உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்- AI உதவியுடன் ஒலி வடிவில்

 உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள் தோழர்களே.

பேட்டி பச்சாவ் பேட்டி படாவு (மகளை பாதுகாப்போம், மகளை படிக்க வைப்போம்) என்ற கோசம் கொண்டவர்களேதான் உலக சேம்பியன் குத்து சண்டை வீராங்கனை மீதான பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டோம்.
உலகே வெட்கி தலைகுனிய வேண்டிய "எப்ஸ்டின் பைல்" பெண் குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை; அதிகார போதையும், மூலதன ஆதிக்க போதையும் எப்படி பெண்கள் மீதான காட்டுமிரண்டி தனமான கொடூர ஒடுக்குமுறையை நிகழ்த்தியுள்ளது! எல்லோரும் அறிந்ததுதானே?.
பெண் விடுதலை என்பது ஆணாதிக்க சமூகத்தில் ஏற்றத்தாழ்வான ஒரு சமூகத்தில் சாத்தியமா என்பதனை நாம் நடைமுறையில் கண்டு கொண்டுதான் உள்ளோம்!
அண்மையில் நாம் கண்ட எப்ஸ்டீன் பைல் என்ன சொல்லுகிறது? அதிகாரம் படைத்த சிலர் மூலதன குவியல் கொண்டுள்ள ஆதிக்கம் படைத்த அந்த சிலர் உலகில் எதையும் செய்யலாம் அதை யாரும் கண்டு கொள்ள முடியாது என்பது தானே நிருபித்தது. அதேபோல அதிகாரத்தில் உள்ள ஒரு சிறு கூட்டம் எப்படி இந்திய சமூகத்தை சீரழித்துக் கொண்டுள்ளது என்று பாருங்கள் அதற்கான நிறுவனங்கள் பல உள்ளன.
ஆக பெண்களுக்கான விடுதலை என்பது இந்த ஏற்றத்தாழ்வான சொத்துடமையும் வழிவந்த இந்த சமூக அமைப்பில், சொத்தின் பால் ஏற்றத்தாழ்வாய் உள்ள சமூக அமைப்பை தகர்த்தெறியாமல், ஆண் பெண் சமத்துவம் என்பதும், பெண் விடுதலை என்பது சாத்தியமில்லை!
இதனை தான் அன்றைய சோவியத் சோசலிச அரசு நடைமுறையில் பெண்களுக்கான சமத்துவத்தை நிலை நாட்ட எல்லா துறையிலும் முயன்றதை நாம் அவர்களின் நடைமுறை அரசியலை புரிந்தோர் அறிவர்.
பெண்களுக்கான கல்வி பெண்களுக்கான வேலை வாய்ப்பு பெண்களுக்கான குடும்பத்தில்; குடும்ப உறவில் சமூக சம அந்தஸ்து சமையல் கூடத்தில் இருந்து விடுதலை- பொது சமையல் கூடம். இவ்வாறு பெண் அதிகமாக சுரண்டப்படும் நிலையிலிருந்து விடிவிக்க சோவியத் ஆட்சி முயன்றது.
ஆண் பெண் என்ற நிலையில் இருந்து ஆணும் பெண்ணும் ஒன்றாக உழைக்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டது.
இவ்வாறு பேசிக் கொண்டே போகலாம்!!!
இதனை எதையும் செய்யாமல் வாய்ப் பந்தல் இடுவது! சில அற்ப சலுகைகளை கொடுத்துவிட்டு பெண் உரிமைகள் சமத்துவத்தையும் பேசுவது!!!
பெண்களில் ஒரு சிலருக்கு சலுகை கிடைப்பதும் பலர் அதே நிலையில் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதும் தொடரத்தான் செய்கிறது.
ஆகவே சமத்துவம் விடுதலை என்பது வெற்றுப் பேச்சாக இல்லாமல் நடைமுறை சாத்தியப்பாடாக இருக்க வேண்டும்.
அவை தான் உண்மையில் சமத்துவ சமூகத்தில் ஆண் பெண் என்ற பேதம் இன்றி வர்க்க பேதங்கள் ஒழிக்கப்படும் போது சாத்தியம்.
அதற்கான பணி செய்யாமல் சில சீர்திருத்தங்கள் மூலம் பெண் விடுதலையோ? பெண் சமத்துவத்தை அடைய முடியாது! என்பது நாம் காணும் பல உண்மைகள் நிரூபிக்கிறது.
பெண்கள் தின வாழ்த்துக்கள் கூறும் பலர் பெண் ஏன் அடிமையானல் என்பதனை புரிந்துக் கொள்ளாமலே ஆணுக்குப் பெண் சமமென்பது சிலர் சலுகை வழங்குவதனாலும் சில உதவிகள் செய்வதனாலும் மாறிவிடலாம் என்பதும்!!!
உண்மையாலுமே ஏற்றதாழ்வான சமூகத்தில் பெண்கள் ஏன் ஒடுக்கப்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
"பாட்டாளி வர்க்கப் பெண்விடுதலை இயக்கமானது முதலாளித்துவப் பெண்கள் இயக்கத்தைப் போன்று அவர்களுடைய சொந்த வர்க்கத்தை சார்ந்த ஆண்களுக்கு எதிராகப் போராடும் இயக்கமாக இருக்க முடியாது. அதனுடைய போராட்டத்தின் இறுதி லட்சியம் அனைத்து ஆண்களுக்கு எதிரான சுதந்திரமான போட்டி அல்ல. மாறாக உழைக்கும் வர்க்க பெண்கள் தமது சொந்த வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து இணைந்து நின்று முதலாளித்துவப் பிற்போக்கு சமுதாயத்தை எதிர்த்துப் போராட வேண்டும்" --- கிளாரா ஜெட்கின்
பெண் அடிமைத்தனம் என்பது சொத்துடைய சமூகம் தோன்றிய பொழுதே தோன்றியது.
ஆகவே சொத்துடைய சமூகத்தில் ஒரு அங்கமாகதான் பெண் அடிமைத்தனமும் ஒடுக்குமுறையும் உள்ளது, புரிந்து கொள்ள வேண்டும். அதனை விட்டுவிட்டு சில சலுகைகள் மூலம் ஆணுக்கு பெண் சமத்துவத்தை கொண்டு வர முடியல்வது ஏமாற்றே!!
அதே போல சிலர் சொல்லுவது போல் ஆண் போல் நடையுடை பாவனையால் ஆண்கள் போல் பெண்கள் செயல்படுவதாலும் எந்த மாறுதலும் அடிமைத்தனம் முடிவுக்கு வந்து விடாது!

மார்க்சியம் மற்றும் பெண்ணுரிமை: ஒரு சமூகப் புரட்சிப் பாதை

பெண் ஒடுக்குமுறை என்பது தனியார் சொத்துரிமை மற்றும் வர்க்கப் பிரிவினை உருவான காலத்தில் இருந்தே தொடங்கியுள்ளது என்பதை இந்தத் தொகுப்பு விளக்குகிறது. முதலாளித்துவ அமைப்பில் வழங்கப்படும் சில சீர்திருத்தங்களோ அல்லது சலுகைகளோ பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்காது என்று இக்கட்டுரை வாதிடுகிறது. இதற்குத் தீர்வாக, மார்க்சிய மற்றும் சோசலிச சித்தாந்தங்களின் அடிப்படையில் உற்பத்தி சாதனங்கள் பொதுமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, சோவியத் யூனியனில் பெண்கள் வீட்டு வேலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, சமூக உற்பத்தியிலும் அரசியலிலும் ஆண்களுக்கு நிகராகப் பங்கேற்றது ஒரு முன்மாதிரியாகக் காட்டப்படுகிறது. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் சமூக சமத்துவம் நிலைநாட்டப்படும்போது மட்டுமே ஒரு நாடு முழுமையான வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை லெனின் மற்றும் எங்கெல்ஸின் கருத்துக்கள் மூலம் இது உறுதிப்படுத்துகிறது. இறுதியாக, சர்வதேச பெண்கள் தினம் என்பது வெறும் கொண்டாட்டமல்ல, அது ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒரு தொடர் போராட்டக் களம் என்பதை இச்சமூகம் உணர வேண்டும் என்று இது கற்பிக்கிறது.

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தொழர்களே

பெண் அடிமைத்தனத்திற்கும் தனிச்சொத்துரிமைக்கும் உள்ள தொடர்பு என்ன?

சோவியத் ஆட்சி பெண்களின் வீட்டுவேலை சுமையைக் குறைக்க எடுத்த நடவடிக்கைகள் யாவை?

மார்க்சிய பார்வையில் உண்மையான பெண் விடுதலை என்பது எது?

இன்றைய தேர்தல் அரசியலில்

பெண்களுக்கு சில சலுகைகளின் ஏலம் மூலம் தங்களின் தேவைக்கான வாக்கை (ஓட்டை) பெற்றுக் கொள்ள சமுகத்தின் சரிபாதியான பெண்களை ஏய்கின்றனர் என்பேன். 

பெண்களின் வாக்குவங்கியைக் கருதி பல நிதி உதவியை பற்றி எல்லா ஓட்டரசியல் கட்சிகளும் உதவிகளை அள்ளி வீசுகின்றனர்.

தொடக்கத்தில் ஆயிரம் ரூபாய் என்று தொடங்கி, பின்பு இரண்டாயிரம் ரூபாய், தற்போது 2500 ரூபாய் என இந்த நிதி உதவிகள் அதிகரித்து வருகின்றன. அடுத்து வரும் நாட்களில் இதை விட அதிகத் தொகைகளை காணலாம்!

உண்மையில் இந்த தொகையானது பெண் உயர்விற்கு என்ன வழிவகை செய்துள்ளது ஏதாவது அறிக்கை இவர்கள் சமர்பிக்க முடியுமா?

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் சரிபாதி (50%) இடங்களுக்கான சட்டம் இயற்றபட்டது அவர்களுக்கான பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளதா?

பெண் கலெக்டர்கள்- பெண் எஸ்.பிகள் மற்றும் இது  போன்ற அதிகாரிகள் நிலை என்னே? (அதிகாரம் படைத்தோர் அவர்களை செயல்பட விடுகின்றனரா?)

இவை அனைத்தும் பெண்களின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவினாலும், இவை பெண்களை வெறும் 'பயனாளி'களாக (Beneficiaries) மட்டுமே வைத்துக் கொண்டு, அவர்களை இந்த அடிமை சங்கிலியிலிருந்து விடிவிக்காமல் அதனுள்ளே கட்டுண்டிருக்க செய்யும் வேலைதான் இவையென்றால் மிகையல்ல!!!




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்