பெண்விடுதலை பற்றி பல்வேறு போக்குகள் அதில் மார்க்சியம்

 பெண் விடுதலையும் உழைக்கும் உலக மகளிர் தினமும்-4

பெண்விடுதலையும் மார்க்சியமும்

பெண்விடுதலை என்பது சமூகவிடுதலையின் ஒருபகுதி என்றவகையில் பெண்கள் தமதுவிடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஏனைய போராட்டங்களுடனும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். பகுதியும், முழுமையும் இணையும் இத்தகைய போராட்டங் களினால்தான் முற்றுமுழுதான சமூக விடுதலையை விரிவுபடுத்த முடியும்.

நாம் வாழும் சமூகத்தில் பெண் ஒடுக்கு முறை போன்று பல்வேறு ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன.  ஒரு சமூகத்தின் பொருளாதார அமைப்பு,  கல்வி, கலை, கலாசாரம்,மத நம்பிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்குகின்ற அதிகார நிறுவனம் அரசாகும். 

அந்த வகையில் அதன்கீழ் உள்ள அனைத்து அடக்குமுறைகளுக்கும் அரசே காரணமாகின்றது.

முதலாளித்துவ அரசுகள் எங்கும் வசதி படைத்த ஒரு சாராரின் நலன்களைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

மனித வாழ்வைத் தீர்மானிப்பது ஜோதிடமோ, ஆண்டவன் தலையில் எழுதிய எழுத்துக்களோ, மாறும் கிரகங்களோ அல்ல.ஒரு நாட்டின் அரசும்,அதன் ஆளும்முறையும்தான் என்பதே அனுபவப்பூர்வமான உண்மையாகும். 

மனிதர்களால் உருவாக்கப பட்ட பொருளும் பணமும், முதலாளித்துவ சந்தையில் அவர்களையே அந்நியப்படுத்தி அநாதைகளாக்கியுள்ளது. 

அதிஷ்டத்தையும், அமானுட சக்திகளையும் நம்பி வாழும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. 

அரசை அமைத்தவர்களும்,அதனைச் சார்ந்தவர்களும் தம்மை அதிஷ்டசாலிகளாகவும், ஆண்டவனின் ஆசீர்வாதம் பெற்றவர்களாகவும் அன்றிலிருந்து இன்றுவரை கூறிக்கொள்கின்றனர்.

ஆளப்படுகின்ற மக்கள் பாவிகளாகவும்,சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

எனவே மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டிய மார்க்சியத் தத்துவம்,மக்களை ஒடுக்கும் அரசுகளை ஒழித்து,மக்கள் தமக்கான அரசுகளை உருவாக்கும் மார்க்கத்தையே காட்டி நிற்கின்றது. அந்த வழியிலே நின்று விடுதலைபெற்ற நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் பெருமளவு குறைந்துள்ளது.

புரிந்துக் கொள்ள
பெண்ணியத்தை ஆண்பெண் முரண்பாட்டுக்குள் குறுக்கிக்கொள்ளும் போது,ஆணைப் பிரதான எதிரியாக்கி,மற்ற முரண்பாடுகளை அலட்சியம்செய்யும் போக்கு எழுகிறது.
இது உயர்நடுத்தர வர்க்கம் சார்ந்த பெண்ணியவாதி களிடையே பொதுவாகக் காணப்பட்டு வந்த ஒன்றாகும். 
இதற்கான உதாரணங்களை ஒவ்வொரு நாட்டிலும் காணலாம். இப்போக்கின் ஒரு முக்கிய விளைவாக,பெண் விடுதலை என்பதைத் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணின் சமூக மேம்பாட்டை வைத்து அளக்கும் தன்மையையும் நாம் காணலாம்.
 ஒரு பெண் பிரதமராவதோ,ஜனாதிபதியாவதோ ஏன் இன்று ஜட்ஜ் ஆகியதாக்கட்டும் அவை எவையாயினும் அது சமூக அளவில் பெண்களது நிலையில் எந்த விதமான மேம்பாட்டின் அளவுகோலும் ஆகாது.
ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினர் அமைச்சராகியோ குடியரசுத் தலைவராகியோ இந்தியாவின் சாதி ஒடுக்குமுறை ஒழியவில்லை. 
தொழிலாளி வர்க்கத்தவர் அல்லது ஏழை விவசாயக் குடும்பத்தவர் ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்ததன் மூலம் முதலாளியமோ நிலவுடைமைச் சமுதாயமோஎங்கும் முடிவுக்கு வரவில்லை. 
ஒரு தமிழர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகினார் அப்பொழுது ஒடுக்குமுறை ஓயந்துவிட்டதா? தமிழர்களுக்கு என்ன பயன் கிடைத்தது? இன்று பழங்குடி இன பெண்தானே உயர் பதவியான ஜனாதிபதியாக உள்ளார் மனிப்பூரில் மட்டுமல்லாத அவரின் சொந்தப் பகுதியில் சொந்த இன மக்கள் மீது நடந்தேரும் வன்முறை மற்றும் கொடூரங்களை ஏன் அவர்காண வில்லை அவைதான் வர்க்க சார்ப்பு.... அந்த ஆளும் வர்க்க பிரதிநிதியாக உள்ளதனால்தான் அவர் அங்கே உள்ளார்.
இங்கே சிலர் கூறுவது போல் பொதுவானவை எவையும் இல்லை எல்லாவற்றிலும் வர்க்க சார்ப்பு உள்ளது.
ஒடுக்குமுறைகுள்ளாகி உள்ள பெண்களுக்கான விடுதலை என்பது எந்த நுகத்தடியின் கீழ் அமுக்கப்பட்டிருக்கிறார்களோ அந்த அடக்குமுறையை தூக்கியெறிந்து அதிலிருந்துதான் விடுதலை அவை சமூக விடுதலையோ இணைக்கப் படும் பொழுதே முழுமையான விடுதலையாகும் எங்கிறது மார்க்சியம்.
தொடரும்....
++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்