சில காலமாகவே பாரதி ஒரு சனாதனவாதி என்றும், பிராமண மேட்டிமையாளனென்றும் பழைய, ஆரியன் பார்பனன் என்றும் ஏசி பேசும் கூட்டம் பேச மறுப்பது அவனின் வாழ்க்கையும் அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கொடூரத்தையும்தான். அடிப்படை யில்லாத அர்ப்ப வாதங்கள் மேலோங்கியபடி உள்ளன. இன்றைய பி.ஜே.பியின் முன்னோடி இத்தியாதி....
1). ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய மக்களின் தேசிய விடுதலைப்போரில் பாரதி ஆற்றிய பங்குபற்றி இவர்கள் பேசுகின்றனாரா?
ஆங்கிலேயர் தங்களது ஆட்சியை இந்திய மக்கள் மீது எதிர்ப்பின்றித் திணிக்கமுடியவில்லை. இந்திய மக்கள் கோழைகளாக இருந்து விடவில்லை. ஏகாதிபத்தியவாதிகள் செய்த மனிததன்மையற்ற கொள்ளைகள், சூறையாடுதல், அழிவு, சதிகள், மோசடிகள், காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்கள் ஆகியவற்றால் கோபமுற்று ஆத்திரமடைந்த இந்திய மக்கள் கலகப்பாதையை மேற்கொண்டார்கள். பல வீரமிக்க சண்டைகளைச் செய்தார்கள். எதிரிக்குப் பல வன்மையான அடிகளைக் கொடுத்தார்கள். ஆயுதந் தாங்கிய எழுச்சிகளும் நிறைந்த நூற்றாண்டாகவே இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய சண்டைகளும் போராட்டங்களும் நாட்டு மக்களுடன் மட்டும்நின்றுவிடவில்லை. ஏகாதிபத்தியப் படையிலிருந்த இந்தியப் படைவீரர்களும் அவர்களை எதிர்த்துப் பல கலகங்களிலும் சண்டைகளிலும் ஈடுபட்டனர்.
20 நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மத்தியதர படித்த வர்க்கத்தினரிடையே
இருந்து சில புரட்சிக்குழுக்கள் தோன்றின. இக்குழுக்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். முதல் வகையினர் தனிப்பட்ட ஆங்கிலேயே அதிகாரிகளைக் கொல்வது மூலம்
அந்நிய ஆட்சியினரை அதிரச் செய்யலாம் என்ற கொள்கையுடையவர்கள்; இரண்டாவது வகையினர் இராணுவம் அமைத்து பிறநாடுகளின் ராணுவ உதவியுடன்
ஆங்கிலேய ஆட்சியைத் தகர்க்கலாம் என்ற கொள்கையுடையவர்கள். பகத்சிங், குருதேவ், வாஞ்சிநாதன் போன்றோர் முதல் வகையினரைச் சேர்ந்தவர்கள். காதர் கட்சியினர் வங்காளத்தில் அமைத்த அனுசிலன் சமிதியைச் சேர்ந்த
அமைப்பினர் இரண்டாவது வகையினரைச் சேர்ந்தவர்கள்.
ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களின் வீரஞ் செறிந்த விடுதலை உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் இது இந்திய விடுதலைப் போர் “கத்தியின்றி, ரத்தமின்றி நடத்தப்பட்டது” என்ற புரட்டல் வாதத்தை அம்பலப்படுத்துகிறது.
ஆங்கிலேயரின் சூழ்ச்சி
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்திய மக்களின் போராட்டங்களை இருவழிகளில்
அடக்க முயற்சித்தன. ஒன்று நேரடி
பலாத்கார அடக்குமுறை; மற்றொன்று
கருத்துரீதியான மக்களைச் செயலற்றவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை. நேரடி அடக்குமுறைக்கு ஜாலியன் வாலாபக் படுகொலை போன்ற பல வரலாறுகள்
உள்ளன. கருத்துரீதியாக அடக்குவதற்கு
மதத்தலைவர்கள் பயன்பட்டனர். “சமூகச் சீர்திருத்தங்கள்” என்ற பெயரில் மதத் தலைவர்கள். மக்களை அந்நியருக்கு எதிரான போராட்டத்திலிருந்து திசை திருப்ப முயற்சித்தனர். நாட்டு விடுதலைக்குப் பதில் “ஆன்மீக விடுதலையை” முன்வைத்தனர். இராஜாராம் மோகன் ராயின் பிரம சமாஜம், தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம்போன்றவைமேற்கூறிய “பணிகளையே” செய்தன.
அடுத்து, ஆங்கிலேய
ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க, மதஜாதிப் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டனர். இந்து - முஸ்லீம்
பகைமையை வளர்த்தனர். “பிரித்து ஆள்வது” (Divide
and Policy) என்ற கொள்கையைக் கடைப்பிடித்தனர். இதன் உச்சகட்ட நடவடிக்கையாக 1905- ஆம் ஆண்டு அரசியல் சட்டங்கள் வகுப்புவாரி பிரநிதித்துவம் என்ற சலுகை
அளிப்பதாகக் கூறி, இந்து- முஸ்லீம் ஒற்றுமையைத் தகர்க்கவே முயற்சித்தன.
1361, 1891, 1909, 1919- ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சில அரசியல் சட்டச் சீர்திருத்தங்கள் மூலம் தரகு முதலாளித்துவக் கூட்டத்தினருக்கு வர்த்தகம், நிர்வாகம், கல்வி முதலியவற்றில் சில சலுகைகள் வழங்கப்பட்டன.
“சுருங்க கூறின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒருபுறம் படையைப் பலப்படுத்துவதும், மறுபுறம் அரசியல், சட்ட, நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் ஆகிய இரட்டைத் தந்திரத்தை மேற்கொண்டு, தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நிஜ தோட்டாக்களையும், தேன் தடவிய தோட்டாக்களையும் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தத்தொடங்கியது.”
காங்கிரஸை ஹ்யூம் ஏன் தோற்றுவித்தார் என்பதை ஆராய்ந்து ம.பொ.சி. பின்வருமாறு கூறுகிறார்.
“புதிதாகத் தோன்றியிருந்த பட்டதாரி சாதியினர் தேசிய எழுச்சியுடன்
தங்களை இணைத்துக் கொண்டு வருதை இவர் கூர்ந்து கவனித்திருக்கிறார்.
... படித்தவர்களிடையே அபாயத்தில் அறிகுறியாக
ஹ்யூம் மதிப்பிட்டிருக்க வேண்டும்.... பட்டதாரிகள் நிலை ஒரு புறமிருக்க, சாதாரணத் தொழிலாளிகள் உழவர்கள் ஆகியோரிடையிலும் பொருளியல்
வர்க்கரீதியான போராட்ட உணர்வு ஏற்பட்டு வருவதையும் ஹ்யூம் தெளிவாக உணர்ந்தார்... இப்படி, படித்த
பட்டதாரிகள், மாணவர்கள், உழவர்கள், தொழிலாளர்கள் ஆகிய
பல்வேறு பகுதியினரும் பிரிட்டிஷ் அரசின்பால் வெறுப்புற்றிருப்பதால், எந்த நேரத்திலும் அவர்களனைவரும் ஒன்றுபட்டு ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போரில் ஈடுபடுவது சாத்தியம் என்பதைத் தமது மதிநலத்தால் முன்கூட்டியே ஹ்யூம்
அறிந்தார்.... இந்த நிலையில் பட்டதாரிகளின் உத்தியோக
நலன்களுக்காக நடத்தப்படும் தேசியக் கிளர்ச்சியை ஏற்றுக்கொண்டு, சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாதாரண மக்களை அந்தப் படித்தவர்கள்
தலைமையில் கீழ்கொண்டு வருவதே 1857- இல் ஏற்பட்டது போன்ற ஒரு பயங்கரப் புரட்சி தோன்றுவதை அடியோடு
தவிர்க்கும் என்று தீர்க்கதரிசனத்தால் அறிந்து கொண்டார்....... காங்கிரஸ் மகாசபை தொடங்குவதற்கு முன்பு ஹ்யூம் அவர்கள், கவர்னர் ஜெனரல் டிப்ரின் என்பவரைப் பார்த்துப் பேசினார். முதலில் சமூக சீர்திருத்தக் குறிக்கோளுடையதாகவே காங்கிரசை ஏற்படுத்த
அவர் விரும்பினார். அவரை
அரசியலுக்குத் திருப்பிவிட்டவர் டிப்ரின் பிரபுதான்.... ஹ்யூம், கவர்னர் ஜெனரல்
டிப்ரின் பிரபுவைக் கலந்து ஆலோசித்து, அவர் விரும்பியபடி சமூக சீர்திருத்த அமைப்பாக மட்டுமல்லாமல், படித்தவர்களுக்கு- பட்டதாரிகளுக்கு உத்தியோகம் தேடித்தரும் அரசியல் அமைப்பாகவும்
காங்கிரஸ் மகாசபையைத் துவக்க முற்பட்டார்.”(
ம.பொ.சி. அவர்கள் தனது கருத்துக்குச் சாதகமாக
முன்னாள் அமெரிக்க தூதுவர் செஸ்டர் பௌல்ஸும், மேற்கு ஜெர்மனி வரலாற்றுப் பேராசிரியர் டைட்மேயர் பிரதர்மண்ட்
என்பவரும் கூறியுள்ள கருத்துகளை எடுத்துக் காட்டுகிறார்.(
காங்கிரஸின் வரலாற்றைப் பார்க்கும்போது,
1906- ஆம் ஆண்டுவரை அது இந்திய
சுதந்திரம்பற்றிப் பேசியதே கிடையாது என்பது தெரியவருகிறது.
1905- ஆம் ஆண்டில்தான் இந்தியச்
சுதந்திரத்திற்கான உண்மையான போராட்டங்களிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக, காங்கிரஸ் “பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தின் ஆளுகைக்குள் ஒரு பொறுப்பாட்சியை நிறுவுதற்கான” கோஷங்களை முன்வைத்தது. இதில் மிதவாதிகள், தீவிரவாதிகள் இருவருக்குமிடையில் வேறுபாடு கிடையாது. போராட்ட வடிவத்தில்தான் இருவருக்குமிடையே வேறுபாடு நிலவியது. மிதவாதிகள் வருடக் காங்கிரஸ் மகாநாட்டில் தீர்மானங்கள் போட்டு, ஆங்கிலேய அரசுக்கு மனு அனுப்பி வேண்டிக்கொள்ளவேண்டும் என்று கூறினர். தீவிரவாதிகளோ காங்கிரசை வருடம் முழுவதும் செயல்படும் மக்கள் இயக்கமாக
மாற்றி, மக்கள் போராட்டங்களின் மூலம் (சட்டத்தின் உட்பட்ட போராட்டங்கள்தான்) இந்தியர்கள் உரிமைகள் பெறுதல் வேண்டும் என்று கூறினர்.
காங்கிரசின் தலைமையில் இருந்த ஆங்கிலேய அரசின்
விசுவாசிகளான வட இந்தியத் தரகு முதலாளிகளை - காங்கிரசின் மிதவாதிகளை - எதிர்த்து, திலகர் போன்ற
குட்டி முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் வெற்றி பெற இயலவில்லை. ஆங்கிலேய அரசும் தீவிரவாதிகள் மீது கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டன.
1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரசில் மிதவாதிகள்
ஆங்கிலேயப் போலீசின் உதவியால் தீவிரவாதத் தலைவர்களைத் தாக்கினர். திலகர் 1907- ஆம் ஆண்டு
சிறையில் அடைக்கப்பட்டார். லஜபதிராயும், விபன் சந்திரபாலரும் சுய தீவாந்திர வாழ்க்கையை, மேற்கொண்டனர். அரவிந்தர் பாண்டிச்சேரி சென்று “துறவை” மேற்கொண்டனர்.
1907-ஆம் ஆண்டிலிருந்து 1914 வரை காங்கிரஸ் இயக்கம் மொத்தத்தில் செயலற்றுக் கிடந்தது. 1915-இல் அன்னிபெஸண்ட் அம்மையார் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும்
இடையே “ஒற்றுமையை’’ ஏற்படுத்தி காங்கிரசை மறுபடியும் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளின்
மக்களின் போராட்டத் தீயை அணைக்கும் தீயணைப்புப்படையாகச் செயல்படவைக்க முயற்சி
எடுத்தார். திலகரும் அதற்கு
இணங்கினார்.
இதுவே 1921 ஆம் ஆண்டுவரை நிலவிய காங்கிரசின் நிலையாகும்.
பாரதியின் அரசியல் வாழ்க்கை
1904- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “சுதேசமித்திரன்” பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியில் அமர்ந்ததுடன், பாரதியின் அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது என்று கூறலாம். உலக அரசியல் செய்திகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து, அப்பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய காரணத்தால், அவருடைய அரசியல் அறிவு வளர்ச்சியடைந்தது.
1905 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினைக்கு எதிரான திலகர். விபினசந்திரபாலர் ஆகியோரின் போராட்டம். பாரதியைக் காங்கிரஸ் அரசியலுக்கு இழுத்துச்சென்றது. அப்போராட்டத்தால் உந்தப்பட்டு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் செயல்படத் தொடங்கினார். திலகரின் தீவிரவாதக் குழுவுடன் இணைந்து செயல்பட்டார்.
அந்த ஆண்டு பாரதி காசிக் காங்கிரசுக்குச் சென்று
பங்கேற்றார். சென்னை திரும்புகையில் விவேகானந்தரின்
சிஷ்யை நிந்தித்தா தேவியைச் சந்தித்தார்.
’சுதேசமித்திரன்’ பத்திரிகை மிதவாதத் தலைவரான ஜி. சுப்பிரமண்ய அய்யரின் பத்திரிகையாதலால், அவரால் தனதுதீவிரவாதக்கருத்துகளைஅதில்எழுதமுடியவில்லை. இந்நேரத்தில் அவருக்குத் தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய
சுரேந்திரநாத் ஆர்யா, சர்க்கரைச்
செட்டியார், வக்கீல் துரைசாமி அய்யர், ஹரிசர்வோத்தமராவ், வ.உ.சி. ஆகியோரின் நட்பு கிடைத்தது. அவர்களுடைய உதவியுடன் அவர் “இந்தியா” பத்திரிகைப்
பொறுப்பாசிரியராக அமர்ந்தார். தனது கருத்துகளை வெளிப்படையாக எழுதினார். இப்பத்திரிக்கைதான் தமிழ்நாட்டின் தீவிரவாதிகளின் ஒரே தமிழ்ப் பத்திரிகையாக இருந்தது. பின் “பாலபாரதா” என்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார்.
1907 ஆம் ஆண்டு டிசம்பரில் சூரத் காங்கிரசுக்குச் சென்றார். தன்னுடன் வ.உ.சி., மண்டபம் ஸ்ரீநிவாஸாச்சாரி ஆகியோரைக் கொண்ட சென்னைத் தீவிர இளைஞ்ர் குழுவை அழைத்துச் சென்றார். காங்கிரசில் தீவிரவாதக் குழுவை ஆதரித்தார். இதே ஆண்டில்தான் அவருடைய ‘சுதேசி கீதங்கள்’ வெளிவரத் தொடங்கின. அரசியல் உலகில் இருந்துகொண்டு, இலக்கிய உலகிலும் செயல்படத் தொடங்கினார்.
1908- ஆம் ஆண்டில் சென்னையில் “சுயராஜ்ஜியத் தினம்” கொண்டாடினர். வ.உ.சி. சுப்பரமணிய சிவா, சுதேசி பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் அந்நேரத்தில் கைது செய்யப்பட்டனர். “இந்தியா” பத்திரிகை மீது ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் சட்டப்பூர்வமான ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாரதி பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகச் சென்றார். அங்கே இருந்து கொண்டு 1908-1910 ஆண்டுகளில் “இந்தியா” பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தினார். ஆனால் அப்பத்திரிகையை இந்தியாவில் நுழையவிடாதபடி ஆங்கிலேய அரசு தடுத்து நிறுத்தியது. இதன் விளைவாக அது நின்றுபோகிறது.
அதன்பின் அரவிந்தர், வ.வே.சு. அய்யர் தொடர்பு பாரதிக்குக் கிடைத்தது. கவிதைகள் படைப்பதிலும், தத்துவ ஆராய்ச்சியிலும் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார்.
1918- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியைவிட்டுத்
தமிழகம் திரும்பினார். ஆனால் திரும்பும்
வழியிலேயே கடலூரில் கைது செய்யப்பட்டார். ஆங்கிலேய அரசுக்குச் சில
உறுதிமொழிகளைக் கொடுத்ததன் மூலம் விடுதலை செய்யப்பட்டார். 24 நாட்கள் சிறையில் இருந்தார்.
1919 இல் மீண்டும் சென்னைக்கு வந்தார். ராஜாஜி வீட்டில் காந்தியைச் சந்தித்தார்.
1920- இல் மீண்டும் ‘சுதேசமித்திரனில்’ இணைந்து, கட்டுரைகளை எழுதத்
தொடங்கினார்.
பாரதியின் அரசியல் வாழ்க்கை 1905 லிருந்து 1910 வரை
தீவிரமாக அமைந்தது. 1908 - இல் திலகர்
குழுவைச் சேர்ந்தவர்கள் பாதிப்புக்கு உட்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்டவுடன், பாரதியின் அரசியல் வாழ்விலும் மாற்றம் ஏற்பட்டது. தான் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கம் தோல்வி அடைந்ததாகக் கூறிப்
பாண்டிச்சேரி சென்றார். பாண்டிச்சேரியிலும் 1910 வரை பாரதியின் வாழ்க்கை தீவிர அரசியலிலிருந்து விலகி நிற்கத்
தொடங்கியது. 10 ஆண்டுகள் பாண்டிச்சேரியில் அகதி
வாழ்வை மேற்கொண்ட பாரதி, தளர்ச்சியடைந்து
சென்னை திரும்ப நினைத்தார். தன் மீது எவ்வித ராஜத் துரோக வழக்குக்கும் வாய்ப்பில்லை என்பதை
ஆங்கிலேய அரசுக்குத் தெரிவித்து, சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்தார்.
கடலூரில் கைதுசெய்யப்பட்ட பின்னர், அவருடைய விடுதலைக்குச் சென்னையில் அன்னிபெஸண்ட்டை சேர்ந்த குழுவினர்
முயற்சி எடுத்தனர். போலீஸ்
அதிகாரிகளைச் சந்தித்துப் பாரதிக்கும் தீவிரவாத அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று
பாரதியின் நடத்தைக்கு “உத்திரவாதம்” அளித்தனர். இருப்பினும்
போலீஸ் அதிகாரியின் தாங்கள் நேரடியாகவே பாரதியிடம் உறுதிமொழி பெற முடிவெடுத்தனர். பாரதியைச் சிதம்பரத்தில் சந்தித்து உறுதிமொழி பெற்றனர். இனித் தீவிர அரசியிலிருந்து விலகி விடுவதாகவும், இனித் தான் எழுதும் படைப்புகளை ஆங்கிலேய அரசின் தணிக்கைக்கு உட்பட்டு
வெளியிடுவதாகவும் பாரதி உறுதிமொழி அளித்தார்.
அத்துடன் பாரதிதான் விரும்பி ஏற்ற “தீவிரக் காங்கிரஸ்” நடைமுறையில் ஒதுங்கிவிட்டார். விடுதலைப் போரில் பாரதியின் பங்கு 1904- இல் தொடங்கி 1907,1908- இல் உச்சகட்ட வளர்ச்சியடைந்து. 1910 இல் பின்னடைவுக்கு உட்படுகிறது. 1918- இல் அவர் ஆங்கிலேய அரசுக்கு அவர் அளித்த உறுதிமொழிகள் அவருடைய அரசியல் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.
பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம் அவர் சார்ந்திருந்த “தீவிரக் காங்கிரஸ்” இயக்கத்தின் தோல்வியேயாகும். (பாரதியும் இந்திய தேசிய விடுதலைப் போரும் ~ ந.தெய்வ சுந்தரம்) அவர்களின் வலைபூவிலிருந்து சுருக்கமாக.
பாரதியின் மொத்த வாழ்க்கை 39 ஆண்டுகள். அவன் தீவிர அரசியல் வாழ்க்கை 11 ஆண்டுகள் அவன் எழுதிய நூல்கள் 770க்கு கூடுதல். அவனின் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணியையோ அவனின் இறப்பில் கலந்துக் கொண்டவர்கள் 14 பேர் மட்டுமே! பலர் பேசும் பார்ப்பனர்களே அவனை ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் என்று இவர்களுக்கு தெரியதோ?
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 -11 செப்டம்பர் 1921) கவியும், இதழாசிரியரும், விடுதலை போராட்ட வீரரும்சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழை சரளமாக மக்கள் மொழியாக்கிய பெருமை பாரதியை சாரும்.
மக்கள் கவிஞராகவும், தேசியவாதியாகவும் இருந்த
பாரதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 14 பேர் மட்டுமே
இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதியாரின் இறப்புக்கு பின்னரும் இவரின் பாடல்கள் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இருந்த இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சில காலமாகவே பாரதி ஒரு சனாதனவாதி என்றும், பிராமண மேட்டிமையாளனென்றும் பழைய, அடிப்படை யில்லாத அர்ப்ப வாதங்கள் மேலோங்கியபடி உள்ளன. பாரதி குறித்து எதிர்மறையாக ஆய்வுசெய்தவர்களில் ஒருவரான வே.மதிமாறன் பாரதியையும் விமர்சிப்பதை பாருங்கள்...
“பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக,
ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில்
இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது "
"...ஆம், அந்தப்
புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து
கழிசடைக்கு மாறுவது."
வேதனை என்னவென்றால் வர்க்கப் புரட்சியென்றும், பொருள்
முதல் வாதம் என்றும், வாய்கிழிய பேசிய மருதையங்கள் சிவப்புகளும்
இந்த மகுடிகளுக்கு பாம்பாவதுதான்.
ஒரு படைப்பாளியை விமர்சிக்கும் எந்தவிதமான அளவுகோளையும் கண்டுகொள்ளாமல் இவர்கள் வைக்கும் விமர்சனங்களை புரிந்துக் கொள்ள இவர்களின் வர்க்க சமரசவாதம்தானே தவிர வேறொன்றுமில்லை எனலாம்.
"பாரதிய ஜனதா பார்ட்டி" யாகட்டும் அல்லது
வாலாசா வல்லவனின் "திராவிடஇயக்கமும் பாரதியு"மாகட்டும் இன்னும் மருதையனோ,
வெற்றிமணியோ யாராக இருக்கட்டும். எல்லா குப்பைகளும் ஒரே மாவைத்தான்
அறைக்கின்றன.
குப்பைகளென்று நான் சொல்வதால் யாரும் முகம் சுளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் பாரதிதொடர்பான ஆய்வுத்தடம் மிக நீண்டது. குறிப்பாக பொருள்முதல்வாத அடிப்படையில் கைலாசபதி தொடங்கி கோ.கேசவன், தொ.மு.சி, ஜீவா விலிருந்து அன்மைக்காலம் வரை ஏராளமான ஆய்வுகள் வந்தபடி உள்ளன. இவற்றையல்லாம் 'பேராசியர்களின் புராணம்' என ஒற்றை வரியில் மறுத்து அவற்றை மூடிமறைத்து இவர்கள் எழுதும் இத்தகு நூல்களை வேறெப்படி வகைபடுத்துவது என தெரியவில்லை.
தொ.மு.சி பார்ப்பது போல பாரதியை நாம் கம்யூனிஸ்டாக
பார்க்கவில்லை. அப்படி பார்க்கவேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. அவ்வாறு
மிகைபடுத்தினால் கேசவன் சொல்வதுபோல 'அவனின் ஆளுமையை நாம்
பழித்தவராவோம்'. ஆனால் அவனை ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாக
நாம் பார்க்க முடியும். அன்றைய சமூகத்தில் நிலவிய பிரதான முரண்பாடான
ஏகாதிபத்தியத்துக்கும் மக்களுக்குமான முரண்பாட்டை எதிர்த்த பாரதியை கம்யூனிஸ்டுகள்
ஆதரிப்பதில் என்ன தவறு நேர்ந்துவிடும் எனத்தெரியவில்லை.
பாரதி வருணக்கோட்பாட்டில் பற்றுள்ளவன் எனக் கூறுவதன்
மூலம் அவனின் சகல சாதகங்களும் புதைக்கப்படுகின்றன.
பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றி குறிப்பிடும்போது
பின்னால் அவன் பேரரசுக்கு மனு எழுதியது குறித்தும், ஜாலியன் வாலாபாக்
சம்பவம் தொடர்பாக ஏதும் எழுதாமல் போனது குறித்தும் எழுதி நம்மைப் பார்த்து
சிரிக்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
உண்மைதான்.... பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு
தொய்வுநேர்ந்தது உண்மைதான். ஆனால் அது நபர்சார்ந்த தொய்வல்ல அது இயக்கம் சார்ந்த
தொய்வு. அரவிந்தர் ஆசிரமம் அமைத்தார், சிவா மனு எழுதிக்கொடுத்தார்,
வ.உ.சி சாந்தி மார்க்கத்தில் லயித்தார் ...... ஒரு தேசிய
முதலாளித்துவ வர்க்கத்தை தலைமையாகக் கொண்ட போராட்ட இயக்கத்துக்கு எத்தகு நிலைவருமோ
அதுதான் பாரதியின் இயக்கத்துக்கும் வந்தது.
இந்த மதிமாறன் உள்ளிட்ட ஆய்வாளர்களின் நோக்கம் நமக்கு
புரியாத ஒன்றல்ல. பார்ப்பனர்கள் யாரும் ஜனநாயக சக்தியாக இருக்கமுடியாது என்ற
இவர்களின் பிழைப்புவாதமும், ஆளும்வர்க்க அடிவருடி மனோபாவமும் இவர்களை
இப்படியெல்லாம் பிதற்ற வைக்கிறது. அதுவும் தற்போதைய சூழலில் குறிப்பாக
ஏகாதிபத்தியத்துக்கும், மக்களுக்குமான முரண்பாடு
கூர்மையடையும் இந்த வேளையில் இவர்களின் செயல்பாடு இன்னும் துரிதமாகின்றது.
தோழர்களே, உண்மையும் விமர்சன நேர்மையும் இல்லாத இடங்களில் நம்மால் விவாதிக்க முடியாது. அப்படி விவாதித்தாலும் அதில் எந்த வித தீர்வும் ஏற்பட்டு விடாது. இவர்களின் அவதூறுகளுக்கு காலம் பதில் கொடுக்கும்
கடைசியாக...
நமது 'மாபெரும் கலை இலக்கிய விமர்சகர்' திருவாளர் வே.மதிமாறனின் புகழ்பெற்ற படைப்பான பா.பார்ட்டியில் ஒரு
அற்புதத்தை பாரதி சனாதனவாதி என்பதற்கு ஆதாரம் காட்டியிருக்கிறார்
...
சிங்கமராட்டியர் தம் கவிதைகொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
.....
என்ற வரிகளை எடுத்துக்கொண்டு சிங்கமராட்டியம் என்பது
திலகர்பிறந்ததால்......என கேலிசெய்து விட்டு தொடர்கிறார்......
வெறும் கவிதைகளை வாங்கிவைத்துக்கொண்டு விலைமதிப்பில்லா
நமது யானைத் தந்தங்களை கொடுக்கும் ஓரவஞ்சனை தேசியம் பாரதியினுடையதென கைகொட்டி
சிரிக்கிறார்
கொடுமையே......... சமுக மாற்றத்துக்கான உந்துசக்தியான
கவிதைகளை கேவலம் யானைத்தந்தங்ளோடா ஒப்பிடுவது?
வாழ்க உமது திறனாய்வு
சரி உங்களின் பார்வையில் எடுத்துக்கொண்டாலும்
இன்னொரு வரி!?
கங்கை நதிப்புறத்து கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்
ஓ.... ஒருவேளை கங்கை நதிப்புறங்களில் இருந்த பெரு
நிலவுடைமையாளர்கள் பிராமணர்கள் என்பதை பாரதி மறந்து விட்டானோ!?
+++++++++++++++++++++++++
. பாரதி உண்மையாகவே விடுதலை விரும்பியவர், அதற்காகச் செயல்பட முன்வந்தவர்.
அந்நியருக்கு எதிரான போராட்டமே இந்திய மக்களின் அன்றைய அடிப்படை
பிரச்சினை என்று எடுத்துக் காட்டி, அந்நியருக்கு எதிரான இந்திய மக்களின் ‘ஒற்றுமை தொடர்ந்து வலியுறுத்தியவர்.
ஆன்மீகப் பிடிப்பின் காரணமாகவும் தெளிவான வர்க்கக் கண்ணோட்டம் இல்லாமையாலும் எது சரியான-உண்மையான இயக்கம் என்று பார்க்கத் தவறியவர்.
அதன் விளைவாகத் தவறான இயக்கத்துடன் இணைத்துச் செயல்பட்டு, தோல்வி கண்டு, தளர்ச்சியடைந்தவர்.
போராளிக் கவிஞர் பாரதியார் . . .
மகாகவி என்பதைவிட . . . தான் வாழ்ந்த சமுதாயத்தின் சமூகக் கொடுமைகளைத்
தோலுரித்துக்காட்டியவர் சமூகப் போராளி. தான் வாழ்ந்த காலகட்டத்தில் தனது நாட்டை
அடிமைப்படுத்திச் சுரண்டிய அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர். மத நல்லிணக்கத்தை
முன்னிலைப்படுத்தியவர். மூட நம்பிக்கைகள் இல்லாத, பெண் அடிமை இல்லாத , பொதுவுடைமைச்
சமுதாயத்தை விரும்பியவர்.
எந்தவொரு விருதுக்காகவும் போராடியவரோ
அல்லது பாடியவரோ இல்லை! காசுக்காக விலை போனவர் இல்லை. அவரது இறுதி வாழ்க்கையில்
ஏற்பட்ட அரசியல் பின்னடைவுகளுக்கு உறுதியாக அவர் காரணம் இல்லை! அவர் ஏற்றுக்கொண்ட
காங்கிரஸ் கட்சியின் நிலைபாடே காரணம்!
இவ்வளவு பெருமை வாய்ந்த ஒருவரை . . .
தேவை இல்லாமல் . . . தரக்குறைவாக விமர்சனம் செய்வது எந்தவகையிலும் சரி இல்லை! தனது
கொள்கைக்காகவும் நடைமுறைக்காகவும் அவரும் அவரது குடும்பமும் எந்த அளவு
இன்னல்களுக்கு உட்பட்டனர் என்பது வரலாறு அறியும்!
++++++++++++++++++++++++++
இறுதியாக:-
போராளிக் கவிஞன் பாரதி ஒரு பார்ப்பனக்
குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், அவரைப்பற்றிப்
பல அவதூறுகள் தற்போது பரப்பப்பட்டுவருகின்றன.
பாரதி தன்னை ஒருபோதும் மார்க்சியவாதி
என்று கூறியவர் கிடையாது!
தன்னை ஒரு நாத்திகர் என்று கூறியது
கிடையாது!
ஆனால் . . . ஆங்கிலேய அரசியல் அதிகாரத்தை எதிர்த்துப் போராடியவர்!
செக்கிழுத்த செம்மல் வ உ சி-யுடன்
இணைந்து நின்றவர்!
தன் அரசியலை விலைபேசி விற்றவர் இல்லை!
சோவியத் ரசியாவில் ஜார் மன்னன்
வீழ்ச்சியடைந்ததும் மகிழ்ச்சியால் பாராட்டியவர்!
தீண்டாமையே எதிர்த்து நின்றவர்!
பெண்ணடிமையைச் சாடியவர்! பெண்கல்வி, விதவைத் திருமணம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியவர்!
தேவையற்ற மூட நம்பிக்கைகளை
விமர்சித்தவர்!
இந்திய நாடு தன்னிறைவுப்
பொருளாதாரத்தை அடையவேண்டும் என்று கூறியவர்!
மத நல்லிணக்கத்தை
முன்னிலைப்படுத்தியவர்!
தமிழ்மொழியின் சிறப்பை மிகப் பெரிய
அளவில் எடுத்துக்கூறியவர்!
செந்தமிழ் நாடு என்று தமிழ்நாட்டின்
பெருமையைப் பற்றிப் பாடியவர்!
வெறும் வாய்ப்பேச்சு வீரர் இல்லை
அவர்! களத்தில் நின்றவர்! ஆங்கிலேய அரசின் அடக்குமுறைக்கு உட்பட்டவர்!
இவ்வாறு தன் இலக்கியப் புலமையையும்
சமுதாயப் புரட்சியையும் இணைத்துப் பணியாற்றியவர்!
இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்!
சமுதாய உணர்வோடு . . . சமுதாய நடைமுறையோடு . . . செயல்பட்டவர்!
தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம்
தோன்றி காலூன்றுவதற்குமுன்பே . . . பொதுவுடைமைபற்றிப் பாடியவர்!
ஒரு பரந்துபட்ட உலகக் கண்ணோட்டத்தை
உடையவர்!
எனக்குத் தெரிந்தவரையில் . . . இன்றுவரை பாரதியைப்போன்ற ஒரு சமுதாயக் கவிஞர் . . . போராட்டக் களத்தில் நின்று பாடியவர் . . . சமுதாயத்திற்காகப் பாடியவர் . . . யாரும் இல்லை என்பதே உண்மை!
(தோழர் தெய்வ சுந்தரம் நாயினார் பதிவு மேலே)
++++++++++++++++++++++++++++++++++++++
போங்கையா நீங்களும் உங்க ஆய்வும் .
மடியா புகழ்கொண்ட மகாகவி வாழ்க ...!வாழ்க...!!
No comments:
Post a Comment