மார்க்ஸ் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையிலிருந்து- 26-06-2026 விவாதிக்க

இந்த ஆவணம் கார்ல் மார்க்ஸ் 1841 இல் எழுதிய ஆய்வறிக்கையின் உள்ளடக்கத்தை விவரிக்கிறது. இது முக்கியமாக டெமோக்ரிட்டஸ் மற்றும் எபிகியூரஸ் ஆகிய இரு கிரேக்க தத்துவவாதிகளின் இயற்கையியல் கொள்கைகளுக்கு இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகளை ஆராய்கிறது. அணுக்களின் இயக்கம், காலத்தின் தன்மை மற்றும் விண்வெளி நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் மார்க்ஸ் தனது கருத்துகளை இதில் பதிவு செய்துள்ளார். மேலும், மதக் கோட்பாடுகள், இறையியல் மீதான விமர்சனங்கள் மற்றும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு குறித்தும் இந்தத் தொகுப்பு பேசுகிறது. பழைய தத்துவங்களை மார்க்ஸ் எவ்வாறு மறுஆய்வு செய்தார் என்பதை அறிய இந்த மூலப்பொருள் ஒரு முக்கிய வழிகாட்டியாக அமைகிறது. இது மார்க்ஸின் ஆரம்பகால தத்துவ சிந்தனைகளின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவுகிறது....

The Difference Between the Democritean and Epicurean Philosophy of Nature....

இந்தப்பகுதியின் ஆங்கில மூலம் இந்த இணைப்பில்

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

மார்க்ஸ் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையிலிருந்து

1839 ஆரம்பத்திலிருந்து மார்க்ஸ் தத்துவஞான வரலாற்றை பயிலுவதில் மூழ்கினார். பண்டைய உலகத்தின் தத்துவஞான சிந்தனையைப் பற்றி குறிப்பாக எப்பிக்கியூரியனிஸம் (பழைய காலத்து லோகாயத வாதம்), ஸ்டாய்ஸிஸம் (சீனோ என்னும் கிரேக்க தத்துவ ஞானியின் மரபில் ஒருவகை கடுந்துறவு நிலை வாதம்) மற்றும் செப்டிஸிஸம் (பிரோ என்னும் அறிஞரின் ஐயுறவு வாதம்) முதலியவைகளைப் பற்றியும் இன்னும் மிகவும் விரிவான பலவகைப்பட்ட தத்துவ ஞானப் பிரிவுகளையும் பயிலத் தொடங்கினார். இத்தகைய முக்கிய பண்டைய தத்துவஞானப் பிரிவுகளை ஆராயத் தேர்ந்தெடுத்ததற்கு இரு காரணங்கள் : ஒன்று இளம் ஹெகலியர்கள் இந்த தத்துவஞான வகை முறைகளின் மீது மிகவும் அக்கறைமிக்க விருப்பம் காட்டினார்கள். இவைகளை சுய சிந்தனையான உணர்வுநிலையின் தத்துவஞானத்தின் முன்னோடிகள் என்று கருதினார்கள். மேலும் இரண்டாவதாக பெரும்பாலும் மார்க்ஸே இந்த தத்துவஞானப் பிரிவுகளைப் படித்தறிவதில் பெரும் அளவில் அக்கறை காட்டினார். அவருடைய நாத்திகக் கண்ணோட்டம் வளர வளர, மார்க்ஸ் இயல்பாகவே எப்பிக்கூரஸின் தத்துவ ஞானத்தின் மீது மிகுந்த ஈர்ப்புடன் ஆர்வம் கொண்டார். எப்பிக்கூரஸ் என்பவர் பண்டைய உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். அவரைப் பற்றி மார்க்ஸ் அவர் ஒரு தலைசிறந்த ஆகப் பெரிய கிரேக்க அறிவு ஒளியாளர் என்று குறிப்பிட்டார். ஒழுக்கவியல் பிரச்சனைகளைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள உலகைப் பற்றிய மனிதனுடைய மனப் பான்மையைப் பற்றியும் கூறுகிற விவாதிக்கிற தத்துவஞானப் பிரிவுகளைப் பற்றி மார்க்ஸ் மிக ஆழ்ந்த கவனத்துடன் அக்கறைக் காட்டிப் படித்தார். இறுதியாக தத்துவஞான வரலாற்றைப் பற்றிய மார்க்ஸினுடைய ஆராய்ச்சி தத்துவஞானம் புற உலகைப் பற்றி எவ்வாறு ஆய்ந்து கூறுகிறது. அதாவது அது நிலைகொண்டுள்ள எல்லாவற்றையும் அது அறிவுபூர்வமானது என்றும் அவசியமானதென்றும் ஒப்புக் கொள்கிறதா அல்லது எது இருக்க வேண்டுமோ அதை எதிர்த்து இருப்பது என்பதைத் தன்னகத்தே அடக்கி வைத்திருக்கிறதா என்னும் ஒரு அடிப்படையான சூடான கேள்விக்கு விடை காண்பதற்கு உதவி செய்தது. மார்க்ஸ் தன்னுடைய மிக ஆரம்பகால ஆராய்ச்சியில் அருவமான பொருளுக்கு அப்பால் கருத்தூன்றிச் சென்று ஒரு கண்ணோட்டத்தை கீழ்க்கண்ட மிக முக்கியமான கேள்விக்கு விடை காண்பதற்கு உதவி செய்யக்கூடிய ஒரு கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கான அவசியத்திற்கு சுத்தமான தத்துவ நிலைக்கும் அப்பால் சென்று ஆராய்ச்சி செய்தார்; அந்தப் பிரதான கேள்வி: மனிதன் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவது எவ்வாறு, அவன் சுதந்திரம் ஆக்கப்படுவது எவ்வாறு? என்பதாகும்.

அவருடைய ஆராய்ச்சியின் முதல் பலன் 1839-ல் அவர் எழுதிய ஏழு குறிப்புப் புத்தக வரிசையாகும். அதில் பல தயாரிப்பு விவரங்கள் அடங்கியிருந்தன. அவைகளை இப்போது எப்பிக்கூரியன், ஸ்டாயிக் மற்றும் செப்டிக் தத்துவஞானங்களின் குறிப்புப் புத்தகங்கள் என்று அழைக்கிறோம். இந்த நூலில் மார்க்ஸ், தத்துவஞானம் மதத்துடன் ஒத்துப்போக முடியாதது என்று காட்டியுள்ளார். அவர் ஏற்கனவே தத்துவஞானம் ஒரு செயலூக்கமுள்ள சக்தி என்றும் அது உலகின் மீது தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கு சக்தி படைத்தது என்றும் நிச்சயப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் எழுதியதாவது: "புரோடீயுஸ் சுவர்க்கத்திலிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டுவந்து வீடுகளைக் கட்டத் தொடங்கி அதன்மூலம் பூமியில் நிலைத்து வாழ்வதற்கு ஏற்பாடு செய்ததைப் போல தத்துவஞானமும் உலகம் முழுவதையும் தழுவுவதற்கு விரிவடைந்து உலகத் தோற்றத்திற்கு எதிராகத் திரும்புகிறது." (MEGA, Abt. 1, Bd. 1, Halbband 1, S. 131.)

 

ஒரு தத்துவஞானம் மிகவும் செயலூக்கத்துடன் வாழ்க்கையில் ஊடுருவுவதன் வெளிச்சத்தில்தான் மார்க்ஸ் ஹெகலுடைய சீடர்களை "நல்லது கெட்டது அல்லாத சாதாரண திறமையர் முழு முதல் உணர்வின் சர்வ சாதாரண வெளிப்பாடாகும்"(MEGA, Abt. 1, Bd. 1, Halbband 1, S. 132.) என்று கூறியவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்தார். தத்துவஞான ஞானத்திற்கு ஆக விரிவான பரந்த புலனறியும் சாத்தியப்பாடுகள் உண்டென்றும உலகின் மீது மிகப்பெரிய அளவில் தனது செல்வாக்கைப் பிரயோகிக்கும் சக்தி படைத்தது என்றும் அவர் வலியுறுத்தினார். மனது மிகவும் வலுவானது என்று அவர் வாதிட்டார். அவர் தன்னுடைய ஆகக் கூர்மையான முள்முனையை, மனித உணர்வின் மெய்க்கருத்து பொருள்களின் சாரத்தைப் புரிந்துகொள்வதற்கு சக்தியற்றது என்றும் புலனறிய முடியாத உண்மை நிலைகளைக் கொண்ட உலகைக் கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் கடியன் அஞ்ஞானவாதிகள். இவர்கள் மடமையைப் பிரச்சாரம் செய்வதை தொழிலாகவே கொண்டுள்ள குருக்கள் என்று மிகவும் பொருத்தமாக அவர்களைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிட்டார். அவர்களுடைய தினசரி தொழிலின் தங்களுடைய ஏலாமையைப் பற்றியும் சக்தியின்மையைப் பற்றியும் சதா ஜபம் செய்து கொண்டிருப்பதும் அடங்கியிருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

இளம் மார்க்ஸின் தீவிரவாதமும் சுதந்திரச் சிந்தனையும் எப்பிக் கூரஸினுடைய (தத்துவ ஞானத்தைப் பற்றிய) அவருடைய அணுகும் முறை மிகவும் அலாதியாக நின்றது. சுதந்திரம் பற்றிய பிரச்சனை மீது எப்பிக்கூரஸின் கருத்தோட்டத்தை மார்க்ஸ் சிறப்பாக வலியுறுத்தினார். மெய்க்கருத்தின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும், மதம், மூட நம்பிக்கை, அடுத்த பிறப்புகளில் பழிபாவம் வந்து விடுமோ என்னும் அச்சம் முதலிய மடத்தளைகளிலிருந்து விடுதலைக்கும் அவர் செய்த அரும் முயற்சியைப் புகழ்ந்தார். இதே மாதிரியான ஒத்த கருத்துக்களைப் புகழ்பெற்ற ரோமானிய தத்துவஞானியும் கவிஞருமான லுக்கிரா ரெட்டீஸின் நூல்களினும் மார்க்ஸ் கண்டு அவைகளை வெளிக் கொணர்ந்தார்.

எப்பிக்கூரஸிற்கும் அவரை நாத்திகவாதி என்று குற்றம் சாட்டி நீதிநெறி புகட்டிக் கொண்டிருந்த வரலாற்றாளர் புளூட்டார்க்கிற்கும் இடையில் நடைபெற்றிருந்த வாக்கு வாதத்தில் மார்க்ஸ் எப்பிக்கூரஸ் பக்கம் நின்றார். அவருடைய எல்லா நாத்திக முடிவுகளையும் ஏற்றுக் கொண்டார். மதவாதிகள் தங்களுடைய சொந்த குணாதிசயங்களை தாங்கள் கடவுள் என்றழைத்த ஒரு மேலான வடிவத்தின் மீது புகுத்தி வெளிக் காட்டினார்கள் என்று கூறிய பழைய நாத்திகவாதிகளுடைய கருத்தை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டார்.

அவருக்கே உரித்தான முழு நிறைவான திட்ட நுட்பத்தோடு மார்க்ஸ் 1839 ஆம் ஆண்டு முழுவதிலும் 1840 ஆம் ஆண்டின் ஒரு பகுதியிலும் பண்டைய தத்துவ ஞானத்தின் வரலாற்றைப் பற்றி ஆராய்ந்து பணியாற்றினார். 1841 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் "டெமாக்ரிட்டியன் மற்றும் எப்பிக்கூரியன் ஆகியோருடைய இயற்கையின் தத்துவ ஞானத்திற்கிடையிலுள்ள வேறுபாடுகள் என்னும் தலைப்பில் ஒரு பேராய்வு (டாக்டோரல்)க் கருத்துரை ஒன்று எழுதத் தீர்மானித்தார். இதைப் பற்றிய பல்வேறு குறிப்புகளையும் விளக்கங்களையும் ஏற்கனவே அவர் தன்னுடைய "குறிப்புப் புத்தக நூல்களில்" (Marx, Engels, Werke, Ergänzungsband, Erster Teil, S. 70.) தொகுத்திருந்தார். அவருடைய இந்த பாடப்பொருளை அவர் தொகுத்து உருவாக்கியதே ஹெகலுக்கு எதிராக ஒரு எதிர் வாக்குவாதத்தைப் போன்றதாகும். ஹெகல் ஒரு தெளிவான ஒருதலைப்பட்சமான கருத்தோட்டத்தோடு, டெமாக்ரட்டஸ், எப்பிக்கூரஸ், ஜவ்கரிட்டஸ் ஆகியோருடைய பண்டைய அணுவாதம், பொருள் முதல் வாதம் ஆகியவை பற்றி மேற்கொண்டிருந்தார். தன்னுடைய ஆய்வுக் கருத்துரைக்கு அவர் 1841ஆம் ஆண்டில் எழுதிய முன்னுரையில் மார்க்ஸ் அநேகமாக முழுமையாகவே ஹெகல் இந்தத் தத்துவ ஞான வகை முறைகளைப் பற்றி குறைத்து மதிப்பிட்டிருந்ததைக் கடுமையாகக் கண்டித்தார். அத்துடன் அவைகள் "கிரேக்க தத்துவஞான வரலாற்றிற்கு மிக முக்கிய வழித்துணையை"( Marx, Engels, Werke, Ergänzungsband, Erster Teil, S. 262.) அமைத்துக் கொடுத்திருக்கின்றன என்று சுட்டிக் காட்டினார்.

அவருடைய ஆய்வுக் கருத்துரை டெமாக்ரட்டஸ், எப்பிக்கூரஸ் ஆகியோரது கருத்தோட்டங்கள் மனிதகுலத்தின் மெய்க் கருத்து வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் மிக்கது என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. அத்துடன் எப்பிக்கூரஸின் தத்துவஞான வகை முறையில் தர்க்கவியல் அம்சங்கள் இருப்பதையும் வெளிக் கொணர்ந்தார். குறிப்பாக அணுக்கள் தானாகவே சரிந்து வீழ்வது பற்றிய அவருடைய போதனையை எடுத்துக் காட்டினார். அதில் சுய இயக்கம் என்னும் தர்க்கவியல் கோட்பாடு வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டார். அந்தக் கோட்பாடு ஊக்கமுடன் செயல்படக் கூடிய ஒன்று என அவர் வியாக்கியானம் செய்தார். அவர் சொன்னார்: "எனவே நல்லது என்பது தீமையினின்று விலகி ஓடுவதாகையால் சுகம் என்பது துக்கத்திலிருநது விலகிடுவதாகும்" (Marx, Engels, Werke, Ergänzungsband, Erster Teil, S. 283). இயற்கையைப் பற்றி டெமாக் - ரிட்டஸ், எப்பிக்கூரஸ் ஆகிய இருவருடைய கருத்தோட்டத்தையும் ஒப்பிடும்போது மார்க்ஸ் எப்பிக்கூரஸ் பக்கம் நின்றார். காரணம் அவருடைய தத்துவ ஞானம் அவருடைய நெறிமுறை பற்றிய கருத்தோட்டங்களுக்குக் குறிப்பாக சுதந்திரம் பற்றிய அவருடைய தத்துவவக் கோட்பாடு போன்ற நெறிமுறைகளுக்கு ஒரு அடிப்படையை அமைத்துக் கொடுத்தது. ஒழுக்க நெறிப் பிரச்சனைகளின் பால் மார்க்ஸின் அணுகுமுறையில் தத்துவஞானம் வாழ்க்கையில் செயலூக்கத்துடன் தலையிட வேண்டும் என்ற கருத்து உள்ளடங்கி யிருக்கிறது. பகுத்தறிவுக்குப் பொருந்தாத உலகைத் திருத்தி சீரமைப்பதற்கு அவர் சாதகமாக இருந்தார். தத்துவ ஞானத்திற்கும் வாழ்க்கைக்கும் தர்க்க ரீதியான ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "உலகம் தத்துவஞானத் தன்மை பெறும்போது தத்துவஞானம் உலகத் தன்மையைப் அடைகிறது... அதை செயல்பட வைப்பது என்பது அதை இழப்பதாகும்." (1. Marx, Engels, Werke, Ergänzungsband, Erster Teil, S. 328.) அவர் கூறுவதன் பொருள் என்னவென்றால் தத்துவ ஞானத்தை வாழ்க்கை நடைமுறைச் செயல்பாட்டிற்கு மாற்றும்போது அது வாழ்க்கையை ஒரு புதிய மேலான கட்டத்திற்கு உயர்த்துகிறது. அப்பொழுது தத்துவ ஞானமே வெறும் சுத்தமான வரட்டுத் தத்துவமாக இல்லாமல் நடைமுறைச் செயல்பாட்டுடன் உருவிணைந்து விடுகிறது. இங்கு அவருடைய எதிர்காலத்திய தத்துவக் கோட்பாடான தத்துவமும் நடைமுறை ஆகியவற்றின் பரஸ்பர இணைப்பு ஒற்றுமையின் ஆரம்ப முளை வடிவம் இதில் இருப்பதைக் காண்கிறோம்.

மார்க்ஸினுடைய ஆய்வுக் கருத்துரை அவருடைய நாத்திகக் கருத்தோட்டத்தில் ஒரு முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஒரு தீவிரமான போர்க்குணம் மிக்க நாத்திக மெய்க் கருத்துடன் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு வெறுப்புடனும் அது வெடித்து வெளிப்பட்டது. மத எல்லைக் கோடுகளுக்குள் விஞ்ஞான தாகத்தை உறைய வைப்பதற்கும் மதத்தின் நலனுக்காக விஞ்ஞானத்தைக் கீழடங்கச் செய்யவும் அரும்பாடுபட்ட எல்லா விதமான பிற்போக்கு தத்துவ ஞானத்திற்கும் எதிராகக் குறிவைத்து அடித்தது. அதற்கான முகவுரையில் மார்க்ஸ் நாத்திகமே தனது சமயக் கோட்பாடு எனப் பிரகடனம் செய்தார். அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "தத்துவ ஞானம்..... எப்பிக்கூரஸினுடைய கூக்குரலுடன் தன்னுடைய பகைவர்களுக்குப் பதிலளிப்பதில் எப்போதுமே களைப்படைவதில்லை; எப்பிக்கூரஸ் எழுப்பிய குரல் 'கோடிக்கணக்கான பொது நிலையான மக்களால் வணங்கப்படும் கடவுள்களை மறுக்கும் மனிதன் புனிதமற்றவரல்ல. ஆனால் அந்த கோடிக்கணக்கான சாமானிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள கடவுள்களை சரி என ஏற்றுக் கொள்பவன் தான் தூய்மையற்றவன்'.... புரோடீயுஸ் வெளிப்படையாக ஒப்புக் கொண்டது: 'எளிய சாதாரண வார்த்தைகளில் நான் இந்தக் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்' என்பது. அது தானே சொந்தமாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகும். பூமியிலும் சுவர்க்கத்திலும் உள்ள எல்லா கடவுள்களுக்கும் எதிராகக் கூறிய தனது சொந்த ஒப்புதல் மணிமொழியாகும்."( MEGA, Abt. 1, Bd. 1, Halbband 1, S. 10.)

தன்னுடைய ஆய்வுக் கருத்துரையில் மார்க்ஸ் கடவுள் இருப்பதாகக் கூறப்படும் நிரூபணங்கள் எல்லாம் வெறும் கிளிப்பிள்ளை வாதங்களைத் தவிர வேறில்லை என்று வலியுறுத்தினார். அதே சமயத்தில் மதக் கண்ணோட்டம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்ற போதிலும் மதம் ஒரு வலுவான சக்தியாக அமைந்துள்ளது என்பதை உணர்ந்தார். உண்மையான விஞ்ஞானத்தின் கடமைப்பாடு மதத்தைக் கீழடக்கி வெல்வதற்கு உதவி செய்வதற்கு பெருமுயற்சி எடுப்பதாகும். அதனுடைய குருட்டுக் கோட்பாடுகளைத் தூக்கி எறிவதற்கு மட்டுமல்ல அதனுடைய சாராம்சம் அதன் மூலாதாரங்கள் ஆகியவைவகளை விளக்கமாக எடுத்துக் கூறி அவைகளைப் பரவலாக அனைவரும் ஒப்புக்கொள்ளச் செய்வதாகும். கடவுள்களின் மீது நம்பிக்கைத் தோன்றியது என்பது மனிதனின் உணர்வு நிலையின் வளர்ச்சியின் முதல் கட்டத்தின் பிரதிபலிப்பாகும் என்றும் ஆரம்பகால புராதன நிலைச் சிந்தனையாகும் என்றும் அவைகளால் அன்று தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கும் விளக்கி வியாக்கியானம் செய்வதற்கும் சக்தியற்றதாகவும் அவற்றையெல்லாம் இயற்கையைக் கடந்த கடவுள் சக்திக்கும் பகுத்தறிவுக்கெட்டாத சாரப் பொருள்களின் செயல்களுக்கும் உரியதாக்கினார் என்றும் மார்க்ஸ் முடிவுகளுக்கு வந்தார். மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டினார்: "யாருக்கு காரணமின்றி பகுத்தறிவிற்கு ஆதாரமின்றி இந்த உலகம் தோன்றுகிறதோ காட்சியளிக்கிறதோ, அதனால் யார் தனக்குத்தானே அறிந்து கொள்ளாமல் தானே காரணமின்றி இருக்கிறானோ அவனுக்கு கடவுள் இருக்கிறார்." (MEGA, Abt. 1, Bd. 1, Halbband 1, S. 81.)

அக்காலத்தில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஒருவர் தன்னுடைய ஆய்வுக் கருத்துரையைத் தற்காத்துப் பேணிப் பேசுவது என்றால் மிகவும் சிக்கல் நிறைந்ததாகும், மிகுந்த பணச்செலவு நிறைந்ததாகும். எனவே மார்க்ஸ் தன்னுடைய ஆய்வுக் கருத்துரையை ஜெனா பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்தார். 1841 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அவருக்கு தத்துவஞானத்தில் பேரறிஞர் (டாக்டர்) பட்டம் கொடுக்கப்பட்டது.

மார்க்ஸினுடைய டாக்டர் பட்டத்துக்குரிய ஆய்வுக் கருத்துரை அவருடைய சித்தாந்த வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தைக் குறித்தது. அவர் அப்போது மொத்தத்தில் ஒரு எண்ண முதல்வாதியாகவும் ஒரு ஹெகலியராகவும் இருந்த போதிலும் அவர் மிகவும் துணிவுடன் நடறிருந்த நாத்திகவாதியாக இருந்தார். தத்துவஞானம் உண்மை நிலையின்மீது ஒரு செயலூக்க மிக்க நிலை கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அவருக்கு ஹெகல் அப்போதும் மிகப்பெரிய மேற்கோள் காட்டக்கூடிய அளவிலான அரிய நிபுணராகவும் "ஒரு அசுரத்தனமான சிந்தனையாளராகவும்" இருந்தார்.

 ஆனால் இந்த இளைஞர் மிகுந்த ஆர்வத்துடன் சுய நாட்டம் கொண்டு பணியாற்றி சில பிரச்சனைகளில் ஹெகலுடைய கருத்துக்களுக்கு மாறுபட்ட முடிவுகளை உள்ளடக்கியக் கொண்டுள்ள தனது சொந்த முடிவுகளையும் உருவாக்கினார். மார்க்ஸினுடைய ஆய்வுக் கருத்துரை அவர் தன்னுடைய சொந்தக் கண்ணோட்டத்தை உருவாக்குவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்கு உதவியது. அவர் தொடர்ந்து தத்துவஞானத்திற்கும் உண்மை நிலைக்கும் இடையில் உள்ள உறவு பற்றிய பிரச்சனையைப் பிடிவாதமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார். அதன் காரணத்தால் அப்பொழுதோ அதற்கப் பின்னரோ விரைவில் ஒரு நாள் சிந்தனைக்கும் நிலைநிற்பிற்கும் இடையிலுள்ள உறவு பற்றியவற்றை எதிர்த்து கட்டாயம் மேலே வருவார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவருடைய தீவிரமான போர்க் குணம் மிக்க நாத்திகவாதம் எண்ண முதல்வாதத்திற்கு அடிப்படையில் ஒத்துவராததும் பகைமை மிக்கதுமானதால் அது அவர் அடுத்தபடியான நாட்களில் பொருள் முதல் வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஏதுவாக வசதி செய்தது.

மேல்காணும் பகுதி காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து- அலைகள் வெளியீட்டகம்- பக்க எண்கள் 62 முதல் 67 வரை.

இன்றைய அறிமுகம் மற்றும் விவாத நூல் "மார்க்சின் முனைவர் பட்ட ஆராச்சிக் கட்டுரை" மூல ஆதாரம் Marx-Engels Collected Works Volume 1 March 1841; Publisher: Progress Publishers. இதன் அடிப்படையில் பேச கிளப் அவுஸில் இரவு 8 மணிக்கு இணையுங்கள் தோழர்களே... அதற்கான இணைப்பு பின்னர் வெளியிடுகிறேன். இவை அறிமுகப்படுத்தவே

கார்ல் மார்க்ஸ் தனது இளமைக்கால ஆய்வுகளில் மேற்கொண்ட “Epicurus பற்றிய குறிப்புகள்” ஆகும். இது வெறும் பண்டைய கிரேக்கத் தத்துவத்தின் சுருக்கமல்லமாறாகமார்க்ஸ் தனது பின்னாளைய வரலாற்றுப்

பொருள்முதல்வாதம்மனித விடுதலைமத விமர்சனம் மற்றும் சுதந்திரம் பற்றிய சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டிருந்த காலத்தின் அறிவுசார் ஆய்வகமாக இதைப் பார்க்க வேண்டும்.

எபிக்யூரஸ் யார்ஏன் மார்க்ஸ் அவரை ஆய்வு செய்தார்?

எபிக்யூரஸ் (Epicurus) பண்டைய கிரேக்கத்தின் பொருள்முதல்வாத தத்துவவாதி. உலகம் கடவுளால் படைக்கப்படவில்லை; மாறாக அணுக்கள் (atoms) மற்றும் வெற்றிடம் (void) ஆகியவற்றின் இயற்கையான இயக்கங்களால் உருவாகியுள்ளது என்றார். மனிதன் பயம், மூடநம்பிக்கை, விதி நம்பிக்கை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு அமைதியாக வாழ வேண்டும் என்பதே அவரது இலக்கு.

மார்க்ஸ் அவரை ஆய்வு செய்ததற்குக் காரணம்:

  • இயற்கையை இயற்கையால் விளக்க முயன்றவர்.
  • மதத்தை சமூகப் பயத்தின் விளைவாக விமர்சித்தவர்.
  • மனித சுதந்திரத்தை விதிநியதிக்கு எதிராக நிறுவியவர்.
  • உலகத்தை அமானுஷ்ய சக்திகளால் அல்ல, பொருள் இயக்கத்தால் புரிந்துகொண்டவர்.

1. அறிவின் அடிப்படை: உணர்வு உலகம்தான்

எபிக்யூரஸ் கூறுகிறார்:

எல்லா அறிவும் புலனுணர்விலிருந்தே வருகிறது.

மனிதன் முதலில் காண்கிறான், கேட்கிறான், தொடுகிறான்; பின்னரே சிந்திக்கிறான். உண்மை என்பது வானத்திலிருந்து இறங்குவதில்லை; அனுபவத்தின் மூலம் உருவாகிறது.

இது பின்னாளில் மார்க்சிய அறிவியலின் அடிப்படையாக மாறுகிறது:

சமூக இருப்புதான் சமூக சிந்தனையை நிர்ணயிக்கிறது.”

மனிதர்களின் எண்ணங்கள், மதங்கள், அரசியல் கோட்பாடுகள் எல்லாம் அவர்களின் வாழ்வியல் நிபந்தனைகளிலிருந்தே உருவாகின்றன.


2. கடவுள் பற்றிய எபிக்யூரஸ்

எபிக்யூரஸ் கடவுளை நேரடியாக மறுக்கவில்லை.

ஆனால் அவர் கூறியது:

  • கடவுள் இருந்தாலும் உலக நிர்வாகத்தில் தலையிடமாட்டார்.
  • மனித துன்பங்களை அவர் உருவாக்குவதில்லை.
  • இடியோ மின்னலோ கடவுளின் கோபமல்ல.
  • இயற்கை நிகழ்வுகளுக்கு இயற்கை காரணங்களே உள்ளன.

இதன் மூலம் அவர் மதத்தின் அரசியல் அதிகாரத்தை உடைக்கிறார்.

மார்க்ஸ் இதிலிருந்து ஒரு முக்கியமான பாடத்தைப் பெறுகிறார்:

மனிதன் தனது பயங்களை கடவுளாக உருவாக்குகிறான்.

பின்னர் மார்க்ஸ் மதத்தை:

மக்களின் பெருமூச்சு”
இதயமற்ற உலகின் இதயம்”
மக்களுக்கு அபின்”

என்று விமர்சிக்கிறார்.


3. மரணம் பற்றிய புரட்சி சிந்தனை

எபிக்யூரஸ்:

மரணம் நமக்கு ஒன்றுமில்லை.”

ஏன்?

  • நாம் உயிரோடு இருக்கும்போது மரணம் இல்லை.
  • மரணம் வந்தபோது நாம் இல்லை.

ஆகவே மரணப் பயம் தேவையற்றது.

மத நிறுவனங்கள் மரண பயத்தைப் பயன்படுத்தி மக்களை கட்டுப்படுத்துகின்றன.

மார்க்சிய பார்வையில்:

மரணத்திற்கு பின் சொர்க்கம் பற்றிய நம்பிக்கை, இம்மை வாழ்க்கையின் அநீதிகளை ஏற்றுக்கொள்ள மக்களை பழக்குகிறது.


4. இன்பம் என்றால் என்ன?

எபிக்யூரஸை பலர் தவறாக புரிந்துகொள்கிறார்கள்.

அவர் கூறும் இன்பம்:

  • அளவற்ற நுகர்வு அல்ல.
  • உடல் வலி இல்லாத நிலை.
  • மன அமைதி.
  • தேவையற்ற ஆசைகளிலிருந்து விடுதலை.

அவர் ஆசைகளை மூன்றாகப் பிரிக்கிறார்:

இயற்கையான மற்றும் அவசியமான ஆசைகள்

  • உணவு
  • தண்ணீர்
  • உறைவிடம்

இயற்கையான ஆனால் அவசியமில்லாத ஆசைகள்

  • ஆடம்பர உணவு

வீண் ஆசைகள்

  • முடிவில்லா செல்வம்
  • அதிகாரம்
  • புகழ்

இது இன்று நுகர்வுவாதத்திற்கு எதிரான விமர்சனமாகவும் வாசிக்கப்படலாம்.


5. அணுக்கோட்பாடு மற்றும் சுதந்திரம்

டெமாக்ரிட்டஸ் கூறினார்:

எல்லாம் இயந்திர விதிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் எபிக்யூரஸ் ஒரு புதிய கருத்தை முன்வைத்தார்:

Clinamen (அணுவின் விலகல்)

அணுக்கள் நேர்கோட்டில் மட்டும் நகர்வதில்லை; சில சமயம் சிறிது விலகுகின்றன.

இதனால்:

  • புதிய சேர்க்கைகள் உருவாகின்றன.
  • புதிய உலகங்கள் உருவாகின்றன.
  • முழுமையான விதிநியதி உடைக்கப்படுகிறது.

மார்க்ஸ் இதை மிக முக்கியமாகக் கருதுகிறார்.

ஏனெனில்:

முழு உலகமும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தால் சுதந்திரம் சாத்தியமில்லை.

இந்த இடத்தில்தான் மார்க்ஸ் எபிக்யூரஸை டெமாக்ரிட்டஸைவிட உயர்வாக மதிக்கிறார்.


6. அரசு மற்றும் நீதி பற்றிய எபிக்யூரஸ்

அவரது பார்வை மிகவும் நவீனமானது.

நீதி என்பது:

இயற்கையில் இருக்கும் நிரந்தர உண்மை அல்ல.

மாறாக:

மனிதர்கள் ஒருவருக்கொருவர் தீங்கு செய்யாமல் வாழ உருவாக்கிய ஒப்பந்தம்.

அவர் கூறுகிறார்:

  • பயனுள்ளவரை சட்டம் நீதி.
  • பயனற்றதாக மாறினால் அது இனி நீதி அல்ல.

இது வரலாற்றுப் பார்வைக்கான விதையாக உள்ளது.

பின்னர் மார்க்ஸ்:

அரசு மற்றும் சட்டம் வர்க்க உறவுகளின் விளைவு

என்று விளக்குகிறார்.


7. மார்க்ஸின் விமர்சனம்

மார்க்ஸ் எபிக்யூரஸை பாராட்டுவதோடு விமர்சிக்கவும் செய்கிறார்.

எபிக்யூரஸ்:

  • தனிமனித அமைதியை வலியுறுத்துகிறார்.
  • சமூக மாற்றத்தை நோக்கவில்லை.
  • அடிமைமுறை சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தை ஆய்வு செய்யவில்லை.

அவரது இலக்கு:

மன அமைதி (Ataraxia)

ஆனால் மார்க்ஸின் இலக்கு:

சமூக விடுதலை.

எபிக்யூரஸ்:

உலகத்தைப் புரிந்துகொள்; அமைதியாக வாழ்.”

மார்க்ஸ்:

உலகத்தைப் புரிந்துகொள்; அதை மாற்று.”


8. மார்க்சிய-லெனினிய பார்வையில் எபிக்யூரஸின் வரம்புகள்

எபிக்யூரஸ் பொருள்முதல்வாதி என்றாலும்:

  1. வர்க்கப் போராட்டத்தை அறியவில்லை.
  2. உற்பத்தி உறவுகளை ஆய்வு செய்யவில்லை.
  3. அரசின் வர்க்கத் தன்மையை கண்டறியவில்லை.
  4. சமூக மாற்றத்தின் இயக்க சக்தியை விளக்கவில்லை.

ஆனால் அவர் செய்த வரலாற்றுப் பங்களிப்பு மிகப் பெரியது:

  • மதத்திற்கு எதிராக இயற்கை விளக்கத்தை முன்வைத்தார்.
  • மனித சுதந்திரத்தை வலியுறுத்தினார்.
  • அறிவை அனுபவத்தின் மீது நிறுவினார்.
  • பயத்திலிருந்து மனிதனை விடுவிக்க முயன்றார்.

முடிவுரை

எபிக்யூரஸ் என்பது வெறும் “இன்ப தத்துவவாதி” அல்ல. அவர் பண்டைய உலகின் மத அதிகாரம், விதிநியதி, மூடநம்பிக்கை மற்றும் அச்ச அரசியலுக்கு எதிராக மனித சுதந்திரத்தின் குரலாக தோன்றியவர்.

மார்க்ஸ் அவரிடம் இருந்து:

  • பொருள்முதல்வாதத்தின் விதையை,
  • மத விமர்சனத்தின் அடித்தளத்தை,
  • மனித சுதந்திரத்தின் தத்துவத்தை

பெற்றுக்கொள்கிறார்.

ஆனால் அதைக் கடந்து, மனிதன் தனிப்பட்ட அமைதியை மட்டுமல்ல, சமூக விடுதலையையும் அடைய வேண்டும் என்று கூறி, வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மற்றும் வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை உருவாக்குகிறார்.

அதனால் எபிக்யூரஸ் மற்றும் மார்க்ஸ் இடையேயான உறவு என்பது பண்டைய பொருள்முதல்வாதத்திலிருந்து நவீன புரட்சிகர பொருள்முதல்வாதத்திற்கான பாலம்” என்று கூறலாம்.

கார்ல் மார்க்சின் முனைவர் பட்ட ஆய்வேடு (Doctoral Dissertation) என்பது வெறும் கல்வி ஆய்வு அல்ல; அது பின்னாளில் உருவாகவிருந்த மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் தத்துவ அடித்தளமாகும். 1841 ஆம் ஆண்டில் அவர் சமர்ப்பித்த ஆய்வேட்டின் தலைப்பே.

The Difference Between the Democritean and Epicurean Philosophy of Nature

(டெமாக்ரிட்டஸ் மற்றும் எபிக்யூரஸின் இயற்கைத் தத்துவங்களுக்கிடையேயான வேறுபாடு)

இந்த ஆய்வை வரிசைக்கிரமமாகப் புரிந்துகொண்டால், மார்க்ஸ் எவ்வாறு ஹெகலிய தத்துவத்திலிருந்து புரட்சிகர பொருள்முதல்வாதத்திற்குச் சென்றார் என்பதை அறிய முடியும்.

கார்ல் மார்க்சின் முனைவர் பட்ட ஆய்வேடு: ஒரு வரிசைக்கிரமமான ஆய்வு

அறிமுகம்

1841 ஆம் ஆண்டு, இளம் கார்ல் மார்க்ஸ் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை சமர்ப்பித்தார். அப்போது அவருக்கு வயது 23 மட்டுமே. பின்னாளில் "மூலதனம்", "கம்யூனிஸ்ட் அறிக்கை", "ஜெர்மன் கருத்தியல்" போன்ற படைப்புகளை எழுதிய புரட்சிகர சிந்தனையாளர் என்ற நிலையில் அல்லாமல், கிரேக்கத் தத்துவத்தை ஆழமாக ஆராய்ந்த இளம் தத்துவவியலாளராக அவர் இந்த ஆய்வை எழுதினார்.

இந்த ஆய்வேட்டின் மையக் கேள்வி:

"டெமாக்ரிட்டஸ் மற்றும் எபிக்யூரஸ் இருவரும் அணுக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டபோதும், ஏன் அவர்கள் வெவ்வேறு தத்துவ முடிவுகளுக்கு வந்தனர்?"


1. டெமாக்ரிட்டஸின் இயற்கைக் கண்ணோட்டம்

மார்க்ஸ் முதலில் டெமாக்ரிட்டஸின் அணுக்கோட்பாட்டை ஆராய்கிறார்.

டெமாக்ரிட்டஸின் கருத்துப்படி:

  • உலகம் அணுக்களாலும் வெற்றிடத்தாலும் ஆனது.
  • அனைத்தும் அவசிய விதிகளால் இயங்குகின்றன.
  • இயற்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணம் உண்டு.
  • தற்செயல் அல்லது சுதந்திரம் இல்லை.

இந்தக் கோட்பாடு இயற்கையை விளக்குவதில் வலிமையானதாக இருந்தாலும், மனித சுதந்திரத்திற்கு இடமளிக்கவில்லை.

மார்க்ஸ் இதனை "இயந்திரவியல் பொருள்முதல்வாதம்" எனக் கருதுகிறார்.


2. எபிக்யூரஸின் திருத்தம்

அடுத்து மார்க்ஸ் எபிக்யூரஸை ஆராய்கிறார்.

எபிக்யூரஸ் டெமாக்ரிட்டஸின் அணுக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்தார்.

அணுக்கள் நேர்கோட்டில் மட்டுமே நகர்வதில்லை.

சில நேரங்களில் அவை:

"Clinamen"
(சாய்வு அல்லது விலகல்)

என்ற வடிவில் தங்கள் பாதையிலிருந்து விலகுகின்றன.

இதனால்:

  • புதிய சேர்க்கைகள் உருவாகின்றன.
  • புதிய நிகழ்வுகள் தோன்றுகின்றன.
  • முழுமையான விதிநியதி உடைகிறது.

3. கிளைனமன் (Clinamen) என்ற கருத்தின் முக்கியத்துவம்

மார்க்ஸின் ஆய்வேட்டின் மையப்புள்ளி இதுவே.

எபிக்யூரஸின் அணு விலகல் வெறும் இயற்பியல் விளக்கம் அல்ல.

அது:

  • சுதந்திரத்தின் தத்துவ உருவகம்.
  • விதிநியதிக்கு எதிரான மனித எதிர்ப்பின் வடிவம்.
  • தனிமனித சுயநிலையின் அறிவிப்பு.

என்று மார்க்ஸ் விளக்குகிறார்.

இங்கு முதன்முறையாக மனிதன் இயற்கையின் அடிமை மட்டுமல்ல; தன்னை உருவாக்கும் ஆற்றல் கொண்டவன் என்ற கருத்து தோன்றுகிறது.


4. மத விமர்சனத்தின் தொடக்கம்

எபிக்யூரஸ் கூறுகிறார்:

  • கடவுள்கள் இருந்தாலும் மனித வாழ்வில் தலையிடுவதில்லை.
  • இயற்கை நிகழ்வுகள் கடவுளின் செயல் அல்ல.
  • இடியும் மின்னலும் இயற்கை நிகழ்வுகள்.

மார்க்ஸ் இதனை மிகவும் முன்னேற்றமான சிந்தனையாகக் கருதுகிறார்.

ஏனெனில்:

மதம் மனிதனை பயத்தின் மூலம் கட்டுப்படுத்துகிறது.

ஆனால் எபிக்யூரஸ்:

"பயத்திலிருந்து மனிதனை விடுவிக்க வேண்டும்"

என்று வலியுறுத்துகிறார்.


5. தத்துவத்தின் நோக்கம்

டெமாக்ரிட்டஸின் நோக்கம்:

உலகத்தை விளக்குவது.

எபிக்யூரஸின் நோக்கம்:

மனிதனை விடுவிப்பது.

இந்த வேறுபாட்டை மார்க்ஸ் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறார்.

அறிவு என்பது வெறும் தகவல் அல்ல.

அது மனித விடுதலைக்கான கருவியாக இருக்க வேண்டும்.

என்ற எண்ணம் இங்கே விதையாக உருவாகிறது.


6. சுயநிலை (Self-consciousness)

மார்க்ஸின் ஆய்வேட்டில் மிக முக்கியமான கருத்து:

சுயபிரக்ஞை (Self-consciousness)

மனிதன்:

  • இயற்கையை அறிகிறான்.
  • தன்னையும் அறிகிறான்.
  • தனது நிலையை மாற்ற முயல்கிறான்.

இதுவே சுதந்திரத்தின் அடிப்படை.

எபிக்யூரஸ் மனித சுயநிலையை முன்னிறுத்தியதால் மார்க்ஸ் அவரை உயர்வாக மதிக்கிறார்.


7. டெமாக்ரிட்டஸ் மற்றும் எபிக்யூரஸ்: மார்க்ஸின் முடிவு

டெமாக்ரிட்டஸ்:

  • அவசியத்தை முன்னிறுத்துகிறார்.
  • விதிநியதியை ஏற்றுக்கொள்கிறார்.

எபிக்யூரஸ்:

  • சுதந்திரத்தை முன்னிறுத்துகிறார்.
  • மனித சுயநிலையை பாதுகாக்கிறார்.

எனவே மார்க்ஸ் எபிக்யூரஸை வெறும் அணுக்கோட்பாட்டாளராக அல்லாமல், மனித விடுதலையின் தத்துவவாதியாகக் காண்கிறார்.


8. மார்க்சியத்தின் விதைகள்

இந்த ஆய்வேட்டில் இன்னும்:

  • வர்க்கப் போராட்டம் இல்லை.
  • உபரி மதிப்பு கோட்பாடு இல்லை.
  • வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இல்லை.

ஆனால் அவற்றின் விதைகள் இருக்கின்றன.

அவை:

  1. மத விமர்சனம்.
  2. மனித விடுதலை.
  3. சுயநிலை.
  4. சுதந்திரம்.
  5. பொருள்முதல்வாதம்.

பின்னர் இவை அனைத்தும் வளர்ந்து மார்க்சிய தத்துவமாக உருவாகின்றன.


முடிவுரை

மார்க்ஸின் முனைவர் பட்ட ஆய்வேடு கிரேக்கத் தத்துவத்தைப் பற்றிய கல்வி ஆய்வாகத் தோன்றினாலும், அதன் உள்ளே எதிர்கால மார்க்சியத்தின் விதைகள் மறைந்துள்ளன.

எபிக்யூரஸின் அணு விலகலை அவர் வெறும் இயற்பியல் நிகழ்வாகப் பார்க்கவில்லை. மனிதன் விதியையும் அதிகாரத்தையும் எதிர்த்து தன் வரலாற்றைத் தானே உருவாக்கும் சுதந்திரத்தின் தத்துவ அறிவிப்பாகப் புரிந்துகொண்டார்.

அதனால் மார்க்ஸின் முனைவர் பட்ட ஆய்வேடு என்பது கிரேக்கத் தத்துவத்தின் ஆய்வு மட்டுமல்ல; மனித விடுதலையின் தத்துவப் பிறப்புச் சான்றிதழாகும்.



தொடர்புடைய கட்டுரைகள்:

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

வரலாற்றுப் பொருள்முதல்வாதம்: சமூக மாற்றத்தின் அறிவியல் ஆய்வு

இங்கே மதவாதிகளை நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை ஏனெனில் காலதிற்கும் களத்திற்கும் அப்பாற்பட்டவராக கடவுளையும் மதத்தையும் பேசும் பொழுது அவர்க...

செய்தியை சார்ந்த அலசல்