தோழர்களே,
இந்தப்பகுதி எழுத தூண்டியதற்கான காரணம் மா-லெ அமைப்பின்
முக்கிய சில தோழர்கள் ஈரானை அமெரிக்காவுடன் சமன்படுத்தி எழுதியுள்ளதை அடுத்து
ஆசான் லெனின் நூல்களை தேடி எடுத்து எழுத வேண்டிய கட்டாயதிற்கு தள்ளப்பட்டேன்.
அதற்கு உந்து சக்தியாக எமது “இலக்கு” இணைய இதழின் முதன்மையாசிரியர் முகநூலில் தனது
கருத்தை ஆழமாக பதிவு செய்திருந்தார் அதன் தொடர்ச்சியே இந்தக் கட்டுரை. இதில்
முக்கியமாக ஆசான் லெனின் எழுத்துகளையும் மேலும் புதிய காலனி ஆதிக்க அமெரிக்காவை
புரிந்துக் கொள்ள தோழர் PJ James அவர்களின் Neo colonial (புதிய காலனியம்) நூலினையும் துணைக் கொண்டு எழுதியுள்ளேன்.
முதலில் போரின் வகைகள் பற்றி ஆசான் லெனின்
சொன்னவற்றிலிருந்தே தொடங்குவோம் “ஆக்கிரமிப்பு மற்றும் தற்காப்புப் போர் (The
Difference Between Aggressive and Defensive War)” என்று இருவகையான போர்களை பற்றி ஆசான் சொல்லியுள்ளார் அதனை
சுருக்கமாக பார்ப்போம்.
தற்காப்புப் போர் (Defensive War) - வரலாற்றுப் பின்னணி:
1789 முதல் 1871 வரையிலான காலத்தில், "தற்காப்புப் போர்" என்பது நிலப்பிரபுத்துவம் (feudalism)
மற்றும் அந்நிய
அடக்குமுறைக்கு எதிரான புரட்சிகரமான போராட்டமாகவே சோசலிஸ்டுகளால் பார்க்கப்பட்டது.
இடைக்கால அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைவதற்காக நடத்தப்படும் போர்களை அவர்கள்
"நீதியான போர்"
(just war) என்று கருதினர்.
நீதியான போர் (Just War):
ஒரு நாடு (உதாரணமாக மொராக்கோ,
இந்தியா அல்லது சீனா)
ஒரு பெரிய வல்லரசுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போரிடும்போது,
யார் முதலில்
தாக்கினார்கள் என்பது முக்கியமல்ல. அந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டவர்களின்
வெற்றிக்காகவும், விடுதலைக்காகவும் இருந்தால்,
அது ஒரு
"தற்காப்புப் போர்"
மற்றும்
"நீதியான போர்"
ஆகும்.
ஆக்கிரமிப்புப் போர் மற்றும் ஏமாற்று வேலை:
இரண்டு அடிமை உரிமையாளர்களுக்கு இடையே நடக்கும் போரை (யார் அதிக அடிமைகளை வைத்திருப்பது என்ற போட்டி) "தற்காப்புப் போர்" என்று அழைக்க முடியாது. அத்தகைய சூழலில் "நாட்டைப் பாதுகாத்தல்" (defence of the fatherland) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது வரலாற்று ரீதியாகத் தவறானது மற்றும் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
தொடர்ந்து மார்க்சியம் போரை பற்றி என்ன சொல்கிறது என்பதனை புரிந்துக் கொள்ளாத போக்கினர்
இந்த நூலின் முழுமையாக ஒலி வடிவில் AI உதவியுடன் இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
லெனின்: போரும் அமைதியும் குறித்த பார்வைகள்
இந்த ஆதாரங்கள் லெனின் எழுதிய பல்வேறு கட்டுரைகள் மற்றும் உரைகளின் தொகுப்பாகும், இது யுத்தம் மற்றும் அமைதி பற்றிய மார்க்சியப் பார்வையை விளக்குகிறது. போரை வெறும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகாமல், அது வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சி என்றும் ஆளும் வர்க்கத்தின் அரசியலே வன்முறை வடிவம் பெறுவதாகவும் லெனின் வாதிடுகிறார். அனைத்துப் போர்களையும் கண்மூடித்தனமாக எதிர்க்காமல், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலைக்காக நடத்தும் புரட்சிகரப் போர்களை அவர் ஆதரிக்கிறார். முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் இருக்கும் வரை மோதல்கள் தவிர்க்க முடியாதவை என்றும், சோசலிச சமூகம் அமைவதன் மூலமே நிரந்தர அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் இந்த உரைகள் வலியுறுத்துகின்றன. ஏகாதிபத்தியப் போர்கள் சாதாரண மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, இறுதியில் தொழிலாளர்களின் புரட்சிக்கு வழிவகுக்கும் என்பது லெனினின் முக்கிய கருத்தாகும். இந்தத் தொகுப்பு சீனாவில் உள்ள வெளிநாட்டு மொழி அச்சகத்தால் லெனினின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
லெனினின் பார்வையில் ஏகாதிபத்திய போர் எவ்வாறு புரட்சியைத் தூண்டுகிறது?
மார்க்சியவாதிகள் போரை அரசியலின் தொடர்ச்சியாகக் கருதுவது ஏன்?
சோசலிச நாடுகள் அமைதியான சகவாழ்வை எவ்வாறு ஆதரிக்கின்றன?
இந்த ஆங்கில நூல் பிடிஎப் வடிவில் இந்த இணைப்பில் உள்ளன அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே
தோழர் வேலன் அவரின் பகுதியில் எழுதியுள்ளது அப்படியே கீழே:-
ஏகாதிபத்திய காலகட்டத்தில் எவ்வகையான போராட்டங்களை
முன்னெடுக்க முடியும் என்ற பிரச்சினை இருந்து கொண்டே இருக்கின்றது. போராட்டம்
என்பது இரத்தம் சிந்தும் அரசியல், இரத்தம் சிந்தா அரசியல் என இரண்டு வகைகள் உண்டு. இவற்றை உள்ளவாங்காது
உலகிலேயே சிறந்த அகிம்சைவாதிகளாக இலங்கை, இந்திய பொதுவுடமைக்
கட்சியினர் உள்ளார்கள். அவர்களுக்கு நாட்டரசின் மீது உள்ள தேசபக்திக்கு அளவே
இல்லை.
இன்று ஈராக்கின் மீது தொடுக்கப்பட்டுள்ள யுத்தத்தைப் பற்றி
மதிப்பீடு செய்வதில் போதிய புரிதல் பொதுத் தளத்தில் இல்லை. ஆனாலும் வலதுசாரிகள், தாராளவாதிகள், நடுநிலைவாதிகள்,
சமூக ஜனநாயக போக்கை கொண்டவர்கள், மார்க்சியர்கள்
என வெவ்வேறு கருத்தை முன்வைக்கின்றார்கள். ஆனால் ஒடுக்கப்படும் சமூகமாகிய எமது
நிலையில் இருந்து உலகப் போக்கை அணுகிட வேண்டும். ஒரு நாட்டினுள் இருக்கும் தேசிய
ஒடுக்குமுறை, ஏகாதிபத்தின் ஒடுக்குமுறை இவை இரண்டையும்
பிரித்து அணுகிட வேண்டும். இலங்கை என்று அணுகும் போது தேசிய ஒடுக்குமுறை உள்ளது
போலவே ஏகாதிபத்திய ஒடுக்குமுறையும் உள்ளது. ஆனால் அதிகாரம் கொண்ட சிங்கள தேசம்
தன்னைத் பாதுகாத்துக் கொள்ள எந்த விட்டுக் கொடுப்பும் செய்யும். ஆனால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழ தேசத்தின் அரசியல் நியாயம் என்பது தொடர்ந்து கொண்டு தான்
இருக்கும்.
வரலாற்றில் தவிர்க்க முடியாத வகையில் வெவ்வேறு வர்க்கப்
பின்புலம் கொண்டவர்கள் தலைமை ஏற்க முடியும். போராட்டம் யாருக்கு எதிராக
நடைபெறுகின்றது என்பது தான் மதிப்பீட்டின் மையப்புள்ளியாக இருக்க முடியும்.
போராட்டத்தலைமையை இன்னொரு புரட்சியினால் மாற்றிக் கொள்ள முடியும். போராட்ட இலக்கு
அடைவதற்கு முன்னரே போராட்டத்தை பலவீனப்படுத்த முடியாது.
போர்களை எவ்வாறு மதிப்பீடு செய்வது?
சோசலிஸ்டுகள் புரட்சிகரப் போர்களை என்றும் எதிர்த்து இல்லை, என்றுமே எதிர்க்கவும் முடியாது. (252)
முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியமாக மாறி படுபிற்போக்குத் தனமாக
இருக்கின்றது. இந்த முதலாளித்துவ
வர்க்கம் நடத்தி வரும் போர்கள் என்பது பிற்போக்கு கொலைகாரப் போர்களாகும். ``இந்த கட்டற்ற ஏகாதிபத்தியத்தின் சகாப்பதத்தில் தேசியப் போர்கள் இனிமேல்
சாத்தியமில்லை”- இது வெளிப்படையாயும் தவறாகும்.” இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்
பகுதியில் 1884பேர்லின் மாநாட்டில் கூடிய மேற்கு ஐரோப்பிய
நாடுகள் ஆபிரிக்க நாடுகளை தமக்கிடையில் பங்கு போட்டுக் கொண்டார்கள். முதலாம் உலகப்
போரில் ஏகாதிபத்திய பிரிவுகள் தமக்கிடையில் போரிட்டுக் கொண்டன. போரிட்டுக்
கொண்டதன் ஊடாக தமது சந்தையை விரிவுபடுத்த முனைந்தன. மறுபக்கத்தே கொலனித்துவ
அடிமையாக இருந்த தேசிய இனங்கள், தேசங்கள் அன்னிய
ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்திருந்தன. ஏகாதிபத்தியத்தின் பிரதான
முனைப்புகூறுகளில் ஒன்று, அது ஆகப்பிற்பட்ட நாடுகளில்
முதலாளித்துவ வளர்ச்சியை விரைவுபடுத்தியது; அதன் ஊடாக தேசிய
ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டஙகள் விரிவாக்கப்பட்டது, தீவிரப்படுத்தப்பட்டது.
21ம் நூற்றாண்டில் 20 போலவே மறுகொலனியாதிக்கத்திற்காக
ஏகாதிபத்தியங்கள் அலைந்து திரிகின்றன. ஆக்கிரமிப்புப் போர்களை நடத்திக்
கொண்டிருக்கின்றன. ஏகாதியத்தியங்களிடையே பண்புமாற்றம், அளவு
மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மையே. அதே போல சோவியத் ஒன்றியம் இன்றில்லை.
ஆனால் முதலாளித்துவ ருசிய வல்லரசு உள்ளது. அந்த வல்லரசின் பலம் சோவியத் காலத்தைப்
போல இருக்க வேண்டியதில்லை. ஆனால் அதன் வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாது.
இரண்டால் உலக யுத்தத்தின் வெற்றியின் அனுபவம், அதன்
படைத்திறன், சக்தி போன்றவை உடனடியாக அழிந்து விடப்
போவதில்லை.
முதலாளித்துவ புரட்சி ஐரோப்பாவில் நடைபெற்ற காலத்தில்
வெவ்வேறு தேசியப் போக்குகள் எழுந்து வந்தன. பெருந்தேசியவாத போக்கைக் கொண்ட செக்கிய, மாரூசிய
தேசியவாதம். மத அடையாளம் நிலப்பிரபுத்துவ கூறுகளை
முன்னிறுத்திய பண்பாட்டுச் தேசியவாதம் எழுந்து வந்தது. மற்றைய இரண்டாம் அகிலத்தவர்களின் தேசியப் போக்கானது தாய்நாட்டைப் பாதுகாப்போம் என்று ஏகாதிபத்திய
யுத்தங்களை ஆதரித்து நின்ற மூன்று போக்குகள் இருந்துள்ளது. மூலவர்களின் எழுத்துகளில் இருந்து இவற்றை அறிந்து கொள்ள முடியம். ஆனால்
இவற்றின் போக்கை வரலாற்று ரீதியாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த மூன்று போக்கும்
பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் முதலாளித்துவ ஏகாதிபத்தியப்
பிரிவுகளிடையே யுத்தங்கள் நடைபெற்றது. அந்தப் போரில் ஐரோப்பிய தேசிய வெறியுடன்
கொலனித்துவப் போர்களை எதிர்த்து வந்துள்ளது. அன்றையப் பொழுது தேசியப் போர்கள்
தவிர்க்கமுடியாது இருந்தது. சீனா, இந்தியா, பாரசீகம், இந்தே-சீனப்
போர்கள் என்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று ஏகாதிபத்திய முகாம்கள், வல்லரசுகள் என்ற போக்கில் விரிந்துள்ளன.
இந்த நிலையில் இரண்டு போக்குகள் உருவாகும். ஒன்று
உள்நாட்டுப் போர்கள் உருவாகுவது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போரை நடத்துவது. ஏகாதிபத்திய காலத்தில் தேசியப்
போர் (253) தவறென்பவர்கள் ஐரோப்பிய தேசிய வெறியை ஆதரித்தது போலவே தற்காலத்தில்
நாடுகளில் உள்ள பெருந்தேசிய வெறியை ஆதரித்து நிற்பதாகும். இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்த ஈரான் மீதான
தாக்குதலில் போது தேசிய வெறியை வெளிப்படுத்துவது ஆளும் வர்க்கத்தின் தேவையாகவும்
உள்ளது. ஈராக் யுத்தத்தின் போது சதாம், ஈரான் சாத்தானின் (axis of evil) உருவம், இறுதிநாள் தீர்ப்புக்காக (Arnageddan) காத்திருப்பது
போன்று இந்த தாக்குதல் என்று கருத்தாக்கம் செய்கின்றார்கள். ஒடுக்குபவரின்
முழக்கங்கள் மதபின்புலம் கொண்டதாகவும் இருக்கின்றது.
ஒரு நாட்டில் உள்நாட்டுப் போரை மறுத்துவிட முடியுமா? அவ்வாறான அரசியல் போக்குத் தான் இரண்டாம்
உலக யுத்தத்தின் பின்னரும், சோவியத் வீழ்ச்சிக்குப்
பின்னரும் கருத்தால் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்றது. அமெரிக்கா முன்னைய பலம்
தற்பொழுது இழந்துள்ளதாக எண்ணுகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர்
அணிசேர்க்கையை அமெரிக்க திறம்படச் செய்து வந்துள்ளது. உளவுத்துறைறையை அனைத்து
நாடுகளிலும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. எதிரிமுகாமை சிதைப்பது, புதிய ஆட்சிப் பலத்தை உருவாக்குவது, தளங்களை
விரிவுபடுத்துவது, ஜனநாயகம், சுதந்திரம்,
தனிமனித சுதந்திரக் கோட்பாட்டை அனைத்து தளங்களிலும்
விரிபுபடுத்துவது என்பதை நுட்பமாக செய்யு வந்தது. இதற்கு இராணுவக் கூட்டு
பொருளாதாரக் கூட்டு பின்புலமாக இருந்துள்ளது. பொருளாதாரப் பலம் என்பது
தொழில்நுட்பத்தில் உள்ள பலவீனம் என்பதில் இன்று தன்னையே சந்தேகத்திற்கு
உட்படுத்தியிருக்கின்றது. சீனா தொழிற்நுட்ப விரிவாக்க சக்தியாக எதிர் கொள்ள
வேண்டிய நிலையில் உள்ளது.
உள்நாட்டுப் போர்களை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது. இது
உலகப் போக்கின் வர்க்கச் சமூதாயத்தில் இயல்பானதாகும். உள்நாட்டுப் போரா
மறுதலிப்பதோ அதைப் பற்றி மறந்துவிடுவது கடைக்கோடி சந்தர்ப்பவாதத்திற்குள்
விழுந்துவிடுவதாகும். ஒரு நாட்டில் சோசலிசம் வெற்றியடைவது ஒரே அடியில் பொதுவாக
எல்லாப் போர்களையும் அகற்றிவிடாது.
உலகத்தில் மாற்றங்கள் எல்லாம் உடனடியாக நடந்து விடுவதில்லை.
ஏதோ ஒரு தொடக்கத்தில் இருந்து தான் விரிவாக்கம் நடபெற முடியும். இதனை லெனின்
சரியாகவே வழிகாட்டுகின்றார்கள். சோசலிசம் ஏக காலத்தில் நடைபெற்று விடமுடியாது.
இவ்வாறு தொடர்ச்சியான போராட்டமே ஒரு நாட்டில் இருந்து உலகில் உள்ள
முதலாளித்துவத்தினை வீழ்த்தி இறுதியாக முறியடித்து உடமை நீக்கம் செய்ய பிறகே
போர்கள் எல்லாவற்றையும் முடிவிற்கு கொண்டு வரமுடியும்.
இவ்வாறு விஞ்ஞான நோக்கில் இருந்து பார்க்கமால் கடந்து
செல்லப்படுகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தை நடுக்குவதை விட்டு தட்டிக் கழிப்பதும், மழுப்புவதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது அறவே புரட்சிகரமற்ற செயலாகும். ``இது மிகவும் கடினமான
பணி, சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் பாதையில் மிகப்பெருமளவு போராட்டம் நடத்த வேண்டிய பணி.” (255) அமைதிவாதம் போதிக்கும் ``சமுதாய” பாதிரிகளின்
சமூகத்தில் நிறையவே தோற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் ``சமுதாய”
பாதிரிகளும் சந்தர்ப்பவாதிகளும் எதிர்காலத்தின் சமாதனா பூர்வமான சோசலிசம் பற்றிய
கனவுகளை உருவாக்க எப்பொழுதும் தயாராக இருக்கிறார்கள். (255) குருசேவ்
சமாதானம் சகவாழ்வு அரசியல் மேற்கொள்வதற்கு முன்னர் லெனின் எச்சரிக்கை
விடுகின்றார். புரட்சிகரப் பாதையை கைவிட்டு அமைதிவழி, நாடாளுமன்றம்
என்று சென்றவர்கள் இரண்டாம் அகில பின்புலத்திலும் உண்டு. இதேபோல இன்றைய இலங்கை,
இந்தியக் கட்சிகளும் அரசியல் போக்கு உள்ளது. இலங்கை, இந்தியக் கட்சிகள் உள்நாட்டு நிலையை துல்லியமாக ஆராயத் தவறியுள்ளார்கள்,
தேசிய ஒடுக்குமுறை, சமச்சீரற்ற தேசங்களின்
வளர்ச்சி, தேசங்களின் உற்பத்திச் சக்தியின் தேக்கமான
வளர்ச்சி, அது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய போதிய புரிதல்
கொண்டவர்களாக இல்லாது ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதிகளாக சீரளிந்து விட்ட நிலை.
``இந்த சகாப்தமே தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின்
போராட்டதிதின் கொள்கைகளையும், இதன் பின் விளைவாக முதலில்
புரட்சிகரமான தேசியக் கலகங்கள் மற்றும் போர்கள், இரண்டாவதாக,
பாட்டாளி வர்க்கப் போர்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்த கலகங்கள், மூன்றாவதாக இருவகையிலுமான புரட்சிகரப் போரின் ஓர் இணைப்பு ஆகியவற்றின்
சாத்தியப்பாடு மற்றும் தவிர்க்கவியலாத் தன்மையினதுமான கொள்கைகளையும் அவசியமாயும்
தோற்றுவித்து ஊட்டி வளர்க்க வேண்டும். (256) இது சமூக
அசைவியக்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வழிகாட்டலாகும். உள்நாட்டில் மக்கள்
திரள அணிதிரட்ட முடியாத நிலையில் சமூகக்கட்டத்தை எவ்வாறு கடக்கப் போகின்றார்கள்.
No comments:
Post a Comment