இலக்கு 44 இதழ் கட்டுரையே
நமது படிப்பைச் சீர்செய்வோம் பகுதி 3. மாவோ
பகட்டு எழுத்து நடையினை எதிர்ப்போம்.
(பிப்ரவரி
8, 1948 அன்று ஏனானில் நடைபெற்ற ஊழியர்கள் கூட்டத்தில் மாவோ ஆற்றிய உரை. தொகு.3)
அநிலைவாதம், குறுங்குழுவாதம் மற்றும் பகட்டு எழுத்துநடை இம் மூன்றும் மார்க்சியத்திற்கு எதிரானதாய் இருந்து பாட்டாளி வர்க்கத்துக்குஅன்றி, சுரண்டும் வர்க்கங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
அவை நம் கட்சியில் நிலவும் குட்டிமுதலாளிய
கருத்தியலின் பிரதிபலிப்பாகும்.
சீனாமிகப்பெரியதாகக்குட்டிமுதலாளிகளைக் கொண்ட ஒரு நாடாகும்.நமது கட்சி இந்தப் பெரு வர்க்கத்தினால் குழப்பப்பட்டுள்ளது; நமதுகட்சியின்
உறுப்பினர்களின் பெரும் எண்ணிக்கை இவ்வர்க்கத்திலிருந்துவந்ததே; அவர்கள் கட்சியில் இணையும் பொழுது தங்களுடன்குட்டிமுதலாளிய வாலை, அது (நீளமாகவோ அல்லது குட்டையாகவோ இருக்கட்டும்) தவிர்க்கவியலாமல் இழுத்துக்கொண்டே வருகின்றனர்.
குட்டிமுதலாளியப் புரட்சியாளர்களின் வெறித்தனமும் ஒருபக்கத்தன்மையும் சோதிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படாவிடில் அவர்கள் அகநிலைவாதத்தையும் குறுங்குழுவாதத்தையும் எளிதாகக் கொண்டிருக்க இயலும். அவற்றில் அன்னிய பகட்டு எழுத்து நடை அல்லது பகட்டுத்தனமான கட்சி எழுத்து நடை வெளிப்படும்.
இக்கூட்டத்தில் பிரச்சாரத்துக்கான ஒரு வழிகாட்டி,
நான்கு கட்டுரைகளைக்கொண்டு துண்டுப்பிரசுரம் ஆகியவற்றின் பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நான் நமது தோழர்ளை மீண்டும் மீண்டும் அவற்றைப் படிக்குமாறு அறிவுறுத்துகிறேன்.
முதலாவது, லெனின் பிரச்சாரப் பணியினைச் செய்த வழியினைப் பற்றிய சுருக்கமான குறிப்பு.
சோவியத்து ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்குகள்) வரலாறு ஆகியவற்றிலிருந்து சில பகுதிகளை உள்ளடக்கியது அது. இது லெனின் எவ்வாறு துண்டுப் பிரசுரங்களை எழுதினார் என்பதை விளக்குகிறது. லெனினின் வழிகாட்டுதலின் கீழ், தொழிலாளிவர்க்க விடுதலைக்கான
புனித பீட்டர்ஸ்பெர்க் போராட்ட அணியே ரஷ்யாவில் தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் சோசலிசத்தை இணைக்க ஆரம்பித்தது.ஏதாவதொருதொழிற்சாலையில் வேலை நிறுத்தம் வெடித்தால், போராட்ட அணி தன் வட்ட உறுப்பினர்களின் மூலம் தொழிற்சாலைகளில் உள்ள நிலையினை நன்கு அறிந்து உடனடியாகத்துண்டுப் பிரசுரங்களையும் சோசலிசப் பறைசாற்றுதல் களையும் வெளியிட்டு எதிர்வினை யாற்றியது.
இத்துண்டுப் பிரசுரங்கள்,
உற்பத்தியாளர்களால் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை
அம்பலப்படுத்தி, தொழிலாளர்கள் எவ்வாறு தங்களின் நலன்களுக்காகப் போராட வேண்டும் என்பதை விளக்கித் தொழிலாளர்களின்
கோரிக்கைகளை முன்வைத்தன.
துண்டுப் பிரசுரங்கள் முதலாளியத்தின்
பண்புகள், தொழிலாளர்களின்
வறுமை, அவர்களின்
12 - 14 மணி நேரம் கொண்ட கடினமான சகிக்கவியலாத உழைப்பு மற்றும் அவர்களின் உரிமையற்ற நிலை ஆகியன பற்றிய தெளிவான பேருண்மைகளைக்
கூறின. அவை தகுந்த அரசியல் கோரிக்கைகளையும் முன்வைத்தன.
நன்கு அறிந்து தெளிவான பேருண்மையினை
கூறியதைக் குறித்துக் கொள்ளவும். மீண்டும் குறித்துக் கொள்ளவும்.
லெனின் 1894 இன் இறுதியில், பாபுஷ்கின் என்ற தொழிலாளியின் கூட்டோடு, புனித பீட்டர்ஸ்பெர்க்கில் செம்யனிகோவ் தொழிற்சாலையின்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது,
இவ்வகைப்பட்ட முதல்கிளர்ச்சிகரத் துண்டுப் பிரசுரத்தையும்
அறைகூவல் ஒன்றையும் எழுதினார்.
துண்டுப் பிரசுரம் ஒன்றை எழுதுவதற்கு,
விசயங்களை நன்கு அறிந்ததோழர்களுடன் நீங்கள் கட்டாயம் கலந்தாய்வு செய்ய வேண்டும்.
அத்தகைய ஆய்வு மற்றும் படிப்பினையை அடிப்படையாகக் கொண்டே,லெனின் எழுதிப் பணிபுரிந்தார். ஒவ்வொரு துண்டுப் பிரசுரமும்தொழிலாளர்களின் உணர்வை விரைப்பாக்குவதில் பெரிதாக உதவியது.
தங்களுக்கு சோசலிஷ்டுகள்
உதவி செய்து காப்பதை அவர்கள் பார்த்தனர்.
நாம் லெனினுடன் உடன்படுகிறோமா? அவ்வாறெனில்,
லெனின் உணர்வில் பணிபுரிய வேண்டும்.
அதாவது, அரங்கத்தினைப்
பரிசீலிக்காமல் மொத்தமாக குறிவைக்கவோ,
தேவையற்ற சொற்களால் முடிவற்ற பக்கங்களை நிரப்புவதோ,
சுய அபிப்பிராயம்
கொள்ளுவதோ, வெற்றுரை ஆற்றுவதுமாகவோ அல்லாமல் லெனின் செய்தாற் போன்று செய்யவேண்டும்.
