தத்துவமும் நடைமுறையும் +17
மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நாம் வாழும் சமூக இயக்கத்தை ஆம் அந்த சமூகத்தின் ஒவ்வொரு அங்கங்களின் இயக்கத்தை அவை எப்படி இயங்குகிறது என்பதை மிகத் துல்லியமாக குறிப்பிடுகிறது அப்படி என்னும் பொழுது அந்த சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் புரிந்து கொண்டவர்கள் மட்டும் தான் மார்சியவாதியாக இருக்க முடியும்.
கல்வி புலமை பெற்று அறிவு எப்படி மேன்மையுறச் செய்கிறதோ- ஒரு மருத்துவராக இஞ்சீனியராக ஏன் விஞ்ஞானியா அவர்களின் கல்வியும் அவர்களின் அனுபவமும் அவர்களை சிறக்க செய்கிறதோ அது போல் ஒரு மார்க்சியவாதியும் மார்க்சியத்தை கற்று தேர்ந்து அதனை நடைமுறையாக்க மார்க்சியத்தை கற்று தேர்ந்திருக்க வேண்டும் அந்தளவுக்கு திறன் பெற்றவரகளாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் மார்க்சியவாதியாவார்....
இந்திய சமூகத்தின் பிரத்தியேகமுறைதான் ஜாதி அதற்கு தீர்வு மார்க்சியத்தில் இல்லை எனும் இன்றைய அடையாள அரசியல்வாதிகளாகட்டும் மார்க்சியத்தை மறுக்கும் இங்குள்ள சீர்திருத்தவாதிகளாகட்டும் அவர்கள் இந்த சமூக இயக்கத்தை புரிந்துக் கொள்ளாத மாறா நிலைவாதிகளாக இருப்பதனாலே இன்நிலை. வர்க்க சமூக தோற்றத்தில் சுரண்டலின் வடிவமாக தோன்றிய தொழிற்ப்பிரிவினை அதன் வளர்ச்சி போக்கில் நில உடமை சமூகத்தின் உச்சத்தில் இருந்த போது மதமும் அதன் ஜாதிய அமைப்புகளும் சமூகத்தில் வேர் பரப்பியது.
அதனை கோட்பாட்டு ரீதியாக நிறுவியவர்களின் தேவையானது அந்த சமூகத்தை கட்டி காப்பதற்கானது ஆம் உழைக்கும் கூட்டத்தாரை உழைக்காமல் சுரண்டுவதுதான் அன்றை ஆட்சியில் பங்குதாரர்களான அரசன் அதனை காக்கும் மற்ற பிரிவினரோடு சமயத் தலைவர்களும் அடங்குவர். அதில் கோட்பாட்டுகளை உருவாக்கியவன் பார்பனந்தான் ஆனால் அதனை நடைமுறை படுத்தியவன் அன்றைய அரசன் அல்லவா? ஆக சனாதன முறைமைகளை பார்பனன் தோற்றிவித்தாலும் அந்த சமூகத்தில் அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்களின் தயவில்தானே மத ஜாதிய கோட்பாடுகள் நிறுவப்பட்டது. இதில் அரசின் பங்கை குறைத்து மதிப்பிடும் இங்குள்ள மாறா நிலைவாதிகள் இன்றுள்ள அரசின் செயலை மூடிமறைக்க பார்ப்பனர்கள் சூழ்ச்சி எங்கின்றனர் அவை சரியா?
அப்படியெனும் பொழுது இந்த வர்க்க சமூகத்தில் சுரண்டல் வடிவங்கள் மாறிக்கொண்டுள்ளது போலவே சுரண்டலாள்ர்களும் மாறிக் கொண்டுள்ளனர்.
ஆனால் இன்றும் ஏன் சில பழயமுறைகள் வாழ்கிறது என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்சித்தின் ஆணிவேரி புரிந்து கொள்ளாத அர்ப்பவாதிகளாக தான் இருக்க முடியும்.
மார்க்சியம் என்பது சமூக இயக்கத்தில் உள்ள மனிதர்களின் செயல்பாடுகளையும் அந்த செயல்பாட்டின் தன்மைகளையும் அதில் உள்ளார்ந்த கருத்துக்களை மிகத் தெளிவாக ஆய்வு செய்து அதிலிருந்து விடுபடுவதற்கான வழிவகையையும் கூறுகிறது.
இங்கேதான் மார்க்சியத்தை புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்சியம் அல்லாத போக்குகளில் கரைந்து போவதும் ஓடி ஒளிந்து கொள்வதும் நடந்து கொண்டு உள்ளது.
நாம் பள்ளி கல்லூரியில் கல்வி கற்கும் பொழுது பல்வேறு விதமான கல்வி பயில வேண்டி இருந்தது அவை எதிர்கால நமது நடைமுறை வாழ்க்கைக்கு பயன்பட்டதா என்பதனை பேச அல்ல...
அதில் இரண்டை பற்றி பேச விரும்புகிறேன் திரிகோணமிதி எனும் ட்ரிக்னோமெட்ரி மற்றும் உயர்வகை கணிதம் பல்வேறு விதமான பல்கலைக்கழகப் படிப்புகளில் இருந்தும் அதை நடைமுறையில் காணவில்லை.
ஆனா இதை ஒரு உதாரணத்துடன் காட்டிக் கொள்ள விரும்புகிறேன் ராணுவத்தில் ஆட்லறி (Artillery) எனும் பீரங்கி பிரிவில் குண்டுகளை கொண்டு தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்குவதற்காக சில நுட்பமான கணித விதிகளை பயன்படுத்துகின்றனர். அவை நாம் படித்த திரிகோணமிதியுமாகும் அவை மிக துல்லியமாக இலக்கை தாக்க நடைமுறையில் பயன்படுத்துகிறார்கள்.
அதில் அந்த குறிப்பிட்ட பிரிவினர் கல்வி புலத்தில் பட்டதாரிகளோ பெரிய படிப்பு பெற்றவர்களோ கூட அல்ல இருந்தும் அதற்கான கல்வியின் அடிப்படையில் அவர்கள் அனுபவ ரீதியாக செயல்படுகிறார்கள் அவை துல்லியமாக செயல்படுகிறது. இவை அனுபவ அறிவே என்றாலும் அவர்களின் நடைமுறையில்அந்த இலக்கை எய்துவதற்கு அவர்கள் சில அடிப்படையான புரிதல் கொண்டுள்ளார்கள்.
அவர்கள்
1). தாக்க வேண்டிய தூரம்
2). அங்குள்ள இயற்கை சூழல்
3).மற்றும் சீதோசன நிலை
இவற்றை கணக்கில் கொண்டு அவர்கள் ஏவுவதற்கு ஏற்ற வகையில் அந்த ஏவுகணங்களை தயார் செய்கிறார்கள் அதன் அடிப்படையில் ஏவுகிறார்கள், இலக்கை அடைகிறார்கள்.
இவை அனுபவத்தின் அடிப்படையில் நடைப்பெற்று கொண்டுள்ளது தான் அவர்களுக்கான அந்த அனுப அறிவே நடைமுறையாக உள்ளது.
உண்மையாளுமே மார்க்சிய இயங்கியல் என்பது சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் இயக்கத்தை அதன் முரண்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த முரண்பாடுகளை கைக்கொண்டு அந்த சூழலில் எவ்வகையான செயலில் ஈடுபட வேண்டும் என்பதே நமது ஆசான்கள் நமக்கு வழிவகை செய்துள்ளனர் அவற்றைக் கற்று தேறாமல் இவை ரஷ்யாவுக்கு பொருந்தும் சீனாவுக்கு பொருந்தும் ஏன் இந்தியாவுக்கு பொருந்தாது அல்லது இன்றைய உலக ஏகாதிபத்திய வளர்ந்த நிலையில் எந்த நாட்டுக்கும் பொருந்தாது என்பது மார்க்சியத்தை கல்லாத அறிவிலிகளின் பேச்சே என்பேன்.
இன்று மார்க்சியத்தின் பெயரிலே வாழும் பலர் மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத இன்று அம்பேத்கார் பெரியார் கருத்துக்களை பரப்புவது நோக்கம் என்ன?
அம்பேத்கர் பெரியாரின் கருத்துக்களுக்கு மார்க்சிய கருத்துக்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது என்பதை புரிந்துக் கொள்ளாமைதான் என்பேன்.
சமூக இயக்கத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத அம்பேத்கர் பெரியார் இதில் உள்ள முரண்பாடுகளை ஜாதியை மத முரண்பாடுகளை ஒழிப்பதற்கு இதற்குள்ளேயே இடம் தேடுகிறார்கள். இந்த வர்க்க சமூகத்தில் இந்த பல்வேறு பிரிவினர் வாழ்வதற்கு காரணம் இந்த சமூக அமைப்பே கட்டிக்காக்கும் அமைப்பின் தேவை யாருக்கானதோ அவர்களுக்கானதே,,,,
மார்க்சியம் மட்டும் தான் ஜாதியே மத வேறுபாடுகளுக்கான காரணம் இந்த சமூக அமைப்புதான் என்று கூறுகிறது இந்த சாதிய மத ஒடுக்கு முறைக்கு தீர்வு என்பது இந்த சமூகத்தை மாற்றி அமைப்பது மட்டும்தான் என்று மார்க்சியம் தெளிவாக முன்வைக்கிறது.
வர்க்கங்களாக பிளவுண்ட சமுதாயங்களில் வளர்ச்சிக்கான தூண்டு சக்தி வர்க்கப் போராட்டமே ...சமூகத்திலான வர்க்க கட்டமைப்பும் அது உண்டாக்கும் வர்க்கப் போராட்டமும் தாமே உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியால் நிர்ணயம் செய்யப்படும். வரலாற்று வளர்ச்சியின் தூண்டு சக்தியாக வர்க்கப் போராட்டம் செயல்படுகிறது. இதற்கு முதன்மையான காரணம் ஒரு வழக்கு இழந்த சமூக அமைப்பை ஒரு புதிய உயர்ந்த அமைப்பாக உருமாற்றும் சாதனமாக இது விளங்குகிறது .புதிய உற்பத்தி சக்திகளுக்கும் வழக்கிழந்த உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதல் வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையாக காட்சி அளிக்கிறது.இந்த மோதல் சமூகப் புரட்சியால் தீர்க்கப்படுகிறது இது வர்க்கப் போராட்டத்தின் மேலும் உயர்ந்த வெளிப்பாடாகும்.
சமூக முன்னேற்றத்திற்கு இயங்கு சக்தியாக இருப்பது வர்க்கங்களுக்கு இடையான ஒத்துழைப்பு என்பது முதலாளித்துவ தத்துவம் இதற்கு எதிரானது தான் லெனின் கூறிய வர்க்க போராட்டம் பற்றிய மார்க்சியத்தின் வரையறை ...
வரலாற்றில் மெய்யான இயங்கு சக்தி புரட்சிகரமான வர்க்கப் போராட்டமே ... ஆனால் சீர்திருத்த முதலாளித்துவ தத்துவமானது சமூகத்தில் உள்ள சில குறைபாடுகளை உணர்வதும் ஒற்றுமையாக அதனை சரி படுத்துவதும் என்று கூறுகிறது.
வந்த போராட்டத்தின் வடிவங்கள் வர்க்க ஸ்தாபனங்களின் வடிவங்களுடன் தொடர்புடையவை புது பாட்டாளிகளின் வர்க்க போராட்டத்தில் வெகுதெளிவாக தெரிய வருகிறது பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்துக்கு எதிரான தனது போராட்டத்தை மூன்று பிரதான வடிவங்களில் -பொருளாதாரம் அரசியல் சித்தாந்தத் துறையில் நடத்துகிறது.(இந்தப் பகுதிமார்க்சிய லெனினிய தத்துவ ஞானத்தின் அடிப்படைகள் நூலிலிருந்து)
ஆக அதனை செய்ய பயந்து கொண்டு முதலாளித்துவத்தின் பின் அணி திரளுவது தான் மாற்றம் அல்லாத அம்பேத்கார் பெரியார் கருத்துக்களை பின்தொடரும் அவலம் என்று தெளிவாக கூற முடியும். இதனை பற்றி விரிவாகப் பின் வரும் பதிவுகளில்...
தொடரும்.......
No comments:
Post a Comment