இந்த இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்
|
வ.எண் |
தலைப்பு |
பக்கம் |
|
01. |
ஆசிரியர் பகுதி |
03 |
|
02. |
திருத்தல்வாதம் செங்யென்சீ பாகம் 7. |
05 |
|
03. |
பாராளும்ன்றம் மற்றும் தேர்தல் பற்றிய தேடல் |
13 |
|
04. |
சமூகத்தில் வர்க்கமும் வர்க்கம் பற்றி புரிதலுக்கு |
28 |
இந்த இதழின் சாரம்ச ரீதியாக ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
யூடூப் வீடியோ வடிவில் காண இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
அன்றிலிருந்து இன்றுவரையிலான இந்திய கம்யூனிச இயக்கத்தின்
வரலாறானது பல்லாயிரக்கணக்கான தோழர்கள், கோடிக்கணக்கான விவசாயிகள்,
தொழிலாளர்களின்
அளப்பரிய தியாகமும் அவர்கள் சிந்திய செங்குருதியும் நிறைந்ததாகும்.
அன்றைக்கு, கம்யூனிசக் கொள்கையின் ஈர்ப்பினால் உந்தப்பட்ட தோழர்கள்
தலைமையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ
ஆதிக்கத்திற்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் ஏராளம். வங்காளத்தில்
தெபாகா விவசாயிகள் எழுச்சி; மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் வார்லி பழங்குடி மக்களின்
எழுச்சி; கேரளத்தில் வயலாறு-புன்னப்புரா தொழிலாளர் போராட்டம்;
தமிழ்நாட்டில்
கீழத்தஞ்சை கூலி விவசாயிகளின் செங்கொடி இயக்கம்;
தபால் தந்தி ஊழியர்
போராட்டம்; மும்பை துறைமுகத் தொழிலாளர் போராட்டம்;
மும்பை கப்பற்படை
எழுச்சி என்று எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றின. கம்யூனிஸ்டுகள் தலைமையில்
உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்துப் போராடுவதைக் கண்டு அஞ்சிய ஆர்.எஸ்.எஸ்-இன்
மூதாதையர்கள், இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தினர்;
பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்தனர். காங்கிரசு கட்சியோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
போராட்டங்களை ‘அகிம்சை வழிப் போராட்டம்’ என்ற பெயரில் மழுங்கடித்தது. எனினும்,
இவற்றையெல்லாம் மீறி
கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் 1942-இல் மூண்டெழுந்த கப்பற்படை எழுச்சி,
1946-இல் முன்னேறிய
தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் போன்ற போராட்டங்கள் மக்கள் மத்தியில்
போராட்டங்கள் வளர்வதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்,
அதன் கொள்ளைக்குத் துணை
போன இந்திய தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் கூட்டுச் சதியின் விளைவாக,
1947-இல் ஆட்சி
அதிகாரத்தை அவர்களின் அடிமைகளிடம் ஒப்படைத்ததோடு மத அடிப்படையில் நாட்டை துண்டாடி
வெளியேறினர். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று,
தெலுங்கானாவில்
நடைபெற்ற ஆயுதப் போராட்டம் மிகச் சிறப்பான முறையில் அரசை நடுநடுங்க செய்த போராட்டமாகும்.
இதனை அடுத்து பல்வேறு சதி வழக்குகளையும் கொடூரமான அடக்குமுறையையும் கம்யூனிஸ்டுகள்
மீது நடத்தியது இந்திய ஆளும் வர்க்கம் அதன் பின்னணியில் அரசின் அராஜகத்திற்கு
அடிப்பணித்து கட்சியானது புரட்சிக்கான வழிமுறையை கைவிட்டு தங்களின் இருப்புக்கான
வழிமுறையை கையிலெடுத்து உள்ள அமைப்பில் தனக்கான இடம் தேடி பாராளுமன்றம் மட்டுமே
தனக்கான இடமாக சுருக்கிக் கொண்டது என்பதுதான் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் சுருக்கமான
வரலாறாகும். ஆரம்பகால இந்திய கம்யூனிஸ்டுகளின் வரலாறு தியாக வரலாறாகும். தெலுங்கான
புரட்சிப் பாதையை கைவிட்டபின்புள்ள வரலாறு துரோக வரலாறாகும். இந்த வரலாற்றை நாம்
படித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது,
இன்றைய நிலைகளை
புரிந்துக் கொள்ள.
முதலாளித்துவ சமுதாயத்தின் ஊழல் மலிந்த நாற்றம்பிடித்த
நாடாளுமன்ற முறைக்குப் பதிலாய், கம்யூனனது கருத்துச் சுதந்திரமும் விவாதச் சுதந்திரமும்
ஏமாற்று வித்தையாய்ச் சீரழிந்துவிடாத உறுப்புக்களைத் தோற்றுவிக்கிறது, எப்படியெனில் நாடாளுமன்றத்தினர் தாமே வேலை செய்யவும், தாம் இயற்றும் சட்டங்களைத் தாமே செயல்படுத்தவும், உண்மையில் சாதிக்கப் பெற்ற பலன்களைத் தாமேசோதித்துப் பார்க்கவும்,
தம்மைத் தேர்ந்தெடுத்த தொகுதியோருக்கு நேரடியாகத் தாமே பொறுப்புக்
கூறவும் வேண்டியதாகிறது. பிரதிநிதித்துவ உறுப்புக்கள் தொடர்ந்து நிலவுகின்றன;
ஆனால் நாடாளுமன்ற முறை ஓரு தனிவகை அமைப்பாய், சட்டமியற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் இடையிலான உழைப்புப்
பிரிவினையாய், பிரதிநிதிகளது தனிச்சலுகை நிலையாய்
நிலவவில்லை. பிரதிநிதித்துவ உறுப்புக்கள் இல்லாமல் ஜனநாயகத்தை, பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது.
ஆனால் நாடாளுமன்ற முறை இல்லாமல் ஜனநாயகத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியும்,
கட்டாயம் பார்க்கவும் வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தை நாம்
விமர்சித்துக் கண்டிப்பது வெறும் சொல் அளவிலான விமர்சனமாய் நின்று விடக்
கூடாதெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்த
வேண்டுமென்ற விருப்பம், மென்ஷிவிக்குகள், சோஷலிஸ்டு-புரட்சியாளர்கள் விவகாரத்திலும், மற்றும்
………………. விவகாரத்திலும் இருப்பது போல தொழிலாளர்களுடைய வாக்குகளைக் கவருவதற்கான
வெறும் “தேர்தல்” முழக்கமாயிராது நமது
இடமான உள்ளப் பூர்வமான விருப்பமாய் இருந்தால் கட்டாயம் நாம் இவ்வாறே செய்ய வேண்டும்.
கம்யூனுக்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும் அவசியமான
அந்த அதிகாரிகளின் பணிகள் குறித்துப் பேசுகையில் மார்க்ஸ் அவர்களை “எந்த ஒரு முதலாளியின்” ஊழியர்களுடன், அதாவது சாதாரண முதலாளித்துவத் தொழில்
நிலையத்தின் “தொழிலாளர்கள், போர்மன்கள், கணக்கர்களுடன்” ஒப்பிடுவது கருத்தூண்றிக் கவனிக்கத்தக்கதாகும்.
இவையை புரிந்துக் கொள்ள
சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், "சட்டத்தின் முன் எல்லாக் குடிமக்களின் சமத்துவம்" இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் - ஒவ்வொரு இருபத்திகளிலும் நேர்மையான, வர்க்க உணர்வுடைய எல்லாத் தொழிலாளர்களுக்கும் நன்கு தெரிந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் போலித்தனத்தின் அறிகுறிகளைக் காணலாம். "பொது ஒழுங்கு மீறப்படும் போது" உள்ளபடியே காணப்படும் வர்க்கம் தனது அடிமை நிலையை "மீறி" அடிமைத்தனம் அற்ற முறையில் நடக்க முயலுமானால் தொழிலாளர்களுக்கு எதிராகப் படைகளை அனுப்பவும், ராணுவச் சட்டம் பிரகடனம் செய்யவும், இன்னபிறவற்றை அமுலாக்க முதலாளித்துவ வர்க்கத்துக்கு உத்தரவாதம் செய்வதற்கான நுழைவிடங்கள் அல்லது தனி உரிமைகளை ஒதுக்கீடு செய்யாத எந்த ஒரு தனி அரசும் - எவ்வளவுதான் ஜனநாயகத்தன்மையுடையதாயினும் சரி - கிடையாது.
அறிவாளியும் படிப்பாளியுமான கவுத்ஸ்கி இவற்றைப் பற்றி எல்லாம் மெளனம் சாதிக்கிறார்! இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பது வெறுக்கத்தக்கது என்பதை அந்தப் படிப்பாளி அரசியல்வாதி உணரவில்லை.என்ன அற்புதமான அறிவாழம்! முதலாளித்துவ வர்க்கத்திடம் எத்தகைய நயநாகரிகமான அடிமைத்தனம்! முதலாளிகள் முன்னால் எத்தகைய தன்மதிப்பிழந்த சரணாகதி! எத்தகைய கெஞ்சி மன்றாடுதல்!
No comments:
Post a Comment