இரண்டாவது, கம்யூனிஸ்டுகள்
அகிலத்தின் ஏழாம் உலகப் பேராயத்தில் டிமிட்ரோவின் சில பகுதிகளைக் கொண்டவை. டிமிட்ரோவ் என்னகூறினார்? அவர் கூறியதாவது:
நாம் மக்களிடம் பேசப் பயில வேண்டும்: நூல் சூத்திர மொழியில் அன்று; மாறாக மக்களின் லட்சியத்திற்காகப் போராடுவோரின் மொழியில்;
அவர்களின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கருத்தும் இலட்சக்கணக்கானோரின் உள்ளார்ந்த சிந்தனைகளையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. மீண்டும்;.....
மக்களுக்குப் புரிகின்ற மொழியில் நாம் பேசப் பயிலாவிடில் நமது முடிவுகளை மக்களால் ஏறறுக்கொள்ள இயலாது.
மக்களுக்குப் பழக்கமாகவும்
அறிவுக்கு எட்டுகின்றாற்
போலவும், எளிமையாகப் பருண்மையாக எவ்வாறு பேசுவது என்பதை நாம்எப்பொழுதும் அறிந்திருக்கவில்லை. மனத்தினால்
(மனப்பாடமுறையினால்) நாம் பயின்ற அரூப சூத்திரங்களிலிருந்து விடுபட இன்னமும் நாம் இயலாமல் உள்ளோம். நம் துண்டுப் பிரசுரங்கள், செய்தித்தாள்கள், தீர்மானங்கள் மற்றும் ஆய்வுகளை நீங்கள் கண்டால், அவை மிகக் கடினமான மொழியிலும் நடையிலும் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அவை, நம் கட்சி நிர்வாகிக்களுக்கேகூடப் புரிந்துகொள்ளகடினமாக உள்ளன.
டிமிட்ரோவ் நமது பலவீனமான இடத்தில் தனது விரலை வைக்கின்றார் அல்லவா? வெளிப்படையாகக்
கூறினால், பகட்டு எழுத்து நடை சீனாவில் உள்ளதைப் போன்றே, அன்னிய நாடுகளிலும் நிலவிக் கொண்டிருக்கிறது.
ஆகவே, அதை ஒரு பொது நோயாகக் காணலாம். எப்படியாகிலும், தோழர் டிமிட்ரோவின் ஊசிக்கேற்ப,
நமது சொந்த நோயை நாம் விரைவாகக் குணப்படுத்த வேண்டும்.
நம்மில் ஒவ்வொருவரும்
இதை விதியாக, போல்ஷ்விக் விதியாக, அடிப்படை விதியாக ஆக்க வேண்டும்.
எப்பொழுதும் அல்லது பேசும்பொழுதும் உங்களைப் புரிந்து கொள்ளவும் உங்கள் அறைகூவலை நம்பவும் உங்களைப் பின்தொடரத் தயாராக இருக்கவும் கூடிய கீழ்மட்ட ஊழியரை எப்போதும் மனதில் இருத்திடவேண்டும்.
நமக்காக இந்தக் கட்டளை கம்யூனிஸ்ட் அகிலத்தினால் ஆக்கப்பட்டது.
கட்டாயம் பின்பற்றப்பட
வேண்டிய கட்டளை. அது நமக்கான விதியாகஇருக்கட்டும்.
மூன்றாம் கட்டுரை, எவ்வாறு எழுதுவது என்பதை விவாதிக்கின்றவாறு திடிப்பர் என்ற இதழிற்கு பதிலுரையான லூசுனின் மொத்தப்
படைப்புகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டது. லூசுன் என்ன கூறினார்?
மொத்தத்தில், அவர், எழுதுவதற்கான எட்டு விதிகளை முன்வைத்துள்ளார்.
அவற்றில் சிலவற்றை நான் இங்கு கருத்துக் கூற எடுத்துக் கொள்கிறேன்.
விதி 1:”அனைத்து விதமான விசயங்களிலும்
நெருங்கிய கவனத்தை செலுத்தவும்; முழுமையாகக் கவனி; சிறிதளவே மட்டும் நீங்கள் நோக்கியிருந்தால் எழுத வேண்டாம்.”
அவர் என்ன சொல்கிறார் என்றால் “அனைத்து விதமான விசயங்களிலும் நெருக்கமான கவனத்தை செலுத்தவும்” வெறுமனே ஒரு விசயம் அல்லது அரை விசயத்திற்கு
அல்ல. அவர் கூறுகிறார், “முழுமையாக கவனி” வெறுமனே ஒரு பார்வையையோ அரைப்பார்வையோ அல்ல. நாம் எவ்வாறு உள்ளோம்? சிறிதளவு மட்டுமே கவனித்துவிட்டுப் பின் எழுதுகின்றபோது சரியாக எதிராக உள்ளோம் அல்லவா?.
விதி 2: “நீங்கள் கூறுவதற்கு எதுவுமொன்றும்
இல்லாத பொழுது,எழுதுவதற்கு உங்களை நீங்கள் நிர்பந்திக்கக்
கூடாது.”
நாம் என்னவாக உள்ளோம்? நம் தலைகளில் எதுவொன்றும் இல்லையென மிகவும் தெளிவாக உள்ளபொழுதும் பெருமளவில் எழுத நம்மை நாம் அடிக்கடி நிர்பந்திக்கொள்கிறோம் அல்லவா? ஆய்வு அல்லது பயிலுதல் இன்றி, பேனாவை எடுத்து எழுத நம்மை நிர்ப்பந்தித்துக் கொள்வது மோசமான பொறுப்பின்மை
ஆகும்.
விதி 4: “ஏதாவது எழுதிய பின், அதைக் குறைந்தது இருதடவை வாசித்து மிகச் சிறிதளவும் கழிவிரக்கமின்றி அவசியமற்ற சொற்கள், வாக்கியங்கள் மற்றும் பத்திகளை நீக்கத் தீவிரமாக இருக்க வேண்டும்.
மாறாக, ஒருநாவலுக்குரிய மூலத்தை சுருக்கவும்;
சுருக்க மாதிரிக்காக உள்ள மூலத்தை நாவலுக்காக ஒருபோதும் பெரிதாக்கக் கூடாது.”
“இரு தடவை சிந்தி” என கன்பூசியஸ் அறிவுறுத்தினார். “சிந்திப்பதன் மூலமே ஒரு செயல் நிறைவேற்றப்படுகிறது” என ஹான் யு கூறினார்.
