சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம்- மார்க்சியமா?-04 விவாதம் (AI உதவியுடன் ஒலி வடிவில்)

தோழர்களே,

நம்மிடையே உள்ளோர் பலர் மார்க்சிய கண்ணோட்டம் முழுமையாக இல்லாமையால் மார்க்சிய அல்லாதவற்றை மார்க்சியமாக பேசுவது அறியாமையில் எனலாம்! ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்களே மார்க்சியத்தை மறுத்து பேசும் பொழுது அவர்களை என்னவென்று சொல்வது? அதனை பற்றிய தேடலே இந்த தொடர் எழுத்துகள்! நீங்களே உங்களின் கருத்துகளை சொல்லுங்கள் தோழர்களே!?!

சில நாட்களாக ஏன் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கம்யூனிஸ்ட் கட்சியும் பல்வேறு புரட்சி பேசும் குழுக்களும் என்ன நிலைப்பாட்டை வைத்து மக்கள் மத்தியில் வினையாற்றுகின்றனர் அல்லது நடைமுறையாக கொண்டுள்ளனர் என்பதனை நீங்களே அவர்களின் நடைமுறை மார்க்சியமா அல்லது இங்குள்ள ஆளும் வர்க்க கண்ணோட்டமா? என்று விளங்கிக் கொள்ள அவர்களின் செயல்பாட்டிலிருந்து நீங்களே புரிந்துக் கொள்ள முடியும் தோழர்களே!

இங்கே ஒருவன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மாற்றி எழுத சொல்கிறான். அவனின் முழு எழுத்துகளையும்  வாசித்து அல்லது ஒலி வடிவில் உள்ளதை கேட்டால் இந்த விவாதம் தொடர்ச்சி விளங்கிக் கொள்வது எளிதா இருக்கும்  
அந்த கட்டுரையை முழுமையாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்தி வாசிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே

இனி மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றை அந்த நபர் எந்தளவு புரிந்துள்ளார் என்பதனையே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்தே நேரடிய சுட்டிக் காட்ட வேண்டியதாக உள்ளது. தொடர்ச்சியாக கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையிலிருந்து சில பகுதி அப்படியே.

இந்த பகுதியை AI உதவியுடன் ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

 "வரலாற்றின் தொடக்ககாலச் சகாப்தங்களில், அனேகமாக எங்கும், பல்வேறு அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒரு சமுதாய ஏற்பாட்டைக் காண்கிறோம். சமூக அந்தஸ்தில் பல்வேறு படிநிலை அமைப்புகள் இருக்கக் காண்கிறோம்... ... முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் ......

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.

முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

.......முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.

பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் - முதலாளித்துவ வர்க்கம் பலவந்தமாக வீழ்த்தப்பட்டு, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் கட்டம்வரையில் - நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்........" (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதலாம் அத்தியாயத்தில் உள்ளவையே மேல்காணும் குறிப்புகள்- இவை மார்க்ஸ் எங்கெல்சால் எழுதப்பட்டவையே)

மேலும் இரண்டாம் அத்தியாயத்தில்

”வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில், மதம், ஒழுக்கநெறி, தத்துவம், சட்டநெறி சார்பான கருத்துகள் ஐயத்துக்கு இடமின்றி மாற்றம் அடைந்துள்ளன. ஆனால் மதம், ஒழுக்கநெறி, தத்துவம், அரசியில் விஞ்ஞானம், சட்டம் ஆகியவை இந்த மாற்றத்தினால் பாதிக்கப்படாமல் தொடர்ந்து நிலைபெற்றுள்ளன” என்று கூறப்படுவதுண்டு.

”இவைதவிர, சுதந்திரம், நீதி என்பன போன்ற நிரந்தர உண்மைகள் இருக்கின்றன. அவை சமுதாயத்தின் அனைத்துக் கட்டங்களுக்கும் பொதுவானவை. ஆனால் கம்யூனிசம் நிரந்தர உண்மைகளை ஒழித்துவிடுகிறது. மதம் அனைத்தையும், ஒழுக்கநெறி அனைத்தையும் புதிய அடிப்படையில் கட்டமைப்பதற்குப் பதிலாக அவற்றை ஒழித்துக்கட்டுகிறது. ஆக, கம்யூனிசம், கடந்த காலத்தின் வரலாற்று ரீதியான அனுபவம் அனைத்துக்கும் முரணாகச் செயல்படுகிறது.”

இந்தக் குற்றச்சாட்டின் சாரமாக மிஞ்சுவது என்ன? வெவ்வேறு சகாப்தங்களில் வெவ்வேறு வடிவங்களை மேற்கொண்ட வர்க்கப் பகைமைகளின் வளர்ச்சியில்தான் கடந்தகால சமுதாயம் அனைத்தின் வரலாறும் அடங்கியுள்ளது என்பதே.

ஆனால், இந்த வர்க்கப் பகைமைகள் எந்த வடிவத்தை ஏற்றிருந்தாலும், சமுதாயத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சுரண்டியது என்பது, கடந்தகாலச் சகாப்தங்கள் அனைத்துக்கும் பொதுவான உண்மையாகும். எனவே கடந்தகாலச் சகாப்தங்களின் சமூக உணர்வு பல்வேறுபட்டதாகவும், பல்வகைப்பட்டதாகவும் காட்சியளித்த போதிலும், குறிப்பிட்ட சில பொது வடிவங்கள் அல்லது பொதுவான கருத்துகளுக்கு உள்ளேதான் இயங்கி வந்துள்ளது என்பதில் வியப்பேதும் இல்லை. வர்க்கப் பகைமைகள் முழுமையாக மறைந்தாலொழிய அவ்வடிவங்களும் கருத்துகளும் முற்றிலுமாக மறைந்துபோக முடியாது.

பாரம்பரியச் சொத்துடைமை உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாக முறித்துக் கொள்வதே கம்யூனிசப் புரட்சியாகும். எனவே, அதன் வளர்ச்சியின்போது பாரம்பரியக் கருத்துக்களிலிருந்து மிகவும் தீவிரமாக முறித்துக் கொள்ள நேர்வதில் வியப்பேதும் இல்லை.

போதும், கம்யூனிசத்துக்கு எதிரான முதலாளித்துவ ஆட்சேபணைகளை இத்துடன் முடித்துக் கொள்வோம்.

பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்க நிலைக்கு உயர்த்துவதும், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதும், தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியில் முதல் படியாகும் என்பதை மேலே கண்டோம்.

(இவையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதியவைதான்)

மூன்றாம் அத்தியாயத்தில்

(அ) நிலப்பிரபுத்துவ சோஷலிசம்

ஃபிரான்சையும் இங்கிலாந்தையும் சேர்ந்த பிரபுக் குலத்தோருக்கு, அவர்களின் வரலாற்று நிலை காரணமாக, நவீன முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்துப் பிரசுரங்கள் எழுதுவது அவர்களுடைய வாழ்க்கைத் தொழில் ஆனது. 1830 ஜூலையில் நடைபெற்ற ஃபிரெஞ்சுப் புரட்சியிலும், இங்கிலாந்து சீர்திருத்தக் கிளர்ச்சியிலும்[இங்கிலாந்து சீர்திருத்தக் கிளர்ச்சி: இங்குக் குறிப்பிடப்படுவது இங்கிலாந்து பாராளுமன்றத் தேர்தல் சீர்திருத்தத்துக்காக நடைபெற்ற கிளர்ச்சியாகும்.] இந்தப் பிரபுக் குலத்தோர், வெறுக்கத்தக்க திடீர்ப் பணக்காரர்களிடம் மீண்டும் தோற்றுப் போயினர். அதன்பிறகு, தீவிர அரசியல் போராட்டத்துக்குக் கொஞ்சமும் வழியில்லாமல் போய்விட்டது. இனி இலக்கியப் போர் ஒன்றுதான் சாத்தியமானதாக இருந்தது. ஆனால், இலக்கியத் துறையிலுங்கூட மீட்சிக் காலத்தின்[1814-க்கும் 1830-க்கும் இடையே நடைபெற்ற ஃபிரெஞ்சு [முடியாட்சியின்] மீட்சியே [இங்குக் குறிப்பிடப்படுகிறது].  பழைய கூப்பாடுகள் சாத்தியமற்றுப் போயின. 

அவர்கள் தம் திட்டங்களை வகுத்தமைக்கும்போது, மிக அதிகமாகத் துன்புறும் வர்க்கம் என்ற வகையில் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களில்தான் முதன்மையாக அக்கறை செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தே உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரையில் பாட்டாளி வர்க்கம் என ஒன்று இருக்கிறதெனில், மிக அதிகமாகத் துன்புறும் வர்க்கம் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே.

இந்த வகைப்பட்ட சோஷலிஸ்டுகள், வர்க்கப் பகைமைகள் அனைத்துக்கும் மிகமிக மேலானோராகத் தம்மைத்தாமே கருதிக்கொள்வதற்கு, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பெறாத நிலையும், அதோடுகூட அவர்களின் சொந்தச் சுற்றுச்சார்புகளும் காரணமாயின. சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரின் நிலையையும், மிகவும் சலுகை படைத்தவரின் நிலையையுங்கூட, மேம்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். எனவே, வர்க்க வேறுபாடு கருதாமல் சமுதாயம் முழுமைக்கும் வேண்டுகோள் விடுப்பதை, சரியாகச் சொல்வதெனில், முன்னுரிமை தந்து ஆளும் வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுப்பதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில், அவர்கள் எடுத்துரைக்கும் அமைப்பினை ஒருவர் புரிந்துகொண்டபின், சமுதாயத்தின் சாத்தியமான நிலைகளுள் மிகச்சிறந்த நிலையை எய்துவதற்குரிய, சாத்தியமான திட்டங்களிலேயே மிகச்சிறந்த திட்டம் அது என்பதை அவர் காணத் தவற முடியுமோ?

எனவே, அவர்கள் அனைத்து அரசியல் செயல்பாடுகளையும், குறிப்பாக அனைத்து புரட்சிகரச் செயல்பாடுகளையும் நிராகரிக்கின்றனர்; சமாதான வழிகளில் தம் லட்சியங்களை அடைந்திட விரும்புகின்றனர்; நிச்சயமாகத் தவிர்க்க முடியாத தோல்வியில் முடிகிற சிறு பரிசோதனைகள் மூலமும், முன்மாதிரி [அமைப்புமுறை]யின் சக்தியைக் கொண்டும், புதிய சமூக வேதத்துக்குப் பாதை வகுத்திட அவர்கள் பெருமுயற்சி செய்கின்றனர்.

வருங்கால சமுதாயத்தைப் பற்றிய இத்தகைய கற்பனைச் சித்திரங்கள், பாட்டாளி வர்க்கம் இன்னமும் வளர்ச்சி பெறாத நிலையில், ஆனால் அதனுடைய சொந்த நிலைகுறித்துக் கற்பனையான கருத்தோட்டம் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தீட்டப்பட்டவையாகும். சமுதாயத்தின் பொதுவான மறுசீரமைப்புகுறித்து, அந்த வர்க்கத்துக்கு உள்ளுணர்வு ரீதியாக எழும் ஆசைகளுக்கு ஏற்பவே அச்சித்திரங்கள் அமைந்துள்ளன.

எனவே, இவர்கள் தொழிலாளி வர்க்கம் சார்பிலான அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் வன்மையாக எதிர்க்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை, புதிய வேதாகமத்தில் (New Gospel) கொண்டுள்ள குருட்டுத்தனமான அவநம்பிக்கையின் விளைவாக மட்டுமே அத்தகைய நடவடிக்கை இருக்க முடியும் எனக் கருதுகின்றனர்.

நான்காம் அத்தியாயத்தில் மேலும் மார்க்ஸ் எங்கெல்ஸ் தெளிவாக கூறுகின்றனர்

இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!

சிவப்பில் உள்ளவை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதப்பட்டுள்ளவையே இதில் எந்த மாறுதலையும் செய்யவில்லை குறிப்பிட்ட அத்தியாயங்களில் குறிப்பிட்ட பகுதிகளை தேவைக்கருதி பகிர்ந்துள்ளேன்.

கீழே உள்ளவை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை திருத்தம் கோரும் மார்க்சிய துரோகியின் பகுதி

இவை மார்க்சியத்தை
மறுத்து எழுதியுள்ள
பகுதி படமாக











ரசிய புரட்சியும் சீனப்புரட்சியும் தவறாம் இதோ அவரின் எழுத்து! 

70% தோழர் ஸ்டாலின் புரட்சியாளராம்? பின் குருசேவ் அல்லது ட்ராட்ஸ்கி அல்லது கோர்பச்சேவ் முழு புரட்சியாளரோ எனக்கு புரியவில்லை.


மார்க்சியம் தலைகீழாய் இருந்ததாம் இவர் நிமிர்த்தி விட்டாராம்!?

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்