இந்த ஆதாரங்கள் மார்க்சியத்தின் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியை மார்க்ஸ், லெனின் மற்றும் மாசேதுங் ஆகிய மூவரின் தத்துவத் தொடர்ச்சியாக விளக்குகின்றன. இலங்கையின் மார்க்சியப் புரட்சியாளர் நா. சண்முகதாசன் எழுதிய "மாவோவின் சிந்தனைகள்" நூலை அடிப்படையாகக்
மாவோவின் சிந்தனைகள் சண்முகதாசன், பாகம் 3. அத்தியாயம் I
மாசேதுங் சிந்தனை
கிழக்கு சிவக்கிறது, சூரியன் உதிக்கிறது,
சீனாவில் மாசேதுங் தோன்றுகிறார்.
இவை தலைவர் மாசேதுங் அவர்களையும், சீன கம்யூனிஸ்ட் கட்சியையும் பாராட்டி, சாதாரண சீன விவசாயி ஒருவர் பாடிய எளிய பாடலின் முதல் அடிகளாகும். இப்பாடல் இன்று ஏறக்குறைய சீனாவின் தேசிய கீதமே ஆகிவிட்டது. காரணம் என்னவென்றால், இந்த சாதாரண வரிகளின் பின்னே ஆழ்ந்த உண்மை ஒன்று புதைந்து கிடக்கிறது.
சீனா ஒரு மகத்தான நாடு. உலகில் ஜனத்தொகை கூடிய நாடு. இந்த
ஜனத்தொகை 70 கோடியைத்
தாண்டிவிட்டது. சீனா, 5000 ஆண்டுகளுக்கு மேலான, உலகில் மிகப் பழைய ஒரு நாகரிகம் படைத்த நாடு. அச்சடிக்கும்முறை, வெடிமருந்து போன்ற பல புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கிய நாடும்
சீனாவே தான். ஆனால், இன்று அது நமது சகாப்தத்தின் மிகப்பெரிய
மார்க்சிஸ - லெனினிஸவாதியாக விளங்கும் தோழர் மாசேதுங் அவர்களை உலகுக்கு
வழங்கியதுதான் கொடைகளில் மிகப்பெரிய கொடை என்பதை யாரும் ஒப்புக்கொள்ளத்தான்
வேண்டும். மனித குலத்தின் தலைவிதியில் தமது அழியாத அடிச்சுவட்டை விட்டுச்சென்ற
மேதாவிலாசம் படைத்த கிடைத்தற்கரிய மனித மாணிக்கங்களில் தோழர் மாசேதுங் அவர்கள்
ஒருவராவார். கார்ல் மார்க்ஸ் அவர்கள் ஜெர்மானியர்களுக்கு மட்டும் சொந்தமில்லாதது
போல, லெனின் அவர்கள் ரஷ்யர்களுக்கு மட்டும் சொந்தமில்லாதது
போல, தோழர் மாசேதுங் அவர்களும் சீனர்களுக்கு மட்டும்
சொந்தமானவர் அல்ல. இம்மேதைகள் அகிலம் முழுவதற்கும் சொந்தமானவர்கள். இவர்கள்
எல்லாரும் மாபெரும் சர்வதேசவாதிகள். இவர்களுடைய சிந்தனையும், செயல்களும், செல்வாக்கும் இவர்கள் தோன்றிய நாடுகளின்
எல்லைகளைத் தாண்டிச்சென்று சர்வலோகமும் வியாபிப்பவை. இங்குதான் மாசேதுங்
சிந்தனையின் சர்வதேச முக்கியத்துவம் புதைந்து கிடக்கின்றது.
நமது சகாப்தத்தின் புரட்சிகர நடவடிக்கைகள் பூராவிலும்
மாசேதுங் சிந்தனையின் ஆதிக்கமும், செல்வாக்கும் இருக்கத்தான் செய்கின்றன. நமது சகாப்தம் என்பது
மாசேதுங் சகாப்தம் என்ற தீர்ப்பு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்
என்பதில் சந்தேகமே இல்லை.
கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் இருவரும் விஞ்ஞான சோஷலிஸத்தின்
சிருஷ்டிகர்த்தாக்கள் ஆவர். அவர்கள் முதலாளித்துவம் வளர்ச்சியடையும் காலகட்டத்தில்
வாழ்ந்தனர். அவர்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்து, அவற்றை தொழிலாளி வர்க்கம் புரிந்து, முதலாளித்துவத்தைத்
தூக்கியெறிவதற்காக, அவ்விதிகளை தொழிலாளி வர்க்கத்துக்குப்
போதித்தனர். மார்க்ஸிஸம், ஏங்கெல்ஸிஸம் வர்க்கப் போராட்டம்,
பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் ஆகியவற்றின் விதிகள் பற்றியும், அரசு பற்றிய
தத்துவத்தையும் நமக்குப் போதித்தனர். ஆனால், அவர்கள் தமது
கனவு நனவாவதைக் காண, தமது தத்துவங்கள் நடைமுறையாதைக்
காணக்கொடுத்து வைக்கவில்லை. அவர்களுடைய கருத்துகள் பின்னர் மார்க்ஸிஸம் என
அழைக்கப்படுகின்றது.
லெனின் அவர்கள், முதலாளித்துவம் அதன் இறுதிக் கட்டமான ஏகாதிபத்திய
கட்டத்திற்கு வளர்ந்த காலத்தில் புரட்சி இயக்கத்தின் ஊக்கமாக உழைத்த ஒரு
மார்க்ஸிஸவாதியாவார். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்
ஏகாதிபத்திய யுத்த சகாப்தத்தில், சோஷலிஸ புரட்சி
சகாப்தத்தில் வாழ்ந்தார். தமது காலத்தின் மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப அவர்
மார்க்ஸிஸத்தைப் பிரயோகித்தார். இவ்வாறு, அவர் மார்க்ஸிஸத்தை
- லெனினிஸம் என்ற உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தார்.
லெனின் அவர்கள் தமது முதல் கடமையாக, மார்க்ஸிஸம், ஏங்கெல்ஸிஸம்
மறைந்த பின்னர், அவர்களுடைய வாரிசுகள் தாம் என்று
தம்மைத்தாமே கூறிக்கொண்ட காட்ஸ்கி, பெர்ன்ஸ்டைன்
போன்ற இரண்டாவது சர்வதேசத்தின் தலைவர்களுடன் ஒரு ராட்சஸ சித்தாந்தப்
போரை நடத்தினார். ஆனால், யதார்த்தத்தில் அவர்களுக்கும்
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருக்கும் சம்பந்தா சம்பந்தமே
கிடையாது. அவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சிப்
போதனைகளைத் திரித்துப் புரட்டி எழுதினார்கள். விஞ்ஞான சோஷலிஸத்தின் இம்மாபெரும்
பிதாமகன்களின் புரட்சிகர உள்ளடக்கத்துக்கு முழுக்குப் போட்டு, அவற்றுக்குப் பதில் காட்ஸ்கி, பர்ன்ஸ்டீன் என்ற இந்த
அற்பர்கள் பாராளுமன்றப் பாதை மூலம் சோஷலிஸத்துக்குச் செல்லும் சமாதான மாற்றத்
தத்துவங்களை விளம்பரம் செய்தார்கள். அவர்கள் புரட்சிகரக் கட்சிகளாக இருந்த
இரண்டாவது சர்வதேசத்தின் கட்சிகளை பாராளுமன்றக் கட்சிகளாக மாற்றி விட்டார்கள்.
வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ்
இருவரின் புரட்சித் தத்துவங்களைத் திரித்து விட்டனர். எனவேதான் லெனின் அவர்களை
திரிபுவாதிகள் என்று அழைத்தார். ஆக, மார்க்ஸிஸத்தின்
அடிப்படை புரட்சிகர உண்மைகளைக் கண்டுபிடித்து, அவற்றை
உறுதியாகவும், ஒளியுடனும் புனர்ஸ்தாபனம் செய்வது லெனினின்
முதல் கடமையாக இருந்தது. இந்தக் கடமையை, இன்றும் பிரசித்தி
பெற்று புகழுடன் விளங்கும் மார்க்ஸிஸத் தொன்னூல்களான “அரசும் புரட்சியும்”,
“பாட்டாளி வர்க்கப் புரட்சியும், துரோகி
காட்ஸ்கியும்” போன்ற பிரகாசமான பல வாதப்பிரதிவாதப் படைப்புகள் மூலம்
நிறைவேற்றினார்.
லெனினிசம்
ஆனால், லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல. அவர் ஒரு செயல் வீரனும் கூட.
மார்க்ஸிஸக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில்
புதிய ரகக் கட்சியொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும். இதன் பிரகாரம் அவர்
ஸ்தாபித்த போல்ஷிவிக் கட்சி, அக்டோபர் புரட்சியை நடத்தும்
ஆயுதமாகச் சேவை செய்தது. இது உருக்குப்போன்ற கட்டுப்பாடுடைய, புரட்சிகர மார்க்ஸிஸ உண்மைகளால் ஆயுதபாணியாகிய, சந்தர்ப்பவாதத்திலிருந்து
விடுதலையெற்று, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளால்
வழிநடத்தப்படுகின்ற, சுயவிமர்சனத்தை ஆயுதமாகக் கொண்ட
பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய ஒரு புரட்சிகரக் கட்சியாகும்.
இத்தகைய ஒரு கட்சியின் உதவியுடன், லெனின் அவர்கள் உலகின் முதலாவது தொழிலாளர்
வர்க்கப் புரட்சியை வெற்றிகரமாக வழிநடத்தி, உலகின் முதலாவது
சோஷலிஸ அரசை சிருஷ்டித்தார். அது அடக்கி ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அனைவருக்கும் ஒரு
கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. இப்படிச் செய்வதன் மூலம் லெனின் தத்துவத்தை
நடைமுறையாக்கினார்; கனவை நனவாக்கினார். இத்துடன், முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தை ஸ்தாபித்து, பாதுகாப்பு சம்பந்தமான பல
பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார். ஆனால், படித்தறிய
முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல
பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்க்சிஸத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி விட்டார். அதுமுதல்,
மார்க்சிஸம் என்பது மார்க்சிஸம்-லெனினிஸம் என அழைக்கப்பட்டது.
ஸ்டாலின் அவர்கள் லெனினின் கடமைகளைத் தொடர்ந்து செய்தார்.
அவர் சில தவறுகள் இழைத்த போதிலும், ஹிட்லரின் பாசிஸ ஆக்கிரமிப்பின் மிலேச்சத்தனத்தை எதிர்த்து,
ஒரு நாட்டில் சோஷலிஸத்தைக் கட்டியெழுத்தி, அதைப்
பாதுகாப்பதில் பெரும்பணி புரிந்தார். ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியனில்
சோஷலிஸத்தைக் கட்டியமைப்பதில் ஈட்டிய வெற்றியும், உலக
பாசிஸத்தை நிர்மூலமாக்குவதில் அது வகித்த முக்கிய பாத்திரமும் சோஷலிஸம் ஒரு
தனிநாட்டின் எல்லைக்கு அப்பால் பரவுவதற்குத் துணைசெய்தது மாத்திரமல்ல, உலகத்தில் முற்றிலும் புதிய ஒரு நிலைமையையும், அதாவது,
சோஷலிஸ புரட்சி இவற்றிற்காக நிற்கும் சக்திகளுக்குச் சாதகமான ஒரு
பலாபல நிலைமையையும் தோற்றுவித்தது. இந்த தீர்க்கமான மாற்றம், 1949-ல் சீன புரட்சியின் வெற்றியுடன், மனித குலத்தில்
நாலில் ஒரு பகுதி ஏகாதிபத்தியம், பிரபுத்துவம், அதிகார முதலாளித்துவம் ஆகிய மூன்று மலைகளையும் தூக்கி வீசிவிட்டு, சோஷலிஸத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியதுடன், மேலும்
தீர்க்கமானதாக மாறியது. இவ்வாறு உலகப் புரட்சியின் வெற்றிக்கு மேலும் சாதகமான ஒரு
புத்தம் புதிய சூழ்நிலை உருவாகியது.
மாசேதுங் சிந்தனை
தோழர் மாசேதுங் சீன புரட்சியின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு
ஏற்ப மார்க்சிஸம்-லெனினிஸத்தைப் பிரயோகித்தார். வெளிநாட்டு ஏகாதிபத்தியம், உள்நாட்டு நிலப்பிரபுத்துவம், அதிகார முதலாளித்துவம் இவற்றுக்கு எதிரான நீடித்த போராட்டத்தின்
வளைவுநெளிவுகளுக்கு ஊடாகச் சீன புரட்சி வெற்றிபெற வழிகாட்டி, தலைமை கொடுப்பதன் மூலமும், சீனாவில் பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதன் மூலமும், தோழர் மாசேதுங்
அவர்கள் மார்க்சிஸம் - லெனினிஸத்தின் பொது உண்மைகளை சீனாவின் ஸ்தூலமான புரட்சி
நிலைமைக்கு இணங்கப் பிரயோகிப்பதில் தமது ஈடுஇணையற்ற திறமையைக் காட்டினார்.
