மார்க்சியம் என்பது முற்போக்கு வேடம் அல்ல உழைக்கும் மக்கள் வாழ்விற்கும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைகான தத்துவம்

 இன்று உலகமயமாக்களில் உலகே ஒரே கொடையின் கீழ் உற்பத்தி நுகர்வு என்ற முறையில் ஒரே நாடாக ஒரே சுரண்டலுக்கு ஏற்றவகையில் மாறி உள்ளது. அதில் குறிப்பாக உழைக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் தாழ்ந்து போய் உள்ளது. ஆனால் அவர்களை சுரண்டும் கூட்டமான ஏகாதிபத்தியமும் அதன் பல்வேறு பகாசுர கம்பெனி நிறுவனங்களும் உழைக்கும் மக்களின் உழைப்பை முழுமையாக அபகரிப்பதில் சுரண்டுவதில் ஒவ்வொரு கணமும் முயன்று கொண்டுள்ளது. அதற்காகவே இங்குள்ள அதிகாரம் படைத்தவர்கள் (அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள்) உழைக்கும் மக்களின் எல்லாவிதமான உரிமைகளையும் நசுக்கி கார்ப்ரேட்களின் பாத காணிக்கையாக்குகிறார்கள்.  இங்குள்ள அரசு அதிகாரம் என்பது அந்தப் பகாசுர நிறுவனங்களின் தேவைக்காக உள்ளது- உழைக்கும் மக்களை பல்வேறு பிரிவினின் அடிப்படையில் பிரிந்து கிடந்தால் எப்படி போராடுவது எப்படி அவர்களை அகற்றுவது?


வரலாறு என்பது வர்க்கப் போராட்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி என்ற கருத்துரையை மறுப்பது இங்க தீவிரமாக உள்ளது.
அதாவது இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும் என்ற கம்யூனிஸ் கட்சி அறிக்கை.

மாபெரும் போராட்டத்தில் இரண்டு உலகங்கள் உள்ளதை காணலாம். ஒன்று மூலதின் உலகம் மற்றொன்று உழைப்பின் உலகம். சுரண்டல் அடிமைத்தனத்தின் உலகமான மூலதனத்தின் உலகமும், உழைக்கும் மக்களின் உலகமான சகோதரத்துவம், சுதந்திர போராடும் உலகும் நேருக்கு நேராக போராட்டகளத்தில் நிற்கின்றன. ஒரு பக்கத்தில் ரத்தத்தை உறிஞ்சும் பணக்காரர்கள் நிற்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள் தொழிற்சாலைகளையும் பல்வேறு விதமான இயந்திர தொழில்நுட்பக் கருவிகளையும் நாட்டின் பெரும்பான்மையிலான சொத்துகளை கைப்பற்றியவர்கள் கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மலைகள் போன்ற பண குவியல்களையும் தங்களுடைய தனிச் சொத்தாக மாற்றியவர்கள். அரசாங்கத்தையும், ராணுவத்தையும் தங்களுடைய வேலைக்காரர்களாக தாங்கள் திரட்டிய செல்வத்தை பாதுகாக்கும் விசுவாசமான காவல் நாய்களாக மாற்றியவர்கள் மறுபக்கத்தில் கோடான கோடி ஏழை உழைக்கும் மக்கள் நிற்கிறார்கள். அவர்கள் இந்தப் பண மூட்டைகளிடம் தங்களை வேலை செய்ய அனுமதிக்கும்படி கெஞ்சுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லா விதமான செல்வத்தையும் தங்களுடைய உழைப்பின் மூலம் படைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கை நிலைமைகள் ஒரு ரொட்டித் துண்டுக்காக போராட வேண்டியிருக்கிறது. பிச்சை கேட்பதைப் போல வேலைக்காக கெஞ்சுகிறார்கள். தங்களுடைய உடல் பலத்தையும், நலத்தையும் முதுகொடி பாடுபட்டு அழித்துக் கொள்கிறார்கள். கிராமங்களில் அழுக்குப் பிடித்த குடிசைகளில் பெரும் நகரங்களில் மிகமோசமான குறுகிய அறைகளில் அடைந்து கிடந்து பட்டினி கிடக்கிறார்கள் வாழ்வதற்காக. ஆனால் இந்த ஏழை உழைப்பாளிகள் இப்பொழுது பண மூட்டைகளையும் சுரண்டல்காரர்களையும் எதிர்த்து போரிடுகிறார்கள். எல்லா நாடுகளுக்கும் தொழிலாளர்கள் இயல்பிலிருந்து தேவையிலிருந்து கூலி அடிமைத்தனத்தில் இருந்து உழைப்பை விடுவிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொது உழைப்பால் படைக்கப்பட்ட செல்ம் எண்ணிக்கையில் குறைவான பணக்காரர்களுக்கு அல்ல. பாடுபட்டு உழைக்கின்ற. எல்லோருக்கும் பயன் தரக்கூடிய சமூக அமைப்பை உருவாக்குவதற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலத்தையும், தொழிற்சாலைகளையும், இயந்திர சாதனைகளையும் உழைப்பாளிகளுக்கு பொதுவான சொத்தாக மாற்ற அவர்கள் விரும்புகிறார்கள். பணக்காரர்கள் ஏழை என்ற பிரிவை ஒழித்து உழைப்பவன் பலன்கள் உழைப்பாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மனிதனுடைய அறிவின் மகத்தான சாதனைகளுக்கு உழைப்பு முறையில் ஏற்படுகின்ற எல்லா வளர்ச்சியும் உழைக்கின்ற மனிதனின் நிலையை முன்னேற வேண்டும். அவனை ஒடுக்குகின்ற கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள். மூலதனத்தை எதிர்த்து உழைப்பு நடத்துகின்ற மாபெரும் போராட்டத்தில் எல்லா நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களும் ராலமான தியாகங்களை செய்திருக்கிறார்கள். முன்னை காட்டிலும் சிறப்பான வாழ்க்கைக்காக. உண்மையான சுதந்திற்காகவும் தங்களுடைய உரிமையை வலியுறுத்தி அவர்கள் கொட்டிய ரத்தம் ஆறுகளாக ஓடுகிறது. தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்காக போராடுபவர்களுக்கு அரசாங்கம் சொல்ல முடியாது கொடுமைகளை அனுபவிக்கின்றன. ஆனாலும் எல்லா கொடுமைகளையும் மீறி உலக தொழிலாளர்களின் ஒருமைப்பாடு வளர்ந்து கொண்டும் இருக்கிறது.

இப்பொழுது நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் உழைக்கும் மக்கள் திரளின் விழிப்பு அதிக வேகமாகவும், விரிவானதாகவும் இருக்கின்றது. பாட்டாளி வர்க்க அணிகளை ஒன்றுபடுத்துவதற்கும் இன்னும் உறுதிமிக்க போராட்டத்துக்கு அவர்களை தயாரிக்கவும், நாம் நமது பலத்தை திரட்ட வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியில் கூட அரசியல் விவகாரங்களில் பிரச்சினைகளில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முழுமையாக அழுகிக் கொண்டிருக்கும் இந்த ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் விடுதலைக்கானப்பணி என்னவென்பதை புரிய வைக்க வேண்டும்.

ஒரு தோழர் சொல்கிறார் விஜய் பின்னால் இவ்வளவு கூட்டம் கூடுகின்றனரே என்று -அதற்கு நான் கோயில்களிலும் கூட்டம் கூடுகிறதே ஏன் என்றேன்? அவர் சிரித்து விட்டார்.

உண்மையில் இதுவரை ஆட்சிக்கு வரும் எல்லாரும் ஏன் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி உட்பட "நான் ஆட்சிக்கு வந்தால்" என்று தொடங்கும் அவர்களின் வாக்குறுதிகள் ஏன் ஆட்சிக்கு வந்த பின்னர் தோல்வியை தழுவுகிறது? இன்று தமிழகத்தில் உள்ள தி.மு.கவும் மத்தியில் உள்ள பா.ஜ.கவும் என்ன செய்துக் கொண்டுள்ளனர் உழைக்கும் மக்களுக்கு?

1). நேரடியாக மதத்தை பிராச்சாரம் செய்துக் கொண்டே உழைக்கும் இந்துக் களுக்கே பட்டை நாமம் போடுகின்றனர் பி.ஜே.பியினர் என்றால்

2). இங்குள்ள மக்களின் நண்பர் என்று கூறிக் கொண்டே உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் செயலை செய்துக் கொண்டுள்ளனர்!

உண்மையில் இரண்டு கட்சிகளுமே உழைக்கும் மக்களுக்கான கட்சி அல்ல இவை கார்ப்ரேட் நல கட்சிகளே. இந்துக்களுக்கான கட்சிகாரர்கள் என்பவர்களும்; திராவிட விடியல் நல்லாட்சி என்பவர்களும் உழைக்கும் மக்களை கார்ப்ரேட்டுகளுக்கு பலிக் கொடுக்கதான் ஆட்சி செய்கின்றனர். இதனை எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்? கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியில் மட்டும் என்னவாம்? ஆதானிக்காக பணி செய்வது எதற்காம்?

ஆக உண்மையில் கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

புனித குடும்பம் அல்லது விமர்சன விமர்சனத்தின் விமர்சனம் என்ற தலைப்பில் 1844 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரீட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோரால் எழுதப்பட்ட புருனோ பாயர் மற்றும் இளம் ஹெகலியர்கள் பற்றிய விரிவான விமர்சனமாகும். இது பாயரின் அகநிலை கருத்துமுதல்வாதத்தையும், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களில் பொதிந்துள்ள "ஆன்மா" அல்லது "தூய விமர்சனத்தால்" வரலாறு இயக்கப்படுகிறது என்ற அவரது கருத்தையும் சவால் செய்கிறது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் பாயரின் சுருக்க மற்றும் உயரடுக்கு தத்துவத்திற்கு எதிராக வாதிடுகின்றனர், அதற்கு பதிலாக சமூகத்தை வடிவமைப்பதில் வெகுஜனங்களின் தீர்க்கமான பங்கையும் உற்பத்தி முறையையும் அங்கீகரிக்கும் ஒரு பொருள்முதல்வாத மற்றும் கம்யூனிச முன்னோக்கை ஆதரிக்கின்றனர்.

இந்த ஆவணம் பாயரின் படைப்புகளை விமர்சிக்கிறது, அரசியல் மற்றும் மனித விடுதலைக்கும் சமூகப் பிரச்சினைகளுக்கான அவரது இறையியல் அணுகுமுறைக்கும் இடையிலான குழப்பத்தையும் அம்பலப்படுத்துகிறது. சுருக்க வகைகள் அல்லது ஊகக் கருத்துக்களை விட, தனியார் சொத்து, தொழில் மற்றும் அரசு போன்ற நிஜ உலக நிலைமைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் வலியுறுத்துகின்றனர்.

இந்த விமர்சனம் பாயரின் ஆதரவாளர்களையும் அவர்களின் வெளியீடான ஆல்ஜெமைன் லிட்டரடர்-ஸெய்டுங்கையும் குறிவைத்து, அவர்களின் பாசாங்குத்தனத்தையும் யதார்த்தத்திலிருந்து விலகலையும் கேலி செய்கிறது. பிரெஞ்சு புரட்சி, பொருள்முதல்வாதம், சோசலிசம் மற்றும் பெண்களின் விடுதலை குறித்த பாயரின் கருத்துக்களை ஆசிரியர்கள் பகுப்பாய்வு செய்கிறார்கள், இந்த இயக்கங்களின் பொருள் மற்றும் நடைமுறை அடிப்படையைப் புரிந்து கொள்ள அவர் தவறியதை எடுத்துக்காட்டுகிறார்கள்.

பாயரின் தத்துவத்தில் உள்ள குறைபாடுகளை விளக்குவதற்கு யூஜின் சூவின் நாவலான மிஸ்டெரெஸ் டி பாரிஸை ஒரு நையாண்டி லென்ஸாக ஆவணம் பயன்படுத்துகிறது. நாவலின் கதாநாயகனான ருடால்ப், பாயரின் "தூய விமர்சனத்தின்" கேலிச்சித்திரமாக சித்தரிக்கப்படுகிறார், இது பாசமிகுந்த ஒழுக்கத்தையும் பயனற்ற தொண்டுகளையும் உள்ளடக்கியது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ருடால்பின் செயல்களைப் பிரித்து, அவர்களின் அபத்தத்தையும் உண்மையான சமூகப் பிரச்சினைகளிலிருந்து பற்றின்மையையும் வெளிப்படுத்துகிறது.

இறுதியில், இந்த ஆவணம் பாயரின் கருத்துமுதல்வாத தத்துவம் மற்றும் இளம் ஹெகலியர்கள் பற்றிய விரிவான விமர்சனமாக செயல்படுகிறது, சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கும் மாற்றுவதற்கும் ஒரு பொருள்முதல்வாத மற்றும் கம்யூனிச அணுகுமுறையை முன்வைக்கிறது. இது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் புரட்சிகர பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்தின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

இங்கே நம்முன் உள்ள அணுகுமுறையை ஆய்வு செய்வோம்

"அவனன்றி அணுவும் அசையாது" என்று ஆன்மீகவாதிகள் சொல்வது உண்மையல்ல, செத்துபோனவைகள் உயிருடன் உள்ளவனை ஆட்டி வைக்கின்றன. ஆம் மத சாதிய பல்வேறு தேவையற்ற முந்தைய சமூக குப்பைகளை முன்நிறுத்தி இன்றைய பிரச்சினைக்கு காரணம் சாதி மத இழிவுகளை முதன்மைப்படுத்தி இன்று வாழவழிசொல்ல வக்கற்றவர்களாக உள்ள ஆட்சியாளர்கள் மக்களை பிற்போக்கு அடிமைதனத்தில் வாழவைத்துக் கொண்டே அவர்களின் வாழ்வினை ஒட்ட சுரண்ட முயல்கிறது. இதற்கெதிரான போராட்டத்தில் அரசின் உண்மை முகம் வெளிப்படுகிறது.
மக்கள் போராடினாலும் அல்லது பிரச்சினைக்கை தீர்க்க முயன்றாலும்  அரசின்றி மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது நடைமுறை உண்மையாகும். இதனை யாராலும் மறுக்க முடியாது. இந்திய பெருமுதலாளிகளிடம் மூலதனம் இருக்கலாம் ஆனால் அவர்கள் மேலும் மேலும் மூலதனம் பெருகுவது இந்த அரசின் துணையோடுதான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த அரசும், அரசாங்கமும் பெருமுதலாளிகளுக்கு சேவை செய்வது போல பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு சேவை செய்வதில்லை, மாறாக உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு எதிராகவே நடந்துகொள்வதை நாம் பார்க்கிறோம்

ஆகவே பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களை பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு நமக்குத் தேவை புதிய வகையான அரசாகும். அத்தகைய அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தேசியப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும், சாதிப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும் பிற பிரச்சனைகளை முதன்மை படுத்துபவர்களும் அவர்களது பிரச்சனையை தீர்ப்பதற்கு எவ்வகையான அரசு வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து முன்வைத்து விவாதங்கள் நடத்தி ஒரு குறிப்பிட்ட அரசுமுறையை உருவாக்குவதற்கான ஒத்த கருத்தை வந்தடையும் நோக்கம் கொண்டிருப்பவர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படுவது சாத்தியமாகும். அதாவது நாம் ஒன்றுபடுவதற்கு நம்மிடையே ஒரு பொதுவான லட்சியம் அவசியமாகும். இதற்கு மாறாக வெவ்வேறு லட்சியம் கொண்டவர்களால் ஒன்றுபட்டு ஒரு ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சியை கட்ட முடியாது

ஆகவே அரசு பற்றிய பிரச்சனையில் தீர்வு கண்டு ஒரு ஒத்த கருத்தின் அடிப்படையில் ஒன்றுசேர்வோம். அரசு பற்றிய பிரச்சனையை படிப்பது, விவாதிப்பது, புரிந்துகொள்வது, தற்போதைய அரசின் தன்மை என்ன? என்பதை தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து புரிந்துகொள்வது, தற்போதைய அரசு எந்தப் பிரிவினருக்காக சேவை செய்கிறது, எந்தப் பிரிவினருக்கு எதிராக செயல்படுகிறது என்ற விவரங்களை சேகரித்து மக்களிடம் இந்த அரசையும், அரசாங்கத்தையும் அம்பலப்படுத்துவது, மக்களின் பிரச்சனைகளை நேர்காணல் மூலம் ஆய்வு செய்து அவர்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அரசு எப்படி இருக்க வேண்டும், அதன் நிறுவன வடிவங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆய்வு செய்து ஒரு புதிய வகையான அரசமைப்பு குறித்து ஒத்த கருத்தை வந்தடைவதை லட்சியமாக கொள்ள வேண்டும். அத்தகைய லட்சியவாதிகளால் நிச்சயமாக ஒன்றுபட முடியும்.

 ஆகவே பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களை பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு நமக்குத் தேவை புதிய வகையான அரசாகும். அத்தகைய அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நமக்கு நமது ஆசான்கள் அதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளனர் அவைதான் அரசும் புரட்சியும் நூலில் மிகத்தெளிவாக உள்ள அரசின் வர்க்க தன்மையையும் உழைக்கும் மக்களுக்கான அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதனையும் அவை பாரிஸ் கம்யூன் படிப்பினைக்கு பிறகான  அரசு வடிவத்தை முன் வத்திருப்பர். ஆனால் நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் இதுவரை அதனை பற்றி பேசியதாகவோ செயல்பட்டதாகவோ தெரியவில்லை அதனால் தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் நமக்கான அரசு பாரிஸ் கம்யூன் வகைபட்ட அரசு வேண்டும் அவை மக்களுக்கான மக்களால் தேர்ந்தெடுக்கபடும் அரசு வேண்டும். அதற்கு நம் ஆசான்களை கற்று தேறவேண்டும் கம்யூனிஸ்டான ஒவ்வொருவரும் என்பதே எமது அவா.

 

இன்னும் பின்னர்


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்