மார்க்சிய பெண் விடுதலையும் சோசலிச சமுகத்தில் பெண்கள் நிலையும்

 மார்க்சிய பெண் விடுதலையும் சோசலிச சமுகத்தில் பெண்கள் நிலையும்

The proletariat cannot achieve complete liberty until it has won complete liberty for women. -Lenin

(பெண்களின் விடுதலைக்கான போரில் வெற்றி பெறாத பாட்டாளி வர்க்கம் பூரண விடுதலையைப் பெற்று விட முடியாது.-லெனின்).

மூலதன ஆட்சியை தூக்கியெறிவதும், சோவித்அதிகாரத்தை நிறுவுவதுமே உலகைத் துயரிலிருந்தும், உழைக்கும் பெண்களை அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கும் தாழ்மை மற்றும் சமத்துவமின்மையிலிருந்தும் மீட்கும். ஓட்டுரிமைக்காக நடத்தப் பட்ட உழைக்கும் மகளிர் தினம் இன்று பெண்களுக்கான முழுமையான விடுதலைக்கானதாக, அதாவது சோவியத் மற்றும் கம்யூனிசத்தின் வெற்றிக்கான போராட்டமாக மாறுகிறது.

மனிதகுல வரலாற்றில் மனிதசமூகம் வளர்வதற்கான அதன் வளர்ச்சி விதிகளை கண்டுபிடித்து உழைக்கும் மக்களுக்கு வழங்கியவர்கள் காரல்மார்க்சும், எங்கெல்சும் ஆவார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட தத்துவத்தின் மூலம் சமூகவளர்ச்சிக்கு முரணின்றி பாடுபடக்கூடிய வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்றும் அந்த வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களின் மூலமே சமூகம் வளர்ச்சியடையும் என்று தெளிவாகவிஞ்ஞானப் பூர்வமாக ஒரு சித்தாந்தத்தை முன் வைத்தார்கள்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அவற்றுக்கான காரணங்கள், அவற்றை அணுக வேண்டிய முறைமைகள், பெண் விடுதலை என்ற கருதுகோளின் பரிமாணங்கள் ஆகியவை பற்றிப் பல்வேறு விவாதங்கள் பல்வேறு மட்டத்தில் நடந்துகொண்டுதான் உள்ளன.

இன்று உலகெங்கும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்கள் அனைத்திலும் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.சமூகத்தில் இன்றும் நிலவும் பெண் ஒடுக்குமுறையின்தூண்டலேபெருந்தொகையான இளம்பெண்கள் இவ்விடுதலை போராட்டங்களில் பங்குபற்றுவதற்கான காரணமாகும். பெண்கள் ஆயுதம் ஏந்திப் போர்முனைகளில் நிற்பதோடு மட்டும் நின்றுவிடாமல் பெண்விடுதலையை ஒரு உறுதியான கொள்கையாக ஏற்று செயற்படுவதன் மூலமே ஒரு புதிய சமூக மாறுதலை ஏற்படுத்தமுடியும்.

தனியுடமை அமைப்பை வரலாற்றில் உருவாக்கிஉறுதிப்படுத்தியது ஒருதாரமணக் குடும்பமும் அதன் வழித் தோன்றிய அரசும் எனலாம். இரண்டும் இன்றுவரை தந்தை அதிகாரத்தையும், ஒடுக்குமுறைகளையும் இயல்பாகப் பேணும் நிறுனங்களாகவே உள்ளன.அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காரணமான அரசை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றி காலப்போக்கில் உதிர்ந்து மறைந்து போகச்செய்துவிடும் என்ற மார்க்ஸியத்தின் அதி நீண்டகால இலட்சிய நோக்கு பெண்களை ஒடுக்கும் ஒருதார மணக் குடும்பத்தின் அழிவையும் அவ்வாறே சுட்டிக்காட்டுகிறது.

உலகில் எந்தவொரு நிகழ்வும், இயக்கமும் திடீரென நிகழ்வதில்லை. ஒரு இயங்கியல் வளர்ச்சிப்போக்குஎங்கும்வியாபித்திருக்கிறது. அரசின் தோற்றமும், வளர்ச்சியும் உறுதிப்பாடும், உதிர்ந்து போதலும் இவ்வியங்கியல் வரையறைக்குட்பட்டது. அதுபோன்றே ஒருதாரமணக் குடும்பத்தின் வளர்ச்சியும் மறைவும் அமைந்துள்ளது

ஒரு ஒடுக்கும் அரசுக்கெதிரான போராட்டத்தின் போதே விடுதலை பெற்று உருவாகப் போகும் சுதந்திரமான அரசின் கொள்கை அதிகாரம், ஆட்சிமுறைபடிப் படியாக உருவாக்கப்படுகிறது. அதுபோன்றே ஒருதாரமணக் குடும்பத்தின் அழிவின்போதே படிப்படியாக ஒரு புதிய குடும்பத்தின்தன்மைகளும்வளர்ச்சியடைந்து வருகின்றது.அரசியலில் பழைய அரசை அழிப்பதோடு புதிய அரசை உருவாக்கும் நடைமுறையை மறுக்கும் அராஜகவாதம் போல,பெண்விடுதலையில் ஒருதாரமணக் குடும்ப அழிவைமட்டும் வற்புறுத்தும் தீவிர பெண்நிலைவாதத்தை ஆதரிப்போர், ஆடைகளை மாற்றுவது போல் ஜோடிகளை மாற்றவே விரும்புகின்றனர்.சுதந்திரம் என்பது பழைய விலங்கு நிலைக்கு நாம் மீள்வதில்லை,மனிதர் தம்மை மென்மேலும் ஒழுங்கமைத்துக் கொள்ளவே சுதந்திரம் வேண்டப்படுகிறது.

இன்றைய சமூகத்தின் சிறிய அலகான குடும்பம் என்ற உறவுமையம் பல நிலைகளில் அதில் உள்ளவர்களுக்குச் சுமையாகப்படுகிறது.பெண்ணடிமையை நிலைநிறுத்தும் ஒரு களமாக குடும்பம் அமைவதால் பெண்நிலைவாதிகளுக்குஅது ஒரு சிறைகூடமாகத் தெரிகிறது.சமூகப் பொறுப்புள்ளஆண்களுக்கு முதலாளித்துவப் பொருளாதார சிக்கல்களுடன் கூடிய குடும்பப் பொறுப்பு தமது ஆயுளை முடித்து ஆண்,பெண் இருவரது ஆளுமைகளையும் அழிக்கும் பொருளியல் பிணைப்பாகப் படுகிறது. எதிலும் பொறுப்பற்று, கட்டற்று வாழவிரும்பும் மேலைநாட்டு ஆண்களுக்கும், பெண்களுக்கும் முன்னால் குடும்பம் ஒருதடைச் சுவராக எழுந்து நிற்கின்றது.

பிரபுத்துவ அமைப்பு கட்டிக்காத்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகளை முதலாளித்துவம் தகர்த்த போதிலும் மேற்கூறிய குடும்பப் பொறுப்பு முரண்பாடுகள் நிறைந்த தனிக்குடும்ப அலகைதனதுநலனுக்காகக் கட்டிக்காக்கவும் முற்படுகிறது. பழமைப்பிடிப்பும், பொருளாதாரப் பிணைப்பும் கொண்ட இக்குடும்பஉறவுமுறைகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், உழைக்கும் வர்க்கத்தின் சமூகமாற்றத் திற்கான எழுச்சியையும், பேராற்றலையும் மழுங்கடிக்கவும் உதவும் என்பதை இவ் அரசுகள் உணர்ந்துள்ளன.

இத்தகைய காரணங்களை வைத்து இக்குடும்ப அமைப்பு இல்லாதொழிய வேண்டும், மாற்றத்திற்குட்பட வேண்டும் என்ற இரு வகையான கருத்துக்கள் இன்று பெண்விடுதலையை முன்னெடுப்பவர்களிடம் காணப்படுகின்றது. குடும்பம் என்ற அமைப்பின் தோற்றத்திற்கும், அது நிலைபெற்றிருப்பதற்குமான வரலாற்றுக் காரணிகள் முற்றாக அழியும்வரை குடும்ப அமைப்புநிலைத்திருக்கும். எனினும் உலகெங்கும் நடந்துவரும் பெண் விடுதலைக்கானசிறுசிறு போராட்டங்களின் பேராகவும்பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்பவும் குடும்ப அமைப்பில் புதிய மாறுதல்கள் இன்று ஏற்பட்டுவருகின்றன.

முன்பு தாய்,தந்தையர்,பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் என்று இருந்த கூட்டுக்குடும்பங்கள் இன்று பொருளாதாரக் காரணங்களினால் சிதைவுற்று கணவனும் மனைவியும் கொண்ட தனிக்குடும்பங்கள் உருவாகின்றன.இதனால் கணவனின் பெற்றோர்,உற்றார்,உறவினருக்குக் கீழ்ப்படிந்து சேவை செய்யும் நிலையிலிருந்து பெண் விடுதலைபெற்று வருகின்றாள்.சோஷலிச நாடுகளில் ஒருபுதிய குடும்ப உறவுமுறைக்கான கருக்கள் வளர்ந்.அங்கு குடும்ப திட்டமிட்ட கல்விமுறையும்,வயது வந்த பெண்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பும்உறுதிப்படுத்தப்படுகின்றது.இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வயது வந்த இளம்பெண்கள் பெற்றோரில் தங்கிநிற்கும் நிலைமாறுகின்றது

தனிச் சொத்தின் மதிப்பு அங்கு குறைக்கப் படுவதனால் பெற்றோரின் தலையீடு இன்றியே வாழ்க்கைத் துணைவனைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவள் பெறுகின்றாள். திருமணத்தின் பின்னும் சமூக உழைப்பில் அவள் தொடர்ந்தும் ஈடுபடுவதால் பொருளாதாரக் காரணங்களுக்காகக் கணவனில் தங்கி வாழ்ந்து அவனுக்கு அடிமையாகும் நிலையிலிருந்தும் அவள் விடுபடுகிறாள்.

இணைந்து வாழ முடியாத அளவிற்கு இருவரிடமும் மனமுறிவு ஏற்படும்போது நடுவராக இருந்து இருவருக்கும் மீண்டும் புரிந்து கொள்ளலை ஏற்படுத்தி இணைந்து வாழ வைப்பதற்கு அங்கு குடும்பநல மன்றங்கள் உண்டு.முற்றிலும் இணைய முடியாத அளவிற்கு உறவுமுறிவுகள் ஏற்படும்போது பிரிந்து செல்வதற்கான சட்டரீதியான உரிமையும், அதற்கான சமூக அங்கிகாரமும் உண்டு.

இதனால் சமத்துவ அடிப்படையில் உண்மையான அன்பு,காதல் என்ற உறவுப் பிணைப்பில் பெண்களும்,ஆண்களும் இணைந்து வாழும் புதிய குடும்ப உறவுக்கான ஆரம்பம் அங்கு நிகழ்கிறது.அங்கு ஓரிரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பம் என்ற திட்டமிட்ட வாழ்க்கை முறை பெண்களுக்கு இருந்த பெரும்சுமை யைக்குறைக்கின்றது.அரசினாலும்,தொழிற்சாலைகளினாலும் நடத்தப்படும் பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள்,சிற்றுண்டிச் சாலைகள்,தொழில் பார்க்கும் பெண்களின் வேலைப்பழுவைக் குறைக்கின்றது.சமத்துவ உணர்வு பெற்ற வாழ்க்கைத் துணைவன் வீட்டு வேலைகளிலும் பங்காளியாகின்றான்முதியவர்களானபோது அவர்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் உண்டு.இதனால் சமூக நலனை நோக்கித் திட்டமிடப்படாதபிரபுத்துவ,முதலாளித்துவ அமைப்புக்களில் அடிமையாக இருந்த பெண் அங்கு விடுதலைபெறக்கூடிய வாய்ப்புக் கிட்டுகிறது.

அரசே அவர்களது நலன்களை உறுதிசெய்வதால் தனியுடமை அமைப்பு காலம் காலமாக வளர்த்துவந்த தன்னல வெறி உணர்வு தளர்வடைகின்றது. பிறர்நலம் பேணும் பொது நோக்கு உருவாகின்றது.ஆன்மீகவாதிகள் கற்பனையில் கண்ட நான்’,‘எனது'என்ற மமதையும்,ஆணாதிக்க உணர்வின் அதியுயர்ந்தபடியான ண்மை என்ற பொருள் கொள்ளக்கூடிய ஆணவம்என்ற அகந்தையும் அழிந்த மனிதன் அங்கு உருவாகின்றான். ‘நாம்”,து'என்ற சமூக உணர்வோடு,தனக்குள் உலகையும்,உலகினுள் தன்னையும் காணும் புதிய மனிதன் உருவாகின்றான். பெண்களை மட்டுமல்ல இனம், மொழி, மதம், சாதி, நிறம், நாடு,தேசம் என்ற எல்லைகளைக் கடந்து மனிதரை மனிதர் நேசிக்கும் மானுடத்தின் உயர் பண்பு மலர்வதற்கான சமூகச்சூழல் இங்கு உருவாகின்றது.

பல்லாயிரம் ஆண்டுகாலம் நாம் அமிழ்ந்து கிடந்த சேற்றுக்குள் இன்றும் இருந்துகொண்டு சிந்திக்கும்போது இவைகள் கனவுகளாகலாம். இன்றைய கணனியுகத்தில் மனிதப்பதிலிகளையும், பரிசோதனைக்குழாய்க் குழந்தைகளையும் உருவாக்கி விட்ட காலம் இது. மனிதகுலம் வளர்ந்து வருகின்றது,வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு மக்கள் சுதந்திரத்தை உணர்ந்து வருகிறார்கள், ஒடுக்குமுறைகளை இனம் காணுகிறார்கள், விழிப்படைகிறார்கள், அது வர்க்க விடுதலை, தேசிய இன விடுதலை, தேச விடுதலை என்ற பலமுனைகளில் இன்று வெளிப்படுகின்றது.இவைகளில் பெண்களின் பங்கும் இணைவதால் பெண்விடுதலையும் இவைகளால் உந்தித் தள்ளப்படுகின்றது. வளரும் இவ்விடுதலை உணர்வுகள் மக்கள் நலன் சார்ந்திருந்தால் வரலாறுமுன்னேபாயும்,ஏகாதிபத்தியங்களின் வழிகாட்டலுக்குட்பட்டால் சிறிது வேகம் தணியும், ஆனால் வரலாறு என்றும் முன்னோக்கியே செல்லும்.

பெண்விடுதலையும், சமுகவிடுதலையும் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை. பல்லாயிரமாண்டின் பழைய சிந்தனையின் வெளிப்பாடான பெண் ஒடுக்குமுறை ஒரு சமூகப்புரட்சியினாலும் அதைத் தொடர்ந்த பல பண்பாட்டுப் புரட்சிகள் மூலமே முற்றுமுழுதாக ஒழிக்கப்பட முடியும்.அதுபோன்றே மக்கள் தொகையில் பாதிப்பேர்களான பெண்களின் விழிப்புணர்வும் பங்குபற்றுதலுமன்றி அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்க்கும் சமூகப்புரட்சி சாத்தியமாகாது. து நாட்டின் சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பங்கள் சுதந்திரத்தின் அடிப்படையில் உருவாகும்போதே ஏனைய சுதந்திரங்களும் நின்று நிலைக்கும்.எனவே ஒருவரது சுதந்திரத்தை ஒருவர் மதித்து ஒன்றுபட வேண்டும்.பெண்விடுதலையை வென்றெடுக்க வேண்டும்.

-சமகால சமூகப்பார்வைகள் சிவசேகரம் ரசிய அனுபவ குறிப்புகளிலிருந்து சுருக்கி எழுதியுள்ளேன்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்