தோழர் மாசேதுங் அவர்கள் சீன புரட்சியை வெற்றிக்கு வழிநடத்தி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை
ஸ்தாபித்தது மாத்திரமல்ல, தமது காலத்தில் லெனின் அவர்கள்
தீர்வு காணாது விட்டுச்சென்ற, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
ஸ்தாபிக்கப்பட்ட பின் எழுந்த பல பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டார்.
தவற்றற்ற தீர்க்க தரிசனத்துடன், தோழர் மாசேதுங் அவர்கள், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிஸத்துக்கு மாறிச் செல்லும் வரலாற்றுக்
காலகட்டம் பூராவும் வர்க்கங்கள் தொடர்ந்து இருக்கும், ஆகவே,
சோஷலிஸப் புரட்சியின் பின்னர்கூட வர்க்கப் போராட்டங்கள் தொடர்ந்து
இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். காணற்கரிய மேதாவிலாசத்துடன், மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சியை தாமாக ஆரம்பித்து தலைமை
தாங்குவதன் மூலம், அவர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின்
கீழ் புரட்சி நடத்துவது எப்படி, சோவியத் யூனியனில்
ஏற்பட்டதுபோல் சீனாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்படாமல் தடுப்பது எப்படி, சீனாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பாதுகாத்து, ஸ்திரப்படுத்துவது எப்படி, புரட்சியை இறுதிவரை
தொடர்ந்து நடத்துவது எப்படி, இறுதியில் சீனாவை உலகப்
புரட்சியின் தளமாகப் பேணிவைத்திருப்பது எப்படி என்று நடைமுறையில் காட்டினார்.
அதேவேளையில், தோழர் மாசேதுங் அவர்கள் நவீன திரிபுவாதத்தின் நச்சுத்
தத்துவங்களுக்கு எதிராகவும், மார்க்சிஸம்-லெனினிஸத்தின்
தூய்மையைப் பாதுகாக்கவும் மாபெரும் சித்தாந்தப் போர் ஒன்றை நடத்தினார்.
மார்க்சிஸம்-லெனினிஸத்தின் உண்மைகளை குருசேவ் நவீன திரிபுவாதிகள் திரித்துப்
புரட்டி, அவற்றின் புரட்சிகர ஆத்மாவை திருடிவிடாமல், அவ்வுண்மைகளைக் கண்டுபிடித்து; மீண்டும் வரைந்தார்.
இவ்வாறு லெனின் அவர்கள் தமது காலத்தில் செய்த அதே கடமையை, இன்று
தோழர் மாசேதுங் அவர்கள் செய்தார். நாம், சீன கம்யூனிஸ்ட்
கட்சி, அதன் மாபெரும் தலைவர் தோழர் மாசேதுங் அவர்கள்
தலைமையில், நவீன திரிபுவாதத்துக்கு எதிராக நடத்திய
சித்தாந்தப் போராட்டத்தின் மகோன்னதமான வரலாற்று முக்கியத்துவத்தையும், மகோன்னதமான சர்வதேச முக்கியத்துவத்தையும் உணர வேண்டுமானால், ரஷ்யாவைப் பின்பற்றி சீனாவும் திரிபுவாத முகாமில் சென்றுவிட்டால், சர்வதேச புரட்சி இயக்கத்திற்கு என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வியை
நமக்குள் கேட்டுப் பார்த்தாலே போதும். இந்த மகத்தான சித்தாந்தப் போராட்டம்
மார்க்சிஸம் - லெனினிஸத்தை வாகை சூட வைத்தது மட்டுமல்ல, சர்வதேச
கம்யூனிஸ இயக்கம் முழுவதற்கும் புதிய தெம்பை ஊட்டியுள்ளது. உலகப் புரட்சியின்
இறுதி வெற்றியை நிச்சயமாக்கியுள்ளது. உலக ஏகாதிபத்தியத்தின் இறுதித் தோல்வியையும்,
அதன் முண்டாக விளங்கும் நவீன திரிபுவாதத்தின் தோல்வியையும் கூட
நிச்சயமாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போக்கில் தோழர் மாசேதுங் அவர்கள்
மார்க்சிஸம்-லெனினிஸத்தை செழுமைப்படுத்தி, அதை ஒரு புதிய கட்டத்துக்கு ஆக்கபூர்வமாக வளர்த்துள்ளார்.
அதையே நாம் மாசேதுங் சிந்தனை என்று அழைக்கின்றோம். மாசேதுங் சிந்தனை என்பது
மார்க்சிஸம்-லெனினிஸத்தின் சிகரம். ஆகவே, அதை மார்க்சிஸம் -
லெனினிஸத்திலிருந்து வேறுபட்டதாகவோ அல்லது பிரிந்ததாகவோ கருதக்கூடாது. இன்னும்,
அது மார்க்சிஸம்-லெனினிஸத்துக்கு விரோதமானது என்று கூட சொல்வது
தவறு. லெனின் அவர்கள் மார்க்சிஸத்தை ஆக்கபூர்வமாக லெனினிஸம் என்ற கட்டத்துக்கு
வளர்த்தார். தோழர் மாசேதுங் அவர்கள் மார்க்சிஸம்-லெனினிஸத்தை மாசேதுங் சிந்தனை
என்ற கட்டத்துக்கு ஆக்கபூர்வமாக வளர்த்துள்ளார். மார்க்சிஸம்-லெனினிஸம், மார்க்சிஸத்தின் வளர்ச்சியாக விளங்குவது போல, மாசேதுங்
சிந்தனை, மார்க்சிஸம்-லெனினிஸத்தின் மேல் வளர்ச்சியாக
விளங்குகின்றது.
எனவேதான், லெனினுடைய காலத்தில், யார் லெனினிஸத்தை
எதிர்த்தாலும், அவர் உண்மையில் மார்க்சிஸத்தை எதிர்த்தார்
என்று கருதப்பட்டது. அதுபோல, இன்று யார் மாசேதுங் சிந்தனையை
எதிர்த்தாலும், அவர் உண்மையில் மார்க்சிஸம்-லெனினிஸத்தை
எதிர்க்கின்றார் என நாம் கருதுகின்றோம். இன்று, மார்க்சிஸம்
- லெனினிஸத்தை ஆதரிக்கும் ஒருவர் அந்த ஆதரவை மார்க்சிஸம் - லெனினிஸ வளர்ச்சியின்
சிகரமாக விளங்கும் மாசேதுங் சிந்தனையை ஆதரிக்கும் அளவுக்கு விஸ்தரிக்கா விட்டால்,
அதற்கு அர்த்தமே இல்லை. மார்க்சிஸம் - லெனினிஸம் மாசேதுங் சிந்தனை
என்பது இன்றைய காலத்தில் உலகில் மிக முன்னேறிய புரட்சிகரத் தத்துவமாகத்
திகழ்கிறது. இது ஒன்றுதான் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரினதும் புரட்சி
இயக்கத்துக்கு சரியான வழிகாட்டியாகும்.
தோழர் மாசேதுங் அவர்களின் போராட்ட நண்பராக விளங்கும் தோழர்
லின் பியௌ அவர்கள் சரியாகத் தொகுத்துக் கூறியது போல, "தோழர் மாசேதுங் அவர்கள் நமது
சகாப்தத்தின் மாபெரும் மார்க்சிஸ - லெனினிஸவாதியாவார். தோழர் மாசேதுங் அவர்கள்
மேதாவிலாசத்துடனும், ஆக்கபூர்வமாகவும், பன்முகங்களிலும் மார்க்சிஸ - லெனினிஸத்தைக் கையேற்று, பாதுகாத்து, வளர்த்து, அதைப்
புத்தம் புதிய ஒரு கட்டத்துக்கு உயர்த்தியுள்ளார். மாசேதுங் சிந்தனை என்பது
ஏகாதிபத்தியம் அதன் பூரண அழிவை நோக்கிச் செல்லும் அதேவேளையில், சோஷலிஸம் உலகரீதியான வெற்றியை நோக்கி முன்னேறும் சகாப்தத்தின்
மார்க்சிஸ-லெனினிஸம்."
எனவே தான், உலகம் பூராவுமுள்ள புரட்சிவாதிகள் அனைவரும் சீன மக்களுடன்
சேர்ந்து,
"கடல்களில் கப்பலைச் செலுத்துவது மீகாமனைச் சார்ந்தது;
புரட்சி நடத்துவது மாசேதுங் சிந்தனையைச் சார்ந்தது"
என்று பாடுகிறார்கள். (மாவோவின் சிந்தனைகள் சண்முகதாசன், (பக்கம் 1முதல் 7வரை)
விளக்கம்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பதிவு இலங்கையின்
மார்க்சிய-லெனினிய இயக்கத்தின் முன்னோடித் தலைவரான தோழர் நா. சண்முகதாசன் அவர்களின் புகழ்பெற்ற ‘மாவோவின் சிந்தனைகள்’ நூலின் முதல் அத்தியாயமாகும்.
இப்பாடப்பகுதி மார்க்சியத்தின் பரிணாம வளர்ச்சியை மூன்று முக்கிய காலகட்டங்களாகப்
பிரித்து, மார்க்ஸ்-லெனின்-மாவோ ஆகியோரின் தத்துவத் தொடர்ச்சியை விளக்குகிறது. இதனை மார்க்சியக்
கோட்பாடுகளின் (Marxist Theory) பின்னணியில், தத்துவார்த்த ரீதியாகப் பொருத்தி கீழே விரிவாகக் காண்போம்:
1. மார்க்சியத்தின் வரலாற்றுப் பரிணாமம் (Historical Evolution of Marxism) மார்க்சியம் என்பது ஒரு தேக்கமடைந்த தத்துவம் அல்ல; அது சமூக மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை வளர்த்துக்கொள்ளும் ஒரு உயிருள்ள அறிவியல் (Living Science) என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
- கார்ல் மார்க்ஸ் & பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் (முதலாளித்துவ காலகட்டம்): பத்தொன்பதாம் நூற்றாண்டில் சுதந்திரப் போட்டி முதலாளித்துவம் வளர்ந்த
சூழலில் இவர்கள் வாழ்ந்தார்கள். மார்க்சியத்தின் அடிப்படை விதிகளான இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Dialectical and
Historical Materialism), உபரி மதிப்புத் தத்துவம், மற்றும் வர்க்கப் போராட்டம் மூலம் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவது
பற்றிய கோட்பாடுகளை உருவாக்கினார்கள். இவர்கள் தத்துவத்தை வகுத்தளித்தார்களே
தவிர, சோசலிச அரசு அமைவதைத் தன் கண்ணால் காணும்
வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
- விளாடிமிர் லெனின் (ஏகாதிபத்திய காலகட்டம்): இருபதாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் முதலாளித்துவம் அதன் உச்சகட்டமான ‘ஏகாதிபத்தியமாக’
(Imperialism) மாறியதை லெனின் கண்டறிந்தார்.
"ஏகாதிபத்தியம் என்பது அழுகிப்போகும் முதலாளித்துவம்; அதுவே பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்தினம்" என்ற
கோட்பாட்டை உருவாக்கினார். மார்க்ஸின் தத்துவத்தை ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி
(1917) மூலம் நடைமுறைப்படுத்தி, உலகின்
முதல் சோசலிச அரசை (USSR) நிறுவினார்.
- மாசேதுங் (உலகப் புரட்சி மற்றும் சோசலிசக் கட்டுமான காலகட்டம்): ஏகாதிபத்தியம் வீழ்ச்சியை
நோக்கியும், சோசலிசம் உலகளாவிய வெற்றியை நோக்கியும்
செல்லும் சகாப்தத்தில் மாவோ செயல்பட்டார். லெனின் தத்துவ வடிவமாக்கிய
பாட்டாளி வர்க்கக் கட்சிக் கோட்பாட்டைச் சீன நிலப்பரப்பிற்கு ஏற்ப மாற்றி
அமைத்தார்.
2. புதிய ரகக் கட்சி மற்றும் திரிபுவாத எதிர்ப்பு (Anti-Revisionism & Vanguard Party) மார்க்சியத்தின் தூய்மையைப் பேணுவதும், புரட்சிகரப் பாதையில் இருந்து விலகாமல் இருப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியக் கடமையாகும்.
திரிபுவாதம் (Revisionism): மார்க்சியத்தின் புரட்சிகர ஆத்மாவான
வர்க்கப் போராட்டத்தையும், ஆயுதப் புரட்சியையும்
நீக்கிவிட்டு, முதலாளித்துவ அமைப்பிற்குள் இணக்கமாகச்
செயல்பட நினைக்கும் போக்காகும்.
- லெனினின் சித்தாந்தப் போர்: மார்க்ஸ், ஏங்கெல்ஸுக்குப்
பிறகு வந்த காட்ஸ்கி, பெர்ன்ஸ்டைன் போன்ற இரண்டாம்
அகிலத்தின் தலைவர்கள் "பாராளுமன்றப் பாதை மூலமே சோசலிசத்தை
அடையலாம்" என்று பேசியபோது, லெனின் அவர்களைத் 'திரிபுவாதிகள்' என அம்பலப்படுத்தினார். தனது ‘அரசும் புரட்சியும்’ போன்ற நூல்கள் மூலம்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை நிலைநாட்டினார்.
