இந்த ஆதாரங்கள் இந்தியாவில் நிலவிய பழைய குலக்கல்வி முறை மற்றும் தற்போதைய நவீன குலக்கல்வி முறை ஆகியவற்றின் அரசியல் மற்றும்
நவீன குலக்கல்வி முறையை எதிர்த்துப் போராடுவோம்.
இந்தியாவில் மன்னர்களின் ஆட்சி காலத்தில் இங்கு சாதிதான் ஆதிக்கத்தில் இருந்தது. ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களும் அவர்களது சாதிக்கென ஒதுக்கப்பட்ட குலத்தொழிலைத்தான் செய்யவேண்டும் என்று மன்னராட்சியால் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆகவே இந்தியாவிலுள்ள மக்கள் குலத்தொழிலியே ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு குலத்தை அதாவது சாதியை அடிப்படையாகக் கொண்டே கல்வி கற்றுகொடுக்கப்பட்டது. அந்த கல்வி முறையை குலக்கல்விமுறை என்பார்கள். அதாவது அன்றைய குலக்கல்விமுறைக்கு சாதியே அடிப்படையாகும்.
குலத்தொழில் முறையும், குலக்கல்வி முறையும் தொடர்ந்து இந்தியாவில் நீடிக்கவில்லை. அந்நியர்களான ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இங்கு அட்சிமுறையிலான வடிவம் மாறிவிட்டது. போலீஸ், இராணுவம், அரசு அதிகாரிகளைக்கொண்ட நிர்வாக அமைப்புகள் தோன்றிவிட்டது.
வரலாற்று வளர்ச்சியின் காரணமாக பிரிட்டீஷார் இந்தியாவை ஆளவேண்டுமானால் அவர்களது நாட்டைச் சேர்ந்தவர்களைக்கொண்டே அதாவது பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்தவர்களைக்கொண்டு (படைவீரர்கள் உட்பட அரசு அதிகாரிகளாக்கொண்டு) இந்த நாட்டை ஆளமுடியாது என்பதை உணர்ந்து உடலால் இந்தியனாகவும் சிந்தனையால் ஆங்கிலேயனாகவும் உள்ள மனிதர்களை இங்கு உருவாக்கி அவர்களின் துணையோடு இந்தியாவை ஆளவேண்டும் என்று ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் திட்டமிட்டனர். ஆகவே அதுவரை இங்கு நிலவிய சாதி அடிப்படையிலான தொழில்முறையை தளர்த்தி ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்யக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அந்த சேவையை செய்யத்தயாராக உள்ளவர்களை அந்தத் தொழில்களில் ஈடுபடலாம் என்ற கொள்கையை ஆங்கிலேயர்கள் செயல்படுத்தியதால் குலத்தொழில்முறை அழியத்துவங்கியது. எனினும் இந்த சாதி அமைப்பு தகர்ந்துவிட்டால் ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய மக்கள் ஒன்றுபட்டு போராடவிடாமல் தடுப்பதற்கு இந்திய மக்கள் ஒவ்வொருவரும் சாதியை சட்டப்பூர்வமாக அடையாளப்படுத்திக்கொள்ளள சட்டமியற்றி மக்களை சாதியடைப்படையில் ஆங்கிலேயர்கள் பிரித்துவைத்தார்கள்.மேலும் ஆங்கிலேயர்கள் காலத்தில் குலக்கல்விமுறை சிறிது சிறிதாக மறையத்தொடங்கியது. ஆங்கிலேயருக்கு சேவைசெய்ய விரும்பும் எந்த சாதியைச் சேர்ந்தவர்களும் எந்தக் கல்வியையும் கற்கலாம் என்ற நிலையை ஆங்கிலேயர்கள் அவர்களின் சுரண்டல் மற்றும் ஆதிக்கத் தேவைக்காக உருவாக்கினார்கள். ஆளும் வர்க்கங்களின் பொருளாதார அரசியல் தேவைகளை நிறைவுசெய்வதற்காகவே ஆளும் வர்க்கங்கள் கல்வி கொள்கை வகுத்து செயல்படுவார்கள். அதன் காரணமாகவே ஆங்கிலேயர்களின் இந்த நடவடிக்கை அமைந்தது. இதனை புரியாத சிலர் ஆங்கிலேயர்களுக்கு இந்த நாட்டு மக்கள் மீது பாசம் இருந்ததாக தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் நகரங்களில் ஆங்கிலேயரின் ஆட்சி செல்வாக்கின் காரணமாக நகரங்களில் குலக்கல்விமுறை தளர்ந்துவிட்டது. ஆனாலும் கிராமங்களில் ஜமிந்தார்களின் ஆட்சி தொடர்ந்ததால் கிராமங்களில் பழமைவாத குலத்தொழிலும் குலக்கல்வியும் நீடித்தது. தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக இங்கு குலத்தொழில் மற்றும் குலக்கல்விக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆகவே இங்கே சாதி அடிப்படையிலான குலக்கல்வியின் பாதிப்பு அதிகமாக இல்லை.
இருந்தபோதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜாஜியின் ஆட்சியின் போது ராஜாஜி குலக்கல்விமுறையை இங்கு கொண்டுவர முயற்சிக்கும் போது தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பை ராஜாஜியின் அரசு சந்தித்து அந்தக் கொள்கை கைவிடப்பட்டது. அதேபோலவே பக்தவச்சலம் ஆட்சியில் இந்தி மொழித் திணிப்பை காங்கிரஸ் அரசு செய்தபோது அதற்கும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் பக்தவச்சல அரசு பின்வாங்கியது மட்டுமல்லாமல் 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அதன் ஆட்சியையும் இழந்தது. அப்பொழுதெல்லாம் கல்வித்துறையில் குலக்கல்வியையோ இந்தி திணிப்பையோ செய்யமுடியாத இந்திய ஆளும் வர்கமானது கல்வித்துறையில் எவ்வளவு கடுமையான கொடுமைகளை தற்போது செய்துகொண்டு இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வியையே ராஜீவ் காந்தி புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கொண்டுவந்தார் என்ற விமர்சனம் இங்கு உண்டு. ராஜீவ் மற்றும் இந்திரா காந்தியின் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கல்வியை தனியார்மயமாக்கும் கொள்கைக்கு வித்திடப்பட்டது. அதன் அடிப்படையில் தமில்நாட்டிலும் ஏராளமான தனியார் ஆங்கிலப் பள்ளிகள் துவங்கப்பட்டது. அதுவரை மக்களுக்கு கல்வி கொடுப்பது அரசின் கடமை என்ற கொள்கை கைவிடப்பட்டது. தனியார் முதலாளிகள் லாபத்தை அடிப்படையாகக்கொண்டு இங்கே பள்ளிகளும் கல்லூரிகளையும் நடத்துவதைப் பார்க்கிறோம். அந்த லாபவெறியின் காரணமாக கும்பகோனத்தில் ஒரு தனியார் பள்ளி தீப்பிடித்து எறிந்து பல குழந்தைகள் செத்து மடிந்தனர். இந்தக் கொள்கையின் காரணமாக அரசானது அரசு நடத்தும் பல பள்ளிகளை இழுத்து மூடிவிட்டனர். அனைவரும் தனியார் பள்ளிகளிலேயே படிக்க வேண்டும் என்று அரசானது சிறித்சிறிதாக மக்களை கட்டாயப்படுத்திக்கொண்டு இருக்கின்றர். ஏழைகளிடம் பணம் இல்லாததால் அவர்களால் கல்வி கற்க முடியவில்லை. நடுத்தர மக்கள் தங்களிடமுள்ள சிறு உடமைகளையும் விற்றுவிட்டு சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். பணவசதி படைத்தவர்களால் மட்டுமே தற்போதுள்ள சூழலில் அவர்களது குழந்தைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்ப முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் அரசானது ஆளும் வர்க்கங்களின் பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே கல்விக் கொள்கையை வகுத்து செயல்படும். இந்தியாவில் மன்னராட்சியின் போது மன்னர்கள் நிலப்பிரபுத்துவ பொருளியல் அரசியல் அமைப்பை பாதுகாப்பதற்காக சாதி அடிப்படையிலான குலக்கல்வி முறையை செயல்படுத்தினார்கள். பிரிட்டீஷ் ஆட்சியின் போது பிரிட்டீஷாரின் கலாலனி ஆதிக்க பொருளாதார அரசியலை பாதுகாக்கும் வகையில் மெக்காலே கல்விமுறையை இங்கு அமுல்படுத்தினார்கள். இரண்டாம் உலகயுத்த முடிவில் பல நாடுகள் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடுகளாக மாறின. உதாரணமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விடுதலை பெற்று கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்ட கப்பற்படை எழுச்சியின் காரணமாகவும் படைவீர்ர்கள் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாலும் இனிமேல் இந்தியாவை இந்த படைவீரர்களைக்கொண்டு ஆளமுடியாது என்பதை உணர்ந்த பிரிட்டீஷார் அவர்களது நம்பிக்கைக்கு உரிய முதலாளிகளிடமும் அவர்களின் நலன்காக்கும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர். அதன் பின்பு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி இந்திய மக்கள் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துவிடக் கூடாது என்று கருதி கீன்சியப் பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட நேருவின் கலப்புப் பொருளாதாரக் கொள்கையை அதாவது இந்தியப் பெருமுதலாளிகள் மற்றும் அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் கூட்டை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தினார்கள். அப்போதுதான் அரசே மக்களுக்கு கல்வி வழங்குவது, வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது மருத்துவம் பார்ப்பது என்ற கொள்கை செயல்படுத்தப்பட்டது. இந்திய ஆளும் வர்க்கங்களின் அன்றைய தேவைக்கு ஏற்பவே இங்கே இலவசக் கல்விக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ஏகாதிபத்தியவாதிகள் ஏழை நாடுகளை நேரடியாக ஆளும் கொள்கையை கைவிட்டார்கள். அதற்கு மாறாக மறைமுகமாக ஒப்பந்தங்களைப் போட்டு ஆளும் முறையை தற்போது பின்பற்றுகிறார்கள். ஐஎம்எப், உலகவங்கி போன்ற நிதி நிறுவனங்களையும், ஐநா போன்ற அரசியல் நிறுவனங்களையும் நிறுவி ஏகாதிபத்தியவாதிகள் உலகை சமாதானமான முறையில் பங்குபோட்டு ஆளுகிறார்கள். எனினும் அவர்களுக்கு இடையில் பகை முரண்பாடும் நிலவுகிறது. அதன் வெளிப்பாடாகவே பல பகுதிச் சண்டைகள் நடக்கிறது. தற்போதும் ஈரானுக்கும் பாலஸ்தீனத்துக்கும் எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் சண்டையிடுவதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளின் அரசியல் மற்றும் பொருளியல் ஆதாயங்களே காரணமாக உள்ளது. இவ்வாறு இந்தியா போன்ற நாடுகளில் அந்நிய ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளின் கூட்டு ஆட்சியே நடந்துகொண்டு இருக்கிறது. இந்த முதலாளிகள் 1947 ஆம் இருந்ததற்கு மாறாக ஏராளமாக அவர்களது மூலதனத்தைப் பெருக்கியுள்ளார்கள். பெருக்கப்பட்ட இந்த மூலதனத்தைக்கொண்டு அனைத்து தொழில்களையும் இவர்களே நடத்தி ஏகபோகமாகமாக கொள்ளையடிக்க விரும்புகிறார்கள். ஆகவே இதற்கு முன்பு இவர்களின் மூலதன பலவீனத்தால் கனரக தொழில்களை நடத்துவதற்கு அரசு மூலதனத்தை நாடி கீன்சியப் பொருளாதாரத்தை செயல்படுத்திய இவர்கள் தற்போது அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குச் சொந்தமாக்க விரும்பி அரசு சொத்தை இவர்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் இவர்களின் கவனம் கல்வித்துறையிலும் திருப்பப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களை நடத்துவதன் மூலம் ஏராளமான கொள்ளை லாபம் அடைந்துகொண்டு இருக்கிறார்கள். தற்போது இந்தியா முழுவதிலுமுள்ள கல்வி நிலையங்களை சொந்தமாக்கிக்கொள்ள துடிக்கிறார்கள். அதன் முதல்படியாக மருத்துவக் கல்வியை ஏகபோகமாக்கிக்கொள்ள தனித்தனி மாநிலங்களில் மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை ஒழித்துவிட்டு இந்தியா முழுவதும் மாணவர்களின் சேர்க்கையை ஏகபோகமாக்கிக்கொள்வதற்காகவே நீட் தேர்வுமுறையை கொண்டுவந்துள்ளார்கள். இதில் முறைகேடுகளை நடத்தி பணம் உள்ளவர்கள் நீட் தேர்வுக்கான கேள்வித்தாளை பணம்கொடுத்து வாங்கி நீட் தேர்வு எழுதி மாணவனாகும் முறையை கொண்டுவந்துவிட்டார்கள். தற்போது மருத்துவ கல்வி மட்டுமல்ல அனைத்து கல்விகளும் பணம் உள்ளவர்களுக்கு கிடைக்கும் பணம் இல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுவிட்டது. மன்னர் ஆட்சியில் கீழ் சாதியினருக்கு உயர் கல்வி மறுக்கப்பட்டது அது சாதி அடிப்படையிலான குலக்கல்விமுறை. தற்போது நவீனகால மன்னராட்சியில் (பாராளுமன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் ஆட்சியில்) பணத்தின் அடிப்படையில் பணம் படைத்தவர்களுக்கும் மட்டும் கல்வி ஏழைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. இதைத்தான் நவீன குலக்கல்வி முறை என்கிறோம்.
இந்த நவீனக் குலக்கல்வி முறையை புரிந்துகொண்டு போராடாமல் இப்போதும் சாதி அடிப்படையிலான குலக்கல்வி முறையே நீடிக்கிறது என்று சொல்லி போராடுவது மக்களை ஏமாற்றி திசைதிருப்பும் போராட்டமே ஆகும். நேலும் நீட் தேர்வுமுறையை மட்டும் எதிர்த்துப் போராடுவதும், நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதை சுட்டிக்காட்டி அந்த அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டும் என்றும் போராடுவதும் உண்மையான மக்களின் போராட்டத்திலிருந்து திசைதிருப்பும் போராட்மே ஆகும். லாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ ஆட்சிமுறை நீடிக்கும்வரை முதலாளிகளின் பொருளாதார நலனுக்காக ஆட்சியாளர்கள் கல்வி வேலைவாய்ப்பு போன்ற பிரச்சனைகளில் மக்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு இந்த முதலாளித்துவ அரசுக்கு மாற்றாக உழைக்கும் மக்களின் அரசை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் ஏற்றுக்கொண்டு நவீன குலக்கல்வி முறைக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியது இக்காலத்தின் கட்டாயமாகும்.
விளக்கம்
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மற்றும் சமூக-பொருளாதார வர்க்கக் கட்டமைப்புகளின் அடிப்படையில், இங்கு குறிப்பிட்டுள்ள கருத்துக்களை மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆழமாகப் பகுப்பாய்வு செய்து விரிவாகக் கீழே விளக்கப்பட்டுள்ளது.
1. குலக்கல்வி முறையும் நிலப்பிரபுத்துவ உற்பத்தியுறவுகளும் (Feudal Mode of Production)
மார்க்சியக் கோட்பாட்டின்படி, ஒரு சமூகத்தின் பொருளாதார அடித்தளமே (Base) அதன் அரசியல், கலாச்சார மற்றும் கல்வி அமைப்புகளான மேல் கட்டுமானத்தை (Superstructure) தீர்மானிக்கிறது.
சாதியும் நிலப்பிரபுத்துவமும்: பண்டைய இந்தியாவில் மன்னராட்சி மற்றும் நிலப்பிரபுத்துவக் கால கட்டத்தில், சாதி அமைப்பு என்பது வெறும் சமூகப் பாகுபாடு மட்டுமல்ல; அதுவே அன்றைய உற்பத்தி உறவாக (Relations of Production) இருந்தது.
அன்றைய குலக்கல்வி: உழைக்கும் வர்க்கத்தினர் (சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள்) உற்பத்தியிலும், ஆளும் வர்க்கத்தினர் (பார்ப்பனர்கள் மற்றும் சத்ரியர்கள்) அறிவுசார் பணிகளிலும் அதிகாரத்திலும் ஈடுபடும் வண்ணம் சாதி சார்ந்த குலக்கல்வி நிலவியது. இது நிலப்பிரபுத்துவ சுரண்டல் அமைப்பைத் தொடர்ந்து தக்கவைக்கப் பயன்பட்ட ஒரு கருவியாகும்.
2. பிரிட்டிஷ் முதலாளித்துவமும் மெக்காலே கல்விமுறையும் (Colonial Capitalism)
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவிற்கு வந்தபோது, அவர்கள் தங்கள் சொந்த வணிக மற்றும் அரசியல் தேவைகளுக்காகவே கல்வி அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.
மாற்றத்தின் நோக்கம்: மெக்காலே பிரபுவின் கூற்றுப்படி, "இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும், சுவையிலும் கருத்திலும் ஆங்கிலேயர்களாகவும்" இருக்கும் ஒரு இடைத்தரக வர்க்கத்தை உருவாக்குவதே பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது.
சாதி அமைப்பில் ஏற்பட்ட மாற்றம்: பிரிட்டிஷ் முதலாளித்துவம் தனது நிர்வாகத் தேவைக்காகவும், சந்தை விரிவாக்கத்திற்காகவும் நிலப்பிரபுத்துவப் பழமைகளைச் சற்று தளர்த்தியது. இதன் விளைவாக, சாதி அடிப்படையிலான தொழில்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், 'பிரித்தாளும் கொள்கை' (Divide and Rule) மூலம் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உடைக்கச் சாதியைச் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தினர்.
3. நேருவின் கலப்புப் பொருளாதாரமும் கீன்சியக் கொள்கையும் (State Capitalism)
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சூழலில், பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, இந்தியப் பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் பிரதிநிதியாகக் காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்தது.
மார்க்சியப் பார்வை: "அரசு என்பது ஆளும் வர்க்கங்களின் பொது நலன்களைத் திட்டமிட்டு நடத்தும் ஒரு குழுவே தவிர வேறில்லை." — கார்ல் மார்க்ஸ் & ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)
கீன்சியன் கொள்கை (Keynesian Economics): 1947-ல் இந்திய முதலாளிகளிடம் கனரகத் தொழில்களிலோ அல்லது கல்வி, மருத்துவம் போன்ற துறைகளிலோ முதலீடு செய்யப் போதிய மூலதனம் (Capital) இருக்கவில்லை.
அரசின் கடமை: அதனால், அரசு தன் சொந்தச் செலவில் (அரசுத் துறை மூலம்) உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் மருத்துவத்தை வழங்க வேண்டிய தேவை இருந்தது. இது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லாமல், முதலாளித்துவ அமைப்பு சீராக இயங்குவதற்கும் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியைத் (Labour Power) தக்கவைப்பதற்கும் தேவைப்பட்ட ஒரு தற்காலிக அமைப்பாகும்.
4. நவீன குலக்கல்வி முறை: நவதாராளமயமும் கல்வியை வணிகமயமாக்கலும் (Neoliberalism & Financialization)
1990-க்குப் பிறகு உலகமயமாக்கல் மற்றும் நவதாராளமயக் கொள்கைகள் (LPG) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், மூலதனத்தைத் திரட்டிய இந்தியப் பெருமுதலாளிகள் அனைத்துத் துறைகளையும் தங்களின் லாப வெறிக்குக் கைப்பற்றத் தொடங்கினர்.
[பண்டைய காலம்] ---> சாதி/பிறப்பு அடிப்படை ---> பழைய குலக்கல்வி
[நவீன காலம்] ---> பணம்/மூலதனம் அடிப்படை ---> நவீன குலக்கல்வி (பணக் கல்வி)
நவீன குலக்கல்வி என்பதன் மார்க்சிய விளக்கம்:
பணமே தகுதி: பண்டைய காலத்தில் பிறப்பின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது போல, இன்று வகுப்பு/வர்க்க (Class) அடிப்படையில் பணம் இல்லாத ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது.
நீட் (NEET) மற்றும் ஏகபோகம்: மருத்துவக் கல்வி மற்றும் உயர்கல்விகளை அகில இந்திய அளவில் ஏகபோகமாக்குவது (Monopolization), கார்ப்பரேட் பயிற்சி மையங்களுக்கும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் பில்லியன் கணக்கில் லாபம் ஈட்டித் தரும் ஒரு சந்தையாக மாறியுள்ளது.
அரசுப் பள்ளிகள் முடக்கம்: லாப நோக்கில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பெருக்குவதற்காக, ஏழை எளிய மக்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் சிறுகச் சிறுகக் கைவிடப்பட்டு மூடப்படுகின்றன.
5. தற்போதைய போராட்டங்களின் வரையறைகளும் மார்க்சிய வழிகாட்டலும்
தற்போது நடைபெறும் பல போராட்டங்கள் அமைப்பின் மேற்போக்கான அறிகுறிகளை மட்டுமே எதிர்த்துப் போராடுகின்றன; அவை மூலக் காரணத்தைத் தாக்குவதில்லை.
வடிவமும் சாரமும் (Form and Substance): சாதி அடிப்படையிலான குலக்கல்வியை மட்டுமே எதிர்த்துப் பேசுவது அல்லது 'நீட்' தேர்வில் நடக்கும் முறைகேடுகளையும் தனிப்பட்ட அமைச்சர்களின் ராஜினாமாவையும் மட்டுமே கோருவது சீர்திருத்தவாத (Reformist) அணுகுமுறையாகும்.
வர்க்கப் போராட்டம் (Class Struggle): கல்வி என்பது வியாபாரப் பொருளாக (Commodity) மாறியதன் மூலக் காரணம் முதலாளித்துவ உற்பத்தி முறை (Capitalist Mode of Production) ஆகும். லாபத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில் கல்வியை அனைவரும் சமமாகப் பெற முடியாது.
முடிவுரை மற்றும் வரலாற்றுத் தேவை
நவீன குலக்கல்வி முறை என்பது முதலாளித்துவ வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் மீது தொடுக்கும் பொருளாதாரத் தாக்குதலாகும்.
மார்க்சியத் தீர்வு: நீட் தேர்வு எதிர்ப்பு அல்லது கட்டண உயர்வு எதிர்ப்பு போன்ற அன்றாடப் போராட்டங்களை, முதலாளித்துவ ஆட்சிமுறைக்கு எதிரான வர்க்கப் போராட்டமாகப் (Class War) பரிணமிக்கச் செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள்- சாதகமான அரசு: லாபவெறி கொண்ட கார்ப்பரேட் அமைப்பை வீழ்த்தி, உழைக்கும் மக்களின் அதிகாரத்தை (Dictatorship of the Proletariat) நிறுவுவதன் மூலமே கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் இலவசமாகவும் சமமாகவும் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
"இன்றைய தேவை: அறிகுறியை எதிர்த்துப் போராடுவதோடு நின்றுவிடாமல், நவீன குலக்கல்வியை உருவாக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையையே வேரறுக்க உழைக்கும் மக்கள் வர்க்க ரீதியாக ஒன்றிணைவதாகும்!"
தொடர்ச்சியான விளக்கம்
இந்தக் கட்டுரை, கல்வியின் வரலாற்று மாற்றங்களையும் தற்காலக் கல்விச் சூழலையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism) மற்றும் மார்க்சிய அரசியல் பொருளாதார (Marxist Political Economy)க் கண்ணோட்டத்தில் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கிறது.இப்பதிவில் உள்ள கருத்துகளை, மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளோடு பொருத்தி, வரலாற்று ரீதியாகக் கீழே விரிவாகக் காண்போம்.
1. நிலப்பிரபுத்துவக் காலமும் குலக்கல்வியும் (Feudalism & Hereditary Education)மார்க்சியக் கோட்பாட்டின்படி, சமூகத்தின் பொருளாதார அடிப்படையே (Base/Infrastructure) அதன் பண்பாடு, கல்வி, சட்டம், அரசியல் போன்ற மேல்மானத்தை (Superstructure) தீர்மானிக்கிறது.பொருளாதார அடிப்படை: நிலப்பிரபுத்துவ அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் (நிலம்) சொற்ப எண்ணிக்கையிலான நிலப்பிரபுக்கள் மற்றும் மன்னர்களிடம் இருந்தன. உழைப்பு சாதி அமைப்பின் மூலம் பிரிக்கப்பட்டது.
கல்வியின் பங்கு: நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளைத் தடையின்றித் தொடர, உழைக்கும் மக்கள் தங்கள் சாதித் தொழிலையே செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
மார்க்சியப் பொருத்தம்: அன்றைய ஆளும் வர்க்கமான மன்னர்களும் நிலப்பிரபுக்களும் தங்களின் வர்க்க நலன்களைப் பாதுகாக்கவும், சாதிய அடுக்குமுறையைத் தக்கவைக்கவும் சாதி அடிப்படையிலான 'குலக்கல்வி முறையை' (Hereditary System of Education) மேல்கட்டுமானக் கருவியாகப் பயன்படுத்தினர்.
2. பிரிட்டிஷ் முதலாளித்துவமும் மெக்காலே கல்வியும் (Colonial Capitalism)பிரிட்டிஷாரின் வருகை இந்தியாவில் உற்பத்தி முறையிலேயே ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.உற்பத்தி முறையில் மாற்றம்: நிலப்பிரபுத்துவச் சுவர்களுக்குள் முடங்கிக்கிடந்த இந்தியப் பொருளாதாரத்தை, தங்களின் தொழில்துறை முதலாளித்துவக் (Industrial Capitalism) தேவைகளுக்காக உலகச் சந்தையோடு பிரிட்டிஷார் இணைத்தனர்.மெக்காலே கல்வி முறை: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தேவைப்பட்ட குறைந்த கூலி ஊழியர்கள், எழுத்தர்கள் (Clerks) மற்றும் நிர்வாகிகளை உருவாக்கக் கல்வி முறை மாற்றப்பட்டது.
மார்க்சியப் பொருத்தம்: இங்கு பிரிட்டிஷாரின் நோக்கம் இந்தியர்களைக் கைதூக்கி விடுவதல்ல; மாறாகத் தங்களின் சுரண்டல் தேவைகளுக்காகப் பழைய சாதியக் குலக்கல்வி முறையைத் தளர்த்தி, ‘ஆங்கிலேயர்களுக்குச் சேவை செய்யும் ஒரு புதிய வர்க்கத்தை’ உருவாக்குவதே. எனினும், மக்களின் எழுச்சியைத் தடுக்கச் சாதியைச் சட்டப்பூர்வ அடையாளமாக மாற்றி, 'பிரித்தாழும் கொள்கையை'யும் (Divide and Rule) கையாண்டனர்.
3. சுதந்திரத்திற்குப் பிந்தைய நேருவின் கலப்புப் பொருளாதாரம் (State Capitalism & Keynesian Policy)இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமைந்த சூழலை மார்க்சியம் பின்வருமாறு விளக்குகிறது:கீன்சியப் பொருளாதாரம் (Keynesian Economics): கம்யூனிசக் கருத்துக்கள் மக்களிடம் பரவுவதைத் தடுக்கவும், உள்நாட்டுப் பெருமுதலாளிகள் பலம்பெறும் வரை அவர்களைத் தாங்கிப் பிடிக்கவும் அரசு தலையீட்டைக் கொண்ட கலப்புப் பொருளாதாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.அரசின் கடமை: கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு போன்றவற்றை அரசே ஏற்று நடத்தியது. இது முதலாளித்துவத்திற்குத் தேவையான தகுதியான உழைப்பாளர்களை உருவாக்கவும், மக்கள் புரட்சியில் ஈடுபடாமல் தடுக்கவும் ஆளும் வர்க்கத்திற்கு அன்றைய சூழலில் தேவைப்பட்டது.
4. நவீன குலக்கல்வி: கார்ப்பரேட் முதலாளித்துவமும் தனியார்மயமும் (Modern Hereditary Education)இன்றைய நவதாராளமயக் (Neo-liberalism) காலத்தில், முதலாளிகள் தங்கள் மூலதனத்தை உலகளவில் பெருக்கிக் கொண்டுள்ளனர்.அ) கல்விச் சரக்காதல் (Commodification of Education)மார்க்சியத்தின்படி, முதலாளித்துவத்தில் பயன்பாட்டு மதிப்பு கொண்ட அனைத்தும் ‘விற்பனைப் பண்டமாக’ (Commodity) மாற்றப்படும்.நிலப்பிரபுத்துவ காலத்தில் கல்வி சாதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்றால், இன்றைய கார்ப்பரேட் ஆட்சியில் கல்வி 'பணத்தின் அடிப்படியில்' (Purchasing Power) தீர்மானிக்கப்படுகிறது.ஏழைகளுக்கும் உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வி மறுக்கப்பட்டு, பணக்காரர்களுக்கு மட்டும் உயர் கல்வி சாத்தியமாகும் நிலை உருவாகியுள்ளது. இதுவே "நவீன குலக்கல்வி முறை" ஆகும்.
ஆ) நீட் (NEET) மற்றும் ஏகபோகப் போட்டி (Monopoly Capitalism)மருத்துவக் கல்வி மற்றும் பிற தொழிற்கல்விகளை ஏகபோக முதலாளிகள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் (NEET போன்றவை) திணிக்கப்படுகின்றன.இதன் மூலம் பயிற்சி மையங்கள் (Coaching Centres), தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் வர்த்தக மையங்களாக மாறியுள்ளன.
5. திசைதிருப்பல் போராட்டங்களும் மார்க்சிய வழியும் இங்கு குறிப்பிட்டது போல, மார்க்சியக் கண்ணோட்டத்தில் போராட்டங்களை இரு வகையாகப் பிரிக்கலாம்:சீர்திருத்தவாதப் போராட்டங்கள் (Reformist/Diversionary Struggles):பிரச்சனைக்கான மூலக்காரணத்தை (Systemic Cause) விடுத்து, தனிநபர் மீதோ (எ.கா. அமைச்சர் ராஜினாமா) அல்லது பழைய வடிவங்கள் மீதோ மட்டும் கவனம் செலுத்துவது மக்களைத் திசைதிருப்பும்.சாதி அடிப்படையிலான பழைய குலக்கல்வியை மட்டுமே இப்போதும் முதன்மை எதிரியாகக் காட்டுவது, தற்போதைய கார்ப்பரேட் "நவீன குலக்கல்வி" முறையை மறைக்கவே உதவும்.மார்க்சிய புரட்சிகரப் போராட்டம் (Scientific Marxist Approach):கல்வியை வியாபாரமாக்கும் லாபவெறி முதலாளித்துவ அமைப்பே (Capitalist System) அனைத்துக் கொடுமைகளுக்கும் காரணம் என்பதை உணர்வது.நீட் எதிர்ப்பு அல்லது கல்வி தனியார்மய எதிர்ப்பை, ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமாக உயர்த்துவது.
முடிவுரை: வர்க்க ஒற்றுமையும் உழைக்கும் மக்கள் அரசும்
மன்னராட்சியில் சாதி எவ்வாறு உழைக்கும் மக்களைக் கல்வி பெற விடாமல் தடுத்ததோ, அதே வேலையை இன்று முதலாளித்துவ ஆட்சியில் "பணம்" செய்கிறது.
எனவே, உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களின் உண்மையான வர்க்க எதிரியான கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும், அதற்குச் சேவை செய்யும் அரசையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். முதலாளித்துவ அரசுக்கு மாற்றாக உழைக்கும் மக்களின் அரசை (Workers' State) அமைப்பதே கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களின் உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான ஒரே வரலாற்றுப் பூர்வமான வழியாகும்..... தேன்மொழி
.
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக