இலக்கு இணைய இதழ் வெளியீடுகளாக விரைவில் வரவுள்ளவை

 1) அரசு பற்றி -லெனின் நூலுக்கு விளக்கமுடன். ஆசான் லெனின் நூலை விளக்கி கொண்டு வந்துள்ளோம். இன்றைய ஏகாதிபத்தியம் உலகையே தன் மூலதன ஆதிக்கதால் அடிமைப் படுத்தும் கொடூரத்தை புரிந்துக் கொள்ள, இந்த அரசை திருத்த சமரச படுத்த முனோவோரை அம்பலப்படுத்தி மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலை புரிந்துக் கொள்ள ஒரு முயற்சியே தோழர்களே- இந்த நூலை Pdf வடிவில் இணையத்தில் பகிர்ந்துக் கொள்ளவுள்ளோம் அதே நேரத்தில் நூல் வடிவில் பிர்ண்ட் வெர்சன் கொண்டுவரும் முயற்சியிலும் உள்ளோம். நூலின் பக்கம் 140. குறைவான விலையில் கொண்டுவரவுள்ளோம். தேவைப்படுவோர் விருப்பம் தெரிவித்தால் அதற்கேற்றவகையில் print செய்து அனுப்ப நினைக்கிறோம். 

வரவுள்ள நூல். அரசு பற்றி லெனின் விளக்கவுறையுடன்.

இன்று தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைபணியாளர்கள் செவிலியர் மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் இன்று இந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அரசான போலிஸ் அவர்களை அச்சுறுத்துகிறது. ஆக அரசை புரிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.

உழைக்கும் மக்கள் அவர்களின் எந்த பிரசினைக்கு போராடினாலும், போலிஸின் குண்டாந்தடிதான் முதலில் சட்டம் ஒருங்கு என்ற பெயரில் வருகிறது, ஆனால் சம்பந்தபட்ட துறைசார்ந்தவர்கள் வருவதில்லை; தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வருவதில்லை! ஆனால் தங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் ஓடோடி வருகின்றனர் ஏன்? அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் அதிகாரம் இவர்களுக்கு. அதேபோல் உத்தரவு போடும் போலிஸ் அதிகாரிகளும்; நீதி வழங்கும் நீதிபதிகளும்; சிறை கொட்டடியின் அதிகாரிகளும் மக்களினால் தேர்ந்தெடுக்கபட்டவர்களா!? உழைக்கும் மக்களை தண்டிக்கும் உரிமை எப்படி அவர்களுக்கு? உழைக்கும் மக்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இவர்கள் மக்களின் அன்றாட வாழ்வை ஆட்டிப்படைப்பதாக உள்ளது

அடுத்த நூல் சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? நூல் அடுத்தது இதனை நமக்கான தேவையை முன்னிலப்படுத்தி எழுதப்பட்டுள்ளது இதன் பக்கங்கள் 192. விரைவில் PDF மற்றும் PRINT கொண்டுவரவுள்ளோம்.

2).மார்க்சிய ஆசான்கள் ஏராளமான போதனைகளை நமக்கு வழங்கியுள்ளார்கள். அந்த போதனைகளை நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் லியுஷாவோகி எழுதிய சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி என்ற நூலை நாம் படித்து புரிந்துகொள்வோம். அன்றைய சீனாவைப் போலவே இங்கும் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைத்து உறுதிப்படுத்தும் நிலையிலேயே நாம் உள்ளோம். மேலும் கம்யூனிஸ்டுகள் பல பிரிவாக பிரிந்திருக்கும் நிலையிலேயே நாம் உள்ளோம். ஆகவே இத்தகைய மோசமான நிலையிலுள்ள நாம் ஒவ்வொருவரும் நமது மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்வதும் அதனை திடப்படுத்துவதும் மிகமிக அவசியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

 3). சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில் நூல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்.

சாதி ஒழிப்பு போராளிகளாய் களத்தில் உள்ளோர் சாதியின் தோற்றம் இன்று சாதியின் இருப்பை புரிந்துக் கொள்ளாமல். மந்திரத்தில் மாங்காய் வரவழைப்பது போல் சாதியை ஒழிக்க கிளம்பியுள்ள இவர்கள் எதையெதையோ பேசி உழைக்கும் மக்களை ஏமாற்றுகின்றனர். உழைக்கும் மக்களுக்கு தேவையான சமூக அறிவை புகட்ட வேண்டியவர்களே தங்களுக்கான சமூக அறிவின்றி உள்ளனர். மத கோட்பாடுகள் பின்னும் இச்சமூக அறிவுஜீவிகளான அம்பேத்கர் பெரியார் போன்றோரை முன்னிலை படுத்தியும் சமூக இயக்கத்தை புரிந்துக் கொள்ளாமல் சாதியின் இருப்பையும் ஒழிப்பையும் எங்கே நிகழ்த்த போகின்றனர்? ஆகையால் கம்யூனிஸ்டுகள் தங்களை ஆயத்த படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சிதான் இந்த நூல். இந்த நூல் சென்னை புத்த கண்காட்சிக்கு கொண்டுவர முயலுவோம். தேவைப்படுவோர் தொடர்ப்பு கொள்ளவும்.

4). ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலில் உள்ள குழப்பத்தை விரிவாக விவாதிக்க

தோழர்களே,

தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரின் முதல் கடமை மார்க்சிய லெனினியத்தை பாதுகாத்து வளர்த்தெடுப்பது, அதன் மீது தொடரும் தாக்குதல்களை முறியடிப்பது; இரண்டாவது மார்க்சிய லெனினியத்தை தனது சொந்த நாட்டுக்குப் பொருத்தி சமூக மாற்றத்தை முன்கொண்டு செல்வது. இப்பணிகளை முன்கொண்டு செல்வது கம்யூனிசத்தை நேசிப்பவர்களின் உண்மையான பணியாக இருக்கும். அதனால்தான் கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பு குழு மற்றும் இலக்கு இணையதளம் ஒன்றிணைந்து மார்க்சிய லெனினிய கல்விக் கழகம் என்ற அமைப்பை நிறுவியுள்ளோம். மார்க்சிய அடிப்படைகளை புரிந்துக் கொள்ளவும் நம்மிடையே உள்ள பல்வேறு குழப்பங்களுக்கு விடைகாணவும் சில சிறிய வெளியீடுகள் கொண்டுவர தொடங்கியுள்ளதன் அடிப்படையில் இந்த நூலைக் கொண்டு வருவதை முதன்மையாக கருதுகிறோம். அதன் அடிப்படையில் சில வெளியீடுகளை வரிசையாக கொண்டுவர முயன்றுள்ளோம். அதன்படி இந்த வெளியீடு உங்கள் முன்அரைக்காலனி மறுகாலனி புதியகாலனி குழப்பமும் தெளிவும் நூலை வைத்துள்ளோம். இதனை வாசித்து விவாதிக்க அனைவரையும் அழைக்கின்றோம் தோழர்களே.

எமது இணையதளத்தில் வெளியிடும் கருத்துகளை இணைய இதழ்களை, வெளியீடுகளை படித்து ஆதரவு நல்கியும் விமர்சனங்களை முன்வைத்த தோழர்களின் அணுகுமுறை எமக்கு மேலும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டுகிறது. அதே சமயம் சிலர் எமது வெளியீடுகளை படித்துவிட்டு கருத்துச் சொல்லாமல் இருப்பது எமக்கு வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது சில தோழர்கள் படித்துவிட்டு இவர்களுக்கெல்லாம் பதில் சொன்னால் நமது இமேஜ் என்னாவது என்று மௌனம் காத்து வருகின்றனர். சில தோழர்கள் நூல்களை புரட்டிப் பார்த்துவிட்டு அமைப்பில் விவாதித்துவிட்டு கருத்து சொல்வதாக கூறுகின்றனர். ஆனாலும் ஒன்று மட்டும் உண்மை. “மரம் ஓய்வு நாடினாலும் காற்று விடுவதில்லை” என்ற புகழ்பெற்ற வரிகளை மறந்து விட வேண்டாம்.

5). communist international வரலாற்று பக்கங்களிலிருந்து

கம்யூனிஸ்ட் அகிலமும் வரலாற்று வழியில் அகிலங்களின் தோற்றமும் மற்றும் களைப்பும் தோழர்கள் ஸ்டாலின் மாவோ மீதான ட்ராட்ஸ்கிய வாதிகளின் அவதூறு கருத்துகளுக்கு பதிலும். சர்வதேச அளவில் ஏகாதிபத்திய சக்திகள் மேலோங்கியுள்ள நிலையில் சோசலிச சக்திகள் பின்னடைந்தும் இருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பல பிரிவுகளாக பிரிந்து நின்று ஆளும் கும்பலை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்ற காலகட்டம். மார்க்சியம் தோற்றுவிட்டது சோசலிசம் சாத்தியமில்லை என்று ஏகாதிபத்திய சக்திகள் கூப்பாடு போடும் காலகட்டத்தில் சிலர் கம்யூனிஸ்ட் அகிலம் மற்றும் தோழர் ஸ்டாலின் தோழர் மாவோ மீது எதிரிகள் கூட சொல்லத் துணியாத வார்த்தைகளான, துரோகிகள் என்றும் கலைப்புவாதிகள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் சர்வதேச மார்க்சிய லெனினிய இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். உண்மையான மார்க்சிய லெனினிய சக்திகள், ட்ராட்ஸ்கியவாதிகளின் கருத்தை வன்மையாக கண்டிக்க வேண்டும். அதற்கான வெளிப்பாடே இந்த சிறுநூல்.

6). NGO கள் யார்அறிவோம்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், “ஐரோப்பாவை கம்யூனிச பூதாம் ஆட்டுவதாக…..” கூறும் ஆசான்கள் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் முதலாளித்துவ புனித கூட்டணி பற்றி பேசியிருப்பர். ஆனால் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின் பின்னரான கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சி சோசலிச புரட்சியின் நூற்றாண்டாய் இருக்கவே ஏகாதிபத்தியம் தன்னை இழக்காமல் நிரந்தரமாக கட்டிக்காக்க தன் எதிரி முகாமில் செய்தவை பற்றி பல்வேறு தகவல்கள் நம் முன் உள்ளன. அதன் அடிப்படையில் இந்த தேடல் தொடரும்.

ஒரு காலத்தில் தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டு இருந்த இடதுசாரி அமைப்பின் மற்றும் முதலாளித்துவ அமைப்பின் தலைவர்களால் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருந்த மக்கள் அந்த அமைப்புகளிலிருந்து வெளியேறி புரட்சிகரமான அமைப்புகள் மார்க்சிய லெனினிய அமைப்புகள்தான் என்று கருதி அந்த அமைப்புகளில் இணைந்து செயல்பட முன்வந்தனர். கலாச்சாரத் தளத்திலும் சித்தாந்தத் தளத்திலும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை எதிர்க்க வேண்டும். அதேபோலவே ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ சித்தாந்தம் மற்றும் சிந்தனைமுறையை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த நிலையில் ஏகாதிபத்தியத்தியத்தோடும் இங்குள்ள பெருமுதலாளிகளோடும், நிலப்பிரபுத்துவ பிற்போக்கு கிராமப்புற ஆதிக்க சக்திகளோடும் தொடர்பு வைத்திருக்கும் அவர்களுக்காகவே பாடுபடும் அரசியல் சக்திகளோடு உறவுகொண்டும். அவர்களின் கொள்கை மற்றும் அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுவதன் மூலம் ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ கருத்துக்களையும் அதன் ஆதிக்கத்தையும் நாம் எதிர்த்துப் போராட முடியாது. அப்படி போராடுவது நமக்கு எதிர்விளைவையே தரும். ஆகவே ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த நமது போராட்டத்துக்கு மார்க்சிய லெனினியம் மட்டுமே ஒரே தத்துவ வழிகாட்டுதலாக இருக்க முடியும். இந்த உண்மையை உணர்ந்துகொண்ட இளைஞர்கள் மார்க்சியத்தை கற்றுக்கொள்ளவும், அதனை ஏற்றுக்கொண்டு செயல்படவும் முன்வந்தனர். ஆனால் பல குழுக்களாகப் பிளவுபட்டிருந்த மார்க்சிய லெனினியக் குழுக்களிலுள்ள தலைவர்கள் அமைப்பில் இணைந்த இளைஞர்களுக்கு மார்க்சியத்தின் அடிப்படைகளை கற்றுக்கொடுக்க பிடிவாதமாகமறுத்துவிட்டார்கள். இதன் காரணமாக திருத்தல்வாத அமைப்பிலும் மார்க்சிய லெனினியக் குழுக்களிலும் உள்ள தோழர்கள் மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ளவில்லை. இந்த அமைப்புகளிலெல்லாம் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு கடைபிடிப்பதே இல்லை. அதிகார மையம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை செயல்படுத்த வேண்டியதுதான் ஊழியர்களின் கடமையாகும். தலைவர்களை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்ற நிலையே உள்ளது. இதன் காரணமாக மார்க்சிய லெனினியக் குழுக்களின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். இந்தச் சூழலில் மார்க்சிய லெனினியக் குழுக்கள் மேலும் மேலும் பிளவுண்டு சிறு குழுக்களாக மாறிக்கொண்டு இருக்கும்போது; சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளின்தலைவர்கள் தம்முடைய கட்சிதான் பிளவுபடாமல் பெரிய கட்சியாக நீடிக்கிறது என்றும் இந்தக்கட்சியை எதிர்த்து குறைசொல்பவர்கள் எல்லோரும் துரோகிகள் என்ற கருத்தை அணிகளிடம் பரப்பி அவர்களது அமைப்பைபாதுகாத்துக்கொள்ள முயல்கிறார்கள். எனினும் இந்தத் தலைவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்துப் போராட முடியாதவர்கள் இந்தக்கட்சியிலிருந்து வெளியேறி திமுக, அதிமுக போன்ற பிற்போக்கு முதலாளித்துவ கட்சியில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தநிலையை மாற்றுவதற்கு ஒரேவழி கட்சியிலுள்ளவர்களுக்கு மார்க்சியத்தின் அடிப்படைகளை போதித்துசித்தாந்த பலமுள்ளவர்களாக மாற்றுவதே முதன்மையான பணியாகும். இன்றையசூழல் தொடர்ந்து நீடித்தால்பாசிச கட்சியின் வளர்ச்சியை கம்யூனிஸ்டுகளால் தடுத்துநிறுத்த முடியாது. பாசிசக் கொள்கைகளை முறியடிக்கும் வலிமை மார்க்சிய லெனினியத்துக்கு மட்டுமே உள்ளது. வரலாற்றில் பாசிசத்தை வீழ்த்தியது மார்க்சிய லெனினியமே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே கம்யூனிசத்தை நேசிப்பவர்கள் கட்சித் தலைவர்களின் மீது நம்பிக்கை கொள்வதைக்காட்டிலும் மார்க்சிய ஆசான்களது போதனைகளின் மீது நம்பிக்கைவைத்து அதனை கற்றுபின்பற்ற வேண்டும்.

இதனை மறுத்து தங்கள் மனம்போன போக்கில் எழுதும் மார்க்சியம் அற்ற போக்கும் ஏகாதிபத்திய எஜெண்டுகள் NGO யார் அவர்களின் பணி என்ன ஒரு தேடல்தான் இந்த நூல்.

ஆகையால் தோழர்களே... மார்க்சியம் எனும் கடலில் முத்தெடுக்க மார்க்சியம் கற்று தேறவேண்டியுள்ளோம். உண்மையில் மார்க்சிய ஆசான்கள் போதித்ததையே ஏற்க மறுத்து குழப்புவோர்களை முறியடிக்க ஆசான்களின் எழுத்துகளை முன் வைத்து நமது நாட்டிற்குறிய குறிப்பான பொதுவான நிலைகளை புரிய புரிந்துக் கொள்ள முயன்றூள்ளோம் தோழர்களே.

தேவை படுவோர் 7010134299 என்ற பகுதியில் தொடர்பு கொள்க pdf நூல்கள் பதிவேற்றம் செய்தவுடன் அனுப்பவும் அல்லது printed நூல் வேண்டுமென்றாலும் தெரிவிக்க தோழர்களே.  

இன்னும் பின்னர் எங்களின் வெளியீடுகளை உங்கள் முன் வைக்க உள்ளோம் தோழர்களே.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்