"சாதி அன்றும் இன்றும்" மார்க்சிய கண்ணோட்டத்தில் புரிந்துக் கொள்வதற்கான முயற்சியில் இன்றைய முன்னெடுப்பு
மனித பரிணாமமும் சாதி உருவாக்கதினை மார்க்சிய அடிப்படையில் விளங்கிக் கொள்தல்
இந்த ஆதாரங்கள் 400 கோடி கால மனிதப் பரிணாம வளர்ச்சியை மிக விரிவாக விளக்குகின்றன. உயிரினங்களின் தோற்றம், ஆரம்பகால மனிதர்களின் கருவிகள் மற்றும் கூட்டு உழைப்பின் மூலம் மொழி உருவான விதம் குறித்து இங்கு விவாதிக்கப்படுகிறது. நிலவுடைமைச் சமூகமாக மாறியபோது ஏற்பட்ட உற்பத்தி உபரி, வர்க்கப் பிரிவினை மற்றும் தந்தைவழிச் சமூகம் ஆகியவை எவ்வாறு சாதி அமைப்பிற்கு அடித்தளமிட்டன என்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தில் இந்தத் தொகுப்பு ஆராய்கிறது. தொடக்கத்தில் தாய்வழிச் சமூகமாக இருந்த மனித இனம், சொத்துரிமை மற்றும் அதிகாரப் போட்டியால் எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. வரலாற்றை வெறும் நிகழ்வுகளாகப் பார்க்காமல், உற்பத்தி முறைகளுக்கும் சமூகக் கட்டமைப்புகளுக்கும் இடையிலான உறவாக இந்தத் தரவுகள் அணுகுகின்றன. இறுதிப் பகுதியாக, தொழில் பிரிவினையும் அகமண முறையுமே சாதி எனும் பிணி உருவாவதற்குக் காரணமான சமூகப் பொருளாதாரக் காரணிகள் என்று இந்த ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மனிதன் பேசியே அறியாத ஆதி காலத்திலிருந்து மொழி எப்படி உருவானது?
தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தைவழிச் சமூகமாக மாறிய வரலாறு பற்றி விளக்கவும்.
சாதி உருவாவதற்கு உழைப்புப் பிரிவினை மற்றும் அகமணமுறை எவ்வாறு காரணமாயின?
இந்த முழுப்பகுதியையும் ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
புரோட்டோசெல்களிலிருந்து மனிதர்கள் வரை: மனித பரிணாம வளர்ச்சியின் 4 பில்லியன் ஆண்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
பூமியில் உயிர், புரோட்டோசெல்கள் எனப்படும் மிக எளிய உயிரின வடிவங்களுடன் தொடங்கியது. இவற்றில் சிக்கலான கட்டமைப்புகள் இல்லை, ஆனால் அவை படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து, மிகவும் மேம்பட்ட உயிரினங்களாக மாறின.
பல மில்லியன் ஆண்டுகளில், இந்த ஆரம்பகால உயிரினங்கள் பலசெல்லுயிரிகளான விலங்குகளுக்கு வழிவகுத்தன; டிக்கின்சோனியா போன்ற எளிய உயிரினங்களே இதற்கு முதல் எடுத்துக்காட்டுகளாகும்.
காலப்போக்கில், இருபக்கச் சமச்சீர், நரம்பு மண்டலங்கள் மற்றும் கண் புள்ளிகள் போன்ற மேலும் சிக்கலான அமைப்புகள் உருவாகி, முதல் முதுகெலும்புள்ள உயிரினங்களுக்கு வழிவகுத்தன. மீன்கள் முதல் முதுகெலும்புள்ள உயிரினங்களாகத் தோன்றின. அதைத் தொடர்ந்து, நான்கு கால் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியுடன் கடலிலிருந்து நிலத்திற்கு உயிரினங்கள் இடம்பெயர்ந்தன. இது இறுதியில் நீர்நில வாழ்விகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகளுக்கு வழிவகுத்தது.
சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பாலூட்டிகள் பரிணாம வளர்ச்சி அடைந்தன; டைனோசர்களுடன் சிறிய, மூஞ்சூறு போன்ற உயிரினங்கள் தோன்றின.
காலப்போக்கில், பாலூட்டிகள் முடி, பால் சுரப்பிகள் மற்றும் மிகவும் திறமையான இரத்த ஓட்ட மண்டலங்கள் போன்ற பண்புகளை வளர்த்துக் கொண்டன. 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, முதல் பெரும் மனிதக்குரங்குகள் தோன்றின, இது ஹோமோ பேரினத்தில் ஆரம்பகால மனிதர்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இந்த ஆரம்பகால மனிதர்கள் இருகால் நடமாட்டம், பெரிய மூளைகள், மற்றும் கருவிகள், மொழி, நெருப்பு ஆகியவற்றின் வளர்ச்சி போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களால் குறிக்கப்பட்டனர்.
இன்று, மனித பரிணாம வளர்ச்சி தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பின்னணியில் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வருகிறது. இது மரபணுப் பன்முகத்தன்மை குறைந்து, மனித இனம் மாறிவரும் உலகளாவிய சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஒரு எதிர்காலத்திற்கு வழிவகுக்கக்கூடும்.
ஆதாரம் : https://www.visualcapitalist.com/path-of-human-evolution
மனித குலமானது காட்டுமிராண்டி நிலையிலிருந்து இன்றைய நிலை அடைய பல இலட்சம் ஆண்டுகளாயின. மனிதன் இயற்கையோடு போரிட்டு தன்னை வளப்படுத்திக் கொண்டான். அவனின் வாழ்க்கை தேவையின் ஒரு கட்டத்தில் சாதி அதனை பற்றிய கோட்பாடுகள் சமுக நியதி கருத்துருவாக்கம் இவ்வாறு சாதியின் வளர்ச்சி போக்கை புரிந்துக் கொள்ள இயன்ற அனைத்தையும் ஆய்வுமுறையின் அடிப்படையில் உங்கள் முன் இந்தநூலில் வைக்கப்பட்டுள்ளது.
உற்பத்திக் கருவிகளை உருவகப்படுத்தும் பொழுது மனிதன் தன்னையும் உருவகப் படுத்திக் கொள்கிறான்.
உற்பத்தி செய்யும் பொழுது மனிதன் இயற்கையின் உருவத்தை மாற்றவில்லை அவன் தன்னையே மாற்றிக் கொள்கிறான் ஒரு குறிப்பிட்ட முறையில் வேலை செய்வதன் மூலம் தான் தங்கள் உழைப்பின் பலனை பரிவர்த்தனை மூலம் மக்கள் உற்பத்தி செய்ய முடியும் உற்பத்தி செய்வதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் இடையிலே உறவுமுறை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த ஒருவருக்கு ஒருவர் உறவு எனும் விஷயத்தில் நின்று கொண்டுதான் அவர்கள் இயற்கை பயன்படுத்திக்கொள்கின்றனர் உற்பத்தி செய்கின்றனர் என்றார் மார்க்ஸ்.
50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பயன்படுத்திய பல கருவிகள் அடிப்படையில் அவர்கள் ஆரம்பகால மனித வளர்ச்சி ஆராய்ச்சியாளர்கள் நிர்ணயிக்கின்றனர். அந்த மனிதன் தீ மூட்டினான் கிழங்குகளை வேக வைத்து தின்றான் தோல்ஆடைகளை அணிந்தான் நம்மை போன்று அவனும் முக்கியமான வேலைகளை கையால் செய்தான் அந்த மனிதனை நீண்டதாலர் மனிதன் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றனர்.அந்தக் காலத்தில் ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க பகுதிகள் ஒன்றாகவும் வெறும் பனியால் மூடப்படும் கிடந்ததாகவும் கூறுகின்றனர் .
சுமார் 30 ஆயிரம் வருடங்களுக்கு முன் பருவ காலத்தில் மாற்றம் ஏற்பட்டது குளிர் குறைந்து வெப்பம் வரலாயிற்று பனியிலிருந்து விடுபட்டு வெப்பம் அந்தக் காலத்தில் அதிகமாயிற்று. அந்தக் காலத்தில் புத்திசாலியான விஷயம் தெரிந்த ஒரு முறையான கூட்டு வாழ்க்கை மேற்கொண்ட இன்னொரு கூட்டம் தெற்கிலிருந்து வடக்கே வந்தது. அந்தக் கூட்டம் நீண்டதாலர் மனிதர்கள் வாழ்ந்த உலகில் பிரவேசித்தது வலிமை படைத்த புதிய கூட்டம் நீண்டதாலர் மக்களை வென்றது அவர்களில் பலரைக் கொன்றது. இவர்களை உயிரின ஆராய்ச்சியாளர் ருடோதியன் மனிதர் என்று அழைக் கிறார்கள்.அதுவரையில் மனிதன் பச்சை மாமிசத்தை தின்றான் ஆனால் ருடோதியன் மனிதன் நெருப்பை உபயோகிக்க கற்றான் அவன் மாமிசத்தை வேக வைத்து தின்றான் இங்கே நமக்கு இந்த மனித சமூகம் வரலாறை புரிந்துகொள்வதற்கு அந்த கால வரலாறு ஏதும் எழுதப்படவில்லை. எனவே வாழ்க்கை முறையில் வாழ்க்கையில் அவர்கள் பயன்படுத்திய கருவிகளை அடிப்படை கொண்டும் அவர்கள் அந்த காலத்தில் அறிவு சமூக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் .
பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் மனிதன் பேசவில்லை, அவனால் பேச முடியவில்லை ஆரம்பகால மனிதன் தாடை எலும்பு மிக சிறிதாக இருந்தால் அவன் நா அசையவில்லை, எனவே அப்பொழுது அவன் பேசவில்லை அவன் சைகை காட்டினான் ஆனால் சைகை காட்டி அவனால் வாழ முடியாது அல்லவா ?
மனிதன் கூட்டு உழைப்பில் ஈடுபட்டதன் பிறகு அவனுடைய பேச்சின் அவசியம் அதிகரித்தது. சைகையால் செயல்படும் முறையில் விடை கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வாழ்க்கை சாதனங்களை உற்பத்தி செய்யும் முறையில் மாற்றம் ஏற்பட்டு தொடர்ந்து மனிதனின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டது .
வாயும் நாவும் செயல்பட ஆரம்பித்தது அவன் சத்தம் போட ஆரம்பித்தான். இந்த சப்தம் தான் ஆரம்பத்தில் மனிதனின் பேச்சு ஆகும்.
கூட்டு வாழ்க்கையின் பேச வேண்டிய அவசியத்தை உண்டு பண்ணியது. ஆதலால் தனது கருத்தை சப்ததின் மூலம் வெளிப்படுத்திய மனிதன் பேச ஆரம்பித்தான் சத்தம் வார்த்தைகளாக பரிணமித்தன கூட்டு வாழ்க்கை மொழியை வளர்த்தது .
ஆதி மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்தான் எனும் விஷயம் விவாதத்துக்குறியது இந்தக் காலத்தை வரையறுத்து கூறமுடியாது, என்றாலும் சுமார் 20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்து இருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மனிதன் சிறு கூட்டங்களாக மலைகளில் வாழ்ந்த காலத்தில் தான் அவன் செடிகொடிகளை அறிந்தான் மலைகளில் வாழ்ந்த காலத்தில் மனிதன் செடிகொடிகளை நட ஆரம்பித்த காலம்,பிறகு நதிக்கரை ஓரங்களில் அவன் குடியேறியபோது பயிரிட தொடங்கினான் ஆம் விவசாயம் செய்ய வேண்டிய அவசியம் மனிதனுக்கு ஏற்பட்டது.
ஆதியில் மனிதன் அறிவியலை அறிந்திருக்கவில்லை அதற்கான அறிவும் வளர்ச்சியும் அடையவில்லை; மனிதன் அறியாமையில் தவழ்ந்து கிடந்தான். இயற்கையின் பல்வேறு விளையாட்டுகளில் திக்கித் திணறிக் கொண்டிருந்தான். அவனுக்கு இயற்கையான இரவு பகல் ஏன் மழை புயல் வெள்ளம் மின்னல் போன்ற இயற்கை சக்திகளை கண்டு அஞ்சினான். அந்த இயற்கை சீற்றத்தை அறியாமையால் அடி பணிந்து வணங்கினான்.
மனிதனின் தேவைக்கேற்ப அவன் இயற்கையோடு போரிட்டான் அவனின் முயற்சியால் ஆரம்பகட்டத்தில் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளும் பிற்போக்கு கற்பிதங்களினாலும் கவரப்பட்டான். அந்த காலத்து பல்வேறுவிதமான பிற்போக்குத் தனங்கள் அந்த சமூக தேவைக்காகவே ஏற்படுத்தப்பட்டது அவர்களின் அறிவு வளர்ச்சி பின்தங்கியே இருந்தது.
இயற்கைக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மனிதன் இயற்கையை எதிர்த்துப் போரிட்டான் தெரிந்தோ தெரியாமலோ இயற்கையை எதிர்த்துப் போரிட்டதன் விளைவாக மனிதன் இயற்கையை புரிய தொடங்கினான். மனித வாழ்க்கை போராட்டமானது அவன் உயிர் வாழ போராடித்தான் ஆக வேண்டும்.உயிர் வாழ உணவு அவசியம். மனித வாழ்க்கைக்குத் தேவையான மற்ற பொருட்களை விட உணவுதான் முதன்மையான முக்கியமான பொருளாக கண்டெடுக்கப்பட்டது. உண்ண வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். உழைப்பு அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகிறது.
அறிவு என்பது இயற்கையையும் சமூக நடைமுறை செயல்பாடுகளையும் சார்ந்து இயங்குவதாகும். குறிப்பாக அது மனிதனுடைய பொருள் உற்பத்திக்கான நடவடிக்கையை பெரிதும் சார்ந்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு விளங்குவதாகும். அறிவு என்பது மனித மனதில் ஏற்படுத்தும் புறப்பொருளின் பிம்பமாகும், அறிவிற்கு ஆதாரமாக விளங்குவது புறப்பொருளே என பொருள்முதல்வாதம் கூறுகின்றது .வர்க்க சமூகத்தில் மனிதன் வலிமைப்படைத்தவனிடமிருந்து வலிமையற்றவன் அண்டி வாழ தேவை ஏற்பட்டது. அந்த சுரண்டல் ஒடுக்கு முறையே வர்க்கப் பிரிவினையான ஒடுக்குபவனும் ஒடுக்கப்படுபவனும் உருவானது அதாவது ஒரு புறம் உடைமையாளனும் இன்னொரு புறம் உடமை அற்றவனும். ஆண்டவனின் அருள் பெற்றவனாக ஆண்டைகளும், ஆண்டைகளே ஆண்டவனாக ஏழை எளிய மக்களுக்கு உபதேசிக்கும் மதங்களும் தோன்றின.
இந்த ஏற்றத்தாழ்வுகளை தத்துவங்களாக ஆளும் வர்க்கத் தேவைகளை உயர்த்திப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டவையே ஆளும் வர்க்க சித்தாந்தங்கள் ஆகும்.
இன்றைய சமூகத்தில் நாம் வாழும் நிலையிலிருந்து நமது சமூகத்தை அணுகி புரிந்துக் கொள்ள ஒரு முயற்சியே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒரு சில சுரண்டலாளர்கள் வாழ்வதற்காகவே ஒட்டுமொத்த சமூகத்தில் சுரண்டல் நடைபெற்றுக் கொண்டுள்ளது... பல நூறு ஆண்டுகளுக்கு முன் மறைந்த சமூகத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகளை தேடிய பயணமே இந்தப் பகுதி.
சூரியமண்டலத்தில் பூமியானது 700 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாக இருந்தாலும் பூமியின்
உருவாக்கம் என்பது சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியதாக வரலாற்று
ஆசிரியர்கள் கூறுகின்றனர். தீகோளமான சூரிய மண்டலத்தில் பல்வேறு இயற்கை சூழல்கள் அதில் குறிப்பாக
தொடர் மழை மீண்டும் நீர் ஆவியாக மாறி மேகக்கூட்டதிற்கு சென்று பெருமழை இடையராது பெய்த
மழையால் பூமி குளிர்ந்தது, நீர்நிலைகள் பெருகின பின்னர் சூரியன், காற்று, நீர்நிலை போன்ற நிலநடுக்கம்,
எரிமலை, கண்டங்கள் பெயர்ச்சி மறுபடியும் மலைகள் உருவாதல். இவ்வாறாக பூமியின் பரப்பு மலைகள், மடுக்கள்,
குளங்கள், குட்டைகள், ஓடைகள், ஆறுகள், பரந்தகடல்கள், பனிபரப்புகள், பாலைவனங்கள் என உருமாறி சுருக்கமாக
பூமி உருவானது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியிருந்தாலும் இதில் உயிரினங்களின் வளர்ச்சி என்பது
சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் அஸோயிக் (Azoic) காலகட்டம். 150 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் கடற்பாசி
புழு, நுங்கு மீன் போன்ற புரோட்டோரோசாசிக் (Proterozoic) காலகட்டம் ஆகும். ஊர்வன இன்னும் பல்வேறு வகையான
அதன் மூதாதையர்கள் 60-27 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின. மிஸோஸோயிக் (Mesozoic) என அழைக்கப்படும்
ஜுராசிக் டைனோசர் காலகட்டமானது 22.5 லிருந்து 4 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மாடு, யானையின்
முன்னோடி, குதிரைகளின் முன்னோடி, பன்றி, வாலற்ற குரங்குகளின் முன்னோடி, மலரும் தாவரங்கள், நாய், கரடி
போன்ற விலங்குகளின் முன்னோடிகள் தோன்றி மறைந்த காலகட்டமானது 7 கோடிலிருந்து 2.5 கோடி ஆண்டுகளுக்கு
முற்பட்டதாகும். முதுகெலும்புள்ள பல விலங்குகள் இன்றில்லாத வாழ்ந்த காலம் 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட
காலமாகும். கற்கால மனிதன் (Pleistocene) காலக்கட்டம் 0.2 லிருந்து 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள்.
30 லிருந்து 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பணியுககாலம், பழைய கற்கால மனித வளர்ச்சி காலம் ஆகும்.
உடற்கூறு ரீதியாக ஹோமோ சேப்பியன்ஸ் என்றழைக்கப்படும் நவீன மனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்)
ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். இந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு
முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வாறு மனிதனின்
வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை
சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அவன் ஹோமோ செபியன் (Homo sapiens) எனும் இனத்தை சார்ந்தவன். ஒரே
இனத்தை சேர்ந்தவர்கள் என்று அடிப்படையில் ஒரே இனத்தின் எந்த ஆணும் பெண்ணும் கூடி இனப்பெருக்கம்
செய்ய முடியும். இயற்கையின் இந்த நியதிப்படி அனைத்து மனிதர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் (உலகில்
உள்ள எல்லோரும்) நிறத்தால், மொழியால், பிரதேசத்தால் வேறுபட்டிருந்தாலும் எல்லோரும் அந்த ஆதி மனிதனின்
தொடர்ச்சியே.
விலங்கு இனங்களின் சில வகையினம் வேறு வகையினதுடன் சில வேளைகளில் வன்புணர்ச்சியிலோ கலவியிலோ ஈடுபடக்கூடும், ஆனால் அவ்வாறு சேர்ந்தால் அவை அவையாக இல்லாமல் வேறாகத் தோன்றும் அத்துடன் அவை அநேகமாகக் கலந்த உருப்பெறுவதில்லை. ஆனால் மனிதர்கள் பொதுவாகக் கலந்து உருவாகக்கூடிவர்களே. இவ்வாறு இனங்கள் கலப்பதனால் மலட்டுத்தன்மை எங்காயினும் உண்டாவதாகத் தெரியவில்லை. இன்று தூயஇனவாதம் பேசும் பலர் மறந்தே போனயிடம் இன்று வெவ்வேறு இனமாக பேசப்படும் இவர்கள் முந்தைய நகர்வுகளில் கலப்புற்றுப் பிறந்தவர்களேயென்பதை இதிலிருந்து தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள முடியும் மனிதகுலமான ஒரே தொப்பூல் கொடி உறவுதான் என்பதனை.
அறிவியல் ஆய்வுகள் மனிதர்கள் விலங்கினத்தின் ஒரு வகை ஆனால் சில சிறப்பம்சங்கள் தனிவகை என்பதை
உணர்த்துகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், மனிதர்கள் விலங்குளிலும் பார்க்க எளிதாகவும், காலநிலைகள்,
மற்றும் காரணங்களால் ஓரிடத்திலிருந்து இன்னொரிடம் மிகஎளிதாக இடம்பெயர்ந்துவிடுவர்; மனிதர் தம் உணவு,
உடைகள், உதவிக்கு வேண்டிய கருவிகள், மிருகங்கள் ஆகியவற்றைத் தேவைக் கேற்றவாறு மாற்றிக் கொள்வர்.
இத்தகைய திறமையும் வாய்ப்பும் விலங்குகளுக்கு இல்லை. அநேகமாக, வெவ்வேறு உழைப்பு கருவிகளும் சமூக
அமைப்பிலான தொகுதியான மனிதர் உலகில் ஆர்ட்டிக்கண்டம் தவிர்ந்த எனைய பகுதிகளிலெல்லாம் வசிக்கின்றனர்.
ஆதேபோல் விலங்குகளும் இவ்வாறு எங்கும் பரந்துள்ளன வென்று சொல்லமுடியாது. மனிதருடன் சென்ற ஒரு சில
மிருகங்கள் மாத்திரம் பரந்துள்ளன. மிருகவகைகள் தனிப்பட்ட இயல்புகளுள்ள தாயகங்களில் மாத்திரம் வசிக்கின்றன.
மனிதர் இடம்பெயர்ந்து செல்லும் ஆற்றல் காரணமாக, உலகமெங்கும் பரந்தும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் கலந்தும்
பின்னிப்பிணைந்து விடுகின்றன. இப்பொழுதுள்ள மனிதவகைகள் யாவும் மனித இயல்புகளையே பெற்றிருந்த
ஒருவகைப் பூர்வீக மனிதரிலிருந்தே வந்தவை என்பதில் சந்தேகமில்லை; உலகில் இங்குமங்குமாக இவர்கள்
இடம்பெயர்ந்து முறையாக அப்பூர்வீக மனிதவகையினரிலிருந்து தோன்றியவர்களே இப்பொழுதுள்ள மனித
வகையினர். அவ்வகையான நகர்வில் இப்பொழுதுள்ள ஆபிரிக்க நீக்ரோகள், ஐரோப்பிய வெள்ளையர்; வட
சீனவிலுள்ள “மஞ்சள்’ நிற மக்கள், மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர் எவ்வாறு
பாதிக்கப்பட்டனர் என்பதை அறியக் கூடியவாறு அந்நகர்வுகள் பற்றி ஆராய்ந்தால் பல குழப்பங்களுக்கு
விடை கிடைக்கும், ஆனால் இங்கு நமது தேடல் மனித இனம் ஆதியில் தோன்றியதிலிருந்து இன்றைய
வளர்ச்சிவரை புரிதலுக்கே. (மனித இனங்கள் என்ற நூல் பயனுள்ளவை- மீர் பதிப்பகம் சோவியத் நாடு ,
மாஸ்கோ 1974). இன்றைய இனவியல் கோட்பாட்டை ஏகாதிபத்திய சதியென்று UNESCO ஏற்றவையே.
”மூதாதையரை தேடி”என்ற நூலின் அடிப்படையில் மனித குலம் வளர்ந்த கதை தெரிந்துக் கொள்ள முயலுவோம். “உயிரினங்களின் தோற்றம் பற்றி எழுதிய சார்லஸ் டார்வின் மனிதகுல வரலாறு பற்றி வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தனது முடிவுகளை மேலும் தெளிவுபடுத்தும் என்று கூறினார்.
இதுவரை நாம் விவாதித்துள்ளோம்.....
இன்றைய விவாதம் (15/03/2026)
வரலாற்று முற்காலம்:- மனிதன் தன் கருத்துகளை வெளிப்படுத்த பயன்படுத்திய மொழியின் பண்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை, வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் என பாகுபடுத்துவர். கருத்துப் பரிமாற்றதிற்குரிய மொழியின் எழுத்து வடிவம் வரலாற்றுக் காலத்தில் தொடக்கத்திற்கு சான்றாக கருதப்படுகிறது.வரலாற்றுக்கு முந்திய காலத்தை பழங்கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம், என மனிதன் பயன்படுத்திய கருவிகளின் அடிப்படையில் உட்பிரிவுகளாக பார்க்கலாம். ஆனால் அனைத்துப் பகுதிகளிலும் இக்கால பகுப்பாடுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரையறைக்குள் காணப்படும் என்பது கடினமே. ஏனெனில் சமசீரற்ற வளர்ச்சி நிலை என்பது மனித வரலாற்றில் அனைத்து நாடுகளுக்கும் அனைத்து காலங்களுக்கும் பொதுவான ஒரு சிறப்பான கூறாகும்.
· ‘ஒருபகுதி வாழ்மக்கள் தம் தேவையையும் சூழ்நிலையும் பொறுத்து உற்பத்தி கருவிகளையும் சமூக அமைப்பையும் உருவாக்கிகொள்வதாக’ வரலாற்றாசிரியர் சட்டோபாத்தியாய கருதுகிறார்.
No comments:
Post a Comment