- மாவோவின் சித்தாந்தப் போர்: ஸ்டாலினுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தில்
ஆட்சிக்கு வந்த குருசேவ், முதலாளித்துவ நாடுகளுடன்
"சமாதான சகவாழ்வு, சமாதானப் போட்டி, சமாதான மாற்றம்" (Three Peaces) என்ற
தத்துவத்தைக் கொண்டு வந்தபோது, மாவோ அதற்கு எதிராக 'மகா விவாதம்' (The Great Debate) நடத்தி
மார்க்சியம்-லெனினியத்தின் தூய்மையைப் பாதுகாத்தார். சண்முகதாசன் இதனை
லெனினின் கடமையோடு ஒப்பிடுகிறார்.
3. மாவோ அமைத்த புதிய மார்க்சியக் கோட்பாடுகள் சீனப் புரட்சியை வழிநடத்தியதன் மூலமும், சோசலிசத்தைக் கட்டியமைத்ததன் மூலமும் மாவோ மார்க்சியக் களஞ்சியத்திற்கு வழங்கிய தனித்துவமான பங்களிப்புகள்: அ) புதிய ஜனநாயகப் புரட்சி (New Democratic Revolution) ஐரோப்பிய நாடுகள் போலன்றி, சீனா போன்ற அரைவடிவக் குடியேற்ற (Semi-colonial) மற்றும் அரை நிலப்பிரபுத்துவ (Semi-feudal) நாடுகளில், தொழிலாளி வர்க்கம் நேரடியாக சோசலிசப் புரட்சியைச் செய்ய முடியாது. அங்கு தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில், விவசாயிகளையும், தேசிய முதலாளிகளையும் உள்ளடக்கிய 'புதிய ஜனநாயகப் புரட்சி'யை முதலில் நடத்த வேண்டும் என்ற கோட்பாட்டை மாவோ வகுத்தார். ஆ) நீடித்த மக்கள் யுத்தம் (Protracted People's War) "அதிகாரம் துப்பாக்கிக் குழாயிலிருந்து பிறக்கிறது" என்ற மார்க்சியப் பார்வையில், நகரங்களைச் சூழ்ந்துகொள்வதற்கு முன்னதாகக் கிராமப்புறங்களை உறைவிடங்களாக மாற்றி, விவசாயிகளைத் திரட்டி, 'நீடித்த மக்கள் யுத்தம்' மூலம் புரட்சியை வென்றெடுக்க முடியும் என்பதை மாவோ நிரூபித்தார்.
4. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்தல் (Theory of Continuing Revolution under the Dictatorship of the Proletariat) சண்முகதாசன் இக்கட்டுரையில் மிக முக்கியமாக வலியுறுத்தும் பகுதி இதுவாகும். சோசலிச அரசு அமைக்கப்பட்ட பிறகும் வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வருவதில்லை.
- கோட்பாடு: சோசலிச சமூகத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டாலும்,
பழைய முதலாளித்துவச் சிந்தனைகளும், பழக்கவழக்கங்களும்
மக்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் மனங்களில் நீடிக்கும். இதைப் பயன்படுத்தி,
சோவியத் ஒன்றியத்தில் நடந்தது போல 'முதலாளித்துவ
மீட்சி' (Capitalist Restoration) கட்சிக்
குள்ளிருந்தே நடக்க வாய்ப்புள்ளது.
- தீர்வு: இதற்குத் தீர்வாக மாவோ முன்வைத்ததே 'மகா பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி'
(Great Proletarian Cultural Revolution) ஆகும். அதிகாரத்துவத்திற்கு எதிராகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் புகுந்திருக்கும் முதலாளித்துவப் பாதையினருக்கு எதிராகவும் வெகுமக்களைத் திரட்டிப் போராடுவதே இக்கோட்பாட்டின் மையப்புள்ளியாகும். முடிவுரை: சண்முகதாசனின் மார்க்சியப் பார்வை நா. சண்முகதாசன் இக்கட்டுரையின் மூலம், மார்க்சியம், லெனினியம், மாவோ சிந்தனை (Marxism-Leninism-Maoism) ஆகியவை வெவ்வேறானவை அல்ல என்பதை நிறுவுகிறார். லெனினியத்தை ஏற்காமல் எப்படி ஒருவரால் மார்க்சியவாதியாக இருக்க முடியாதோ, அதேபோல் மாவோ சிந்தனையை (இன்று இது 'மாவோயியம்' எனப்படுகிறது) ஏற்காமல் ஒருவரால் உண்மையான மார்க்சிய-லெனினியவாதியாக இருக்க முடியாது என்று வாதிடுகிறார். லின் பியௌ-வின் கூற்றை மேற்கோள் காட்டி, "கடல்களில் கப்பலைச் செலுத்துவது மீகாமனைச் (மாலுமி) சார்ந்தது; புரட்சி நடத்துவது மாசேதுங் சிந்தனையைச் சார்ந்தது" எனக் கூறுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்கான வழிகாட்டியாக மாவோவின் கோட்பாடுகளைச் சண்முகதாசன் மிகச் சரியாகப் பொருத்துகிறார்.
மாபெரும் வாதப்பிரதிவாதம்
ஏறக்குறைய 10 ஆண்டுகளாக சர்வதேசிய கம்யூனிஸ இயக்கத்திலும், புரட்சி இயக்கத்திலும் நெருப்பென நிகழ்ந்த மகத்தான சித்தாந்தப் போரை, அரசியலில் அக்கறை இல்லாதவர்கள் கூட அவதானிக்காமல் இருந்திருக்க முடியாது. ஆனால், விவாதிக்கப்படுகின்ற அடிப்படை விஷயங்களை பலர் தெளிவாக அறிந்திராமல் இருக்க மாட்டார்கள். இந்த மாபெரும் வாதப்பிரதிவாதம் இலங்கை புரட்சி இயக்கத்துக்குள்கூட எதிரொலிகளைக் கிளப்பியபடியால், நமது நாட்டிலுள்ள உண்மையான புரட்சிவாதிகள் அனைவரும் விவாதத்திலுள்ள அடிப்படை விஷயங்கள் யாவை என அறிந்து கொள்வதும், இதில் சரி எது, பிழை எது என தெரிந்து கொள்வதும் இன்றியமையாதது. முதலாளித்துவப் பத்திரிகைகளும், பல்வேறு விதமான பிற்போக்குவாதிகளும், நமது காலத்தில் நிகழும் இந்த மகத்தான சித்தாந்த மோதலை ஒரு தேசியச் சச்சரவு, சீனா, ரஷ்யா ஆகிய இரு நாட்டு நலன்களின் மோதல் என்று சுருக்கிக்காட்ட வீண் முயற்சி செய்து வந்தார்கள். நமது சகாப்தத்தின் மிகப் பெரும் மார்க்சிஸம்-லெனினிஸவாதியாக விளங்கும் தோழர் மாஓ சேதுங் அவர்களைத் தலைமையாகக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸம் - லெனினிஸ இயக்கத்துக்கு தலைமை கொடுப்பது உண்மைதான். அதேபோல, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நவீன திரிபுவாதத்தின் பிரதான மையமாக இருப்பதும் உண்மைதான். ஆனால், இந்தப் போராட்டம் தேசிய நலன்களின் மோதலை அடிப்படையாகக் கொண்டு சீனாவும் ரஷ்யாவும் நடத்தும் ஒரு தேசியப் போராட்டம் அல்ல. இது, ஒருபுறம் சீன கம்யூனிஸ்ட் கட்சி, அல் பேனிய
தொழில்கட்சி, உண்மையான இதர மார்க்ஸிஸம் - லெனினிஸக் கட்சிகள்,
குழுக்கள் அனைத்தும் பிரதிநிதித்துவப்படுத்தும்
மார்க்ஸிஸம்-லெனினிஸம், மாஓசேதுங் சிந்தனைக்
கருத்துக்களுக்கும், மறுபுறம், சோவியத்
கம்யூனிஸ்ட் கட்சியை தலைமைக் கேந்திரமாகக் கொண்ட நவீன திரிபுவாதக்
கருத்துக்களுக்கும் இடையில் நடைபெறும் ஒரு பூகோள ரீதியான சித்தாந்தப்
போராட்டமாகும். (கட்டுரையாளரின் குறிப்பு: இந்தப் போராட்டம் மாவோவால்
துவங்கப்பட்டாலும் இன்றளவும் தொடர்கிறது)
ரஷியாவுக்கு நேர்ந்தது போல, சீனாவையும் முதலாளித்துவ மீட்சிப் பாதையில்
இழுத்துச்செல்ல விரும்பும் லியூ ஷௌ-சி போன்ற நவீன திரிபுவாதிகள் சீனாவிலும்
இருப்பதை மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி அம்பலப்படுத்திக் காட்டிய உண்மை
ஒன்றே, இது எவ்விதத்திலும் ஒரு தேசியப் போராட்டம் அல்ல,
ஒரு சித்தாந்தப் போராட்டமே என்பதை நிரூபிக்கின்றது. இது சீனா,
ரஷியா என்ற இரு நாடுகள் மட்டுமல்ல, சர்வதேசிய
புரட்சி இயக்கம் முழுமையும் சம்பந்தப்பட்ட ஒரு சித்தாந்தப் போராட்டமாகும்.
இத்தகைய ஒரு சித்தாந்த மோதல் தோன்றியதை ஒட்டி, இது சர்வதேசிய கம்யூனிஸ இயக்கத்தில் ஒரு
பிளவை ஏற்படுத்தியதை ஒட்டி, உற்சாகம் இழந்து, வருத்தமும், விரக்தியும் அடையும் ஒரு சிலரும்
இல்லாமல் இல்லை. சீனாவுக்கும், ரஷியாவுக்கும் இடையில்
பிளவேற்பட்டிராவிட்டால், ஏகாதிபத்திய-எதிர்ப்பு சக்திகள்
எவ்வளவு பலமுடையனவையாய் இருக்கும் என அவர்கள் எண்ணுகின்றனர்.
இதில் அரைவாசி உண்மை இருக்கின்றது. சோவியத் கம்யூனிஸ்ட்
கட்சியும் அதனோடு சேர்ந்த இதர கட்சிகளும் நவீன திரிபுவாதம் என்ற நச்சுத்
தத்துவங்களுக்கு இரையாகாவிட்டால், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் இன்று மேலும் பலம்
பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நாம்
இன்னொரு மாற்றுக் கேள்வியையும் போட்டுப் பார்க்க வேண்டும். சீன கம்யூனிஸ்ட்
கட்சியும் சோவியத் கட்சியைப் பின்பற்றி, திரிபுவாத முகாமில்
தஞ்சமடைந்திருந்தால், சர்வதேசிய கம்யூனிஸ இயக்கத்துக்கு,
புரட்சி இயக்கத்துக்கு என்ன கதி ஏற்பட்டிருக்கும்? இதன் விளைவு நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
அதே சமயத்தில், முரண்பாடுகள், போராட்டங்கள் மூலம்தான் எல்லாம் முன்னேறி, விருத்தியடைகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தோழர் மாஓ சேதுங் அவர்கள், முரண்பாடுகள்
சர்வவியாபகமானவை என்றும், அதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்
பல்வேறு கருத்துக்களுக்குமிடையில் எதிர்ப்பும், போராட்டமும்
நிகழ்கின்றன என்றும் நமக்குப்போதித்துள்ளார். சர்வதேசிய கம்யூனிஸ இயக்கத்திலும்
இது நிகழ்கின்றது. ஒரு தனி நபரில்கூட இது நிகழவே செய்கின்றது. இதில் விபரீதம்
ஒன்றும் இல்லை. காரணம் இவை: வெளியே உள்ள வர்க்க முரண்பாடுகளும், பழையது, புதியது இரண்டுக்குமிடையில் நிகழும்
போராட்டமும் உள்ளே பிரதிபலிப்பதே யாகும்.
எனவே, சரியான கருத்துக்களுக்கும், பிழையான
கருத்துக்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடுகளும், அவற்றுக்கிடையில்
நிகழும் போராட்டங்களும்—ஒரு தனி நபரிலாயினும் சரி, ஒரு தேசிய
கட்சியிலாயினும் சரி, அல்லது ஒரு சர்வதேசிய
இயக்கத்திலாயினும் சரி—தவிர்க்க முடியாதவை; தடுக்க
முடியாதவை. நமது கடமை இந்த முரண்பாடுகளை மூடிமறைப்பதல்ல; கம்பளிக்குக்
கீழ் தள்ளி விடுவதல்ல. மாறாக, இந்த முரண்பாடுகளை வெளியே
கொண்டு வந்து, சரியான கருத்துகளையும் தவறான கருத்துகளையும்
மோதவிட்டு, இதன் மூலம், சரியான
கருத்துகளை வெற்றி பெறச்செய்து, முன்னேற விடுவது நமது
கடமையாகும்.
விளக்கம்
இப்பகுதி, தோழர் நா. சண்முகதாசன் அவர்கள் எழுதிய ‘மாவோவின் சிந்தனைகள்’
நூலில் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பிளவையும், "மாபெரும் விவாதம்" (The Great Debate) என்று
அழைக்கப்பட்ட சித்தாந்தப் போராட்டத்தையும் விளக்கும் மிக முக்கியமான பகுதியாகும்.
முதலாளித்துவ ஊடகங்கள் இதனை சீனா-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை
அல்லது தேசிய நலன் சார்ந்த சச்சரவாகக் காட்டியபோது, சண்முகதாசன்
இதனை மார்க்சிய-லெனினிய தத்துவார்த்தப் பார்வையில் அணுகி, இது
ஒரு உலகளாவிய வர்க்கப் போராட்டம் என்பதை நிறுவுகிறார். இப்பதிவை மார்க்சியக் கோட்பாடுகளோடு (Marxist
Concepts) பொருத்தி கீழே விரிவாகக் காண்போம்:
1. மாபெரும் வாதப்பிரதிவாதம்:
தேசியச் சச்சரவா? சித்தாந்தப் போராட்டமா? மார்க்சியத்தின்
மிக அடிப்படை விதிகளில் ஒன்று "பாட்டாளி வர்க்க
சர்வதேசவாதம்" (Proletarian Internationalism) ஆகும்.
கம்யூனிஸ்டுகளுக்கு நாடெல்லையைக் கடந்த வர்க்க ஒற்றுமையே பிரதானம்.
- கோட்பாட்டுப் பொருத்தம்: முதலாளித்துவ தத்துவங்கள் அனைத்தையும் தேசியவாதக்
கண்ணோட்டத்திலேயே அணுகும். அதனால்தான், சோவியத் ஒன்றிய
கட்சிக்கும் சீனக் கம்யூனிஸ்டுடுக் கட்சிக்கும் இடையிலான மோதலை (விவாத்த்தை)
"இரு வல்லரசுகளின் மோதல்" என்று முதலாளித்துவ பத்திரிகைகள்
சித்தரித்தன.
- விளக்கம்: சண்முகதாசன் இதனை மறுக்கிறார். ஒருபுறம் மாவோவின்
தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி, அல்பேனிய தொழிலாளர்
கட்சி மற்றும் உலகெங்கும் உள்ள உண்மையான மார்க்சிய-லெனினியவாதிகள்; மறுபுறம் குருசேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் நவீன
திரிபுவாதம். எனவே, இது நிலப்பரப்புக்கான சண்டை அல்ல,
மாறாக "புரட்சிகரப் பாதையா
அல்லது சமரசப் பாதையா" என்பதைத்
தீர்மானிக்கும் பூகோள ரீதியான சித்தாந்தப் மோதலாகும்.
2. உள்நாட்டுத் திரிபுவாதமும் லியூ ஷாவோசியும் (Internal Class Struggle) சோசலிச சமூகத்திலும் வர்க்கப் போராட்டம் தொடரும் என்ற மாவோவின் மிக முக்கியமான கோட்பாடு இங்கு
நிரூபிக்கப்படுகிறது.
- கோட்பாட்டுப் பொருத்தம்: மார்க்சிய விதிப்படி, பொருளாதாரம்
சோசலிசமயமாக மாற்றப்பட்டாலும், மக்களின் சிந்தனையிலும்,
கலாசாரத்திலும் பழைய முதலாளித்துவ எச்சங்கள் நீடிக்கும்.
கட்சிக்குள்ளேயே அதிகாரத்துவமாக அது தலைதூக்கும்.
- விளக்கம்: இது சீனா-ரஷ்யா என்ற இரு நாடுகளுக்கு இடையிலான
வெளிப்படையான மோதல் மட்டுமல்ல என்பதை நிரூபிக்க மாவோவின் ‘மகா பாட்டாளி
வர்க்க கலாசாரப் புரட்சி’யைச் சண்முகதாசன் சான்றாகக் காட்டுகிறார்.
சீனாவிற்குள்ளேயே கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த லியூ
ஷாவோசி (Liu Shaoqi) போன்றவர்கள் சோவியத் ஒன்றியத்தின் 'முதலாளித்துவ மீட்சி'ப் பாதையைச் சீனாவில்
புகுத்த முயன்றனர். கலாசாரப் புரட்சி அவர்களை அம்பலப்படுத்தியது. ஆகவே,
வர்க்கப் போராட்டம் என்பது நாட்டிற்கு வெளியிலிருந்து
மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளிருந்தும் நடக்கும் என்பதை
இக்கோட்பாடு விளக்குகிறது.
3. முரண்பாடுகளின் சர்வவியாபகம் (Universality of Contradiction) மாவோவின்
தத்துவப் பங்களிப்புகளில் மிக முக்கியமானது "முரண்பாடுகள்
பற்றிய கோட்பாடு" (On Contradiction) ஆகும்.
மாவோவின் இந்த இயக்கவியல் பொருள்முதல்வாத விதியைச் சண்முகதாசன் இங்கு மிகச்
சரியாகப் பொருத்துகிறார்.
விதி: இயக்கவியலின்படி (Dialectics), உலகில் உள்ள
அனைத்துப் பொருட்களும், தத்துவங்களும் முரண்பாடுகளின்
மோதல்களால்தான் இயங்குகின்றன. முரண்பாடுகளும், போராட்டங்களும்
இல்லாமல் எந்த ஒரு வளர்ச்சியும் சாத்தியமில்லை.
- கட்சிக்குள் முரண்பாடு: சமூகம் என்பது வர்க்கங்களாகப் பிரிந்து கிடக்கும்
வரை, வெளியில் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின்
பிரதிபலிப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும், சர்வதேச
இயக்கத்திற்குள்ளும், ஏன் ஒரு தனிமனிதனின்
சிந்தனைக்குள்ளும் எதிரொலிக்கும்.
- பிளவைக் கண்டு அஞ்சாமை: சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பிளவைக் கண்டு
சிலர் விரக்தி அடைந்தனர். ஆனால், மார்க்சிய இயக்கவியல்
தெரிந்தவர்கள் பிளவைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். ஏனெனில், தவறான தத்துவத்தோடு (திரிபுவாதம்) போலியான ஒற்றுமை நிலவுவதை விட,
சரியான தத்துவத்தை நிலைநாட்டப் போராடுவதே புரட்சியை முன்னோக்கி
நகர்த்தும்.
4. முரண்பாடுகளைக் கையாளும் முறை: மூடிமறைத்தலா? தீர்த்தலா? முரண்பாடுகள் தோன்றும் போது அதை எப்படி அணுக வேண்டும் என்ற லெனினிய-மாவோயிய முறையியலை சண்முகதாசன் விளக்குகிறார்.
- கோட்பாடு: முரண்பாடுகளை மூடிமறைப்பது (Compromise) தற்காலிக அமைதியைத் தரலாம், ஆனால் அது
தத்துவத்தைச் சீரழித்துவிடும். முரண்பாடுகளை வெளிக் கொணர்ந்து, சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் தவறுகளை அகற்றி, சரியான தத்துவத்தை (Correct Thesis) வெற்றி
பெறச் செய்வதே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் வழிமுறையாகும்.
- விளக்கம்: "முரண்பாடுகளைக் கம்பளிக்குக் கீழ் தள்ளி மறைக்கக் கூடாது" என்று சண்முகதாசன் எச்சரிக்கிறார். சோவியத் கட்சியின் தவறுகளைச் சீனா தட்டிக் கேட்டிருக்காவிட்டால், உலகப் புரட்சி இயக்கம் முழுமையாகத் திசைமாறி, சமரசப் பாதையில் அழிந்து போயிருக்கும். சித்தாந்தப் போரின் மூலமே மார்க்சியத்தின் தூய்மையைக் காப்பாற்ற முடியும். (மாவோவுக்குப் பிறகும் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்குள், குருஷேவின் திருத்தல்வாதத்திற்கும் மாவோவின் மார்க்சியக் கொள்கைக்கும் இடையில் முரண்பாடும் போராட்டமும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் திருத்தல்வாதிகளாக மாறிவிட்டதால் தற்பொழுது அனைத்துலக கம்யூனிச இயக்கத்திற்குள்ளும் திருத்தல்வாதமே செல்வாக்கு செலுத்துகிறது. இந்த திருத்தல்வாதத்தை எதிர்த்தப் போராட்டமானது எளிதானதல்ல. மார்க்சிய அறிவும் சிறந்த உன்னதமான பாட்டாளி வர்க்க உணர்வுள்ள தலைவர்களான லெனின் போன்ற தலைவர்கள் உருவாகி சாதிக்க வேண்டிய நிலையில் சர்வதேச கம்யூனிச இயக்கம் உள்ளது. சுருக்கம் சண்முகதாசனின் இப்பதிவு கம்யூனிச இயக்க வரலாற்றில் ஒரு தீர்க்கமான உண்மையை உணர்த்துகிறது: தத்துவார்த்தத் தூய்மை இல்லாத வெற்று ஒற்றுமை ஆபத்தானது. சர்வதேச அளவில் மார்க்சிய-லெனினியத்தை குருசேவின் திரிபுவாதத்திலிருந்தும், உள்நாட்டில் லியூ ஷாவோசியிடமிருந்தும் காப்பாற்ற மாவோ நடத்திய போராட்டம், மார்க்சிய இயக்கவியல் விதிகளுக்கு (Laws of Dialectics) உட்பட்ட ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாகும் என்பதை இக்கட்டுரை மிக ஆழமாக விளக்குகிறது. இந்தப் போராட்டத்தை தொடரவேண்டியது தற்போதைய கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். தேன்மொழி
மாவோவின் சிந்தனைகள் சண்முகதாசன் .
இதனால், இருக்கின்ற ஐக்கியத்துக்குச் சிறிது பங்கம் ஏற்படுவது உண்மைதான். இது தவிர்க்க முடியாதது. அழிவு இல்லாவிட்டால் ஆக்கமும் இல்லை. அக்டோபர் புரட்சிக்குப் பின், லெனின் அவர்கள் இரண்டாவது சர்வதேசியத்தின் பழைய, உளுத்துப் போன, திரிபுவாதக் கட்சிகளில் தோன்றிய புதிய இடதுசாரிக் குழுக்களைச் சேர்த்து மூன்றாவது சர்வதேசியத்தை உருவாக்கிய போது, அவர் இரண்டாவது சர்வதேசியத்தின் ஐக்கியத்தை அழித்தார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அது மேலும் பலம் வாய்ந்த, மேலும் ஐக்கியமுடைய புரட்சிகர இயக்கத்தால், முதலில் லெனின் தலைமையிலும், பின்னர் ஸ்டாலினின் தலைமையிலும் இருந்த மூன்றாவது சர்வதேசியத்தால் பதிலியாக்கப்பட்டது.
இன்று, ஒரு காலத்தில் மூன்றாவது சர்வதேசியத்தில் இருந்த பெருந்தொகையான கட்சிகள்
இரண்டாவது சர்வதேசியத்தில் இருந்த பழைய கட்சிகள் சென்ற அதே பாதையில் சென்றுவிட்டன.
அவை தொழிலாளி வர்க்கம், புரட்சி இவற்றின் துரோகிகளாக, அவற்றைக் காட்டிக் கொடுப்பவையாக மாறிவிட்டன. லெனின்
காலத்தில் இருந்தது போன்ற ‘புதிய முரண்பாடு ஒன்று இன்று தோன்றியுள்ளது. பழைய
ஐக்கியம் தவிடுபொடியாகிக்கிடக்கின்றது. ஆனால், இந்த மகோன்னதமான சித்தாந்த விவாதத்தின் விளைவாக,
மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மாஓசேதுங்
சிந்தனை வாகை சூடியதன் விளைவாக, மேலும் புதிய, மேலும் மகத்தான, மேலும் உயர்ந்த புரட்சிகர ஐக்கியம் ஒன்று சர்வதேசியரீதியில்
உருவாக்கப்படுவது நிச்சயம். இது ஒரு நல்ல விஷயம் அன்றித் தீய விஷயம் அல்ல.
சர்வதேசிய கம்யூனிஸ இயக்கத்தில் நிகழும் முதல் விவாதம் அல்ல இது என்று சில
தோழர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கின்றது. உண்மையில் இது சர்வதேசிய கம்யூனிஸ
இயக்கத்தில் நிகழும் மூன்றாவது பெரும் வாதப் பிரதிவாதமாகும்.
முதலாவது விவாதம் லெனின் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தது. மார்க்ஸும்,
ஏங்கெல்ஸும் விஞ்ஞான
சோஷலிஸத்தின் சிருஷ்டிகர்த்தாக்கள் ஆவர். அவர்கள் வர்க்கப் போராட்டம்,
புரட்சி,
பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் ஆகியவற்றின் விதிகள், அரசு பற்றிய தத்துவம் முதலியவைபற்றி தொழிலாளர்
வர்க்கத்துக்குப் போதித்தார்கள். ஆனால், தமது கருத்துகள் நடைமுறையாவதைக் காண அவர்கள் நெடிது
வாழவில்லை.
முதலாவது சர்வதேசியம் மார்க்ஸ் அவர்கள் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. விஞ்ஞான
சோஷலிஸத்தின் கருத்துகளை ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் ஜனரஞ்சகமாக்குவது அதன் பிரதான கடமையாக
இருந்தது. இதன் விளைவாக, இக்கடமைக்கு மிக விசுவாசமான சிறிய பல குழுக்கள் இந்
நாடுகளில் தோன்றின. 1871ல் பாரிஸ் நகரத் தொழிலாளர் வரலாற்றில் முதல் தடவையாக
அதிகாரத்தைக் கைப்பற்றி, எல்லா விதமான கஷ்டங்களையும் எதிர்த்து,
அவ்வதிகாரத்தை மூன்று
மாத காலம் நிலைநிறுத்தியிருந்த பிரசித்திபெற்ற பாரிஸ் கம்யூன் தோன்றியது. ஆனால்,
பிரெஞ்சு முதலாளி
வர்க்கமும், ஜெர்மன் முதலாளி வர்க்கமும் கையும் மெய்யுமாக ஒத்துழைத்து,
தொழிலாளர்கள்
அதிகாரத்தைக் கைப்பற்றிய இம் முதலாவது முயற்சியை முறியடித்து விட்டனர்.
பாரிஸ் கம்யூனை மிலேச்சத்தனமாகக் நசுக்கிய பின், ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஐரோப்பாவில் அடக்குமுறை
தலைவிரித்தாடியது. முதலாவது சர்வதேசியத்தின் தலைமை அலுவலகம் வட அமெரிக்காவுக்கு
மாற்றப்பட்டது. அத்துடன் அது செயலற்றுவிட்டது.
அதன் பின் மார்க்ஸ் அவர்களும் மறைந்து விட்டார். அவருடைய மகோன்னதமான சக
தோழரும், சகாபடியுமான ஏங்கெல்ஸ் அவருடைய வேலையைத் தொடர்ந்து செய்தார். அவருடைய
தலைமையில் இரண்டாவது சர்வதேசியம் தோன்றியது. இந்த சர்வதேசியத்தில் அங்கம் வகித்த
சில கட்சிகள் இன்று வரை இருக்கின்றன. உதாரணமாக பிரிட்டிஷ் தொழிற்கட்சி,
பிரெஞ்சு,
இத்தாலிய சோஷலிஸ
கட்சிகள், ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஆனால், ஏங்கெல்ஸ் இந்தக் கட்சிகளின் சீரழிவைக் கண்ணால் காண்பதற்கு முன் மறைந்து
விட்டார். இந்த போக்கு அவர் மறைவுக்குப் பின் நிகழ்ந்தது. மார்க்ஸ்,
ஏங்கெல்ஸ்
இருவருக்கும் பின், மார்க்ஸிஸ இயக்கத்தின் தலைமை காட்ஸ்கி,
பர்ன்ஸ்டீன் போன்ற
அசல் சந்தர்ப்பவாதிகளின் கைகளில் வீழ்ந்தது. அதே வேளையில் காட்ஸ்கியும்,
பர்ன்ஸ்டீனும்
இரண்டாவது சர்வதேசிய காலத்தில் பலம்பெற்று விளங்கிய ஜெர்மன் சமூக ஜனநாயகக்
கட்சியின் தலைவர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இருவரின்
போதனைகளில் உள்ள புரட்சிச் சாராம்சத்தை நீக்கிவிட்டு,
அவர்களுடைய
தத்துவங்களை திரித்துப் புரட்டி, எழுதி வைத்தார்கள். அவர்கள் பாராளுமன்றப் பாதை மூலம்
சோஷலிஸத்துக்குச் செல்லும் சமாதான மாற்றம் பற்றி உபதேசம் செய்து வந்தார்கள். இந்த
நோக்கத்துடன் இரண்டாவது சர்வதேசியத்திலிருந்த கட்சிகளை பாராளுமன்றக் கட்சிகளாக
மாற்றினார்கள். முதலாவது உலக யுத்தத்துக்கு முன் இந்த ஜெர்மன் கட்சியில் 100க்கு மேலானோர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தனர். இந்த
கட்சி 1912ல் நிகழ்ந்த பஸில் சர்வதேசிய மாநாட்டில் எல்லா ஏகாதிபத்திய யுத்தங்களையும்
எதிர்க்கும் தீர்மானம் ஒன்றை விசுவாசமாகவும், ஏகமனதாகவும் அங்கீகரிக்க உழைத்த கட்சி. ஆனால்,
இதே தீர்மானத்துக்கு
எதிராகச் செல்லுமளவுக்கு அக் கட்சி பின்னர் சீரழிந்து,
புரட்சிகரக்
கோட்பாடுகள் அனைத்தையும் கைகழுவி விட்டது. இக் கட்சியில் இருந்த ஒரே ஒரு
கம்யூனிஸ்ட், கார்ல் லீப்நெக்ட்தான் வில்லியம் கெய்ஸருக்கு யுத்தக் கடன்கள் வழங்குவதை
எதிர்த்து வாக்களித்தவர் ஆவர்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சிகர தத்துவங்களைத் திரித்துப் புரட்டிப்
பொய்மைப்படுத்தும் இந்த முயற்சிக்கு எதிராகத் தான், லெனின் அவர்கள், ரஷிய புரட்சி இயக்கத்தின் உற்சாகமான தலைமைக்கு வந்த பின்னர்,
பிரமாண்டமான
சித்தாந்தப் போராட்டத்தை நடத்தினார். ஆனால், இந்தப் போராட்டம் எவ்விதத்திலும் ரஷிய எல்லைக்குள்
கட்டுப்பட்டு நின்றுவிடவில்லை அது முழு ஐரோப்பாவின் புரட்சி இயக்கத்திற்குள்ளும்
சூறாவளி போல வீசியது.
காட்ஸ்கி, பர்ன்ஸ்டீன் முதலியோருக்கு எதிராக, லெனின் அவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சிகர மூல போதனைகளைத் திரும்பக்
கண்டு பிடித்து உறுதியாகப் பிரகடனம் செய்தார். இன்றுவரை அழியாத தொன்னூல்களாக
விளங்கும் “அரசும் புரட்சியும்”, “பாட்டாளி வர்க்கப் புரட்சியும்,
துரோகி காட்ஸ்கியும்”
போன்ற பல ஒளி வீசும் வாதப் பிரதிவாதப் படைப்புகள் மூலம் லெனின் அவர்கள் இந்தக்
கைங்கரியத்தை நிறைவேற்றினார்.
இவ்வாறு சர்வதேசிய கம்யூனிஸ இயக்கத்தில் லெனின் அவர்களுக்கும் அவருடைய கால
திரிபுவாதிகளுக்கும் இடையில் முதலாவது மகத்தான வாதப் பிரதிவாதம் நடைபெற்றது.
குரூசேவிலிருந்து கெனமன் வரையுள்ள இன்றைய திரிபுவாதிகள் ஆரம்பத்தில் காட்ஸ்கி,
பர்ன்ஸ்டீன்
இருவராலும் முன்வைக்கப்பட்டு, லெனின் அவர்களால் அப்பொழுதே நெருப்பெழ மறுத்துரைக்கப்பட்ட
தத்துவங்களுக்கு எவ்வித சீர்திருத்தமும் செய்துவிடவில்லை. இவர்கள் அந்த பழைய
சரக்குகளை கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கிறார்கள் மட்டுமே. இவர்களை நவீன
திரிபுவாதிகள் என்று அழைப்பதற்குக் காரணம் லெனினுடைய காலத் திரிபுவாதிகளிலிருந்து
இவர்களைப் பிரித்துக் காட்டுவதற்காகவே.
கடைசியாக, லெனின் அவர்கள் தமது காலத் திரிபுவாதிகளுக்கு எதிராக நடத்திய சித்தாந்தப்
போராட்டமும், குறைந்த பட்சம் அது ரஷிய புரட்சி இயக்கத்தில் ஈட்டிய வெற்றியும் தான் 1917ம் ஆண்டு ரஷியாவில் அக்டோபர் புரட்சியின் வெற்றியைச்
சாத்தியம் ஆக்கின என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். திரிபுவாதிகளுக்கு எதிராக
லெனின் ஓய்வு ஒழிச்சலின்றி நடத்திய சித்தாந்தப் போராட்டமும்,
ரஷியாவில் அது ஈட்டிய
வெற்றியும் இல்லாவிட்டால், அக்டோபர் புரட்சி நடந்திருக்கவே முடியாது.
அக்டோபர் புரட்சியின் பின், உலகின் முதலாவது தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட்ட பின்,
லெனின் நீண்டகாலம்
உயிரோடிருக்கவில்லை. எனவே, முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட நிலையில்,
முதலாவது பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் எழுந்த பல பிரச்சினைகளுக்கு அவரால்
தீர்வு காண முடியவில்லை.
கொலைகாரன் ஒருவனின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 1924ல் லெனின் அவர்கள் அகால மரணமடைந்த பின்,
தனி ஒரு நாட்டில்
சோஷலிஸத்தை நிர்மாணிக்க முடியுமா என்ற அதே பிரச்சினையை ட்ரொட்ஸ்கி,
புகாரின்,
ஸினோவியெவ்,
றடெக் முதலிய
சந்தர்ப்பவாதிகளும், மென்ஷிவிக்குகளும் எழுப்பினார்கள்.
லெனின் இந்தக் கேள்விக்கு ஏற்கனவே 1915ல் எழுதிய “ஐக்கிய ஐரோப்பிய நாடுகள்” என்ற கட்டுரையில்
பதில் கூறிவிட்டார். அக்கட்டுரையில் அவர் தெளிவாகக் கூறியதாவது:- “அசமத்துவ
பொருளாதார, அரசியல் வளர்ச்சி என்பது முதலாளித்துவத்தின் மாறா விதியாகும். ஆக,
சோஷலிஸம் முதலில் ஒரு
சில முதலாளித்துவ நாடுகளில் அல்லது தனி ஒரு நாட்டில் வெற்றிபெறுவது சாத்தியம்.
வெற்றிபெற்ற பாட்டாளி வர்க்கம் அந்த நாட்டு முதலாளிகளின் உடைமைகளைப் பிடுங்கி
எடுத்த பின், அதன் சொந்த சோஷலிஸ உற்பத்தி முறையை ஸ்தாபித்து, அதன் லட்சியத்தால் இதர நாடுகளின் அடக்கி ஒடுக்கப்பட்ட
வர்க்கங்களை ஆகர்ஷித்த வண்ணம், அந்த நாடுகளில் முதலாளிகளுக்கு எதிரான கிளர்ச்சிகளைத்
தூண்டிய வண்ணம், அத்தியாவசியமானபோது சுரண்டும் வர்க்கங்களுக்கும்,
அவர்கள் அரசுகளுக்கும்
எதிராக ஆயுத பலாத்காரத்தில் ஈடுபடவும் தயங்காமல், ஏனைய உலகுகக்கு எதிராக, முதலாளித்துவ உலகுக்கு எதிராக,
நிமிர்ந்து நிற்கும்.”
லெனினுக்குப் பின் போல்ஷ்விக் கட்சியின் தலைமைக்கு வந்த ஸ்டாலின்,
லெனினுடைய கருத்துகளை
ஆதரித்தார். போல்ஷெவிக் தலைவர்கள் அனைவரும் முன்னேறிய ஐரோப்பிய நாடுகள்
எல்லாவற்றிலும் புரட்சி வெடித்தெழும் என எதிர் பார்த்திருந்தது உண்மைதான். லெனின்
உண்மையில் இதற்காக உழைத்தார். அப்பொழுது யுத்தத்தால் களைப்படைந்த மத்திய ஐரோப்பிய
படை வீரர்கள் வீடு திரும்பியதும், தமது சொந்த நாட்டு முதலாளி வர்க்கத்துக்கு எதிராக தமது
துப்பாக்கிகளை நீட்டுவர், லெனினுடைய கனவு நனவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஹங்கேரி,
பவேரியா முதலிய
நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. ஜெர்மனியில் தொழிலாளர்,
படைவீரர்,
விவசாயிகளின்
சோவியத்துக்களின் வலைப் பின்னல் ஒன்று விரிக்கப்பட்டது. ஆனால்,
பிற்போக்குவாதிகள்
இவற்றை ஒவ்வொன்றாகத் திருகிக் கொன்று விட்டார்கள்.
ரஷியாவில் மாத்திரம் போல்ஷெவிக்குகள் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தின் தலையீடு,
உள்நாட்டு பிற்போக்கு
சக்திகளின் யுத்தம் இவற்றிலிருந்து நமது புரட்சியைப் பாதுகாத்தனர். பின்னர்
அவர்கள் யாது செய்வது? தமது ஐரோப்பியத் தோழர்கள் தயாராக இல்லை என்பதை ஆதாரமாகக்
கொண்டு, அதிகாரத்தை முதலாளிகளிடம் ஒப்படைப்பதா? ட்ரொட்ஸ்கியும் அவருடைய நண்பர்களும் முன்வைத்த ஆலோசனைகளின்
அர்த்தம் அதுவே தான்.
இல்லை, இது ஸ்டாலினும், அவர் தலைமையிலிருந்த பொல்ஷெவிக் கட்சியும் அளித்த பதில்.
அவர்கள் பிரகடனம் செய்ததாவது:- வரலாறு நாம் விரும்பிய திசையில் எப்பொழுதும் செல்ல
மாட்டாது. நாம் நமது நாட்டில், அதிர்ஷ்டவசமாக பரப்பில் பெரிய,
கனிப்பொருள் செல்வ
ஆதாரங்களில் செழித்த ஒரு நாட்டில், புரட்சியில் ஆட்டமசைவின்றி நிற்கிறோம். நமது நாட்டில்
சோஷலிஸத்தை நிர்மாணித்து, உலகில் ஏனைய பகுதித் தொழிலாளர்களுக்கு உற்சாகமூட்டும்
வகையில் நாம் அதைச் செய்வோம். இந்த புரட்சி ஊற்று புரட்சிப் பெருக்காக மாறும்வரை
நாம் காத்திருந்து, நமது நாட்டின் சோஷலிஸ நிர்மாண வெற்றிகளைக் கொண்டு உலகப்
புரட்சிக்கு உதவி செய்வோம்.
இது ஒரு துணிகரமான தீர்மானம். எதிர்காலத்திலும், தமது நாட்டு தொழிலாளர், விவசாயிகள் மீதும் உறுதியான நம்பிக்கையுடைய
துணிகரமானவர்களால்தான் இத்தகைய துணிகரமான தீர்மானத்தை எடுக்க முடியும். நம்பிக்கை
இல்லாத, சிறப்பாக அன்றைய ரஷிய ஜனத்தொகையில் ஏகப் பெரும்பான்மையினராக விளங்கிய
விவசாயிகள் மீது நம்பிக்கையில்லாத ட்ரொட்ஸ்கி, உலகப் புரட்சி என்ற அரங்கில் தான்,
சர்வதேசிய பாட்டாளி
வர்க்கம் அதற்கு உதவிக் கரம் நீட்டினால்தான், ரஷியப் புரட்சியைக் காப்பாற்ற முடியும் என்று ஆரவாரத்துடன்
பிரகடனம் செய்தான். ஒரு நாட்டில் சோஷலிஸத்தை நிர்மாணிப்பது அசாத்தியம் என்றும்
அவன் கூறினான்.
சோஷலிஸத்திலும், தொழிலாளர் வர்க்கத்திலும் நம்பிக்கையற்ற மென்ஷிவிக்குகள்
அனைவரும் ட்ரொட்ஸ்கியின் இந்த நிலைப்பாட்டை ஆதரித்தனர். வெற்றிபெறாத 1905
ரஷிய புரட்சியின் போது
லெனின் முன்வைத்த “ஒரு தொழிலாளர், விவசாயிகளின் அரசாங்கம்” என்ற சுலோகத்துக்கு எதிராக,
“ஜார் வேண்டாம்,
தொழிலாளரின் அரசாங்கம்
வேண்டும்” என்ற ஒரு முனைவாத சுலோகத்தை ட்ரொட்ஸ்கி தானாகவே முன்வைத்து,
விவசாயிகள் மீது
தனக்கு ஒரு போதும் நம்பிக்கையே இல்லை என்பதைக் காட்டிவிட்டான்.
தனி ஒரு நாட்டில் சோஷலிஸத்தைக் கட்டியமைக்கலாமா இல்லையா என்னும் பிரச்சினை
பற்றி ஒரு புறம் ஸ்டாலினின் தலைமை தாங்கிய போல்ஷிவிக் கட்சிக்கும்,
மறுபுறம்
ட்ரோட்ஸ்கிக்கும் அவனுடைய சகபாடிகளுக்கும் இடையில் நிகழ்ந்த சித்தாந்தப் போரின்
பெரும் பிரபல்யம், பின்னே ஸ்டாலினுடன் சச்சரவு நடத்தியது போல, முன்னே ட்ரோட்ஸ்கி லெனினுடன் இடையறாது சச்சரவிட்டு வந்த
வரலாற்று உண்மையை பலர் மறந்து விடும்படி செய்கிறது.
ட்ரோட்ஸ்கி அக்டோபர் புரட்சிக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் தான்
போல்ஷிவிக் கட்சியில் சேர்ந்தான். அரசியல் ரீதியில் இடைவிடாது லெனினை எதிர்த்து
வந்தான் என்ற உண்மையைக் கூடப் பொருட்படுத்தாமல், ஏகாதிபத்தியவாதிகளும், ட்ரோட்ஸ்கியவாதிகளும், ட்ரோட்ஸ்கியும் லெனினின் நெருங்கிய சகபாடி என்று கட்டுக்கதை
பரப்ப முழுமூச்சாக வேலை செய்து வந்தார்கள்.
லெனின் அவர்களே ட்ரோட்ஸ்கி பற்றி மிக மறக்க முடியாத குறிப்பு ஒன்றை விட்டுச்
சென்றுள்ளார். அவர் கூறியதாவது:- "மார்க்சிஸ்ட் இயக்கத்தில் முன்பு பங்கு
பற்றியவர்கள் ட்ரோட்ஸ்கியை நன்கு அறிவர். அவர்களின் நன்மைக்காக அவரைப் பற்றி
விவாதிப்பது அவசியமற்றது. ஆனால் தொழிலாளரில் இளம் சந்ததியினர் அவரை அறிய
மாட்டார்கள். எனவே தான் அவரைப் பற்றி விவாதிப்பது அவசியம். காரணம்,
வெளி நாட்டிலுள்ள
ஐந்து கூட்டாளிகளிலும் பார்க்க இவர் ஒரு மாதிரியானவர். உண்மையில் எல்லாரும்
விலக்குவாதிகளுக்கும் கட்சிக்கும் இடையில் நின்று ஊசலாடுபவர்கள்."
பழைய இஸ்க்ரா கால கட்டத்தில் (1901-1903) "பொருளாதார வாதி"களுக்கும்,
"இஸ்க்ரா
வாதி"களுக்குமிடையில் நின்று மீண்டும் மீண்டும் கொப்பு மாறிய இந்த ஊசலாடிகள்
"டஷினோ துரோகிகள்" எனக்கூறி சுடப்பட்டனர். (இது ஒரு முகாமிலிருந்து
இன்னொரு முகாமுக்கும், திரும்ப மறுமுகாமுக்கும் மாறி மாறிச் சென்ற படைவீரர்களுக்கு
ரஷ்ய 'டர்புலெண்ட்
டைம்ஸ்' இட்ட பெயராகும்.)
விலக்குவாதம் பற்றி விவாதிக்கும் போது, ஒரு நீண்ட காலப் போக்கில் வளர்ந்து வந்த குறிப்பிட்ட ஒரு
சித்தாந்த ஓட்டம் பற்றி நாம் விவாதிக்கின்றோம். இதன் வேர்கள் மார்க்சிஸத்தின் 20
ஆண்டு கால வரலாற்றில்
"மென்ஷிவிஸம்", "பொருளாதார வாதம்" இவற்றுடன் இழையோடி இருக்கின்றது.
இதன் கொள்கையும், சித்தாந்தமும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துடன், லிபரல் முதலாளி வர்க்கத்துடன் தொடர்பு உடையவை.
''டஷினோ துரோகிகள்'' தாம் கோஷ்டிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உரிமை
பாராட்டுவதற்குரிய ஒரே ஒரு ஆதாரம், இன்று ஒரு கோஷ்டியிடமிருந்து, நாளை இன்னொரு கோஷ்டியிடமிருந்து தமது கருத்துக்களை அவர்கள் ''கடன் வாங்குகிறார்கள்.'' 1901-03ல் ட்ரொஸ்கி ஒரு தீவிர ''இஸ்க்ராவாதி'' ஆவான். ரியஸனோவ் 1903 காங்கிரஸில் அவனுடைய பாத்திரத்தை வருணித்த போது ''லெனினின் தண்டாயுதம்'' எனக் கூறினார். 1903 இறுதியில் ட்ரொஸ்கி ஒரு தீவிர மென்ஷிவிக்காக மாறிவிட்டான்.
அதாவது, இஸ்க்ராவாதிகளிடமிருந்து ''பொருளாதாரவாதி''களிடம் போய்ச் சேர்ந்து விட்டான். ''பழைய இஸ்க்ராவாதிகளுக்கும் புதிய இஸ்க்ராவாதிகளுக்கும்
இடையில் ஒரு வேறுபாடு'' உண்டு என அவன் கூறினான். 1904-05ல் அவன் மென்ஷிவிக்குகளை விட்டு நீங்கி,
ஒருகால்
(பொருளாதாரவாதி) மார்டினோவுடன் ஒத்துழைப்பதும், மறுகால் தன்னுடைய கடைகோடி இடதுசாரி ''இடையீடற்ற புரட்சி'' என்ற தத்துவத்தை பிரகடனம் செய்வதுமாக ஊசலாடத் தொடங்கினான். 1906-07ல் போல்ஷிவிக்குகளை அணுகினான். 1907
வசந்த காலத்தில்தான்
ரோஸா லக்ஸம்பர்க்குடன் உடன்பாடு உடையவன் எனப் பிரகடனம் செய்தான்.
''ஒரு நீண்ட கால 'கோஷ்டியில்லா' ஊசலாட்டத்தின் பின், சீர்குலைவுக் காலகட்டத்தில், அவன் மீண்டும் வலது பக்கம் சென்றான். 1912ல் விலக்குவாதிகளின் கூட்டணியைச் சேர்ந்தான். பின்னர்
சாராம்சத்தில் அவர்களுடைய அற்ப கருத்துக்களை உச்சரித்த போதிலும்,
அவர்களை விட்டு
மீண்டும் பிரிந்தான்.
''ரஷ்யாவில் வெகுஜன தொழிலாளர் இயக்கம் வெளிப்படாது
மறைந்திருந்த காலத்தில், ஒவ்வொரு கூட்டத்திற்கும், நபர்களுக்கும், ஒரு கருத்தோட்டமாக, குழுவாக அல்லது கோஷ்டியாக, சுருக்கமாகச் சொன்னால், இன்னொரு கூட்டத்துடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தும்
ஒரு ''சக்தி''யாக நடிப்பதற்கு ''போதிய வசதி'' இருந்த காலத்தில், வரலாற்று உருவாக்கங்களின் அழிவு இத்தகைய குணாம்சங்களைத்தான்
பெற்றிருந்தது.
..1908 முதல் விலக்குவாதம் பற்றிய நமது மனோபாவத்தை வரையறுத்துக் கூறி, ஸ்தாபித்த
நமது கட்சி தீர்மானங்களையோ அல்லது, முற்கூறிய
தீர்மானங்களை பூரணமாக அங்கீகரிக்கும் அடிப்படையில் பெரும்பான்மையின் ஐக்கியத்தை
உண்மையில் உருவாக்கிய இன்றைய கால ரஷ்ய தொழிலாளர் இயக்கத்தின் அனுபவத்தையோ
ஏற்றுக்கொள்ள முற்றாக மறுக்கும்; அதே வேளையில், நம்பத்தகாத
போலி வேஷமணிந்த நபர்கள் தம் முன்வரும்போது, தொழிலாளர்களின்
இளம்சந்ததி, தாம் யாருடன் பழகு கின்றனர் என்பதை பூரணமாகத் தெரிந்து
கொள்ள வேண்டும்.''
இன்று ஒரு நாட்டில் சோஷலிஸத்தை நிர்மாணிக்க முடியுமா இல்லையா என்பது
விவாதத்துக்கு உரிய ஒரு பிரச்சினையல்ல. இது ரஷ்யாவில் போல்ஷிவிக்குகளால்
செய்யப்பட்டுவிட்டது. வரலாறும் அதன் தீர்ப்பைப் பதிவு செய்து,
அங்கீகரித்து விட்டது.
ட்ரொட்ஸ்கியவாதிகள் தலையாலே துரும்பெடுத்த போதிலும், சோவியத் யூனியனில் - முதலாளித்துவ,
ஏகாதிபத்திய நாடுகளால்
சூழப்பட்ட ஒரு நாட்டில் - சோஷலிஸம் அமைக்கப்பட்டது என்ற உண்மையைப் புரட்ட
முடியாது. இன்று இந்த தகராறு செத்து, புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து விட்டது. ஆனால்,
1930ம் ஆண்டுகளில் இப்
பிரச்சினை காரசாரமாக விவாதிக்கப்பட்ட காலத்தில், தனி ஒரு நாட்டில் சோஷலிஸத்தை நிர்மாணிக்க முடியுமா என்று
உண்மையான புரட்சிவாதிகள் பலர் கூட சந்தேகித்தார்கள். ஆனால்,
குறுகிய காலம் சென்ற
பின், ட்ரொட்ஸ்கியவாதம்
தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் காணும் ஒரு தவறான சித்தாந்தம் என்பது போய்,
அது எதிர்ப்
புரட்சியின் ஒரு ஏஜண்டாக மாறியது. ட்ரொட்ஸ்கியவாதம் என்ற இந்த எதிர்ப் புரட்சித்
தத்துவத்துக்கு எதிராகத்தான் ஸ்டாலினதும், போல்ஷிவிக் கட்சியினதும் தலைமையில்,
உண்மையான மார்க்ஸிஸம்
- லெனினிஸவாதிகள், புரட்சிவாதிகள் அனைவரும் இரண்டாவது உலக யுத்தத்துக்கு முந்திய காலத்தில்
மாபெரும் சித்தாந்தப் போர் ஒன்றை நடத்தினார்கள். இவ்வாறு இது சர்வதேசிய கம்யூனிஸ
இயக்கத்தில் நிகழ்ந்த மகத்தான இரண்டாவது வாதப்பிரதிவாதமாக திகழ்கிறது. இது
இலங்கையில்கூட எதிரொலித்தது; லங்கா சமசமாஜக் கட்சியில் முதல் பிளவை உண்டாக்கி,
இலங்கை கம்யூனிஸ்ட்
கட்சி தோன்றுவதற்கு வழிகோலியது.
விளக்கம்:
1. இரண்டாம் கம்யூனிச அகிலத்தை உருவாக்கிய எங்கெல்சின் காலத்தில் அகிலமானது
புரட்சிகரமான அகிலமாக இருந்தது. எங்கெல்சுக்குப் பின்பு திருத்தல்வாத காவுத்ஸ்கி
தலைமையில் இரண்டாம் அகிலம் பிற்போக்கு அகிலமாக மாறிவிட்டது. அந்த பிற்போக்கு
அகிலத்தை கலைத்துவிட்டு லெனின் தலைமையிலான மூன்றாவது அகிலம் புரட்சிகரமான அகிலமாக
செயல்பட்டது. மாவோ காலத்திற்குப் பின்பு தற்போது மூன்றாவது அகிலத்தில் செயல்பட்ட
கட்சிகள் புரட்சியை கைவிட்டுவிட்டு பிற்போக்கு திருத்தல்வாதம் மற்றும்
கலைப்புவாதக் கட்சிகளாக மாறிவிட்டன. அதன் விளைவாகத்தான் ரஷ்யா மற்றும் சீனாவில்
நடந்தது போன்ற தொழிலாளர்களின் புரட்சிகள் எங்கும் நடைபெறவில்லை. வியாட்நாம் போன்ற
நாடுகளில் நடந்த புரட்சிகளும் நீடிக்கவில்லை. ஆகவே சர்வதேச பொதுவுடமை கட்சிகளுள்
உள்ள திருத்தல்வாதம் போன்ற அந்நிய வர்க்க சிந்தனைமுறையை ஒழிக்க வேண்டிய கடமை
தற்போதைய புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் கடமையாக உள்ளது.
2. சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் மாவோவின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிதான்
முதன்முதலாக சகோதரக் கட்சியான ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்து சர்வதே
கம்யூனிஸ்டுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியதாக திருத்தல்வாதிகள்
புலம்புகிறார்கள். அது உண்மை அல்ல. மாவோவுக்கு முன்பே மார்க்ஸ் காலத்திலும்
உட்கட்சிப் போராட்டம் நடந்தது, லெனின்
காலத்திலும் இரண்டாம் அகிலத் தலைவர்களை லெனின் விமர்சித்தார். ஸ்டாலின் காலத்தில்
டிராட்ஸ்கியை எதிர்த்து ஸ்டாலின் போராடினார். மாவோவின் மாபெரும் விவாதமானது
குருஷேவின் திருத்தல்வாதத்தை எதிர்த்து நடந்தது மூன்றாவது
விமர்சனப்பூர்வமான
விவாதம் ஆகும். இந்த விவாதத்தின் காரணமாக பிளவு ஏற்பட்டிருக்கலாம். பிளவுகள்
கூடாது என்பதற்காக துரோகக் கொள்கையோடு சமரசம் செய்துகொள்வது மிகவும்
ஆபத்தானதாகும். சரியான கொள்கைக்காக நாம் விடாப்பிடியாக போராடினால் மட்டுமே சரியான
கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராட
முடியும்.
3. இரண்டாவது அகிலத்தில் இருந்த பல கட்சிகள் முதல் உலகயுத்தம் தொடங்கினால்
ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்டுகளும் தத்தமது நாட்டிலுள்ள ஆட்சிகளுக்கு எதிராகப்
புரட்சி செய்து பாட்டாளிகளின் அரசை உருவாக்க வேண்டும் என்ற அகிலத்தின் தீர்மானத்தை
ஏற்றுக்கொண்டனர். ஆனால் யுத்தம் துவங்கியவுடன் ரஷ்ய போல்ஷ்விக் கட்சியைத்தவிர
அனைத்து கட்சிகளும் அகிலத்தின் தீர்மானத்துக்கு எதிராக சொந்தநாட்டு முதலாளிவர்க்க
அரசை ஆதரித்தனர். இப்படித்தான் இரண்டாம் அகிலத்தின் காலத்தில் திருத்தல்வாதம்
உருவாகியது.
4. காவுத்ஸ்கி,
பெர்ன்ஸ்டைன் போன்ற
திருத்தல்வாதிகளால் முன்வைக்கப்பட்ட அதே திருத்தல்வாதக் கொள்கைகளையே குருஷேவ்
போன்ற திருத்தல்வாதியும் தற்காலத்திலுள்ள இந்திய இடதுசாரிகள் உட்பட பல நாட்டு
திருத்தல்வாதிகளும் முன்வைக்கிறார்கள். சர்வதேச பொதுவுடமை வரலாற்றில் இன்றைய
திருத்தல்வாதிகள் அன்றைய திருத்தல்வாதிகளுக்கு மாற்றான புதிய வகையான
திருத்தல்வாதிகள் அல்ல. இவர்கள் பின்பற்றுவது பழைய திருத்தல்வாதிகளின் கொள்கைகளே
ஆகும்.
5. ரஷ்யாவில் லெனின் நடத்திய திருத்தல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தின்
விளைவாகவே ரஷ்யப் புரட்சியில் கம்யூனிஸ்டுகள் வெற்றிபெற்றார்கள். ஆனால்
இந்தியாவில் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் நடத்தப்படவில்லை, அதனால்
திருத்தல்வாதம் முறியடிக்கப்படாமல் நீடிப்பதன் காரணமாகவே இங்கு புரட்சி
நடக்கவில்லை.
6. உலகில் பொருளாதாரம் மற்றும் அரசியல் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. அதன் காரணமாக உலகில் புரட்சியிலும் ஏற்றத்தாழ்வே உள்ளது. ஆகவே புரட்சியானது உலகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் நடக்காது என்றார் லெனின். மேலும் ஏகாதிபத்தியம் பலவீனமாக இருக்கும் ஒரு நாட்டில்கூட புரட்சி நடக்கும் என்றும் முதலாளித்துவ வளர்ச்சியில்லாத நாட்டில்கூட புரட்சி நடக்கும் என்றும் அதற்கு முதன்மையாகத் தேவைப்படுவது மார்க்சியத்தை ஆயுதமாகக்கொண்ட புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகரமான மக்கள்திரள் அமைப்புகளும் வேண்டும் என்றார் லெனின். இந்த லெனினது வழிகாட்டுதலை பின்பற்ற தவறியவர்கள்தான் இந்திய இடதுசாரிகள். லெனினது வழிகாட்டுதலை பின்பற்றித்தான் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி சாதித்தது.
7. புரட்சியில் வெற்றிபெற்ற பாட்டாளி வர்க்கம் முதலில் பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல்செய்து பொதுவுடமையாக்கவேண்டும். தனது நாட்டின் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதோடு பிறநாடுகளில் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதோடு அங்குள்ள கம்யூனிஸ்டுகளை புரட்சியாளர்களாக மாற்றுவதற்கு உதவ வேண்டும் என்றார் லெனின். லெனினது இந்தக் கொள்கையை ஜோசப்ஸ்டாலின் பின்பற்றி பலம்வாய்ந்த ரஷ்யாவை உருவாக்கியதோடு லிபியா போன்ற நாடுகளில் நடந்த தேசவிடுதலைப் போராட்டங்களுக்கு உதவி செய்தார்.
8. வரலாறு எப்போதும் நாம் விரும்பும் திசையில் செல்லாது. ஆனாலும் புறநிலை எதார்த்தங்களைப் புரிந்துகொண்டு போராடுவதன் மூலமே நாம் விரும்புவதை அடையமுடியும் என்றே மார்க்சியம் போதிக்கிறது. நாம் விரும்பும் வகையில் சமூக மாற்றம் ஏற்படாது என்பதற்காக நாம் கைகட்டி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கக் கூடாது மாறாக சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்ற போராடியே தீரவேண்டும்.
9. கம்யூனிஸ்டுகள் எப்போதுமே உழைக்கும் தொழிலாளி, விவசாயி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மீது நம்பிக்கை வைத்து செயல்படவேண்டும். மாறாக முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் மீது இந்திய இடதுசாரிகள் போல் செயல்பட்டால் நாம் சுடுகாட்டுக்குத்தான் போகமுடியும்.
10. டிராட்ஸ்கி எப்போதுமே லெனினை எதிர்த்துவந்தவன்தான். எனினும் கம்யூனிஸ்டுகளை ஏமாற்ற டிராட்ஸ்கியும் அவனது ஆதரவாளர்களும் லெனினை ஆதரிப்பதாக இன்றையவரை பொய்சொல்லி வருகிறார்கள். தற்போதும் டிராட்ஸ்கியவாதிகள் லெனினது கொள்கையான தனிநாட்டில் புரட்சி சாத்தியம் என்ற கொள்கையை வெளிப்படையாகவே எதிர்த்தும் உலகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் புரட்சி நடத்த வேண்டும் என்ற டிராட்ஸ்கிய எதிர்ப்புரட்சிகர கொள்கையையே பிரச்சாரம் செய்வதை நாம் பார்க்கலாம்.
11. டிராட்ஸகி எப்போதும் ஒரு நிலையில் இல்லாமல் பச்சோந்திபோல் அடிக்கடி நிறம்மாறும் சந்தர்ப்பவாதியாகவே இருந்தான். அவனைப் போலவே இன்றைய டிராட்ஸ்கியவாதிகள் இங்கு ஒருபக்கம் சோசலிசம் பேசிக்கொண்டே மறுபக்கம் அடையாள அரசியலில் ஈடுபடுவதை நாம் காணலாம். முதலாளித்துவ பிற்போக்கு கட்சிகளையும் வெளிப்படையாக இவர்கள் ஆதரிப்பதையும் நாம் காணலாம்.
12. டிராட்ஸகி தன்னை கோஷ்டிவாதி இல்லை என்று சொல்லிக்கொண்டே கோஷ்டிவாதத்தில் ஈடுபட்டு போல்ஷ்விக் கட்சியை பிளவுபடுத்த முயற்சித்தான்.
13. டிராட்ஸ்கியவாதிகள் ஒருநாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்றார்கள். டிராட்ஸ்கியவாதிகளின் இந்த எதிர்ப்புரட்சிகரமான கொள்கையை எதிர்த்து ஸ்டாலின் போராடி டிராட்ஸகியின் கொள்கையை முறியடித்தார். ஸ்டாலினால் நடத்தப்பட்ட இந்த விவாதம் மற்றும் சித்தாந்தப் போராட்டம்தான் லெனினுக்குப் பிறகு நடந்த இரண்டாவது விவாதம் ஆகும்.
இலங்கை கம்யூனிச இயக்கத்தின் முன்னோடியான தோழர் நா. சண்முகதாசன் அவர்களின் "மாவோவின் சிந்தனைகள்" நூலின் இப்பகுதி,
அதற்குத் சர்வதேச
கம்யூனிச இயக்கத்தின் சித்தாந்த வரலாற்றை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக்
காட்டுகின்றன. மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளிலிருந்து சற்றும் விலகாமல்,
இந்த உரையாடலையும்
விளக்கங்களையும் மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்தோடு (Marxist
Scientific Methodology) விரிவாகக்
கீழே ஆராய்வோம்.
1. உட்சார்பு முரண்பாடும் சித்தாந்தப் போராட்டமும் (Dialectical Materialism & Two-Line Struggle)
"அழிவு இல்லாவிட்டால் ஆக்கமும் இல்லை... பழைய ஐக்கியம் தவிடுபொடியாகிக்கிடக்கின்றது. ஆனால்... மேலும் புதிய, மேலும் மகத்தான, மேலும் உயர்ந்த புரட்சிகர ஐக்கியம் ஒன்று சர்வதேசியரீதியில் உருவாக்கப்படுவது நிச்சயம்."
மார்க்சியக் கோட்பாட்டுப் பொருத்தம்: இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் (Dialectical
Materialism) மிக முக்கிய விதி "முரண்பாடுகளின் ஒற்றுமையும் போராட்டமும்" (Unity
and Struggle of Opposites) ஆகும். கம்யூனிஸ்ட் கட்சி என்பது ஏதோ வர்க்கங்களுக்கு
அப்பாற்பட்ட, முரண்பாடுகளே இல்லாத ஒரு புனிதக் களம் அல்ல. சமூகத்தில் நிலவும் வர்க்கப்
போராட்டத்தின் பிரதிபலிப்புதான் கட்சிக்குள்ளும் 'இரு-வழிப் போராட்டமாக' (Two-Line
Struggle) வெடிக்கிறது.
- பழைய ஐக்கியத்தின் அழிவு: மார்க்சிய இயக்கவியலின்படி,
ஒரு பழைய நிலைமை
அழியும்போதுதான் (Negation), அதைவிட உயர்ந்த ஒரு புதிய நிலைமை தோன்றும் (Negation
of the Negation).
- இரண்டாவது அகிலத்தின் உளுத்துப்போன போலி ஐக்கியத்தை லெனின்
உடைத்தெறிந்ததால்தான், அக்டோபர் புரட்சியை
வழிநடத்திய வீரியமிக்க மூன்றாவது அகிலம் (Comintern) பிறந்தது.
- மாவோவும் இதனையே சுட்டிக்காட்டுகிறார்: "ஒன்றாக இருந்தது இரண்டாகப்
பிரிகிறது" (One divides into
two). திருத்தல்வாதத்தோடு சமரசம் செய்துகொண்டு போலி
ஐக்கியத்தைக் காப்பதை விட, கொள்கைக்காகப் பிரிந்து
நின்று பாட்டாளி வர்க்கப் புரட்சிகர ஐக்கியத்தைக் கட்டுவதே உண்மையான
மார்க்சியம்.
2. திருத்தல்வாதத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி (The Roots of Revisionism) "காவுட்ஸ்கி, பெர்ன்ஸ்டைன் போன்ற அசல் சந்தர்ப்பவாதிகள்... பாராளுமன்றப் பாதை மூலம் சோஷலிஸத்துக்குச் செல்லும் சமாதான மாற்றம் பற்றி உபதேசம் செய்து வந்தார்கள்... குருசேவிலிருந்து கெனமன் வரையுள்ள இன்றைய திரிபுவாதிகள் ஆரம்பத்தில் காவுட்ஸ்கி, பெர்ன்ஸ்டைன் இருவராலும் முன்வைக்கப்பட்ட தத்துவங்களையே கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கிறார்கள்."
மார்க்சியக் கோட்பாட்டுப் பொருத்தம்: மார்க்சியத்தின் புரட்சிகரச் சாரமான "அரசு பற்றிய கோட்பாடு" (Theory
of the State) மற்றும் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" (Dictatorship
of the Proletariat) ஆகியவற்றைச் சிதைப்பதே திருத்தல்வாதத்தின் (Revisionism)
வேலையாகும்.
- அரசு என்பது வர்க்க ஒடுக்குமுறைக்கான கருவி: பெர்ன்ஸ்டைன்,
காவுத்ஸ்கி போன்ற
பழைய திருத்தல்வாதிகளும், குருஷேவ் (மாஸ்கோ
திருத்தல்வாதம்) போன்ற நவீன திருத்தல்வாதிகளும்,
இன்றைய இந்திய
நாடாளுமன்றவாத இடதுசாரிகளும் 'அரசு'
என்பதை ஒரு
நடுநிலையான அமைப்பாகக் காட்ட முயல்கின்றனர்.
- பாராளுமன்றப் போலிமை: ஆயுதப் புரட்சி மற்றும்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் தவிர்த்துவிட்டு,
முதலாளித்துவ
நாடாளுமன்றத் தேர்தல்கள் மூலமாகவே அமைதி வழியில் சோசலிசத்தைக்
கொண்டுவந்துவிடலாம் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.
- லெனின் தனது "அரசும் புரட்சியும்" நூலில் விளக்கியது போல,
முதலாளித்துவ
வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியான பழைய அரசு இயந்திரத்தை பாட்டாளி வர்க்கம்
'தகர்க்க வேண்டுமே' ஒழிய,
அதைத் தேர்தல்
மூலம் கைப்பற்றி அப்படியே பயன்படுத்த முடியாது. நவீன திருத்தல்வாதிகள் பழைய
நஞ்சைப் புதிய பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள் என்பதைச் சண்முகதாசன் மிகச்
சரியாக அம்பலப்படுத்துகிறார்.
3. அசமத்துவ வளர்ச்சி விதியும் தனிநாட்டில் சோசலிசமும் (Law of Unequal Development & Socialism in One Country)
"அசமத்துவ பொருளாதார, அரசியல் வளர்ச்சி என்பது முதலாளித்துவத்தின் மாறா விதியாகும். ஆக, சோஷலிஸம் முதலில் ஒரு சில முதலாளித்துவ அல்லது முதலாளித்துவம் வளராத நாடுகளில் அல்லது தனி ஒரு நாட்டில் வெற்றிபெறுவது சாத்தியம்..." - லெனின்
மார்க்சியக் கோட்பாட்டுப் பொருத்தம்: இது லெனினியம் வழங்கிய மிக முக்கியமான கோட்பாட்டுப்
பங்களிப்பாகும்.
- மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வாழ்ந்த காலகட்டத்தில் முதலாளித்துவம்
உலகளாவிய அளவில் சுதந்திரப் போட்டித் தன்மையோடு வளர்ந்து கொண்டிருந்ததால்,
உலகப் புரட்சி
ஒரே நேரத்தில் அனைத்து முன்னேறிய நாடுகளிலும் வெடிக்க வேண்டும் என்று
கருதப்பட்டது.
- ஆனால், லெனின் முதலாளித்துவத்தின் அடுத்த கட்டமான ஏகாதிபத்தியத்தை (Imperialism
- The Highest Stage of Capitalism) ஆய்வு செய்தபோது,
ஏகாதிபத்திய
நாடுகளுக்கிடையேயான பொருளாதார, அரசியல் வளர்ச்சி சமமற்று (Unequal
and Spasmodic) இருப்பதைக்கண்டறிந்தார்.
- இதன் விளைவாக, ஏகாதிபத்தியச் சங்கிலியின் மிக வாலாயமான,
பலவீனமான
கண்ணியில் (Weakest Link) புரட்சியை நிகழ்த்தி, தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை
நிறுவ முடியும் என்ற தத்துவத்தை லெனின் முன்வைத்தார். ஸ்டாலின் இந்த
லெனினியக் கோட்பாட்டைத் துணிச்சலோடு நடைமுறைப்படுத்தி,
ஏகாதிபத்தியச்
சூழ்நிலைகைக்கும் (Capitalist
Encirclement) உள்நாட்டுப் பிற்போக்காளர்களின் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியிலும்
சோவியத் யூனியனைப் பலம் வாய்ந்த சோசலிச நாடாகக் கட்டியெழுப்பிக் காட்டினார்.
- டிராட்ஸ்கியவாதத்தின் எதிர்ப்புரட்சித் தன்மை (Trotskyism
as an Anti-Marxist Trend) "நம்பிக்கை இல்லாத, சிறப்பாக அன்றைய ரஷிய
ஜனத்தொகையில் ஏகப் பெரும்பான்மையினராக விளங்கிய விவசாயிகள் மீது
நம்பிக்கையில்லாத டிராட்ஸ்கி... ஒரு நாட்டில் சோஷலிஸத்தை நிர்மாணிப்பது
அசாத்தியம் என்றும் கூறினான்."
மார்க்சியக் கோட்பாட்டுப் பொருத்தம்:*
டிராட்ஸ்கியின் "இடையீடற்ற புரட்சி" (Permanent
Revolution) என்ற தத்துவம் மார்க்சிய-லெனினியத்தின் வர்க்கக் கூட்டணிக்
கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது.
- விவசாயிகள் பற்றிய தவறான பார்வை: லெனினியத்தின் அடித்தளமே "பாட்டாளி வர்க்க -
விவசாயிகளின் புரட்சிகரக் கூட்டணி" (Worker-Peasant
Alliance) ஆகும். ரஷ்யா போன்ற விவசாயப் பெரும்பான்மை நாட்டில்,
விவசாயிகளைப்
புரட்சியின் துணைக் சக்தியாக ஏற்க மறுத்த டிராட்ஸ்கியின் வறட்டுவாதம்,
நடைமுறையில்
புரட்சியைத் தற்கொலைப்பாதைக்கு இட்டுச் செல்வதாகும்.
- உலகப் புரட்சி என்ற போலி முழக்கம்: ஐரோப்பாவில் புரட்சி
வெடித்தால் ஒழிய ரஷ்யப் புரட்சியைக் காப்பாற்ற முடியாது என்ற டிராட்ஸ்கியின்
வாதம், பாட்டாளி வர்க்கத்தின் சொந்த ஆற்றல் மீதான
அவநம்பிக்கையிலிருந்து பிறந்தது. சண்முகதாசன் குறிப்புகளின்படி,
டிராட்ஸ்கி ஒரு
சித்தாந்த நிலைப்பாடின்றி "டஷினோ துரோகி" போல (நிறம்மாறும்
பச்சோந்தி) வெவ்வேறு கோஷ்டிகளுக்குத் தாவியவர் என்பதை வரலாறு
நிரூபித்துள்ளது. பின்னாட்களில் டிராட்ஸ்கியவாதம் என்பது சோசலிசக்
கட்டுமானத்தைச் சிதைக்கும் ஏகாதிபத்தியத்தின் சித்தாந்தக் கருவியாக (Agent
of Counter-revolution) மாறியது.
5. சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் 3 மாபெரும் விவாதங்கள் நூலையும் விளக்கத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது, சர்வதேச கம்யூனிச இயக்கம் அதன் தூய்மையைக் காக்க நடத்திய மூன்று பெரும் சித்தாந்தப் போர்கள் தெளிவாகின்றன: | முதல் விவாதம் | லெனின் | காவுத்ஸ்கி, பெர்ன்ஸ்டைன் (இரண்டாம் அகிலத்தின் திருத்தல்வாதம்) | அரசு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், ஆயுதப் புரட்சியை மீட்டெடுத்தல். | | இரண்டாம் விவாதம் | ஸ்டாலின் | டிராட்ஸ்கி, புகாரின், ஜினோவியேவ் (சந்தர்ப்பவாதம்)
| தனி ஒரு நாட்டில் சோசலிசக் கட்டுமானம், விவசாயிகளுடனான கூட்டணி. | | மூன்றாவது விவாதம் | மாவோ சேதுங் | குருஷேவ் (நவீன திருத்தல்வாதம்)
| சோசலிச சமூகத்திலும் வர்க்கப் போராட்டம் நீடிக்கிறது; பாட்டாளி வர்க்கப் பண்பாட்டுப் புரட்சி. |
6. இந்திய/இலங்கைப் புரட்சிச் சூழலுக்கான பாடம்
இந்த கட்டுரை ஆசிரியர் தனது விளக்கத்தில் (குறிப்புகள் 5,
6, 9, 11) மிகச் சரியாகக்
குறிப்பிட்டுள்ளது போல, இந்திய-இலங்கைக் கம்யூனிச இயக்கங்கள் ஏன் இன்னும் தேக்க
நிலையில் உள்ளன என்பதற்கான விடை இதில்தான் அடங்கியுள்ளது:
- வழிகாட்டும் தத்துவத்தின் பற்றாக்குறை: மார்க்சிய-லெனினிய-மாவோ
சிந்தனையை நமது மண்ணின் எதார்த்தத்திற்கு ஏற்ப (Concrete
analysis of concrete conditions) ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தத் தவறியது.
- திருத்தல்வாதப் பாதை: இந்திய நாடாளுமன்ற
இடதுசாரிகள் (CPI, CPI(M)) காவுத்ஸ்கி மற்றும்
குருஷேவின் அதே பழைய "நாடாளுமன்றப் பாதையை" தேர்ந்தெடுத்து,
வர்க்கப்
போராட்டத்தைக் கைவிட்டதால், அவர்கள் இன்று முதலாளித்துவக்
கட்சிகளின் வால்பிடிகளாகச் சீரழிந்து நிற்கிறார்கள்.
- அடையாள அரசியல் மற்றும் டிராட்ஸ்கியவாதம்: வர்க்கப் போராட்டத்திற்குப் மாற்றாகப் போலி இடதுசாரிகளும், டிராட்ஸ்கியவாதிகளும் "அடையாள அரசியலில்" (Identity Politics) மூழ்கி, உழைக்கும் வர்க்கத்தைப் பிளவுபடுத்தி, முதலாளித்துவத்திற்குச் சேவை செய்கிறார்கள். முடிவுரை: தோழர் சண்முகதாசனின் இந்த உரை, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுக்கிறது: "துரோகக் கொள்கையோடு சமரசம் செய்வதை விட, சரியான கொள்கைக்காகப் பிளவுபடுவது புரட்சிக்கு நல்லது." மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் அடிப்படையில், நவீன திருத்தல்வாதத்திற்கும் டிராட்ஸ்கியவாதத்திற்கும் எதிராக சமரசமற்ற சித்தாந்தப் போராட்டத்தை (Ideological Struggle) முன்னெடுப்பதன் மூலமே, தொழிலாளர்கள்-விவசாயிகள் தலைமையிலான உண்மையான புரட்சிகரக் கட்சியைக் கட்டி எழுப்பி, மக்கள் விடுதலையைச் சாத்தியமாக்க முடியும்
- (தேன்மொழி)
.
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக