இந்திய கம்யூனிஸ்டுகளாகிய நாம் நம்மை பரிசீலிக்க கடந்தகால வரலாற்றிலிருந்து சரி தவறுகளை பரிசீலித்து கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பணியை செய்ய வேண்டும். அப்படியெனும் பொழுது வலுவான எதிரியான ஆளும் வர்க்கத்தின் முன்னர் செயலற்று நிற்கும் புரட்சி பேசுபவர்களும் ஆளும் வர்க்க பிரிவாகவே மாறி உழைக்கும் வர்க்கத்தை ஏய்க்கும் சில கம்யூனிசம் பேசும் கட்சிகளும் தங்களின் பணியை செய்யாமல் தங்களின் இருப்பிற்காக ஏதோ ஒன்றை செய்துக் கொண்டுள்ளனர். உண்மையில் இவை ஆளும் வர்க்கத்தை நீட்டிக்க செய்யும் பணிதானே ஒழிய மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழிமுறை அல்ல.
கட்சியின் போர்த்தந்திரங்கள் என்றால் கட்சியின் அரசியல் நடத்தை, அல்லது கட்சியின் நடவடிக்கையின் தன்மை, திசை, மற்றும் வழிமுறைகள் என்று நாம் அர்த்தப்படுத்துகிறோம்.. புதிய பணிகள் சம்பந்தமாகவோ ஒரு புதிய அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டோ கட்சி முழுவதின் அரசியல் நடத்தையைச் சரிநுட்பமாக வரையறுப்பகுற்காகவே கட்சி காங்கிரஸ்கள் போர்த்தந்திரத் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன. ருஷ்யாவில் துவங்கியிருக்கும் புரட்சி இப்படிப்பட்ட ஒரு புதிய நிலைமையைத்தான்- அதாவது, மிக மிகப் பெரும்பான்மையான மக்களுக்கும் ஜார் அரசாங்கக்துக்கும் இடையே முற்றான, நிர்ணயமான, பகிரங்கமான முறிவு ஏற்படுவதை உண்டாக்கியுள்ளது.
மக்கள் உணர்ந்திருப்பதாலும் அரசாங்கத்தைக் தூக்கியெறிவது எனும் குறிக்கோளை வைத்துக் கொண்ட ஒரு கட்சி அவசியமாகவே பழைய, அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்ட அரசாங்கத்தின் இடத்தில் எந்த அரசாங்கம் வர வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்தித்துத் தீரவேண்டும். -லெனின் (ச.ஜ.இ.போ. லெ.தொ.1 பக்கம் 96 )விஜயை கோமாளியாக காட்டி என்ன சாதனை செய்ய போகிறீர்கள்?
எம்.ஜீ.ஆரை புரட்சி தலைவராக்கியதும் ஜெயலலித்தாவை புரட்சி தலைவியாக்கியதும் யாரின் பெருமை? அவை யாரை சாரும்? இந்த அரசியலின் உண்மையான பெயர் கவர்ச்சி அல்லது பொறுக்கி அரசியல் என்பதேயாகும். இதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இழிந்த நிலையே இந்த தனிநபர் வழிபாடும் கவர்ச்சி அரசியலில் உள்ள மயக்கமும்.
சட்டவாதம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.
ஒருபுறம் காவிகளின் ஆட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எல்லா போலித்தனங்களையும் வீசி எறிந்துவிட்டு அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான சமூக, சித்தாந்த, அமைப்பு அடிப்படையை பொறுக்கி அரசியல் ஏற்படுத்துகிறது. பாசிசத்தை நிறுவுவதற்கு இனவாதம், தேசியவாதம், போலி சோசலிசம் அடங்கிய சித்தாந்தமாக தேசிய சோசலிசம் அதாவது நாஜிசம் அமைத்ததைப் போல கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்)பல்வேறு கட்சிகள் அரசியல் – அமைப்பு அடிப்படையைக் கொண்டிருக்கிறது.. இதில் விஜய் போன்ற சினிமா நடிகர்கள் பின் அணி சேரும் கட்சிகள் எதிர்க்கும் கட்சிகளின் அரசியல் என்ன? நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். விரிவாக பின்னர் பேசுவோம்.
