கம்யூனிசப் பண்பும் பாட்டாளி வர்க்க விடுதலையும்-ஒலி, வீடியோ வடிவில்

 தொடர் தேடலே இவை

கம்யூனிசப் பண்பும் பாட்டாளி வர்க்க விடுதலையும்

கம்யூனிஸ்டுகள் யார்?

கம்யூனிஸ்டுகளின் பணி என்ன?

இங்குள்ள நிலை என்ன?

நமக்கான வழிமுறை என்ன?

ஒரு தேடலே இந்தப்பகுதி.

லெனின் சொல்கிறார்,

எங்கள் ஒழுக்க நெறி பாட்டாளி வர்க்க போராட்டத்தின் ஒழுங்கிலிருந்து உதிக்கிறது பழைய சமுதாயம் எல்லாம் தொழிலாளர் விவசாயின் மீதும் நிலப்பிரப்புகள் முதலாளித்துவ புரிந்த ஒடுக்கு முறையின் அடிப்படையில் அமைந்திருந்தது. நாம் அதை அடியோடு அழிக்க வேண்டி இருக்கிறது, அவர்களை வீழ்த்த வேண்டி இருக்கிறது. ஆனால் இதை செய்ய, நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டி இருக்கிறது. அது கடவுளால் உண்டாக்கப்பட கூடிய ஒன்று அல்ல. இந்த ஒற்றுமையை தொழிற்சாலைகளால் மட்டும்தான் அளித்திட முடியும். நீண்ட நெடிய உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தால்தான் உண்டாக்க முடியும். இந்த வர்க்கம் உருவான பிறகு வெகுஜன இயக்கம் ஒன்று தோன்றி மிகவும் பலவீனமான ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றியடைந்திருப்பதை நாம் காண்கிறோம். இந்த வெற்றிக்கு வழி செய்தது இந்த பாட்டாளி வர்க்க புரட்சி அனைத்து உலகில் முதலாளித்துவ வர்க்கதினால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறவர்கள் இடையில் ஒற்றுமையும் மற்றும் சிதறுண்டுள்ள விவசாயிகளை தன்னை பின்பற்றி வர செய்துள்ளது. சுரண்டலாளர்களின் எல்லா தாக்குதலையும் சமாளித்து நிற்பது திடமான இச்சக்தியை பாட்டாளி வர்க்கம் தன் அணியில் அரவனைத்து வர்க்க சமூகத்தில் இன்று சிதறுண்டுள்ள உழைப்பாளிகள் வெகுஜனங்கள் ஒன்றுபடவும் தமது அணியில் ஒன்று திரட்டி கொள்ளவும் கம்யூனிச சமுதாயத்தை முடிவாய் பாதுகாத்துக் கொள்ளவும், முடிவாய் உறுதிப் பெரும்படியும் செய்ய, முடிவாய் பாட்டாளி வர்க்க கட்சி துணை புரிய முடியும்.

எனவேதான் மனித சமுதாயத்திற்கு மேலானது எந்த ஒழுக்க நெறி என்பதாய் நமக்கு ஏதுமில்லை என்று கூறுகிறோம். நமது ஒழுக்க நெறியானது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தினுடைய நலன்களுக்கு கீழ்ப்பட்டதாகும் இந்த வர்க்க போராட்டம் எதில் அடங்கி உள்ளது?

இன்றைய ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் சுரண்டும் வர்க்கத்தை ஒழித்தல் இதில் அடக்குவது.

இவ்வாறு விரிவாக லெனின் கூறியவற்றை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் புரிந்துக் கொண்டுள்ளதா என்பதே நம் முன் உள்ள பணி.

இந்த ஆதாரம் கம்யூனிஸ்ட் கட்சியின் உன்னதமான லட்சியங்களையும், அதன் உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய உயர்ந்த பண்புகளையும் விரிவாக விளக்குகிறது. பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் விடுதலையோடு பிணைக்கப்பட்டுள்ளதால், கம்யூனிஸ்டுகள் தங்களின் சுயநலத்தை விட பொதுநலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. லியோஷோசி மற்றும் மா சே துங் போன்ற தலைவர்களின் சிந்தனைப்படி, ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் எளிமை, நேர்மை மற்றும் தியாக உணர்வுடன் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். கடினமான சூழல்களிலும் வறுமையிலும் கூட தனது கொள்கையிலிருந்து மாறாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ச்சியாகப் போராடுபவரே சிறந்த பண்பாளர் என விவரிக்கப்படுகிறார். இறுதியாக, இத்தகைய தார்மீக நெறிகள் மற்றும் மார்க்சியக் கல்வி இல்லாத எந்தவொரு அமைப்பும் உண்மையான கம்யூனிச இயக்கமாக வளர முடியாது என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
இந்த பகுதியை யூடூப் விடியோ வடிவில் காண கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நோக்கங்கள் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை பற்றி விளக்குக.

ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் பின்பற்ற வேண்டிய உயரிய பண்புகள் மற்றும் நன்னெறிகள் யாவை?

தனிப்பட்ட நலன்களை விட பொது நலனை முதன்மைப்படுத்துவது பற்றி லியோஷோசி மற்றும் மாவோ கூறுவது என்ன?

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்