நமது சிந்தனை விவாதம் மற்றும் நடைமுறைக்கான வழிமுறை குறித்து.

 நமது சிந்தனை விவாதம் மற்றும் நடைமுறைக்கான வழிமுறை குறித்து.

பாகம் 1


1. சாதிப்பிரச்சனை என்றாலும் தேசிய இனப்பிரச்சனை என்றாலும் வேறு எந்தப்பிரச்சனை என்றாலும் அதனை தீர்ப்பதற்கு ஒரு பொருத்தமானஅரசின் தேவையை நாம் உணர வேண்டும். அதாவது மக்கள் சந்திக்கும்பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதனை ஒரு பொருத்தமான அரசின்மூலமேதான் தீர்க்க முடியும். ஆகவே பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் கண்டறிய வேண்டிதுதான் நமது முதன்மையான கடமையாகும்.

2. நமக்கான அரசில் யார் யாரெல்லாம் பங்குகொள்ள வேண்டும் என்பதைநாம் தீர்மானிக்க வேண்டும்.

3. அரசின் கொள்கை முடிவை உருவாக்குவதில் பெரும்பான்மையான மக்களுக்கு பங்கு இருக்க வேண்டும்.

4. அரசின் கொள்கை முடிவை செயல்படுத்தும் அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

5. ஆட்சியில் உள்ளவர்கள் தவறு செய்தால் அவர்களை உடனடியாக தண்டிக்கும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும்.

6. பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். இந்த அரசு அதிகாரிகள் மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

7. சாதி தீண்டாமை கொடுமைகள் செய்யும் நபர்களை மக்கள் நீதிமன்றத்தில் விசாரித்து மக்களின் ஆதரவோடு தண்டிக்கப்பட வேண்டும்.

8. அரசின் கொள்கை முடிவெடுப்பதிலும் அதனை நடைமுறைப் படுத்துதலிலும் பெரும்பான்மையான மக்களை நேரடியாக ஈடுபடுத்த வேண்டும்.

9. அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை அனைத்து மக்களுக்கும் புரிய வைப்பதற்கான கல்வி இயக்கத்தை நடத்த வேண்டும்.

10. மார்க்சியம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான தத்துவம். மார்க்சியமல்லாத பிற தத்துவங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு எதிராக துரோகம் செய்யும் தத்துவமே என்பதை அம்பலப்படுத்துவதற்கான கல்வி இயக்கத்தை நாம் நடத்திட வேண்டும்.

11. கம்யூன் வகைப்பட்ட அரசைப் பற்றி கம்யூனிஸ்டுகள் விரிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொண்டு மக்களிடம் பரப்ப வேண்டும்.

12. இந்த பாராளுமன்ற முறையிலான அரசு நடைமுறையில் எப்படியெல்லாம் மக்களுக்கு துரோகம் செய்து உழைக்கும் மக்களை ஒடுக்குகிறது என்ற உண்மையை உதாரணமாக விவசாயிகளின் போராட்டத்தையும் துப்புறவு தொழிலாளர்களின் போராட்டத்தையும் எப்படி நசுக்கியது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி இந்த மக்கள் விரோத அரசமைப்பையே தகர்த்திட வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.

13. அரசுத் தலைவர்களின் அதிகாரம் என்பது மக்களுக்கு சேவைசெய்வதற்கான கடமையாக இருக்க வேண்டும். அதாவது மக்களின் மீது அதிகாரத்தை செலுத்துவதாக இல்லாமல் மக்களுக்காகப் பாடுபடுவதற்கான பொறுப்பாக இருக்க வேண்டும். மக்களின் எதிரிகளை மட்டுமே அடக்குவதற்கு அதிகாரத்தை அல்லது வன்முறையைப் பயன்படுத்த வேண்டும், அதுவும் மக்களின் ஆதரவோடுதான் அதனைச் செய்ய வேண்டும்.

14. அரசு என்றால் போலீஸ், இராணுவம், வழக்காடு மன்றம், சிறைச்சாலை, நிர்வாகத்துறை மக்களின் நலனுக்கான மருத்துவத்துறை போன்ற நிறுவனங்களாகும். அரசாங்கம் என்றால், எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரிகள் போன்றவர்களைக்கொண்ட அமைப்பாகும். இங்குள்ள அரசைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் மக்களுக்கு போதனை செய்து பாட்டாளி வர்க்க அரசின் தேவையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

15. தேசிய இனப்பிரச்சனையில் கம்யூனிஸ்டுகளின் கொள்கை, ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுதந்திரம் வேண்டும். அதேவேளையில் ஒவ்வொரு தேசிய இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடம் ஒற்றுமை பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். ஒரு தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்காக பிற இனத்தின் மீது வெறுப்புணர்வு ஊட்டப்படுவதை எதிர்த்துப் போராட வேண்டும்.

16. சாதிப்பிரச்சனையில் சாதியால் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது செலுத்தப்படும் தீண்டாமை கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். அதே வேளையில் சாதியால் தாழ்த்தப்பட்டவர்களும் மற்றும் பிற சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும் இடையில் ஒற்றுமையை பாதுகாத்து வளர்க்க வேண்டும். தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திற்காக சாதிகளுக்கு இடையே ஒற்றுமையை சீர்குழைக்கும் பிரிவினைவாதிகளை எதிர்த்தும் நாம் போராட வேண்டும். சாதியால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஒன்றுபட்டு போராட வேண்டும் என்ற பிளவுவாதத்தை நாம் எதிர்க்க வேண்டும். அனைத்துச் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவதன் மூலமே தீண்டாமை கொடுமையை ஒழிக்க முடியும் சாதிகளுக்கு இடையே சமத்துவம் கண்டு சாதிகளே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும்.

தொடரும்.....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்