* புரட்சி நிகழவிருக்கும் காலத்தில் அரசாங்கத்தின் போர்த்தந்திரங்கள் பற்றிய கண்ணோட்டம் சம்பந்தப்பட்ட இத்தீர்மானத்தின் வாசகம் பின்வருமாறு:
“இன்றையப் புரட்சிக் காலகட்டத்தில் அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கங்களை வைத்து முக்கியமாகப் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வுள்ள பகுதிகளை எதிர்த்து வழக்கமான அடக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவரும் அதே நேரத்தில் அது
1) சலுகைகளைக் கொடுத்தும் சீர்திருத்தம் பற்றிய வாக்குறுதிகளைக் கொடுத்தும் தொழிலாளி வர்க்கத்தை அரசியல் ரீதியிலே கெடுக்கவும் அதன் விளைவாக அதைப் புரட்சிப் போராட்டத்தினின்று திசை திருப்பி விடவும் முயல்கிறது;
2) அதே நோக்கத்தை வைத்துத் தன்னுடைய பாசாங்குள்ள சலுகையளிக்கும் கொள்கையைப் போலி ஜனநாயக வடிவங்களிலே போர்த்தி வருகிறது--கமிஷன்களுக்கும் மாநாடுகளுக்கும் தங்களுடைய பிரதிநிதிகளைக் தேர்ந்தெடுக்கும்படி தொழிலாளிகளை அழைப்பது முதல் "ஜெம்ஸ்கி ஸபோர்(போலியான மக்கள் பிரதிநிதிகள்-இலக்கு ஆசிரியர் குறிப்பு) எனப்படுவது போன்ற கேலியான மக்கள் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவது வரை இவ்வடிவங்கள் உள்ளன;
3) "கறுப்பு நூற்றுவர்” எனப்படும் கும்பலை அது அமைக்கிறது, மக்களிடையே பொதுவாகப் பிற்போக்கானவர்களாகவும், அரசியல் உணர்வு பெறாதவர்களாகவும், இனவெறியாலோ மதவெறியாலோ கண்மூடிப்போனவர்களாகவும் இருக்கும் எல்லாப் பகுதிகளையும் புரட்சிக்கு எதிராகத் தூண்டிவிடுகிறது:-
“இக்காரணங்களை வைத்து ரு.ச.ஜ.கெொ. கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் கட்சி அமைப்புகள் அனைத்தையும் பின்வருமாறு பணித்திடத் தீர்மானிக்கிறது:
௮) அரசாங்கத்தின் சலுகைகளின் பிற்போக்கான நோக்கத்தை அம்பலப்படுத்தி வரும் அதே நேரத்தில், ஒரு புறத்தில் இந்தச் சலுகைகள் பலவந்தத்தின் மூலமாகப் பறிக்கப் பட்டவை எனும் உண்மையையும், மறுபுறத்தில் பாட்டாளி வர்க்கத்கைத் திருப்திப்படுத்தக் கூடிய சீர்திருத்தங்களை எதேச்சாதிகார ஆட்சியால் அறவே கொடுக்க இயலாது எனும் உண்மையையும் தங்களுடைய பிரச்சாரத்திலும் கிளர்ச்சியிலும் வலியுறுத்த வேண்டும்;
ஆ) தேர்தல் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த அரசாங்க நடவடிக்கைகளின் உண்மையான குறிபொருளைத் தொழிலாளிகளுக்கு விளக்க வேண்டும், மற்றும் எல்லோருக்கும் சம வாக்குரிமை, நேர்முகத் தோர்தல்கள், இரகசிய வாக்குப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஓர் அரசியல் நிர்ணய சபையைப் புரட்சிகரமான வழியிலே கூட்டுவது பாட்டாளி வர்க்கத்துக்கு அவசியம் என்று நிரூபிக்க வேண்டும்;
இ) புரட்சிகரமான வழியிலே எட்டு மணி நேர வேலை நாளையும் தொழிலாளி வர்க்கத்தின் உடனடியான மற்ற கோரிக்கைகளையும் தாமதமின்றிச் செயல்படுத்துவதற்குப் பாட்டாளி
வர்க்கத்தை ஒழுங்கமைக்க வேண்டும்;
ஈ) கறுப்பு நூற்றுவரின், பொதுவாகவே அரசாங்கத்தின் தலைமையிலுள்ள எல்லாப் பிற்போக்கான பகுதிகளின் செய்கைகளை எதிர்த்து ஆயுதமேந்திய எதிர்ப்பை ஓழுங் கமைக்க வேண்டும்.” (1907 பதிப்புக்கு ஆசிரியர் எழுதிய குறிப்பு. ப-ர்.) (சமூக ஜனநாயக வாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் நூலின் பக்கம் 116-117).
இங்கே இந்த திருமணத்தில் கலந்து கொண்டோர் மற்றும் இந்த திருமணம் என்ன வகைப்பட்டது விளக்க முடியுமா?
இந்த அயோக்கியர்கள் இந்து பெயரில் நடத்தும் வியபாரத்தை எதிர்க்க துணிவில்லை என்ன முற்போக்கு அரசியல்? இங்குள்ள நம்மவர்களுக்கு?
எதையையும் செய்யாத இவர்களுக்கு -ஓட்டுப்போட இந்துவா வா என்கிறனர்....
பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராகச் சில பழங்கால மிச்சசொச்சங்களை (எடுத்துக்காட்டாக, முடியரசு, நிரந்தர இராணுவம், முதலியவை) நம்பிப் பற்றி நிற்பது முதலாளி வர்க்கத்துக்கு அனுகூலமானது. முதலாளித்துவப் புரட்சி மிதமிஞ்சிய உறுதியுடன் பழங்காலத்தின் மிச்ச சொச்சங்கள் அனைத்தையும் துடைத்தெறியாமல் சிலவற்றை நீடித்து வைத்திருப்பது---அதாவது, இந்தப் புரட்சி முற்றிலும் முரணொழித்ததாக இல்லாமலிருப்பது, முழுமையாயில்லாமலிருப்பது, உறுதியானதாய், விட்டுக் கொடாததாய் இல்லாமலிருப்பது--முதலாளி வர்க்கத்துக்கு அனுகூலமானது. இக்கருத்தை சமூக-ஜனநாயகவாதிகள் அடிக்கடி சற்று வேறு விதமாகவும் வெளியிடுகிறாகள்: அதாவது, முதலாளி வர்க்கம் தனக்குத் தானே துரோகம் செய்து கொள்கிறது, சுதந்தர இலட்சியத்துக்குத் துரோகம் செய்கிறது, முரணற்ற ஜனநாயகப் போக்கிலே போகும் திறம் முதலாளி வர்க்கத்துக்குக் கிடையாது, என்று. முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கிப் போகும் அவசியமான மாற்றங்கள் மேலும் மெதுவாக, மேலும் படிப்படியாக, மேலும் எச்சரிக்கையாக நடப்பது, குறைந்த உறுதியுடன் நடப்பது, புரட்சி வழியேயல்லாமல் சீர்திருத்தங்களின் வழியே நடப்பது முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. பண்ணையடிமை முறையின் “நன்மதிப்புக்குரிய” நிறுவனங்களை (முடியரசு போன்றவற்றை) இந்த மாற்றங்கள் முடிந்தவரை அப்படியே விட்டு வைப்பது, இந்த மாற்றங்கள் சாதாரண மக்களின் — அதாவது விவசாயிகளின், குறிப்பாகத் தொழிலாளிகளின் - சுதந்தரமான புரட்சிகரமான நடவடிக்கையையும் முன் முயற்சியையும் ஆற்றலையும் முடிந்தவரை குறைவாக வளர்க்கிறவையாக இருப்பது, முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. காரணம், பிரெஞ்சுக்காரார்கள் சொல்கிறமாதிரி “துப்பாக்கியை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றுவது” தொழிலாளிகளுக்கு மேலும் சுளுவாயிருக்கும்---அதாவது, அவர்களுக்கு முதலாளித்துவப் புரட்சி கொடுக்கும் ஆயுதங்களையும் புரட்சி கொணர்ந்து தரும் சுதந்தரத்தையும் பண்ணையடிமை முறையை ஒழித்துச் சுத்தப்படுத்திய களத்தில் தோன்றுகிற ஜனநாயக நிறுவனங்களையும் முதலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தொழிலாளிகள் திருப்புவது மேலும் சுளுவாயிருக்கும். மறுபுறத்தில், முதலாளித்துவ ஜனநாயகத்கை நோக்கிச் செல்லும் அவசியமான மாற்றங்கள் சீர்திருத்தங்கள் வழியேயல்லாமல் புரட்சி வழியே நிகழ்வது தொழிலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானதாகும். ஏனெனில் சீர்திருத்தத்தின் வழி தாமதப்படுத்தும் வழி, தள்ளிப்போடும் வழி, நாட்டின் உடம்பிலுள்ள அழுகிப்போன பகுதிகள் வேதனைமிக்க நிதானத்துடன் இற்றுச்சிதையும் வழியாகும். பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளுந்தான் அந்த அழுகலினால் முதன்மையாகவும் மிகுதியாகவும் துன்பப்படுகிரார்கள். புரட்சி வழி விரைவாக வெட்டியகற்றும் வழி, பாட்டாளி வர்க்கத்துக்கு மிகவும் குறைந்த வலி கொடுக்கும் வழி, அழுகி விட்டதை உடனடியாக அகற்றும் வழி, முடியரசிடமும் அதைச் சேர்ந்த வெறுக்கத்தக்க, இழிந்த, அழுகலான, நாற்றமெடுக்கும் நிறுவனங்களிடமும் மிகக் குறைவான இணக்கமும் எச்சரிக்கையும் காட்டும் வழியாகும், எனவே, நம் நாட்டு முதலாளித்துவ-மிதவாதப் பத்திரிகைகள் புரட்சிப் பாதையின் சாத்தியப்பாடு குறித்து வருத்தும் தெரிவிப்பதும் புரட்சிக்கு அஞ்சுவதும் புரட்சிப் பூச்சாண்டி காட்டி ஜார் மன்னனைப் பயமுறுத்த முயல்வதும் புரட்சியைத் தவிர்க்க முயல்வதும் சீர்திருத்த வழிக்கு அடிப்படை என்கிற முறையிலே அற்பச் சீர்திருக்தங்களுக்காக மண்டியிடுவதும் கெஞ்சிக் குழைவதும்- இவற்றிற்கெல்லாம் காரணம் பத்திரிகைக் தணிக்கை முறையும்...... முதலாளித்துவச் சமுதாயத்தில் ஒரு வர்க்கம் என்கிற வகையில் முதலாளி வர்க்கம் வகிக்கும் நிலையின் காரணமாக அது தவிர்க்க முடியாதபடி ஜனநாயகப் புரட்சியில் முரணான நிலையை வகிப்பதில் கொண்டு போய் விடுகிறது, ஒரு வர்க்கம் என்கிற முறையில் பாட்டாளி வர்க்கம் வகிக்கும் நிலையின் காரணமாக அது முரணற்ற ஜனநாயகப் போக்கைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்துப்படுகிறது. ஜனநாயகத்தின் முன்னேற்றம் பாட்டாளி வர்க்கத்தைப் பலப்படுத்தும் அபாயத்தைக் கண்டு பயந்து முதலாளி வர்க்கம் திரும்பிப் பின்னோக்குகிறது. இழப்பதற்குத் தன்னுடைய விலங்குகளைத் தவிர பாட்டாளி வர்க்கத்திடம் வேறொன்றுமில்லை, ஆனால் ஜனநாயகத்தின் துணை கொண்டு வெல்வதற்கு உலகு முழுவதும் இருக்கிறது. எனவேதான் ஜனநாயக மாற்றங்களைச் சாதிப்பதில் முதலாளிக்துவப் புரட்சி எவ்வளவுக்கெவ்வளவு முரணின்றி இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு முதலாளி வர்க்கத்துக்கு மட்டும் அனுகூலமானவையாக இருக்கிறவைகளுடன் நிறுத்திக் கொள்வதும் குறையும். முதலாளித்துவப் புரட்சி எவ்வளவுக்கெவ்வளவு முரணின்றி இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஜனநாயகப் புரட்சியால் கிடைக்கும் ஆதாயங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கும் விவசாயிகளுக்கும் உத்தரவாதம் செய்யும்.
(மேல்கண்ட பகுதி சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்தந்திரங்கள் நூலின் பக்கம் 139-142 லெ.தொ.நூ.1 லிருந்து எடுக்கப்பட்டவை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக