மதம் குறித்து மார்க்சியம் ஒரு அறிமுகம்- பிரேம சந்திரன்

 1925ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். ஆல் அன்றைய இந்திய தரகு முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திற்கும் சேவை செய்வதற்கான ”அகண்ட இந்து பேரரசை அமைப்போம்” என்ற பாசிச அரசியல் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்பட்டு 2014ல் இந்திய துணைக்கண்டத்தில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு இன்றைய ஏகாதிபத்திய புதிய காலனிய சகாப்தத்தில் அந்நிய மற்றும் உள்நாட்டு கார்பரேட்டுகளின் நலனுக்காக ” அத்திட்டத்தை ( ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே சட்டம், ஒரே தலைவன் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு இவற்றை கொண்ட அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை) மிக விரைவாக நிறைவேற்ற கடந்த ஏழு ஆண்டுகளாக மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பி.ஜே.பி.யின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சும் மற்றும் அதன் மதவெறிப் பயங்கரவாத கூட்டாளி அமைப்புகளும் தற்போது மத்தியிலுள்ள ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கார்பரேட்டுகளுக்கு சாதகமான மற்றும் மக்களுக்கு எதிரான தனியார்மய, தாரளமய மற்றும் உலகமய கொள்கைகளை தீவிரமாக செயல் படுத்துகிற அதே நேரத்தில் அக்கொள்கைகளின் விளைவுகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் உரிமைகளுக்கான போராட்டங்களை ஒடுக்குவதற்கான புதுப்புது பாசிசசட்டங்களை இயற்றியும் மற்றும் இவற்றுக்கு எதிராக போராடும் அனைத்து மதத்தைச் சார்ந்த உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட வர்க்கப்போராட்டத்தை தடுக்கவும் ஒடுக்கவும் திசைதிருப்பவும் சிறுபான்மை மதத்தினரின் குறிப்பாக. இஸ்லாமியர்களின் வாழ்வியல் உரிமை மற்றும் மத உரிமைகளை படிப்படியாகபறித்து வருகின்றனர். அவர்களை பெரும் பான்மை “இந்து” மக்களுக்கு எதிரியாக செயற்கையாக சித்தரிக்கின்றனர். மேலும் பா.ஜ.க. அரசானது சட்டமன்றம், பாராளுமன்றம், மற்றும் நீதிமன்றம் போன்ற போலி ஜனநாயக நிறுவனங்களை பயன்படுத்தி அவைகளின் ஒத்துழைப்புடன் இந்து மதவெறி அமைப்புகள் மூலம் மக்கள் மத்தியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து மதவெறி பிரச்சாரத்தையும் மிகமூர்க்கமான பாசிச ஒடுக்குமுறைகளையும் கையாண்டு தங்களது மதவெறி அமைப்புகளை பலப் படுத்தியும் விரிவாக்கியும் இந்துத்துவ அரசு அமைப்பதை நோக்கி முன்னேறுகின்றனர். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நாடு முழுக்க மதக் கலவரங்களையும் மதப் படுகொலைகளையும் அன்றாட பதட்டமான நிகழ்வுகளாக்கும் வகையிலும் அதை நோக்கிய திட்டமிடுதலுடன் மிகநுணுக்கமாக செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் மக்களை மதவெறியிலிருந்து மத மோதலிருந்து பாதுகாக்கவும் அனைத்து மதங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு இந்த கார்பரேட்டு காவி பாசிச அரசை எதிர்த்து போராட வைக்கவும் பொதுவாக மதத்தை பற்றிய மார்க்ஸிய தத்துவத்தின் அறிவியல் விளக்கத்தையும், (மதத்தின் தோற்றம், அதன் மாற்றம் மற்றும் அதன் அழிவு) மார்க்ஸியவாதிகள் மதத்தின் மீது மேற்கொள்ள வேண்டிய அணுகு முறையையும் தெரிந்து கொள்வதும் மக்களுக்கு புரியபை்பதும் தற்போதைய காலக் கட்டத்தில் மிக அவசியமானது ஆகும். அதன் அடிப்படையில் மதம் குறித்து மார்க்சியம் ஒரு அறிமுகம் என்ற இந்த கட்டுரையை முன்னணிகளின் புரிதலுக்காகவும், விவாதத்திற்காகவும் இலக்கு கொண்டு வருகிறது.

இயற்கையான பழங்குடி மதம் அல்லது மக்களின் மதங்களின் தோற்றம்.

மனிதக்குரங்கின் ஒரு வகையானது இயற்கையை எதிர்த்து போராடிதான் உயிர்வாழ முடியும் என்ற அவசியத்தின் காரணமாக ஏற்பட்ட உழைப்பின் இயக்கப் போக்கில் மனித இனம் சுமார் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. மனிதர்கள் துவக்கத்தில் இயற்கையை எதிர்த்து போராடி தனது வாழ்க்கையை நடத்துகிற காட்டு மிராண்டிகளாகவே வாழ்ந்து வந்தனர். இயற்கையைப் பற்றிய போதுமான புரிதல் இல்லை. வளர்ச்சி பெறாத கருவிகளைக் கொண்டே தனது உயிர்வாழ்வுக்கான உற்பத்தி போராட்டத்தை நடத்தி வந்தனர். இடி, மின்னல், மழை, வெள்ளம், நெருப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் ஏன் நிகழ்கின்ற என்பது பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தான். அவனால் அவற்றை கட்டுபடுத்தவும் முடியவில்லை. மாறாக அவைகள் அவனுக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்திய தோடு பாதுகாப்பற்ற தன்மையையும் துன்பத்தையும் அளித்தன.

அடுத்து அவன் தனது உடலின் உள் இயக்கத்தைப் (மனித உடல் உள் உறுப்புகளை) பற்றிய புரிதல் இல்லாதவனாக இருந்தான். கனவுகளுக்கான காரணம் தெரியாமல் இருந்தான். இறந்தவர்கள் கனவில் வந்தால் அவர்கள் இறவாத ஆவி வடிவத்தில் உயிருடன் இருப்பதாக அல்லது ஆன்மா என்ற நம்பினான். அறியாமையின் காரணமாக இறந்த முன்னோர்களை வழிபட ஆரம்பித்தான். இயற்கை மற்றும் அதன் இயக்கத்தை பற்றிய சரியான புரிதல் இன்மையின் காரணமாக தன்னால் கட்டுப் படுத்த முடியாத இயற்கை பொருள்களையும் சக்திகளையும் மிருகங்களையும் வழிபட ஆரம்பித்தான். இந்த ஆதி கால கடவுளர்கள் பற்றிய கருத்துக்கள், இக்கடவுளர்களை வழிபடும் முறைகள் அனைத்தும் ஆதிகால கருநிலையிலான சமய சித்தாந்தமாக இருந்தது.

கலை,பண்பாடு, தத்துவம் சுதந்திரமான தத்துவச் சிந்தனையில் செழித்தோங்கியிருந்த கிரேக்கத்தையும் உள்ளடக்கிய ரோமானிய பேரரசு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஜெர்மானிய காட்டு மிராண்டிகளால் வீழ்த்தப்பட்டதுடன். கூடவே கலை மற்றும் அறிவார்ந்த படைப்புகள் அவர்களால் அழிக்கப்பட்டன. அறிவுக் களஞ்சியங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. முற்போக்கு அறிஞர்கள் கொல்லப்பட்டனர். அப்போது வாழ்ந்து வந்த அறிவு மீது தாகம் கொண்ட மேதைகள் தத்துவ பற்றாளர்கள் கிரேக்க ரோம தத்துவஞானிகளின் எஞ்சிய அருமையான படைப்புகளை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு மத்திய கிழக்கில் பைசாண்டியன் பேரரசிற்கு சென்று அங்கு அந்நூல்களை பாதுகாத்தனர்.

புதிய ரோமசாம்ராஜ்யத்தின் அதிகாரத்திற்கு வந்த சக்கரவர்த்திகள் நிலபிரபுத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட (வர்க்க படிநிலையை) சுரண்டலை நிலைநாட்டிய பிறகு தங்களது அகண்ட ரோம சாம்ராஜ்யத்தின் மதமாக புதிதாக செயற்கையாக உருவாகி வந்த கிறித்தவ மதத்தை அரசு மதமாக ஆக்கினர். அம்மதத்திற்கு தலைவராக போப் உருவானார் ஐரோப்பா முழுக்க நிலபிரபுத்துவ உற்பத்தி முறையில் நிலபிரபுக்களும் மதவாதிகளும் தங்களது உல்லாசமான சொகுசான வாழ்க்கைக்காக. பண்ணை யடிமைகளை கொடூரமாகச் சுரண்டினர். மத நூல்கள் மற்றும் மதவாதிகள் கூறும் கருத்திற்கு எதிராக யாரும் எதையும் பேசமுடியாத நிலையே இருந்தது. இயற்கை மற்றும் சமூக நிகழ்வுகளைப் பற்றிய எந்த விசயமானாலும் கிறித்துவுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த கிரேக்க தத்துவாதியான அரிஸ்டாட்டில் என்ன கூறியிருக்கிறாரோ அந்த கருத்துக்களிலிருந்தே விளக்கம் கொடுக்கப்பட்டன. அவர் ஒரு தத்துவாதியின் தரத்திற்கு எந்தவிதத்திலும் குறையாத அளவுக்கு இயற்கை, சமூகம் மற்றாம் சிந்தனைப் பற்றி அவர் எழுதியிருந்தார். இருப்பினும் அவர் ஒரு கருத்துமுதல்வாதத்தி்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்த தத்துவஞானி. அவர் சமூகத்தையும் இயற்கையையும் பற்றி கொடுத்த விளக்கம் எல்லாமே பைபிளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு நெருக்கமாக இருந்ததால் கத்தோலிக்க மதத்தலைமையே அரிஸ்டாட்டிலை மட்டும்“ ஒரு தத்துவவாதியாக" அங்கீகரித்து இருந்தது. மேலும் கிறித்ததவ மதத்தலைமையானது கிறித்து பிறப்பதற்கு முன்னூறு வருடங்களுக்கு முன்பிறந்த பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் புனிதர்களாக்கியது. எனவே மத்தியகாலம் முழுவதும் அரிஸ்டாட்டிலின் கருத்தே செல்வாக்கு செலுத்தியது. ஆய்வாளர் என்று குறிப்பிடப் படும் எவரும் அரிஸ்டாட்டிலையும் பைபிளையும் கடந்து செல்ல முடியாது. இயற்கை மற்றும் சமூகத்தை பற்றிய அறிவின் தேக்க நிலையே மறுமலர்ச்சி காலம் துவங்கும் வரை நீடித்தது.

மதத்தின் ஏகதலைவராக போப்பே இருந்தார். போப்பிற்கு கட்டுப்பட்டே ஐரோப்பாவின் மன்னர்கள் ஆட்சி செய்தனர். ஐரோப்பாவின் நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலத்திற்கு போப்பே அதிபதியாக இருந்தார். ஐரோப்பாவின் முதன்மை நிலபிரபுவாகவும் அவர்தான் இருந்தார். நிலபிரபுக்களை எதிர்த்தும் மடாதிபதிகளை எதிர்த்தும் நூற்றக்கணக்கான விவசாயிகளதுபோராட்டம் நடந்தன. அவைகள் எல்லாம் கத்தோலிக்க திருச்சபையால் கொடூரமாக ஒடுக்கபட்டன. போராட்டத்திற்கு தலைமைதாங்கியவர்கள் எல்லாம் கிறித்தவ மதத்திற்கு எதிராக செயல்பட்டார் எனக்கூறி எரிகம்பத்தில் கட்டிவைத்து உயுருடன் கொடூரமாக எரிக்கபபட்டனர். இவ்வாறு எரிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.

ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலமும் மதச்சீர்திருத்தமும்.

ஐரோப்பாவானது 14 ம்நூற்றாண்டு முழுக்க கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. துவக்கத்தில் 1315லிருந்து 1322வரை ஐரோப்பாவில் தொடர்ச்சியான கடும் மழையின் காரணமாக கொடூரமான பஞ்சம் ஏற்பட்டது. ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 50%பேர் மாண்டுபோயினர் கால்நடைகளுக்கு உணவிட முடியாமல் பெரும்பாலான கால்நடைகளும் மடிந்து போயினர். மன்னர்களோ மதவாதிகளோ தங்களது சுகபோகமான வாழ்க்கையிலே மயங்கி கிடந்தனர். விவசாயிகள் மீதான வரிவிதிப்பக்கு குறைவில்லை. அரசை எதிர்த்த மக்களது போராட்டங்களை ஒடுக்குவதிலே நிலபிரபுக்கள் கவனமாயிருந்தனர். மதவாதிகள் பஞ்சத்தை கடவுளது சாபம் என போராடுகிற ஜனங்களுக்கு ஆறுதல் கூறி நிலபிரபுக்களை பாதுகாத்தனர். அத்துயரத்துடன் கூடவே அதே நூற்றாண்டில் கி.பி. 1346லிருந்து கி்பி. 1354வரை “பிளாக் டெத்” (கருப்புச்சாவு) என்ற கொடுமையான ஆட்கொள்ளி தொற்றுநோயும் வடஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பரவி சுமார் 20 கோடி மக்களை பலிகொண்டது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் நிலபிரபுத்துவச் சுரண்டலை ஒடுக்குமுறையை எதிர்த்து விவசாயிகளின் தொடர் போராட்டம் தொடர் நிகழ்வாக நடந்தது. இதற்கு அன்றைக்கு உருவாகி வந்த முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்கியது. உதாரணத்திற்கு 15 ஆம் நூற்றாண்டின் இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் இருபதுகளில் பிரான்சில் கத்தோலிக்க மன்னர், மதவாதிகள் மற்றும் நிலபிரபுக்களுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராடிய ஜோன் ஆப் ஆர்க் என்ற வீரமங்கை மதங்களுக்கு எதிராக செயல்பட்டார் எனக் கூறி போப்பின் முன்னாலேயே கட்டிவைத்து எரித்தனர் . மதச்சட்டங்களை மதக் கொள்கைகளை மீறி விட்டார் அல்லது எதிர்த்து செயல்பட்டார் அல்லது தெய்வக் குற்றம் புரிந்துவிட்டார் எனக் கூறி முண்ணனியில் இருந்து போராடுபவர்களை போப்பின் முன்னால் நிறுத்தி எரிக்கம்பத்தில் கட்டிவைத்து எரிப்பதே அன்றைய ஆளும்வர்க்கதின் நடைமுறையாக இருந்தது.

ஐரோப்பாவில் மத்தியகாலம் முழுவதும் அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தின் மீதான எதிர்ப்பானது மதத்தின் மீதான எதிர்ப்பாகத்தான் பார்க்கப்பட்டது. அந்தளவுக்கு மதவாதிகளின் நலன்களும் நிலபிரபுத்துவ வர்க்கத்தின் நலனும் நிலபிரபுத்துவம் நிலவிய சமூகங்களில் பின்னி பிணைந்திருந்தன. மக்களும் இயற்கையை பற்றியும் சமூகத்தை பற்றியும் அறியாமை மற்றும் கடவுள் பற்று இருந்தபோதிலும் தங்கள் மீது ஒடுக்கு முறையை செலுத்திய மதவாதிகளையும், மடாதிபதிகளையும் நிலபிரபுக்களையும் எதிர்த்து துணிந்து போரடினர்.

1000 ஆண்டுகாலம் நீடித்த நிலபிரபுத்துவ சமூகம் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் தொடர் நெருக்கடிகளுக்குள்ளான தன் காரணமாக தொடர் போராட்டங்களினாலும் அதன் அடித்தளமே கேள்விக்குள்ளானது. அதுவரை முடிந்த முடிவாக கருதப்பட்ட மதக் கருத்துக்களும் பார்வைகளும் தீவிரமான கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன.

14ஆம் ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பைசாண்டியன் பேரரசில் (கிழக்கு ரோமானிய பேரரசு) மற்றும் ஸ்பெயினில் பாதுக்காக்கப்பட்ட பண்டைய கிரேக்க, அரேபிய மற்றும் ரோம அறிவுபூர்வமான இலக்கியங்கள் இத்தாலியில் உள்ள மிலன் மற்றும் புளோரன்ஸ் நகரங்களுக்கு வந்து சேர அங்கு அறிவில் ஒருமறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தை பற்றிய பிரபஞ்சத்தைப் பற்றிய பொருள்முதல்வாத தத்துவ ஞானிகளின் சிந்தனை, நாத்திக கருத்தக்கள் , மனிதாபிமானம், ஜனநாயகம், குடியாட்சி முறை, சிந்திப்பதில் தர்க்கமுறை, சுந்திரமான சிந்தனை வளர்ச்சி, விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் அழகியல் குறித்த சிந்தனை இவையெல்லாம் வளமாக கொண்டிருந்த அந்நூல்கள் லியார்ணடோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ மற்றம் ரபேல் இது போன்ற அற்புதமான கலைஞர்கள்சிற்பிகள் , ஓவியர்கள் கவிஞர்கள் தோன்றினர். அவர்களது அற்புதமான படைப்புகள் ஐரோப்பிய மக்கள் மத்தியில் சென்று இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஒரு புதிய கண்ணோட்டத்தை தோற்றுவித்தன. அதைத் தொடர்ந்து ஜெர்மனியில் சிறு நிலபிரபுக்கள் மற்றும் வணிக முதலாளித்துவ வர்க்கமானது விவசாயிகள் மீதான ரோமன் கத்தோலிக்க போப்பின் நிலபிரத்துவ சுரண்டலையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து மார்டின் லூதர் தலைமையில் விவசாயிகளை திரட்டி மதச் சீர்திருத்தத்தை (புரோட்டஸ்டான்ட்) முன்வைத்து தனது போராட்டத்தை நடத்தியது. நடைமுறையில் இறுதியில் இந்த போராட்டம் தோற்றாலும், ஐரோப்பாவில் 1000 ஆண்டுகால வைதீக கத்தோலிக்க மத ஆதிக்கத்திற்கு முதல் அடி ஜெர்மனியில் கொடுக்கப் பட்டது. 1485முதல் ஏழாம் ஹென்றி காலத்திலிருந்தே முதலாளித்துவ வர்க்கத்துடன் முதலாளித்துவ வர்க்கத்திற்கு தலைமை தாங்கி ஒத்துழைக்கும் நிலபிரபுக்களே மன்னர்களாக தொடர்ந்தனர். எட்டாம் ஹென்றி மன்னர் தனது முறைகேடான திருமண விவகாரத்திற்கு போப் மறுப்பு தெரிவித்ததால் ரோமின் கத்தோலிக்கமத ஆதிக்கத்திலிருந்து இங்கிலாந்தை துண்டித்து கத்தோலிக்க மத நிறுவனங்களை அனைத்தையும் கலைத்து கத்தோலிக்க மதத்திற்கு சொந்தமான நிலங்களை பறிமுதல் செய்து புதிய நிலபிரபுக்களுக்கு ஆட்டுக் கிடைகள் அமைக்க விற்பனை செய்தார் சுயேச்சையான ஆங்கிலேய மதச்சபையை தனது தலைமையில் நிறுவினார்.

இங்கிலாந்தில் 1689 க்கு பிறகு நிலமுடைய பிரபுக்குலத்தோருக்கும் பெரும் முதலாளிகளுக்கும் இடையிலான சமரசத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உடபட்ட முடியரசு நிறுவப்பட்டது. இரண்டாவது முதலாளித்துவ எழுச்சியானது கத்தோலிக்க மத ஆதிக்கத்தை எதிர்த்து கால்வின் என்ற பிரெஞ்சு பாதிரியாரின் மதச் சீர்திருத்தக் கொள்கையை முன்வைத்து விவசாயிகளை திரட்டி முதலாளித்துவ வர்க்கம் போராடியதன் காரணமாக சுவிட்சர்லாந்த் , ஹாலந்து ஜெ்ரமனியின் ஒரு பகுதி, ஸ்காண்டினேவிய நாடுகளில் மற்றும் ஸ்காட்லாந்தில் கத்தோலிக்க சபைகள் ஒழிக்கப்பட்டு புரோட்டஸ்டான்ட் திருச்சபைகள் அமைக்கப்பட்டன.

ஹாலந்திலும் சுவிட்டசர்லாந்திலும் முதலாளித்துவ குடியரசுகளை உருவாயின. பிரிட்டனில் பிரான்சிஸ் பேக்கன், ஹாப்ஸ் மற்றும் லோக் (நாத்திகத்தை வெளிப்படையாகவே அறிவித்தார்) போன்ற நவீன பொருள்முதல்வாத தத்துவஞானிகள் தோன்றி கருத்துமுதல்வாதத்தையும் மதத்தையும் பற்றிய விமர்சனத்தை துவங்கி வைத்தனர். இங்கிலாந்தில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தொழிற்புரட்சிக்கும் இங்கிலாந்தில் தோன்றிய பொருள்முதல்வாதமும் அங்கிருந்து முதலாளித்துவ முறையிலான நிலபிரபுத்துவ ஆட்சியும் அடித்தளம் போட்டன...

பிரான்சில் பொருள்முதல்வாதமும் மதஎதிர்ப்பும் பிரெஞ்சு புரட்சியும்:

பிரட்டிஷ் பொருள்முதல்வாதமானது தனது அடுத்த கட்ட வளர்ச்சியை 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டது. ரெனேதெகார்த்தே, துவக்கிவைத்தார். பொருள்முதல்வாத நிலையிலிருந்து கத்தோலிக்கமதத்தை சாதூரியமாக தாக்கினார். இவரின் தத்துவ செல்வாக்கின் காரணமாக ஸ்பினாசோ (டச்சு) தோன்றி அனைத்து மதங்களையும் கடுமையாக தாக்கினார். அவர் கூறினார்: அன்பு, மகிழ்ச்சி, அமைதி, கட்டுப்பாடு உண்மை ஆகியவற்றை கூறுவதாக கருதப்படும் கிறித்தவமதத்தைச் சார்ந்தவர்கள் தினசரி வாழ்க்கையில் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொண்டவர்களாகவும் சண்டையிட்டுக் கொள்பவர்களாகவும் உள்ளனர். கிறித்தவரும், முஸ்லிமும், யூதரும் உடையாலும் வழிபடும் இடங்களாலும் வேறுபடுகிறார்களே தவிர மற்ற அம்சங்களில்ஒன்றாகவே விளங்குகின்றன. மதஆலயங்கள் பெருமைக்குரிய இடங்களாகவும், பணவரவு உள்ள இடங்களாகவும்,மாறிவிட்டன. ஒவ்வொருவரும் அவர் எவ்வளவு தகுதியற்றவராயினும் மதக்குருமராக வர விரும்புகின்றார். மதத்தை பரப்புவது என்பது ஒரு பிழைப்புவாதமாக மாறிவிட்டது.” என்றார்.

லாமெட்ரி (பிரான்சு) என்ற பொருள்முதல்வாத தத்துவஞானி கடவுள் என்ற கருத்தாக்கத்தை கடுமையாக எதிர்த்தார். உலகத்தீமைகளுக்கு முக்கிய காரணம் மதம் என்றார். மதமற்ற உலகமே மகிழ்ச்சியான உலகமாக இருக்க முடியும் என்றார். அப்போதுதான் மத யுத்தத்திலிருந்து உலகம் விடுபட முடியும் என்றார். 18ஆம்நூற்றாண்டில் பிரான்சானது 14ஆம் லூயி மன்னனின் கொடூரமான எதேச்சாதிகாரத்தில் இருந்தது. போராடியவர்கள் 1000 கணக்கில் கில்லட்டின் என்ற கருவியைக் கொண்டு தலை துண்டாடப்பட்டனர். இருப்பினும் டேனிஸ் தீதரோ, மாண்டஸ்கியூ,வால்டர், ஹெல்விசியஸ் ஹோல்பாக் (கலைகளஞ்சியத்தார்) போன்ற போர்குணமிக்க முதலாளித்துவ பொருள்முதல்வாதிகள் முரணற்ற வகையில் நிலபிரபுத்துவ ஒழிப்பை மற்றும் மத எதிர்ப்பையும் நாத்திகத்தையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சித்தாந்த்ததை அதாவது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற முழக்கங்களை முன்வைத்து பிரெஞ்சு மக்களை திரட்டி 1789ல் பாஸ்டில் சிறைச்சாலையை தகர்த்து பிரெஞ்சு புரட்சியை துவக்கி விரைவில் நிறைவேற்றினர். 1000க்கணக்கான பாதிரியார்களும் மடாதிபதிகளும், மன்னரும் நிலபிரபுக்களும் அவர்கள் உருவாக்கிய கில்லட்டினாலேயே தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

மடாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மடங்களுக்கு நிலபிரபுக்களுக்கு சொந்தமான நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. . மதம் தனிநபரின் சொந்த விவகாரமாக பிரகடனம் செய்யப்பட்டது. புரட்சிக்கு தலைமைதாங்கிய ரோபெஸ்பியர் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றாக ”உன்னத புருஷன்” என்ற மதத்தை உருவாக்க முயற்சி எடுத்து தோற்றார். பின்னர் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நெப்போலியனால் முதலாளித்துவ வர்க்க நலனையொட்டி கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் வரலாறே வெறுக்கும் படியாக பிரெஞ்சு குடியரசுக்கு மன்னராக முடிசூடிக்கொண்டார். புரட்சிகரமான பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமே பிற்போக்காக மாறி பிரிட்டனை முன்மாதிரியாகக் கொண்டு போராடும் மக்களை ஒடுக்க அவர்களை மதஉணர்வில் வைத்திருக்க முதலாளித்து அரசியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு மன்னராட்சி முறையை கொண்டு வந்தது. இது 1870 வரை நீடித்தது.

1848ல் கம்யூனிஸ்டு அறிக்கையில் மதம் குறித்து மார்க்ஸ் எங்கெல்ஸ்: கம்யூனிசத்தின் எதிராளிகள் கம்யூனிசத்திற்கு எதிராக குற்றச்சாட்டை முன் வைக்கும்போது “ வரலாற்று வளர்ச்சியின் போது சமயம், ஒழுக்க நெறி, தத்துவவியல், சட்ட நெறி, இவை சம்பந்தமான கருத்துக்கள் உருத்திரிந்தது மெய்தான். ஆனால் சமயமும் ஒழுக்க நெறியும் தத்துவவியலும், அரசியல் விஞ்ஞானமு் சட்டமும் இந்த மாற்றங்களால் அழிந்துபடாது எப்போதுமே சமாளித்து வந்திருக்கின்றன” என்றும் “சுதந்திரம் நீதி என்பன போன்ற சாசுவத உண்மைகள் இருக்கின்றன. இவை சமுதாயத்தின் எல்லா கட்டங்களுக்கும் பொதுவானவை. கம்யூனிசமானது சாசுவத உண்மைகளை இல்லாதொழியச் செய்கிறது. மதம், ஒழுக்க நெறி ஆகிய அனைத்தையம் புதிய அடிப்படையில் அமைப்பதற்கு பதிலாக இவற்றை ஒழித்து கட்டிவிடுகிறது. ஆகவே கம்யூனிசம் கடந்த கால வரலாற்று அனுபவம் அனைத்திற்கும் முரணாய் செயல்படுகிறது.”

என்றனர் . முதலாளித்துவ வாதிகள் முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து கூறுகையில் மார்க்சும் எங்கெல்சும் ”தற்போதுள்ள உங்களுடைய பொருளுற்பத்தி முறையிலிருந்தும் சொத்துடைமை வடிவிலிருந்தும் உதித்தெழும் சமூக வடிவங்களை பொருளுற்பத்தியின் முன்னேற்றத்தின்போது தோன்றி மறைந்து போகும் உறவுகளாகிய இவற்றை என்றும் சாசுவத இயற்கை விதிகளாகவும் பகுத்தறிவு விதிகளாகவும் மாற்றும்படி உங்களது தவறான தன்னல கருத்தோட்டம் உங்களை தூண்டுகிறது இந்த தவறான கருத்தோட்டம் உங்களுக்கு முன்பிருந்த ஆளும் வரக்கங்கள் யாவற்றுக்குமே இருந்ததுதான். பண்டைக்காலத்து சொத்துடைமையை பொறுத்தவரை நீங்கள் தெட்டத் தெளிவாக காண்பதை, பிரபுத்துவ சொத்துடமை சம்பந்தமாய் நீங்கள் ஒத்துக் கொள்வதை உங்களுடைய முதலாளித்துவ சொத்துடமை குறித்து உங்களால் ஒத்துக் கொள்ள முடிவதே இல்லை. நீங்கள் தடுக்கப் பட்டுவிடுகிறீர்கள். என்றும் . புராதான பொதுவுடமை சமூகம் தவிர கடந்தகால சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்க பகைமைகளின் இயக்கமாய் இருந்திருக்கிறது. இந்த பகைமைகள் வெவ்வேறு சகாப்தங்களில் வெவ்வேறு வடிவங்களை ஏற்று வந்திருக்கிறது. ஆனால் இந்த வர்க்கப் பகைமைகள் ஏற்றவடிவம் எதுவானாலும் சமுதாயத்தின் ஒருபகுதி மற்றொரு பகுதியால் சுரண்டப்பட்டு வந்தது என்பதும் கடந்த சகாப்தங்கள் யாவற்றுக்கும் உண்மை. எனவே கடந்த சகாப்தங்களது சமூக உணர்வு எவ்வளவுதான் பல்வேறுபட்டதாகவும் பலவிதமானதாக இருந்திருப்பினும் வர்க்க பகைமைகள் அறவே அழிந்தாலொழிய முற்றிலும் கரைந்துவிட முடியாத குறிப்பிட்ட சில பொதுவடிவங்கள் அல்லது பொதுவான கருத்துக்களின் குறிப்பிட்ட சில பொதுவடிவங்கள் அல்லது பொதுவான கருத்துக்களின் வட்டத்தினுள்ளேதான் அந்த சமூக உணர்வு இயங்கி வந்திருக்கிறது. இதில் வியப்பு ஏதும் இல்லை. உதாரணமாக மதத்ததை பொறுத்தவரை, பண்டைய உலகு (அடிமைச்சமூகம்)அதன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பண்டைய சமயங்களை கிறித்தவ சமயம் வெற்றிக் கொண்டது. பிறகு 18ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சமயக் கருத்துக்கள் அறிவொளி இயக்க கருத்துக்களுக்கு அடிபணிந்து அரங்கை விட்டகன்ற போது அக்காலத்திய புரட்சி வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் தனது மரண போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.எனவும் சமயத்துறை சுதந்திரம் மனசாட்சி சுதந்திரம் ஆகிய கருத்துக்கள் கட்டற்ற (முதலாளித்துவ )சுதந்திர போட்டியின் ஆதிக்கத்தினது அறிவுலக வெளிப்பாடுகளே என்றும் அதாவது முதலாளித்துவ அரசியல் சுதந்திரம் பெற்ற அமைப்பில் மதப்பிரச்சினை என்பது தனிநபர்சார்ந்தது அதாவது அரசு சாராதது, அது மனிதனது மனசாட்சி பிரச்சினை என்றும் அதே சமயத்தில் தனிச்சொத்தை பாதுகாக்கும் பாரம்பரிய கருத்தமைப்புகளிலிருந்து (மதம் உட்பட) மக்களே துண்டித்து கொள்ளும் நிலை ஏற்படும் அவைகள் படிப்படியாக அழிந்து போகும் என்பதை கீழ்க்கண்டவாறும் குறிப்பிடுகிறார். ” கம்யூனிச புரட்சி பாரம்பரிய சொத்துடமை (தனிச்சொத்து) உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாய துண்டித்து கொண்டு விடும் புரட்சியாகும் . ஆகவே இந்த புரட்சியின் வளர்ச்சியின் போது (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் போது) பாரம்பரிய கருத்துக்களிடமிருந்து (தனிச்சொத்தை பாதுகாக்கும்) மக்கள் மிகவும் தீவிரமாய் துண்டித்து கொள்ளும் படி நேர்வதில் வியப்பிற்கு இடமில்லை.”

19ஆம் நூற்றாண்டுபிற்பாதியில் ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டு இயக்கங்களின் நிலை:

19ஆம் நூற்றாண்டின் முதல் பாதிவரை தொழிற்துறையிலும் அரசியல் துறையிலும் வளர்ச்சி பெற்ற பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற ஒருசில நாடுகள்தான் அரசியல் சுதந்திரம் அடையப்பெற்ற நாடுகளாய் இருந்தன. ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நிறைவு பெறாத நாடுகளாகவே இருந்தன. 1848லிருந்து 1851 வரை ஐரோப்பாவில் ஜனநாயத்திற்காகவும் அரசியல் சுதந்திரத்திற்காகவும் செங்கொடி ஏந்தி தொழிலாளி வர்க்கம் நடத்திய ஜனநாயகத்திற்கான போராட்டங்கள்அனைத்தும் முதலாளித்துவ வர்க்கம் இழைத்த துரோகம் காரணமாக ஐரோப்பாவின் எதேச்சாதிகார பிற்போக்கு அரசாங்கங்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டன மற்றும் தோற்டிக்கப்பட்டன. கட்சி கட்டுவதற்கான அடிப்படை திட்டமும் அதைகட்டுவதற்கான 1871 பாரிஸ்கம்யூனுக்குப் பிறகு அடிப்படை வழிமுறைகளும் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு நாட்டிலும் மார்கஸியத்திற்கு அந்நியமான குட்டி முதலாளிய அராஜக மற்றும் வலதுசாரி சித்தாந்தப் போக்குகளை் இவற்றை முற்றிலும் முறியடித்து மார்க்ஸியத்தின்அடிப்படையில் ஒரு விஞ்ஞான பூர்வமான கட்சி கட்டப்படவே இல்லை. மார்க்ஸியவாதிகளும் மார்க்ஸியத்திற்கு விரோதமானவர்களும் கலந்து கொண்ட கலவையாகவே கட்சி இருந்தது. அது அக்கட்சியின் திட்டம் மற்றும் போர்தந்திரத்திலும் பிரதிபலித்தது. விஞ்ஞான சோசலிசத்திற்குஅந்நியமான அனைத்து போக்குகளை முறியடிப்பது பற்றியும் அந்தந்த நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் தொடர்ந்து தமது வாழ்நாள் முழுவதும் வழிகாட்டினர். இருப்பினும் கட்டப்பட்ட கம்யூனிஸ்டு கட்சிகளில் எல்லாம் திட்டம் போர்தந்திரம், செயல்தந்திரம் இவற்றில் ஒரு கதம்பவாதப் போக்கே நீடித்து வந்தது. ஆதலால் ஒரு முரணற்றமுண்ணனியாக இருந்து கம்யூனிஸ்டு கட்சியானது மக்களை புரட்சிக்கு வழிநடத்த முடியவில்லை..

மேலும் 17ஆம் ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இங்கிலாந்தின் அரசியலில் பழமைவாதப் போக்கை அதாவது நிலபிரபுத்துவ வர்க்கத்துடன் ஒத்துழைப்பதை மற்றும் மதவாதப்போக்கை உயர்த்தி பிடிப்பதை ஆங்கிலேய முதலாளித்துவ வர்க்கம் நிரந்தரமாக ஆதரித்தது அது மட்டுமல்லாமல் தனது காலனியான வடஅமெரிக்காவிலும் சமய புத்தெழுச்சியை (revivalism) என்ற இயக்கத்தை உருவாக்கி கிறித்தவ மதத்தை வேகமாக பரப்பியது. 18ஆம்நூற்றாண்டின் துவக்கத்திலேயே சொந்த நாட்டில் பெரும்பாலான உழைக்கும் மக்களை அவர்களது எஜமானர்களுக்கு கீழ்படிந்து நடக்கச் செய்ய இந்த மதபோதனை அவர்களுக்கு மிகுதியான வாய்ப்புகளை அளித்ததை அவர் விரைவிலேயே கண்டு கொண்டார் சமயத்தின் செல்வாக்கு இதற்குரிய சாதனங்களில் ஒன்றாக பயன்பட்டது. மதஉணர்ச்சிகள் மக்களுக்கு குறையுமாயின் அவர்களது போராடும் மனோநிலையிலிருந்து அவர்களை திசைதிருப்ப முடியாது என்பதை ஐரோப்பாவில் நடந்த போராட்டங்களிலும் பாரிஸ் கம்யூனில் தொழிலாளி வர்க்கம் இரண்டு மாதம் அதிகாரத்தை கைப்பற்றி வைத்திருந்தன் மூலமும் உணர்ந்து கொண்ட இங்கிலாந்து முதலாளி வர்க்கம் மக்களை மேலும் மத உணர்ச்சிகளில் இருத்தி வைப்பதற்காக புரோட்டஸ்டான்ட் மதத்தை சேர்ந்த பிரச்சாரகர்களான சாங்கி மற்றும் மூடி போன்றவர்களை அமெரிக்காவிலிருந்து வரவழைத்து இங்கிலாந்து மக்கள் மத்தியில் மதப்பிரச்சாரம் செய்தது. 1875ல் இரட்சண்ய சேணை என்ற மதப் பிரச்சார அமைப்பை உருவாக்கி ஐரோப்பா மற்றும் தனது காலனிய நாடுகளில் மதப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. உதாரணமாக காலனிய நாட்டில் கிறித்தவ மதத்தை மட்டுமல்ல அந்த காலனிய நாட்டில் உள்ள மதத்தை பிரச்சாரம் செய்யவும் தனது சொந்த நாட்டிலிருந்து பிரச்சாரகர்களை தயார் செய்துஅனுப்பியது.1875ல்அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தியோசோபிக்கல் சொஸைட்டி (பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த கர்னல் வோல்காட் என்பவரையும் மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த அன்னி பெசன்ட் என்பவரையும் இந்துமதப் பிரச்சாரம் செய்யவும் அவர்களைக் கொண்டு இலங்கையில் புத்தமதவெறி அமைப்புகளை கட்டவுமான வேலையை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செய்தது. மற்றும் அதே சமயத்தில் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமானது பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தை பின்பற்றி மதத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் மதவிவகாரங்களை அரசோடு உறவுபடுத்தவும் தொடங்கியது. மத்திய காலத்தில் நிலபிரபுத்துவ வர்க்கமும் கத்தோலிக்கமதவாதிகளும் செய்த வேலையை இப்போது முதலாளித்துவ வர்க்கமும் புரோட்டஸ்டானட் மதவாதிகளும் செய்யத்துவங்கினர்.

எனவேதான் 1891ல் ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியானது தனது எர்பர்ட் திட்டத்தில் மதப்பிரச்சினையை ஒரு அம்சமாக முன்வைத்தது. அத்திட்டத்தில் உள்ள அடிப்படை குறைபாடுகளை எங்கெல்ஸ் சுட்டிகாட்டும் போது ஜனநாயக குடியரசுக்காக போராடுகின்ற பணியை முன்வைக்கவில்லை என்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு அறைகூவல் விடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். மதப்பிரச்சினையை சுட்டி காட்டி விமர்சிக்கும் போது ”மதம் என்பது தனிநபர் விசயமாக கருதப்படவேண்டும் ” என்பதை அரசிடமிருந்து தேவாலயங்கள் முற்றிலும் பிரிக்கப்படவேண்டும், அரசைப் பொறுத்தவரை மதமானது தனிப்பட்ட பிரச்சினையே என்றும் கட்சியை பொறுத்தவரை மதம் தனிப்பட்ட விவகாரம் இல்லை என்றும் மதரீதியான நோக்கங்களுக்கு பொதுப்பணத்தை செலவு செய்யகூடாது”என்றுஇருந்ததை மதரீதியான நிறுவனங்களுக்கு எந்தவிதமான ஆதரவும் அரசிடமிருந்து கிடைக்கக் கூடாது

என்றும் “மதரீதியான நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக கருதப்படவேண்டும்” என்று இருந்ததை “மதரீதியான நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக நடத்தப்படவேண்டும்” என்றும் விமர்சித்தார் மேலும் கோத்தா (1875) வேலைத்திட்டத்தை விட எர்பர்ட் திட்டம் மிகச்சிறப்பானது என்றும் மதிப்பீடு செய்தார். ஆனால் அவரது விமர்சனம் கட்சிக்கு தெரியப்படுத்தவே இல்லை. 1901ல் தான் அந்த விமர்சனம் வெளிவந்தது.

திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அம்சமாக மதம் மற்றும் மதம் பற்றிய கம்யூனிஸ்டு கட்சியின் அணுகுமுறை.ரஷ்யசமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கான ஒரு அறிவியல் பூர்வமான திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில் அதை நிறைவேற்ற ஒரு உறுதியான கட்டுப்பாடுடைய போர்க்குணமுள்ள கம்யூனிஸ்டு கட்சியை முதன்முதலாக கட்டியவர் லெனின்தான்.அதனால் தான் வெற்றிகரமாக பாட்டாளிவரக்கப் பரட்சியை நடத்தி ஒருபாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ முடிந்தது. ஒரு புரட்சிகரமான கொள்கைதிட்டம் (THEORY) இல்லையேல் ஒரு புரட்சிகரமான இயக்கம் இல்லை” எனக்கூறியும், புரட்சிகரமான இயக்கம் மட்டுமே எந்த பிரச்சினையானாலும் வெகுஜனங்களுக்கு தலைமை தாங்கமுடியும் எனக்கூறி திட்டத்தை பற்றி கூறுகையில் “திட்டமானது நமது அடிப்படை பார்வைநிலைகளை வரையறுக்கவேண்டும். நமது உடனடி அரசியல் பணியை தெளிவாக நிறுவவேண்டும். கிளர்ச்சி நடவடிக்கையின் செயல்பரப்பை காட்டக்கூடிய உடனடியான கோரிக்ககைகளை சுட்டிக்காட்டவேண்டும் ஒரு திட்டம் என்பது உத்தரவோ போதனையோ அல்ல. ஒரு திட்டமானது முழுஇயக்கத்தையும் தழுவி நிற்கவேண்டும். நடைமுறையில் இயக்கத்தின் முதலாவது அம்சம் பிறகு அடுத்த அம்சம் என முன்னுக்கு கொண்டு வரப்பட வேண்டும். லெனினுக்கு ரஷ்யசமூகத்திலுள்ள அனைத்துவிதமான அரசியல் பொருளாதார சமூக பிரச்சினைகளில் தெளிவான மார்க்ஸிய பார்வை இருந்துது போலவே மதத்தை பற்றிய தெளிவான மார்க்ஸிய பார்வை இருந்தது.ரஷ்யாவில் 1840லிருந்து ஜாரையும் நிலபிரபுக்களையும் எதிர்த்த விவசாயிகளின் போராட்டமும் .1880க்கு பிறகு ஜாரையும் முதலாளிகளையும் எதிர்த்த தொழிலார் வர்க்கத்தின் போராட்டமும் தொடர்ச்சியாக நடந்து வந்தது. தொடரும்......

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்