புருதோன் "முதலாளித்துவம் பற்றிய பொருளாதார விதிகள்
என்பவை நிரந்தரமானவை.
மாற்ற முடியா தவை" என்று அடித்துச் சொன்னார். மார்க்ஸ் "பொருளாதார விதிகள் என்பவை வரலாற்று
ரீதியாக உருவானவை.
மனிதனின் தேவைகளின்
பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்தி சக்திகளும் தோன்றி வளருகின்றன. இந்த வளர்ச்சி யில் சமுதாயம் மாறுகிறது. அதையொட்டி உற்பத்தி சக்திகளும் மாறுகின்றன. அப்போது அவை சம்பந்தப்பட்ட தத்துவங்களும் மாறுகின்றன." என்று வரலாற்றிலிருந்து உண்மைகளை
எடுத்துக் கொண்டு வந்தார்.
இந்த தொடர் ஓட்டத்தில் மார்க்சுக்கு
இப்போது தன்னைச் சுற்றிலும் இந்த அமைப்பை எதிர்த்து கலகங்கள் செய்து வருவது
பாட்டாளி வர்க்கமாகவே இருப்பதை காண முடிகிறது. உறிஞ்சப்பட்ட சக்தியும், மூச்சுத் திணறுகிற வாழ்க்கையும் பாட்டாளிவர்க்கத்திற்கு தகர்த்து எறிகிற
வேகத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை உடைத்து வெளியே வருகிற குஞ்சுப் பறவையின் புரட்சித்
துடிப்பாக தெரிகிறது.
மார்க்ஸ் தீர்மானகரமாக கம்யூனிஸ்ட்கள் சங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை எழுதி முடிக்கிறார். கம்யூனிஸ்ட் அறிக்கையாக, காலத்தின் கேள்விக்கான பதிலாக வெளிவருகிறது அவரிடமிருந்து. "முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்து ஒழிக்கப்போகும் ஆயுதங்களை வார்த்தெடுப்பதோடு, அந்த ஆயுதங்களை பிரயோகிப்பதற்கு உரிய பாட்டாளிகளாகிய நவீனத் தொழிலாளி வர்க்கத்தையும் தோற்றுவிக்கிறது. அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேருவார்கள். இந்த உலகை அவர்களால் பொன்னுலகமாக மாற்ற முடியும்" தூரத்து இடிமுழக்கம் உலக நாடுகள் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தன அதன் தொடர்ச்சி பல நாடுகளில் சோசலிச புரட்சி ரசிய புரட்சி உலகில் புரட்சிக்கான பாதையை அமைத்துக் கொடுத்தது.
உலகில் தோன்றிய தத்துவ மேதைகளும் அறிஞர்களும்
எல்லோருமே அற்புதமானவர்களே. ஆழமான அறிவும், பெரும்
ஆற்றலும் கொண்ட வர்கள். இவர்கள் அனைவரிடமிருந்தும் மார்க்ஸ் வேறுபடுகிற
இடம்தான், அவருக்கான தனி இடமாக இருக்கிறது. அத்தனை
தத்துவங்களும், கண்டுபிடிப்புகளும், கலைகளும்
மனித சமூகத்திற்கே பலனளிக்கக் கூடியவையாக இருந்த போதிலும் அதிகார அமைப்பும், ஆளும்
வர்க்கமும் அவைகளை இன்றுவரை தங்களுக்கு சாதகமானவைகளாக அனுபவித்துக்கொள்ள முடிந்திருக்கிறது.
கற்பனையிலும், குருட்டு
நம்பிக்கையிலும் கிடந்தவர்கள் மத்தியில் அடிமை மக்களின் விலங்குகளை உடைத்தெறிய
சிந்தித்தவர் மார்க்ஸ்.
தன் நிழலையும், வேர்களையும்
நிலப்பரப்பு முழுவதும் நீட்டி உலகையே விழுங்கிவிட வளர்ந்து கொண்டிருக்கும்
முதலாளித்துவம் என்ற விச மரத்தை சாய்த்து புது வெளிச்சம் எங்கும் பாய்ந்திட
வாழ்நாளெல்லாம் சிந்தித்தவர் மார்க்ஸ்.
வாழ்வின் துயரங்களையும், புதிர்களையும் அனுபவம் செறிந்த தத்துவஞான தளத்தில் நின்றே அறிவு வென்று வருகிறது. சவால்களை சந்திக்கிற திடசித்தம் வேண்டியிருக்கிறது. மார்க்ஸின் பயணம் இதுதான். காலத்தை சுமந்து சென்ற பயணம். மனிதகுல விடுதலைக்கான மகத்தான காரியம்.
அவைதான் தத்துவத்தை நடைமுறையாக்குவதாகும் இன்று புரட்சியை மடை மாற்றும் பணியை ஆளும் ஒடுக்கும் வர்க்கமே ஏகாதிபத்திய நலன் சார்ந்தவையாக இருக்க அதனை பற்றி ஒரு அலசல்.
நடைமுறையில் இருப்பதாக கூறும் இடதுசாரி அமைப்பாளர்களும் புரட்சி பேசுபவர்களும் எந்த வகையான நடைமுறையில் உள்ளார்கள் என்பது தெளிவுபடுத்துவது நோக்கத்தில் தான் இந்த பதிவை எழுதிக் கொண்டுள்ளேன்
தத்துவம் என்ற முறையில் சமூகத்தில் பல்வேறு விதமான தத்துவங்கள் நடைமுறையில் இருந்தாலும் வர்க்க சமுதாயத்தில் உள்ள வர்க்கங்களை அடிப்படையில் அந்த தத்துவங்களின் தேவையும் அது எந்த வர்க்கத்திற்கானது என்பதை தெளிவு படுத்தினால் தான் மேலே செல்ல முடியும் ... ஆண்டாண் அடிமை சமூகம் ஆகட்டும் நில உடமை சமூகம் ஆகட்டும் ஏன் முதலாளித்துவ சமூகம் ஆகட்டும் அங்கே சிறுபான்மையான ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களை கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் சமூக நெறியின் பெயராலும் மக்களை உள்ள அமைப்பு முறைக்குள்ளேயே அமிழ்த்தி வைப்பது தான் அவர்களின் நோக்கமாக உள்ளது. உள்ள அமைப்பு முறை புனிதமானது அதைக் கேள்வி கேட்க முடியாது அவை தான் உயர்ந்த வடிவமானது என்றும் சொத்து உள்ளவர்களுக்கும் ஆளும் வர்க்கத்தினருக்கும் சேவை செய்வதுதான் இந்த சமுதாயத்தில் உழைக்கும் வர்க்கத்தின் பணி என்றும் இவையெல்லாம் புண்ணியம் வேண்டி ஆளும் வர்க்கம் எப்படியேனும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்கான தத்துவம் தான் அவைகள்.
17 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சியும் உலகை கொள்ளை அடிக்கு காலணி அதிக்கவாதிகளின் செயலும் மிக வேகமாக சமூக மாற்றத்தை கொண்டு வந்தது அதில் புதிய புதிய தத்துவ ஞானிகள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் புதிய மாற்றங்களை கணக்கில் கொண்டு முனைந்தார்கள் இவர்களும் இறுதியில் இதே சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் சீர்திருத்தம் செய்து கொண்டு வாழ வழி சொல்லினார்களே ஒழிய அவை பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு வாழ்வளிக்கவில்லை என்பதுதான் நம் கண் முன் உள்ள உண்மை.
நாம் வாழும் சமூகமானது ஒவ்வொரு வினாடியும் மிக வேகமாக வளர்ந்து கொண்டும் மாறிக் கொண்டு முன்னேறி கொண்டும் உள்ளது அதற்கு மனித உழைப்பு தான் காரணம். அந்த உழைக்கும் மனிதனுக்கு முழுமையான உரிமையோ வாழ்வதற்கான முழு அடிப்படைகளோ இல்லை என்பது தான் வருத்தமான விடயம் இதே வேளையில் பல நூறு ஆண்டுகளாக மதவாதிகள் தனது கடவுளை மாறா நிலையில் வைத்துக் கொண்டு மக்களை ஏய்த்துக் கொண்டுள்ளார்கள் அதே போன்று இன்றைய முதலாளித்து சமூக வளர்ச்சியில் தனக்கான இடத்தை கோரி சீர்திருத்தவாதிகள் இதே சமூகத்தை கட்டி காப்பதில் முனைந்துள்ளனர் எப்படி மதவாதிகள் சமூகத்தை மாறா நிலையில் வைத்துக் கொள்ள அதேபோல் இந்த சீர்திருத்தவாதிகளும் ஏதோ ஒரு வகையில் சமூகம் மாற்றத்தை நோக்கி அல்ல.
கருத்து முதல்வாதிகள் எப்படி மாறான நிலையில் சமூகத்து வைத்துக்கொள்ள நினைக்கின்றார்களோ அதே போல தான் சீர்திருத்தவாதிகளும் இச்சமுகத்தை அப்படியே கட்டி காக்க நினைக்கின்றார்கள் அதில் தங்களுக்கான ஒரு இடத்தை தேடிக் கொண்டு உள்ளார்கள் இங்கே எல்லா மக்களுக்குமான விடுதலை பற்றி அவர்களுக்கு செயல்பாட்டு அளவில் முடங்கிக் கொண்டு இதே சமூகத்திற்கு உள்ளே வாழுகிறார்கள் இங்கேதான் மார்க்சிய தத்துவம் மாறுபடுகிறது இந்த சமூக அமைப்பை மாற்றியமைக்க சொல்லுகிறது அதுதான் தத்துவத்திற்கான அடிப்படையும் நடைமுறையும் ஆகும்.
அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் பணிகள் அன்றையசமுகத்தில் பெரும் வரவேற்பு பெற்றது ஏனென்றால் அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஒரு குறிப்பிட்ட அளவில் சீர்திருத்த வகையில் சமூக மாற்றத்திற்கு பணி செய்தது ஆனால் அதன் நோக்கம் சமூகம் மாற்றத்தை தடைபோட போராட்டங்களை நிறுத்தி வைக்க தான் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் இருந்து திசை மாற இதை பயன்படுத்தினார்கள். ஆம் அம்பேத்கர் பெரியார் முன்வைத்த கோரிக்கைகள் ஒரு சிலர் பயன்பட்டு இன்று மேல் நிலையில் உள்ளார்கள் ஆனால் இன்றும் பெரும்பான்மையான இவர்கள் பேசும் மக்கள் மிகக் கொடூரமான முறையில் அடைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டும் கிடக்கிறார்கள் அவர்களைப் பற்றி கவலைப்படாத இந்த மேல் நிலைக்கு வந்த கூட்டம் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அம்பேத்கரையும் பெரியாரையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் பேச்சில் மார்க்சியவாதியாக உள்ள இவர்கள் செயலில் மார்க்சியத்தை மறுக்கும் ஏகாதிபத்திய காவலர்களாக உள்ளனர்
‘’சீர்திருத்தங்கள் என்றால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை அழிக்காமலேயே உழைக்கும் மக்களின் நிலைமைகளில் மேம்பாட்டையச் செய்வதாகும். அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கும் வரை, தனிப்பட்ட மேம்பாடுகள் ஏற்பட்டாலும், எப்போதும் கூலி அடிமைகளாகவே இருந்து வருவோரான தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான் சீர்திருத்தவாதம் ஆகும்’’ என்றார் லெனின்.
முதலாளிகள் உழைக்கும் மக்களுக்கு குறைந்த கூலி கொடுத்து சுரண்டி அவர்களின் மூலதனத்தை குவித்துக் கொள்வார்கள் . ஆகவே முதலாளிகளும் அவர்களது அரசும் எப்போதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க விரும்பமாட்டார்கள். ஆனாலும் வேலையில்லாத்திண்டாம் அதிகரித்தால்
உழைக்கும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுவார்கள் என்பதை உணர்ந்து ஆட்சியாளர் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க ஆர்வம்
உள்ளவர்கள்போல் காட்டிக் கொள்வதற்காக வேலை வாய்ப்பில் எளிய மக்களுக்கு (பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு) முன்னுரிமை கொடுக்கிறோம் என்று சொல்லி இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்ற சீர்திருத்தக்கொள்கையை கொண்டு வந்து இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இதன் மூலம் இவர்களால் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பை இவர்களால் கொடுக்க முடியாது அதற்கு இவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள் என்ற உண்மையை உழைக்கும் மக்களிடம் மூடிமறைத்து ஏமாற்றினார்கள். அனைத்து மக்களுக்கும் இவர்கள்வேலை வாய்ப்பை ஏற்படுத்தவே இல்லை. மேலும் சாதிஅடிப்படையிலான இட ஒதுக்கீடு செய்வதன் மூலம் உழைக்கும் மக்களை சாதிரீதியாக நிரந்தரமாக பிரிக்கும்
மோசடியை செய்தார்கள். ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒற்றுமையாக இருக்க விடாமல் சாதி அடிப்படையில் சில சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பதைப் பார்த்து பிற சாதியினர் போட்டிபொறாமை கொள்ளச் செய்து சாதி அடிப்படையில் வேற்றுமையையும்வெறுப்பையும் பகையையும் வளர்த்தார்கள்.
லெனின் கூறியதுபோல உழைக்கும் மக்களை கோஷ்டிகளாக சாதி அடிப்படையில் பிளவுபடுத்தினார்கள். கூலி அடிமைத் தனத்திலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்றஉணர்வை உழைக்கும் மக்களிடம் மழுங்கடித்தார்கள்.
ஆட்சியாளர்களும், முதலாளிகளும்கொடுக்கும் சலுகைகளே போதுமானது என்ற சுயதிருப்தி மனப்பான்மையை
மக்களிடம் ஏற்படுத்தினார்கள். இந்தகைய மன நிலையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட மக்கள் இப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட
சலுகைகளை ஆட்சியாளர்கள் பறிக்கும் போது உழைக்கும் மக்கள்கையறு நிலையிலேயே நிற்கிறார்கள். இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான நிறுவனங்கள் அதாவது கட்சிகள் இன்றி மக்கள் தனிமைப் பட்டுள்ளார்கள்.ஆகவே இந்திய வரலாற்றில் உழைக்கும் மக்கள் இந்த சீர்திருத்தவாதி களை நம்பி அவர்கள் பின்னால் சென்றதன் விளைவாக உழைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் பலவீனப் படுத்தப்பட்டுள்ளார்கள், உழைக்கும் மக்கள் சீரழிந்துள்ளார்கள் என்ற நடைமுறை உண்மையை அன்றே லெனின் பல நாடுகளின்
அனுபவங்களிலிருந்து வழிகாட்டியதை நாம் பின்பற்றத்தவறியதன் பலனைஇப்போதுநாம்அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.
"அற்பசலுகைகளின்மூலம்சீர்திருத்தவாதிகள்தொழிலாளர்களைபிளவுபடுத்தவும்ஏமாற்றவும் முயல்கிறார்கள்.அவர்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்பிவிட முயலுகிறார்கள்"என்றார் லெனின்
தொட்ரும்....
No comments:
Post a Comment