இலக்கு 86 இணைய இதழ்

 பருண்மையான குறிப்பான சூழ்நிலைக்களுக்கேற்ப ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுபடுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியான மார்க்சியம் என்பது இல்லை. கம்யூனிஸ்டுகள் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளாததால், அவர்களிடம் மார்க்சிய லெனினியம் அல்லாத, அல்லது அதனை மறுக்கின்ற மற்றும் எதிர்க்கின்ற கண்ணோட்டம் கொண்டவர்களாகவே பலரும் இருக்கிறார்கள் ... முதலாளித்துவம் அமைதியான முறையில் சோஷலிசமாக மாறும் என்ற கட்டுக் கதையும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற பித்தலாட்டம் இன்னும் பல சந்தர்ப்பவாத போக்குகளும் இரண்டாம் அகிலத்தில் நிலவியது இன்றும் நிலவுகிறது அவை மார்க்சிய வகைபட்டதல்ல..

சர்வதேச அளவில் சந்தர்ப்பவாத போக்குகளை எதிர்த்துப் போரிட்ட லெனின்,  சோவியத் ரஷ்யாவில் பிரிந்து கிடந்த குழுக்களை இணைத்து பலம்வாய்ந்த ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கட்சி கட்டி புரட்சி நடத்தி காட்டினார். லெனினியத்தின் கொள்கை சர்வதேச மதிப்புள்ளதாக மாறியது. மார்க்சியத்தின் நிலைப்பாடுகளை நடைமுறையில் நிரூபித்தது அக்டோபர் புரட்சி. சந்தர்ப்பவாததின் மீது லெனினிய வெற்றியாக அமைந்தது. அக்டோபர் புரட்சி மூன்றாம் அகிலம் அமைப்பதற்கான சூழல் மிகவும் பிரகாசமாக இருந்தது இன்று நிலை என்ன? ஏன் இவை சிந்தியுங்கள் தோழர்களே!ஆளுக்கொரு கட்சி ஆளுக்கொரு தத்துவம் மார்க்சியம் போதிக்கவில்லை


இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

1).100 ஆண்டுகால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு சாதனையா? வேதனையா?

2).திருத்தல்வாதம் செங்யென்சீ பாகம் 3

3). அரசு பற்றி லெனின் பாகம் 8.

4). கம்யூனிஸ்டுகளே கம்யூனிசத்தை புரிந்துக் கொள்வதில் உள்ள குழப்பம்

5). ஆசான் லெனின் அரசும் புரட்சியும் நூலை கற்றல் ஏன்?


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடக்கும் நிலையில் அவற்றின் கடந்த காலம் சில மிக உயர்வான தியாகம் மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தாலும் அவை அதற்கான இலக்கை அடையாமை ஏன் என்று ஆராய்ந்தால் “மார்க்சிய தத்துவத்தை சரியாக தானும் புரிந்துக் கொள்ளவில்லை அதேபோல் தன் அணிகளுக்கும் போதிக்கவில்லை” அதன் வெளிப்பாடே முதலாளித்துவ அறிஞர்கள் பின் அணி சேர்ந்து தன் இலட்சியத்தை கைவிட்டு விட்டு எதிரி வர்க்க கண்ணோட்டத்தில் இயங்குவதனாலே தன் இலக்கை அடையவில்லை என்று தெளிவாக கூற முடியும். ஆக இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் குழுக்கள் முதலாளித்துவ நலன் பயக்கும் வகையில் செயல்படும் பொழுது! கம்யூனிசத்தை யார் அணிகளுக்கும் மக்களுக்கும் போதித்து பரப்புவது? இதற்கு பதில் தேட உண்மையில் உழைக்கும் மக்களின் விடுதலையை நேசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் மீது நடக்கும் ஒடுக்குமுறையை இல்லாதொழிக்க ஒரு சரியான கம்யூனிஸ்டால் மட்டுமே முடியும். அப்படியென்றால் இங்கு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் இல்லையா என்ற கேள்வி எழும்! உண்மையில் மார்க்ஸ் தொடங்கி அவரின் தத்துவத்தை நடைமுறையாக்கிய உழைக்கும் மக்களை மனிதர்களாக வாழவைக்க முயன்ற மார்க்சிய ஆசான்கள்; உலகில் உழைக்கும் மக்களை வாழ்விக்க அவர்களுக்கான ஆட்சி அதிகாரத்தை நிறுவி உழைக்கும் மக்களே அவர்களை ஆளும் நிலைக்கு உயர்த்தியதை புரிந்துக் கொள்ள வேண்டும். எதிரிகளிடம் சரணடைந்துள்ளோர் புரிந்து கொள்ளவேயில்லை. அந்த உழைக்கும் மக்களுக்கான ஆட்சியை அமைக்க இங்குள்ள அமைப்பை தகர்க்க வேண்டும்; அதனிடத்தில் உழைக்கும் மக்களின் நலன் பயக்கும் அரசை நிறுவ வேண்டும் என்பதே. அவை சீர்திருத்த வழியிலோ! இந்த பாராளுமன்ற வழியிலோ! நிகழப்போவதில்லை. அவை புரட்சியின் வழியில் மட்டுமே என்பதனை ரசிய தொடங்கி சீனா வியாட்நாம் என விரியும் பல்வேறு நாடுகளின் புரட்சி தங்களின் விடுதலைக்கான பாதையில் தன்னை சுரண்டிக் கொண்டிருந்த ஆட்சிமுறையிலிருந்து விடுதலை அடைந்து சோசலிசத்தை நோக்கிய அவர்களின் புரட்சி நடத்திய வரலாற்றை மறுத்து! அவர்களின் போராட்ட நடைமுறைகளை மறைத்து அதுபோன்ற தயாரிப்புகளை செய்யாமல். இங்குள்ள ஆளும் வர்க்க தத்துவத்தை அதன் அறிவு ஜீவிகளை பின் பற்றி ஆளும் வர்க்கதின் சேவை செய்யும் ஒரு கட்சி உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கான கட்சியாக இருக்க முடியுமா? இதற்கு பதில் தேடுவோம் வாருங்கள் தோழர்களே.

நம் மத்தியில் பல்வேறு விதமான கம்யூனிசம் பேசும் கட்சிகள் குழுக்கள் உள்ளன. அவை என்னவகையில் செயல்பட்டுக் கொண்டுள்ளது? உண்மையில் இவர்களின் செயலில் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான வழி தென்படுகிறதா?

நாம் புரிந்துக் கொள்ள, முதலில், வரலாறு என்பது வர்க்கப் போராட்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி என்ற கருத்துரையை மறுப்பது இங்க தீவிரமாக உள்ளது. மார்க்சினால் ஆரம்பிக்கப்பட்ட அகிலம் அதன் தொடர்ச்சியான பணிகள் கவனத்தில் கொண்டே ஆசான் லெனின் எழுத்துகளை உள்வாங்கியே நாம் புரிந்துக் கொள்ள மேலே செல்வோம்.

“வர்க்க போராட்ட நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் சங்கம். தொழிலாளர்கள் மற்றும் இந்த நாடுகளில் நடக்கும் கொள்ளை நிறுத்தப்படவில்லை என்று பேசுவதும், அதிகாரம் யார் கையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளாமலேயே.

தேசிய பகைமைங்களை எதிர்த்து போராட வேண்டுமென்றால் ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை தனித்தனியாக ஒவ்வொரு நாட்டிலும் ஒன்று கூடி ஸ்தாபன ரீதியாக திரட்டி, பிறகு அத்தகைய தேசிய அளவில் உள்ள, தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களை சர்வதேச மூலதனத்தை எதிர்த்து போராடக்கூடிய சர்வதேச தொழிலாளி வர்க்கத்தையும் தனியொருப் படையாக ஒன்றுபடுத்துவதுத் தவிர வேறு வழி இல்லை என்று சாதாரண உண்மையைக் கூட இங்குள்ளவர்கள் புரிந்து கொள்வதில் குறைபாடு உள்ளார்கள்.

இங்கே கம்யூனிஸ்ட்களை குறை கூறுபவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் நோக்கம் கம்யூனிசத்தை குறைக்கூறுவதே. உண்மையில் விமர்சனம் என்பது இங்கு கம்யூனிசத்தின் பெயரில் இயங்கும் பல கட்சிகள்/குழுக்கள் உள்ளன. அவை என்ன பணி செய்கின்றது? அவை மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழிமுறைகளை பின்பற்றிதான் செயல்படுகின்றனரா? ஏன் இன்றுவரை உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்க இவர்களால் முடியாவில்லை? இவர்கள் ஆளும் வர்க்கதின் பின்னர் அணி சேர்கின்றனர்! இவை எவ்வகையிலும் மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழிமுறை அல்ல. ஆக இவர்கள் கம்யூனிஸ்டுகளே அல்ல! ஆம் கம்யூனிச போர்வையில் ஆளும் வர்க்க சேவகர்களே எனலாம்.

இங்குள்ள மார்க்சிய எழுதாளர்கள் தலைவர்கள் புத்திஜீவி என்பவர்கள் மார்க்சிய சொற்றொடர்களை சொற்களை ஆங்காங்கே இருந்து பொருக்கி எடுத்து தங்களின் அறிவுக் களஞ்சியமாக மார்க்சிய சில சொல்லாடல்களையும் ஆளும் வர்க்க குப்பை கூளங்களையும் ஒன்றாக்கி அவர்கள் கூறுவதை நாம் காண முடியும். இவை எவ்வகையிலும் ஒடுக்கப்பட்டு கிடக்கும் மக்களின் விடுதலைக்கான பாதையையோ பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியோ அல்ல.

இன்று கம்யூனிஸ்டுகளை தடை செய்த அமெரிக்காவிலே போராட துணிந்துவிட்டனர் அதேபோல் எல்ல நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வர்க்க உணர்வை பெற்று உணர்வுமிக்க வாழ்க்கைகாக விழித்தெழுந்து கொண்டிருக்கிறார்கள். மனிதனை மனிதன் எல்லாவகையிலும் அச்சுறுத்துவதையும், ஒடுக்குவதையும் எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் கோடானுகோடி உழைக்கும் மக்கள் விழிப்புற்று இணைந்துக் கொண்டிருக்கிறார்கள். பசியில் இருந்தும் ஏழ்மையிலிருந்தும் அவமதிப்பில் இருந்தும் விடுவிப்பதற்காக நடைபெறும் போராட்டத்தில் தங்களுடைய உரிமைப்பாட்டிற்காக போராட துணிந்து விட்டனர். அவர்களை ஒருங்கிணைக்கும் சக்தி வாய்ந்த அந்த கட்சிதான் பல்வேறு முகாம்களில் பின் தங்கியுள்ளது அன்றைய புரட்சி காலத்தில் இருந்த நிலை இன்றில்லை. அதுபோன்ற புரட்சியாளர்களும் வழி நடத்த முன் வரவேண்டும் என்பதே நமது அவா.

மாபெரும் போராட்டங்களில் இரண்டு உலகங்கள் உள்ளதை நாம் காணலாம். ஒன்று மூலதனதின் உலகம் மற்றொன்று உழைப்பின் உலகம் எண்கிறார் ஆசான் லெனின்.

சுரண்டல் அடிமைத்தனத்தின் உலகமான மூலதனத்தின் உலகமும், உழைக்கும் மக்களின் உலகமான சகோதரத்துவம், சுதந்திர போராடும் உலகும் நேருக்கு நேராக போராட்டகளத்தில் நிற்கின்றன. ஒரு பக்கத்தில் ரத்தத்தை உறிஞ்சும் பணக்காரர்கள் நிற்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். அவர்களிடம் தொழிற்சாலைகளையும் பல்வேறுவிதமான இயந்திர தொழில்நுட்பக் கருவிகளையும் நாட்டின் பெரும்பான்மையிலான சொத்துகளை கைப்பற்றியவர்களும், கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மலைகள் போன்ற பண குவியல்களையும் தங்களுடைய தனிச் சொத்தாக மாற்றியவர்கள். அரசாங்கத்தையும், ராணுவத்தையும் தங்களுடைய வேலைக்காரர்களாக தாங்கள் திரட்டிய செல்வத்தை பாதுகாக்கும் விசுவாசமான காவல் நாய்களாக மாற்றியவர்கள். மறுபக்கத்தில் கோடான கோடி ஏழை உழைக்கும் மக்கள் நிற்கிறார்கள். அவர்கள் இந்தப் பண மூட்டைகளிடம் தங்களை வேலை செய்ய அனுமதிக்கும்படி கெஞ்சுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லா விதமான செல்வத்தையும் தங்களுடைய உழைப்பின் மூலம் படைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கை நிலைமைகள் ஒருவேளை உணவிற்காக போராட வேண்டியிருக்கிறது. பிச்சை கேட்பதைப் போல வேலைக்காக கெஞ்சுகிறார்கள். தங்களுடைய உடல் பலத்தையும், நலத்தையும் முதுகொடிய பாடுபட்டு அழித்துக் கொள்கிறார்கள். இவர்கள் கிராமங்களில் அழுக்குப் பிடித்த மிக மோசமான குடியிருப்பு பகுதிகளிலும், பெரும் நகரங்களில் மிகமோசமான அலங்கோலமான குறுகிய அறைகளில் அடைந்து கிடந்து பட்டினி கிடக்கிறார்கள் தங்களின் வாழ்க்கை வாழ்வதற்காக. ஆனால் இந்த ஏழை உழைப்பாளிகள் இப்பொழுது பண மூட்டைகளையும் சுரண்டல்காரர்களையும் எதிர்த்து போரிடுகிறார்கள். எல்லா நாடுகளுக்கும் தொழிலாளர்கள் இயல்பிலிருந்து தேவையிலிருந்து கூலி அடிமைத்தனத்தில் இருந்து உழைப்பை விடுவிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொது உழைப்பால் படைக்கப்பட்ட செல்வம் எண்ணிக்கையில் குறைவான பணக்காரர்களுக்கு அல்ல. பாடுபட்டு உழைக்கின்ற எல்லோருக்கும் பயன் தரக்கூடிய சமூக அமைப்பை உருவாக்குவதற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலத்தையும், தொழிற்சாலைகளையும், இயந்திர சாதனைகளையும் உழைப்பாளிகளுக்கு பொதுவான சொத்தாக மாற்ற அவர்கள் விரும்புகிறார்கள். பணக்காரர்கள் ஏழை என்ற பிரிவை ஒழித்து உழைப்பவன் பலன்கள் உழைப்பாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மனிதனுடைய அறிவின் மகத்தான சாதனைகளுக்கு உழைப்பு முறையில் ஏற்படுகின்ற எல்லா வளர்ச்சியும் உழைக்கின்ற மனிதனின் நிலையை முன்னேற வேண்டும். அவனை ஒடுக்குகின்ற கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள். மூலதனத்தை எதிர்த்து உழைப்பு நடத்துகின்ற மாபெரும் போராட்டத்தில் எல்லா நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களும் ஏராலமான தியாகங்களை செய்திருக்கிறார்கள். முன்னை காட்டிலும் சிறப்பான வாழ்க்கைக்காக. உண்மையான சுதந்திரதிற்காகவும் தங்களுடைய உரிமையை வலியுறுத்தி அவர்கள் கொட்டிய ரத்தம் ஆறுகளாக ஓடுகிறது. தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்காக போராடுபவர்களுக்கு அரசாங்கம் சொல்ல முடியாது கொடுமைகளை அனுபவிக்கின்றன. ஆனாலும் எல்லா கொடுமைகளையும் மீறி உலக தொழிலாளர்களின் ஒருமைப்பாடு வளர்ந்து கொண்டும் இருக்கிறது.

இப்பொழுது நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் உழைக்கும் மக்கள் திரளின் விழிப்பு அதிக வேகமாகவும், விரிவானதாகவும் இருக்கின்றது. பாட்டாளி வர்க்க அணிகளை ஒன்றுபடுத்துவதற்கும் இன்னும் உறுதிமிக்க போராட்டத்துக்கு அவர்களை தயாரிக்கவும், நாம் நமது பலத்தை திரட்ட வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியில் கூட அரசியல் விவகாரங்களில் பிரச்சினைகளில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முழுமையாக அழுகிக் கொண்டிருக்கும் இந்த ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் விடுதலைக்கானப்பணி என்னவென்பதை புரிய வைக்க வேண்டும். எத்தகைய அநீதியின் மூலமாகவோ பாதிக்கின்றன ஒவ்வொரு முயற்சியும் கம்யூனிஸ்ட்கள் எப்பொழுதும் எதிர்த்து போராடுகின்றனர்.

பல்வேறு முற்போக்கு பேசுவோர்களும் மட்டுமல்ல தங்களை இடதுசாரி என்று அழைத்துக் கொள்பவர்களும் எழுத்தும் பேச்சும் இச்சமூக அவலம்‌ இழிவையும் சலிப்பும்‌ மிகுந்த வகையில் சாடினாலும்! இச்சமுதாய அமைப்பினை எவ்வளவுதான் பேசினாலும் இந்த சமூக அமைப்பின் அடிப்படையே இதற்கான காரணம் என்று பேசாமல். இந்த அவலங்களுக்கும் இழிநிலைக்கும் காரணமான சமூக அமைப்பை மாற்றாமல் சில கட்சிகளை சில நபர்களையும் குறைக்கூறி அவர்களை மாற்ற சொல்பவர்கள் இந்த சமூக அமைப்பின் இளைய பங்குதாரர்களே, மாறாநிலை வாதிகளே இச்சமூகத்தை கட்டிக்காக்க நினைப்போரே!!!

முழுமையாக இணைய இதழில் தோழர்களே வாசித்து உங்களின் கருத்துகளை அவசியம் தெரிக்கவும்.





No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்