"மார்க்சிய வழியில் சாதி ஒழிப்பு"

தோழர் ஆ.பகலவன் முன்முயற்சியில் "மார்க்சிய வழியில் சாதி ஒழிப்பு" தலைப்பு சரி பார்த்திட்டு வருவோம் என்று சென்றேன் என் அனுபவங்கள் பல அதனை பிறகு பகிர்கிறேன். தோழர்களின் முன்னெடுப்பு மிகவும் பாராட்டதக்கது. நேரம் கடந்தும் கூட்டம் ஆரம்பிக்கவில்லை பார்க்க தோழர்கள் மற்றும் மக்கள் வருவார்களா என்ற சந்தேகத்துடனே விவாதம் தொடங்கி வைத்த தலைமை உரை மற்ற தோழர்களும் சாதியின் தாக்கம் அவர்கள் புரிதலில் சமூகத்தில் அவர்கள் சந்த்தித்த அனுபங்களை முன் வைத்தனர். நேரம் செல்ல செல்ல அரங்கம் நிறைந்து விட்டது கொண்டு வந்த இருக்கை போதாமல் சிலர் நின்று கேட்டுக் கொண்டிருந்தார் காரசாரமான விவாதத்தை.


தோழர் திருப்பூர் குணாவின் விளக்கம் சிறப்பாக இருந்தது. அதில் சில முரணாடுகள் உண்டு. அவை மார்க்சிய அடிப்படைகளை உள்வாங்குவதில் ஆம் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில், சாதி வர்ணம் பற்றிய பிரச்சினையில் அவை விவாதத்தின் மூலம் செழுமை படுத்திக் கொள்ள முடியும். அவரின் தொடர் முயற்சி கடந்த கால இந்திய சமூகத்தில் சாதி ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய பணியினையும் அவர்களின் உயர்வான தியாகத்தையும் முன் வைத்து இன்றைய அடையாள அரசியல்வாதிகள் செய்ய துணியாதவற்றையல்லாம் கம்யூனிஸ்டுகள் தங்களின் உள்ளும் உணர்வும் கொண்டு உயிரை கொடுத்தும் வர்க்க போரில் உண்மையாக நின்றனர் அந்த இடத்தில் இன்றைய அம்பேத்கர் பெரியார் இயக்கங்கள் செய்ய முடியாதவைகளை அவர்கள் செய்தனர் என்றார். பின்னர் அவர் அம்பேத்கர் பெரியார் பணியினையும் ஏன் கம்யூனிஸ்டுகள் தோல்விகளையும் தெளிவாக முன்வைத்தார்.  அதன் மீதான விவாதத்தை சிறப்பாக கொண்டு செல்ல விருப்பம் இன்றி ஒருவரின் குதர்க்கவாதத்தில் இவ்வளவு சிறப்பாக முடியவேண்டிய கூட்டம் அவசர கதியில் முடிந்து விட்டது.
தொடர்ந்து சில நபர் மார்க்சிய அடிப்படை புரிதல் இல்லாமல் மார்க்சியத்தில் அது உள்ளதா இது உள்ளதா? என்று குதர்க்க வாதம் செய்ததோடு இறுதியாக கம்யூனிஸ்டுகளையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் தவறாக பேசவே விவாதம் திசைமாறி போய்விட்டது. 
 

நான் "சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில்" என்ற என் நூலில் இது போன்ற குதர்க்கவாதிகளையும் ஏன் மார்க்சியவாதிகளாய் வலம்வரும் அரைகுறைகளையும் மனதில் கொண்டே,முதலில் மார்க்சிய தத்துவம் சாதியை எப்படி பார்கிறது. அதே நேரத்தில் இங்குள்ள போக்குகள் என்னென்ன என்பதனையும். இதிலிருந்து மார்க்சியம் மட்டும் ஏன் மேலானது என்பதனை விளக்கியுள்ளதோடு மார்க்சியம் எப்படி தீர்வு சாதி ஒழிக்க என்று தெள்வுப்படுத்தி இருப்பேன். அதில் இன்று சாதி ஏன் இருக்கிறது மறுமலர்ச்சி அடைகிறது என்பதனை தெளிவாக குறிப்பிட்டிருப்பேன். என்னே செய்ய மக்கள் "உடனடி தீர்வை" நோக்கி நிற்கின்றனர் அவை சாத்தியமா?    

இவர்களின் இந்த நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள நடைமுறையில் சமூகத்தில் உள்ள எதார்த்தத்தை புரிந்துக் கொள்தல் அவசியம்.

பின் நவீனத்துவம் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு எதிரான சந்தேகத்தையும் - குழப்பத்தையுமே விதைக்கிறது. 1960களில் அமெரிக்காவில் தோன்றிய பின் நவீனத்துவ போக்கு 1980-ல் பங்கு சந்தை வீழ்ச்சி, ஊழல், நிலையாமை போன்ற நெருக்கடிகளால் நிலைகுலைந்த மத்தியதர வர்க்கத்தின் அறிவார்ந்த கதறலாகவே உள்ளது. இந்தக் கதறலை வர்க்கப் போராட்டத்துக்கு எதிராக திருப்பி விடுவதில் ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுவிட்டது.


பின் நவீனத்துவ கருத்துமைப்புகளின் வார்த்தை ஜாலங்களில் மயங்கிப்போய் விட்டவர்கள் பின் நவீனத்துவத்தின் "நல்ல அம்சங்களோடு" மார்க்சியம் உறவாடலாம் என அறிவுரை கூறுகின்றனர்.

பின் நவீனத்துவம் அடிப்படையில் கலகத்தின் தத்துவம் கூட அல்ல, அது மனிதனை தனியாக்கி ஒழுங்கற்ற குழப்பவாதியாக்கும் அராஜக கோட்பாடாகும். எல்லா ஒழுங்குகளும் ஒழிக என அ. மார்க்ஸ் போன்றவர்கள் கூச்சல் போடுகின்றனர். அறிவியல் புரட்சியுகத்தில் மனிதகுலம் மேலும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்படுவதை நோக்கியே நகர்கிறது. ஏகாதிபத்தியம் உலகை தனது நலனுக்குரிய வகையில் ஒற்றைத்தன்மையதாக நுகர்வுச் சந்தையாக மாற்ற முயல்கையில் உலகளாவிய ஒருங்கிணைந்த ஒழுங்குபடுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் போராட்டம் வளரவேண்டும். மார்க்சியம் இதைத்தான் முன்மொழிகிறது. 

பின் நவீனத்துவம் முன்வைக்கும் பிளவுபட்ட தனித்தனியான அராஜகவாதம் உலகமயமாக்கல் சந்தை சக்திகளோடு பின்புறமாக கைகோர்த்துக் கொள்கிறது. 

அவர்கள் தனித்த பிளவுபட்ட கலகங்களையே முன்மொழிகிறார்கள். இதன் காரணமாகவே இன்றைய சித்தாந்தப் போராட்டத்தில் இலக்கியத்துறையில் "நவீன" போக்குகளாக முன்வைக்கப்படும் பின் நவீன போக்குகளை எதிர்த்து போராடி வீழ்த்தவேண்டிய கடமை மார்க்சியத்துக்கு உண்டு.

மாறுதலையும், புதிய உயர்மட்ட வளர்ச்சி மாற்றத்தையும் நிராகரிக்கும் எந்தத் தத்துவமும் நடைமுறை பற்றியதாக இருக்கமுடியாது.

'தத்துவஞானிகள் உலகத்தை பல்வேறு வழிகளில் வியாக்யானப்படுத்தித்தான் வந்திருக்கின்றார்கள். ஆனால் அதை மாற்றுவது தான் இப்போதுள்ள விஷயமாகும்.' (பாயர்பாக் ஆய்வுரைகள் -1845).

மார்க்சியத்தின் அடிக்கல்லே இதுதான். செயல்படும் தத்துவமாகத்தான் மார்க்சியம் உருப்பெற்றது.

எந்த வார்த்தையில் வந்தாலும் சரி எவ்வளவு அறிவார்ந்த தன்மையில் வியாக்யானங்கள் அளிக்கப்பட்டாலும் சரி எந்தத் தத்துவத்தையும் அளவிடும் அளவுகோல் நடைமுறைப் பற்றியதே ஆகும்.

உண்மையை - புறநிலையை அறிய முடியும் என உறுதிபட உரைக்கும் அறிவதற்கான உரைகல் நடைமுறையே என வரையறுக்கிறது.மக்களின் நடைமுறைக்கு அச்சப்பட்டு வெட்கி ஓடி ஒளியும் "தூய தனி நபர் இலக்கிய வாதங்களை வாழ்க்கை ஏற்பதில்லை.

தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம் புத்தகத்திலிருந்து தோழர் தேவ.பேரின்பன்

இங்கே நமக்கான பேசுபொருள் "சாதி பிரச்சினையில்" சாதி மட்டுமே பிரச்சினை என்பவர்களும் ஏன் பெண்ணடிமைதனம் பேசுவோர் அதனை கடந்து "மொழி தேசிய" பிரச்சினையை பேசுவோர் இவர்கள் தங்களின் பிரச்சினையை கடந்து இவை நாம் வாழும் சமூக பிரச்சினை இவை நமது சமூகத்தில் இன்று முன்னுக்கு வந்துள்ள பிரச்சினை இவை ஏன் எப்படி வந்தது இதன் சாதக பாதக பிரச்சினையின் ஊடாக இதனை தீர்க்க வழிதான் என்ன? என்று தேடும் பொழுது  ஒட்டுமொத்த சமூகத்தை பாதித்துள்ள பிரச்சினையை தீர்க்க ஒட்டுமொத்த மக்களையும் ஒன்று சேர்த்துதானே தீர்க்க முடியும் அதில் முரண்பாடுகளை கணக்கில் கொண்டு அணிச் சேர்க்க வேண்டியுள்ள அல்லவா? 

இந்த பிரச்சினைக்கு காரணமான சக்திகளை எதிர்த்து பிரச்சினையிலிருந்து விடுபட வர்க்க சமூகத்தில் வர்க்க போராட்டம்தான். இந்த எல்லா பிரச்சினைக்கும் ஊற்றுகண்ணான சுரண்டும் வர்க்கமான இச் சமூகத்தில் ஆளும் வர்க்கமாய் உள்ள சக்திகளை எதிர்த்து, ஒடுக்கபடும், அடக்கப்டும் சுரண்டபடும் மக்களை ஓரணியில் திரட்டி எதிரிக்கு எதிரான போரில் எதிரியை வீழ்த்த வேண்டும் இந்த இழிவுகளை சுமக்கும் அவலத்தை துடைதெறிய வேண்டும் என்பதே சுருக்கமாக மார்க்சிய வழிமுறை.

இவர்கள் பேசாதவை குறிப்பாக தீண்டாமை எப்படி வந்தது?

தீண்டாமை குறித்து மனுஸ்மிருதி உள்ளிட்ட சாஸ்திரங்களில் குறித்து பலகருத்துகள் கூறப்பட்டிருந்தாலும் சுருக்கமாக சொன்னால் தீண்டதகாதவர்களின் பெருக்கத்திற்கு பலகாரணங்கள் இருந்தன. மேலே கூறிய தீட்டுடன் தொடர்புடைய பணி செய்பவர்கள் தொடங்கி அன்றைய சமூக மாற்றத்தால் மனிதர்கள் சமூக அந்தஸ்தில் இறங்கிக்கொண்டிருந்தனர் அவரவர் செய்யும் தொழிலாள்.

நிலவுடமை சமூக அமைப்பில் எங்கும் நிலதிற்கான போரும் போரில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் உழைக்கும் மக்களும் அவர்களுடன் (அச் சமூகத்தில்) இணைந்து கொண்டிருந்தனர். அதேகாலத்தில் வேட்டை வாழ்க்கை வாழ்ந்த வனக்குலக் குழுக்கள் இந்த அமைப்பு முறைகுள் வந்து கொண்டிருந்தன. மற்றும் பலர் அந்நிய மக்களுடன் சேர்ந்து கொண்டிருந்தனர். இவர்களோடு போரில் தோல்வி கண்டவர்கள், மலைவாழ் மக்கள் இன்னும் போரினால் அடிமையாக்கப்பட்டவர்கள் மக்களோடு மக்களாக அன்றி அவர்களை விட்டு தூரத்தில் வாழவேண்டிய நிலையில் இருந்தனர். சமூகத்திலிருந்து ஒதுங்கியிருந்த இவர்கள் அரசனின் ஆணைப்படி மரணதண்டனை நிறைவேற்றுவதும் அனாதை பிணங்களை தூக்கிச் சென்று தகனம் செய்யவும். ஆங்காங்கே மற்றவர்கள் செய்யாத பல்வேறு தொழில்களை செய்வதற்காகவும் இவர்களை ஒதுக்குப்புறமாக வாழவைத்தனர். அதோடு சாக்கடை சூழ்ந்த குடியிருப்புகளில் வாழ்ந்து கொண்டு நிரந்தர தீட்டையும் அவமானங்களையும் கொண்டு தாழ்ந்த நிலையில் தாழ்ந்தவர்களாக வாழ வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர். இதுதான் மனிதனுக்கு எதிராக மனிதன்இழைத்த கொடூரமாகும்.

  • வர்க்க ரீதியாக அவர்கள் இன்னும் சிறியவர்களாக உற்பத்தி சாதனங்களுடன் எந்த உறவும் இன்றி, வேண்டாத பொருட்களாக இவர்களை எப்படி அழைத்தாலும் சரியான அர்த்ததில் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் மூதாதையர்கள் இவர்கள்தான் எனலாம். தீண்டாமை என்பது தீண்டதகாதவர்கள் என்று அவர்கள் உழைப்பை சுரண்ட, அவர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதே அதிகாரத்தின் வழியாகவும் அச்சுறுத்தல் வழியாகவும் இதை செய்கிறார்கள். கிராமப்புறத்தில் சாதிசடங்கு மரபு என்ற பெயரில் சமூகத்தில் ஆதிக்கம் செய்கிறது.

தென்கிழக்கு ஆசியாவின் குறிப்பாக இந்தியாவின் தனித்த பண்பாக விளங்குவதாக கூறப்படும் சாதி அமைப்பில் பாரம்பரிய வேலைப்பிரிவினை, அகமணமுறை, படிநிலைமுறை, தீண்டாமை ஆகியவற்றின் கூட்டுத்துவத்தை காண்கிறோம். இவற்றுள் வர்க்கம் என்பதும் சாதி என்பதும் ஒன்றை ஒன்று நிறைவு செய்வதாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்தன என்பதையும் அதன் பின் பல்வேறு மாற்றங்களினால் சிதைவுகளுக்கு உள்ளாகின அவை சோழர்காலம் முழுமுற்றான நிலவுடமைக் காலமாகச் சாதியின் பாரம்பரிய வேலைப் பிரிவினை கறாராக இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களை ஒட்டி ஏற்பட்ட சிலமாற்றங்கள் இச்சமூகத்தில் சில அசைவுகளை ஏற்படுத்தியது. அவை இந்த சாதிகளுக்குள் சில இயங்குதல் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதில் எல்லா சாதியரும் அவருடைய நிலையிலிருந்து தமக்கான பிரதிநிதித்துவ மாற்றத்தை அடைந்தனர். அவைதான் ஒரே சாதிக்குள் பல வர்க்கங்களை புகுத்தியது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் தொகுப்பில் மொத்தம் 67 சாதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பூர்வீகமாக இருந்த தாழ்த்தப்பட்ட சாதியினரும் உண்டு, தமிழகம் பல்லவர் காலம் தொட்டு ஆதிக்கவாதிகளின் குடியேற்ற நாடாக இருந்ததால், ஆதிக்கவாதிகள் தம்தமது மொழி பேசிய அடிமை தொழிலாளர்களை இங்கே குடியமர்த்தினர். தீண்டாமை என்ற பொதுகோட்பாட்டின் அடிப்படையில் அத்தகைய அடிமை தொழிலாளர்கள் இங்கு ஏற்கனவே இருந்த தீண்டதகாத அடிமை தொழிலாளர்களைஒத்திருந்தனர். இப்படி 500 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு, கன்னடம் பேசும் தீண்டதகாதவர்கள் தமிழ் பேசும் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து அதை தாங்கள் வரலாற்று பூர்வமாக வாழும் இடமாக அமைத்துக் கொண்டனர்.(20).

  • பல்லவர்கள் காலம் தொட்டு சோழர்கள் காலம் வரை உருவாக்கி திடப்படுத்தப்பட்ட சாதியமுறையும் அதனுடன் நுழைந்த தீண்டாமையும் நிலஉடைமை கிராம சமுதாயத்தில் ஓர் இறுக்கமடைந்த வேலைப் பிரிவினையை உணர்த்துகிறது. இவை ஆரியர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது திராவிடர்களால் உருவாக்கப்பட்டதா என காண்பதை விட அது கிராமிய நிலவுடமை முறை சமூகத்தின் வடிவம் என காண்பதே பொருந்தும். இவற்றை செழுமைப் படுத்துவதில் சனாதன இந்து மதத்தின் கருத்து உருவாக்கும் பணி முதன்மையாக இருக்கிறது.

அரசு அதிகாரம் கோயில் அதிகாரம் மையமாக கொண்ட நிலவுடமை கிராமிய சமூகத்தில் இரண்டும் அதிகாரத்திலிருந்தும் தீண்டதாகாதவர் விலக்கி வைக்கப்பட்டு ஊருக்கு வெளியே தனித்து இருத்தப்பட்டனர். சமூக உற்பத்தியின் அடிநிலை மக்களான இவர்களை குறிப்பிட்டு “அந்தணரில் இருந்து புல்லு பறிக்கிற பரமன் வரை” எனக் கூறும் கல்வெட்டாகட்டும். புலைச்சேரி கூறும் “கூரைக் குடிவாழ் மனிதர்களான” இவர்கள் எந்தவித பொது உரிமையைகளும் இன்றி இருந்தனர். விளை நிலங்கள் விற்பனையாகும் பொழுது இவர்களும் சேர்ந்து விற்கப்பட்டனர். (A.R.E III para 29.கி.பி 1184) (20).

இவ்வாறாக சமூகத்தின் ஒரு பிரிவு மக்கள் கால வெள்ளத்தில் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு ஒட்ட சுரண்டப்பட்டனர். இவைதான் நாம் அறியும் வரலாற்று உண்மைகள். அவர்கள் மீது ஏவப்பட்ட கொடுமைகள், கொடூரங்கள் இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடரத்தான் செய்கின்றன. அதனை இல்லாதொழிக்க நம் தேடல் இருக்க வேண்டும். (சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில் பக்கம் 145-147). இவற்றை புரிந்துக் கொள்ள மார்க்சிய அறிவு வேண்டும் தோழர்களே.

ஆனால் சீர்திருத்த வாதிகள் என்ன செய்கின்றனர்?

சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் இந்திய சமூக வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. இந்த போராட்டங்கள் சாதி அடிப்படையிலான அநீதிகளுக்கு எதிராகவும், சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் நடத்தப்பட்டன. இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சாதி முறை, உயர் சாதியினரால் கீழ்ச்சாதியினர் சுரண்டப்படுவதற்கும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்படுவதற்கும் வழிவகுத்தது. இந்த அநீதிகளுக்கு எதிராக 19ஆம் நூற்றாண்டு முதல் பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் தலைவர்கள் போராட்டங்களைத் தொடங்கினர். இந்த போராட்டங்கள் சட்டரீதியான மாற்றங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன.

இன்றும் தீண்டாமை பல பகுதிகளில் தொடர்கிறது. தலித் மக்கள் இன்னும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளனர். கிராமப் புறங்களில் சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள் பொதுவான வசதிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் இந்திய சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த அநீதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. கல்வி, சட்டரீதியான மாற்றங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு மூலம் இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றாலும் அதன் அடிவேரான சமூக அமைப்பு துளிர்கவே செய்கின்றன. இந்த கொடுமைகளுக்கு தீர்வாக மக்கள் நலன் அரசு ஆம் உழைக்கும் மக்கள் நல அரசால் மட்டுமே சாத்தியம். இங்கு உத்திர பிரதேசதில் மாயாவதி தலைமையிலான (BSP) ஆட்சியிலும் பெரிய மாறுதல்களை காண முடியவில்லை. அதே போல் தலித் கட்சிகளும் இந்த சட்டவாதத்தில் மூழ்கடித்துள்ளதே தவிர அந்த தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவுகட்ட முடியவில்லை. இங்கே மக்களுக்கான விடியல் அரசும் என்ன செய்துக் கொண்டுள்ளது?

தீண்டாமை சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ள பின்னரும் தீண்டாமை தொடர செய்கிறது. ஏனெனில் இந்த சட்ட திட்டங்கள் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கனவை அல்ல!

  • தீண்டாமை ஒழிப்பு சட்டமாக்கப்பட்டாலும் நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வரவில்லை. எ.கா ஜப்பானில் இருந்த தீண்டாமை கொடுமைகளை அரசே முன் வந்து ஒழித்துக் கட்டியது ஏனெனில் அவர்களுக்கு தேவையானது உழைப்பு சக்தி. அதாவது சமூகத்தின் பெரும்பானமையிலான உழைக்கும் வர்க்கம் சமூகத்திலிருந்து விலக்கி வைத்திருப்பது நாட்டின் பொருளாதார நலனுக்கு விரோதமாக இருக்கவே, அரசே தீண்டாமை நடைமுறையை சட்ட வழியிலே இல்லாதொழித்தது. அதுபோல் இங்கு யாரும் நடத்த தயார் இல்லை. ஏனெனில் இங்கு உழைக்கும் மக்களுக்கே வேலை இல்லை அதன் பாராமுகம் என்பதே இன்றைய தீண்டாமை.

பெரியார்  (குடியரசு 30-11-1930) சாதி ஒழிப்பிற்கான சட்ட வரைமுறைகளை பெரியார் ஏற்றுக் கொண்டார்.

பெரியாரின் பல்வேறு கட்ட போராட்டங்கள் மதிக்கத்தக்கவையாக இருந்தாலும் அவை சாதி ஒழிப்பிற்கு பயன்படவில்லை என்பதே உண்மை. ஏனெனில் அவர் சாதியை வெறும் கருத்தியல் அம்சமாக மட்டுமே கண்டார் அதாவது வெளிப்புற அம்சங்களாக உள்ளதை மட்டும் புறக்கணிக்க முற்பட்டார். சமூக இயக்கத்தில் காண தவறிவிட்டார்.

பெரியாரின் இந்த பயணமானது படிப்பறிவு குறைந்த சமய உணர்வு மேலாதிக்கம் கொண்ட சாதி முறையின் இறுக்கத்தால் கட்டுண்ட ஒரு சமூக சூழலில், கலாச்சார மற்றும் அரசியல் தளங்களில் சாதியை எதிர்க் கொண்ட பெரியாரின் கிளர்ச்சி போராட்டம் முதன்மையாக கருத்த தக்கது. "புனிதங்களாக கருதப்பட்டவனவற்றை தூக்கி போட்டுடைத்து அவற்றின் மீதான பிரம்மையை நொறுக்குகிற இந்தப் போராட்ட வடிவங்கள் மக்களை திரட்டுவதில் சாதகமான பங்களிப்பு ஆற்றவே செய்தது. ஆனால் இந்த சமூக அமைப்பையும் அதை கட்டிக் காக்கும் அரசு அதிகாரத்தையும் தகர்ப்பதன் மூலமே சாதிய முறைக்கான அடித்தளத்தை தகர்க்க முடியும். அதற்குப் பின்னரும் சாதியத்தின் கருத்துகள் அம்சங்களோடு நாம் போராடி தான் ஆக வேண்டும். இத்தகைய கலாச்சார புரட்சியை புரட்சிக்கு பின்னர் நிகழ்த்த வேண்டி உள்ளது". ( கோ.கேசவன் தலித்தியம் நூலில் நூல் பக்கம் 657).

பெரியார் சாதியின் அடிதளமான சமூக, பொருளாதர அம்சத்தை புரிந்துக் கொள்ளாததோடு, சாதியின் தோற்றம் அதன் இருப்பு பற்றியும் அதற்கான வர்க்க அடிப்படையையும் உள்வாங்கவில்லை எனலாம்.

சாதி ஒழிப்பு பற்றி அம்பேத்கர் நிலைப்பாடு

சாதிமுறையானது இந்தியாவின் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளிலிருந்து எழவில்லை; மாறாக இந்துமதமே சாதியத்தை தோற்றுவித்தது என்று சாதியத்தின் தோற்றம் பற்றி அம்பேத்கர் கருதினார். இதன் காரணமாக, உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான புரட்சி மூலம் அல்லாமல், இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்வதன் மூலமாகவே சாதியை ஒழிப்பது சாத்தியம் எனக் கருதினார். இதனால், இந்து மதச் சீர்திருத்தத்திற்கான திட்டம் என்ற முறையில், வேதங்களை ஒழிப்பது; ஒரு பொதுவான அதிகாரபூர்வமான இந்து மதத் திருமறைகளை உருவாக்குவது; அரசாங்கமே புரோகிதர்களை நியமிப்பது, புரோகிதர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகளை நடத்துவது; அந்தத் தேர்வுகளில் எல்லாச் சாதியினரும் பங்குகொள்வது; அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நியமனம் செய்வது என்பனவற்றை முன்மொழிந்தார். இவை போன்றவற்றை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றும் கூறினார். இத்தகைய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து, பிரிட்டிஷ் நிர்வாகத்தினர். அவர்கள் கிறிஸ்த்துவர்கள் என்ற காரணத்தால், சாதி ஒழிப்பதற்கு பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்.

பிரிட்டிஷ் ஆட்சி ஒரு ஏகாதிபத்திய ஆட்சி; அது தன் காலனி ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நிலப்பிரபுத்துவத்துடன் (முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்திமுறையைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களுடன்) கூட்டணி கொண்டிருப்பதைப் பார்க்க மறுத்தார். இதன் விளைவாக, ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம்தான் சாதி ஒழிப்பு சாத்தியம் என்பதை அவர் ஏற்கவில்லை. அதாவது, விவசாய புரட்சியும், தேசியப் புரட்சியும் இணையும் போதுதான் அது சாத்தியம் ஆகும் என்பதை அவர் ஏற்கவில்லை. இதன்காரணமாக, நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த விவசாயப் புரட்சி, ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசியப் புரட்சி ஆகிய இரண்டையும் அவர் புறக்கணித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய நிலப்பிரபுத்துவமும் இந்திய மக்களைப் பீடித்திருக்கும் இரண்டு பகைகள் என்று அம்பேத்கர் பலமுறை பேசியிருந்த போதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் சொந்தநாட்டில், தீண்டத்தகாதவர்களை வைத்துக் கொண்டு, தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடதவரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அர்த்தம் உள்ளது ஆகாது என்றும் அவர் கூறினார். மேலும், இந்த நாட்டில் இருக்கும் ஏகாதிபத்திய நண்பர்களான ஆலைஅதிபர்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோருக்கு எதிராகப் போராடாமல், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, வலுவான போராட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை என்றும் கூறினார். இவ்வாறு அவர் சரியாகக் கூறினாலும், தேசிய விடுதலை மற்றும் சாதி ஒழிப்புக்கு ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும்; அவர்களின் அடிவருடிகளான தரகுமுதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தும் போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு மாறாக, சாதி ஒழிப்புக்கு சமூகப் புரட்சியை முன்னிபந்தனை ஆக்கினார். அதாவது, ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு முன்னரே சமூகப்புரட்சி நிகழவேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார்.

பிரிட்டிஷ் காலனியாட்சி, சாதிய ஒழிப்புக்கு பங்காற்றும் எனக் கருதி அதன்மீது நம்பிக்கை கொண்டு அதனுடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கை மேற்கொண்டார். இதன்விளைவாக, காலனி அரசுடன் “சமநிலை பராமரிப்பது” என்பது அம்பேத்கரின் அணுகுமுறையாக இருந்தது. மேலும், அம்பேத்கரின் தரகுமுதலாளிய தாராளவாதச் சிந்தனைப்போக்கு, அரசின் வர்க்கத்தன்மையைக் காணமறுப்பதற்கு இட்டுச் சென்றது. அரசு நடுநிலையானது என்கிற கற்பனாவாதக் கண்ணோட்டத்திலிருந்து, சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம், அரசின் தன்மையையே மாற்றிவிட முடியும் என்ற மிகப்பிற்போக்கான கருத்தை மக்களிடத்திலே, அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடத்திலே, பரப்பவும் செய்தார்.

நேரு பிரதமராக இருந்தபொழுது மத்திய அமைச்சரவையில் அம்பேத்கர் சேர்ந்துக்கொண்டார். இதனால் சாதியால் தாழ்த்தப்பட்டமக்களிடம் நாடாளுமன்ற முறை மட்டுமே, அதிகாரப்பகிர்வு மற்றும் சாதி ஒழிப்புக்கான ஒரேவழி என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதிகாரத்தை அடைவதற்கு அவர்கள் தேர்தல் நடைமுறையை நம்பவேண்டிய நிலை ஏற்பட்டது. அரசியலில் நீடிப்பதற்காக, அம்பேத்கர் வழிவந்தவர்கள், ஏதாவது ஒரு அரசியல் கட்சியோடு கூட்டுச் சேர்வது நிரந்தரமாகிவிட்டது. முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் நடைமுறை இங்கேயும் நிலைகொண்டது. இவ்வாறு தலித் இயக்கம் ஆளும் வர்க்கத்தின் நிரந்தரத் தொங்குசதையாக மாறியது. சாதியத்திற்கு, நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே அடித்தளமாக விளங்குகிறது. அடித்தளத்தை அசைக்காமலே, அதன் மேற்கட்டுமானத்தை- சாதி முறையை ஒழிக்கமுடியும் என்பது அம்பேத்கரின் நிலைபாடாக இருந்தது. சாதிய ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதினார். இந்த நிலைபாட்டிலிருந்து 1920 ஆண்டில் பிற்பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் மதச்சமத்துவத்திற்காகத் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடங்கினார்.

இன்றும் அவரை பின்பற்றுவோர் இதே நிலையில் உள்ளனர் என்பேன்.

சாதி ரீதியாக கொடூரமான ஒடுக்குமுறைகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் காரணமான சமூக அமைப்பை கட்டிக் காக்கும் அரசமைப்பை பற்றி கேள்வி கேட்காமல் அதன் அங்கமான பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதை தீர்வாக முன்னிருத்தும் பொழுதே இவர்கள் நோக்கம் சமூக மாற்றமில்லை; இப்போது உள்ள அமைப்புமுறைக்குள்ளேயே இடம் தேடி வாழ்தல்தான் அதாவது இந்த தீங்குகளை, கொடூரங்களை சகித்துக் கொண்டு வாழ்தலே என்பதாகிறது. வர்க்கமாக திரள வேண்டிய தலித் மக்களை சாதியாக ஒன்று திரட்ட சாதி கட்சிகளும் தன்னார்வ குழுக்களும் முயன்றுக் கொண்டுள்ளனர். அதில் குறிப்பாக உழைக்கும் மக்கள் பல்வேறு சாதி பிரிவினைகளில் பிரிந்துக் கிடக்கின்றனர். உழைக்கும் ஏழை எளிய மக்கள் பல்வேறு சாதிகளில் உள்ளனர் அவர்கள் வர்க்கமாக ஒன்றிணையாமல் இருக்க இவர்கள் சாதியாக பிளவுப்படுத்துகின்றனர்.

தலித்துகளின் காப்பாளர்களாக வலம் வரும் கட்சிகள் தினம் தினம் தலித்துகள் படும் அவலங்களை பற்றி துளியும் அக்கறை இன்றி தனது ஓட்டரசியலை மையமாகக் கொண்டே செயல்படுகின்றன. வேங்கைவயல் நிகழ்வுக்கு முன்னும் பின்னும் தலித்துகளுக்கானப் பல பிரச்சினைகளை இவர்கள் கையாண்ட கையாளும் விதம் அம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை. இன்று தலித் மக்கள் படும் துன்ப துயரங்களை பேச பலர் உள்ளனர். ஆனால் அவர்களின் இன்னல்களுக்கு தீர்வை நோக்கி தலித் அரசியல்வாதிகளோ அல்லது தன்னார்வக குழுக்களோ இல்லை எனலாம். இதனை சில கடந்தகால நிகழ்வுகளோடு பொறுத்தி பார்ப்போம்.

கீழ்வெண்மணியிலாகட்டும், தருமபுரி, வடஆற்காடு பகுதியில் அன்று சாதி தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தலித் மற்றும் பிறசாதி உழைக்கும் ஏழை எளிய மக்களை ஒன்றிணைத்து அன்றைய புரட்சியை நேசித்த கம்யூனிஸ்ட்டுகள் போராடினர் அவர்கள் அன்று சாதித்தும் காட்டினர். இன்று புரட்சிகர கட்சி எதுவும் இல்லாத நிலையில் ஏகாதிபத்திய எதிர்புரட்சிகர சக்திகள் மேலோங்கியுள்ள நிலையில் அவர்களின் வெற்றிடத்தில் தோன்றிய பல்வேறு அமைப்புகள் குறிப்பாக சமூகத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சாதி மக்களை ஒரு பிரிவினர் “தலித்’ என்ற பெயரில் அணிதிரள்வது முற்போக்கானது, சமூகவிடுதலைக்கு அவசியமானது, “உயர்சாதியை எதிர்க்க உதவுகின்றது’’ எனப் பலவாராக தலித்தியவாதிகள் குறிப்பிடுகிறார்கள்.

உண்மையில் தலித் என்ற பெயரில் அவர்களை உயர்விக்க பயன்படுகிறதா எனும் இடத்தில் மிக அர்ப்ப தொகையில் சிலர் வாழ பலர் இன்றும் நசுக்கப்பட்டு கிடப்பதுதான் நடைமுறை நிரூபணம். ஆகையால் ‘தலித்’ பெயரில் இயங்கும் பலரும் அவர்களின் விடுதலைக்கு பங்களிக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.

இன்று சாதி அடிப்படைவாதிகளான இந்துத்துவவை ஏற்று நடக்க பின்பற்ற ஒரு பிழைப்புவாத கூட்டம் இயக்கம் “தலித்” பெயரில் இயங்கும் பொழுது அவர்களின் நோக்கம் எந்த மக்களின் நலனுக்கானது புரிந்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்