இலக்கு 71 இணைய இதழ்

மார்க்சிய லெனினிய தத்துவத்தின் அடிபடையில் இன்றைய நமது கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டிய பணிகளை தேர்வு செய்து அதனை நமது ஆசான்கள் முன்னோடிகளின் எழுத்துகளிலிருந்து தேடிக் கொண்டுவந்து உங்கள் முன் வைக்கும் முயற்சிதான் இலக்கு இணைய இதழில் நோக்கம். அதன் அடிப்படையில் இந்த இதழில்...

இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1). இந்திய புரட்சியின் இலட்சியமாக தோன்றிய இயக்கங்கள்
2).இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும். - சுனிதிகுமார் கோஷ் பாகம்- 3
3). இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக்கோளாறு. பாகம்-8 சமரசம் கூடவே கூடாதா? தொடர்ச்சி
4). எமது ஆசான் லெனின்
5). மேதினம்-வரலாறு
ரஷ்யாவில்1883ம் ஆண்டில், முதல் மார்க்சிய குழு தோற்றுவிக்கப் பட்டது. 1895ல் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் 20 மார்க்சிய குழுக்கள் செயல்பட்டன. அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்த தொழிலாளர்களுக்கு லெனின் இங்கு மார்க்சியத்தை போதித்தார். 1895ல் 20 மார்க்சிய குழுக்களையும் ஒன்றுபடுத்தி "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கம்"என்பதனைத் தோற்றுவித்தார் லெனின். இந்தியாவில் 1920 தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இல்லை அதேபோல் தனக்கான சமூக பணியை ஆற்றவேயில்லை இதுவரை பிளவுண்டு கிடப்பதை விட.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1925 டிசம்பர் 26 ஆம் தேதி கான்பூரில் கூடிய மாநாட்டில் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவில் 99 வருடங்கள் கடந்த நெடிய பயணம் ஆனால் அதற்கான பணி நிறைவடையவில்லை.

கம்யூனிஸ்டுகளை தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு ஆளானது இல்லை என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. சட்டப் பூர்வமாக இயக்குவதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு அனுமதிக்கவில்லை. கட்சி தொடங்குவதற்கு முன்னாலேயே கடுமையான அடக்குமுறைகளை சந்தித்தது.

இன்றுள்ள பலபோக்குகளில்  இந்த குறுங்குழுவாதம் பற்றி பலமுறை சொல்லிவுள்ளவைதான் அதனை பேசுவதை விட இன்று நம்முன் உள்ள கடமையை பேசுவோம்.

ஆகவே அரசியல் பொருளாதார அறிவுள்ளதோடு மார்க்சிய சித்தாந்த அறிவுடன் கூடவே சிறந்த கம்யூனிச பண்புள்ளவர்கள் ஒரு சிலரே ஆயினும் அத்தகைய சிறந்த பண்புள்ளவர்கள் முதலில் ஒன்றுகூடி ஒரு சில குழுவாக உருவாக வேண்டும். அவர்கள் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்களை ஒன்றுதிரட்டி ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்க கூட்டாக முயற்சி செய்யவேண்டும். அதாவது ஆரம்பத்தில் முதலாளித்துவ வகைப்பட்ட தீய பண்புள்ளவர்களை சேர்த்துக்கொண்டு இயக்கத்தை துவங்கக் கூடாது. தோழர் ஸ்டாலின் சொல்வது போல உன்னதமான தலைவர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவைத்தான் முதலில் உருவாக்க வேண்டும். அத்தகைய உன்னத மானவர்கள்தான் ஒற்றுமைக்காகப் பாடுபடுவார்கள். அத்தகைய தலைவர்கள்தான் மக்களிடத்திலும் அணிகளிடத்திலுமுள்ள தீய பண்புகளைகளைவதற்கு பொறுமையாக வழிகாட்டுவார்கள். எனினும் இன்றைய கம்யூனிச இயக்கமானது பல குழுக்களாக பிளவுபட்டுள்ளது என்ற எதார்த்தத்தையும் நாம் புறக்கணிக்கக் கூடாது. ஆகவே இருக்கின்ற கம்யூனிச குழுக்களிலுள்ள இத்தகைய அன்னிய வர்க்க தீய பண்புகளை எதிர்த்து உறுதியாகப் போராடுவதற்கான கொள்கை வகுத்து அந்த குழுக்கள் செயல்பட வேண்டும். அன்னிய வர்க்க தீய பண்புகளை எதிர்த்துப் போராடிக்கொண்டே பிற குழுக்களுடன் ஒன்றுபட்டு இந்தியப் புரட்சிக்கான கொள்கை கோட்பாடு களிலுள்ள கருத்து வேற்றுமைகளை சிந்தாந்தப் போராட்டத்தின் மூலம் முடிவிற்கு கொண்டுவந்து ஒரு தெளிவான கருத்தொற்றுமைக்கு வரவேண்டும். அதன் அடிப்படையில் ஒரு கட்டுப்பாடான உறுதிமிக்க கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்க வேண்டும். விவாதிப்போம் தொடர்ந்து தோழர்களே.

இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும். - சுனிதிகுமார் கோஷ் பாகம்- 3

அவர்களது ஒற்றுமை கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டால்தான் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி நடைமுறைப்படுத்த முடியும். முதலாளிகளும், குட்டி முதலாளிகளும் அவர்களது வர்க்கத் தன்மையின் காரணத்தால், விவசாயிகளையும் தொழிலாளி வர்க்கத்தையும் திரட்ட முடியாமல் போகலாம். இவ்விழப்பினால், முதலாளிகளும் குட்டி முதலாளிகளும் தலைமையேற்று நடத்தக்கூடிய இயக்கங்கள் சில நேரங்களில் சீரழிவுற்று தனிநபர் அல்லது குழு பயங்கரவாதமாகி, எதிரிகளையோ அல்லது சில நேரங்கள் சாதாரண அப்பாவி மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட பிற தேசிய இனங்களுக்கு எதிராகக் கூட செயல்பட நேரிடும். (இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும், ஆளும் வர்க்கங்களும். சுனிதிகுமார் கோஷ், பக்கம் - 14, 15)

 இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் உருவாக்குகிறோம் என்று சொல்லி ஒவ்வொரு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் பல குழப்பங்களை ஏற்படுத்தி மொழிவழி தேசங்கள் உருவாகாமல் இருப்பதற்கான சதித்தனங் களில் நேரு அரசாங்கம் ஈடுபட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து மக்களிடை யே ஒற்றுமை வேண்டும் என்று நாடகமாடிக் கொண்டே இந்திய மக்களை சாதி, மதம், இன அடிப்படையில் பிளவுபடுத்தும் வேலைகளை காங்கிரசும் ஆர்.எஸ்.எஸ் கும்பலும் செய்தது. தற்போது இந்தியாவிலுள்ள இஸ்லாமிர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற பாஜக சதி செய்துகொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆகவே ஆளும் வர்க்கங் களின் பிளவுபடுத்தும் சதித்தனங்களை முறியடிக்க ஒவ்வொரு மொழிவழி மாநிலங்களுக்கும் பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமை வழங்கி, ஒவ்வொரு மாநிலத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட கூட்டரசாகவே இந்திய அரசை மாற்றுவதுதான் ஒரே வழியாகும்.

3).இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக்கோளாறு. பாகம் 8. சமரசம் கூடவே கூடாதா? தொடர்ச்சி

குறிப்பிட்ட எந்த ஒரு வரலாற்றுத் தருணத்திலும் அரசியலில் எழும் நடைமுறைப் பிரச்சனைகளில் புரட்சிகர வர்க்கத்துக்கு ஆபத்தான சந்தர்ப்பவாதத்தின் உருவாக அமைந்த சகிக்கவொண்ணாத, துரோகத்தனமான பிரதான வகை சமரசங்களாக இருப்பவற்றை இனம் கண்டு கொள்வதும், அவற்றை விளக்கிக் கூறவும் எதிர்த்துப் போராடவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதும் முக்கியமாகும்.

4). எமது ஆசான் லெனின்

லெனின் பிறந்தநாளில் லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !தோழர் லெனினின், அவர் எடுத்துக் கொண்ட சமூகப் பொறுப்பை நிறைவேற்ற அவர் தன்னை வளர்த்துக் கொண்டதை உட்கிரகித்துக் கொண்டு அவரது வழிகாட்டலை ஏற்று வளர்வதுதான்.

சித்தாந்தத்தை, கொள்கைகளை முதலாளித்துவத்திடம் அடகுவைத்துவிட்டு சொல்லில் சோசலிசம் பேசுகின்ற பலவண்ண திரிபுவாதிகள் உலகெங்கும் இருக்கின்றனர்.

உலகெங்கும் நடைபெறுகிற உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள், எழுச்சிகளைப் புரட்சியை நோக்கி வளர்த்துச் செல்லாத இத்திரிபுவாதிகள்தான் புரட்சியின் தடையரண்கள்.

லெனின் மாணவர்களாக அவருக்கு நாம் செய்யும் உண்மையான நினைவு கூர்வதற்தானது. அவரின் கொள்கை கோட்பாடுகளை நமது நாட்டு சூழலுகேற்ப அறிந்து செயல்படுவதே. அதற்கு உண்மையான மார்க்சிய லெனின்னியம் கற்று தேர்வதே, இல்லையேல் புஜை அறையில் பூஜிக்கும் கடவுள்கள் வரிசையில் அவரையும் வைத்து அந்நாளில் பூஜிப்பதோடு நம் பணி முடிந்து விடும்.

5). மே தினம் (May Day / தொழிலாளர் தினம்)

ஒரு புறத்தில் உழைப்பை பயன்படுத்து வதற்குரிய உழைப்பு சாதனங்கள் அனைத்துக்கும் சொந்தக்காரர்களான முதலாளிகள், மறுப்புறரத்தில் தம் சொந்த உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவும் சொந்தமாக இல்லாத தொழிலாளிகள் என்ற முக்கியமான இரண்டு பகைமையான இரும்பெரும் வர்க்கங்களாக தற்கால சமுதாயம் பிரிந்துள்ளது. அருவருப்பான உண்மைகளை, இனிப்பான சொற்றொடர் களால் மூடி மறைக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பினுடைய உற்பத்தி பொருளை இவ்விரு வர்க்கங்களுக்கு இடையே பகிர்ந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இந்த பகிர்மானம் நியாயமானதாக இல்லை.

அரசாங்கத்தின் சட்டத்தின் உதவி கொண்டு செயல்படும் முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டம் தொழிலாளி வர்க்கம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. இவ்வளவு உழைப்பு தியாகம் துன்பம் பட்டும் இறுதி விளைவு தொழிலாளர்கள் வறுமையிலேயே இருக்க வேண்டி உள்ளது. தொழிலாளி வர்க்கம் கடைசியில் இந்த விசவட்டத்தை முறிக்குமா?, அன்று கூலி முறையை முற்றிலும் ஒழித்து விடுகிற அந்த இயக்கத்திற்கு முடிவு தேடிக்கொள்ளுமா? என்று கேள்வி கேட்கிறார் எங்கெல்ஸ் 1881 ல் The labour standard இதழில்.

முழுமையாக இதழை பதிவிறக்கம் செய்து வாசியுங்கள்  விவாதிக்க வாருங்கள் தோழர்களே...

இலக்கு 71 இணைய இதழ் PDF வடிவில் இந்த இணைப்பில் அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே




தொழிலாளர்களும் தொழிற்சங்களும் எங்கெல்ஸ் நூலிலிருந்து

 இந்தியாவில் எங்கும் வேலை இல்லை. அர்ப்ப கூலிக்கு அலைமோதும் கூட்டம் அதனை கண்டுக் கொள்ளாத அரசு... உழைக்கும் மக்களின் சேவைக்காக பேசும் கட்சிகள் செயலிழந்து கிடப்பதை புரிந்துக் கொள்ள ஆசான் எங்கெல்ஸ் எழுத்துகளே கீழே.

எல்லோரும் மேதினம் கொண்டாடுகின்றீர்களே சற்று இதனையும் வாசியுங்கள்


முதலாளிகளுக்கு எதிராக ஊதியம் பற்றிய பொருளாதார விதியை அமல்படுத்தும் வரையில் தொழிற்சங்கங்களின் நடவடிக்கையை எமது சென்ற இதழில் பரிசீலித்தோம். பொதுவாக தொழிலாளி வர்க்கங்கள் இந்த விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமான விஷயம் என்பதால் நாம் மீண்டும் இந்த விஷயத்துக்குத் திரும்புவோம்.

கூலியை இயன்ற அளவுக்குக் குறைப்பது தனிப்பட்ட முதலாளியின் அக்கறை, பொதுவாக முதலாளி வர்க்கத்தின் அக்கறை என்று இன்றைய ஆங்கிலேயத் தொழிலாளி எவருக்கும் கற்பிக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். டேவிட் ரிக்கார்டோ மறுக்கவியலாத வகையில் நிரூபித்ததைப் போல, உழைப்பின் உற்பத்தி, அனைத்து செலவுகளையும் கழித்த பிறகு, இரண்டு பங்குகளாகப் பிரிக்கப்படுகிறது: ஒன்று தொழிலாளியின் கூலியாக அமைகிறது, மற்றொன்று முதலாளியின் இலாபமாக அமைகிறது. இப்போது, உழைப்பின் இந்த நிகர உற்பத்தி, ஒவ்வொரு தனிப்பட்ட நேர்விலும், ஒரு குறிப்பிட்ட அளவாக இருப்பதால், கூலி எனப்படும் பங்கு குறையாமல் இலாபம் என்ற பங்கு அதிகரிக்க முடியாது என்பது தெளிவு. கூலியைக் குறைப்பது முதலாளியின் அக்கறை என்பதை மறுப்பது, தனது இலாபத்தை அதிகரிப்பது முதலாளியின் நலனல்ல என்று கூறுவதற்கு ஒப்பாகும்.
ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியும் தனது தொழிலாளர்களின் கூலியைக் குறைப்பதன் மூலம் தனது இலாபத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறார். ஒரே தொழிலைச் சேர்ந்த முதலாளிகள் ஒருவருக்கொருவர் போட்டியிடுவதிலிருந்து இது ஒரு புதிய தூண்டுதலைப் பெறுகிறது. அவர்களில் ஒவ்வொருவரும் தனது போட்டியாளர்களைக் குறைத்து விற்க முயற்சிக்கிறார்கள், அவர் தனது இலாபங்களைத் தியாகம் செய்யாவிட்டால் அவர் கூலியைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு, ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியின் வட்டியும் கூலி வீதத்தின் மீது ஏற்படுத்தும் அழுத்தம் அவர்களுக்கிடையிலான போட்டியால் பத்து மடங்கு அதிகரிக்கிறது. முன்பு ஏறக்குறைய லாபம் தரும் விஷயமாக இருந்தது இப்போது அவசியமாகிறது. இந்த இடைவிடாத, இடைவிடாத நிர்ப்பந்தத்தை எதிர்த்துப் போராட அமைப்புசாரா தொழிலாளர்களிடம் உருப்படியான வழி இல்லை. எனவே, தொழிலாளர்களின் ஒழுங்கமைப்பு இல்லாத தொழில்களில், கூலி ஓயாமல் குறையும், வேலை நேரம் இடையறாது அதிகரிக்கும் போக்கும். மெதுவாக, ஆனால் நிச்சயமாக, இந்த செயல்முறை தொடர்கிறது. செழிப்பான காலங்கள் அவ்வப்போது அதைத் தடுக்கலாம், ஆனால் மோசமான வர்த்தக காலங்கள் பின்னர் அதை மேலும் துரிதப்படுத்துகின்றன. 

ஆனால் இதற்கிடையில் 1824ல் சட்டபூர்வமாக்கப்பட்ட தொழிற் சங்கங்களும் தலையிட்டன. முதலாளிகள் எப்போதும் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு முறையான தொழிற்சங்கம், விதிகள், அதிகாரிகள் போன்றவை தேவையில்லை. தொழிலாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அவர்களது சிறிய எண்ணிக்கை, அவர்கள் ஒரு தனி வர்க்கத்தை உருவாக்குகிறார்கள் என்ற உண்மை, அவர்களின் நிலையான சமூக மற்றும் வர்த்தக உறவு ஆகியவை அதற்கு பதிலாக நிற்கின்றன; லங்காஷயரில் பருத்தி வியாபாரம் செய்ததைப் போன்ற ஒரு மாவட்டத்தை ஒரு பட்டறைத் தொழிற் கிளை தன் வசப்படுத்திக் கொண்ட பிறகுதான், முறையான முதலாளிகளின் தொழிற் சங்கம் ஒன்று அவசியமாகிறது. மறுபுறத்தில், விதிகளால் நன்கு வரையறுக்கப்பட்டு, தனது அதிகாரத்தை அதிகாரிகளிடமும் குழுக்களிடமும் ஒப்படைக்கின்ற ஒரு வலுவான அமைப்பு இல்லாமல் தொடக்கத்திலிருந்தே தொழிலாளர்கள் செயல்பட முடியாது. 1824 ஆம் ஆண்டு சட்டம் இந்த நிறுவனங்களை சட்டபூர்வமாக்கியது. அன்றிலிருந்து இங்கிலாந்தில் தொழிற்கட்சி ஒரு சக்தியாக மாறியது. முன்பு நிராதரவான மக்கள் திரள், தனக்கு எதிராகப் பிளவுபட்டிருந்தது, இப்போது அப்படி இல்லை. ...............

இப்போது, வர்க்கத்திற்கு எதிரான வர்க்கங்களின் அரசியல் போராட்டத்தில், ஒழுங்கமைப்பு என்பது மிக முக்கியமான ஆயுதமாகும். வெறும் அரசியல் அல்லது சாசன இயக்க ஸ்தாபனம் எந்த அளவுக்கு வீழ்ந்ததோ, அதே அளவில், தொழிற்சங்க அமைப்பும் மேலும் மேலும் வலிமை பெற்று வளர்ந்தது; தற்போது அது வெளிநாடுகளில் எந்த தொழிலாளி வர்க்க ஸ்தாபனமும் சமன் செய்யாத வலிமையை அடைந்துள்ளது. ஒரு சில பெரிய தொழிற் சங்கங்கள், ஒன்று முதல் இருபது லட்சம் வரையிலான உழைக்கும் மக்களைக் கொண்டவை; சிறிய அல்லது உள்ளூர் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், ஆளும் வர்க்கத்தின் எந்த அரசாங்கமும், அது விக் கட்சியாக இருந்தாலும் சரி, டோரியாக இருந்தாலும் சரி, இந்த அதிகாரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய மரபுகளின்படி, இந்த சக்தி வாய்ந்த நிறுவனங்கள் கூலியையும் வேலை நேரத்தையும் ஒழுங்குபடுத்துவதில் பங்கு கொள்வதிலும், தொழிலாளர்களுக்கு பகிரங்கமாக விரோதமான சட்டங்களை ரத்து செய்வதைச் செயல்படுத்துவதிலும் பங்கு கொள்வதோடு அநேகமாக கண்டிப்பாக தங்களை மட்டுப்படுத்திக் கொண்டன. முன்பே சொன்னது போல. அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் அதற்கும் மேலாக சாதித்திருக்கிறார்கள் - தங்களை விட அவர்களின் பலத்தை நன்கு அறிந்த ஆளும் வர்க்கம், அதற்கு அப்பால் அவர்களுக்கு தாமாகவே முன்வந்து சலுகைகளை வழங்கியுள்ளது. டிஸ்ரேலியின் குடும்ப வாக்குரிமை [5] குறைந்தபட்சம் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதியினருக்கு வாக்குரிமை அளித்தது. இந்த புதிய வாக்காளர்கள் தங்கள் சொந்த விருப்பத்தை வெளிப்படுத்துவார்கள் - நடுத்தர வர்க்க லிபரல் அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படுவார்கள் என்று அவர் கருதாவிட்டால் அவர் அதை முன்மொழிந்திருப்பாரா? பிரம்மாண்டமான வர்த்தகச் சங்கங்களை நிர்வகிப்பதில் ஈடுபட்டிருந்த உழைக்கும் மக்கள், நிர்வாகத்துக்கும் அரசியலுக்கும் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் அவரால் அதைச் செயல்படுத்த முடிந்திருக்குமா?


அந்த நடவடிக்கையே தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய வாய்ப்பைத் திறந்துவிட்டது. லண்டனிலும், அனைத்து உற்பத்தி நகரங்களிலும் அவர்களுக்கு பெரும்பான்மை கிடைத்தது. இவ்வாறு புதிய ஆயுதங்களைக் கொண்டு மூலதனத்தை எதிர்த்துப் போராட அவர்களுக்கு உதவியது. அவர்களது சொந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது. இங்கு, தொழிற் சங்கங்கள் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் பாதுகாவலர் என்ற தமது கடமையை மறந்துவிட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய ஆயுதம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் கைகளில் உள்ளது, ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் அவிழ்க்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே தொழிலாள வர்க்கத்தின் பாதையில் அணிவகுத்துச் செல்லாவிட்டால் அவர்கள் இப்போது வகிக்கும் இடத்தைத் தொடர முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது. இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கம் நாற்பது அல்லது ஐம்பது தொழிலாளர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் அதிகாரத்தைப் பெற்றிருந்தும், முதலாளிகளோ அல்லது வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள் போன்ற அவர்களது எழுத்தர்களோ என்றென்றைக்கும் பிரதிநிதித்துவம் செய்வதில் திருப்தி அடைவது இயல்பானதல்ல.

இந்த நூலை கீழ்காணும் இணைப்பில் வாசிக்க தோழர்களே 87 பக்கங்களை கொண்ட நூல் இன்று தொழிற்சங்கம் பற்றி பேசுவோர் அன்று ஆசான்களின் பணியினை புரிந்துக் கொள்ள உதவும்...



கூலிமுறைப் பற்றி எங்கெல்ஸ்



மார்க்சிய நூல்கள்

 

மே தினம் (May Day / தொழிலாளர் தினம்)

 மே தினம் (May Day / தொழிலாளர் தினம்)

 மே தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

 

மே 1 ஆம் தேதி உலகளாவிய தொழிலாளர் தினம் (International Workers' Day) அல்லது மே தினம் (May Day) என அனுசரிக்கப்படுகிறதுஇது தொழிலாளர்களின் உரிமைகள்நியாயமான வேலைமற்றும் தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டங்களை நினைவுகூரும் நாள்.  மேலும் தொழிலாளர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு சபதம் ஏற்கும் நாள்.

 

ஒரு புறத்தில் உழைப்பை பயன்படுத்துவதற்குரிய உழைப்பு சாதனங்கள் அனைத்துக்கும் சொந்தக்காரர்களான முதலாளிகள்மறுப்புறரத்தில் தம் சொந்த உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவும் சொந்தமாக இல்லாத தொழிலாளிகள்என்ற முக்கியமான இரண்டு பகைமயான இரும்பெரும் வர்க்கங்களாக தற்கால சமுதாயம் பிரிந்துள்ளதுஅருவருப்பான உண்மைகளைஇனிப்பான 

சொற்றொடர்களால் மூடி மறைக்க முடியாதுதொழிலாளி வர்க்கத்தின் உழைப்பனுடைய உற்பத்தி பொருளை இவ்விரு வர்க்கங்களுக்கு இடையே பகிர்நதுகொள்ள வேண்டி இருக்கிறதுஇந்த பகிர்மானம் நியாயமானதாக இல்லை.

 

அரசாங்கத்தின் சட்டத்தின் உதவிகொண்டு செயல்படும் முதலாளித்ததுவத்தை எதிர்த்த போராட்டம் தொழிலாளி வர்க்கம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டி உள்ளதுஇவ்வளவு உழைப்பு தியாகம் துன்பம் பட்டும் இறுதி விளைவு தொழிலாளர்கள் வறுமையிலேயே இருக்க வேண்டி உள்ளதுதொழிலாளி வர்க்கம் கடைசியில் இந்த விசவட்டத்தை முறிக்குமா?, அன்று கூலி முறையை முற்றிலும் ஒழித்து விடுகிற அந்த இயக்கத்திற்கு முடிவு தேடிக்கொள்ளுமாஎன்று கேள்வி கேட்கிறார்   எங்கெல்ஸ் 1881 ல் The labour standard இதழில்.

 

மே தின வரலாற்றை பார்ப்போம்

 

1. 1886: ஹேமார்க்கெட் சம்பவம் (அமெரிக்கா)- எட்டு மணி வேலை நேரத்திற்கான போராட்டம்:- 19ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் 12–16 மணி நேரம் கடினமாக வேலை செய்தனர். 1 மே 1886இல், அமெரிக்காவின் சிகாகோ நகரில் எட்டு மணி நேர வேலைக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை கலவரமாக்கி இதில் மே  4 தேதி, 7 போலீஸ் மற்றும் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். - இதைத் தொடர்ந்து பல தொழிலாளர்    தலைவர்கள் தூக்கிலிடப் பட்டனர். இதன் தொடர்ச்சியாகவே, மே 1ஆம் தேதி இந்த தோழர்களின் நினைவு நாளாக மே தினம் நடைமுறையாகியது.

 

2. 1889: மே தினம் உலகளாவிய அங்கீகாரம் பெற்றது.

 

-இரண்டாம் இன்டர்நேஷனல் (சோசலிசதொழிலாளர் அமைப்பு) மே 1 ஐ உலக தொழிலாளர் தினம் என்று அறிவித்தது.

 

-  மேநாள் கோரிக்கைகள்:

 

- 8 மணி நேர வேலை, நியாயமான ஊதியம், தொழிற்சங்க உரிமைகள்.

 

தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்களும் கண்டனமும் உண்டு.

 

3. இந்தியாவில் மே தினம்

 

- முதல் மே தினம்: 1923இல் சென்னையில் (தற்போதைய சென்னை உயர் நீதிமன்றம் முன்பு) எம். சிங்கரவேலர் நடத்தினார்.

 

மே தினத்தின் முக்கியத்துவம்

 

1. தொழிலாளர் உரிமைகள்:

 

- நியாயமான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், ஓய்வு நாட்கள் போன்றவற்றை உறுதிப்படுத்துகிறது

 

3.உலகளாவிய ஒற்றுமை:

 

2 150+ நாடுகளில் இன்றும் மே தினம் விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது.

 

மே தினம் எவ்வாறு கொண்டாடப்படு கிறது?

 

    ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் (தொழிலாளர் சங்கங்கள் முன்னிலையில்).

 

- அரசு மற்றும் தொழிலதிபர்களின் சலுகைகள் (போனஸ், நன்மைகள்).

 

-கலாச்சார நிகழ்ச்சிகள் (பாடல்கள், நாடகங்கள்).

 

2025 இல் மே தினத்தின் முக்கியம்

 

"தொழிலாளர்களின் ஊதியம், பாதுகாப்பு, மரியாதை"- AI மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்.

 

மே தினம் தொழிலாளர்களின் தியாகங்களையும், சமத்துவத்திற்கான போராட்டங்களையும் நினைவூட்டுகிறது.


 "எட்டு மணி வேலை, எட்டு மணி ஓய்வு, எட்டு மணி தூக்கம்" என்ற கோரிக்கை இன்றும் பொருத்தமானது. தொழிலாளர்கள் உலகை உருவாக்குகிறார்கள் – அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்!"

நமக்கான புரிதலுக்கு

 

என்ன செய்ய வேண்டும் நூலின் இரணடாவது அத்தியாயத்தில்மக்களின் தன்னெழுச்சியும், சமூக ஜனநாயகவாதிகளின் உணர்வும்என்ற தலைப்பில் மக்களின் தன்னழுச்சியான போராட்டத்தில் கலந்துகொண்டால் போதும், அதன் ஊடாக தொழிலாளர்கள் அரசியலைகற்றுக் கொள்வார்கள்  என்ற பொரளாதார வாதத்தை எதிர்த்து முறியடித்தார். லெனின். "தொழிலாளர்களுக்கு சமூக ஜனநாயகஅரசியல் வெளியிலிருந்துதான் கொணடு செல்லப்பட வேண்டும். எவ்வாறு, அறிவியல் தொழில்நுட்பம் நவீனதொழில்துறைக்கு வெளியில் விஞ்ஞானகளாலும், பொறியியலாளர்களாலும்ஆசிரியர்களாலும் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு வளர்ந்து தொழில்துறையில்தொழிலாளர்களால் பயன்படுத்தப்படுகிறதோ, அதே போல  சமூக ஜனநாயக அரசியல் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டு தொழிலாளி வர்க்கத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் அதாவது போதிக்கப்பட வேண்டும்"   என்று லெனின் வலியுறுத்துகிறார்.

 

மேலும் தொழிற்சங்க அரசியலுக்கும் சமூக ஜனநாயக அரசியலுக்கும் உள்ள வேறுபாடை பற்றி பேசுகிறது.

 

முதல் உள்தலைப்பில் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சாலை பிரச்சனைகள் பற்றி அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து அவற்றுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் இறங்குவது போலவே, இந்தப் பிரச்சனைகளுக்கு எதிரியாக நிற்கும் ஜாரிச எதேச்சதிராகத்தை எதிர்த்த அம்பலப்படுத்தல்களையும் கிளர்ச்சியையும் தொழிலாளி வர்க்கத்துக்கு கற்றுக் கொடுப்பதுதான் தொழிலாளி வர்க்கத்தை அரசியல் படுத்துவது என்பதாகும். இதற்கு சமூகத்தின் ஒவ்வொரு வர்ககமும் எதேச்சதிகாரத்தால் எவ்வாறு ஒடுக்கப்படு கிறது  என்பதை அம்பலப்படுத்தி அவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவதற்கு வழி நடத்த வேண்டும். அப்போதுதான் தொழிலாளி வர்க்கம் பிற வர்க்கங்களின் தலைமை சக்தியாக புரட்சியின் முன் வரிசையில் நிற்கும்.

 

இவ்வாறு பரந்து விரிந்த அரசியல்தளத்தை விடுத்து தொழிற்சங்க பிரச்சனைகள்மட்டும் என்று  குறுக்குகின்றனர் பொருளாதார வாதிகள். இந்த விவாதத்தின் ஊடாக பொருளாதாரவாதிகளும், பயங்கர வாதிகளும் எவ்வாறு இந்தஅரசியல் அம்பலப்படுத்தல்கள் மூலமாக தொழிலாளர்களை அரசியல்படுததுவதை புறக்கணித்து தன்னெழுச்சியான போக்குகளுக்கு வால் பிடித்து செல்கின்றனர் என்பதை விளக்குகிறார். அதே பகுதியில் பொருளாதாரவாதிகளின் தொழிற்சங்க அமைப்பு முறைஅவர்களது அரசியல் பக்குவமின்மயை பிரதிபலித்து அர்த்தமற்ற ஜனநாயக முறைகளையும், அதிகார வர்க்க நடைமுறைகளையும் கொண்டிருக்கிறது என்று அம்பலப் படுத்துகிறார்”.

 

இங்கே என்ன நடந்துக் கொண்டுள்ளது?

 

ஆளும் வர்க்க கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அதிகாரத்திற்கான பேரம் பேசுவதில் தொடங்கி இன்றைய தொழிலாளர் விரோத எல்லா சட்டங்களை ஏற்றுக் கொண்டே அந்த தொழிலாளிகளின் நலன் பயக்கும் தொழிற் சங்கத்தை கட்ட போவதாக கூறி அந்த தொழிலாளிகளின் என்ன தேவையை பூர்த்தி செய்யப்போகிறது இந்த தொழிற்சங்கம் என்பதுதான் கேள்வி? அவர்களின் உரிமையை  பறிக்கும் இந்த கொடூரம் இவர்களை ஒடுக்கும் ஆட்சியாளர்களின் கையில் உள்ள உலகமயக் கொள்கையின் வெளிப்பாடு அல்லவா? ஆக அதனை பேசாமல் மூடிமறைக்கவே                                  இவை பயன்படும் என்று கூறுகிறேன்.



மார்க்சிய ஆசான்கள்தான் இதற்கான பணியினை செய்தனர் அதனை புரிந்துக் கொள்வோம்.


தொழிலாளர்களின் சர்வதேசச் சங்கமாகிய கம்யூனிஸ்டுக் கழகம் (Communist League) அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைமைகளில் ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இக்கழகம் கட்சியின் விரிவான கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்துத் தருமாறு மார்க்ஸ், ஏங்கெல்ஸைப் பணித்தது.


1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரையிலிருந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த கட்சி அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). 


1848 இல் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தொழில் மயமாக்கலின் பாதிப்பையும் சுரண்டலையும் உணர்த்தி, பல்வேறு நாடுகளின் தொழிலாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியே உலக தொழிலாளர்கள் ஓர் அமைப்பாக இணைந்துள்ளனர்.

1840களில் ஏற்பட்ட விவசாய பாதிப்பு, '1848ல் புரட்சிகள்' என்று அழைக்கப்படும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன. இதன் விளைவாக, முதல் அகிலம் என்று அழைக்கப்படும் சர்வதேச தொழிலாளர் சங்கம், 1864 ல் லண்டனில் உள்ள தொழிலாளர் சபையில் அனைத்து சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகளின் கூட்டணி சங்கமாகப் பிறந்தது.

ஹேமார்க்கெட் விவகாரம் பற்றி தொழிலாளர் ஆய்வுத்துறை அறிஞர் வில்லியம் ஜே. அடெல்மேன் கூறுகிறார்: “சிகாகோ ஹேமார்க்கெட் விவகாரத்தை விட, எந்த ஒரு நிகழ்வும் தொழிலாளர் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது மே 4, 1886 அன்று ஒரு பேரணியுடன் தொடங்கியது. ஆனால் அதன் விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றன. இந்த பேரணி அமெரிக்க வரலாற்று பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்றாலும், மிகச் சிலரே இந்த நிகழ்வைத் துல்லியமாக முன்வைப்பதோடு அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள். மார்க்சிய ஆசான்கள் முன்வைத்த முழக்கம், “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்”. நடைமுறையில் உலகெங்கும் நாம் காண்கிறோம்.

நமக்கான முழக்கம், “அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” என்றும் கூறலாம். எனினும், “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” ஆசான்கள் சொன்னதே.

"கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது" என்றனர் மார்க்சிய ஆசான்கள்.

இங்குள்ளோர் என்ன செய்துக் கொண்டுள்ளோம் ஆசான்கள் கூறியுள்ளதை செயல்படுத்தும் கட்சியாக உள்ளனவாக சிந்திக்க தோழர்களே. 

உட்கட்சி போராட்டம் நடத்தாத கட்சிகள்

நேற்றைய விவாதம்தான் அவர் இன்றும் அமைப்பில் இருந்துக் கொண்டு பேசுகிறார் அவர்களின் வள்ளல்தன்மை தெரிந்துதான் நான் எழுதுகிறேன்.

உட்கட்சி போராட்டம் பற்றி லியூ ஷோசி எழுதிய நூலை வாசித்து என் கேள்விகளையும் அவரின் வழிகாட்டுதலையும் தொகுத்துள்ளேன் நேரமுள்ளவர்கள் வாசித்து விவாதிக்க அழைக்கிறேன் தோழர்களே.

அமைப்பில் கேள்வி கேட்க கூடாது, எதையையும் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். நாம் வைக்கும் கேள்வி அவர்களுக்கு பிரச்சினை என்றால் அவர்களிடம் தயார் நிலையில் உள்ள ஏதாவது ஒரு முத்திரையை குத்தி வெளியேற்றி விடுவர். அந்த தயார்நிலையில் உள்ள முத்திரைகள். நீ, NGO, களைப்புவாதி, எதிரி வர்க்க கையாள், இன்னும் சில அவர்களிடம் உள்ள ரப்பட் ஸ்டாம்ப்பை நம்மீது குத்தி அணிகளுக்கு அறிவித்து விடுவர். தவறியும் அந்த தவறான, இல்லை இல்லை கேள்வி கேட்கும் நபரிடம் விவாதிக்கவோ ஏன் அவரின் கண்ணோட்டம் என்ன? அவை சரியா தவறா பரிசீலிக்க முயற்சித்ததுண்டா? மாவோ சொல்வார், விமர்சனம் என்பது நோயாளியை குணப்படுத்தும் மருத்துவனாக இருக்க வேண்டும்" என்று, இங்கே என்ன நடக்கிறது? மக்கள் அதிகார மாவட்ட அமைப்பாளர் அதிகார வர்க்கதிடம் சேர்ந்து கூட்டு கலவாணியா உள்ளார் இதனை கேளுங்கள் அவர் தோழருக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார் கேளுங்கள் என்றதும், அதெல்லாம் எங்கள் வேலை, உங்கள் வேலையை பாருங்கள் என்று கண்டுக் கொள்ளவில்லை, அந்த உழைக்கும் மக்கள் விரோதியால் நான் இழந்தது சில இலட்ச ரூபாய் நான் சிவில் சமூக நடைமுறைகளை அன்று புரிந்திருக்கவில்லை. சட்ட ரீதியாக நான் நேர்கொள்ள கிடைத்த தண்டனை. 

அவர்களை விட்டு வேறொரு அமைப்பில் வந்தேன். அவர்கள் என்னை எந்தளவு வளர்த்தனர் என்ன செய்தனர் எனக்கு அளித்த பணி என்ன? எதையையும் கண்டுக்கொள்ளவில்லை. நான் நட்பு பாராட்டும் தோழருடன் நடந்த அமைப்பு பிரச்சினையில் நான் கேட்டதை பயன்படுத்திக் கொண்டனர். ஆம் நான் தோழர் பாலன் நூல் வாங்கி என்பகுதி அணிகளுக்கு கொடுக்க நினைத்தேன். ஏனெனில் எனக்கு அவரை பற்றி கிடைத்த முதல் நூல். இவர்கள் அந்த நூல் கொண்டு வரவில்லை அதனால். இவர்கள் என்மீது வைத்த குற்றசாட்டு "அந்த நூல் வாங்கியது தவறு நீங்கள் அணிகளுக்கு கொடுக்க முயற்சித்தது தவறு", என்று என்னை ஊடுறுவல்காரன் என்று முத்திரை குத்தி இவர்கள் ஆவணங்களில் பிரபளம் படுத்தியுள்ளனர். 

என்னிடம் யாராவது இந்த நூல் ஏன் வாசிக்க கூடாது? இதில் என்ன தவறு உள்ளது என்று விமர்சிதுள்ளீர்களா நியாவாங்களே? நான் அதன் பிறகு என் மார்க்சிய கல்வி கற்றல் பணியினை தொடர தொடர்ந்து வாசித்து விவாதித்து கொண்டுள்ள பொழுது உங்களை அணுகி கடிதம் கொடுத்தேன், என் மீதான விமர்சனங்கள் தவறு அவை மார்க்சிய வகைபட்டவை அல்ல அவை உங்களின் (அமைப்பின்) அகநிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்னை மட்டுமல்ல இதுபோல் அமைப்பை கேள்விக்கேடாலே எதிரியாக பாவித்து வெளியேற்றும் பண்பு உங்களின் தொற்று நோய், இருந்தும் சுயவிமர்சன ரீதியில் நீங்கள் (அமைப்பு) திருத்திக் கொள்ளவும் எங்களை சேர்த்துக் கொள்ள முடிவெடுக்கும் படியும் கோரியிருந்தேன். அதற்கான பதில் எனக்கு கிடைக்கவில்லை. 

ஆனால் ஒரு கட்டுரை மீது நான் விமர்சன வைத்த உடன் என் மீது கொதிதெழுந்த மாண்பை என்ன சொல்ல? அதன் பின் இலக்கு இணைய இதழ் மீதான காழ்ப்புணர்ச்சி உங்களின் மார்க்சிய லெனினிய தத்துவ போதாமையை வெளிகாட்டி விட்டது. நேற்று தலைமை பொறுபிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவன் இன்று நேரட்சியாக தி.மு.க வின் தொண்டனாக மாறியுள்ள அந்த மாண்புமிகு கழிச்சடை தான் வாங்கி தின்னும் எச்சில் காசை நினைத்து இதே முத்திரை குத்தும் பொழுது ஆதாரம் அற்ற விமர்சனங்களில் மூழ்கி வீணடித்துக் கொண்டுள்ளீர் என்பதோடு என் விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன். 

ஆம் தனிநபர்களை நாங்கள் ஆதரிப்பதில்லை என்ற உங்களின் அமைப்பின் அண்மைகால நடைமுறை கவர்ச்சிவாதத்தில் வீழ்ந்து கிடக்கிறது. விடுங்கள் இவை என் புலம்பல். 

உட்கட்சி போராட்டம் பற்றி வெளியிட்டோர் எந்தளவு அணிகளுக்கு/கட்சிகளுக்கு உட்கட்சி போராட்டம் பற்றி போதித்துள்ளீர். முதலில் நூலில் சொல்லப்பட்டதை நீங்கள் புரிந்துக் கொண்டீரா? இதுவரை நடந்த சண்டைகள் எல்லாம் தலைமை போட்டியா கோட்பாட்டு பிரச்சினையா? துளியும் அறிவில்லா நீங்கள் புரட்சி நடத்தப் போகிறீர் நாங்கள் நம்ப வேண்டும்?

ஆக மார்க்சிய லெனினிய தெளிவு இல்லாமல் இந்த பிரச்சினைகளை புரிந்துக் கொள்ள முடியாது. ஆசான் களின் நூல்களை கற்றுதேறுங்கள். இல்லையேல் என்னை ஏமாற்றிய கூட்டம் உங்களையும் ஏமாற்றும் அதனை புறம் தள்ளி ஒரு சரியான புரட்சிக்கான கட்சியை பற்றி சிந்திக்க வழிகிடைக்கும்.   

மொத்தத்தில் உட்கட்சிப் போராட்டம் அடிப்படையில் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட போராட்ட, வாக்குவாத வடிவமாகும். கட்சிக்குள் எல்லாம் பகுத்தறிவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்; எல்லா விசயங்களும் பகுத்தாராயப்பட வேண்டும்; ஏதொன்றுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்; இல்லையெனில் அது பிரயோஜனப்படாது. ஒரு விசயத்தை பகுத்தாராய்ந்துவிட்டோமானால் எதையும் கஷ்டமின்றி செய்துவிடலாம்.

விசயங்களைப் பகுத்தாராய ஏதுவாக இருப்பதற்கு உட்கட்சி ஜனநாயகமும், பிரச்சினைகளின் சிக்கலைத் தீர்க்க சாந்தமான விருப்பு, வெறுப்பு இல்லாத விவாதமும் அத்தியாவசியமாகிறது. அடக்கத்துடன் கற்றறிவதும், தோழர்களின் தத்துவப் பயிற்சியை அதிகப்படுத்துவதும், நிலைமையைப் பற்றி தெளிவான போதம் பெறுவதும், சம்பந்தப்பட்ட விசயத்தை துருவித் துருவி ஆராய்வதும், பிரச்சினைகளை வெகு கவனமாக பரிசீலிப்பதும் மிகமிக அவசியம். கவனக் குறைவாகவும், தன் மனப்போக்குடனும், கிளிப்பிள்ளை போன்றும் , நடைமுறையோடு சம்பந்தப்படாமலும் விசயத்தை பரிபூரணமாக ஆராயாமலும், நாம் விசயங்களை என்றுமே பகுத்தாராய முடியாது.

பகுத்தறிவுக்கு நாம் உடன்படவில்லையென்றால் அல்லது விசயங்களை பகுத்தாரயத் தவறினால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாறாக நாம் பலவந்தம், தந்திரங்கள், கட்சி அளிக்கும் அதிகாரம், ஏன் மோசடியைக் கூட கையாள வேண்டி வரும். அந்த விசயத்தில் உட்கட்சி ஜனநாயகம் இனி அவசியமில்லாது போய்விடும். ஏனெனில் உட்கட்சி ஜனநாயகத்திற்கு நாம் கூடி நடவடிக்கை எடுப்பதற்கு விசயங்களை பகுத்தாராய வேண்டும்.

எல்லாம் பகுத்தறிவுக்கு உடன்பாடுள்ளதாக இருக்க வேண்டும்; இல்லையெனில் உதவாது! தவறாக ஆராய்ந்தாலும் பயன்படாது! வெற்றுப் பேச்சில் காலங்கழித்தோமானால் அது இதைக்காட்டிலும் விரும்பத்தகாது. இது கொஞ்சம் கடினமான வேலை என்பது என்னமோ உண்மைதான். ஆனால் இந்த வழியாகத்தான் நாம் போல்ஷ்விக்குகள் என்ற தகுதியை பெறுகிறோம்.

தோழர்களே! உட்கட்சிப் போராட்டங்களை எப்படி நடத்துவது என்பதற்கு நான் யோசனை கூறும் சில முறைகள் இவை.

உட்கட்சிப் போராட்டங்களை நடத்துவதற்கும், கட்சிக்குள் தவறான போக்குகளை எதிர்ப்பதற்கும், ஒவ்வொரு கட்சி அங்கத்தினரின் குறிப்பாக ஊழியர்களின், கட்சி உணர்வை பரிசீலிப்பதற்கும் இந்த முறைகளை தோழர்கள் அமல்நடத்த வேண்டும்; அப்பொழுதுதான் கட்சி மேலும் சித்தாந்த ரீதியாகவும், அமைப்புரீதியாகவும் உறுதிப்படும் என்று நான் அபிப்பிராயப் படுகிறேன். இதுவே நமது லட்சியம்.- லியூ ஷோசி

கட்சி உருவெடுத்த தினத்திலிருந்தே கட்சிக்கு வெளியிலுள்ள விரோதிகளை எதிர்த்து மட்டுமல்ல. கட்சிக்குள் இருக்கும் பலவித விரோத, தொழிலாளி வர்க்க சார்பற்ற போக்குகளை எதிர்த்தும் போராடி வந்திருக்கிறது. இந்த இரண்டுவித போராட்டங்களும் வேறானவை. ஆனால் இரண்டும் அவசியம். இரண்டிற்கும் பொதுவான வர்க்க உள்ளடக்கமிருக்கிறது. நமது கட்சி இரண்டாவது விதப்போராட்டத்தை நடத்தவில்லையென்றால், விரும்பத்தகாத போக்குகளை எதிர்த்து கட்சிக்குள் சதாசர்வ காலம் போராடவில்லையென்றால், கட்சியை ஒவ்வொரு தினுசான, தொழிலாளி வர்க்க சார்பற்ற சித்தாந்தம், இடதுசாரி, வலதுசாரி சந்தர்ப்பவாதங்கள் முதலியவற்றிலிருந்து சதா சுத்தப்படுத்திக் கொண்டிருக்காவிடில், பின், அத்தகைய தொழிலாளி வர்க்க சார்பற்ற சித்தாந்தமும், அத்தகைய இடதுசாரி வலதுசாரி சந்தர்ப்பவாதமும் கட்சியில் மேலோங்கி, கட்சியை பாதிக்கவும், கட்சியின் மீது ஆதிக்கம் செலுத்தவும் கூடும். இது கட்சியை ஆபத்துக்கு உட்படுத்தும். அதன் சீரழிவிற்கு வழி செய்யும். அத்தகைய தொழிலாளி வர்க்கசார்பற்ற சித்தாந்தமும் இடதுசாரி, வலதுசாரி சந்தர்ப்பவாதமும் நமது கட்சியை அல்லது அதன் சில பகுதிகளின் தன்மையைக் கூட தொழிலாளி வர்க்க சார்பற்ற ஸ்தாபனமாக மாற்றவும் கூடும். உதாரணமாக இந்த முறையில்தான் ஐரோப்பாவிலுள்ள சோஷலிக் டெமாக்ரடிக் கட்சிகள் பூர்ஷ்வா சித்தாந்தத்தினால் சீர்கேடடைந்து, பூர்ஷ்வா தினுசான அரசியல் கட்சிகளாக மாற்றப்பட்டு பூர்ஷ்வா வர்க்கத்தின் பிரதான சமூகத்தூண்களாக ஆயிற்று.

உள்கட்சிப் போராட்டம் பிரதானமாக சித்தாந்தப் போராட்டமாகும். அதன் உள்ளடக்கம் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களிலிருந்து எழுகின்ற திரிபுகளும், முரண்பாடுகளுமாகும். சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில் நமது தோழர்களிடையே எழுகின்ற திரிபுகளும், முரண்பாடுகளும் கட்சிக்குள் அரசியல் பிளவுகளில் கொண்டு செல்லலாம்; சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாத ஸ்தாபன பிளவுகளிலும் கொண்டு செல்லலாம். ஆனால் குணாம்சத்திலும் உள்ளடக்கத்திலும் அத்தகைய திரிபுகளும் முரண்பாடுகளும் அடிப்படையில் சித்தாந்தப் போராட்டங்கள்.

இதிலிருந்து ஏற்படுவதென்னவென்றால், சித்தாந்தம், கோட்பாடு முதலிய விஷயங்களில் திரிபு சம்பந்தப்படாத உள்கட்சி போராட்டமும், கட்சி அங்கத்தினர்களுக்கிடையே கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில் வேறுபாட்டை அடிப்படையாகக் கொள்ளாத தகராறுகளும், கோட்பாடில்லாத போராட்ட ரகத்தைச் சேர்ந்ததாகும்; உள்ளடக்கம் இல்லாத போராட்டமாகும். கட்சிக்குள் கோட்பாடோ அல்லது உள்ளடக்கமோ இல்லாத இம்மாதிரியான போராட்டம் அறவே தேவையில்லை. அது கட்சிக்குத் தீமை பயக்கவல்லது; கட்சிக்கு உதவிகரமானதன்று அத்தகைய போராட்டங்களை கட்சி அங்கத்தினர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

‘கட்சிக்குள்’ இருக்கும் முரண்பாடுகளை போக்குவதின் அடிப்படையில்தான் நமது கட்சி பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
நான் இப்போது பேச விரும்பும் பிரச்சினை உட்கட்சி போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது பற்றியேயாகும். நமக்கு இது இன்னும் புதிய பிரச்சினை. இன்று இந்த பிரச்சினையை எல்லோரும் கற்று வருகின்றனர். இது பரிபூரண முக்கியத்துவம் கொண்டதுதான். ஆனால் இந்தச் சமயம் இப்பிரச்சினைப் பற்றி சகல அம்சங்களையும் தழுவிய முறையில் பேச உத்தேசிக்கவில்லை. நான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திர பூர்வமான அனுபவத்தை பற்றி என்னுடைய தனிப்பட்ட முறையில் குறித்துள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட எனது அபிப்பிராயங்களை வெறுமனே சமர்ப்பிக்கிறேன். இந்த அபிப்பிராயங்கள் சரியானவைதானா என்பதைப் பற்றி விவாதிக்கும்படி எல்லா தோழர்களையும் அழைக்கிறேன்.-

லியூ ஷோசி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சிப் போராட்ட அனுபவத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட விசயங்களை தோழர்களின் கவனத்திற்கு இன்று நான் கொண்டு வருகிறேன்.

முதலாவதாக, உட்கட்சிப் போராட்டம் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததும், பொறுப்புமிக்கதுமான விசயம் என்று தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; மிகக் கண்டிப்பானதும், பொறுப்புமிக்கதுமான, மனோபாவத்துடன் நாம் அதை நடத்த வேண்டும்: அதை எப்பொழுதுமே அஜாக்கிரதையாக நடத்தக் கூடாது. உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில், முதலாவதாக கட்சியின் சரியான கொள்கையை, கட்சியின் நலனுக்கு பாடுபடும் தன்னலமற்ற நிலை, இன்னும் சிறந்த வேலை செய்தால் மற்ற தோழர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் உதவி புரியவும், பிரச்சினைகளைப் பற்றி மேலும் சிறந்த போதம் பெறுவதற்கும் ஆன கொள்கையை பரிபூரணமாக அமல் நடத்த வேண்டும். முறைப்படுத்திய ஆராய்ச்சி, கல்வி முதலியவற்றின் மூலம் தாமே விசயங்களை பற்றியும், பிரச்சினைகளைப் பற்றியும் தெளிவு பெற வேண்டும். அதே சமயத்தில், முறைப்படுத்திய, நன்கு தயாரிக்கப்பட்ட, நன்கு வழிகாட்டப்பட்ட உட்கட்சி போராட்டங்களை நாம் நடத்த வேண்டும்.

முதலாவதாக, தான் சரியான கொள்கையை கடைப்பிடித்தால் மட்டும்தான், மற்றவர்களின் தவறுகளைத் திருத்த முடியும் என்பதை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் சரியாக நடந்து கொள்வதின் மூலம்தான் மற்றவர்களின் தவறான நடத்தையைத் திருத்த முடியும். “மற்றவர்களை திருத்துவதற்கு முன்பு முதலில் ஒருவர் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்பது” முதுமொழி.

தான் ஊசலாடாமல் இருந்தால்தான் ஊசலாடுபவர்கள், ஊசலாட்டத்திலிருந்து மீள்வதற்கு உதவ முடியும்.

தான் சரியான கோட்பாடுகள், தத்துவம் கொண்டு, கவசமிட்டிருந்தால்தான், மற்றவர்களுடைய தவறான கோட்பாடுகளையும் தத்துவங்களையும் திருத்த முடியும்.

தனக்கு கோட்பாட்டுப் பிரச்சினைகளில் தெளிவான போதமிருந்தால்தான், மற்றவர் குழப்பத்தைத் தெளிவுபடுத்த உதவ முடியும். குறிப்பான பிரச்சினைகளில் நிறைய யதார்த்தமான புள்ளி விவரங்களை தான் சேகரித்திருந்தால், அந்த பிரச்சினைகளை முறைப்படுத்தி கற்றறிந்திருந்தால்தான் மற்ற தோழர்களுக்கும், கட்சிக்கும் உதவிகரமாக இருக்க முடியும்.

ஒரு தோழர் இதைச் செய்யத் தவறினால் முதலிடத்தில் அவரே சரியான கொள்கையை கைக் கொள்ளத் தயாராயில்லையென்றால், சரியான கோட்பாடுகளை கசடறக் கற்றறியவில்லையென்றால், கோட்பாட்டின்படி யதார்த்த நிலைமையை அவர் பரிசீலனை செய்யவில்லையென்றால், முறைப்படுத்தி பிரச்சினைகளை ஆராய்ந்தறியவில்லையென்றால் அல்லது அவருக்கு ஏதும் விசேஷ குறைபாடு இருந்தாலும் சில விசயங்களைப்பற்றி அவருக்கே போதிய அளவுக்கு தெளிவு இல்லாவிட்டாலும், உட்கட்சிப் போராட்டத்தில் பிறரிடமுள்ள தவறை திருத்த முடியாது. இவையெல்லாம் இருந்தும், மண்டைக் கனத்துடன் போராட்டத்தை நடத்துவதில் பிடிவாதம் பிடிப்பார்களானால், முடிவாக அது தவறில்தான் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நமது சுயவிமர்சனமும், உட்கட்சிப் போராட்டமும், கட்சியின் அமைப்பும், ஒருமைப்பாடு, கட்டுப்பாடு, கௌரவம் முதலியவற்றிற்கு தீங்கு தேடுவதற்கோ அல்லது அதன் வேலைக்கு இடுக்கண் தேடுவதற்கோ நடத்தப்படுவதன்று. அதற்கு மாறாக கட்சி அமைப்பையும் ஒருமைப்பாட்டையும் பலப்படுத்தவும், அதன் கட்டுப்பாட்டையும் கௌரவத்தையும் உயர்த்தவும், அதன் வேலையைத் துரிதப்படுத்தவும்தான் அவை நடத்தப்படுகின்றன. ஆதலின் உட்கட்சிப் போராட்டம் தன்னிச்சையான போக்கிலே போகவும் அதிதீவிர ஜனநாயக வாதத்திற்கு கொண்டு செல்லவும் விடக்கூடாது; கட்சிக்குள் குடும்பத் தலைவன் தோரணையும் சரி, அதிதீவிர ஜனநாயக வாதமும் சரி இரண்டுக்குமே இடமில்லை. கட்சிக்குள் நிலவும் அசாதாரண நிலைமையின் இரண்டு அதி தீவிர பிரதிபலிப்புகள் இவை.

கட்சியின்பாலும், புரட்சியின்பாலும் மாபெரும் பொறுப்புணர்ச்சியுடன் உட்கட்சிப் போராட்டம் நடத்தப்படவேண்டும்.

இரண்டாவதாக, உட்கட்சிப் போராட்டம் அடிப்படையில், கட்சிக்குள் மாறுபட்ட சித்தாந்தம், கோட்பாடுகளுக்குள் நிகழும் போராட்டமாகும். கட்சியில் வேறுபட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகளுக்குள் எழும் எதிர்ப்பை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக தெளிவான வரையறுப்பு வகுப்பது இன்றியமையாத அவசியங்கொண்டதாகும். ஆனால் அமைப்பு, போராட்ட வடிவம், பேசும் தோரணை, விமர்சிக்கும் விதம் முதலிய விசயங்களில் கூடுமான வரையில் எதிர்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்; விசயங்களை அமைதியான முறையில் வாதம் செய்யவும் விவாதிக்கவும் தன்னாலியன்ற வரை முயல வேண்டும். அமைப்பு நடவடிக்கைகள் எடுக்காமலிருக்க, அமைப்பு முடிவுகள் எடுக்காமலிருக்க ஆனமட்டும் முயல வேண்டும்.

உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில், சித்தாந்தத்திலும், கோட்பாட்டிலும் ஐக்கியம் ஏற்படுத்த நாணயமான, மனம்திறந்த உருப்படியான, ஆராய்ச்சி பூர்வ மனோபாவம் காட்டுவதற்கு தோழர்கள் முயலவேண்டும். வேறு வழியில்லை என்ற சந்தர்ப்பங்களில்தான், அத்தியாவசியம் என்று கருதும் பொழுதுதான், நாம் போர்க்குணமிக்க போராட்ட வடிவங்களை கடைப்பிடிக்கக் கூடும்: அமைப்பு நடவடிக்கைகளை அமல் நடத்தலாம். எல்லா கட்சி அமைப்புகளுமே, குறிப்பிட்ட வரையறைக்குள் திருந்தாமல் தவறு செய்து வரும் ஒரு கட்சி அங்கத்தினர் மீது அமைப்பு முடிவு எடுப்பதற்கு பரிபூரண உரிமை உண்டு. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கட்சிக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுப்பதும், அமைப்பு நடவடிக்கைகளை அமல் நடத்துவதும் முற்றிலும அவசியமாகிறது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் பேதா பேதம் பார்க்காமலும், தன்னிச்சையாகவும் அமல்படுத்தக் கூடாது.

கட்சி அமைப்புகள் தோழர்களுக்கு மிதமிஞ்சிய தண்டனை விதிப்பதனால் மட்டுமே கட்சிக் கட்டுப்பாடு நிலைநாட்டக் கூடியதன்று. கட்சிக் கட்டுப்பாடு, கட்சி ஐக்கியம் முதலியவற்றை நிலைநாட்டுவதென்பது பிரதானமாக தோழர்களை தண்டிப்பதில் அடங்கியிருக்கவில்லை. (இந்த முறையில்தான் அவை நிலைநாட்டப்பட வேண்டுமெனில்,  கட்சியில் நெருக்கடியிருக்கிறது என்பதையே அது காட்டும்). அதற்குப் பதிலாக அது சித்தாந்த ரீதியாகவும், கோட்பாடு பூர்வமாகவும் உள்ள யதார்த்த ஒற்றுமையிலும், பெருவாரியான கட்சி அங்கத்தினர்கள் உணர்விலும் அடங்கியிருக்கிறது. இறுதியாக நாம் சித்தாந்தம் பற்றியும், கோட்பாடு பற்றியும் முற்றிலும் தெளிவு பெற்று விட்டோமானால், அவசியம் ஏற்படும் பொழுது அமைப்பு முடிவுகள் எடுப்பதென்பது நமக்கு வெகு சுலபமாகும். கட்சி அங்கத்தினரை நீக்குவதற்கும், தானாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பதற்கும் ஒரு நிமிடம் கூட பிடிக்காது.

மாறுபட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகள் சம்பந்தமாக தோழர்கள் காட்டும் பிடிவாதம், எதிர்ப்பு, முன்வைக்கும் வாதங்கள் முதலியன கட்சி அமைப்பிற்கும், பெரும்பான்மைக்கு, மேல்கமிட்டிக்கு கீழ்படிவதிலிருந்து பிரிக்க முடியாதவையாகும். இல்லையென்றால் கட்சி ஐக்கியம், நடைமுறை ஒற்றுமை ஆகிய எதுவுமே இருக்கமுடியாது. தோழர்கள் கோட்பாட்டிற்கு பிடிவாதம் பிடிப்பதினால், எப்பொழுதுமே கட்சியை அமைப்பு ரீதியாக எதிர்க்கவோ, பெரும்பான்மையையும் உயர்மட்ட தோழர்களையும் மீறவோ, சுயேச்சையான நடவடிக்கைகளில் இறங்கவோ கூடாது. அது கட்சியின் அடிப்படை கட்டுப்பாட்டை மீறும் செயலாகும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்