இடதுசாரிகள்பாராளுமன்றத்தை தொடர்வதற்கு போராடுவதா? களைப்பதற்கு போராடுவதா?- லெனின் வழிகாட்டல் என்ன?

 நேற்றைய வகுப்பின் தொடர்ச்சியாக பல்வேறு விதமான கருத்துக்களை தோழர்கள் முன்வைத்து விவாதித்தார்கள் குறிப்பாக பாராளுமன்றத்தில் பங்கேற்பதையும் பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை மக்களுக்கு எப்படி புரிய வைக்க வேண்டும் என்பதையும் நமது ஆசான்களின் வலியுறுத்தலை மிகத் தெளிவாகப் பேசிய தோழர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும் ஏன் பாராளுமன்றத்தை களைத்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமான சோசியலிசத்தை நிறுவ வேண்டும் என்பதைதெளிவுபடுத்தி பேசினர்.

பாரிஸ் கம்யூன் படிப்பினைகளானது பாராளுமன்றமானது வரலாற்று ரீதியாக காலாவதி ஆகிவிட்டது என்பதை கட்டியம் கூறியது.இருந்தும் பல நாடுகளில் இன்றும் பாராளுமன்றம் கட்டிக் காக்கப்படுகிறதுஆக மக்களுக்கு உண்மையாலுமே அவர்களுக்கான ஜனநாயகம் என்பது இந்த முறையில் இல்லை என்பதைஉணர்த்தும் அதே வேளையில் அதற்கான பணியினை இடதுசாரிகள் செய்ய வேண்டும் என்பதும்.

பாட்டாளி வர்க்க புரட்சிக்கான பணியினை செய்ய வேண்டிய தேவை உள்ளது என்பதையும். அப்பொழுதுதான் அரசியல் ரீதியாக பாராளுமன்றம் காலாவதியாக மக்கள் அதனை தூக்கி எறிய முடியும் அதனைப் பற்றி தெளிவான ஒரு கண்ணோட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை நமது வகுப்பின் நோக்கமாக இருந்ததுபல்வேறு விதமான கருத்து கேட்கவும் உள்வாங்கவும் விவாதத்தின் ஊடாக புரிந்து கொள்வதும் எங்களின் உயர்ந்த நோக்கமாக உள்ளது வாருங்கள் விவாதிப்போம் முழுமையாக புரிந்து கொள்வோம் தோழர்களே...

நேற்றைய வகுப்பு ஒலி வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளவும்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்