அவை பழங்காலங்களில்
கூறப்பட்டவை. இன்று விசயங்கள் மிகவும்சிக்கலாகி மூன்று அல்லது நான்கு தடவைகள் சிந்திப்பது கூடச் சிலநேரங்களில் போதுமானதாய் இருப்பதில்லை. லூசுன் கூறியதாவது:
“குறைந்தது இரு தடவை வாசி” அதிகபட்சமாக அவர் கூறிவிடவில்லை; ஆனால் என் கருத்தில், ஒரு முக்கியக் கட்டுரையினை
10 தடவைகளுக்கும் மேல் வாசிப்பதில் தீங்கில்லை: அதைப் பதிப்பிக்கும் முன், உளச் சான்றுக்கு கட்டுப்பட்டுத் திருத்துவதும்
தீங்கு பயப்பதில்லை.
தெளிவற்றும் சிக்கலாகவும் உள்ள புற யதார்த்தத்தின்
பிரதிபலிப்பே கட்டுரைகளாகும்.
அவை சரியாகப் பிரதிபலிக்கப்பட இயலும் முன் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டும்.
இவ்விசயத்தில் கவனக் குறைவாக இருப்பின் எழுத்தின் அடிப்படைகளை புறந்தள்ளுவதாகும்.
விதி 6: “வேறெவருக்கும்
அன்றி உங்கள் அறிவுக்கு மட்டுமே உகந்த அடைமொழிச் சொற்கள் அல்லது பிற சொற்கள் வகுக்கக் கூடாது””எவரொருவருக்கும் புரியாத மிகப்பல சொற்றொடர்களை நாம் வகுத்துள்ளோம். சில நேரங்களில் தனியொரு துணை வாசகம் நாற்பது அல்லது ஐம்பது சொற்களுடன் “எவருக்கும் புரியாத அடைமொழிச்சொற்களை அல்லது பிற சொற்களை” கொண்டிருக்கும். லூசுனைக் கடைபிடிப்பதாக ஒரு போதும் ஓய்வின்றிச் சொல்லும் பலரே அதற்கு எதிராக இருப்பர்.
இறுதியாக உள்ளதானது,
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாம் மையக்குழுவின் ஆறாம் பிளீன அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியப் பிரச்சாரப் பாணியினை வளர்த்தெடுத்தல்மீதான அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
1938-இல் நடைபெற்ற அந்த அமர்வில், “சீனாவின் குறிப்பான பண்புகளுக்கு அப்பாற்பட்டு, மார்க்சியம் பற்றிய எந்தவொரு பேச்சும் அரூபமான,வெற்றிடத்தில் உள்ள மார்க்சியம் மட்டுமே” என நாம் கூறினோம். அதாவதுமார்க்சியத்தைப் பற்றிய வெற்றுப் பேச்சை எதிர்க்க வேண்டும்;
சீனாவில் வாழுகின்ற கம்யூனிஸ்டுகள்
சீனப் புரட்சியின் யதார்த்தங்களுடன் இணைந்து மார்க்சியத்தைக் கற்க வேண்டும்.
அன்னிய உருப்படிவங்கள் (Sterio type) ஒழிக்கப்பட வேண்டும்; வெற்றுஅரூபமான
மனப்பாங்குகள் குறைவாக இருந்திட வேண்டும்;
வறட்டு வாதம் அகற்றப்பட வேண்டும்.
அவை சீனாவின் சாதாரண மக்கள் நேசிக்கின்ற புதிய, உயிரோட்டமான சீனப்பாணி மற்றும் உணர்வினால் இட்டு நிரப்பப்பட வேண்டும். தேசிய வடிவத்திலிருந்துசர்வதேச உள்ளடக்கத்தைப் பிரித்தல்என்பது சர்வதேசியம் பற்றிப் புரிந்துகொள்ளாதோரின் நடைமுறை ஆகும்.
மாறாக, நாம் இரண்டையும் நெருக்கமாக இணைக்க வேண்டும்.
இவ்விசயத்தில், நம் அணிகளிடையே தீவிரத் தவறுகள் உள்ளன. அவற்றைஐயமின்றி வென்றிட வேண்டும். அவ்வறிக்கையில்அன்னியஉருப்படிவங்களை ஒழிக்க கோரப்பட்டாலும் சில தோழர்கள் அவற்றை ஊக்குவிக்கின்றனர். வெற்று, அரூபமான மனப்பாங்குகள்
குறையுமாறு கோரப்பட்டாலும் சில தோழர்கள் பிடிவாதமாக அதை அதிகமாகச் செய்து கொண்டிருக்கின்றனர். வறட்டுவாதம் அகற்றப்படவேண்டும்என்றுகோரப்பட்டாலும் சிலதோழர்கள் அதை கூறிக் கொண்டிருக்கின்றனர். சுருக்கமாக,
ஆறாம் பிளீன அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த அறிக்கையினை வேண்டுமென்றே எதிர்க்கின்றாற் போன்று பலர் ஒரு காதில் வாங்கிக் கொண்டு மற்றொரு காதில் வெளியேற்றி விடுகின்றனர்.
இப்பொழுது, மையக்குழு பகட்டு எழுத்து நடையினையும் வறட்டுச் சூத்திரத்தையும் அது போன்றவற்றையும் ஒரேயடியாக நாம் கைவிட்டுவிடவேண்டுமெனத்தீர்மானித்துள்ளது. அதற்காகவே நான் வந்து சிறிதுவிரிவாகப் பேசியுள்ளேன். நான் என்ன கூறினேன் என்பதைத் தோழர்கள் சிந்தித்துப் பகுப்பாய்வு செய்வார்கள் எனவும் ஒவ்வொரு தோழரும் தன் சொந்தக் குறிப்பான விசயத்தைக் கூடப் பகுப்பாய்வு செய்வார்கள் எனவும் நம்புகிறேன். ஒவ்வொருவரும்
தன்னை கவனமாகச் சோதித்து தான் தெளிவாக்கியதை தன்னைச் சுற்றியுள்ள தோழர்களிடமும்
தன் நெருக்கமான நண்பர்களிடமும்
பேசி தன் சொந்தக் குறைபாடுகளிலிருந்து உண்மையாக விடுபட வேண்டும்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
1. அகநிலைவாதம் அதாவது பிரச்சனையை புறநிலையிலிருந்து அல்லது யதார்த்தத்திலிருந்து புரிந்துகொள்ளாமல் தனது மனதுக்கு பட்டது எல்லாம் உண்மை என்பது போல் கற்பனையாகப் புரிந்துகொள்வது.
