.ஒரு கம்யூனிஸ்ட், தவறான கருத்துக்களையும், புரட்சிக்கு எதிரான மக்களின் நலன்களுக்கு எதிரான கருத்துக்களையும் சிலர் பிரச்சாரம் செய்வதையும் அவர்களின் நடைமுறையையும் கண்டுகொள்ளாமல்,எதிர்த்துப் போராடாமல் அமைதியாக இருப்பதும்,இத்தகையதுரோகத்தனமான எதிர்ப்புரட்சிகரக் கருத்துக்களை கட்சிக்கு தெரிவிக்காமலும் மக்களுக்குதெரிவித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டாமல் இருப்பதும் தாராளியமாகும். இதற்கு மாறாக எதிர்பபுரட்சிகர துரோகக் கருத்துக்களை எதிர்த்து கட்சி அணிகளிடமும் உழைக்கும் மக்களிடமும் அம்பலப்படுத்தும்பணியை கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
10.ஒரு கம்யூனிஸ்ட் மக்களிடையே ஐக்கியப்பட்டு அவர்களிடையே பிரச்சாரம் செய்வதுமக்களின் வாழ்நிலை மற்றும் உணர்வுகளை ஆய்வுசெய்து புரிந்துகொள்ளத் தவறுவது,மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாமல் மக்களை அலட்சியமாக நடத்துவது போன்றவகையில் தனது நடைமுறையை வகுத்துக்கொள்வதும் தாராளிய வகையைச் சேர்ந்ததாகும்.
இத்தகைய தாராளியத் தவறுகளை களைந்து ஒரு கம்யூனிஸ்ட் உழைக்கும் மக்களை முதலில்நேசிக்க வேண்டும் அவர்களோடு ஐக்கியப்பட வேண்டும்,அவர்கள் வாழும் முறைகளையும் அவர்களது உணர்வுகளையும் அவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.அத்தகைய வழிமுறைகளின் மூலம் சமூகத்திலுள்ள வர்க்கங்களைப் பற்றி ஆய்வு செய்து சமூகப் புரட்சியை நடத்துவதற்கானதிட்டம்போர்த்தந்திரங்களை வகுக்க வேண்டும்.
11.ஒரு கம்யூனிஸ்ட்,யாராவது உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடும்போதோ அல்லது உழைக்கும் மக்களுக்கு தீங்கு செய்யும் போது கோபப்பட்டு தீயவர்களை எதிர்த்துப் போராடாமல் தீங்கு செய்பவர்களை தடுத்து நிறுத்தாமல் இருப்பதும் ஒரு வகையான தாராளியமே. இத்தகைய தாராளியத் தவறை செய்யாமல் யாராவது உழைக்கும் மக்களுக்கு எதிராக அவர்களை ஏமாற்றவோ தீங்கிழைக்கவோ முயற்சி செய்தால் அந்தத் தீயவர்களை எதிர்த்துப் போராடி அந்த தீயவர்களின் சதித் திட்டங்களை முறியடித்து உழைக்கும் மக்களை பாதுகாப்பது ஒரு கம்யூனிஸ்டின் கடமையாகும்.
12.திட்டவட்டமான திட்டமோ திசை வழியோ இல்லாமல் பெயரளவுக்கு கடனே என்று கட்சி மற்றும் அரசியல் வேலை செய்வதும் ஒரு வகையான தாராளியத் தவறே ஆகும். இத்தகைய தாராளியத் தவறை பல கம்யூனிஸ்டுத் தலைவர்களும் உறுப்பினர்களும் செய்வதை நாம் பார்க்கிறோம். இத்தகைய தாராளியத் தவறுகளை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் களைந்துகொண்டு, திட்டவட்டமான திட்டம் மற்றும் செயல்தந்திரங்களை வகுத்துக்கொண்டு உணர்வுப்பூர்வமாக உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி அணிதிரட்டி புரட்சி செய்பவரே உண்மையான கம்யூனிஸ்ட் ஆவார்.
13.ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் செயல்படும் சிலர் அவர்கள்தான் மிகப்பெரிய புரட்சியாளராகவும் சித்தாந்த வாதியாகவும் கருதிக்கொண்டு தன்னைப் பற்றியே மிகவும்பெருமையாக கருதிக் கொள்வதும், நீண்டகால அனுபவம் உடையவராகவும்மிகப்பெரிய கடமைகளை தன்னால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று தற்பெருமை கொண்டு ஒரு சாதாரணமான பணியையும் நிறைவேற்ற தகுதியில்லாவராக இருந்துகொண்டு மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்று தனது மார்க்சிய அறிவை வளர்த்துக்கொள்ளாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று மமதையுடன் இருப்பதும் ஒரு தாராளியத் தவறே ஆகும். இத்தகைய
தற்பெருமை கொண்டு திரியும் தாராளியத் தவறுகளை இடதுசாரி அமைப்புகளிலுள்ள பலதோழர்களிடம் நாம் காணலாம்.ஒரு கம்யூனிச அமைப்புக்குள் சேர்ந்துவிட்டாலே பலருக்குதான் ஒரு பெரிய அறிவாளி என்ற தலைக்கணம் வந்துவிடுகிறது.இத்தகைய தாராளியத் தவறுகளை ஒவ்வொருகம்யூனிஸ்டும்களைந்துகொள்வது மிகமிக அவசியமாகும்.இந்ததவறுகளை ஒரு கம்யூனிஸ்ட் களைந்து கொள்ளவில்லை என்றால் உழைக்கும் மக்கள் அந்த கம்யூனிஸ்டையும் மதிக்க மாட்டார்கள் அந்த கம்யூனிஸ்ட் கட்சியையும் மதிக்க மாட்டார்கள்.
ஆகவே இதற்கு மாறாக ஒவ்வொரு கம்யூனிஸ்டும் எளிமையாகவும், தன்னடக்கமாகவும்தலைகணம்இல்லாமலும் இருக்க வேண்டும்.மக்களுக்கு முன்னால் மக்களோடு மக்களாகப்பழக வேண்டும்.மக்கள் அந்த கம்யூனிஸ்டை தன்னுடயவராகவும்தனக்குச் சொந்தக்காரர்என்று மக்கள் உணரும் வகையில் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் நடந்துகொள்ள வேண்டும்.
14.தனது சொந்தத் தவறுகளை தெரிந்திருந்தாலும் அந்தத் தவறுகளை களையாமல் இருத்தல்.தனது சொந்தத் தவறுகளை பிறர் சுட்டிக்காட்டினாலும் அதனை பரிசீலித்து பிறர்சுட்டிக்காட்டியது உண்மை என்று தெளிவாகத் தெரிந்தபோதும் அந்தத் தவறுகளைகளைவதற்கு மறுத்தல். மேலும் அவர் செய்யும் தவறுகளை தவறு அல்ல என்று சொல்லிநியாயப் படுத்துதல் போன்ற வகையிலான தவறுகள் தாராளியத் தவறுகளே ஆகும்.
இத்தகைய தாராளியத் தவறுகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் கம்யூனிச அமைப்புத் தலைவர்களை நாம் பார்க்கலாம்.இத்தகைய தாராளியத் தவறுகளை செய்யும் தவறுகளால்தான் கம்யூனிச அமைப்புகள் தொடர்ந்து பிளவுகளை சந்திக்கின்றது.மேலும் உழைக்கும் மக்கள் இந்த கம்யூனிச அமைப்புகளின் மீது நம்பிக்கை இழந்துகொண்டு இருக்கிறார்கள்.கம்யூனிஸ்டுக் கட்சியும் மக்களிடம் இருந்த செல்வாக்கை இழந்துகொண்டு இருக்கிறது.ஆகவே இத்தகைய தாராளியத் தவறுகளை கம்யூனிஸ்டுகள் களைய வேண்டியதுஉடனடிக் கடமையாகும். இதற்கு மாறாக ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தன்னைப் பற்றி யார்குறை சொன்னாலும் அதனை பொறுமையாக கேட்டு தன்னிடத்தில் குறை உள்ளதா என்பதை பரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு குறைகள் நம்மிடம் இருந்தால் அதனை உடனடியாககளைய வேண்டும். அவ்வாறு நமது குறைகளை களைந்துவிட்டால் நாம் ஐம்பது சதவீதம் நமது லட்சியத்தில் வெற்றிபெற முடியும்.
ஆகவே ஒரு கம்யூனிஸ்டும் சரி ஒரு கம்யீனிச அமைப்பும் சரி தனது சொந்த தவறுகளை எந்தளவுக்கு களைகிறதோ அந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும், மக்களை திரட்டி வெற்றிபெற முடியும்.ஆகவேதான் மார்க்சிய ஆசான்கள் அவர்களது கட்சி செய்த தவறுகளை வெளிப்படையாக மக்களிடம் அறிவித்து இனிமேல் இந்தத் தவறை செய்யமாட்டோம் என்று மக்களுக்கு உறுதி கொடுத்து அந்த உறுதிமொழியை காப்பாற்றி மக்களின் நம்பிக்கையைப் பெற்று மக்களை அணிதிரட்டி போராடி அவர்களது லட்சியத்தை அடைந்தார்கள்.ஆகவே நமது மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழியில் நமது தவறுகளை உணர்ந்து அதனை மக்களிடம் வெளிப்படையாகஅறிவித்து தவறுகளை களைந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று மக்களை அணிதிரட்டிடவேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் கடமையாகும்.
15. ஒரு நாட்டில் மக்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்க வேண்டுமானால் உழைக்கும்மக்கள் ஒன்றுபட்டு கூட்டாக செயல்படுவதன் மூலமே இதனை சாதிக்க முடியும். இதற்கு கம்யூனிஸ்டுகள் கூட்டாக ஒன்றுபட வேண்டும். கம்யூனிஸ்டுகள் ஒரு அமைப்பில்ஒன்றுதிரண்டு கூட்டாக செயல்பட வேண்டும். அத்தகைய கம்யூனிஸ்டுகளின் கூட்டு முடிவு மற்றும் கூட்டு நடவடிக்கைக்குத் தடையாக தாராளியத்தவறுகள் காரணமாக இருக்கிறது. இந்த தாராளியத் தவறுகள் கட்சிக்குள் உள்ள தோழர்களுக்கு இடையேயுள்ள ஐக்கியத்தைஒற்றுமையை குழைக்கிறது.தோழர்களிடையே இருக்கும் கட்சி மற்றும் புரட்சியின் மீதானநம்பிக்கை இழப்பதற்கு காரணமாக உள்ளது. தோழர்கள் ஒருவருக்கு ஒருவர் அதிருப்தியும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.தோழர்களிடையே இருக்கும் கட்டுப்பாட்டைசீர்குழைக்கிறது.இறுதியாக உழைக்கும் மக்களுக்கு தலைமை கொடுத்து வழிகாட்டும் ஆற்றலை கம்யூனிஸ்டுக் கட்சியானது இழந்துவிடுகிறது.அதன் பயனாக உழைக்கும்மக்களுக்கு வழிகாட்டுபவர்கள் யாரும் இல்லாத அநாதைகளைக கைவிடப்பட்டவர்களாக மக்கள் மாறிவிடுகிறார்கள்.இத்தகைய மிகவும் மோசமான நிலைகளை உருவாக்கும் பெரும் தீங்கு பயக்கும் தாராளியத்தை கைவிட்டு நமது மார்க்சிய ஆசான்களை பின்பற்றி சிந்தித்து செயல்படுவதன் மூலம் மட்டுமே கம்யூனிஸ்டுகளால் ஒரு புரட்சிகர ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டி மக்களை அணிதிரட்டி சமூகத்தை புரட்சிகரமான சமூகமாக மாற்றி புதியதோர்உலகத்தைப் படைக்க முடியும்........ தேன்மொழி.…
++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment