எதார்த்த வாழ்க்கை சூழலை புரிந்து செயல்பட முயலுவோம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
சமூக சிக்கலை புரிந்து களமாட கிளம்பிய பலரும் பல்வேறு நடைமுறையில் உள்ளனர். உண்மையாலுமே அந்த நடைமுறை இங்குள்ள மக்களின் பிரச்சினையை தீர்க்கவல்லதா? எனும் பொழுது உள்ள அமைப்புமுறைக்குள்ளேயே தனக்கான இடம் தேடும் சீர்திருத்தவாதம் மக்களின் பிரச்சினையை தீர்க்க அல்ல அவை காலம் தாழ்த்தவே பயன்படுகிறது ஒரு சிலருக்கு சலுகை பலரோ அதே நிலையில் தொடரும் அவலம் ஆக இதனை முழுமையாக மாற்ற வேண்டும் என்கிறது மார்க்சியம் அதற்கு சமூகத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் அதனை இங்குள்ள பல மார்க்சிய வாதிகளும் கட்சிகளும் செய்து நடைமுறை படுத்திக் கொண்டுள்ளது அதில் என்ன சிக்கல் எனலாம் அதனை விரிவாக பேசுவோம்....
நாம் தேட வேண்டிய இடம்
1). இன்றுள்ள கல்வி
2). பல்வேறு தொழிற்பிரிவினை
3). எவ்வகையான உழைப்பு சக்திகள் சமூகத்தில் உள்ளன?
4). பலர் சொல்வது போல் ஜாதிய சமூகமா? அப்படியெனில் இன்றும் உற்பத்தியில் ஜாதிய அடிப்படை உள்ளதா?
5). நம் சமூகத்தின் இயங்கு சக்தி எவை?
6). நம் சமுக உற்பத்தி முறை என்ன?
7). நம் சமூகத்தில் உள்ள உற்பத்தி சக்திகளின் வகைபாடு என்ன?

9). சமூகம் இன்றுள்ள நிலையில் நாம் புரிந்துக் கொண்டவை என்னே?
இன்றைய கல்விக்கொள்கையை புரிந்துக் கொள்ள ஒரு சிறிய அசைபோடல்...
*மெக்காலேவுக்குத் தேவைப்பட்டது பிரிட்டிஷ் காலக் கணக்காளர்கள் என்றால் ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டது பில்கேட்ஸின் வேலையாட்கள்; ஆனால் மோடியின் தேவை மேலும் மாறுபட்டது. அவ்வளவே.*
இவை எவையும் உழைக்கும் மக்களின் தேவையை ஒட்டியல்ல சுரண்டும் வர்க்க தேவையை ஒட்டியே...
தொடரும் இன்னும் தேடுதல்கள்... சி.பழனி
No comments:
Post a Comment