கவர்ச்சி அரசியல் மார்க்சியம் அல்ல -2

இன்று மதவாதிகளும் சாதிவாதிகளும் முந்தைய சமூகத்தில் உயர்வாக வாழ்ந்ததாக மக்களை மயக்குகின்றனர்.கற்கால சனாதன மத அடிப்படைவாதிகள் பேசும் காலம் இன்று பொருந்தா நிலையில் உள்ளதை மறைத்து கற்பனையான கதைகளை முன் வைத்து இன்றைய சுரண்டலை மறைக்க மத மயக்கத்திலும் அதன் தொடர்ச்சியாக பழம் பெருமையில் ஆழ்த்தும் அதே வேளையில் தனிநபர்களை முதன்மைபடுத்தி அவர்களை அவதாரமாக காப்பாளர்களாக மக்கள் முன் நிறுத்தி உழைக்கும் மக்களை வஞ்சிக்கின்றனர்.

காலனிய ஆட்சிக்கு முன்பிருந்த இந்தியக் கிராம சமுதாயம்  பல்வெரு வகையில் இருந்ததை ஆங்கிலேயர் தங்களின் ஆட்சி நலனுக்காக கொள்ளையடிக்க சுரண்ட ஏதுவாக ஒற்றை துருவ ஆட்சியை உருவாக்கினர். அதற்கு முந்தைய சமூகத்தில் உயிர் வாழ உத்திரவாதம் அளித்த பண்ணை அடிமைகளாகவோ, கொத்தடிமைகளாகவோ, கிராமக் கைத்தொழிலாளர்களாகவோ ஒரு தொழிலும், வேலையும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டே உயிர் வாழ்வதற்கான அடிப்படையிருந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இதில் சில சலனம் ஏற்பட்டது, அவை அதுவரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் கூட வாழும் நிலைக்கு உயர்த்தியது என்றால் இன்னொருபுறம் உரிமை அற்ற மிருகங்களாக வாழும் அவலமும் அதன் பிறகு வந்த காங்கிரசு ஆட்சியும் நகரத்துக் குப்பங்களிலும், கிராமங்களிலும் கோடிக்கணக்கான நிரந்தர வேலையோ, வருமானமோ இல்லாத மக்களைக் குவித்திருக்கிறது. கிராம சமுதாயத்தில் முன்பு கிடைத்த குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.

வருடத்தில் பல நாட்கள் வேலைவாய்ப்புகளின்றி பஞ்சத்திலும், பட்டினியிலும் கிடந்து தவிக்கும் கூலி, ஏழை விவசாயிகளோடு, ஓட்டாண்டிகளாகும் நடுத்தர விவசாயிகளும் சேர்கிறார்கள். அரைகுறையாகக் கல்வி பயின்ற இளைஞர்கள், படித்தும் வேலை வாய்ப்பின்றி, சீரழிந்த கலாச்சாரப் பாதிப்புக்குள்ளான இளைஞர்கள் மூலமாக பொறுக்கி அரசியல் இந்தக் கிராமப்புறப் பாமர மக்களைச் சென்றடைகிறது. ஏற்கெனவே நகரத்து குடிசைப்பகுதிகளில் வழியும் உதிரித் தொழிலாளர்களுடன், கிராமப்புறங்களில் இருந்து விரட்டப்படும் விவசாய ஏழை மக்கள் நகரத்து வீதிகளில் குடியேறுகின்றனர்.

பல்வேறு சிறு தொழில்களையும், அன்றாடக் கூலி வேலைகளையும் நம்பி வாழும் இவர்கள் நகர்ப்புறச் சீரழிவுகளுக்கு எளிதில் பலியாகிறார்கள். அது மட்டுமின்றி, கள்ளச் சாராயம், சூதாட்டம், விபச்சாரம் போன்ற இச் சமூக கொடையானச் சீரழிவுகள் கணிசமான உதிரித் தொழிலாளர்களைக் காவு கொள்கின்றன. நிரந்தர வேலையும், வருமானமும் இல்லாத இவர்களைப் பொறுக்கி அரசியலும் அதன் கவர்ச்சிவாதமும் (பாப்புலிசம்) எளிதில் ஈர்த்துக் கொள்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுக்குத் தலைமையளித்து அணிதிரட்டிக் கொள்கிறார்கள். (வினவுதள கட்டுரையின் அடிப்படையில் சில திருத்தங்களுடன்)

கவர்ச்சி அரசியல் என்ன?

 கும்பலை ஈர்ப்பவர்கள் (Crowd Pullers) கவர்ச்சி நிலை தலைவர்கள் (Charismatic Leaders)தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள். இவை இன்றைய கம்யூனிஸ்டுகள் கடைபிடிப்பதுதான் அவலம்.

"பொறுக்கி அரசியல்'' என்று சொல்லும்போது, இன்றைய அரசியலின் இழிநிலை கண்டு வெறுமனே வெறுப்பு விரக்தி, பொறாமை ஆத்திரத்திலே சொல்லவில்லை. முதலாளித்துவ அரசியலில் ஒரு வகை, ஒரு வடிவம் என்கிற வரையறுப்போடுதான் சொல்கிறோம். பொறுக்கி அரசியலுக்கு என்று ஒரு சமூக அடிப்படை, ஒரு சித்தாந்த அடிப்படை, ஒரு அமைப்பு அடிப்படை உண்டு. இன்று தமிழக அரசியலில் முழுமையடைந்த வடிவில் பொறுக்கி அரசியல் பிரகாசிக்கிறது. பொறுக்கி அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு; என்றாலும் அதை வளர்த்து முழுமையாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உரித்ததாகும். செத்த பின்னும் எம்.ஜி.ஆரின் புகழ் பரப்புவது பொறுக்கி அரசியல்தான். அதன் வழி வந்த விஜய்காந்த் விஜய் தங்களின் சினிமா பின்புலத்தில் தங்களுக்கான இடம் கோருகின்றனர். ஆனால் அவர்களின் நிலைப்பாடு கொள்கை கோட்பாடுகள் என்ன???

இன்றைய உலகமய தனியார்மய கோரமுகத்தில் உழைக்கும் மக்கள் அடுத்த வேளை வாழ்வதற்கே கேள்விகுறியாக உள்ளது. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகளை கூட வழங்க மறுக்கும் அரசு, தங்களின் வாழ்க்கை பிரச்சினைக்கு போராட கூட முடியாத நிலை. இதில் இயலா நிலையில் பசி பட்டினியில் வாழ்வோர் இந்த சினிமா கவர்சியில் மூழ்கடிப்பதும் மதவாத சாதிவாத பிரபலங்கள் பின் அணிதிரட்டப்படுவதும் தொடர் நிகழ்வாய் உள்ளன.

இதில் அடையாள அரசியலின் உச்சத்தில் சிலர் உயர்ந்துள்ளது போலவே சில காப்பளர்களாய் அறிவித்துக் கொண்டு உழைக்கும் மக்களை ஏமாற்றுவோர் அடிக்கடி மாறிக் கொண்டு முன்னுக்கு வருகின்றனர். திராவிட அரசியலின் தோல்வி அடுத்தவர்கள் களம்காண இடம் கொடுத்தாலும் அவர்கள் மக்களை நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு வளரவில்லை எனலாம்.

கடந்த காலத்தை சற்று புரிந்துக் கொள்வோம்.  

பொறுக்கி அரசியலின் சித்தாந்த அடிப்படை: கவர்ச்சிவாதம் (பாப்புலிசம் populism)

 பிற்போக்கு சித்தாந்தங்களை வெளிப்படையாக வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகின்றன. ஆனால், ஆட்சியைப் பிடிப்பதற்கு அவை ஒரு உத்தியைக் கையாளுகின்றன. தமது பிற்போக்கு சித்தாந்தங்களை மூடிமறைத்துக் கொண்டு பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், அவைகளுக்கேற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றன. தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்தப் பாமர மக்கள் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி, தம்மை அறியாமலேயே பொறுக்கி அரசியலை ஆதரிக்கிறார்கள்.

 

கவர்ச்சிவாதம் (பாபுலிசம்) என்று சொல்லும்போது எம்.ஜி.ஆர். உருவாக்கியதைப் போன்ற சினிமா கவர்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அது பொறுக்கி அரசியலின் கலாச்சார வடிவம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய "அண்ணாயிசம்'' பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதத்தின் முக்கியமான சித்தாந்த அங்கமாகும். "முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம்'' மூன்றும் இணைந்ததுதான் "அண்ணாயிசம்' என்று எம்.ஜி.ஆர். அதற்கு விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கம் எதுவானாலும் அவரது ஆட்சியின் நடைமுறையிலிருந்து "அண்ணா" யிசத்துக்கான பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

 

பன்னாட்டு ஏகாதிபத்திய இன்னாட்டு பெரும் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்ச நலன்களைத் தொடர்ந்து கட்டிக் காத்து வளர்ப்பது. அதேசமயம் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிகமிக மோசமான கருத்துக்கேற்ப கவர்ச்சிவாத (பாப்புலிச) நடவடிக்கைகளை மேற்கொள்வது இதுதான் எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த அண்ணாயிசம். தேசியமா, திராவிடமா என்று எம்.ஜி.ஆரின் அரசியல் நிலைப்பாடுகளைக்கூட பாகுப்படுத்திப் பார்க்க முடியாமல் கவர்ச்சிவாதத்தால் மக்களை அடித்து வீழ்த்துவது; மொழி, இன ஒடுக்குமுறை, பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சி இருந்தாலும் சத்துணவு, பற்பொடி, செருப்பு, வேட்டி, சேலை, தண்ணீர் குடம், வறட்சி, வெள்ளம், தீநிவாரண அன்பளிப்புகள் ஆகிய இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக ஒரு பிரமையை உருவாக்குவது; தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஆகிய எந்தச் சமூகப் பிரிவினர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும் ஈவிரக்கமின்றி நசுக்கும்போதே, ஆட்சியாளர்களின் வள்ளல் தன்மையை பறைசாற்றும் "அன்பளிப்பு''களால் வாயடைக்கச் செய்வது. சுருக்கமாகச் சொன்னால், அரசாங்க "இலவச அன்பளிப்பு''த் திட்டங்களின் கீழ் கணிசமான அளவு மக்களை வைத்துக் கொள்வதன் மூலம் பாமரத்தனமான சோசலிசத் தோற்றத்தை ஏற்படுத்துவது இதுதான் எம்.ஜி.ஆரின் "அண்ணாயிசம் கவர்ச்சிவாதம்".

 

பொறுக்கி அரசியலின் அமைப்பு அடிப்படை: பிழைப்புவாத அரசியல் அமைப்புகள்

காந்தியம், இந்து ராஷ்டிரம், அம்பேத்காரியம், பெரியாரியம், இனவாதம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகள், தமது கொள்கைகளைக் கொண்டு அணிகளை அமைப்புகளைக் கட்டுகின்றன. ஆனால், பிழைப்புவாதத்தையே அரசியல் கொள்கையாக்கிக் கொண்டுள்ள அரசியல் அமைப்புகள் சில தோன்றியுள்ளன. அவை தமது தலைவர்கள் அணிகளின் பிழைப்புவாதத்துக்கேற்ற முறையில் அரசியலையும் போராட்டங்களையும் வகுத்துக் கொண்டு இயங்குகின்றன. கல்வி, மதம், விவசாயம், வியாபாரம், ஆலை உற்பத்தி, மருத்துவம், காண்டிராக்ட் ஒப்பந்தம், சட்டத்துறை போன்று, சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயங்கும் அரசியல் அமைப்புகளையே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம். சட்டவாதிகளாய் மக்களை ஏய்க்க பல முற்போக்கு வேடங்கள் அவ்வளுவே.

தலைவர்கள் மட்டுமல்ல; நகரவட்டங்கள் கிராமங்களுக்குப் பொறுப்பாக உள்ள கட்சி அணிகள் வரை மேலிருந்து கீழ்மட்டம்வரை பிழைப்புவாதத்தையே அரசியலாகக் கொண்ட அமைப்புகள். எந்தக் கட்சியில், அதிலும் எந்த கோஷ்டியில் இருப்பது வருமானத்துக்குரிய ஆதாயமாக இருக்கும் என்பதைப் பரிசீலித்து, விவாதித்து இவர்கள் தெரிவு செய்கிறார்கள். மேல்மட்டத் தலைவர்கள் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே உள்ள பிழைப்புவாதிகள் அரசியல் தரகு வேலையை ஒரு தொழிலாக, அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்கிறார்கள். தேர்தல் காலங்களில் பிரச்சார வேலைகள், ஆள்பிடிக்கும் வேலைகள், ஓட்டுக்களுக்கான பேரங்கள் ஆகியவற்றில் கட்சி நிதியையே சுருட்டிக் கொள்கிறார்கள். மாற்று காலங்களில்  இலவசத் திட்டங்கள், (இன்று பல உள்ளன) வெள்ளம் வறட்சி தீ விபத்து போன்ற நிவாரணத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு முன்னின்று, அதிகாரிகளுடன் சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். இப்போது இந்த வேலைகள் செய்வதற்காக இவ்வளவு தொகை தமக்குக் கமிஷனாகத் தரவேண்டும் என்று உரிமையோடு அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அரசு கடன் வழங்கும் விழாக்கள், போலீசு நிலைய வழக்குகள், வேலை வாய்ப்புகள் சிபாரிசுகள் போன்றவற்றில் அரசாங்கத்தின் "அங்கீகரிக்கப்பட்ட'' தரகர்களாக இருக்கிறார்கள்.

 கட்சித் தலைவர்களின் எடுபிடிகளாகவும், அரசியல் தூதர்களாகவும் இருந்த பிழைப்புவாதிகள் கிராமப் பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகள், மக்கள் கமிட்டிகளில் நியமனம் பெறுவது, பிறகு பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகளுக்குத் தேர்தல்களில் நிற்பது என்று முன்னேறி, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் மட்டுமல்ல, மந்திரிகள் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள். கூட்டுறவுகள், உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களைத் தள்ளி வைத்து இந்தப் பிழைப்புவாதிகளுக்கான மடங்களாக்கிய எம்.ஜி.ஆர். ஆட்சியில், கோவில்கள், வாரியங்கள், பள்ளிகல்லூரிகள் போன்ற சகல மட்டங்களிலும் கட்சி பிழைப்புவாதிகளுக்கு "பொறுப்புகள்'' பகிர்ந்தளிக்கப்பட்டன. கட்சிக்காகப் பாடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு "ஏற்பாடு'' செய்து தருவதைத் தமது பொறுப்பாகவும் அவர்களது உரிமையாகவும் பகிரங்கமாகவே ஒழுங்குபடுத்தினார், எம்.ஜி.ஆர்.

இந்தப்பணியை நீங்கள் பிஜேபியின் வளர்ச்சியில் அவர்களின் அணியின் வளர்ச்சிக்கு என் "கும்பல்வன்முறைகலாச்சாரம்" கும்பல் கொள்ளைகளின் பின்னணியாக கட்சியின் ஆசிர்வாதம் இல்லாமல் நடைபெறவில்லை எனலாம்.

 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்