இந்த ஆதாரங்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் நா. சண்முகதாசன் எழுதிய "மகத்தான மாஓசேதுங் சிந்தனை"
என்ற நூலின் தொகுப்பாகும். இதில் மார்க்சியம்-லெனினியம் எவ்வாறு மாஓசேதுங் சிந்தனையாக அடுத்த கட்டத்திற்கு வளர்ந்தது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சோவியத் ஒன்றியத்தின் நவீன திரிபுவாதத்தை எதிர்த்து, சீனாவில் நடந்த பாட்டாளி வர்க்க கலாசார புரட்சியின் அவசியத்தையும் அதன் வெற்றிகளையும் ஆசிரியர் இதில் முன்வைக்கிறார். உலகப் புரட்சிக்கு ஆயுதப் போராட்டமே வழி என்றும், சுயநலத்தை ஒழித்து பொதுநலத்திற்காக உழைக்கும் புதிய சமுதாயத்தை உருவாக்க மாஓவின் வழிகாட்டுதல் அவசியம் என்றும் இந்நூல் வலியுறுத்துகிறது. மேலும், கல்வி, கலை மற்றும் இலக்கியம் ஆகியவை உழைக்கும் வர்க்கத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற புரட்சிகரக் கருத்துக்களையும் இது ஆழமாகப் பதிவு செய்கிறது....இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்தப்பகுதியை அழுத்தவும் தோழர்களே
மாஓசேதுங் சிந்தனை மற்றும் பாட்டாளி வர்க்க புரட்சி வழிகாட்டி
புரட்சி சக்திகளுக்கும், எதிர்ப்புரட்சி சக்திகளுக்கும்.இடையில் நிகழ்ந்த இப்பெரும்
ஒரு சில முதலாளித்துவ பாதையினரைத் தனிமைப்படுத்து வதற்கு, உண்மையான புரட்சி சக்திகளில் ஏகப் பெரும்பான் மையை ஐக்கியப்படுத்தும் தந்திரோபாயங்களை வகுத்தார். புரட்சிகர ஊழியர்கள், மக்கள் விடுதலைச் சேனை, புரட்சிகர பொதுமக்கள் ஆகியோரின் பிரதிநிதிகளின் ஐக்கியத்தைக் கொண்ட புரட்சிகர ஒன்றில்-மூன்று இணைப்பை ஆதரித்தார். சரியான தருணத்தில் பரந்துபட்ட பொதுமக்களில் இடதுசாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு மக்கள் விடுதலைச் சேனைக்கு அறை கூவல் விடுத்தார். மக்கள் விடுதலைச் சேனை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தூண் என்பதும் உண்மையில் நிரூபிக்கப்பட் டது. தகுதியான சமயத்தில், சகல துறைகளிலும் தொழிலா ளர் வர்க்கம் தலைமை தாங்கவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். இந்த உத்தரவின் பிரகாரம்தான் , தொழிலாளர் வர்க்கமும், வறிய, கீழ்மத்திய விவசாயிகளும் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் புகுந்து, புரட்சிகர ஐக்கி யத்தை உருவாக்கி, போராட்டம் - விமர்சனம் - மாற்றம் - இவற் றினை அமுல் நடத்தினர்.
இவ்வாறு பொதுமக்களைச் சார்ந்திருப்பதன் மூலம், தோழர் மாஓசேதுங் அவர்கள் "பூரணமான பொருள்முதல்வாதிகள்
அச்சமற்றவர்கள்" என்ற தமது போதனைக்குத் தக வாழ்ந்து காட்டினர். வர்க்க
எதிரிகள் தொல்லைகளைத் தூண்டினல், மக் களைத் தட்டியெழுப்பி, எதிரிகளை அடித்து வீழ்த்துவதுதான்.
எதிரிக்கு எதிரான போராட்டத்தில் பெரிதும் குறிப்பிடத் தக்கது என்னவென்ருல்,
தோழர் மாஒசேதுங் அவர்கள் எப் பொழுதும் கூறிவந்த 'முரண்பாடுகளைப் பயன்படுத்தி, பலரை வென்றெடுத்து, சிலரை எதிர்த்து, நமது எதிரிகளை ஒவ்வொரு வராக நசுக்கும்
தந்திரோபாயமேயாகும்.”* தோழர் மாஓசேதுங் அவர்கள் மீண்டும் மீண்டும் நமக்குப்
போதித்ததாவது:- *போதனையளிப்பதன் மூலம் மேலும் அதிகப்படியாணுேருக்கு உதவிசெய்து,
தாக்குதலின் இலக்கைச் சுருக்கவேண்டும்';
'முழு மனித வர்க்கத்தையும் விடுதலை
செய்வதன் மூலம்தான் பாட் டாளி வர்க்கம் அதன் சொந்த இறுதி விடுதலையைப் பெறமுடி யும்
என்ற மார்க்ஸின் போதனையை நடைமுறைப்படுத்த வேண்டும்.'"
அதுபோல, எதிரிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய மானது என்னவென்றல், சுயநலத்தை எதிர்ப்பதற்கும், திரிபு வாதத்தை விமர்சிப்பதற்கும் உள்ள உறவுபற்றிய தோழர் மாஒ சேதுங் அவர்களின் விளக்கமாகும், திரிபுவாதம் தோன்றுவதற் குரிய காரணங்களில் ஒன்று என்னவென்ருல், பொது நலத்துக்கு மேல் சுயநலத்தை வைக்கின்ற, சொந்த நலன்களுக்கு முக்கி யத்துவம் கொடுக்கின்ற, புகழ், கீர்த்தி, பொருளாயத நலன், லேசான சொகுசு வாழ்வு இவற்றுக்குப்பின் ஒடுகின்ற முதலாளித் துவ சித்தாந்தத்தை சோஷலிஸ் சமுதாயம் பெற்றிருப்பதாகும். இந்த சுயநலக் கருத்தை எதிர்க்காவிட்டால், திரிபுவாதத்தை எதிர்ப்பது அசாத்தியம். இங்குதான் தோழர் மாஓசேதுங் அவர்களின் மாபெரும் விவேகம் புதைந்து கிடக்கின்றது. அதாவது, கலாசார புரட்சியின் இரண்டாவது ஆண்டில் ‘சுயநலத்தை எதிர்த்து, திரிபுவாதத்தை விமர்சிப்பது' என்ற இரட்டை சுலோகத்தை வெளியிட்டார். உண்மையில், இந்த இரண்டு சுலோகங்களும் ஒன்ருேடொன்று பின்னிப் பிணைந்தவை. தனி நலத்துக்கு மேல் கூட்டுநலத்தை வைக்காவிட்டால், சொந்த நலன்களைத் தூக்கி வீசாவிட்டால், சீனுவின் நலன்களை தந்தை வழி நலன்களுக்கு மேல் வைக்காவிட்டால், உலகம் முழுவதன் நலன்களை சீனவின் நலன்களுக்கு மேல் வைக்காவிட்டால் திரிபு வாதத்தைத் தோற்கடிப்பது அசாத்தியம்.
உலகப் பெரும் மதங்கள் அனைத்தும், சுயநலத்தை எதிர்க் கும்படி மக்களுக்கு அறிவுறுத்த
பல்லாயிரம் ஆண்டுகளாக முயன்று வந்துள்ளன. ஆனல், அவை ஒரு அற்ப அளவிலேனும் வெற்றிபெற்றது கிடையாது. இன்று,
உலகில் முதல் தடவையாக, மாஒசேதுங் சிந்தனையின் வழிகாட்டலின் கீழ்,
சுயநலத்தை எதிர்த்துப் போராடத் தெரிந்த,
தனியார் நலனுக்கு மேல் கூட்டு நலனை வைக்கக் கற்றுக்கொண்ட,
தான் கஷ்டமான கட மையைச் சுமந்துகொண்டு,
பிறருக்கு லேசானதைக் கொடுக் கின்ற,
சொந்தப் புகழ், கீர்த்தி, பொருளாயத நலன், லேசான சொகுசு வாழ்வு இவற்றை நாடி ஓடாமல்,
கூட்டு நலன்களுக் காக உழைக்கின்ற,
சொந்த மாவட்டம் அல்லது மாகாணத் தைச் சிந்திப்பதற்குப் பதில்,
முழு சீனவையும் பற்றிச் சிந்திக் கின்ற சீனுவில்
புரட்சியும், சோஷலிஸமும்
வெற்றி பெறுவதை மாத்திரம் எண்ணுமல், உலகரீதியில் அவை வெற்றி பெறுவது பற்றிச் சிந்திக்கின்ற,
புத்தம் புதிய மக்கள் சந்ததி ஒன்று சீன வில் தோன்றி
வளர்கின்றது. உலகின் இத்தகைய ஒரு பெரும் பரப்பில், மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட ஒரு புரட்சி உண் மையில்
மிகப்பெரும் புரட்சியாகும்.
சீனவில் எழுந்த மாபெரும் புரட்சி எழுச்சியின் மிக முக் கியமான விளைவுகளில் நம்மைப் பெரிதும் கவர்ந்த ஒன்று யாதெ னில், சீன புரட்சி மட்டும் வெற்றிபெற்ருல் போதாது; மேலை நாடுகளுடன் போட்டியிட்டு, தமது வாழ்க்தைத் தரத்தை மட் டும் உயர்த்தினல் போதாது; உலகப் புரட்சியும் வெற்றிபெற வேண்டும்; இன்னும் விடுதலை பெருத மக்களின் தலைவிதியை தாம் தெளிவாக மனதில்கொண்டு, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சீனவின் பரந்துபட்ட பொதுமக்கள் தெளி வாக உணர்ந்து, விழிப்புற்றதாகும். தோழர் மாஒ அவர்கள் 1968ல் கூறியதை தெளிவாக உணர்கிருர்கள். அதாவது:- "லெனினிஸ கண்ணுேட்டத்தின் பிரகாரம் ஒரு சோஷலிஸ நாட்டின் இறுதி வெற்றிக்கு உள்நாட்டு பாட்டாளி வர்க்கத்தினதும், பரந்துபட்ட பொது மக்களினதும் முயற்சிகள் இன்றியமையா தவை; அது மட்டுமல்ல, மனித குலம் முழுவதையும் விடுதலை செய்யும் உலகப் புரட்சியின் வெற்றியும், உலகம் முழுவதிலும் மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பின் அழிவும் சம்பந்தப்பட்ட ஒன்ருகும். எனவே, நமது நாட்டுப் புரட்சியின் இறுதி வெற்றி பற்றி லேசாகக் கதைப்பது தவருகும். அது லெனினிஸத்துக்கு விரோதமானது. உண்மைகளுக்கு புறம்பானது" . உலகில் இன் னும் விடுதலை அடையாத மக்கள் பகுதியைச் சேர்ந்த நாம், இதுபற்றி இவ்வளவு தெளிவாகவும், உணர்வு பூர்வமாகவும் சொல்லப்பட்டதை இதற்குமுன் கேட்டதேயில்லை. சீன விடுதலை பெறுவதற்கு முன், சீனுவின் விடுதலைப் பிரதேசங்கள் விடுதலை செய்யப்படாத பிரதேசங்களுக்கு எவ்வாறு விளங்கியதோ, அவ் வாறு இன்றையச் சீன விடுதலை பெருத உலகப் பகுதிக்கு அவ்வாறு விளங்குகின்றது.
மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி பன்முக வெற்றிகளை ஈட்டியதன்மூலம்,
சீனவின் நிறம் மாறுவதை தடை செய்துள்ளது. சீனவில்
முதலாளித்துவ மீட்சியை தடுத்துள்ளது. லியூ ஷெள-சி தலைமையிலிருந்த துரோகிகளையும்
கருங்காலிகளையும் அம்பலப்படுத்தியுள்ளது. சீனுவில் பாட்டாளி வர்க்க சர்வாதி
காரத்தை பாதுகாத்து, பலப்படுத்தியுள்ளது. புரட்சியை இறுதி வரை நடத்துவது எப்படி என்று
காட்டியுள்ளது. சீனவை உலகப் புரட்சியின் தளமாகப் பேணி வைத்திருக்கிறது. ஏகாதி
பத்தியவாதிகள், திரிபுவாதிகள்,
பலவிதமான பிற்போக்குவாதி கள் அனைவருக்கும் தலையடி
கொடுத்துள்ளது. மகத்தான பாட் டாளி வர்க்க கலாசார புரட்சியின் காரணமாக,
சீன புதுப் பலம்பெற்ற ராட்சஸன்போல் கம்பீரமாக
விளங்குகின்றது. பிற் போக்கு உலகம் அதைக்கண்டு ஏற்கெனவே பீதியடையத்
தொடங்கிவிட்டது.
கிறெம்ளின் செவ்வொளி அணைந்துவிட்டது. தியென் அன் மென் சதுக்கத்தின் சிவப்பு விளக்கு மென்மேலும் சிவப்பாகவும் பிரகாசமாகவும் துலங்குகின்றது; உலகம் பூராவுமுள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக காட்சி யளிக்கின்றது.
அத்தியாயம் IV
மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சிக்கு மாஓசேதுங் வழங்கிய சாதனை
சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கத்தில் இன்றுள்ள நிலை0ை சில அம்சங்களில் 1917 மகத்தான அக்டோபர் புரட்சியை அடுத்த காலத்தில் இருந்த நிலைமைபோல் இருக்கின்றது. ரஷியா வில் லெனினும் போல்ஷிவிக்குகளும் புரட்சிக்கு தலைமைதாங்கி ஈட்டிய வெற்றி, புரட்சியை எதிர்த்த-அதற்கு பதிலாக பாராளு டான்றப் பாதை மூலம் சமாதான மாற்றம் பற்றி உபதேசம் செய்துவந்த-பழைய கால சமூக ஜனநாயகவாதிகளை இயற்கை யாகவே அவமானத்திற்கு உள்ளாக்கிவிட்டது
இரண்டாவது சர்வதேசியத்தைச் சேர்ந்த பழைய சமூக ஜனநாயக கட்சிகள்
எல்லாவற்றுக்குள்ளும் ஒரு மகத்தான் புரட்சிகர அறிவுப் பிரகாசம் தோன்றியது. லெனின்
அவர் களின் வழிகாட்டலில், இந்த சமூக ஜனநாயகக் கட்சிகளி லிருந்த புரட்சிகர இடதுசாரிகள் இரண்டாவது
சர்வதேசியத் தலைமைப் பீடத்தின் திரிபுவாதத் தத்துவங்களை உதறித்தள்ளி விட்டு,
புதிய மூன்ருவது சர்வதேசியத்தை அமைக்க முன்வந் தார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இன்றைய சர்வதேசிய கம்யூ னிஸ் இயக்கத்திலும் அத்தகைய ஒரு பிரகாசம் தோன்றி வருகின்றது. நமது சகாப்தத்தின் மிகப் பெரும் மார்க்ஸிஸலெனினிஸவாதியான தோழர் மாஒசேதுங் அவர்களின் வழி காட்டலில், சீன புரட்சியும் அதுபோல மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சியும் ஈட்டிய வெற்றிகளால் உற்சாகம் எய்தி, பழைய கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்த புரட்சிகரக் குழுக்கள், இந்தக் கட்சிகளின் திரிபுவாதத் தலைமையை அரசி யல் ரீதியிலும் ஸ்தாபனரீதியிலும் உடைத்து வெளியேறிக்கொண் டிருக்கின்றன. சமீப காலங்களில் பல புதிய 10ார்க்ஸிஸம்லெனினிஸ குழுக்களும் கட்சிகளும்கூடத் தோன்றியுள்ளன.
இந்த புதிய மார்க்ஸிஸம்-லெனினிஸ கட்சிகளைக் கட்டி வளர்ப்பதற்கு
மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மாஒசேதுங் சிந் தனைப் படிப்பு முக்கியமானது. இந்தக்
கட்சிகள் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற வகையில் தமது கடமை களை
நிறைவேற்றுவதற்கு மிக முக்கியமான தேவை என்ன வென்ருல்,
அவை மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மாஓசேதுங் சிந் தனையால்
ஆயுதபாணிகளாக்கப்படவேண்டும். இந்தப் பிரச்சினை **ஒரடி முன்னே,
ஈரடி பின்னே,' " "யாது செய்வது?’ என்ற தமது மகத்தான படைப்புகளில் லெனின் அவர்களாலும்,
**சோவியத் யூனியன்
(பொல்ஷிவிக்குகளின்) கம்யூனிஸ்ட் கட்சி யின் சுருக்க வரலாற்றில் ஸ்டாலின்
அவர்களாலும் அழுத் தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே,
புதிதாகத் தோன்றி வளரும் மார்க்ஸிஸம்-லெனி னிஸ் கட்சிகளைப்
பொறுத்த வரையில், தம்மை சரியான தத்துவத் தால் ஆயுதபாணிகளாக்கிக் கொள்வது மிக முக்கியமான கடமை
யாகும். இதன் அர்த்தம் அவற்றை மார்க்ஸிஸம் - லெனினிஸத் தால் ஆயுதபாணிகள்
ஆக்குவதாகும். ஆனல், இன்று, மார்க்ஸி
ஸம்-லெனினிஸப் படிப்பு என்பது இன்றைய சகாப்தத்தின் மார்க் ஸிஸம்-லெனினிஸமாக விளங்கும்
மாஒசேதுங் சிந்தனைப் படிப்பை யும் உள்ளடக்கியதாகும். வேறு வார்த்தைகளில் சொன்னல்,
மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சிக்கு தோழர் மாஒசேதுங்
அவர்கள் வழங்கிய சாதனை பற்றி நாம் படிக்க வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு
மாத்திரமல்ல, இதர
மார்க்ஸிஸம்-லெனி னிஸக் கட்சிகள் அனைத்துக்கும் இது முக்கியமானதாகும்.
மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சிக்கு தோழர் மாஒசே துங் அவர்கள் வழங்கிய செழிப்பான, பலதரப்பட்ட சாதனைகள் அனைத்தையும் ஒரு கட்டுரையில் விபரமாக விளக்குவது சாத்தியம் என்று யாரும் எண்ணி விடக் கூடாது. இத்தகைய ஒரு பூரண 10ான ஆராய்வுக்கு கூடிய காலமும், நீடிய உழைப்பும், ஆராய்ச்சி யும் தேவை. எனவே, இக் கட்டுரை அந்தத் திசையில் முதலடி எடுத்து வைப்பதாகவே இருக்கும்; இது பூரணமானது அல்லவே அல்ல..
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக