தத்துவ நடைமுறைகளை ஆம் மார்க்சிய தத்துவத்தை நடைமுறை படுத்த மறுப்பவர்களே கம்யூனிஸ்ட் கட்சியாக அமைப்பாக இயக்கமாக இருந்தால் புரட்சி எப்படி சாத்தியம்?
இன்று நம் மத்தியிலே மார்க்சியத்தை மறுப்பவர்களும் மார்க்சியத்தை எதிர்த்து மார்க்சியத்தை குழப்பவர்களும்தான், மார்க்சியத்தோடு மார்க்சியம் அல்லாதவற்றை மார்க்சியமாக கடைபரப்பும் அவர்களை அம்பலப்படுத்துவதோடு அவர்களை துரோகிகள் என்று எல்லோரையும் ஏற்க செய்வதோடு சரியான மார்க்சிய புரிதலை உருவாக்க முயலுவோம் தோழர்களே!
மார்க்சிவாதியாக இங்கே வலம் வந்து கொண்டுள்ள ஒருவர் சொல்கிறார் ஸ்டாலின் 70% புரட்சியாளர் என்றும், இன்னொரு புறம் சொல்லுகிறார் இன்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொன்னது நடக்கவில்லை? ஆக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மாற்றி எழுத வேண்டும் கூறும் அவரை எத்தனை பேர் விமர்சித்துள்ளனர்? ஆனால் இவர் மார்க்சிய புரட்சி பேசிக் கொண்டு ஆளும் வர்க்கதிடம் சரணடைத்துவிட்ட இவர் தனக்கான தத்துவம் மார்க்சியம் எனும் பொழுது இவர் என்ன சொல்கிறார்? தெரிந்திருந்தல் இவரை அம்பலப்படுத்தியிருபர்? மற்றும் அவரே பேசியிருக்கிறார்! மார்க்சுக்கு மார்க்சியம் தெரியவில்லை அவர் ஆசியபானி உற்பத்திமுறை என்ற நிலையில் அவர் தலைகீழாக இருந்தார் அவரை நான் நட்ட நெட்டுவிட்டேன் இத்தியாதி பேசும் இவரை போன்றோர் எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டுள்ளனர்!?
இதுபோன்ற அயோக்கியங்களை புரிந்துக் கொள்ள மார்க்சிய தத்துவ அடிப்படைகளை புரிந்து கொள்வதின் அவசியம் உள்ளது என்பதை அனைவரும் அறிவர். இந்த மார்க்சிய விரோதிகளை அம்பலப்படுத்துவதோடு மார்சியத்தின் அடிப்படைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதன் அடிப்படையில் சில பகுதி எழுத முனைகிறேன் தோழர்களே!
இந்த பகுதியின் முழு கட்டுரையை ஒலி வடிவில் AI துணையுடன் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
தத்துவம் என்றால் என்ன? எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்ப்பித்து சாதிக்க
விரும்புகிறோமா அவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் அறிவுதான் தத்துவம் ஆகும்.
அவ்விதமான அறிவு எதுவும் இல்லாமலே ஒருவன்
காரியம் பார்க்கலாம், ஆனால் அவன்செய்யும் காரியம், ஏற்கனவே செய்து பழகிப்போன போக்கிலே திரும்பத் திரும்பசெய்து
கொண்டிருக்கிற காரியம்தான் (உதாரணமாக அரசியல்
கட்சிகள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கின்ற காரியமான, பிரசுரம் விநியோகிப்பது, போஸ்டர் ஒட்டுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற காரியங்களை சொல்லலாம்)
அதற்குமேல் போகாமல், போகமுடியாமல் அவன் நின்றுவிட வேண்டியதுதான்.
அதே மாதிரி, இன்னொருவன் சும்மா தத்துவம் பேசிக்கொண்டே
இருக்கலாம். ஆனால் அப்படி பேசிக்கொண்டே இருப்பவனின் சிந்தனைகளும் திட்டங்களும்
யதார்த்தத்தில் சித்திபெற சக்தியில்லாமல் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே
நின்றுவிடுகின்றன. ஆகவே தத்துவமும் நடைமுறையும் இணைந்திருக்க வேண்டும். நமக்கு
வேண்டியது என்ன தத்துவம், அது நடைமுறையுடன் எப்படி இணைந்திருக்க
வேண்டும் என்பதுதான் நம்முன்னுள்ள பிரச்சனையாகும். ஒரு செயல்துணிவுள்ள ஊழியனோ, தொழிலாளியோ தவறு செய்யாமல் புரட்சிக்குரிய காரியங்களை
செய்து கொண்டு போகவேண்டுமானால், அவருக்கு ஒன்று தேவைப்படுகிறது.
விஷயங்களைச் சரியாக ஆய்வு செய்து, புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் விவாதங்கள் நடத்தி
முடிவிற்கு வருவதற்கு ஒரு சரியான ஆய்வுமுறை அவருக்கு இருக்க வேண்டும். சர்வரோக
நிவாரணி மாதிரி எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தயாராக தீர்வை வழங்கக்கூடிய ஒரு
வறட்டுத் தத்துவமும், குருட்டுச் சூத்திரமும் அவருக்குத்
தேவையில்லை.
பின் எப்படிப்பட்ட தத்துவம் தேவை? என்றைக்கும் ஒரேமாதிரியாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கின்ற
விஷயங்களையும் பார்த்து, அலசி, ஆராயும் ஒரு ஆய்வு முறைதான் தேவை. தத்துவத்தை
நடைமுறையிலிருந்து என்றுமே பிரிக்காத ஒரு ஆய்வுமுறை தர்க்கம் (விவாதம்) செய்யும்
முறையை வாழ்விலிருந்து பிரிக்காத ஒரு ஆய்வுமுறை அதுதான் அவருக்கு வேண்டியதாகும்.
அப்படிப்பட்ட ஆய்வுமுறை இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்ற தத்துவத்தில்
காணக்கிடக்கிறது.
ஆகவே இயக்கவியல் பொருள்முதல்வாத
கண்ணோட்டத்திலிருந்து விலகாமல், அதன் அடிப்படையில் உறுதியாக நின்றுகொண்டு
மாறிக்கொண்டிருக்கின்ற பிரச்சனைகளை உள்ளது உள்ளபடி பார்த்து ஆய்வு செய்து பின்பு
தோழர்களுடன் விவாதித்து முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இதற்கு மாறாக
இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை கைவிட்டுவிட்டு மாறிக் கொண்டிருக்கும்
பிரச்சனைகளை மாறாமல் நிலையாக இருப்பதாகக் கருதிக்கொண்டு பார்த்து பிறரிடம் விவாதம்
செய்யாமல் தனது அகநிலை விருப்பங்களிலிருந்து முடிவெடுத்து செயல்பட்டால்
தோல்வியில்தான் முடியும்.
இதன் பொருள் நடைமுறையுடன் தத்துவம்
இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.
இந்திய கம்யூனிச கட்சியிலிருந்து நேற்று
தோன்றிய சிறு குழுவரை நாங்கள் நடைமுறையில்தான் உள்ளோம் நீங்கள் கற்பனைவாதிகள் வறட்டுவாதிகள்,மக்கள் மத்தியில் வேலை செய்யாமல் பூட்டிய ரூமில் இருந்துக் கொண்டு தத்துவம்
பேசுகின்றீர்கள் இப்படி பலவகையில் பேசுவோர் என்ன நடைமுறையில் உள்ளனர்? இத்தியாதி....
அதனை பற்றி நெடிய விவாதம் செய்ய நினைத்தாலும்
அவை காது கொடுத்து கேட்க யாரும் தயார் இல்லை ஆனால் ஆளுக்கொரு வகையில் மக்கள்
மத்தியில் களமாடிக் கொண்டுதான் உள்ளனர் கம்யூனிசம் பேசுபவர்கள்.
மக்கள் ஏனோ வேறு திசையில் போய் கொண்டுள்ளனர்
ஏன் நேற்றுவரை கட்சியில் இருந்தவர்களே எதிர்நிலைக்கும் போகும் மோசமான நிலை நிலவச்
செய்கிறது.
இதில் எங்கே கோளாறு உள்ளது என்று தொடரில் தேட
முயற்சிப்போம்.
ஒரு கொச்சையான நடைமுறை உங்கள் முன் உள்ளவற்றை
பற்றி பேச நினைக்கிறேன்.
தினம் தினம் நாம் நடைமுறையில் பார்க்கும்போது
சங்கிகளின் வளர்ச்சியும் அவர்களுடைய செயலும் மேலோங்கி செல்கிறது.இவர்கள் மதவாதம்
என்ற ஒற்றை மந்திரத்தை வைத்து மக்களை எய்த்து எப்படி மக்கள் மத்தியில்
வளர்ந்தார்கள் தமிழகத்தில் நுழைய முடியாது என்றிருந்த நிலைப்போய் எல்லா
பகுதிகளிலும் கொடியும் பேனரும் எப்படி காட்சி அளிக்கிறது? எப்போதாவது இதனை பற்றி நேர்மறையாக சிந்தத்துண்டா? வெறும் மதவாதமாக மட்டும் சுருக்கி விடாதீர்கள் அவர்கள்
மக்கள் மத்தியில் எவ்வகையில் பணி செய்கின்றனர் சிந்தத்துண்டா?
ஆனால் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக பேசும் பொதுவுடமை கட்சிகள் இயக்கங்கள் மக்கள் மத்தியில் இருந்து விலகிக் கொண்டே உள்ளார்கள். உண்மையில் பார்க்கப் போனால் மக்களுக்கான விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம் மட்டும் தான் ஆனால் மக்கள் ஏன் அதை கிரகிக்கவில்லை? அங்கே தான் நடைமுறையில் சிக்கல் உள்ளது.
மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் அதாவது அரசு இயந்திரத்தை தலையாய அங்கமாய் கொண்டிருக்கிறஅதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது. அதுபோலவே உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே அதாவது பாட்டாளி வர்க்க கட்சியை தலையாய அங்கமாய் கொண்டுள்ள அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது.(உண்மையில் அதுபோன்ற கட்சி அமைப்பு இங்குள்ளதா?)
மார்க்சிய தத்துவம் இதர தத்துவங்கள்
அனைத்திலிருந்தும் வேறுபடுகிறது மற்ற மார்க்சியமல்லாத தத்துவங்கள் எல்லாம் அரசியல்
அதிகாரத்தில் உள்ள அறிவாளிகளுடன் ஒன்று கூடியுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய
மேட்டுக்குடி அறிவாளிகளோடு மட்டுமே சுருங்கிக் கொண்டுள்ளது. இவர்கள் தங்களது
வர்க்க நலனை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளும் பொருட்டு நாட்டு மக்கள் மீது தமது தத்துவங்களை திணிப்பார்கள். ஆனால் மார்க்சிய
தத்துவம் பரந்துபட்ட மக்களுடையது, உண்மையில் இந்த தத்துவமானது பெரும்பான்மையான
உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களினுடைய தத்துவ கண்ணோட்டம் ஆகும்.
பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மக்கள் திரளை
ஒன்றிணைப்பதும் இந்தத்துவத்தின் பால் அவர்களை கிரகித்து அவர்களை
புரிய வைத்தலும், உழைக்கும் மக்கள் தமக்கு சொந்தமான தத்துவத்தை
கிரகித்துக் கொண்டு அதன்படி நடக்கத் துணியும் போது தமது குருதியை உறிஞ்சி
கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சுக்கிருமிகளையும் மாபெரும் புயலான சீறி எழுந்து
ஒரே அடியாகத் துடைத்தொழிப்பர். மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தை
கிரகிக்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலனை பற்றி
போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பு ரீதியான
திரட்டுவதுமான இந்த இமாலய பணியை மக்களுக்கு இடையேயான பணி என்கின்றோம். (இவையைதானே நடைமுறை பணி என்று நமது
ஆசான்கள் போதித்தனர்) ஆனால் இங்குள்ள இடதுசாரிகள்/ புரட்சி பேசுவோர் என்னவகை நடைமுறை கையாள்கிறார்கள்
தோழர்களே நீங்களே புரிந்துக் கொள்ள.
மக்களிடையேலான் பணியின் பாத்திரம்
தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டல்தான் நடைமுறை பிரச்சனை. இக்கடமையை ஒரு
பொதுவுடைமை கட்சி நேர்மையான முறையில் கடமையாற்ற வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின்
ஊழியர்களுடைய பணிதான் நடைமுறை.
ஆக மார்க்சியவாதிகள் இயக்கவியல் பொருள்
முதல்வாத கண்ணோட்டத்தில் தங்களது அணிகளுக்கு மட்டும் இன்றி பரந்த பட்ட திரளான
மக்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டும். உழைக்கின்ற மக்கள் பெருந்திரளாக இந்த
கண்ணோட்டத்தை கிரகித்து முதலாளித்துவ கண்ணோட்ட நிராகரிக்காத வரையில் எதிரியை
தோற்கடிப்பது என்பது அசாத்தியமாகும்.
அதாவது மக்களிடையே நடைமுறை பிரச்சனை என்பது
...
மக்கள் என்பவர் யார்? மக்களிடையே கம்யூனிஸ்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு
எவ்வாறு இருக்க வேண்டும்...
மக்களைப் பயிற்றுவிப்பதிலும் அமைப்பு ரீதியாக
திரட்டுவதில் என்ன முறைகளை கையாள வேண்டும். எனும் மக்கள் இடையிலான பணியில் தான்
நடைமுறை அடங்கியுள்ளது.
மக்கள்தான் உண்மையான இரும்பு கோட்டை இதை
உலகில் எந்த சக்தியாலும் தகர்ப்பது சாத்தியமாகாது என்ற மாவோ கூற்றை புரிந்துகொண்டு
இந்த இரும்பு கோட்டை உருவாக்கும் இரும்பு கற்கள் தனித்தனியாக ஒன்று சேர்க்கப்பட்டு
பூசப்படாமல் உள்ளது. இந்த இரும்பு கற்களை அடுக்கி பூசி உலகில் உள்ள எந்த சக்தியாலும் நொறுக்கப்பட முடியாத அளவிற்கு
ஒரு சக்திவாய்ந்த இரும்புக்கோட்டையாக நிறுவ வேண்டும். இவைதான் கம்யூனிஸ்டுகள்
நடைமுறையில் செய்ய வேண்டிய பணியின் முக்கியமானதாகும்.
புரட்சி பேசும் குழுக்கள் சில ஆளும் வர்க்கத்தின் பின் அணிதிரண்டுள்ளது, இன்னும் சிலர் புரட்சி வேசமிட்டு குறுங்குழுவாத சகதியில் வீழ்ந்துள்ளனர்...
இவர்கள் இல்லாத சில முற்போக்கு பேசி அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் பெயரில் இயங்குபவர்கள் இதே சமூக அமைப்பில் தொடர பல நாடகபாணி செயல்களில் ஈடு படுகின்றனர்.
ஆனால் மார்க்சியம் என்ன சொல்கிறது???
மார்க்சியத்தின் உயிராதரமான தத்துவத்தை புரிந்து கொள்வதில் லெனில் மிகத் தெளிவாக செயல்பட்டார். மார்க்சியத்தை நிலை நாட்டுவதில்ஒரு புரட்சிகர கட்சியின் அவசியத்தையும் அந்தப் புரட்சிகர கட்சியின் செயலையும் அதே நேரத்தில் புரட்சிக்கு விரோதமானநிலையில் உள்ளவற்றையும் உள்ளவர்களையும் அம்பலப்படுத்தினார்.அதே நேரத்தில் பறந்து கிடந்த தன் நாட்டில் பல்வேறு வகையான வர்க்கங்களை வர்க்க சக்திகளை இனம் கண்டு புரட்சிக்கானவர்களை ஒருங்கிணைத்தார் புரட்சிக்கு எதிரானவர்களை அம்பலப்படுத்தினார்.
அவ்வகையில் மக்கள் மத்தியில் தனது கட்சி ஒன்றுபட்டு செயல்பட
வேண்டிய அவசியத்தை பறைசாற்றினார். அந்த நடைமுறையை தான் புரட்சி சாதித்தது.
இதேபோன்று பின் தங்கிய நாடான சீனத்தில் தனது நாட்டின் நிலைமைக்கு ஒப்ப ஒன்றுபட்ட
கட்சியின் அவசியமும் பகுதி வாரியான செயல்பாடுகளையும் ஒரு கட்சி செய்ய வேண்டிய
பணியையும் மிகத் தீவிரமாக மாவோ ஆராய்ந்தார் அதன் அடிப்படையில் ரஷ்ய புரட்சியில்
கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தனது நாட்டில் புரட்சியை நடத்துவதற்கான
மார்க்சியத்தை உள்வாங்கி அந்த தத்துவத்தை நடைமுறை ஆக்கும் பணியை கட்சிக்கு விதித்தார்.
அவை தான் அந்த சீனாவில் இருந்த பிற்போக்குத்தனங்களை உடைத்தெறிந்து ஒரு புரட்சிகர
சமூகத்தை படைத்தது. அதில் தான் மார்க்சிய தத்துவமும் நடைமுறையும் அடங்கி உள்ளது.
இந்தியாவில் இப்பொழுது தமிழகத்தில் உள்ள போக்குகளான
அம்பேத்கர் பெரியார் பின்னால் அணி திரள்வோரும் தமிழ் தேசியம் பேசுவோரும் என்ன
நடைமுறை தத்துவத்தை கடைப்பிடிக்கின்றனர்.
அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் பணிகள் அன்றைய சமுகத்தில்
பெரும் வரவேற்பு பெற்றது. ஏனென்றால் அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஒரு
குறிப்பிட்ட அளவில் சீர்திருத்த வகையில் சமூக மாற்றத்திற்கு பணி செய்தது. ஆனால்
அதன் நோக்கம் சமூகம் மாற்றத்தை தடைபோட, போராட்டங்களை நிறுத்தி வைக்க தான். மக்கள் விடுதலைப்
போராட்டத்தில் இருந்து திசைத்திருப்ப இதை பயன்படுத்தினார்கள். ஆம் அம்பேத்கர்
பெரியார் முன்வைத்த கோரிக்கைகள் ஒரு சிலர் பயன்பட்டு இன்று மேல் நிலையில்
உள்ளார்கள். இருந்தும் இன்றும் பெரும்பான்மையான அவர்கள் பேசும் மக்கள் மிகக்
கொடூரமான முறையில் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டும் கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி
கவலைப்படாத இந்த மேல்நிலைக்கு வந்தகூட்டம் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த
அம்பேத்கரையும் பெரியாரையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அதேபோல் தமிழ் தேச விடுதலை பேசும் பெரும்பாலான இயக்கங்கள்
இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளவையே. இவர்கள் எல்லோரும் பேச்சில் மார்க்சியவாதியாக
இருந்துக் கொண்டே செயலில் மார்க்சியத்தை மறுக்கும் ஏகாதிபத்திய காவலர்களாக
உள்ளனர். ஆளும் வர்க்க காவலர்களாக வலம் வருகிறார்கள்.
‘’சீர்திருத்தங்கள் என்றால் ஆளும் வர்க்கத்தின்
ஆட்சியதிகாரத்தை அழிக்காமலேயே உழைக்கும் மக்களின் நிலைமைகளில் மேம்பாட்டையச்
செய்வதாகும். அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கும்வரை,
தனிப்பட்ட மேம்பாடுகள்
ஏற்பட்டாலும், எப்போதும் கூலி அடிமைகளாகவே இருந்து வருவோரான தொழிலாளர்களை
முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான் சீர்திருத்தவாதம் ஆகும்’’ என்றார் லெனின்.
"மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தார் ஒரு கையால்
சீர்திருத்தங்களை வழங்கி விட்டு மறுகையால் எப்போதும் அவற்றை திருப்பி
எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்" என்றார் லெனின்.
முதலாளிகள் உழைக்கும் மக்களுக்கு குறைந்த கூலி கொடுத்து
சுரண்டி அவர்களின் மூலதனத்தை குவித்துக் கொள்வார்கள். ஆகவே முதலாளிகளும் அவர்களது
அரசும் எப்போதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க விரும்பமாட்டார்கள்.
ஆட்சியாளர்களும், முதலாளிகளும் கொடுக்கும் சலுகைகளே போதுமானது என்ற
சுயதிருப்தி மனப்பான்மையை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். இந்தகைய மன நிலையிலேயே
வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட மக்கள்! இப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை
ஆட்சியாளர்கள் பறிக்கும் போது உழைக்கும் மக்கள் கையறு நிலையிலேயே நிற்கிறார்கள்.
இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான நிறுவனங்கள் அதாவது கட்சிகள் இன்றி
மக்கள் தனிமைப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்திய வரலாற்றில் உழைக்கும் மக்கள் இந்த
சீர்திருத்தவாதிகளை நம்பி அவர்கள் பின்னால் சென்றதன் விளைவாக உழைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்
பலவீனப்படுத்தப்பட்டுள்ளார்கள், உழைக்கும் மக்கள் சீரழிந்துள்ளார்கள் என்ற நடைமுறை உண்மையை
அன்றே லெனின் பல நாடுகளின் அனுபவங்களிலிருந்து வழிகாட்டியதை நாம் பின்பற்றத்
தவறியதன் பலனை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.
"அற்ப சலுகைகளின் மூலம் சீர்திருத்தவாதிகள் தொழிலாளர்களை
பிளவுபடுத்தவும் ஏமாற்றவும் முயல்கிறார்கள். அவர்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து
திசைதிருப்பிவிட முயலுகிறார்கள்"என்றார் லெனின். அதனை நாம் இங்கு எதார்த்ததில் நம் சமூகத்தில் காண்கிறோம்.
சமூக முன்னேற்றத்திற்கு இயங்கு சக்தியாக இருப்பது
வர்க்கங்களுக்கு இடையான ஒத்துழைப்பு என்பது முதலாளித்துவ தத்துவம் இதற்கு எதிரானது
தான் லெனின் கூறிய வர்க்க போராட்டம் பற்றிய மார்க்சியத்தின் வரையறை ...
தனி உடைமை சமூகத்தில் தானும் ஒரு இடம் தேடுவது தானே?
சமூகத்தில் உள்ள இந்த
போக்கானது கண்ணோட்டமானது பெரும்பானமியினர் மத்தியிலும் ஏதோ ஒரு வகையில் பீடித்து
உள்ளதுதானே? இங்கே நம்மிடையே உள்ளவர்களின் மார்க்சிய தத்துவப்புரிதலில்
உள்ள கோளாறு தான் இந்த செயல்பாடுகளை சீரழிக்கிறது என்பேன்.
ஒட்டுமொத்த சமூகதில் உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டும்
சூறையாடப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அடக்கப்பட்டும் கிடக்கும் பொழுது இதற்குள்ளே
சிலரின் அல்லது சில முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவது எவ்வகையான சமூக
மாற்றத்திற்கு பயன்படும். ஆகவே மார்க்சிய தத்துவம் ஒட்டுமொத்த சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை
அம்பலப்படுத்தி அதற்கு விடுதலைக்கான பாத்திரத்தை புரட்சிகர கட்சிக்கு வழங்குகிறது.
அந்த புரட்சிகர கட்சி ஆனது தனது செயல்பாட்டை மார்க்சியத்தின் துணை கொண்டு
செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அப்பொழுதுதான் மார்க்சிய தத்துவமானது
நடைமுறையில் செயல்பட முடியும். ஆகவே தத்துவம் நடைமுறை என்பது மார்க்சிய
தத்துவத்தை தான் கூறுகின்றோம்,மார்க்சியமல்லாத பல்வேறு தத்துவங்களை பிடித்துக் கொண்டு அவை
நடைமுறை ஆக்குவதால் உண்மையாலுமே சுரண்டப்பட்டும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும்
இருக்கும் மக்களுக்கு எவ்வித விடுதலைகளையும் தராது.
இங்கே நடைமுறை பணியாக எவ்வகையில் உள்ளது? இங்கு நடைமுறையில் உள்ளவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.
1).பாராளுமன்றத்தை ஏற்றுசெயல்படுபவர்கள்
2). புரட்சி பேசும் குழுக்கள்
3). ஆயுதம் ஏந்தி உள்ள போராளி குழுக்களான மாவோயிஸ்டுகள்.
முதலில் பாராளுமன்றத்தை ஏற்று செயல்படும் சட்டவாத அமைப்புகள்
தங்களுக்கான பல்வேறு விதமான தொழிற்சங்கம், மாணவர் சங்கம், விவசாய சங்கம் மற்றும் பல வெகுஜன அமைப்புகள் கட்டி
செயல்படுகிறார்கள். இவர்களின் ஒவ்வொரு கோரிக்கையும் இறுதியாக சட்டவாதமாக
பாராளுமன்றத்திற்குள்ளே முடங்கிப் போவதும் அவர்களின் போராட்டங்கள் கோரிக்கைகள்
முதலாளித்துவம் அவர்களின் விரோதமாக இருப்பதாக நிராகறிப்பதும் இறுதியில் தோல்வி
காண்கிறார்கள். இதில் தோல்வி காண்பவர்கள் ஆளும் கட்சிகளிடம் புகழிடம் தேடுகிறார்கள். இந்தப் பாராளுமன்ற கட்சிகள் இறுதியாக ஆளும்
வர்க்க கட்சிகளுடன் பேரம் பேசி தங்களையும் தங்களின் கட்சியையும் அடகு வைத்து
விடுகிறார்கள். மக்களுக்கு இவர்கள் மீது இருக்கும் மரியாதைகளும் மதிப்பும் அதனால்
இழந்து போகிறது.
இரண்டாவது வகை குறுங்குழுக்கள் எவ்வகையான அரசியல் பேசினாலும் மக்கள்
இடையிடையில் செல்வாக்கிழந்துள்ளனர். இவர்கள் அணிகளுக்கு தத்துவ அரசியல் போதிப்பதுமில்லை,
மக்களிடம் தங்களின்
அரசியல் பணியை போதிப்பதைவிட தன் அணியை மேலும் மேலும் எப்படியாவது தக்க வைக்க,
விரிவாக்க செயல்தந்திர
முழக்கங்கள் வைக்கின்றனர். அதன் மூலம் மக்களை உணர்ச்சி படுத்த நினைக்கிறார்கள்
அந்த முழகங்கள் இவர்களின் செயலுக்கு உட்பட்டது அல்ல என்று அவர்களுக்கு தெரியும். அண்மையில் சில முழக்கங்கள் மோடியை தூக்கி எறிவோம்,
ட்ரம்பை தூக்கி
எறிவோம். இந்த முழக்கம் வைத்துள்ள குழு இதன் சாத்தியபாட்டை விளக்குமா?
ஆகையால் இவர்களின்
செயல் வீணடிக்கப் பட்டுக் கொண்டுள்ளது.சில நபர்கள் செய்யும் பணியா?
என்று அவர்கள்
பரிசீலிக்க வேண்டும்!.
மூன்றாவது பிரிவு. சில வெகுஜன ஸ்தாபனம் கட்டியிருந்தாலும் அவர்கள் மக்களை
ஒன்றிணைப்பதில் தோல்வி கண்டுள்ளார்கள். தங்களின் அர்ப்பணிப்பும் தியாகமும்
உண்மையாலும் மக்களை ஈர்க்கும் என்று பணி செய்துக்கொண்டிகிறார்கள். இருந்தும்
அரசின் கொடூரமான செயல் முன் இவர்கள் மக்களை அரசியல் படுத்தவும் எதிரிக்கு எதிரான
போரில் வெகுஜன போராட்டதிற்கு போதிக்க ஸ்தாபனப்படுத்தவும் மறுத்துவிட்டு தாங்கள்
மட்டுமே செயல்படுவதனால் மக்களுக்கான பணியில் முன்னேற வேண்டியவர்கள் பின்தங்கி
நிற்கிறார்கள் என்பதனை அவர்கள் புரிந்துக் கொள்வது அவசியம்.
ஆகவே நடைமுறைப் பணி என்பது நாட்டின் பெருவாரியான உழைக்கும்
மக்களை ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு கிடக்கும் மக்களை ஒன்றிணைத்து எதிரிக்கு
எதிரான போரில் தங்களின் விடுதலைக்கு தமது பலத்தை பிரயோகித்து எதிரியை
வீழ்த்துவதுதான் மூலம் தமக்கான விடுதலை பெறுவதுதான்!அவை தான் நடைமுறைக்கான
வழிமுறை. விரிவாக பின்னர் பார்ப்போம் தோழர்களே. இதனை விரிவான தளத்தில் பேச
வேண்டியுள்ளது தோழர்களே அவசியம் பேசுவோம் தோழர்களே.
தத்துவமும் நடைமுறையும் இணைந்ததே மார்க்சியம்
மார்க்சியம் மானுட சமூக வரலாற்றையும் மானுட சமகால சமூக
வாழ்வையும் அறிவியல் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
எந்த சமூகத்தை மார்க்சிய அணுகுமுறையில் ஆய்வு செய்வதானாலும் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படை கோட்பாட்டை பின்பற்றியே ஆக வேண்டும். இதில்
“நாட்டுக்கு நாடு, மண்ணுக்கு மண் வேறுபடுவது” என்ற கருத்துக்கே இடம் கிடையாது. இயக்கவியல் இடைவிடா இயக்கமும் மாற்றமும் தான். மார்க்சிய தத்துவ நிலைபாட்டில் இருந்துதான் அனைத்து
சமூகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். இயக்கவியல் விஞ்ஞான, அணுகுமுறையில், ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, மண்ணுக்கு மண் என்ற அம்சங்களின் அடிப்படையில் வேறுபாடு
இருக்க இயலாது.
மார்க்சியத்தின் இன்னொரு முக்கிய அம்சம் – பிற
தத்துவங்களிருந்து மார்க்சியத்தை அடிப்படையில் வேறுபடுத்துவது – மார்க்சியத்தில் தத்துவமும் நடைமுறையும் பின்னிப் பிணைந்தவை
என்பதாகும். ஃபாயர்பாக் என்ற ஜெர்மானிய மெய்யியலாளர் தொடர்பான தனது 13 கருத்துருக்களில் மார்க்ஸ் முன்வைத்த ஒரு மிக முக்கியமான
கருத்துரு, “ இதுவரை மெய்யியலாளர்கள் உலகை வியாக்கியானம் செய்வதில் தான்
முனைந்தனர். ஆனால், விஷயம் என்னவெனில், உலகை மாற்றவேண்டும் என்பது தான்” என்பதாகும். இந்த
அடிப்படையில் தனது தத்துவ நிலைபாட்டில் இருந்து சமூகத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் களம் இறங்கி செயல்படுவதும், அச்செயல்பாட்டின் வாயிலாக படிப்பினைகளைப் பெறுவதும், பெற்ற படிப்பினைகளை மார்க்சிய தத்துவத்தை வலுப்படுத்தவும்
செழுமைப்படுத்தவும் பயன்படுத்துவதும் மார்க்சிய அணுகுமுறையின் இன்றியமையாத
அம்சங்கள் ஆகும். நடைமுறைக்கு வழிகாட்டியாக தத்துவம் இருப்பதும், நடைமுறை மூலம் தத்துவம் மேன்மேலும் செழுமை அடைவதும்
இணைந்தது தான் மார்க்சியம்.
அதனால் பொத்தாம் பொதுவாக நடைமுறையில் உள்ளோம் என்பதனை விட்டுவிட்டு என்ன வகையான நடைமுறையில் உள்ளீர் என்பதனையும் குறிப்பிடவும் தோழர்களே?.
இங்குள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் தேவையின் பின்னால் ஓடுவது எதற்கான நடைமுறை யாருக்கானது? தத்துவத்தை நடைமுறை படுத்துகின்றனர் என்பவர்கள் விளக்குவார்களா?
"புரட்சிகரத் தத்துவம் இல்லாவிட்டால், புரட்சிகர இயக்கம் என்பது இருக்க முடியாது" என்று லெனின் அவர்கள் நமக்குப் போதித்துள்ளார்.
தத்துவம் என்பது வரட்டு வேதாந்தம் அல்ல. அது செயலுக்கு ஒரு வழிகாட்டி,"இது வரையில் தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் மாத்திரம் செய்துள்ளனர். நமது கடமை அதை மாற்றுவதாகும்" என்று மார்க்ஸ் அவர்கள் கூறினர்.
ஒருபுறம் சொத்துடைய கூட்டம் இன்னொறுபுறம் வாழ்வா சாவா தினம் தினம் வாழ்க்கை வாழ போராடிக் கொண்டிருக்கும் கூட்டம்.
பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மக்கள் திரளை ஒன்றிணைப்பதும் இத்தத்துவத்தின் பால் அவர்களை கிரகித்து அவர்களை புரிய வைத்தலும், உழைக்கும் மக்கள் தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகித்துக் கொண்டு அதன்படி நடக்கத் துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சுக்கிருமிகளையும் மாபெரும் புயலான சீறி எழுந்து ஒரே அடியாகத் துடைத்தொழிப்பர்(அவைதான் தத்துவம் நடைமுறை பெற்று புரட்சியாக பரிணாமம் பெறல்).
தொடரும்....
No comments:
Post a Comment