இன்றைய வகுப்பிற்கான தேடல்
நேற்றைய ஒரு கேள்வி நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று ஒரு தோழரின் கேள்வி அவருக்கான சில பதில்கள் இதில் அடக்கம்...
சீர்திருத்தம் பற்றி அடுத்த பதிவு எழுதுகிறேன் இங்கே அரசு பற்றிய புரிதலில் இங்குள்ள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து அவர்கள் உழைக்கும் மக்களுக்கு விரோதமாக செயல்படுவதை குறித்து இந்தப் பகுதியில்பார்ப்போம்...
லெனின் காலத்தில் திருத்தல்வாதியான காவுத்ஸ்கியின் மார்க்சியத்தை திருத்திய வாதங்களை முறியடிப்பதன் மூலம் லெனின் அரசு பற்றிய மார்க்சின் போதனைகளை மட்டுமல்லாது மார்க்சியத்தை பாதுகாத்தார்.
எனினும் இன்றைய காலத்திலும் காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் மட்டுமல்ல ஏராளமான திருத்தல்வாதிகள் அரசுபற்றிய மார்க்சிய கோட்பாடுகளை திருத்தியும் மார்க்சியத்திற்கு நேர் எதிரான கொள்கைகளையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள். அவர்களைமுறியடிக்க அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை படித்து உள்வாங்கி முன்னணிகளை வளர்த்திடுவோம்.
அரசின் தோற்றத்தைப் பற்றி குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் என்ற நூலில் எங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். அதாவது ‘’அரசானது எவ்வகையிலும் வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது வலுக்கட்டாயமாய் இருத்தப்பட்ட சக்தியல்ல; இதேபோல அது எவ்வகையிலும் ஹெகல்வலியுறுத்தும் ‘அறநெறி கருத்தின் எதார்த்தஉருவோ’, ‘அறிவின் பிம்பமும்எதார்த்தமோ அல்ல’. மாறாக சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தசமுதாதாயம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக்கொண்டு விட்டது, இணக்கம் காணமுடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது, இந்த பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகி விட்டதை ஒப்புக்கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள் முரண்பட்டு மோதிக்கொள்ளும் பொருளாதார நலன்களைக்கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலை தணித்து ‘ஒழுங்கின்’ வரம்பிற்குள் இருத்தக் கூடிய ஒரு சக்தியை வெளிப்பார்வைக்கு சமுதாயத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியைநிறுவுவது அவசியமாயிற்று. சமுதாயத்திலிருந்து உதித்ததனாலும்சமுதாயத்திற்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக்கொண்டு மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்இந்தச் சக்தியே அரசு எனப்படுவதாகும்’’என்றார் எங்கெல்ஸ்.
இதன் மூலம் அரசானது சமுதாயத்திற்கு அப்பால் வெளியிலிருந்து உருவானது அல்ல. அதாவது கடவுளால் உருவாக்கப்பட்டதோ, அல்லது புனிதமானதோ அல்ல என்பது மார்க்சியம். ஆனால் முதலாளிகளும்சீர்திருத்த திருத்தல்வாதிகளும் அரசை புனிதமானது என்றே சித்தரிக்கின்றனர். சமுதாயத்தின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், வர்க்கங்கள் தோன்றி முரண்பாடுகள் தோன்றி பகைத்தன்மை வளர்ந்து,
இந்தப் பகையை தீர்க்க முடியாதநிலை ஏற்பட்டபோதுதான் அரசு தோன்றியது. இந்த வர்க்க பகைமையானது பயனற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சமுதாயமே அழிந்து விடாமல் பாதுகாப்பிற்கான ஒழுங்கைஏற்படுத்துவதற்காகவே அரசு அவசியம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அரசானது சமூகத்திற்கு மேலானது என்றும் அதற்குகட்டுப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தை விதைத்துஉருவாக்கப்பட்டதுதான் இந்த அரசாகும்.
மேலும் சமூகத்திற்கு மேலானதாக நிறுவிக்கொண்ட அரசானது மேலும் மேலும் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு மக்களுக்கு எதிரான பகை சக்தியாகவே அரசு மாறிவிட்டது. இந்தஉண்மையை மூடிமறைத்துவிட்டு அரசை மக்களின் நண்பனாகவும், மக்களுக்காக பாடுபடும் நிறுவனமாகவும் அதிலுள்ள சிலர் தவறு செய்வதால்அரசே தவறானது என்று கருதக்கூடாது என்று முதலாளித்துவ வாதிகளும் சீர்திருத்த திருத்தல்வாதிகளும்கருதுகிறார்கள்.
‘’வர்க்கப்பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும்வெளியீடுமே அரசு’’இதுதான் அரசு பற்றிய மிகத்தெளிவான மார்க்சியகோட்பாடாகும். எங்கே, எப்பொழுது எந்தளவுக்குவர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம்காண முடியாதவை ஆகின்றனவோ,அங்கே அப்பொழுது, அந்தளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானதுவர்க்கப் பகைமைகள் இணக்கம்காணமுடியாதனவாய் இருத்தலை நிருபிக்கிறது என்பது மார்க்சியம் ஆகும்.
இதிலிருந்து நாம் வந்தடையும் முடிவுஎன்ன? அரசு ஒன்று இருந்தால்அங்கே வர்க்கங்கள் இருக்கிறது மேலும் அங்கே வர்க்கப்பகைமைகள் நிலவுகின்றது என்பது பொருளாகும். அதே போலவே வர்க்கங்களும் வர்க்கப் பகைமைகளும் நிலவும் சமூகத்தில் அரசுஎன்ற ஒரு நிறுவனம் கட்டாயம் இருக்கும். இந்த கோட்பாட்டிலிருந்துதான் சோசலிச சமூகமாக இருந்தாலும் அங்கே தொழிலாளர்களின் அரசு இருக்கும் அதேநிலையில் சோசலிச சமூகத்திலும் வர்க்கங்களும் வர்க்க பகைமைகளும் இருக்கும் என்று மார்க்சியம் வரையறுத்தது. அவ்வாறு சோசலிச சமூகத்தில் முதலாளி வர்க்கங்களின் அதிகாரம் ஒழிக்கப்பட்டிருந்தாலும், முதலாளித்துவ வர்க்கங்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டிருக்காத நிலையில், வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் நீடிக்கும் நிலையில் முதலாளித்துவ வர்க்கங்களை முற்றிலும் ஒழிக்கும் வரை பாட்டாளி வர்க்கத்திற்குஅரசியல் அதிகாரம் வேண்டும் என்கிறது மார்க்சியம்.
மார்க்சியம் கூறும் இந்த உண்மையைதிருத்தி, புரட்டிடும்முதலாளித்துவவாதிகளும், சீர்திருத்த திருத்தல்வாதிகளும் இரண்டுவகையாகமார்க்சியத்தை திருத்துகிறார்கள்.
எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டங்களும் உள்ளனவோஅங்கே மட்டும் அரசு இருக்கிறதுஎன்ற புறநிலை உண்மையை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும் இந்த வர்க்கப்பகைமைகளுக்குஇணக்கம் காண்பதற்காகவே அரசு உருவாகிறது என்றும்அரசானது பகைவர்க்கங்களுக்கு இடையே இணக்கம் காண்பதற்கான நிறுவனம்தான் அரசு என்று வாதிடுகிறார்கள். ஆனால் பகை வர்க்கங்களுக்கு இடையே இணக்கம்காண முடிந்திருந்தால் அரசு என்பதே தோன்றுவதற்கு அவசியமில்லை என்பதுதான் மார்க்சின் கருத்தாகும்.
அதாவது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததன்விளைவே அரசு என்பதுதான் மார்க்சின் கருத்தாகும். இந்த கருத்தைத்தான் திருத்தல்வாதிகள்இணக்கம் காணமுடியாத வர்க்கப் பகையையை இணக்கம்காணச் செய்ய முடியும் என்று திருத்துகிறார்கள். இதன் மூலம் வர்க்கப்பகைமைகள் இணக்காணமுடியாதவை என்ற உண்மையை மூடிமறைத்து இந்த அரசானது வர்க்கப்பகைமையை ஒழித்துவிடும் என்று பொய்ப் பிரச்சாரம்செய்கிறார்கள்.மார்க்சின் கருத்துப்படி ‘’வர்க்க ஆதிக்கத்திற்கான ஓர்உறுப்பே, ஒரு வர்க்கம் பிற வர்க்கங்களை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு’’ என்ற புகழ்பெற்றமார்க்சிய கோட்பாட்டை இவர்கள் மறுக்கிறார்கள்.
வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்தி அதன்வாயிலாக இந்த ஒடுக்குமுறையைச் சட்டமாக்கி, நிரந்தரமாக்கிடும் ‘ஒழுங்கை’ நிறுவதுவே அரசாகும் என்கிறது மார்க்சியம். இதற்கு மாறாக குட்டிமுதலாளித்துவவாதிகள் இந்த ‘ஒழுங்கை’வர்க்கங்களை ஒடுக்குவதற்கான ஒழுங்கு என்று பார்ப்பதற்கு எதிராக வர்கங்களுக்கு இடையில் இணக்கம் உண்டாவதற்கான ஒழுங்கு என்று பார்க்கிறார்கள்.மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஒடுக்கும் முதலாளிகளின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட மக்களின் போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடமிருந்து பறிப்பதல்ல, மாறாக வர்க்கங்களுக்கு இடையே இணக்காண்பதற்காக மோதலை மட்டுப் படுத்துவதுதான் என்று குட்டி முதலாளித்துவ வாதிகள் வாதிடுகிறார்கள். இதன் மூலம் முதலாளித்துவ அரசானது, உழைக்கும் மக்கள் முதலாளித்துவ அரசை எதிர்த்துப் போராடும்போது அந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காக தனது வன்முறை கருவிகளான போலீசையும்இராணுவத்தையும்ஏவிவிடுகின்ற எதார்த்த உண்மையை மூடி மறைக்கிறார்கள்.
முதலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையில் இணக்கம்காண முடியாத பகைத் தன்மைஉருவாகிவிட்டதால்,முதலாளிவர்க்கத்தின்அரசானது தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் அரசாக இருக்கிறது என்ற உண்மையை குட்டி முதலாளித்துவவாதிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.‘’மறுபுறத்தில், மார்க்சியத்தைப் பற்றிய காவுத்ஸ்கிவாதப் புரட்டு இன்னும்நுண்ணியம் வாய்ந்தது. அரசானது வர்க்க ஆதிக்கத்திற்கானஓர் உறுப்பு என்பதையோ, வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை என்பதையோ ‘தத்துவார்த்தத்தில் ’இப்புரட்டு மறுப்பதில்லை. ஆனால் அதுபாராமுகமாய் அது விட்டொழிப்பது அல்லது பூசிமெழுகிச் செல்வது இதுதான்: வர்க்கப் பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆகியதன்விளைவேஅரசு என்றால், அது சமுதாயத்துக்கு மேலானதாய்நின்று ‘மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்சக்தி ஆகும்’என்றால்,ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை பலாத்காரப் புரட்சியின்றி சாத்தியம் இல்லை என்பதோடு, ஆளும் வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்டதும்‘அயலானாய்இருக்கும்’இந்த நிலையின் உருவகமானதுமான அரசு அதிகார இயந்திரத்தை அழித்திடாமலும் இந்த விடுதலை சாத்தியமில்லை என்பது தெளிவு.’’ (லெனின்- அரசும் புரட்சியும்)இங்கே மார்க்சியம் அரசு பற்றிய சொன்னகருத்துக்களை எல்லாம் காவுத்ஸ்கி ஏற்றுக்கொள்கிறார். அதிலிருந்து இந்த அரசை பலாத்கார முறையில் ஒரேயடியாக ஒழித்துவிட வேண்டும் என்ற மார்க்சியத்திற்கு எதிரான தவறான இடதுசாரி முடிவிற்குவருகிறார். இந்த கருத்திற்கு மாறாக அரசை ஒரேயடியாக ஒழிக்க முடியாது என்றும், தற்போது நிலவும்முதலாளித்துவ அரசிற்கு முடிவுகட்டிவிட்டு, பாட்டாளிவர்கத்திற்கான இடைக்கால அரசை உருவாக்கி சமூகத்தைவர்க்கமற்ற சமூகமாகமாற்றியமைக்கும் போக்கில் அரசானது உலர்ந்து உதிரும்என்ற கருத்தை மார்க்சியம் முன்வைக்கிறது. அதுபற்றி தொடர்ந்து விரிவாகப் பார்ப்போம்.
இறுதியாக நாம் மனதில் பதிவுசெய்துகொள்ள வேண்டிய அரசு பற்றிய
குறிப்புகள்.
1. அரசு என்பதை சமூகத்திற்கு வெளியிலுள்ள சக்தி (கடவுள்) உருவாக்கவில்லை.
2. அரசு என்பது புனிதமானதும் அல்ல.
3.சமூகத்திலிருந்து உருவாகி சமூகத்திற்கு மேலானதாகஅரசுதன்னைகாட்டிக்கொள்கிறது.
4. அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை மறைத்துவிட்டு அதன் புரட்சிகரத் தன்மையை நீக்கிவிட்டு முதலாளித்துவ்வாதிகளும்
சீர்திருத்தவாத திருத்தல்வாதிகளும் நம்மை ஏமாற்றுகிறார்கள்.
5. சந்தர்ப்பவாதிகளால்குழப்பப்பட்ட மார்க்சிய போதனைகளில் முதன்மையானது அரசு பற்றிய மார்க்சியபோதனையே ஆகும்.
6. அரசு பற்றிய மார்க்சிய போதனைகளைநாம் புரிந்துகொள்ளவில்லைஎன்றால் நம்மால் மார்க்சியத்தின் அடிப்படைகளையேநம்மால்புரிந்துகொள்ள முடியாது. அதாவது மார்க்சின் போதனைகளிலேயேமுதன்மையானது அரசு பற்றிய அவரதுபோதனைகளே ஆகும்.
7. தற்போது இந்திய பெருமுதலாளிகளும் அந்நியகார்ப்பரேட்டு முதலாளிகளும் உழைக்கும் மக்களை சுரண்டிக்கொண்டும் கொடூரமாகபாசிச முறையில் ஒடுக்கிக் கொண்டிருப்பதற்கும் அடிப்படை இந்த அரசுதான் என்பதை நடைமுறையிலிருந்து புரிந்துகொள்ளவேண்டும்.
8. அரசு பற்றிய சந்தர்ப்பவாத தப்பெண்ணங்களைஎதிர்த்துப் போராடாமல்உழைக்கும் வர்க்கத்திற்கு விடுதலை இல்லை.
9. உழைக்கும் மக்கள் தங்களுக்கான வளமானவாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு மக்கள் என்னசெய்யவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு அரசுபற்றிய மார்க்சின் போதனைகளை எவ்விதமான திருத்தமுமின்றி தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும்.
10. அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டை என்றுமில்லாத அளவு திருத்திக் கொண்டிருக்கும் சூழலில் அரசு பற்றி மார்க்ஸ்உண்மையிலேயே என்ன போதித்தார் என்பதைநாம் தெரிந்துகொள்ளவேண்டியது நமது கடமையாகும்.
11. மார்க்ஸ், லெனின் காலத்திலேயே காவுத்ஸ்கிபோன்றவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்கள் முறியடிக்கப்பட்டது. எனினும்தற்காலத்திலும் காவுத்ஸ்கி போன்றவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்களை புதிய வடிவத்தில் சிலர்கொண்டுவந்து உழைக்கும்வர்க்க முன்னணிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள். அந்ததிருத்தல்வாதிகளை முறியடிக்க நாம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்களின் கருத்துக்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்.
12. வர்க்கப் பகைமைகள் இணக்கம்காண முடியாததன் விளைவே அரசு ஆகும்.
13. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததால்ஆளும் வர்க்கமானது உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவதை தவிர வேறுவழியில்லாத்தால் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்காக அரசைஉருவாக்கியது.
14. வர்க்கங்களுக்குஇடையில் மோதலை மட்டுப்படுத்துவதற்காகவே அரசுபாடுபடுகிறது என்ற பொய்யைச் சொல்லி, உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களைப் போட்டு ஒடுக்குவதுதான் அரசின் வேலையாகும்.
15. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததால்உருவான அரசால்ஒருபோதும் வர்க்கங்களுக்கு இடையிலான பகையை ஒழித்து வர்க்கங்களுக்கு இடையில் சமாதானத்தை கொண்டுவரமுடியாது.
16. வர்க்கங்களுக்குஇடையில் பகையை ஒழித்து சமாதானத்தைகொண்டுவர முடியும் என்ற கருத்தானது அரசுபற்றிய மார்க்சியபோதனையை திருத்திய சந்தர்ப்பவாத திருத்தல்வாதிகளின் கருத்தாகும் ...........
(இந்தப்பகுதி இலக்கு இணைய இதழ் 5 ல் இதே பகுதியில் பிடிஎப் வடிவில் உள்ளன வாசிக்க தோழர்களே)
தொடரும்....
No comments:
Post a Comment