குறுங்குழுவாதம் அதாவது தான் மட்டும் அல்லது தனது அமைப்பு மட்டும் சரியானது என்று கருதி பிறரது கருத்துக்களை காதில் வாங்காமல்இருப்பதும் பரவலாக உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டுத்தான் சமூக மாற்றம் எற்படும் என்பதை புரிந்துகொள்ளாமல் தனித்திருந்து
ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவதும். பிறர் சொல்லுவதை காதில் வாங்க விருப்பம் இல்லாமல் இருந்துகொண்டு பிறர் சொல்வதெல்லாம் தவறு என்று கருதுவதும்.
பகட்டு நடை அதாவது யதார்த்தத்தை பிரதிபலிக்கும்
விதமாகப் பேசாமல் அல்லது எழுதாமல் வெட்டியான வீரவசனம் பேசுவது மற்றும் எழுதுவது,
பகட்டாகப் பேசி மக்களிடம் போலியான நம்பிக்கையை வளர்ப்பது, இம் மூன்றும் மார்க்சியத்திற்கு எதிரானதாகும். மேலும் பாட்டாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதற்குப் பதிலாக சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்கிறது ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் அகநிலைவாதத்திற்கும், குறுங்குழுவாதத் திற்கும் மற்றும் பகட்டு எழுத்து நடைக்கும் பலியாகாமல்அவற்றை எப்போதும் எதிர்த்துப் போராட வேண்டும்.
ஆனால் தற்போதுள்ள இடதுசாரிகள் என்று சொல்லப்படும் கம்யூனிஸ்டுகளிடம் இந்த மூன்று வகையான தவறுகளும் அதிகமாகவே காணப்படுகிறது.
அதனால்தான் கம்யூனிஸ்டுகள்
பல அமைப்புகளாக சிதறுண்டு இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலேயே ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை எனும்போது இவர்களால் உழைக்கும் மக்களை எப்படி ஒற்றுமை படுத்த முடியும்.
2. சீனாவில் மாவோ காலத்தில் அதிக எண்ணிக்கையில்
குட்டிமுதலாளித்து வர்க்கப் பிரிவினரே வாழ்ந்து வந்தார்கள் என்று மாவோ குறிப்பிடுகிறார்.
இத்தகைய குட்டிமுதலாளித்துவ வர்க்கப் பிரிவினர்களது
வாழ்க்கை நிலையானது உடமை ஏதும் இல்லாத உழைக்கும் வர்க்கங்களின் வாழ்நிலையிலிருந்து மாறுபட்டதாகும். குட்டிமுதலாளிய வர்க்கங்கள் உடமை வர்க்கங்களாக
இருப்பதால் அவர்களிடம் உடமை வர்க்கச் சிந்தனை இருக்கும். அதன் காரணமாக ஆளும் வர்க்கங்களான முதலாளி வர்க்கத்தை ஆதரிக்கும் உணர்வுகள் அவர்களிடத்திலே காணப்படும்.
அதே வேளையில் ஆளும் முதலாளி வர்க்கங்களால் சுரண்டப்படுவதாலும், ஒடுக்கப்படுவதாலும் குட்டிமுதலாளி வர்க்கங்கள் பாதிக்கப்படுகிறது.
அவ்வாறு பாதிக்கப்படும்
போது முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.
ஆகவே குட்டிமுதலாளி வர்க்கத்திற்கு இரட்டைத் தன்மையுடன் கூடிய ஊசலாட்டங்கள் இருக்கிறது.ஆகவே இந்த குட்டிமுதலாளி வர்க்கங்கள் முதலாளிகளின் ஒடுக்கு முறையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தின் காரணமாகவே இந்த வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்தார்கள். ஆகவே சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் குட்டி முதலாளித்துவ வர்க்கங்கள் அதிக அளவில் உறுப்பினர்களாகஇருந்தார்கள். இதே நிலை இந்தியாவுக்கும் பொருந்தும். இத்தகைய குட்டிமுதலாளித்துவ வர்க்கங்கள்தான் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் அகநிலைவாதம், குறுங்குழுவாதம், பகட்டுநடை போன்ற தவறுகளை கொண்டுவருகிறது. ஏனெனில் குட்டிமுதலாளித்துவ வர்க்கங்கள் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் சேர்ந்தவுடன் தங்களது வர்க்கத் தன்மையை விட்டுவிட மாட்டார்கள்.
அவர்கள் கட்சிக்குள் நூழையும் போதே அவர்களது வர்க்கத்தன்மையையும் கூடவே கட்சிக்குள் கடத்தி வருவார்கள். ஆகவே குட்டிமுதலாளித்துவ வர்க்கப் பிரிவைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களிடையே உள்ள வெறித்தனமும்
அவர்களின் ஒருபக்க சிந்தனை முறைகளையும் சோதித்து அறிந்து அவர்களை மாற்றியமைக்காவிடில் அவர்கள்
அகநிலைவாதம், குறுங்குழுவாதம், பகட்டு நடை போன்ற தவறுகளை களையாமல் அவர்களும் முன்னேறாமல் கட்சியையும் முன்னேறவிடால் தடுப்பதற்கு காரணமாக இருப்பார்கள். மேலும் அவர்களும் கட்சியும் உழைக்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கு மாறாக உழைக்கும் மக்களின்எதிரிகளான முதலாளிக்கு சேவை செய்வதாக மாறிவிடும். அதாவது கம்யூனிஸ்டுக் கட்சியை திருத்தல்வாத மற்றும் எதிர்ப்புரட்சிகர கட்சியாக மாற்றிவிடுவார்கள்.
2. பகட்டு எழுத்து நடைக்கு எதிராக புரட்சிகரமான
எழுத்து நடையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரான தோழர் லெனின் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள
வேண்டும். எழுத்து நடை எனும் போது, பேச்சு நடைக்கும் இது பொருந்தும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. லெனினது எழுத்து நடைதான் முதன் முதலில் தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் அதாவது தொழிலாளர்களின் குறிப்பான,
உடனடியான கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் இயக்கத்துடன்
சோசலிச கோரிக்கைகளையும்இணைத்துமுன்வைக்கும் வழக்கத்தத்தை
கொண்டுவந்தார். ஏதாவது ஒரு தொழிற்சாலையில் வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தவுடன் அங்குள்ள குறிப்பான நிலைமைகளை நன்குஅறிந்து அந்த குறிப்பான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைத்தும், அதே வேளையில் முதலாளி வர்க்கங்களின்
சுரண்டலும் ஆதிக்கமும் ஒழிக்கப்படாதவரை பிரச்சனைகள் முழுமையாக தீராது, ஆகவே முதலாளித்துவ
வர்க்கங்களின் ஆதிக்கத்தை ஒழித்து தொழிலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான சோசலிசத்தை கொண்டுவருவதற்கு தொடர்ந்து தொழிலாளர்கள்
பாடுபட வேண்டும் என்ற உண்மையும் தொழிலாளர்களுக்கு உணர்த்துவது கம்யூனிஸ்டுகளின் கடமை என்பதை லெனின் தனது பேச்சிலும் எழுத்திலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். இத்தகைய முறைதான் புரட்சிகரமான
பிரச்சார முறையாகும்.
இதற்கு மாறாக தொழிலாளர்களிடம் அவர்களது குறிப்பான உடனடிப் பிரச்சனையை மட்டும்தான் பேச வேண்டும் என்றும் சோசலிசம் பற்றி பேசக்கூடாது என்று கருதி இடதுசாரிகள் நமது நாட்டில் செயல்பட்டதன்விளைவுதொழிலாளர்களுக்கு சோசலிசம் என்றாலே என்னவென்றே புரியாமல் போய்விட்டது.
மேலும் சோசலிசம்தான் தொழிலாளர்களுக்கு நல்வாழ்வு தருவதற்கான ஒரே மார்க்கம் என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்துகொள்ள தவறியதுடன் சோசலிசம் என்பது எப்போதும் சாத்தியமில்லாத
வெறும் கற்பனை என்று கருதி சோசலிசத்தின்
மீதான நம்பிக்கையை தொழிலாளி வர்க்கம் இழந்துவிட்டது. ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கான
தீர்வை முன்வைத்து பிரச்சாரத்தில்
ஈடுபடும்போது அந்த குறிப்பான பிரச்சனையோடு
தனது
பிரச்சாரத்தை குறுக்கிக் கொள்ளாமல் இத்தகைய பிரச்சனைகளுக்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை விளக்கி உழைக்கும் வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்ற சோசலிச கொள்கையை அடைவதற்காக தொழிலாளி வர்க்கம் போராட வேண்டும் என்ற அரசியலை முன்வைத்து பிரச்சாரம் செய்திட வேண்டியது மிகமிக அவசியமாகும்.
3. கம்யூனிஸ்டுகள்
எழுதும் துண்டுப் பிரசுரங்களாக இருந்தாலும் சரி அவர்களது பேச்சின் மூலம் செய்யப்படும் பிரச்சாரமாக இருந்தாலும் சரி அவற்றின் மூலம் தொழிற்சாலைகளிலுள்ள நிலைமைகள், கிராமங்களில்
விவசாயிகளின் நிலைமைகள்,
மற்றும் நடுத்தர வர்க்கங்களின் நிலைமைகள் சாதியால் தீண்டப்படாத, ஒடுக்கப்படும்
சாதியைச் சேர்ந்த மக்களின்நிலைமைகள், இவர்கள் தொடர்ந்து முதலாளிகளாலும்
செல்வந்தர்களாலும் அன்றாடம் சுரண்டப்படும் நிலைமைகள் இவற்றை நன்கு ஆராய்ந்து அறிந்து அனைத்துவகையான ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் சாதியினரிடம்
அம்பலப்படுத்தும் விதமாக கம்யூனிஸ்டு களின் எழுத்தும் பேச்சும் அமைந்திருக்க வேண்டும்.
மேலும் இத்தகைய பிரச்சனைகள் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பாதிப்பிற்கு
உள்ளாகும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றுபட்டு தங்களின் நலனுக்காகப் போராட வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் தங்களது எழுத்து மற்றும் பேச்சின் மூலம் விளக்க வேண்டும். நடைமுறையிலுள்ள முதலாளியத்தின் பண்பு என்ன? தொழிலாளர்களின்
வறுமைக்கு என்ன காரணம், சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடுபவர்கள்
யார்? சாதிய ஒடுக்குமுறை யாளர்களின் அரசியல் பொருளியல் நோக்கங்கள் என்ன? உழைக்கும் மக்கள் கடுமையாக உழைத்தாலும் அவர்கள் வறுமையிலிருந்து விடுபடாததற்கு
என்ன காரணம், விலைவாசி உயர்ந்துகொண்டே போவதற்கு என்ன காரணம், இத்தகைய பிரச்சனைகளை நிலவுகின்ற ஆட்சி முறையால் தீர்க்க முடியாததற்கு என்ன காரணம் என்பதை கம்யூனிஸ்டுகள் தங்களது எழுத்து மற்றும் பேச்சின் மூலம் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். மேலும் இத்தகைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ்,
லெனின், ஸ்டாலின்,
மாவோ போன்ற மார்க்சிய ஆசான்கள் காட்டிய போதித்த வழிமுறைகளை தங்களது எழுத்துக்களிலும் பேச்சிலும் சுட்டிக் காட்டி உழைக்கும் மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும்.
இதுவே லெனின் நமக்கு காட்டிய நடைமுறைக்கான வழிமுறையாகும்.4. நாம் சந்திக்கும் எவ்விதமான பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது. அந்தக் குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்வுகளை மட்டும் முன்வைத்துப் பிரச்சாரம் மற்றும் போராட்டம் நடத்துவது மட்டும் போதாது. உதாரணமாக தற்போது பல விவசாய சங்கங்கள் ஒன்றுபட்டு போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தை நாம்வரவேற்க வேண்டும்.
இது பாராட்டத் தகுந்ததே. எனினும் இந்த போராட்ட சங்கங்கள் மிகவும் குறுகிய அளவிலேயே தங்களது கோரிக்கைகளை அதுவும் பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தே பிரச்சாரம் மற்றும் போராட்டத்தில்
ஈடுபடுகிறார்கள். இவர்களது பிரச்சாரத்திலோபோராட்டமுழக்கங்களிலோ அரசியல் அதுவும் புரட்சிகர அரசியல் இல்லவே இல்லை. இத்தகைய முறைகளுக்குப் பதிலாக கம்யூனிஸ்டுகள் இது போன்ற போராட்டங்கள்
நடக்கும் போது விவசாயிகளின்
பிரச்சனைகளை நன்கு ஆராய்ந்து அவர்களின் உடனடியான கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் அதே வேளையில் விவசாயிகள் சந்திக்கும் இந்தப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம், யார் காரணம், இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு என்ன? அந்த தீர்வை அடைவதற்கு விவசாயிகளுக்கு எதிராக நிற்கும் அரசியல் சக்திகள் மற்றும் அரசியல் கட்சிகள் என்ன என்ன என்பதையும் விவசாயிகளுக்கு
ஆதரவாக போராட முன்வரும் சமூக சக்திகள் மற்றும் அரசியல் கட்சிகள் எவை அவர்களோடு விவசாயிகள் ஒன்றுபட்டு போராட வேண்டியதன் அவசியத்தையும் இறுதியாக சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்றுவதன் மூலமே விவசாயிகளின் அனைத்துவகையான பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான
வழி ஏற்படும் என்பதை விளக்கி கம்யூனிஸ்டுகள் தங்களது எழுத்து மற்றும் பேச்சின் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுவே கம்யூனிஸ்டுகளுக்கு லெனின் காட்டிய போதித்த வழிமுறை ஆகும்.
5. கம்யூனிஸ்டுகள்
தங்களது கருத்துக்களை
எழுதுவதற்கும் பேசி பிரச்சாரம் செய்வதற்கும்
முன்பு தாங்கள் கையிலெடுக்கும்
பிரச்சனைகளைப் பற்றி விரிவாக தகவல்களை சேகரிக்க வேண்டும்,
அந்தப் பிரச்சனை தொர்பான தோழர்களுடன் கலந்துரையாடி விவாதிக் வேண்டும். இதன் அடிப்படையில் முடிவுகள் எடுத்து அதனையே தனது பிரச்சாரத்துக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
இத்தகைய முறையைப் பின்பற்றியே லெனின் பணியாற்றினார். இதன் மூலம் மட்டுமே சம்பந்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சனையின் ஆழத்தை விரிவாகப் புரியவைக்க முடியும்.
மேலும் பிரச்சனையைத்
தீர்ப்பதற்கான வழிமுறை களையும் விளக்கி புரியவைக்க முடியும்.
மேலும் உழைக்கும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இதற்கு மாறான வகையில், அதாவது உழைக்கும் மக்கள் சந்திக்கும்பிரச்சனைகளைமேலோட்டமாகவும் குறுகிய அளவிலும் பார்த்துஅந்தப்
பிரச்சனைகளை பெயரளவுக்கு தீர்த்துக்கொள் வதற்கான போராட்டங்களில்
ஈடுபட்டால் பிரச்சனைகளை முழுவதுமாக தீர்க்க முடியாமல் போராட்டங்களை தொடர வேண்டும் என்றஉணர்வு மங்கி சோர்வடைந்து போராட்டங்களின் மீதும் கம்யூனிச அமைப்புகளின்
மீதும்உழைக்கும் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள். ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும்
லெனின் காட்டிய
வழியில் தனது எழுத்து மற்றும் பேச்சுக்களை அமைத்துக்கொண்டு மேலே கண்ட லெனினியமுறையில் செயல்படுவதன்
மூலமே உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை உணர்வை ஊட்டி தொடர்ந்து உழைக்கும் வர்க்கமானது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் வரை விடாப்பிடியான போராட்டத்தை நடத்துவதற்கு உழைக்கும் வர்க்கத்தை தயார்படுத்த முடியும்.
6. கம்யூனிஸ்டுகள்
தங்களது கருத்துக்களை
எழுதுவதற்கும் பேசி பிரச்சாரம் செய்வதற்கும் முன்பு தாங்கள் கையிலெடுக்கும் பிரச்சனைகளைப்
பற்றி விரிவாக தகவல்களை சேகரிக்கவேண்டும், அந்தப் பிரச்சனை தொர்பான தோழர்களுடன் கலந்துரையாடி விவாதிக் வேண்டும்.
இதன் அடிப்படையில்
முடிவுகள் எடுத்து அதனையே தனது பிரச்சாரத்துக்கு அடிப்படையாகக் கொள்ளவேண்டும். இத்தகைய முறையைப் பின்பற்றியே லெனின் பணியாற்றினார். இதன் மூலம் மட்டுமே சம்பந்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சனையின் ஆழத்தை விரிவாகப் புரியவைக்க முடியும்.
மேலும் பிரச்சனையைத்
தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் விளக்கி புரியவைக்க முடியும்.
மேலும் உழைக்கும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இதற்கு மாறான வகையில், அதாவது உழைக்கும் மக்கள் சந்திக்கும்பிரச்சனைகளைமேலோட்டமாகவும் குறுகிய அளவிலும் பார்த்து அந்தப் பிரச்சனைகளை பெயரளவுக்கு தீர்த்துக் கொள்வதற்கான போராட்டங்களில்
ஈடுபட்டால் பிரச்சனைகளை முழுவதுமாக தீர்க்க முடியாமல் போராட்டங்களை தொடர வேண்டும் என்ற உணர்வு மங்கி சோர்வடைந்து போராட்டங்களின்
மீதும் கம்யூனிச அமைப்புகளின் மீதும் உழைக்கும் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்.
ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் லெனின் காட்டிய வழியில் தனது எழுத்து மற்றும் பேச்சுக்களை அமைத்துக்கொண்டு மேலே கண்ட லெனினிய முறையில் செயல்படுவதன் மூலமே உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை உணர்வை ஊட்டி, தொடர்ந்து உழைக்கும் வர்க்கமானது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் வரை விடாப்பிடியான போராட்டத்தை நடத்துவதற்கு உழைக்கும் வர்க்கத்தை தயார்படுத்த முடியும்.
6. கம்யூனிஸ்டுகளாகிய நாம் லெனினை பின்பற்றி நமது எழுத்து நடையையும் பேச்சு
நடையையும் அமைத்துக்கொள்ள
வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதாவதுலெனின்
பிரச்சனைகளை எப்படி உணர்ந்தோரோ அந்த வகையில் பிரச்சனைகளை உணர வேண்டும். பிரச்சனைகளை குறிப்பாகப் பரிசீலிக்காமல்
பொதுவாக மட்டும் பார்த்தும், தேவையற்ற வெற்றுச் சொற்றொடர்களைப்
பயன் படுத்துவதும், புறநிலையிலிருந்து பிரச்சனையைப் பார்க்காமல் சுய அபிப்பிரயாயத்தை வெளிப்படுத்துவதும் தவறானதாகும்.
இத்தகைய தவறுகளை கம்யூனிஸ்டுகள் தவிர்க்க வேண்டும்.
7. உழைக்கும் மக்களிடம் நாம் பேசிப் பழகி பயில வேண்டும்.
நாம் புத்தகங்களில்
படித்துப் புரிந்துகொண்ட மொழியில் மக்களிடம் பேசி, அதனை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அதனால் எவ்விதமான பயனும் இல்லை. ஆகவே மக்களிடம் பேசி மக்களுக்கு உண்மையைப் புரிய வைத்த நமது முந்தைய போராளிகள் பயன்படுத்திய
மொழியில் நாம் மக்களிடம் பேச வேண்டும். நாம் பேசுகின்றவற்றை மக்கள் புரிந்து கொண்டார்களா என்பதை மக்களிடம் நாம் கேட்டுத் தெரிந்துகொள்ள
வேண்டும். புரியவில்லை என்றால் மக்கள் புரிந்து கொள்ளும்படி மக்களுக்கு தெரிந்த விசயங்களை எடுத்துச் சொல்லி அதோடு ஒப்பிட்டு நமது கருத்துக்களை மக்கள் புரிந்துகொள்ளும் விதமாகப் பேச வேண்டும். தொடர்சியான பயிற்சியின் மூலமே இதனை நாம் சாதிக்க முடியும் இதற்கு நமக்கு பொறுமையும் விடாமுயற்சியும் தேவை.
உண்மையில் மக்களின் விடுதலையை லட்சியமாகக்கொண்டுசெயல்படுபவர்களால் மட்டுமேஇதனை சாதிக்க முடியும்.
அத்தகைய லட்சியம் கொண்டவர்களால் மட்டுமே கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின்சிந்தனைகளையும்உணர்வுகளையும் புரிந்துகொண்டு
பிரதிபலிக்கமுடியும். அவ்வாறு கம்யூனிஸ்டுகளின் எழுத்துக்களும்
பேச்சும் கோடிக்கணக்கான
உழைக்கும் மக்களின் சிந்தனைகளையும்
உணர்வுகளையும் சரியாகவும் தெளிவாகவும் பிரதிபலிக்க வேண்டும். இந்தக் கருத்தைத்தான் தோழர் டிமிட்ரோவ் நமக்கு வழிகாட்டியுள்ளார். இதனை பின்பற்ற வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.9. கம்யூனிஸ்டுகள்
எழுதும் போதும், பேசும் போதும் அவர்களுக்கு முன்பு உள்ள வாசகர்களை,
அறியாமையிலும் எளியவர்களாகவும் இருப்பவர்கள் என்று கருத வேண்டும்.
அத்தகைய வாசகர்களுக்காகவே நாம் பேசுகிறோம் அல்லது எழுதுகிறோம் என்பதை எப்போதும்
கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் கம்யூனிஸ்டுகளின் கருத்துக்கள் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் போய்ச்சேரும், அவர்களும் கம்யூனிஸ்டு களின் கொள்கைகளை தெளிவாகப்புரிந்து கொண்டு கம்யூனிஸ்டு களை ஆதரிக்க முன்வருவார்கள்.
10. நாம் சந்திக்கும் அனைத்து வகையான பிரச்சனைகளையும் நாம் நெருங்கிச் சென்று
கவனிக்க வேண்டும்.
பிரச்சனைகளை மேலோட்டமாகவோ
அதன் ஒரு பகுதியை மட்டுமோகவனிக்காமல் பிரச்சனையை முழுமையாகப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு பிரச்சனைகளை ஆழமாகப் பார்த்துத்தான்
அதிலிருந்து முடிவுகளை எடுத்து பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று லூசுன் போதித்தார். இந்த லூசுனின் போதனையை கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டும் என்று மாவோ வலியுறுத்தானார்.
11. கம்யூனிஸ்டுகள்
எழுதும் போது தேவையற்ற விசயங்களோ,
சொற்களோ வராமல்பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு அவர்கள் எழுதியவற்றை ஒரு தடவைக்கு மேல் பல தடவை வாசித்து தேவையான திருத்தங்களைச்
செய்ய வேண்டும்.
தற்போது சமூகமானது முன்பு போல் இல்லாமல் ஏராளமான சிக்கல் உள்ள சமூகமாக மாறிவிட்டதன்
காரணமாக இந்த சிக்கல்களைப் பற்றி எழுதும்போது மிகமிக கவனம் தேவைப்படுகிறது. ஆகவேதான் எழுதியதை மீண்டும் மீண்டும் பல தடவை படித்துப் பார்த்து தேவையான விசயங்களை விடுபட்ட விசயங்களை சேர்த்திடவும், தேவையற்ற விசயங்களை நீக்கவும் வேண்டும்.
இவ்வாறு திருத்தப்பட்ட எழுத்துக்களையே
கம்யூனிஸ்டுகள் வெளியிட வேண்டும். கம்யூனிஸ்டுகள் பேசுவதற்கும் இதே முறையைத்தான் கையாள வேண்டும் என்று லூசுன் வலியுறுத்தினார்.
12. கம்யூனிஸ்டுகள்
தங்களுக்கு மட்டும் புரிகின்ற மொழியில் அதாவது பிறருக்கு புரியாதவகையில் எழுதவோ பேசவோ கூடாது. அவ்வாறு பிறருக்குப் புரியாத வகையில் பேசினாலோ எழுதினாலோ அதனால் அவருக்கோ அல்லது பிறருக்கோ (மக்களுக்கோ)
எவ்விதமான பயனும் இல்லை. ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும்
மக்களுக்கு புரியும் வகையில் எழுதவும்,
பேசவும் தொடர்ந்து பயிற்சி பெறவேண்டும். கம்யூனிச இலக்கியங்கள் சமூக விஞ்ஞானமாக இருப்பதால் அந்த விஞ்ஞானத்தில்
பயன்படுத்தப்படும் பல கலைச்சொற்கள் மக்களுக்கு புதியனவாகவும் புரியாதவையாகவும் இருப்பது இயல்பானதே. ஆகவே கம்யூனிஸ்டுகள் மார்க்சியத்தில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களின் பொருளை எந்தளவுக்கு மக்களுக்கு எளிமையாகப் புரிய வைக்க முடியுமோ அந்தளவுக்கு எளிமையாகப் புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
13.மார்க்சியவாதிகள் பொதுவான மார்க்சியத்தின்அடிப்படைகளை கற்றுக் கொண்டால் மட்டும் போதாது. கூடுதலாக அந்த மார்க்சியத்தால் முன்வைக்கப்படும் பொதுவிதிகளை குறிப்பிட்ட நாட்டின் குறிப்பான பிரச்சனைகளோடு பொருத்தி பார்த்து குறிப்பான பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும்
கண்டுபிடிக்க வேண்டும்.
அவ்வாறு ஒவ்வொரு நாட்டின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஒருவர் கண்டுபிடிக்க
முடியவில்லை என்றால் அவர்
மார்க்சியத்தை சரியன முறையில் பயன்படுத்தவில்லை என்று பொருளாகும்.
அதாவது மார்க்சியத்தை வெறுமனே வரட்டுத்தனமாகப் பயன்படுத்தக்
கூடாது. ஒவ்வொரு நாட்டில் நடைபெறும் புரட்சிகர நடைமுறையுடன்இணைத்தேகம்யூனிஸ்டுகள் மார்க்சியத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் தேர்தலில்நீண்டகாலமாகஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நடைமுறையினால்
ஏற்பட்ட விளைவுகளையும் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் கலந்துகொள்வது
பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமே தேர்தல் பற்றிய மார்க்சியக் கோட்பாடுகளை கம்யூனிஸ்டுகள்
புரிந்துகொள்ள வேண்டும்.
14.ஒவ்வொருகுறிப்பிட்டபிரச்சனைகளையும் குறிப்பான முறையில் வெளிப்படுத்த
வேண்டும். அரூபமான அல்லாது தெளிவில்லாத மனபாங்கு குறைக்கப்பட வேண்டும். வறட்டுவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.
இதற்குப் பதிலாக ஒவ்வொரு நாட்டின் உயிரோட்டமான தேசியபாணி வளர்க்கப்பட வேண்டும்.
அதே வேளையில் தேசிய வடிவத்தையும்
சர்வதேச உள்ளடக்கத்தையும் பிரிக்கக் கூடாது. அதாவது தேசத்தை மறுக்கும் சர்வதேசத்தையும், சர்வதேசத்தை மறுக்கும் தேசியத்தையும்
கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இவ்விரண்டுமே
கம்யூனிஸ்டுகளுக்கு இரண்டு கண்களாகும். ஒரு கம்யூனிஸ்ட் ஒரு தேசியவாதியாக இருக்கும்அதேவேளையில் சர்வதேசவாதி யாகவும் இருக்கிறார். அதேபோலவே சர்வதேசியவாதியாக இருக்கும் அதே வேளையில் தேசியவாதியாகவும் இருக்கிறார். மேலும் தேசியவாதியாக இருக்கும் போது ஒரு கம்யூனிஸ்ட் ஒடுக்கப்படும் தேசத்தின் பிரதிநிதியாக
இருந்து ஒடுக்கும் தேசத்தைச் சேர்ந்த ஏகாதிபத்தியவாதிகளைஎதிர்த்துப் போராடும் நோக்கத்திலிருந்து ஒடுக்கப்படும்
தேசத்தின் தேசியவாதியாக
இருக்க வேண்டும். இதற்கு மாறாக ஒடுக்கும் தேசத்தின் ஆதரவாளராக இருந்துகொண்டு ஒடுக்கும் தேசத்தின் தேசியவாதியாக
இருக்கக்கூடாது. உதாரணமாக ஒடுக்கப்படும் நாடான இந்திய நாட்டின் மீது பற்றுக்கொள்வது அவசியமே. இதற்கு மாறாக இந்தியா போன்ற நாடுகளை ஒடுக்கும் அமெரிக்க நாட்டின் மீது பற்றுக்கொண்டவராக ஒரு கம்யூனிஸ்ட் இருக்கக் கூடாது.
15. இன்றைய கம்யூனிஸ்டுகளில் பலர் நமது மார்க்சிய ஆசான்கள் எவற்றையெல்லாம் கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும், எவற்றையெல்லாம்
கம்யூனிஸ்டுகள் செய்யக்கூடாது
என்று போதித்தார்களோ, அந்த போதனைகளையெல்லாம் ஒரு காதில் வாங்கிவிட்டு
மறுகாதில் வெளியே விட்டுவிடுகிறார்கள். நமது ஆசான்கள் எவற்றையெல்லாம்
செய்யக்கூடாது என்றுபோதித்தார்களே அவற்றைத்தான் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய கம்யூனிஸ்டுகளின் மீது மக்களுக்கு இருக்கும் மதிப்பு, செல்வாக்கு,நம்பிக்கை போன்றவைகள் குறைந்துகொண்டே இருக்கிறது.
கம்யூனிஸ்டுகளுக்கும் பிற முதலாளித்துவ கட்சியினருக்கும் இடையிலான வேறுபாடுகள் மறைந்து வருகிறது. பிற முதலாளித்துவ கட்சியினரைப்
போலவே கம்யூனிஸ்டுகளும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே இந்த நிலை மாறி கம்யூனிஸ்டுகள்
மக்களின் செல்வாக்கையும் நம்பிக்கையையும் பெற வேண்டுமானால் மார்க்சிய ஆசான்கள் எவற்றையெல்லாம்
செய்யக் கூடாது என்று போதித்தார்களோ அத்தகைய தவறான செயல்களில் கம்யூனிஸ்டுகள் ஈடுபடக் கூடாது. மேலும் நமது ஆசான்கள் எவற்றையெல்லாம் கம்யூனிஸ்டுகள்
செய்ய வேண்டும் என்று போதித்தார்களோ அவற்றையெல்லாம்
கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும். அதன் மூலம் மட்டுமே கம்யூனிச அமைப்புகள் மக்களிடம் செல்வாக்கை பெற்று வளர முடியும்.
17. மார்க்சிய ஆசான்கள் என்று மார்க்சிய லெனினியவாதிகளால் சொல்லப்படும் தலைவர்கள்,
காரல் மார்க்ஸ்,
எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகிய ஐப்பெரும் தலைவர்களும் அவர்களை முரணின்றி பின்பற்றும் டிமிட்ரோ,
ஜார்ஜ்பொலிட்சர், ஜார்ஜ்தாம்சன், சூயென்லாய் போன்றவர்கள்தான் நமது மார்க்சிய ஆசான்கள் ஆவார்கள். இவர்களுக்கு மாறாகவும் எதிராகவும் உள்ளவர்கள்,
டிராட்ஸ்கி, காவுத்ஸ்கி,
குருஷேவ், டெங்சியோபிங், பிராங்பார்ட்வாதிகள் போன்றவர்கள் மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியத்திற்கு எதிரானவர்கள். இவர்கள் நமது எதிர்மறை ஆசான்கள் ஆவார்கள். ஆகவே நாம் மார்க்சிய ஆசான்களது போதனைகளை படித்துப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் நமது சிந்தனையையும் செயல்பாட்டையும் வகுத்துக்கொள்வோம். அதே வேளையில் நமது எதிர்மறை ஆசான்களின் பிற்போக்கு மக்கள் விரோத போதனைகளை புறந்தள்ளுவோம். அதனை எதிர்த்துப் போராடுவோம். அதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் சிறந்த கம்யூனிஸ்டாக வளர்வதற்கு முயற்சி செய்வோம்.... தேன்மொழி…
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment