ஈரான் மீதான அமெரிக்காவின் போர் படிப்பினைகள்

ஈரான் மீது தொடுக்கப்பட்ட அமெரிக்க+ இஸ்ரேல் போர் டிரம்ப் நினைத்தாலும் தடுக்க இயலாத அளவுக்கு எல்லைகளை மீறி  உலக ப் பொருளாதாரத்தையே அழித்து வரும் அவல நிலையில் ‌உள்ளது. 

போரில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் அமெரிக்கா நிலை!

பென்குரியன் இஸ்ரேல் விமான நிலையம், மத்திய பகுதி,  சவுதி அரேபியா, கத்தார், குவைத் விமான நிலையங்கள் என ஒரே நேரத்தில்.  9 வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி வருகிறது.‌ஐக்கிய எமிரேட்ஸின் இரு கப்பல்களையும், எரிவாயு நிலையங்களையும்  ஈரான் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. காரணம் உலகறிந்தவையே!

அமெரிக்கா+ இஸ்ரேல்  ஈரானிய எரிவாயு வயலை அழித்து விட்டு, டிரம்ப் தனக்கு தெரியாது என பொய் கூறி வருகிறார்.

ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுடன் கலந்து ஆலோசித்துதான் செயல்பட்டோம் என்பது?

        ஈரானை வெல்ல முடியாமல் டிரம்ப் இப்படி ஈரானிய வளத்தை அழித்து வருகின்றார்.. அடுத்து ஏற்கனவே போருக்கு வந்த அமெரிக்க விமானங்கள் தாங்கி ஜெரால்ட் போர் கப்பலில் தீ-பற்றி பழுது ஏற்பட்டு ,திரும்பிப் போகும் நிலையில், போருக்கு வந்த அமெரிக்க ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலும் ஈரானிய ஏவுகணைகளுக்கு பயந்தே 1300 கிமி தொலைவில்..

தற்போது மேலும் மூன்று போர் கப்பல்களும் அமெரிக்காவில் இருந்து 2500 படை வீரர்களை ஏற்றிக் கொண்டு வருவதாக செய்திகள் வருகிறது.. அப்படியே வந்தாலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது..நிலைத்து நின்று தாக்கும் வலிமை இல்லை...சும்மா பம்மாத்து காட்டி விட்டு அழிவது திண்ணம்..

ஆனால் ஹார்மூஸ் நீரீணை அருகே ஒரு சேர நுழைய முடியாது.. அத்து மீறினால் ஈரான் நிச்சயமாக அடி கொடுக்கும் ஒரு ஈரானுக்கு சாதகமான இயற்கை அமைப்பு..

பாதுகாப்பை அரபு நாடுகளுக்கு வழங்க ஏராளமான டாலரை பெற்றுக் கொண்ட டிரம்ப்,அரபு நாடுகளை பாதுகாக்க முடியாமல் கலைந்து ஓடுவதோடு   அமெரிக்கா போரைத் தூண்டி வருகிறது.. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பேசி கலந்து ஆலோசித்து தாக்கி விட்டு, இந்த பழியை ஈரான் மீது  போட்டு,அரபு நாடுகளை போருக்குள் இழுக்க முயன்று வருகிறது..

சவுதி அரேபியா, கத்தார் இன்னும் டிரம்ப்  தம்மை பாதுகாப்பார் என நம்பி ஏமாந்து  வருகின்றனர். அதேபோல் ஈராக்கில் இருந்து இத்தாலி, பிரான்ஸ் வெளியேறி வரும் நிலையில்,ஈராக்கில் ஏற்கனவே 120000 படைவீரர்கள் ஈரானுக்கு ஆதரவாக களத்தில்.ஆங்காங்கே அரபு நாடுகளில் அரசர்களுக்கு எதிராக மக்கள் எதிர்த் தெழுந்து போராட்டம் இவ்வாறாக உள்ளது நிலைமை...

இதனால் டிரம்புக்கு பயங்கரமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்க புலனாய்வு துறை  ஈரான் அணு ஆயுதத்தை செரியூட்ட வில்லை என்றும், டிரம்ப் ஏன் ஈரானுடன் போருக்கு போக வேண்டும் என்று கூறிவிட்டது‌.இதனால் டிரம்ப்க்கு போரில் இருந்து பின்வாங்க முடியாமல் மிகவும் பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

உலகில் பல நாடுகளை #காலனித்துவ கொள்கையில் #ஆக்கிரமித்து வரும், ஆனாலும் மக்களை மதத்தின் பெயரால் #ஏமாற்றி பிழைத்து வந்த #அமெரிக்கா மற்றும் #இஸ்ரேல், தற்போது தாங்கள் ஈரானை #வெல்ல #முடியாமல், பயந்து  இந்த போர் இயேசு கிறிஸ்து கடைசி நாட்களில் வரும் போது நடக்கும் போராக ஒரு #மெசியாவாக, அதாவது ஒரு மீட்பராக வருவதற்கான போர் இதுதான் என, எப்ஸ்டீன் பைல்படி சிறுமிகளை #பாலியல் செய்த டிரம்ப் & எப்ஸ்டீன் எனும் மொசாத் ஏஜன்ட் மூலம்  டிரம்ப்பை சிக்க வைத்து,அவரை #மிரட்டி  போருக்குள் தள்ளி இருக்கும் காஸாவில்  ஒரு இனப் படுகொலை செய்த நெதன்யாகு தான் இங்கே #இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் செய்வதாக #பொய்பிரச்சாரம் செய்து ‌‌, ஏவாஞ்சிலிக்கன் கிறிஸ்தவ மக்களையும் நம்ப வைத்து உலகை அழிக்க போவதாக மிரட்டி வருகின்றனர்..

ஈரானில் எத்தனை தலைவர்களை கொன்று குவித்தாலும், ஏற்கனவே நன்கு திட்டமிட்டபடி பல அடுக்காக பலர் தலைவர்கள் நியமிக்கப்பட்டு தயாராக தமது வெற்றிக்கான படிகளில் ஏறி வருகின்றனர்..

ஆயிரம் இருப்பினும் ஈரான் இன்னமும் வெற்றிப் பாதையில்...300 ஆண்டுகளாக உலகையே திருடி வந்த அமெரிக்க வல்லரசை அறவழியில் அழித்து...

இவனுக ஈரானிய தலைவர்களை கொன்று குவித்து ஆட்சி #மாற்றத்தை ஏற்படுத்த முயன்று தோற்றுப் போகும் அதே வேளையில்,

அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆட்சிக்கே ஆபத்தாக.. அமெரிக்காவில் வாசிங்டன் வான் தளத்தில் பல மர்மான முறையில்  ஏவுகணைகள் பறந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதத்தின் பெயரால் இயேசு மெசியா வரப் போகிறார் என்று அணு குண்டை வீசும் அளவுக்கு மததத்தின் பெயரால் உலாவும் தீய சக்திகளுக்கு அணு குண்டை எடுக்கும் அளவுக்கு துணிச்சல் வருமா?

+++

 மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்

அமெரிக்காவின் பெருமை, 'அசைக்க முடியாத சக்தி', 'எதிரி கண்களுக்குத் தெரியாத மாயாவி' என வர்ணிக்கப்பட்ட எஃப்-35 (F-35) போர் விமானத்தின் பிம்பம், ஈரான் வான்பரப்பில் சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது..
சுமார் 30 ஆண்டுகால உழைப்பு, 400 பில்லியன் டாலர் முதலீடு என உலக வரலாற்றிலேயே மிக விலையுயர்ந்த ராணுவத் திட்டமாக உருவெடுத்த இந்த விமானம், ஒரு சாதாரணத் தொழில்நுட்பத்திடம் சிக்கித் தவிப்பதுதான் இப்போது சர்வதேச ராணுவ வட்டாரத்தின் ஹாட் டாபிக்.
ரடார் கண்களுக்குத் தெரியாத 'கடவுள்'?
எஃப்-35 என்பது வெறும் போர் விமானம் மட்டுமல்ல; அது அமெரிக்காவின் ராணுவத் திமிர். "எங்கள் ஏவுகணைகளுக்கும், சென்சார்களுக்கும், ஏன் உங்கள் பிரார்த்தனைகளுக்கும் கூட எட்டாத உயரத்தில் நாங்கள் இருக்கிறோம்" என உலகம் முழுமைக்கும் அமெரிக்கா விடுத்த பகிரங்க அறைகூவல் அது. ரடார் திரையில் இதைக் கண்டுபிடிக்க முடியாது, இன்ஃப்ராரெட் கதிர்களால் மோப்பம் பிடிக்க முடியாது என்பதுதான் இதன் 'யுஎஸ்பி' (USP).
ஆனால், இந்த 'மெமோ' ஈரானுக்குப் போய்ச் சேரவில்லை போலிருக்கிறது!
மாட்டிக்கொண்ட மாயாவி
மார்ச் 19, 2026. ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த எஃப்-35 விமானத்தை, ஈரானின் 'IRST' (Infrared Search and Track) சிஸ்டம் மிக எளிதாகக் கண்டறிந்து லாக் (Lock) செய்துள்ளது. ஈரானிய இன்ஜினியர்கள் ஏதோ மாயாஜாலம் செய்துவிடவில்லை. மிக எளிமையான அறிவியல் தான் இதற்குக் காரணம்.
எஃப்-35 விமானம் எவ்வளவு தான் ரடாருக்குத் தெரியாத வடிவம் கொண்டிருந்தாலும், அதன் என்ஜின் வெளிப்படுத்தும் வெப்பம் மிக அதிகம். விண்வெளியில் எரியும் ஒரு பெரிய அடுப்பைப் போல, அந்த விமானத்தின் வெப்பத்தை (Heat Signature) ஈரானின் சென்சார்கள் எளிதாகப் பிடித்துவிட்டன. சுருக்கமாகச் சொன்னால், "திருடன் கறுப்பு உடை அணிந்து இருட்டில் மறைந்திருந்தாலும், அவன் கையில் வைத்திருக்கும் எரியும் டார்ச் லைட் அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது."
கசிந்த ரகசியம்: கலக்கத்தில் பென்டகன்
ஈரான் இப்போது கையில் வைத்திருக்கும் அந்த 'ஹீட் சிக்னேச்சர்' தரவுகள், வெறும் தகவல் மட்டுமல்ல; அது அமெரிக்காவின் எதிரிகளான மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கிற்கு ஒரு மிகப்பெரிய பொக்கிஷம். அதுதான் ரஷ்யா - சீனாவிற்கு அமெரிக்கா போட்டுக்கொடுத்த எளிதான வழி! எஃப்-35 விமானத்தை வீழ்த்த முடியுமா என்று இத்தனை காலம் யோசித்துக் கொண்டிருந்த நாடுகளுக்கு, "தாராளமாகச் செய்யலாம், அதற்கான வழி இதோ!" என்று விடை கிடைத்துவிட்டது.

தொழில்நுட்பத்தை விடப் பெரிய பாதிப்பு இந்தத் தோல்வி மென்பொருளிலோ அல்லது விமானத்தின் மேல்பூச்சிலோ (Coating) இருக்கும் குறைபாடு அல்ல. இது ஒரு போர் விமானியின் நம்பிக்கையைச் சிதைக்கும் விஷயம். இனி ஒவ்வொரு முறை எஃப்-35 விமானத்தை இயக்கும்போதும், "கீழே இருப்பவன் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பானோ?" என்ற சந்தேகம் ஒவ்வொரு விமானிக்கும் எழும். ஆக்ரோஷமாகப் பாய வேண்டிய இடத்தில் தயக்கம் குடிபுகும்.
400 பில்லியன் டாலர்... 30 ஆண்டுகாலத் தவம்... கடைசியில் ஒரு சாதாரண ஹீட் சென்சாரிடம் தோற்றுப் போயிருப்பது அமெரிக்காவிற்குப் பெரும் தலைகுனிவுதான். தொழில்நுட்ப உலகில் 'யாரும் வெல்ல முடியாதவர்' என எவருமில்லை என்பதை ஈரான் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்