தத்துவத்தின் வறுமை-ஒலி வடிவில்(31-07-2026)

இந்த ஆதாரங்கள் கார்ல் மார்க்ஸ் எழுதிய "தத்துவத்தின் வறுமை" என்ற நூலின் பின்னணியையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றன. முக்கியமாக, பிரெஞ்சு சோசலிசவாதியான புரூதோனின் பொருளாதார மற்றும் தத்துவக் கருத்துக்களில் உள்ள குறைபாடுகளை மார்க்ஸ் எவ்வாறு கடுமையாக விமர்சித்தார் என்பதை ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் தனது முன்னுரையில் விவரிக்கிறார். பொருளாதார விதிகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, உழைப்பின் மதிப்பை வெறும் நீதிநெறி சார்ந்த கோரிக்கையாக மாற்றும் கற்பனாவாத சோசலிசத்தை மார்க்ஸ் இதில் நிராகரிக்கிறார். மேலும், ரோட்பெர்டஸ் போன்ற ஜெர்மன் சிந்தனையாளர்களின் உரிமை கோரல்களை மறுக்கும் எங்கெல்ஸ், ரிக்கார்டோவின் தத்துவங்களை மார்க்ஸ் எவ்வாறு அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுத்தார் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையின் வீழ்ச்சி என்பது தார்மீக உணர்வுகளை விட, பொருளாதார விதிகளின் அடிப்படையிலேயே அமையும் என்பதை இந்தத் தொகுப்பு வலியுறுத்துகிறது. இறுதியில், உழைப்பு மற்றும் மதிப்பு குறித்த மார்க்ஸின் ஆரம்பகாலச் சிந்தனைகள் அவரது பிற்காலப் படைப்பான "மூலதனத்திற்கு" எவ்வாறு அடித்தளமிட்டன என்பதையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது....

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

தத்துவத்தின் வறுமை: மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் பொருளாதார விமர்சனம்

தத்துவத்தின் வறுமை

முதல் ஜெர்மன் பதிப்புக்கு பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய

முன்னுரை¹

மார்க்ஸ் தமது புதிய வரலாற்று, பொருளாதாரப் பார்வையின் அடிப்படை (முனைப்புக் கூறுகளைத் தம்முள் தெளிவுபடுத்திக் கொண்டு விட்ட காலத்தில், 1846-47 குளிர் காலத்தில், இந்நூல் படைக்கப்பட்டது. புரூதோன் எழுதிய பொருளாதார முரண்பாடுகளின் அமைப்பு முறை அல்லது வறுமையின் தத்துவம்² அப்பொழுதுதான் வெளி வந்திருந்தது; அன்று இருந்த பிரெஞ்சு சோஷலிஸ்டுகளிடையேயோ அன்று முதல் முதலிடம் வகிக்கவிருந்த மனிதரின் கருத்துக்களுக்கு எதிராக அவர் இந்த முனைப்புக் கூறுகளை வளர்ப்பதற்கு அது வாய்ப்பு அளித்தது. அடிக்கடி அவ்விருவரும் பாரிஸில் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பல இரவுகளில் விடிய விடிய விவாதித்த காலத்திலிருந்து இருவரின் பாதைகளும் மேன்மேலும் பிரிந்து செல்லலாயின; இருவரிடையேயும் தாண்டவொண்ணாப் பள்ளம் ஒன்று ஏற்கனவே இருந்ததைப் புரூதோனின் நூல் மெய்ப்பித்தது. அதைப் புறக்கணிப்பது அன்று சாத்தியமில்லை, எனவே தமது இந்தப் பதில் வழியே இந்த தீர்க்கவொண்ணாப் பிளவை மார்க்ஸ் பதிவு செய்தார்.

இந்த முன்னுரைக்குப் பிற்சேர்க்கையாகத் தந்துள்ள கட்டுரையில் – இது 1865-ல் பெர்லின் *Social-Demokrat* ³ பத்திரிகையின் 16, 17, 18 ஆம் இதழ்களில் வெளிவந்தது – புரூதோனைப் பற்றிய மார்க்ஸின் பொதுவான கருத்தைக் காணலாம். இந்தப் பத்திரிகைக்கு மார்க்ஸ் வரைந்த கட்டுரை இது ஒன்றேதான்; அந்தப் பத்திரிகையை திரு. வான் ஷ்வைட்ஸர் நிலப்பிரபுத்துவப் போக்கிலே, அரசாங்கச் சார்பான போக்கிலே, நடத்திச் செல்ல முயற்சிகள் செய்தது பின்னால் விரைவிலே வெளிப்பட்டு எங்களுடைய கூட்டுறவு ஒரு சில வாரங்கள் கழிந்ததுமே முடிந்து விட்டதை நாங்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இந்நூல் குறிப்பாக இத்தருணத்தில் ஜெர்மனி விஷயத்தில் வகிக்கிற பொருள் முக்கியத்துவத்தை மார்க்ஸ்கூட ஒருபோதும் முன்னறியவில்லை. அவர் புரூதோனைத் தாக்கி முறியடித்ததிலே இன்று பதவிவேட்டைக்காரர்களின் தெய்வமாக விளங்குகிற,

அதாவது, 1) எந்த ஒரு பண்டத்தின் மதிப்பையும் அந்தப் பண்டத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படுகிற உழைப்பின் அளவே முற்றாக நிர்ணயிக்கிறது. 2) சமுதாய உழைப்பு முழுமையின் விளைபொருள் நிலச்சுவான்தாரர்கள் (வாடகை), முதலாளிகள் (இலாபம்), தொழிலாளிகள் (கூலி) என்று மூன்று வர்க்கங்களிடையே பிரித்துக் கொள்ளப்படுகிறது, என்று. அவை இங்கிலாந்தில் 1821 லிருந்து சோஷலிஸ்டு முடிவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனசில சமயம் அவை மிகுந்த கூர்மையுடனும் உறுதிப் பிடிப்புடனும் பயன்படுத்தப்பட்டன. இந்த இலக்கியம் இன்று அநேகமாக மறைந்தே போய்விட்டது; அதன் பெரும் பகுதியை மார்க்ஸ்தான் முதன்முதலாக மீண்டும் கண்டெடுத்தார்; மூலதனம் தோன்று கிறவரை அதை மிஞ்சக்கூடியதாய் எதுவும் இருக்கவில்லை. இதை வேறொரு சமயத்தில் கவனிப்பேன். எனவே, 1842-ல் ரோட்பெர்டஸ் தம்மைப் பொறுத்தவரை மேலே கண்ட மூன்று கூற்றுகளிலிருந்து சோஷலிஸ்டு முடிவுகள் எடுத்துக் கொண்டார் என்றால் அது அக்காலத்தில் ஒரு ஜெர்மனியனுக்கு நிச்சயமாக ஒரு மிகக் கணிசமான முன்னேற்றப் படியேயாகும், ஆனால் ஜெர்மனிக்கு மட்டுமே அது ஒரு புதிய கண்டுபிடிப்பாக அந்தஸ்து பெற முடியும். ரிக்கார்டோ தத்துவத்தின் இப்படிப்பட்ட செயல்பாடு ஒன்றும் புதுமையல்ல என்று இதேபோன்ற தற்பெருமைக்கு ஆளான புரூதோனை மார்க்ஸ் விமர்சனம் செய்த போது நிரூபித்தார்.

"இங்கிலாந்தில் அரசியல் பொருளாதாரப் போக்கை ஏதாவதொரு வகையில் அறிந்து வைத்திருப்பவர்கள் இந்த நாட்டிலுள்ள அநேகமாக எல்லா சோஷலிஸ்டுகளும் வெவ்வேறு காலப்பகுதிகளில் ரிக்கார்டோ தத்துவத்தின் சமநிலை வாதச் செயல்பாட்டை முன்மொழிந்துள்ளதை அறியாதிருக்க முடியாது. திரு. புரூதோனுக்கு நாம் மேற்கோள்காட்ட முடியும்: ஹாட்ஸ்கின் எழுதிய அரசியல் பொருளாதாரம், 1827; வில்லியம் தாம்ப்ஸன் எழுதிய மனித இன்பத்துக்கு மிகப் பொருத்தமான செல்வ விநியோகத்திற்குரிய கோட்பாடுகளைப் பற்றிய ஒரு விசாரணை, 1824; டி. ஆர். எட்மண்ட்ஸ் எழுதிய பொருளாதாரம், பாங்கான, ஒழுக்கநெறி வகைப்பட்ட அரசியல் பொருளாதாரம், 1828, என்றவாறு; இப்படியே மேலும் நான்கு பக்கங்களுக்கு மேற்கோள் காட்டலாம். திரு. பிரே எனும் ஒரு ஆங்கிலேயக் கம்யூனிஸ்டு எழுதிய தொழிலாளர் படும் அநீதிகளும் தொழிலாளர் தரும் பரிகாரமும், லீட்ஸ், 1839,"¹ எனும் குறிப்பிடத்தக்க நூலில் சொல்வதைக் கேட்பதோடு திருப்தியடைவோம்.

ரோட்பெர்டஸ் முதலுரிமை கோருவதில் பெரும் பகுதிக்கு இங்கே பிரேயிடமிருந்து மட்டும் கொடுத்துள்ள மேற்கோள்களே முற்றுப்புள்ளி வைக்கின்றன.

அக்காலத்தில் மார்க்ஸ் பிரிட்டிஷ் மியூசியத்தின் படிப்பகத்துக்குப் போனது கிடையாது. பாரிஸ், புருஸெல்ஸ் நூலகங்களிலிருந்த நூல்கள் தவிர, 1845 கோடை காலத்தில் நாங்கள் இருவரும் இங்கிலாந்தில் ஆறு வாரப் பயணம் செய்தபோது அவர் மாஞ்செஸ்டரில் பார்த்த எனது நூல்கள் நூற்பகுதிகள் ஆகியவற்றை மட்டுமே ஆய்ந்தார். எனவே, பிரச்சினையிலிருக்கிற இலக்கியம் இன்றிருக்கக் கூடிய மாதிரி 1840-50 களில் அவ்வளவு கிடைப்பதற்கரியதாய் இருந்ததில்லை. அப்படியிருந்தும், அது ரோட்பெர்டஸுக்குத் தெரியாமலிருந்ததென்றால் அதற்கு அவரது பிரஷ்யப் பிராந்திய குறுகிய மனப்பான்மை மட்டுமே காரணம் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பான பிரஷ்ய சோசலிசத்தின் உண்மையான ஸ்தாபகர் அவர், இறுதியாக அப்படித் தான் இன்று அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஆயினும், அவரது அன்புக்குரிய பிரஷ்யாவிலுங்கூட, ரோட்பெர்டஸ் நிம்மதி கெடாமலிருக்க முடியவில்லை. 1859-ல் மார்க்ஸ் எழுதிய அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவுரைக்குச் செலுத்தும் ஒரு பங்கு, முதற்பாகம், பெர்லினில் வெளியிடப்பட்டது. அதில், ரிக்கார்டோவை எதிர்த்துப் பொருளாதாரவாதிகள் எழுப்பிய ஆட்சேபணைகளில் இரண்டாவுது ஆட்சேபணையாக 40 ஆம் பக்கத்தில் முன் வைத்தது வருமாறு:

"ஒரு விளைபொருளின் பரிமாற்ற மதிப்பு அதில் அடங்கியுள்ள உழைப்பு நேரத்துக்குச் சமமானால், ஒரு உழைப்பு நாளின் பரிமாற்ற மதிப்பு அதன் விளைபொருளுக்குச் சமமாகும். அல்லது உழைப்பின் விளைபொருளுக்குச் சமமாகக் கூலி இருக்க வேண்டும். ஆனால் வழக்கோ நேர்மாறாக இருக்கிறது."

இதைப்பற்றிப் பின்வரும் குறிப்பு இருந்தது:

"ரிக்கார்டோவுக்கு எதிராகப் பொருளாதாரத் தரப்பிலிருந்து* முன்வைக்கப்பட்ட இந்த ஆட்சேபணை பிற்காலத்தில் சோசலிஸ்டு தரப்பிலும் எழுப்பப்பட்டது. தத்துவ ரீதியிலே இந்தச் சூத்திரம் சரியே என்று முன்னனுமானித்துக் கொண்டு, தத்துவத்துடன் முரண்படுவதாக நடைமுறை மீது பழிபோடப்பட்டது, மேலும் அதன் தத்துவரீதியான கோட்பாட்டிலிருந்து அனுமானிக்கப்பட்ட முடிவுகளை நடைமுறையிலே எடுத்துக் கொள்ளுமாறு பூர்ஷ்வா சமுதாயம் அழைக்கப்பட்டது. இவ்வழியிலாயினும் ஆங்கிலேய சோசலிஸ்டுகள் ரிக்கார்டோவின் பரிமாற்ற மதிப்புச் சூத்திரத்தை அரசியல் பொருளாதாரத்துக்கு எதிராகத் திருப்பினர்."¹¹

* - "பூர்ஷ்வாப் பொருளாதாரவாதிகள்" என்கிறார் மார்க்ஸ். - (பதிப்பாசிரியர்.)

 

இதே குறிப்பில் மார்க்ஸின் தத்துவத்தின் வறுமை எனும் நூல் குறிப்பிடப்பட்டது, அன்று அது எல்லாப் புத்தகக் கடைகளிலும் கிடைக்கக் கூடியதாயிருந்தது.

ஆகவே, ரோட்பெர்டஸ் தமது 1842 ஆம் ஆண்டுத் தங்கள்கண்டுபிடிப்பு கள் உண்மையிலே புதியவைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்வ தற்குப் போதிய வாய்ப்பு இருந்தது. அதற்கு மாறாக, அவற்றை அவர் திரும்பத் திரும்பப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார், ரோட்பெர்ட ஸைப் போலவே மார்க்ஸும் சுயேச்சையாக ரிக்கார்டோவிடமிருந்து தமது முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கக் கூடும் எனும் விஷயம் அவர் மூளையிலே படாமலே போகிற அளவுக்கு அவை நேர் நிகர் அற்றவை என்று கருதுகிறார், அது கடுகளவேனும் சாத்தியமில்லையாம்! இந்த முடிவுகள் தம்மிருவருக்கும் வெகு காலத்துக்கு முன்பே இங்கி லாந்தில் எடுத்தியம்பப்பட்டிருந்ததை – கொச்சை வடிவத்தில் ரோட் பெர்டஸ் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறாரே, குறைந்தபட்சம் அந்தக் கொச்சை வடிவத்திலேயாயினும் எடுத்தியம்பப்பட்டிருந்ததை – தானே உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு மார்க்ஸ் எல்லா வசதிகளும் அளித்தார், அப்படியிருந்தும் அதே மார்க்ஸ் அவரிடமிருந்து "களவாடி" இருக்கிறாராம்!

மேலே கொடுக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே ரிக்கார்டோ தத்துவத்தின் மிக எளிமையான சோஷலிஸ்ட் செயல்பாடாகும். அது ரோட்பெர்டஸ் உள்ளிட்ட மற்றவர்கள் விஷயத்தில் உள்ளடடியே ரிக்கார் டோவுக்கு அப்பால் வெகு தொலைவுக்குப் போகிறது; அது மிகுதி மதிப்பின் தோற்றுவாய் மற்றும் தன்மை பற்றி உட்பார்வை பெறு வதற்குப் பல வழக்குகளில் கொண்டு சென்றுள்ளது. இவ்விஷயத்தில் குறைந்தபட்சம் தாம் எடுத்தியம்பிய அதே நேர்த்தியுடன் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றுக்கு மேலாக அவர் எங்கும் எதையும் முன் வைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமக்கு முன்சென்றவர்களின் முன்வைப்பு போலவே அவரது முன்வைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது – அதாவது அவர் விமர்சனப் பார்வையின்றி, சிறிதேனும் பரிசீலனை செய்யாமலே, உழைப்பு, மூலதனம், மதிப்பு முதலான பொருளாதார வகையினங்களை அவற்றின் வெளிப்புறத் தோற்றங்களில் ஒட்டிக் கொண்டிருக்கிற கொச்சையான வடிவத்தில், பொருளாதாரவாதிகளால் அவருக்குக் கொடுக்கப்பட்ட கொச்சையான வடிவத்தில், எடுத்துக் கையாள்கிறார். அதன் காரணமாகவே அவர் எல்லா மேல் வளர்ச்சியி னின்றும் தம்மைத் தாமே கத்தரித்துக் கொள்கிறார் – மார்க்ஸ் அதற்கு மாறாக இருந்தார், சென்ற அறுபத்து நான்கு ஆண்டுகளாக அடிக்கடித் திருப்பிச் சொல்லப்பட்டு வந்த இந்த முன்கூற்றுக்களை மார்க்ஸ்தான் முதன்முதலாகக் கொஞ்சமாவது உருப்படியாக்கியவர் – அதோடல்லாமல், அவர் கற்பனாவாதத்துக்கு நேராகக் கொண்டு செல்கிற பாதையையும் திறந்துவைத்துக் கொள்கிறார்; இதை நாம் விளக்கிக் காட்ட விரும்புகிறோம்.

சமுதாய விளைபொருள் முழுவதும் தமது விளைபொருள் என்கிற முறையில் தொழிலாளர்களுக்குச் சொந்தமாகும், ஏனெனில் அவர்கள் மட்டுமே உண்மையான உற்பத்தியாளர்கள், எண்ணும்படியான ரிக்கார்டோ தத்துவத்தின் மேற்கூறிய செயல்பாடு நேராகக் கம்யூனிஸ்துக்குக் கொண்டு செல்கிறது. ஆனால், மேலே மேற்கோள் காட்டிய பகுதியில் மார்க்ஸீயம் குறித்துக் காட்டுகிறபடி, புறவடிவ வகையிலே அது பொருளாதாரரீதியிலே தவறாகும், ஏனெனில் அது வெறுமனே நீதிநெறி முறைமையை அரசியல் பொருளாதாரத்தில் செயல்படுத்துவதாகும். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் விதிகளின்படி, விளைபொருளின் மிகப்பெரிய பகுதி அதை உற்பத்தி செய்த தொழிலாளர்களுக்குச் சொந்தமாக இல்லை. அது அநியாயம், அப்படி இருக்கக் கூடாது என்று இப்போது சொல்வோமானால் அதற்கும் அரசியல் பொருளாதாரத்துக்கும் உடனடிச் சம்பந்தம் ஒன்றும் கிடையாது. இந்தப் பொருளாதார உண்மை நமது நீதிநெறி உணர்ச்சிக்கு முரண்பாடாக இருக்கிறது என்று மட்டுமே சொல்லிக் கொள்கிறோம். எனவேதான், இதனை எப்போதும் மார்க்ஸ் தமது கம்யூனிஸ்ட் கோரிக்கைகளுக்கு ஆதாரமாகக் கொள்ளவில்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத வீழ்ச்சியையே ஆதாரமாகக் கொண்டார் - அவ்வீழ்ச்சி நம் கண்ணெதிரே மேன்மேலும் அதிகரித்த அளவிலே தினத்தோறும் நிகழ்ந்து வருகிறது; கூலி கொடுபடாத உழைப்பு அடங்கியதே மிகுதி மதிப்பு ஆகும் என்று மட்டுமே அவர் சொல்கிறார், அது ஒரு எளிய உண்மையாகும். ஆனால், புறவடிவ வகையிலே பொருளாதாரரீதியிலே தவறாயிருக்கக் கூடியது உலக வரலாற்றின் பார்வை நிலையிலே சரியாயிருக்கக் கூடும். அடிமை முறை அல்லது பண்ணையடிமை உழைப்பு முறை விஷயத்தில் செய்தது போல மக்கள் திரளின் நீதிநெறி உணர்வு ஒரு பொருளாதார உண்மையை அநியாயம் என்று பறைசாற்றினால், அந்த உண்மை காலாவதியாகிவிட்ட ஒன்று, வேறு பொருளாதார உண்மைகள் தோற்றங்கொண்டு விட்டன, அதனால் முந்தைய உண்மை சகிக்க வொண்ணாததாயும் நிலைநிற்க வொண்ணாததாயும் ஆகிவிட்டது என்பதற்கு அது சான்றாகும். எனவே, புறவடிவ வகையிலே பொருளாதாரச் சரியின்மையின் பின்னே ஒரு மிக உண்மையான பொருளாதார உள்ளடக்கம் மறைந்திருக்கக்கூடும். மிகுதி மதிப்பு பற்றிய தத்துவத்தின் குறிப்பொருளையும் வரலாற்றையும் குறித்து மேலும் நெருங்கிக் கவனிப்பதற்கு இது இடமல்ல.

அதே நேரத்தில் ரிக்கார்டோவின் மதிப்பு பற்றிய தத்துவத்திலிருந்து வேறு முடிவுகள் எடுக்க முடியும், எடுக்கப்பட்டும் உள்ளன பண்டங்களின் மதிப்பு அவற்றின் உற்பத்திக்குத் தேவையான உழைப்பினால் நிர்ணயிக்கப்படுகிறது. எனினும், இந்தக் கேடுகெட்ட உலகத்திலே பண்டங்கள் சில சமயங்களில் தமது மதிப்புக்கு மேலாகவும் சில சமயங்களில் கீழாகவும் விற்கப்படுவதைக் காணலாம் – இது உண்மையிலேயே போட்டிக்குரிய மாறுபாடுகளின் விளைவாக மட்டும் நிகழ்வதில்லை. வரத்து தேவை சாதனத்தால் பண்டங்களின் விலை உழைப்பின் மதிப்புக்கு இறக்கப்படுகிற போக்கு இருப்பது போலவேதான் இலாப விகிதமும் எல்லா முதலாளிகளுக்கும் ஒரே தரத்தில் சரிசமமாக்கப்படும் போக்கு இருக்கிறது. ஆனால் இலாப விகிதமானது ஒரு தொழில் அமைப்பில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த மூலதனத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. எனினும் இப்போது வெவ்வேறான இரண்டு தொழிற் கிளைகளில் வருடாவருடம் விளைபொருள் சமமான உழைப்பு அளவு கொண்டதாயிருக்கக் கூடும், அதன் விளைவாக சம மதிப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் கூடும், மேலும் இரண்டிலும் கூலி சம அளவில் இருக்கக் கூடும், அதே நேரத்தில் ஒரு கிளையில் ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் மற்ற கிளையில் ஈடுபடுத்தப்பட்டதைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருக்கக் கூடும் – அடிக்கடி இப்படி இருக்கவும் செய்கின்றன -, இதன் காரணமாக, ரிக்கார்டோவின் மதிப்பு பற்றிய விதி இங்கே சம இலாப விகிதம் பற்றிய விதியுடன் முரண்பட்டு விடுகிறது. இதை ரிக்கார்டோவுங்கூட கண்டுகொண்டார். இரண்டு தொழிற் கிளைகளின் விளைபொருட்களும் அவற்றின் மதிப்புப்படி விற்கப்பட்டால், இலாப விகிதங்கள் சமமாக இருக்க முடியாது; ஆனால், இலாப விகிதங்கள் சமமாயிருக்குமானால் அப்போது அவ்விரண்டு தொழிற்கிளைகளின் விளைபொருட்களையும் நிச்சயமாக எப்போதும் அவற்றின் மதிப்புப்படி விற்க முடியாது. ஆக, இங்கே ஒரு முரண்பாட்டை, இரண்டு பொருளாதார விதிகளின் முரண் முழுமையைப் பார்க்கிறோம். இதற்கான நடைமுறைத் தீர்வு ரிக்கார்டோவின் கருத்தில் (அத்தியாயம் 1, பகுதிகள் 4 ம் 5 ம்)¹² பொது வழக்கமாக மதிப்புக்குப் பாதகமாக இலாப விகிதத்துக்குச் சாதகமாக நிகழ்கிறது.

எனினும் ரிக்கார்டோவின் மதிப்பு பற்றிய வரையறுப்புக்கு ஆபத்தான இணக்குறிப் பண்புகள் இருந்த போதிலும், ஒரு நல்ல பூர்ஷ்வா அதை நேசித்துப் போற்றிக் கொள்ளக் கூடியதான ஒரு முனைப்புக்கூறும் அதற்கு உண்டு. அது அவனது நியாய உணர்ச்சியை எதிர்க்கவொண்ணாச் சக்தியுடன் தூண்டிவிடுகிறது. நிலப்பிரபுத்துவ முறையின் அநீதி, சமமற்ற நிலை, சிறப்புரிமை ஆகியவற்றின் அழிவுக் குவியலின் மீது 18 வது 19 வது நூற்றாண்டுகளின் பூர்ஷ்வா தனது சமுதாயக் கட்டடத்தை நீதி, உரிமைகளில் சமநிலை எனும்

...இந்தக் கற்பனாவாதம் நவீன கால சிறு பூர்ஷ்வாவின் – உண்மையாகவோ இலட்சிய நிலையிலோ – சிந்தனை முறையிலே இத்துணை ஆழமாக வேர்விட்டிருப்பதற்குச் சான்றுகள் உள்ளன: ஏற்கனவே 1831 லேயே ஜான் கிரே இதை முறைமையுடன் வளர்த்திருக்கிறார்;¹³ 1830 களிலே இங்கிலாந்தில் இது நடைமுறையிலே செயல்படுத்த முயற்சிக்கப்பட்டுப் பரவலாகப் பிரச்சாரம் செய்யப் பட்டும் வந்தது; 1842-ல் ஜெர்மனியில் ரோட்பெர்டஸும் 1846-ல் பிரான்ஸில் புரூதோனும் இதைக் கடைசிக் கொழுந்தாக முளைத்த உண்மையாகப் பிரகடனப்படுத்தினர்; மேலும் ரோட்பெர்டஸ் 1871லே கூட இதைச் சமுதாயப் பிரச்சனைக்குப் பரிகாரமாகவும், சொல்லப் போனால் தமது சமுதாய உயிலாகவும் பிரகடனப்படுத்தினார் மற்றும் 1884-ல் ரோட்பெர்டஸின் பெயரால் பிரஷ்ய அரசு வழிப்பட்ட சோசலிசத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய பதவி வேட்டைக் காரர்களிடையே இதற்கு மீண்டும் ஆதரவாளர்கள் கிடைக்கிறார் கள் என்று. புரூதோனுக்கும் கிரேயுக்கும் எதிராக இந்தக் கற்பனா வாதத்தைப் பற்றி எவ்வளவோ விரிவாழத்துடன் மார்க்ஸ் விமர்சனம் அளித்திருப்பதால் (இந்நூலின் பிற்சேர்க்கையைக் காண்க¹) ரோட்பெர்டஸுக்கே உரித்தான வடிவில் இது நிரூபிக்கப்பட்டும் வர்ணிக்கப்பட்டும் இருப்பதைப் பற்றிச் சில குறிப்புகள் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஏற்கனவே கூறியவாறு, பொருளாதாரவாதிகளிடமிருந்து தமக்குக் கிடைக்கப் பெற்ற அதே வடிவத்திலே பொருளாதாரக் கருது துருவங்களின் மரபான வரையறுப்புகளை ரோட்பெர்டஸ் எடுத்தாள் கிறார், அவற்றை ஆய்ந்து விசாரிக்கச் சிறிதேனும் முயலவில்லை அவர். அவருக்கு மதிப்பு என்பது "அளவுப் பிரகாரம் ஒன்று மற்றவற்றிற்கு எதிராக மதிப்பிடப்படுவது, இந்த மதிப்பீடு அளவையாகக் கருதப் படும்"¹ என்று. நயமாகச் சொல்வதானால் இது ஒரு மிகவும் ஒழுங்கற்ற வரையறுப்பு, அதிகபட்சமாகப் போனால் மதிப்பு என்ன மாதிரி ஏறத்தாழத் தோற்றமளிக்கிறது என்று ஒரு கருத்து கொடுக்கிறதே தவிர அது என்ன என்ன என்று எதுவுங் கூறவில்லை. எனினும், மதிப்பு பற்றி ரோட்பெர்டஸ் சொல்ல முடிகிறதெல்லாம் இவ்வளவுவேயாதலால் அவர் மதிப்பின் அளவையை மதிப்புக்கு அப்பால் வெளியே தேடிக் கொண்டிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். திருவாளர் அடோல்ஃப்-வாக்னர் எல்லையின்றிப் போற்றிப் பெருமைப்படுத்துகிறாரே¹ அந்த சூட்சுமச் சிந்தனையாற்றலுடன் ரோட்பெர்டஸ் பயன்பாடு மதிப் பையும் பரிமாற்ற மதிப்பையும் ஒன்றோடொன்று போட்டுக் குளறுபடி யாக்கி முப்பது பக்கங்களைப் போக்கியபின் உண்மையான மதிப்பு அளவை எதுவுமில்லை என்றும், ஒரு பதில் அளவையை வைத்துக் கொண்டு எப்படியோ சமாளிக்க வேண்டியதுதான் என்றும் முடிவுக்கு வருகிறார், உழைப்பு அவ்வகை அளவையாகப் பயன்பட முடியும் – ஆனால் அதற்குச் சம அளவான உழைப்புள்ள விளைபொருட்கள் அதே சம அளவான உழைப்புள்ள விளைபொருட்களோடு எப்போதும் பரிமாற்றம் செய்து கொண்டால்தான் முடியும்; அது "ஏற்கனவே தன்னியல்பாக அப்படி இருந்தாலும் சரி" அல்லது அப்படி இருக்கு மாறு உறுதிப்படுத்திக் கொள்வதற்கு "நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டாலும் சரி" எனவே, பண்டங்களுக்கு "உழைப்புச் செலவு ஆகிறது" உழைப்பு தவிர செலவாகிறது வேறு ஒன்றுமில்லை என்றும் அது ஏன் அப்படி என்றும் நமக்கு விளக்குவதற்கு முதல் அத்தியாயம் முழுவதையும் எடுத்துக் கொண்டுள்ள போதிலும் மதிப்பும் உழைப்பும் தம்மிடையே எவ்விதமான அசல் உறவும் இன்றி நிற்கின்றன பொருளாதாரப் பிரச்சினையைப் பொருளாதார வழியிலே தீர்க்க முயல்கிறார்கள். ரோட்பெர்டஸுக்கு அது மேலும் சுலபமானது. ஒரு நல்ல பிரஷ்ய நாட்டான் என்கிற முறையில் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடு கிறார்: அரசதிகார ஆணை அந்தச் சீர்திருத்தத்துக்கு உத்தரவிடுகிறது.

ஆக இவ்வழியில் நேர்த்தியாக மதிப்பு “உருவமைக்கப்படுகிறது” – ஆனால் இவ்வுருவமைப்பில் ரோட்பெர்டஸ் கோருகிற முதலுரிமை என்னவோ நிச்சயமாக உருவமைக்கப்படவில்லை. மாறாக, ரோட்பெர் டஸுக்கு முன்பே கிரேயும் பிரேயும் (மற்றவர்களும் உண்டு) அடிக்கடி நீட்டி முடக்கிக் காது புளித்துப் போகிற அளவுக்கு இக்கருத்தை – அதாவது, என்றென்றைக்கும் எல்லா சூழ்நிலைமைகளிலும் விளை பொருட்களை அவற்றின் உழைப்புமதிப்பு ஒன்றை மட்டுமே வைத்துப் பரிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளைக் கோரும் ஆத்மார்த்திக விருப்பத்தை – திரும்பப் திரும்பச் சொல்லியுள்ளனர்.

இவ்வாறு மதிப்பை அரசு உருவமைத்தபின் – குறைந்தபட்சம் விளைபொருட்களின் ஒரு பகுதிக்காயினும் என்றவாறு, ஏனெனில் ரோட்பெர்டஸிடம் தன்னடக்கம் உள்ளவர் – அது தன்னுடைய உழைப்புக் காகிதப் பணத்தை வெளியிட்டு அதிலிருந்து தொழில்துறை முதலாளிகளுக்கு முன் பணம் கொடுக்க, அவர்கள் அதைக் கொண்டு தொழிலாளர்களின் கூலி கொடுக்கிறார்கள். உடனே தொழிலாளர்கள் தாங்கள் பெற்ற உழைப்புக் காகிதப் பணத்தைக் கொண்டு விளை பொருட்களை வாங்கி அதன் மூலமாக அந்தக் காகிதப் பணம் புறப் பட்ட இடத்துக்கே திரும்பிப் போகச் செய்கின்றனர். இது எவ்வளவு அழகாக நடந்தேறுகிறது என்பதை ரோட்பெர்டஸிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்:

இரண்டாவது நிபந்தனையைப் பொறுத்தமட்டில், ஒரு விளை பொருளை யதார்த்தத்தில் ஒப்படைக்கிற நபர்தான் அந்த விளை பொருளை உற்பத்திச் செய்வதற்கான உழைப்பு அளவை திட்ட நுட்பமாகப் பதிவு செய்த சீட்டு பெற்றுக் கொள்வதால் ஒரு சீட்டில் சான்றளிக்கப்பட்ட மதிப்பு யதார்த்தத்திலே புழக்கத்தில் இருக்க வேண்டும் என்கிற அவசியமான நடவடிக்கை நடைமுறையாக்கப் படுகிறது. இரண்டு நாள் உழைப்பில் செய்யப்பட்ட விளைபொருளை ஒப்படைக்கிற ஒருவன் ‘இரண்டு நாள்’ என்று குறிப்பிடப்பட்ட சீட்டு பெறுகிறான். சீட்டுகளை வழங்குவதில் இந்த விதியைக் கறாராகப் பின்பற்றுவதின் வழியே இரண்டாவது நிபந்தனையும் அவசியமாக நிறைவேற்றப்படும். ஏனெனில், நமது முன்னனுமானங்களுக்கு ஏற்பப் பொருட்களின் உண்மையான மதிப்பு அந்தப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குச் செலவிட்ட உழைப்பின் அளவுடன் எப்போதும் பொருந்துவதாலும், இந்த உழைப்பின் அளவு வழக்கமான நேரப் பிரிவினை மூலமாக அளவிடக் கூடியதாயிருப்பதாலும், இரண்டு நாள் எவ்வளவு வேண்டுமோ அதை உற்பத்தி செய்கிறான். தேவையான பொருட்களின் தரம், வகை விஷயத்திலும் அளவு விஷயத்திலும் சமுதாயத் தேவை அவனுக்கு ஒரு அறியாத பரிமாணமாகவே இருந்துவிடுகிறது. இன்று விரைவிலே விநியோகத்துக்குக் கொடுக்க முடியாத ஒன்று அடுத்த நாள் தேவையை வெகுவாக மிஞ்சிய அளவிலே கொடுக்கப்படலாம். ஆனபோதிலும், ஏதோவொரு வழியில், நேர்த்தியாகவோ மோசமாகவோ, இறுதியிலே தேவை நிறைவாக்கப்படுகிறது, மொத்தமாகப் பார்க்கிற பொழுது இறுதி யிலே உற்பத்தியானது தேவைப்படுகிற பொருட்கள் திசையில் செலுத்தப்படுகிறது. இந்த முரண்பாட்டின் சமரசம் எப்படிச் சாதிக்கப்படுகிறது? போட்டி மூலமாக, போட்டி எப்படி இந்தத் தீர்வு ஏற்படச் செய்கிறது? வகையிலோ தொகையிலோ உடனடியான சமுதாயத் தேவைகளுக்குப் பயனற்ற பண்டங்களின் விலைகளை அவற்றின் உழைப்பு மதிப்புக்குக் குறைவாக இறக்குவதின் மூலமாக; மற்றும் இந்தச் சுற்றி வளைத்த வழியில் முற்றிலும் பயனற்ற பொருட்களையோ அல்லது பயன்படுத்த முடியாத அளவிலே மிக மிஞ்சிய அளவிலே பயனுள்ள பொருட்களையோ உற்பத்தி செய்துள் ளதாக முதலாளிகளுக்கு உணர்த்துவதின் மூலமாக, இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தொடர்கின்றன.

முதலாவது, பண்டங்களின் விலைகள் அவற்றின் மதிப்புகளி லின்று இடையறாது திரிந்து செல்வது ஒரு அவசியகரமான நிபந்தனை யாகும் – அதிலேதான், அதன் வழியேதான், பண்டங்களின் மதிப்பு உண்டாக முடியும். போட்டியின் எழுச்சி வீழ்ச்சிகளின் மூலமாகவும், அதன் விளைவாகப் பண்ட விலைவாசிகளின் எழுச்சி வீழ்ச்சிகளின் மூலமாகவும் மட்டுமே பண்ட உற்பத்தியின் மதிப்பு பற்றிய விதி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது, சமுதாய ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் மூலமாகப் பண்டத்தின் மதிப்பு நிர்ணயிக்கப் படுவதும் யதார்த்தமாகிறது. அதன் காரணமாக மதிப்பின் வெளியீடு வடிவமான விலைக்கு அது வெளியிடும் மதிப்பினின்று வேறுபட்ட அம்சம் ஒன்று பொதுவழக்காக இருக்கிறது. இது மிகப் பெரும் பான்மையான சமுதாய உறவுகளுக்கு வாய்த்திருப்பது போல் மதிப்புக்கும் வாய்த்துள்ள தலைவிதியாகும். தான் பிரதிநிதித்துவப் படுத்துகிற முடியரசினின்று மன்னன் வழக்கமாகவே முற்றும் வேறுபட்டுக் காணப்படுகிறான். எனவே, தத்தம் பண்டங்களைப் பரிமாற்றிக் கொள்கிற உற்பத்தியாளர்களின் சமுதாயத்திலே, விலைகள்மேல் நிர்ப்பந்தம் செலுத்துவதின் மூலமாக மதிப்பு நிர்ணயத்தை நிலைநாட்ட முடிவதற்குரிய ஒரே வழியில் அதை நிர்ணயிக்காதபடி போட்டியைத் தடை செய்வதின் மூலமாக உழைப்பு நேரத்தைக் கொண்டு மதிப்பு நிர்ணயத்தை நிலைநாட்ட விரும்புவது, நேரத்தைக் கொண்டு மதிப்பு நிர்ணயத்தை நிலைநாட்ட விரும்புவது, பொருளாதார விதிகள்பால் வழக்கமாகக் காட்டப்படுகிற கற்பனாவாத ஏளன நினைப்பைக் குறைந்தபட்சம் இத்துணையினிலேனும் கொண்டதை நிரூபிப்பதாகும்.

இரண்டாவதாக, தத்தம் பண்டங்களைப் பரிமாறிக் கொள் உற்பத்தியாளர்களின் சமுதாயத்திலே பண்ட உற்பத்தியின் விதியைப் போட்டியானது செயலுக்குக் கொண்டுவருகிறது, காரணத்திற்காகவே சமுதாய உற்பத்திக்கு அந்தச் சூழ்நிலை ஒரே சாத்தியமான அமைப்பையும் ஏற்பாட்டையும் உண்டு வைக்கிறது. பண்டங்களின் விலைக்குறைப்பு அல்லது விலை மூலமாக மட்டுமே எந்தப் பொருட்கள எந்த அளவில் சமுதாயத் வேண்டுமென்றோ வேண்டாமென்றோ தனிப்பட்ட பண்ட யாளர்களுக்குப் பலமாக உணர்த்தப்படுகிறது. ஆனால் தனியொரு ஒழுங்கியக்கியைத்தான் ரோட்பெர்டஸும் தழுவி கற்பனாவாதம் ஒழித்துவிட விரும்புகிறது. அப்புறம் ஒ பொருளும் தேவையான அளவிலும் அதற்குமேல் போகாம உற்பத்திச் செய்யப்படும் என்பதற்கு உத்தரவாதம் என்ன – டையை அடைகிற அளவுக்கு அக்காரக் கிழங்குச் சர்க்கரையையும் சாகுவளவுக்கு உருளைக்கிழங்குச் சாராயமும் நமக்குக் கிடை அதே நேரத்தில் தானியமும் இறைச்சியும் இன்றிப் ப கிடக்கவேண்டியிராது என்பதற்கு உத்தரவாதம் என்ன – பொத்தான்கள் கோடிகோடியாகக் கிடைக்கிற அதே நேரத் மானத்தை மறைக்க டிரெளஸர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவி என்பதற்கு உத்தரவாதம் என்ன – என்று நாம் கேட்டால் ரோட் வெற்றிக் களிப்போடு தமது புகழ்பெற்ற கணக்கைக் காட்டுகி அதன் பிரகாரம் தேவைக்கு மிஞ்சிய ஒவ்வொரு இராத் சர்க்கரைக்கும், விற்கப்படாத ஒவ்வொரு பீப்பாய் சாராயத்துக்கும் பயன்படுத்த முடியாத ஒவ்வொரு டிரெளஸர் பொத்தானுக்கு சரிகரான சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது, அந்தக் க சரியாக “விடை கொடுக்கிறதாம்”, அதன்படி “எல் கோரிக்கைகளும் நிறைவாக்கப்பட்டுச் சரியாகத் தீர்க்கப்படுமா இதனை நம்பாதவன் போமரேனியாவிலுள்ள அரசாங்கத் வரவு செலவு அலுவலகக் கணக்காயர் *x*-க்கு எழுதிக் கே கொள்ளலாம். அவர் இந்தக் கணக்கை மேற்பார்த்துச் சரியான கண்டிருக்கிறார், அவரது ரொக்கக் கணக்கில் இதுவரை ஒரு பிழ நேர்ந்ததில்லையாதலால் அவரை முற்றாக நம்பலாம்.

இனி ரோட்பெர்டஸ் தமது கற்பனைத் திட்டத்தைக் கொ தொழில், வாணிபத் துறைகளின் நெருக்கடிகளை ஒழித்திட விரும் வெகுளித்தனத்தைக் கவனியுங்கள். பண்டங்களின் உற்பத்தி உல சந்தைக்கான அளவுக்கு வந்துவிட்டால், சொந்தக் கணக்குக் உற்பத்தி செய்கிற தனித்தனி உற்பத்தியாளர்களுக்கும் அவர்களின் உற்பத்திக்குான சந்தைக்கும் – அளவினும் தரத்திலும் அதன் தேவை எண்ணிறைந்த சக ஆதரவாளர்கள் அத்தனை பேரிடமிருந்தும் காட்டுகிறது. கூலியுழைப்பை மூலதனம் சுரண்டுவதை ஒழி குறிக்கோளுடன் அவர்கள் அனைவரும் இந்தப் பரிமாற்ற கோருகின்றனர். ஒவ்வொரு உற்பத்தியாளனும் தனது விளைபொ முழுமையான உழைப்பு மதிப்பைப்பெற வேண்டும். இதில் முதல் புரூதோன் ஈறாக எல்லோரும் ஒத்துப் போகிறார்கள், அ கிடையாது என்கிறார் ரோட்பெர்டஸ். கூலியுழைப்பும் அ சுரண்டுவதும் நீடிக்கிறது.

முதலாவதாக, சிந்தனைக்கெட்டத்தக்க எந்த ஒரு சமு நிலைமையிலும் ஒரு தொழிலாளி தனது விளைபொருளின் மதிப்பையும் நுகர்வதற்குப் பெற முடியாது. உற்பத்தி செய்த ருந்து வரிசையாகப் பொருளாதார ரீதியிலே உற்பத்தியாற்றவி ஆனால் அவசியமான பணிகள் நடத்தப்பட வேண்டும், அ அந்தப் பணிகளோடு சம்பந்தப்பட்ட நபர்களும் பராமரிக்கப்பட வேண்டும். தற்கால உழைப்புப் பிரிவினை இருந்து வருகிற வரை தான் இது சரியாகும். பொதுவான உற்பத்தியாற்றலுள்ள உடமையாக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்திலே – இதுவும் “சிந்த கெட்டக் கூடிய” விஷயமேயாகும் – இது சரிந்துவிடுகிறது. லும் சமுதாயச் சேமத்தொகைக்கும் திரட்சிக்கும் வேண்டிய அவசியம் இருந்து வரும், எனவே மொத்தத்தில் தொழிலாளர்கள் அதாவது எல்லோரும் – தமது மொத்த விளைபொருளுக்கு சொந்தக்காரர்களாகவும் அனுபோகஸ்தர்களாகவும் இருந்து வந்தா ஒவ்வொரு தனித்தனி தொழிலாளியும் “தனது உழைப்பின் விளைபொருளையும்” அனுபவிக்க மாட்டான். உழைப்பு பொருளின் செலவிலே பொருளாதார ரீதியிலே உற்பத்தியாற்ற பணிகள் நடத்தி வருவதை ஏனைய உழைப்புப் பணக் கற்ப உலகவாதிகள் புறக்கணிக்கவில்லை. எனினும் அவர்கள் இ நோக்கத்திற்காக வழக்கமான ஜனநாயக வழியிலே தொழிலாளர்க தங்கள்மேல் தாங்களே வரிபோட்டுக் கொள்ள விட்டுவிடுகிறார் ஆனால் ரோட்பெர்டஸ் – அவரது 1842 ஆம் வருடத்திய சமு சீர்திருத்தம் முழுவதும் அக்காலத்திய பிரஷ்ய அரசுக்கு இசைவா செய்யப்பட்டிருக்கிறது – இந்த விஷயம் முழுவதையும் அதிகார கத்தின் முடிவுக்கு வைக்கிறார், அது மேலிருந்து தொழிலாள சொந்த விளைபொருளில் அவனுக்குரிய பங்கை நிர்ணயித்து  அவன் வைத்துக் கொள்ள கருணையுள்ளத்தோடு அனுமதிக்கிறது.

இரண்டாவதாக, நில வாடகையும் இலாபமும் குறை படாமல் நீடித்துவார வேண்டும், ஏனெனில் நிலச்சுவான்தார்களு தொழில்துறை முதலாளிகளும்கூட சமுதாய ரீதியிலே பயனுள அல்லது அவசியமானதுமான பணிகளை – அவை பொருளாதா ரீதியிலே உற்பத்தியாற்றலில்லாதவை யாயினும்கூட – செய்கிறார்கள் அந்தக் கணக்கில் அவர்கள் நில வாடகை, இலாபம் எனும் வடிவத்தில் ஒரு விதமான ஊதியம் பெறுகிறார்கள் - இந்தக் கருத்தோட்டம் புதுமையானதல்ல என்று 1842லேயே ஏற்கப்பட்டதாகும். அவர்கள் செய்வது கொஞ்சமாயினும், அதை மோசமாகச் செய்த போதினும், அவர்கள் தற்சமயம் எவ்வளவோ அதிகமாகப் பெறுகிறார்கள். ஆனால், ரோட்பெர்டஸுக்குக் குறைந்தபட்சம் அடுத்த ஐநூறாண்டு களுக்கு ஒரு சிறப்புரிமை பெற்ற வர்க்கம் தேவை, எனவே இன்றைய (நான் சரியாகச் சொல்வதென்றால்) மிகுதி மதிப்பு விகிதம் நீடித்து வரவேண்டும்; ஆனால் அதை அதிகரிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த இன்றைய மிகுதி மதிப்பு விகிதம் இருநூறு சதவிகிதமாக – அதாவது தொழிலாளி தினந்தோறும் கொடுக்கிற பன்னிரண்டு மணிநேர உழைப்புக்கு அவனுக்குக் கிடைக்கிற சான்றிதழ் பன்னிரண்டு மணிநேரத்துக்கு அல்லாமல் நான்கு மணிநேரத்துக்குத்தான் – என்று ரோட்பெர்டஸ் எடுத்துக் கொள்கிறார். மீதமுள்ள எட்டு மணி நேரத்தில் உற்பத்தி செய்த மதிப்பு நிலச்சுவான்தார், முதலாளி ஆகியோரிடையே பிரித்துக் கொடுக்கப்படும். எனவே, ரோட்பெர்டஸின் உழைப்புச் சான்றிதழ்கள் நேரடியாகப் பொய் பேசுகின்றன. மேலும், நான்கு மணி நேர உழைப்புக்கான சான்றிதழ் பெறுவதற்குப் பன்னிரெண்டு மணி நேரம் உழைக்க வேண்டியதை ஒரு தொழிலாளி வர்க்கம் சகித்துக் கொள்ளும் என்று கற்பனை செய்வதற்கு ஒருவன் போமரேனிய நாட்டு நிலப்பிரபுவாகத்தான் இருந்தீராக வேண்டும். முதலாளித்துவ உற்பத்திக்குரிய செப்படி வித்தையை இந்த வெகுளித்தனமான மொழியில் சொன்னால் – இம்மொழியில் அது அப்பட்டமான கொள்ளையென்று தோற்றமளிக்கிறது – அது சாத்தியமற்றதாக்கப்படுகிறது. தொழிலாளிக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு சான்றிதழும் கலகத்துக்கு நேரிடையாகத் தூண்டிவிடுவதாயிருக்கும். ஜெர்மன் பேரரசின் குற்றச் சட்டத் தொகையின் 110 வது பிரிவின் கீழ் வரும், தடியும் சவுக்கும் மேலாட்சி புரிகிறதாயிருக்கிற, கிராமத்தின் அழகிய பெண்கள் அனைவரும் நிலப்பிரபுவின் அந்தப்புரத்துக்குச் சொந்தமானவர்களாயிருக்கிற ஒரு போமரேனிய நாட்டு நிலப்பிரபுவின் பண்ணையிலே இன்னமும் யதார்த்தத்தில் அரைப் பண்ணையடிமைகளாகவே இருந்து வருகிற, அன்றாடக் கூலிக்கு உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தைத் தவிர வேறெந்தப் பாட்டாளி வர்க்கத்தையும் என்றுமே பார்த்திராதிருந்தால்தான் ஒருவன் தொழிலாளர்களை இப்படி அவதூறு செய்யக் கற்பனை செய்ய முடியும். ஆனால் நமது நடப்புக்காப்புவாதிகள்தாம் நமது மாபெரும் புரட்சிக்காரர்களாயுமுள்ளனர்.

எெனினும், முழுமையாகப் பன்னிரண்டு மணிநேரக் கடின உழைப்புக்குப்பின் தாங்கள் யதார்த்தத்தில் நான்கு மணி நேரம்தான் உழைத்ததாக ஏமாற்றப்படுவதைச் சகித்துக் கொள்ளப் போதிய அடக்கவொடுக்கமுள்ளவர்களாக நமது தொழிலாளிகள் இருந்தால் அவர்களுக்கு, ஒரு பரிசாக, தத்தம் சொந்த விளைபொருளில் உரிய பங்கு நிரந்தரமாக முதலில் ஒன்றுகுக் குறையாதபடி வழங்கியளிக்கப்படுவார்கள். இது எதிர்காலத்து இசையைக் கின்னரத்திலே வாசிப்பதாகும்; இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவதற்கும் தகுதியற்றது. ஆகவே, ரோட்பெர்டஸின் உழைப்புப் பணப் பரிமாற்றக் கற்பனையுலகத் திட்டத்தின் புதுமையாகத் தொன்று தொட்டு பேசப்பட்டுவரானால் அந்தப் புதுமை வெறுமே சிறுபிள்ளைத்தனமானதாகும்; அவருக்கு முன்னும் பின்னும் வந்த அவருடைய எண்ணிறைந்த தோழர்களின் சாதனைகளைவிட எவ்வளவோ தாழ்ந்ததாகும்.

ரோட்பெர்டஸின் அறிவுக்குச் செலுத்தும் பங்கு எனும் நூல் வெளிவந்த அக்காலத்துக்கு அது நிச்சயமாக ஒரு முக்கியமான நூலேயாகும். அவர் ரிக்கார்டோவின் மதிப்பு பற்றிய தத்துவத்தை சோசலிசத்தில் வளர்த்தது எதிர்காலச் சாதனைக்கு மிக நல்ல தொடக்கமாயிருந்தது. அவருக்கும் ஜெர்மனிக்கும் மட்டுமே அது புதியதாக இருந்தபோதிலும்கூட மொத்தத்தில் அது அவருடைய ஆங்கிலேய முன்னோர்களின் மேலானவர்களின் சாதனைகளோடு சரிநிகராக நிற்கிறது. ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே, மேலும் சென்று முழுவளவான விமர்சனப் பணி மூலமாக மட்டுமே அதிலிருந்து தத்துவத்துக்கு ஒரு உண்மையான ஆதாரத்தைச் சாதிக்க முடிந்திருக்கும், ஆனால் அவர் முதலிலிருந்தே ரிக்கார்டோவின் தத்துவத்தை இரண்டாவது திசையான கற்பனைத் திட்டத்தின் திசையிலும வளர்த்ததின் மூலமாக இந்தத் திசையில் மேலும் வளர்ச்சி பெறுவதினின்று தம்மையே கத்தரித்துக் கொண்டார். அதன் விளைவாக, எல்லா விமர்சனத்துக்கும் முதல் நிபந்தனையான விருப்புவெறுப்பின்மையை இழந்தார். முன்கூட்டி நிர்ணயித்துக் கொண்ட ஒரு குறிக்கோளை நோக்கி அவர் வேலை செய்து கொண்டிருந்தார், அவர் ஒரு திட்டவட்டமான போக்கைப் பின்பற்றும் பொருளாதாரவாதியாக ஆகிவிட்டார்.

தமது கற்பனைத் திட்டத்தின் வலையிலே சிக்கிக் கொண்டவுடன் அவர் விஞ்ஞான முன்னேற்றத்துக்கான எல்லாச் சாத்தியப்பாட்டிலிருந்தும் கத்தரித்துக் கொண்டார். 1842 லிருந்து அவர் இறுதியெய்திய வரை ஒரு வட்டத்திலே சுற்றிச் சுற்றி வந்தார்; தமது முதல் நூலில் ஏற்கனவே வெளியிட்ட அல்லது குறித்துக் காட்டிய அதே கருத்துக்களையே எப்போதும் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்; தம்மைப் பற்றிச் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்று நினைத்தார்; அவரிடம் களவாடுவதற்கு ஒன்று மில்லாதிருந்தும் தாம் களவாடப்படுவதாகக் கண்டார், அடிப்படையிலே பார்க்கிற பொழுது வெகு நாளைக்குமுன் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதைத் தான் தாம் மீண்டும் கண்டுபிடித்ததைக் கடைசியிலே அங்கீகரிக்கவும்  மறுத்தார் – அதில் உணர்வுபூர்வமான நோக்கம் இல்லாமல் இல்லை.

சில இடங்களில் மொழிபெயர்ப்பானது அச்சிட்ட பிரெஞ்சு மூலத்திலிருந்து பிரிந்து செல்கிறது. இது மார்க்ஸின் சொந்தக் கையெழுத் திலேயே செய்யப்பட்ட மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. இவை இப்போது தயாரிக்கப்பட்டு வரும் புதிய பிரெஞ்சுப் பதிப்பிலும் செருகப்படும்.²

இந்நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் துறைச்சொல் அமைப்பு மூலதனத்தில் இருக்கிறதுடன் முற்றாகப் பொருந்துவதற்கில்லை என்பதைச் சுட்டிக் காட்டத் தேவையில்லை. ஆகவே தான் உழைப்புச் சக்தி என்பதற்குப் பதிலாக உழைப்பு ஒரு பண்டமாகவும், உழைப்பு வாங்கி விற்கப்படுவது பற்றியும், இன்னமும் இந்நூல் பேசுகிறது.

இந்தப் பதிப்பில் ஒரு அனுபந்தமாகக் கூடுதலாக இருப்பது:

 1) மார்க்ஸின் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சன வுரைக்குச் செலுத்தும் ஒரு பங்கு, பெர்லின் 1859 எனும் நூலிலிருந்து ஜான் கிரேயின் முதன்முதலான உழைப்புப் பணப் பரிமாற்றம் என்கிற கற்பனையுலகத் திட்டத்தை எடுத்துக் கவனிக்கும் ஒரு பகுதி. மற்றும் 2) புருஸெல்லஸில் (1848) சுயேச்சையான வாணிபத்தைப் பற்றி மார்க்ஸ் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழி பெயர்ப்பு – இது தத்துவத்தின் வறுமை போலவே ஆசிரியரின் அதே வளர்ச்சிக் காலகட்டத்தைச் சேர்ந்ததாகும்.

**பிரெடெரிக் எங்கெல்ஸ்**

லண்டன்,

அக்டோபர் 23, 1884.

******************************************

முகவுரை

திரு. புரூதோன் ஐரோப்பாவில் வினோதமான வகையிலே தப்பாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய துரதிர்ஷ்டம் பெற்றிருக்கிறார். பிரான்ஸில், ஒரு நல்ல ஜெர்மன் மெய்யறிஞராக அவர் பெயர் பெற்றி ருப்பதால் ஒரு பயங்கரமான பொருளாதாரவாதியாக இருக்க அவருக்கு உரிமை உண்டு; ஜெர்மனியில், பிரெஞ்சுப் பொருளாதாரவாதிகளில் முதன்மையாக்கப்படுபவர்களில் ஒருவராக அவர் பெயர் பெற்றிருப்பதால் ஒரு பயங்கரமான மெய்யறிஞராக இருக்க அவருக்கு உரிமை உண்டு. நான் ஒரே நேரத்தில் ஜெர்மனியனாகவும் பொருளாதாரவாதியாகவும் ஒன்றாக இருப்பதனால் இந்த இரட்டைப் பிழையைக் கண்டிக்க விரும்பு கிறேன்.

இந்த நன்றியற்ற பணியில், ஜெர்மன் மெய்யறிவை விமர் சிக்கவும் அதே நேரத்தில் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிச் சில ஆய்வுக்கூறுகள் அளிக்கவும் வேண்டி திரு. புரூதோன் பற்றிய எனது விமர்சனத்தை அடிக்கடி கைவிட வேண்டி நேரிட்டதை வாசகர் புரிந்து கொள்வார்.

**புருஸெல்ஸ்,**

**ஜூன் 15, 1847**

**கார்ல் மார்க்ஸ்**

 

திரு. புரூதோனின் நூல் வெறுமே அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய விரிவுரை அல்ல, சாமானியமான நூல் அல்ல; அது ஒரு விவிலிய வேதம். "மர்மங்கள்", "இறைவனின் நெஞ்சத்திலிருந்து வலிந்தெடுத்த இரகசியங்கள், "தர்சனங்கள்" - அதில் இல்லாத தொன்றும் இல்லை. எனினும், சாதாரண எழுத்தாளர்களைவிட தீர்க்க தரிசிகளைப் பற்றியே மேலான கண்டிப்புடன் மதிப்பீடு செய்யப் படுகிற காலம் இது. எனவே, படைப்பின் "பிறப்பு" பற்றிய பசையற்ற இருள்படர்ந்த புலமையினூடே என்னோடு வாசகர் புகுந்து செல்வ தற்குத் தன்னை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும், அதன் பிறகு திரு. புரூதோனுடன் அதீத-சோசலிஸம் எனும் புலன்கடந்த செலுமை சூழ்ந்த சாம்ராஜ்ஜியத்துக்குள் ஏறிச்சென்று விடுவோம். (பார்க்க: புரூதோன், வறுமையின் தத்துவம், முன்னுரை, பக்கம் III, வரி 20.).


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்