தத்துவமும் நடைமுறையும் இலக்கு 45 இணிய இதழிலிருந்து

 இந்த பகுதி எழுதுவதன் நோக்கம் லெனின் தன்நாட்டில் புரட்சிக்கு முன் தத்துவார்த்த தளத்தில் புரட்சிக்கு எதிரான புரட்சியை காட்டிக் கொடுக்கும் திருத்தல்வாதபோக்கைஅம்பலப்படுத்தினார்.  இன்று நமது நாட்டில் அதே காவுத்ஸ்கியவாதம் மேலோங்கியுள்ளது அதனை விவரிக்க இந்த தொடர்ஜனநாயம் என்று பொதுவாக பேசுவதும் பாராளுமன்றம் மூலம் உழைக்கும் மக்களுக்கு ஏதோ செய்வதாக பேசுவதும்   உண்மையில் மார்க்சிய வகைப்பட்டதா?

தத்துவமும் நடைமுறையும்

 லெனின் தனது நாட்டில் புரட்சிகர கம்யூனிஸ்ட்கட்சி உருவாக்கும் பொழுது இருந்த பல தடைகளான மார்க்சிய விரோதமானபோக்குகளைஅம்பலப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தினார் அன்றிருந்த திருத்தல்வாநிலைமைகளை அம்பலப் படுத்தியதோடு அல்லாமல் அவை புரட்சிக்கு பயனளிக்காது என்று தெளிவுபடுத்தினார். புரட்சியை நேசிப்பவர்களுக்கான போதனை அதற்கான புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அது செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதை மிகத் தெளிவாக அரிதியிட்டு குறிப்பிட்டு தெளிவுப்படுத்தினார் லெனின். அவர் போதித்த மார்க்சிய ததுவத்தைதான் நாம் நடைமுறை தந்திரம் என்கிறோம். அதனை செயல்படுத்த வேண்டியர்கள் கற்பதும் அதனை உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று செயல்படுத்தும் அதற்கான் பணியினையும் அதன் அவசியத்தையும் லெனின் வழிக்காட்டியுள்ளார்.

அதனை பற்றி நமக்கான ஒரு தேடல் இந்தப் பகுதி.

இதுவரை தத்துவியலர்கள்‌ உலகத்தைப்‌ பல்வேறு வழிகளில்‌ விளக்குதல்‌ மட்டுமே செய்தனர்‌. ஆயின்‌ அதை எப்படி மாற்ற வேண்டும்‌ என்பதே இப்போதைய விஷயமாகும்‌”

எனவே மார்க்சியம்‌ என்பது ஏனைய சமூகவியல்‌ கோட்பாடுகள்‌ போல வெறும்‌ வறட்டுச்‌ சூத்திரம்‌அன்று; அது செயலுக்கான வழிகாட்டியுமாகும்‌.மார்க்சியத்‌ திறனாய்வு என்பது சமூகவியல்‌ திறனாய்வை உள்ளடக்கியது; ஆனால்‌ சமூகவியல்‌ திறனாய்வு மட்டும்‌ அல்ல, வர்க்கங்களின்‌ இருத்தல்‌, வர்க்கப்‌ போராட்டங்களின்‌ மூலம்‌ வரலாறு வளர்தல்‌, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்‌ ஆகிய சமூக அரசியல்‌ நிலைபாடுகள்‌, உற்பத்தி முறையே சமூக அடித்தளம்‌ என்ற பொருளியல்‌ நிலைபாடு, ஆகியவற்றை வலியுறுத்துவதன்மூலம்‌ இது அறிவியல்‌ வகைப்பட்டதாகிறது.

மார்க்சியத்தை எவ்வாறு உருவாக்கினர்‌ என்பதைப்‌ பின்னால்‌ விரிவாகக்‌ காண்போம்‌. சமூக வளர்ச்சியானது தன்னெழுச்சிக்‌ காலத்திலிருந்து விலகி புரட்சிக்கானக்‌ காலமாக விரிவடைந்த தன்மையைப்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ அறிவு ஆழமடையும்‌ போக்கோடு தொடர்புபடுத்திப்‌ பின்‌ வருமாறு மாசேதுங்‌ குறிப்பிடுவார்‌. “பாட்டாளி வர்க்கம்‌ தன்‌ நடைமுறையின்‌ முதல்‌ கட்டத்தில்‌ இயந்திரங்களை உடைப்பதும்‌ தானாகவே எழுந்து போராடுவதுமான காலகட்டத்தில்‌ இருந்தது. அப்போது முதலாளியச்‌ சமூகத்‌ தைப்பற்றிய அதன்‌ அறிவு புலன்‌ அறிவாக இருந்தது. முதலாளியத்தின்‌ பல்வேறு நிகழ்ச்சிகளுடைய தனித்தனி அம்சங்களையும்‌ புறஉறவுகளை யுமே அது அறிந்திருந்தது. அந்தச்சமயத்தில்‌ பாட்டாளி வர்க்கம்‌ “தன்னுள்‌ ஒரு வர்க்கமாக” இருந்தது, உணர்வு பூர்வமான ஸ்தாபன அமைப்புடன்‌ பொருளாதாரப்‌ போராட்டமும்‌ அரசியல்‌ போராட்டமும்‌ நடத்தும்‌ கட்டத்தைத்‌ தன் நடைமுறை மூலமும்‌ மார்க்சும்‌ ஏங்கெல்கம்‌ அறிவியல்‌ அளவில்‌ தொகுத்து மார்க்சியமாக உருவாக்கிய நீண்டகாலப்‌ போராட்ட அனுபவம்‌ மூலமும்‌, பாட்டாளி வர்க்கம்‌ முதலாளித்‌துவச்‌ சமூகத்தின்‌சாராம்சத்தையும்‌ சமூக வர்க்ங்களுக்கு இடையிலான சுரண்டல்‌ உறவுகளையும்‌ தன்‌ வரலாற்றுப் பூர்வமான பணியையும்‌ புரிந்து கொள்ள முடிந்தது.” எனவே மார்க்சியம்‌ ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திய தத்துவமா என்ற கேள்‌விக்கு ஆம்‌ என்றே பதில்‌ தரலாம்‌. அது பாட்டாளிவர்க்கத்‌ தத்துவமாகும்‌. ஆயின்‌ அது பாட்டாளி வர்க்க நலனுக்கான தத்துவம்‌ மட்டும்‌ தானா என்று கேட்டால்‌ இல்லை என்றே பதில்‌ தரலாம்‌. ஏனெனில்‌ முதலாளியச்‌ சமூக முரண்பாடுகள்‌ முற்றி மோதல்‌ காலகட்டம்‌ உருவான பின்னால்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ நலனோடு சுரண்டப்படும்‌ வர்க்கங்கள்‌ அனைத்தின்‌ நலனும்‌ இணைந்துள்ளது. பாட்டாளி வர்க்‌ கத்தின்‌ விடுதலையோடுதான்‌ அனைத்து வர்க்கங்களின்‌ விடுதலை கட்டுண்டுள்ளது இதை ஏங்கெல்ஸ்‌ தெளிவாகக்‌ குறிப்பிடுகின்றார்‌: ”சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும்‌ வரும்‌ வர்க்கம்‌ (பாட்டாளி வர்க்கம்‌) சுரண்டியும்‌ ஒடுக்கியும்‌ வரும்‌ வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக்‌ கொள்ள வேண்டுமானால்‌ சமுதாயம்‌ அனைத்தையும்‌ சுரண்டலில்‌  இருந்தும்‌ ஒடுக்குமுறையிலிருந்தும்‌ என்றென்றைக்குமாய்‌ விடுவித்தே ஆகவேண்டும்‌ என்கிற இந்த அடிப்படைக்‌ கருத்து...…” மேலும்‌ இதற்கு முந்தைய வரலாற்று முற்போக்கு இயக்கங்களுக்கும்‌ பாட்டாளி வர்க்க இயக்கங்களுக்கும்‌ ஒரு பெருத்த வேறுபாடு உண்டு. முந்தைய வரலாற்று இயக்கங்கள்‌ எல்லாம்‌ சிறுபான்மையோரது நலனுக்கான சிறுபான்மையினரது இயக்கங்களே, ஆனால்‌ பாட்டாளி வர்க்க இயக்கம்‌ மிகப்‌ பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பெரும்பான்மையோர்‌ “தன்னுணர்வோடு நடத்தும்‌ சுயேச்சையான இயக்கமாகும்‌. இத்தகைய வழிகளில்தாம்‌, பாட்டாளி வர்க்கத்தத்துவம்‌ ஒடுக்கப்பட்ட அனைத்து வர்க்கங்களின்‌ நலனுக்கான தத்துவமாக உருமாறிவிடுகிறது எனலாம்‌.

சரி நாம் காணும் தத்துவ நடைமுறை என்ன பார்ப்போம்;- தத்துவமும் நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவை. நடைமுறையிலிருந்து தத்துவமும்; தத்துவத்திலிருந்து நடைமுறையும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததே.

இங்கே மார்க்சிய போதனையை மக்களுக்கு போதிக்க வேண்டுமெனில் அதற்கான அறிவு கம்யூனிஸ்ட்டுகளுக்கு வேண்டும் அல்லவா? அவைதான் சமூகத்தை ஆய்வு செய்வதும் அந்த மக்களிடமிருந்து கற்பதும் பின் அந்த மக்களின் பிரச்சினையை தீர்க்க மார்க்சிய போதனையின் அடிப்படையில் தீர்வை முன் வைத்து அதே மக்களுக்கு போதித்து ஒன்று திரட்டி அவர்களின் எல்லா பிரச்சினைக்கும் காரணமான சமூக அமைப்பை மாற்றுவதன் மூலமே தீர்வென்பதனை அவர்களின் நடைமுறையில் இணைத்து சரியான திசை வழியில் கொண்டு செல்ல வேண்டிய தலைமை படைத்ததுதான் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை இங்கேதான் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மக்கள்தான் உண்மையான இரும்புக் கோட்டை இந்த இரும்புக்கோட்டையை உருவாக்கும் இரும்புக் கற்கள் தனித்தனியாகவும் ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படாமலும் உள்ளது. இந்த இரும்புக் கற்களை அடுக்கி பூசி ஒரு சக்தி வாய்ந்த இரும்புக் கோட்டையை உருவாக்குவதுதான் கம்யூனிஸ்டுகளின் பணி இல்லையேல் ஆளுக்கொரு வழியில் பயணிக்க வேண்டியதுதான்... அதற்கு தேவை மார்க்சிய லெனினிய தத்துவ தெளிவு வெறும் மேற்கோள்களை காட்டுவதல்ல அந்த மக்களின் வாழ்வியலை புரிந்துக் கொள்வதும் அவர்களிடமிருந்து கற்று அதிலிருந்து அவர்களை விடிவிக்க ஒரே வழி மார்க்சியம் என்பதனை போதிப்பதும் கம்யூனிஸ்டுகளின் கடமை இல்லையேல் மக்கள் பின்னால் வால்பிடிக்க ஓடுவதுதான் நாம் செய்ய ஒன்றும் இருக்காது. 

சரி நம் சமூகத்தில் உள்ள நடைமுறையும் ஒரு மார்க்சியவாதிக்கு தேவையான நடைமுறையையும் பார்ப்போம் தோழர்களே. 

  எல்லாம் அவன் செயல், அவனன்றி அணுவும் அசையாது என்பது ஒரு தத்துவக் கோட்பாடு.இது ஒரு தத்துவக் கோட்பாடு என்பதை புரிந்து கொள்ளாமலேயே, பல மனிதர்கள் இந்தகோட்பாட்டைஏற்றுபின்பற்றுகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவர்களால்தீர்க்க முடியாது ஏனென்றால் நடப்பதெல்லாம் அவன் செயல் அதாவது கடவுளின் செயல்என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே அவர்களது பிரச்சனைகளை கடவுள் கவனித்து தீர்த்துவைப்பார் என்று நம்புகிறார்கள். கடவுளின் செயலுக்கு மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது என்றே மக்கள் நம்புகிறார்கள்.

எனினும் முதலாளிகள், தம் எதிரிகள், அரசியல் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர்கள் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் போது நடைமுறையில் மக்கள் அவர்களை எதிர்த்தே போரிடுகிறார்கள். அப்போது எல்லாம் அவன் செயல் போன்ற ஆன்மீக, கருத்துமுதல்வாததத்துவகண்ணோட்டத்தை புறக்கணித்து விடுகிறார்கள். தங்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை நடைமுறையில் புரிந்துகொண்டு அவர்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். அந்த வகையில் மக்கள் நடைமுறை பொருள்முதல் வாதியாக இருக்கிறார்கள்.

ஆகவே நாம் ஆழமாகப் பார்த்தால் மக்கள்பெரும்பாலும் ஆன்மீக கருத்துமுதல் வாதத்தை நம்புபவர்களாக இருந்தாலும் நடைமுறையில் பொருள் முதல்வாத அடிப்படையில் அவர்களது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வதை நாம் பார்க்கலாம். இவ்வாறு மக்கள் நடைமுறை பொருள்முதல் வாதியாக இருந்தாலும், அவர்கள் நடைமுறையில் அவர்களது எதிரிகளை எதிர்த்துப் போராடினாலும்,அவர்களதுபோராட்டத்தில் தோல்வியடைந்து விட்டால், அவர்களது எதிரிகளை எதிர்த்து தம்மால் போராட முடியாது என்று சோர்வடைந்து மீண்டும் எல்லாம் அவன் செயல் என்ற கருத்துமுதல்வாத தத்துவக் கண்ணோட்டத்திற்கு வந்துவிடுகிறார்கள். இந்த சூழலில் மக்களின் எதிரிகளை மக்கள் தங்களது ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் வீழ்த்த முடியும் என்பதையும் தமது தோல்வி தற்காலியமானதுதான். மக்களின் எதிரிகள் தங்களது சொந்த முரண்பாடுகளாலேயே பலவீனமடை வார்கள் என்பதையும் அவர்களை மக்கள் போராடி வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டினால், மக்கள் தொடர்ந்து போராடுவதற்கான தத்துவ வழிகாட்டல் இருந்தால் மக்கள் தொடர்ந்து போராடி அவர்களின் எதிரிகளை வீழ்த்துவார்கள்.

அந்த வகையில் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய தத்துவம்தான் வரலாற்று பொருள்முதல் வாதம் ஆகும். அந்த தத்துவ கண்ணோட்டத்தை உழைக்கும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது இலக்கின் முதன்மையான பணிகளில் ஒன்று என்று கருதியே இந்த கட்டுரையை இலக்கு வெளியிடுகிறது.

இத்தகைய மார்க்சிய தத்துவக் கண்ணோட்டத்தை அரைகுறையாகப் பெற்றவர்களாலும்,முற்றிலும் மார்க்சிய தத்துவ அறிவு இல்லாதவர்களாலும் ஒவ்வொரு பிரச்சனையிலும் அதன் தீர்விலும் ஒன்றுபட்ட கருத்திற்கு வரமுடியாது.ஆகவேதான் கம்யூனிஸ்டு களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் மார்க்சிய தத்துவ கண்ணோட்டத்தை பயிலவேண்டும் என்கிறோம். மேலும் கம்யூனிச அமைப்புத் தலைவர்கள் மார்க்சியத் தத்துவத்தை அணிகளுக்கு போதிக்க வேண்டும் என்கிறோம்.

தத்துவத்தை மெய்ஞானம் என்றும் கூறுவார்கள். மெய் என்றால் உண்மை என்று பொருள்படும், ஞானம் என்றால் அறிவு என்று பொருள்படும். ஆகவே மெய்ஞானம் என்ற சொல்லின் பெருள் உண்மையை அறிவதற்கான அறிவு என்று பொருள்படும். ஆகவே தத்துவ கண்ணோட்டம், அல்லது தத்துவத்தின் நோக்கமே உண்மையை அறிந்து கொள்வதற்கான ஆயுதமாக இருக்கிறது என்பதுதான்.

எனினும் தத்துவத்தில் இரண்டுவகைகள் உள்ளது. ஒன்று தத்துவத்தின் நோக்கத்திற்கானதுஅதாவது உண்மையை அறிந்துகொள்வதற்கு நமக்கு வழிகாட்டக் கூடியது. மற்றொன்றுதத்துவத்தின் நோக்கத்திற்கு எதிரானது, அதாவது உண்மையை நாம் அறிந்துகொள்வதற்கு தடையானது அல்லது எதிரானதாகும்.

தத்துவத்தின் உண்மையான நோக்கமான உண்மையை அறிந்துகொள்ள நமக்கு உதவக்கூடிய தத்துவம் என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல் வாதமாகும். இவ்விரண்டையும் இணைத்ததையே மார்க்சிய தத்துவம் என்பார்கள். இந்த மார்க்சிய தத்துவத்தை ஆழமாகப் புரிந்து கொண்டவர்களால் உண்மையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். மேலும் பொய்யையும் இனம்கண்டு புறக்கணிக்க முடியும். உண்மைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து உழைக்கும் மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டமுடியும்.

தத்துவத்தின் நோக்கத்திற்கு எதிரான பொய்யான தத்துவம்தான் ஆன்மீகவாதம் மற்றும்கருத்துமுதல்வாதமாகும். இந்த தத்துக் கண்ணோட்டம் கொண்டவர்களால் உண்மையைஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது. பொய்யானவற்றையே உண்மை என்று தலைகீழாக நம்புவார்கள், மற்றவர்களையும் நம்பவைத்து ஏமாற்றுவார்கள். இந்த தத்துமானது சுரண்டும் வர்க்கங்களை பாதுகாத்து உழைக்கும் மக்களை ஏமாற்றும் தத்துவமாகும். தத்துவத்தை நாம் ஏன் பயில வேண்டும்? எல்லாவற்றிற்கும் முதலும் மூலமும் பொருளே என்று ஒரு தத்துவம் கூறுகிறது. அதனையே பொருள்முதல்வாத தத்துவம் என்று அழைக்கப்படுகிறது. அந்த தத்துவத்தின் அடிப்படைகளை ஆரம்பக் கோட்பாடுகளை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே.

ஒரு குறிப்பிட்ட தத்துவத்துடனும், ஒரு குறிப்பிட்ட ஆய்வு முறையுடனும் மார்க்சியமானது இறுகப் பிணைக்கப் பட்டுள்ளது. அதாவது மார்க்சியமானது இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவத்துடனும், அதன் ஆய்வு முறையுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்ததத்துவத்தை நாம் அவசியமாக படித்தறிய வேண்டும். இதை நாம் கற்றுத் தேர்ந்தோமானால்நம்மால் மார்க்சியத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவ சீர்திருத்தவாதம், அடையாள அரசியல், பின்நவீனத்துவம், குறுங்குழுவாதம், திருத்தல்வாதம், கலைப்புவாதம் போன்ற மக்களுக்கு எதிரான தத்துவங்கள் கிளப்புகின்ற வாதங்களை நாம் முறியடிக்க முடியும்.

அதன் மூலம் நல்ல பயனளிக்கத்தக்க அரசியல் போராட்டத்தையும் நாம் நடத்திச் செல்ல முடியும். "ஒரு புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்கவே முடியாது" என்று லெனின் சொல்லியிருக்கிறார். இதனை நாம் எப்போதும் மறக்கக்கூடாது.

இதன் பொருள் நடைமுறையுடன் தத்துவம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

நடைமுறை என்றால் என்ன? ஒரு விஷயத்தை அல்லது தத்துவத்தை, விஞ்ஞானத்தை யதார்த்தத்தில், வாழ்க்கை அனுபவத்தில் வெளியிடச் செய்யும் அல்லது செயல்படுத்தும் செய்கையைத்தான் நடைமுறை என்கிறோம். உதாரணமாக தொழிலும் விவசாயமும் என்ன செய்கின்றன? இரசாயனத்துறையோ அல்லது பௌதீகத் துறையோ அல்லது உயிரியல் துறையோ சேர்ந்த தத்துவ விஞ்ஞானங்களை அவை யதார்த்த அனுபவமாக செய்து தருகின்றன. அதாவது நடைமுறையில் விவசாயத்தில் ஈடுபட்ட மனிதர்களின் அனுபவத்திலிருந்து விவசாயம் தொடர்பான அறிவியல் உண்மைகள் அல்லது விதிகள் கண்டுபிடித்து பொதுவான விதிகள் உருவாக்கப்படுகின்றன. இந்தப் பொது விதிகளைபுரிந்துகொண்ட மனிதர்கள் தங்களது விவசாய நடவடிக்கையில் செயல்படுத்து கிறார்கள். அத்தகையசெய்கைகளே நடைமுறையாகும்.

தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் படாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம்.

தோழர் மாவோ கூறுகிறார், "தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் படாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம்". மேலும்" மார்க்சியம்-லெனினியம் என்பது அம்பு போன்றது. ஆனால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடியாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது" என்கிறார்.

ஆகவே, தத்துவத்தையும் நடைமுறை யையும் இயந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது. சொந்த நாட்டின் ஸ்தூலமான நடைமுறையைப் படிக்க மறுக்கும் அதேவேளையில்,தத்துவத்தின்முக்கியத்துவத்தை யார் மிகைப்படுத்திக் கூறுகிறாரோ, அவர் வரட்டுவாதியாவர், அல்லது யார் (அனுபவத்தில்) நடைமுறையில் மாத்திரம் அக்கறை செலுத்தி தத்துவத்தின் முக்கியத்துவத்தை மறுக்கிறாரோ, அவர் அனுபவவாதியாவர்.

வரட்டுவாதம், அனுபவவாதம் இரண்டும் தவறானவை. நடைமுறை இல்லாத தத்துவம், தத்துவம் இல்லாத நடைமுறை இரண்டும் பயனற்றவை. இரண்டினதும் ஐக்கியம்தான் நமக்கு வேண்டும் ஒருகால் மாவோ குறிப்பிட்டது போல, மார்க்சியம்-லெனினியம் என்பது அம்பு போன்றது. ஆனால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடையாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது.

தத்துவம் என்றால் என்ன? எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்ப்பித்து சாதிக்க விரும்புகிறோமா அவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் அறிவுதான் தத்துவம் ஆகும்.

அவ்விதமான அறிவு எதுவும் இல்லாமலே ஒருவன் காரியம் பார்க்கலாம், ஆனால் அவன்செய்யும் காரியம், ஏற்கனவே செய்து பழகிப்போன போக்கிலே திரும்பத் திரும்பசெய்து கொண்டிருக்கிற காரியம்தான் (உதாரணமாக அரசியல் கட்சிகள்ஏற்கனவேசெய்துகொண்டிருக்கின்ற காரியமான, பிரசுரம் விநியோகிப்பது, போஸ்டர் ஒட்டுவது,ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற காரியங்களை சொல்லலாம்) அதற்குமேல் போகாமல், போகமுடியாமல் அவன் நின்றுவிட வேண்டியதுதான். அதே மாதிரி, இன்னொருவன் சும்மா தத்துவம் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படி பேசிக்கொண்டே இருப்பவனின் சிந்தனைகளும் திட்டங்களும் யதார்த்தத்தில் சித்திபெற சக்தியில்லாமல் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே நின்றுவிடுகின்றன. ஆகவே தத்துவமும் நடைமுறையும் இணைந்திருக்க வேண்டும். நமக்கு வேண்டியது என்ன தத்துவம், அது நடைமுறையுடன் எப்படி இணைந்திருக்க வேண்டும் என்பதுதான் நம்முன்னுள்ள பிரச்சனையாகும். ஒரு செயல்துணிவுள்ள ஊழியனோ, தொழிலாளியோ தவறு செய்யாமல் புரட்சிக்குரிய காரியங்களை செய்து கொண்டு போகவேண்டுமானால், அவருக்கு ஒன்று தேவைப்படுகிறது.

விஷயங்களைச் சரியாக ஆய்வு செய்து, புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் விவாதங்கள் நடத்தி முடிவிற்கு வருவதற்கு ஒரு சரியான ஆய்வுமுறை அவருக்கு இருக்க வேண்டும். சர்வரோக நிவாரணி மாதிரி எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தயாராக தீர்வை வழங்கக்கூடிய ஒரு வறட்டுத் தத்துவமும், குருட்டுச் சூத்திரமும் அவருக்குத் தேவையில்லை.

பின் எப்படிப்பட்ட தத்துவம் தேவை? என்றைக்கும் ஒரேமாதிரியாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கின்ற விஷயங் களையும்பார்த்து, அலசி, ஆராயும் ஒரு ஆய்வு முறைதான் தேவை. தத்துவத்தை நடைமுறையிலிருந்து என்றுமே பிரிக்காத ஒரு ஆய்வுமுறை தர்க்கம்(விவாதம்) செய்யும் முறையை வாழ்விலிருந்து பிரிக்காத ஒரு ஆய்வுமுறை அதுதான் அவருக்கு வேண்டியதாகும். அப்படிப்பட்ட ஆய்வுமுறை இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்ற தத்துவத்தில் காணக்கிடக்கிறது.

ஆகவே இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து விலகாமல், அதன் அடிப்படையில் உறுதியாக நின்றுகொண்டு மாறிக்கொண்டிருக்கின்ற பிரச்சனைகளை உள்ளது உள்ளபடி பார்த்து ஆய்வு செய்து பின்பு தோழர்களுடன் விவாதித்து முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.இதற்கு மாறாக இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை கைவிட்டுவிட்டு மாறிக்கொண்டிருக்கும் பிரச்சனைகளை மாறாமல் நிலையாக இருப்பதாகக் கருதிக்கொண்டு பார்த்து பிறரிடம் விவாதம் செய்யாமல் தனது அகநிலை விருப்பங்களிலிருந்து முடிவெடுத்து செயல்பட்டால் தோல்வியில்தான் முடியும்.

இதன் பொருள் நடைமுறையுடன் தத்துவம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

இந்திய கம்யூனிச கட்சியிலிருந்து நேற்று தோன்றிய சிறு குழுவரை நாங்கள் நடைமுறையில்தான் உள்ளோம் நீங்கள் கற்பனைவாதிகள் மக்கள் மத்தியில் வேலை செய்யாமல் பூட்டிய ரூமில் இருந்துக் கொண்டு தத்துவம் பேசுகின்றீர்கள் இன்னும் இத்தியாதி....

அதனை பற்றி நெடிய விவாதம் செய்ய நினைத்தாலும் அவை காது கொடுத்து கேட்க யாரும் தயார் இல்லை ஆனால் ஆளுக்கொரு வகையில் மக்கள் மத்தியில் களமாடிக் கொண்டுதான் உள்ளனர் கம்யூனிசம் பேசுபவர்கள்.

மக்கள் ஏனோ வேறு திசையில் போய் கொண்டுள்ளனர் ஏன் நேற்றுவரை கட்சியில் இருந்தவர்களே எதிர்நிலைக்கும் போகும் மோசமான நிலை நிலவச் செய்கிறது.

இதில் எங்கே கோளாறு உள்ளது என்று தொடரில் தேட முயற்சிப்போம்.

ஒரு கொச்சையான நடைமுறை உங்கள் முன் உள்ளவற்றை பற்றி பேச நினைக்கிறேன்.

தினம் தினம் நாம் நடைமுறையில் பார்க்கும்போது சங்கிகளின் வளர்ச்சியும் அவர்களுடைய செயலும் மேலோங்கி செல்கிறது.இவர்கள் மதவாதம் என்ற ஒற்றை மந்திரத்தை வைத்து மக்களை எய்த்து எப்படி மக்கள் மத்தியில் வளர்ந்தார்கள் தமிழகத்தில் நுழைய முடியாது என்றிருந்த நிலைப்போய் எல்லா பகுதிகளிலும் கொடியும் பேனரும் எப்படி காட்சி அளிக்கிறது? எப்போதாவது இதனை பற்றி நேர்மறையாக சிந்தத்துண்டா? வெறும் மதவாதமாக மட்டும் சுருக்கி விடாதீர்கள் அவர்கள் மக்கள் மத்தியில் எவ்வகையில் பணி செய்கின்றனர் சிந்தத்துண்டா?

ஆனால் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக பேசும் இடதுசாரிகள் மக்கள் மத்தியில் இருந்து விலகிக் கொண்டே உள்ளார்கள்.

உண்மையில் பார்க்கப் போனால் மக்களுக்கான விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம் மட்டும் தான் ஆனால் மக்கள் ஏன் அதை கிரகிக்கவில்லை? அங்கே தான் நடைமுறையில் சிக்கல் உள்ளது.

மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் அதாவது அரசு இயந்திரத்தை தலையாய அங்கமாய் கொண்டு இருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது. அதுபோலவே உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே அதாவது பாட்டாளி வர்க்க கட்சியை தலையாய அங்கமாய் கொண்டுள்ள அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது.

மார்க்சிய தத்துவம் இதர தத்துவங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுகிறது மற்ற மார்க்சியமல்லாத தத்துவங்கள் எல்லாம் அரசியல் அதிகாரத்தில் உள்ள அறிவாளிகளுடன் ஒன்று கூடியுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய மேட்டுக்குடி அறிவாளிகளோடு மட்டுமே சுருங்கிக் கொண்டுள்ளது. இவர்கள் தங்களது வர்க்க நலனை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளும் பொருட்டு நாட்டு மக்கள் மீது தமது தத்துவங்களை திணிப்பார்கள். ஆனால் மார்க்சிய தத்துவம் பரந்துபட்ட மக்களுடையது, உண்மையில் இந்த தத்துவமானது பெரும்பான்மையான உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களினுடைய தத்துவ கண்ணோட்டம் ஆகும்.

பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மக்கள் திரளை ஒன்றிணைப்பதும் இந்தத்து வத்தின் பால் அவர்களை கிரகித்து அவர்களை புரிய வைத்தலும், உழைக்கும் மக்கள் தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகித்துக் கொண்டு அதன்படி நடக்கத் துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சுக்கிருமிகளையும் மாபெரும் புயலான சீறி எழுந்து ஒரே அடியாகத் துடைத்தொழிப்பர். மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகிக்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலனை பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பு ரீதியான திரட்டுவதுமான இந்த இமாலய பணியை மக்களுக்கு இடையேயான பணி என்கின்றோம். (இவையைதானே நடைமுறை பணி என்று நமது ஆசான்கள் போதித்தனர் ஆனால் இங்குள்ள இடதுசாரிகள் என்னவகை நடைமுறை கையாள்கிறார்கள் தோழர்களே நீங்களே புரிந்துக் கொள்ள).

மக்களிடையேலான் பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டல் தான் நடைமுறை பிரச்சனை. இக்கடமையை ஒரு பொதுவுடைமை கட்சி நேர்மையான முறையில் கடமை ஆற்ற வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின் ஊழியர்களுடைய பணிதான் நடைமுறை.

ஆக மார்க்சியவாதிகள் இயக்கவியல் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் தங்களது அணிகளுக்கு மட்டும் இன்றி பரந்த பட்ட திரளான மக்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டும் உழைக்கின்ற மக்கள் பெருந்திரளாக இந்த கண்ணோட்டத்தை கிரகித்து முதலாளித்துவ கண்ணோட்ட நிராகரிக்காத வரையில் எதிரியை தோற்கடிப்பது என்பது அசாத்தியமாகும்.

அதாவது மக்களிடையே நடைமுறை பிரச்சனை என்பது ...

மக்கள் என்பவர் யார்? மக்களிடையே கம்யூனிஸ்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்க வேண்டும்

மக்களைப் பயிற்றுவிப்பதிலும் அமைப்பு ரீதியாக திரட்டுவதில் என்ன முறைகளை கையாள வேண்டும். எனும் மக்கள் இடையிலான பணியில் தான் நடைமுறை.

மக்கள்தான் உண்மையான இரும்பு கோட்டை இதை உலகில் எந்த சக்தியாலும் தகர்ப்பது சாத்தியமாகாது என்ற மாவோ கூற்றை புரிந்துகொண்டு இந்த இரும்பு கோட்டை உருவாக்கும் இரும்பு கற்கள் தனித்தனியாக ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படாமல் உள்ளது. இந்த இரும்பு கற்களை அடுக்கி பூசி உலகில் உள்ள எந்த சக்தியாலும் நொறுக்கப்பட முடியாத அளவிற்கு ஒரு சக்தியாக வாய்ந்த இரும்புக்கோட்டையாக நிறுவ வேண்டும். இவைதான் கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் செய்ய வேண்டிய பணியின் முக்கியமானதாகும்.

மார்க்சிய தத்துவமும் நடைமுறையும் இவைதான் நமக்கு போதிக்கின்றது ...

தேவைப்பட்டால் தொடருவோம்…


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்