உழைக்கும் மக்கள் அவர்களின் எந்த பிரசினைக்கு போராடினாலும், போலிஸின் குண்டாந்தடிதான் முதலில் சட்டம் ஒருங்கு என்ற பெயரில் வருகிறது, ஆனால் சம்பந்தபட்ட துறைசார்ந்தவர்கள் வருவதில்லை; தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வருவதில்லை! ஆனால் தங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் ஓடோடி வருகின்றனர் ஏன்? அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் அதிகாரம் இவர்களுக்கு. அதேபோல் உத்தரவு போடும் போலிஸ் அதிகாரிகளும்; நீதி வழங்கும் நீதிபதிகளும்; சிறை கொட்டடியின் அதிகாரிகளும் மக்களினால் தேர்ந்தெடுக்கபட்டவர்களா!?உழைக்கும் மக்களை தண்டிக்கும் உரிமை எப்படி அவர்களுக்கு? உழைக்கும் மக்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இவர்கள் மக்களின் அன்றாட வாழ்வை ஆட்டிப்படைப்பதாக உள்ளது. இந்த அரசு அதிகாரம் படைதவர்கள்தான் இந்த தனிஉடமையை பாதுகாக்கும் பணமுதலைகளின் காவல் தெய்வங்கள். உழைக்கும் வர்க்கத்தின் தேவை அறியாத சுரண்டும் முதலாளிகளின் தேவை அறிந்து செயல்புரிபவர்களாகவும் உள்ளனர். இவர்கள் உழைக்கும் மக்களின் விரோதிகளே. சொத்துடைய வர்க்கத்தின் காவலர்களே. ஆக அரசும் அரசாங்கமும் வர்க்க அடிப்படையில் ஆளும் வர்க்கமாய் உள்ளவற்றின் நலன் சார்ந்தவையே!
இந்த இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்
இந்த இதழை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே
2).சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி பாகம் 10
3).ஐ.நா மன்றம் உருவாக்கத்தில் ஸ்டாலினுடைய செயல்தந்திரம், வரலாற்றுப்பொருள்முதல்வாத கண்ணோட்ட வகைப்பட்டதே.-தேன்மொழி
4).பெரும் பணக்காரர்கள் மேலும் மேலும் பெரும் பணக்காரர்கள் ஆகிறார்கள்! தமிழாக்கம் -ஞானசூரியன்
5).திருத்தல்வாதம் செங்யென்சீ பாகம் 4
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் அரசாங்கமாகும். இந்த அரசாங்கம்தான் சட்டங்களை போடுகிறது. இந்த சட்டங்களை நிறைவேற்றுவது அரசு அதிகாரிகள் அடங்கிய அரசு நிர்வாகம் ஆகும். இந்த அரசுதான் ஆயுதம் தாங்கிய போலீஸ் மற்றும் இராணுவத்தைக் கொண்டுள்ளது. இந்த அரசுதான் உழைக்கும் மக்களை வன்முறைகொண்டு அடக்குகிறது. போலீஸ்தான் போராடும் மக்களை தடிகொண்டு தாக்குகிறது, துப்பாக்கியால் சுடுகிறது. போராடும் மக்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. நீதிமன்றங்கள்தான் போராடிய மக்களை குற்றவாளி என்று சொல்லி சிறைக்கு அனுப்புகிறது. சிறைச்சாலையில்தான் சிறைத்துறை அதிகாரிகள்தான் சிறைக்குள் போராடிய மக்களை கொடுமைக் குள்ளாக்குகிறது. மக்களின் நலன்காக்கும் அரசுத்துறைகள்யாவும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றால் அதனை மக்கள் தட்டிக்கேட்டால் அவர்கள் போலீசைக்கொண்டு மக்களை தாக்குகிறார்கள்.
இந்த அரசு அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில்லை, ஆனால் செல்வந்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்கள். மக்களை இவர்கள் கால்தூசுக்கு கூட மதிப்பதில்லை. இதற்கு காரணம் இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. இவர்களை மக்களே தேர்ந்தெடுக்கவும் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் மக்களுக்கு இருக்குமானால் இந்த அரசு அதிகாரிகள் மக்களுக்கு எதிராக நடக்கமாட்டார்கள். ஒரு கம்யூன் வடிவத்திலான பாட்டாளிகளின் அரசில்தான் அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கும் முறை செயல்படுத்தப்படும். ஆகவே அரசு அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவும் பதவிநீக்கம் செய்யவும் மக்களுக்கு அதிகாரம் கொண்ட கம்யூன் ஆட்சிமுறைதான் உழைக்கும் மக்களுக்குத் தேவை.
இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் எல்லா கட்சிகளின் ஆட்சியிலும் நிரந்தரமாக அதிகாரத்தில் இருக்கின்ற நிறுவனம்தான் அரசு அதிகாரிகளைக் கொண்ட அதிகார வர்க்க அரசு என்ற நிறுவனமாகும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசு அதிகாரிகளின் கைகளிலுள்ள அதிகாரத்தை யாராலும் பறிக்க முடியாது. ஒரு கட்சியிடமுள்ள ஆட்சி அதிகாரத்தைக்கூட ஒரு தேர்தலில் பறித்துவிட்டு வேறு ஒரு கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தை தேர்தல்மூலம் மக்களால் கொடுக்கமுடியும். ஆனால் எப்போதும் ஒரு அரசு அதிகாரியிடமிருந்து அதிகாரத்தை மக்களால் பறிக்கவும் முடியாது வேறு ஒருவருக்கு அதிகாரத்தை கொடுக்கவும் முடியாது. ஆகவேதான் இங்கே அரசு அதிகாரிகள் அவர்கள் நினைத்ததை யெல்லாம் செய்துகொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அரசு என்கின்ற இந்த ஏற்பாடு (நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ் ) ஏன் எதற்கு எப்போது தோன்றியது? என்பதை நாம் அறிந்து கொண்டிருப்பீர் ஆக உழைக்கும் மக்களுக்கான அரசு எப்படி இருக்கும் என்பதனை பாரீஸ் கம்யூன் நமக்கு அளித்துள்ளது அவைதான் உழைக்கும் மக்களுக்கான அரசு வடிவமாக இருக்க முடியும். அதனைதான் லெனின் அவர்களும் ஏப்ரல் அறிக்கையில் தெளிவுப்படுத்தி இருப்பார்.
கம்யூனிஸ்டுகள் சுரண்டல் அற்ற சமூகத்தை விரும்புவர்கள். சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத.... எல்லாச் செல்வமும் எல்லோருக்கும் கிடைக்க கூடிய வகையில்... ஒருவர் மீது எல்லோரும், எல்லோர் மீது ஒருவரும் அக்கறை செலுத்தக் கூடிய... சமூகம் படைப்பதே இலட்சியமாக கொண்டவர்கள். இதனை அடைய இந்த அரசு கண்ணை மூடியிருக்குமா?
மக்களின் வறுமை, வேலையில்லா கொடுமைகளுக்கு போராடினாலே குண்டாந்தடியை காண்பிப்போர் அவர்களை இல்லாதொழிக்க சம்மதிப்பார்களா? மலைப்போல் மூலதனத்தையும் அதிகார பலத்தையும் கொண்டுள்ளோரை சிறுதுளியே ஆனால் கடல் அளவுள்ள பெருத்த எண்ணிக்கையில் உள்ள உழைப்பாளிகள் தங்களின் விடுதலைக்கு இவர்களை இல்லாதொழிக்க ரசிய சீன படிப்பினைகள் வேண்டும் என்பதே... அவை நீண்ட பணிதான், இருந்தும் அவையின்றி உழைக்கும் மக்கள் இந்த அரசால் பயன் பெறா!
1). சோசலிசம் மற்றும் கம்யூனிச சமுதாயத்தை அடைவதே கம்யூனிஸ்டுகளின் இலட்சியம் ஆகும். இந்த இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் அதற்கு தடையாக இருந்த எதிரிகளை எதிர்த்துப் போராடி வீழ்த்தி சோசலிசத்தைப் படைத்தனர். எனினும் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான எதிரிகள் மிகவும் பலம்வாய்ந்தவர்களாக இப்போதும் நீடிக்கின்றதை நாம் பார்க்கிறோம். இந்த பலம்வாய்ந்த எதிரிகளை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட வேண்டியது அவசியமாகவே இன்றும் உள்ளது. அது அவ்வளவு எளியது அல்ல. கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவத்தால் பாதிக்கப்படும் மக்களும் வாழ்வின் ஒவ்வொரு அரங்கிலும் இந்த எதிரிகளை எதிர்த்துப் போராடி இந்த எதிரிகளை அடியோடு வீழ்த்தி சவக்குளிக்குள் புதைக்க வேண்டும். அப்போதுதான் நாம் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் கொண்டுவர முடியும். அது ஒரு நீண்ட நெடிய கடினமான போராட்டத்தின் மூலமே உழைக்கும் மக்கள் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் அடைய முடியும். இத்தகைய நீண்ட நெடிய போராட்டமின்றி கம்யூனிசத்தை எளிதாக அடையவே முடியாது. இத்தகைய நீண்ட போராட்டத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டு செயல்படுபவர்தான் சிறந்த கம்யூனிஸ்டாக முடியும். ஆனால் சில பேர்வழிகள் உடனடியாக தங்களின் வாழ்வியல் பிரச்சனைகள் தீரவில்லை என்பதால் சோர்வடைந்து கம்யூனிச கொள்கையின் மீதே நம்பிக்கை இழந்து உடனடியாகச் சில சலுகைகள் வழங்குபவர்களை நம்பி அவர்கள் பின்சென்று அவர்களின் துரோகத்துக்குப் பலியாகிறார்கள். உதாரணமாக மக்களுக்கு திமுக நன்மை செய்யும் என்று நம்பி அவர்களுக்கு ஓட்டுப்போட்டு பதவி கொடுத்தனர்.
2). பல நாடுகளில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டு கம்யூனிஸ்டுகளால் பலவிதமான போராட்டங்கள் நடத்தப்பட்டு அந்தப் போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கி வழிகாட்டினார்கள் என்பது வரலாறாகும். எனினும் இத்தகைய கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தற்போது திருத்தல்வாதிகளாகவும் கலைப்புவாதிகளாகவும் குறுங்குழுவாதிகளாகவும் மாறிவிட்டனர். இதற்கு சமூக காரணங்கள் இருக்கிறது. சமூகத்தில் ஏகாதிபத்திய முதலாளிகளும் பாசிஸ்டுகளும், நிலப்பிரபுக்களும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உழைப்பின் பலனை சுரண்டி உழைக்கும் மக்களை ஒடுக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் சுரண்டல் தற்போது எந்தளவுக்கு நடக்கிறது என்றால் உழைக்கும் மக்கள் அவர்கள் உயிர்வாழ்வதே மிகவும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் உழைக்கும் மக்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழல் நிலவுகின்றது. இந்த சூழலைப் புரிந்துகொண்ட கம்யூனிஸ்டுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூழ்நிலையை விளக்கி இந்தக் கொடுமைகளுக்கு காரணம் ஏகாதிபத்திய முதலாளிகளும் அவர்களின் நலனுக்காகச் செயல்படும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகள்தான் என்பதை விளக்கி உழைக்கும் மக்களை போராடுவதற்கு அணிதிரட்டுகிறார்கள். ஆகவே மனித சமுதாயத்தில் முதலாளிகளின் சுரண்டல் நீடிக்கும்வரை உழைக்கும் மக்களின் போராட்டங்கள் தொடரவே செய்யும். அதற்கு கம்யூனிஸ்டுகள் தலைமை கொடுப்பதும் தவிர்க்க முடியாது. எனினும் முதலாளி வர்க்கமானது சூழ்ச்சி செய்து கம்யூனிஸ்டுகளிடையே தொழிலாளி வர்க்க சீமான்களை உருவாக்கி அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து அந்த கம்யூனிஸ்டுகளை துரோகிகளாக மாற்றி வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பி முதலாளிகள் அவர்களை காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால் இதன் மூலம் முதலாளிகள் தற்காலிகமாக வெற்றிபெறலாம். ஆனால் உண்மையான கம்யூனிஸ்டுகள் உருவாவது காலத்தின் கட்டாயமாகும். வருங்காலத்தில் சிறந்த கம்யூனிஸ்டுகளும் சிறந்த கம்யூனிஸ்டுக் கட்சியும் உருவாகி பசி பட்டினியால் செத்து மடிந்துகொண்டிருக்கும் மக்களைத் திரட்டி புரட்சி நடத்தி சுரண்டலுக்கு முடிவுகட்டுவார்கள். அதற்குத் தேவையான மார்க்சிய அறிவை மக்களிடம் வளர்ப்பது நமது முதன்மையான பணியாகும். ஒருபுறம் மானிட இன வரலாற்றிலேயே மகத்தான லட்சியமாக கம்யூனிசம் விளங்குகிறது; முன் எப்போதும் இல்லாதவாறு அது சுரண்டலையும் வர்க்கங்களையும் ஒரேயடியாக ஒழித்துக்கட்டி மனித குலத்தை விடுவித்து மகிழ்ச்சியான ஒளிவீசும் எழில்மிக்க உலகத்தை கொண்டுவருவதாக விளங்குகிறது; ஆனால், இன்னொரு புறமோ, பிரம்மாண்டமான கடமை மனித குலத்தின் முன் இருக்கிறது. மானிட இன வரலாற்றிலேயே மிகவும் சோதனையான கடமையாக கம்யூனிசம் விளங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; வரலாற்றிலேயே நீண்டகால, கசப்பான நெளிவு சுழிவான போராட்டத்தின் மூலமாகவே சுரண்டும் வர்க்கங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்ட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
3). மனிதகுல வரலாற்றிலேயே மிகமிக மகத்தான லட்சியம்தான் கம்யூனிச சமூகமாக சமுதாயத்தை மாற்றும் லட்சியமாகும். இந்த லட்சியத்தை எப்போதும் மனதில் நிறுத்திக்கொண்டு செயல்படுபவர்கள்தான் சிறந்த கம்யூனிஸ்ட் ஆவார். இந்த லட்சியத்தை மனதார ஏற்றுக்கொண்டு அது பற்றிய மார்க்சிய ஆசான்களின் போதனைகளை மக்களிடம் பரப்புவதையே லட்சியமாகச் செயல்பட்டுக்கொண்டு இருப்பதுதான் இலக்கு இணையதளப் பத்திரிக்கையாகும். கம்யூனிச லட்சியத்தை அடைவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டிய பணி என்பது, சுரண்டலையும் வர்க்கங்களையும் நாம் ஒழிப்பதற்கு பாடுபட வேண்டும். இந்த சுரண்டலையும் வர்க்கங்களையும் ஒழித்துவிட்ட பின்புதான் மனித குலமானது அனைத்துவகையான நெருக்கடிகள், இழிவுகளிலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியான ஒளிவீசும் உலகத்தைப் படைத்து அதில் வாழ முடியும். அத்தகைய கம்யூனிச உலகத்தைப் படைப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்காக மனிதகுலம் கடுமையாகப் பாடுபட வேண்டும்.
இங்கே சிலர் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு மனிதர்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளை தீர்ப்பதே ஒரு மிகப் பெரிய சாதனையாக கருதுகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளின் லட்சியம் அன்றாடப் பிரச்சனைகளை தீர்ப்பதோடு சுரண்டலை ஒழிப்பதற்கான பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்பதே ஆகும். சுரண்டல் ஒழிப்பு பணி என்பது ஒரு நீண்டகாலப் பணியாகும். அதற்கான கொள்கைகளை தொடர்ந்து மக்களிடம் பிரச்சாரம் செய்துகொண்டே மக்களிடம் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். சுரண்டலை ஒழிப்பதற்காகத் திட்டமிட்டு மக்கள்திரள் போராட்டங்களை முதலாளிகளுக்கு எதிராக நடத்த வேண்டும். சுரண்டலை பாதுகாக்கும் அரசை தகர்த்துவிட்டு சுரண்டலை ஒழிப்பதற்கான அரசமைக்க நாம் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்த வகையில் கம்யூனிஸ்டுகளின் கடமையானது பிற அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல் மிகவும் கடுமையானதாகவும் பல சோதனை எதிர்கொள்வதாகவும் உள்ளது என்பதை இங்குள்ள பல கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ளவில்லை. சுரண்டலை ஒழிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் பிரச்சாரத்தை துவங்கியவுடனேயே கடுமையான தாக்குதல்களை முதலாளித்துவ அரசிடமிருந்து எதிர்நோக்க வேண்டிவரும். சுரண்டலை ஒழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பல கம்யூனிஸ்டுகள் அரசுப் படையால் படுகொலை செய்யப்பட்டு தியாகியான வரலாறு நாம் அறிந்ததே. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன? நெளிவு சுழிவான முறையிலேயே கம்யூனிஸ்டுகள் போராட வேண்டியுள்ளது. அதற்காக எதிரிகளிடம் நாம் சரணடைவது மிகவும் தவறாகும். எதிரி பலவீனமாக இருக்கும் போது நாம் தாக்க வேண்டும், எதிரி பலமாக இருக்கும் போது நாம் நமது மக்களிடம் அரசியல் பிரச்சாரம் செய்து நம்மைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு மாறாக எதிரி விரும்பும் வகையில் நமது போராட்டத்தை நடத்தி எதிரியுடன் சரணடையக் கூடாது. நமது எதிரியை அரசியல் அதிகாரத்திலிருந்து வீழ்த்திவிட்டு நமக்கான சோசலிச அரசை உருவாக்கியவுடன் நமது பணி முடிந்துவிடாது. அத்தகைய அரசின் மூலம் நீண்டகாலத்துக்கு சமூகப் பொருளாதாரம்மற்றும் பண்பாட்டுத் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவருவதற்கு தொடர்ந்து விடாப்பிடியாகப் பாடுபட வேண்டும். ஆகவே கம்யூனிஸ்டுகள் சோசலிச மற்றும் கம்யூனிச சமுதாயத்தைப் படைக்க மிகவும் கடுமையான சோதனையான பாதையில்தான் பயணம் செய்தாக வேண்டும். இந்தப் பாதையில் செல்வதற்கு தயங்குபவர்களால் கம்யூனிஸ்டாக நீடிக்க முடியாது.ஆகவேதான் நோகாமல் நொங்குதிண்ண விரும்பும் பயந்தாங்கொள்ளிகளைப் பார்த்து “நாங்கள் செங்குத்தான பாதையில் சென்று மலை உச்சிக்கு செல்ல விரும்புகிறோம், ஆனால் சிலர் சதுப்புக்குளி வழியாகச் செல்ல வேண்டும் என்கிறார்கள், அவர்கள் விரும்பும்சதுப்புக்குளிக்கே அவர்கள் செல்லலாம் ஆனால் எங்களது கைகளைவிட்டுவிடுங்கள்” என்று லெனின் கேலி செய்தார். ஆகவே வேதனையான பாதையில் கம்யூனிஸ்டுகள் பயணம் செய்தால் மட்டுமே சமூகத்திலுள்ளதீயவைகளை ஒழித்து நல்லவைகளை நிலைநாட்ட முடியும் என்றுமார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள். இந்த வேதனையான பாதையில்நாம் செல்லும்போது நமது தோழர்களில் சிலர் நம்மை எதிர்த்து தாக்குதல்கள் நடத்துவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுநடைமுறை சாத்தியமில்லாதது என்பார்கள். இது கற்பனையானதுஎன்பார்கள். இவ்வாறு சொல்லி நமது மன உறுதியை தகர்க்க முயற்சி செய்வார்கள். அவர்களது சதிக்குப் நாம் பலியாகாமல் நமது நீண்டகால லட்சியமான சோசலிசம், கம்யூனிசம் பற்றிய கருத்தை மக்களிடம்தொடர்ந்து பிரச்சாரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவோம். நாம்நடத்தும் அன்றாடப் பொருளாதாரப் போராட்டத்திற்காக வைக்கப்படும்பொருளாதார முழக்கங்களோடு அரசியல் முழக்கங்களையும் முன்வைத்துபுரட்சிகரமான அரசியல் மாற்றத்திற்காவும் போராடுவோம். நமது லட்சியங்களை ஒருபோதும் குறுக்கிக்கொள்ள மாட்டோம். நமது லட்சியம் மிகவும் உயர்ந்த உன்னதமான சோசலிசம் மற்றும் கம்யூனிச லட்சியமாகும். இந்த உயர்ந்த லட்சியத்தை அடையும் நோக்கத்திலேயே எமது பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் அமைத்துக்கொள்வோம். சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் அடையும்வரை எங்களது போராட்டங்கள் ஓயாது என்று உறுதி ஏற்கிறோம்.
கம்யூனிஸ்ட் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தவர்கள் மற்றும் அடக்கி ஒடுக்கி சுரண்டப்படும் திரளான மக்களைச் சார்ந்து நின்று மார்க்சிய லெனியத்தினுடைய வழிகாட்டலில் கம்யூனிசம் என்ற மகத்தான இலட்சியத்தை இலக்காகக் கொண்டு புரட்சிப் போராட்டங்களை நடத்திச் சென்று மொத்த சமுதாயத்தையும் உந்தித் தள்ளி இறுதி வெற்றி கிட்டும் வரை விடாப்பிடியாக கொண்டு செல்லும். சமூக வளர்ச்சியின் வரலாற்றுப்பூர்வமான விதிகள் மொத்த மனித சமுதாயமும் கம்யூனிசத்தை நோக்கி முன்னேறிச் சொல்வதை தவிர்க்க முடியாததாக்கி உள்ளன என்பதே இதற்குக் காரணம்.
முழுமையாக இதழில் வாசிக்க தோழர்களே...
இலக்கு 87 இணைய இதழ் PDF வடிவில் இந்த இணைப்பில் அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே
No comments:
Post a Comment