"தேசிய இனப்பிரச்சினைக் குறித்து" நேற்று நாங்கள் வாசித்த பகுதியிலிருந்தே கீழ்வருபவண:-
ஆசான் லெனின் எவ்வளவு தெளிவாக கூறியுள்ளார் பாருங்கள், (அவரின் எழுத்துகளே)
முதலாளித்துவத்தின் கீழ் தேசிய இனங்களின் சுய நிர்ணயம் "சிவில் அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுத்தள் ஜனநாயக குடியரசு முதலியவை எவ்வாறு நடைமுறையானவை அல்லவோ" அதேபோல "காலனி நாடுகளுக்கு உடனடியாக விடுதலை தர வேண்டும் என்ற கோரிக்கையும் நடைமுறையானது அல்ல" (அதாவது பல புரட்சிகள் இன்றி அதை அடைய முடியாது, சோசலிசம் இன்றி அது நிலைக்காது) என்று நமது ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
மேலும் காலணி நாடுகளுக்கு விடுதலை தரப்பட வேண்டும் என்று கோருவது "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வது"தான் என்று அது கூறுகிறது.
சுய நிர்ணயத்தை எதிர்ப்பவர்களின் பிரதான ஆதாரம் "அது நடைமுறை அல்லாதது என்பதுதான்". இதே கருத்துதான் (சில நுண்ணிய மாறுதல்களுடன்) "பொருளாதார,அரசியல் குவிவு" விஷயத்தைப் பற்றி குறிப்பிடும் போதும் பேசப்படுகிறது.
காலணிகளை கைப்பற்றி ஆக்கிரமித்து சேர்த்துக் கொள்வதால் கூட குவிவு ஏற்படுகிறது என்பது தெளிவு. ... காலனி நாடுகள் பண்டப் பரிவர்த்தனைக்குள் - ஆனால் முதலாளித்துவ உற்பத்திக்குள் அல்ல - ஈர்க்கப்பட்டிருந்தன. ஏகாதிபத்தியம் இதை மாற்றி விட்டது. ஏகாதிபத்தியம் என்றால் மற்ற அம்சங்களுடன் மூலதன ஏற்றுமதியும் கூடதான். பெருகி வரும் அளவில் முதலாளித்து உற்பத்தி முறையானது காலணிகளில் புகுத்தப்படுகிறது. காலணிகள் ஐரோப்பிய நிதி மூலதனத்தை சார்ந்த நிற்கின்றன அவற்றை மீட்க முடியாது. எனவே ராணுவ கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தாலும் விஸ்தரிப்பு என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தாலும் காலணிகள் தனியே பிரிவது என்பது சோசலிசத்தின் கீழ் மட்டும்தான் பொதுவாக சாத்தியமாகும்.
முதலாளித்துவத்தின் கீழ் விதிவிலக்கு என்ற முறையில் அல்லது காலனி நாடுகளிலும் அவற்றை ஆளும் தலைமை நாடுகளில் ஏற்படும் தொடர் புரட்சிகளின் எழுச்சிகளினால் மட்டுமே அது சாத்தியமாகும்.
(மேலும் லெனின், சோசலிச சமூகத்தில் ஏற்படும் சாதகம் பற்றி குறிப்பீட்டுள்ளார்.-எமது குறிப்பு)
நீண்ட நாட்களாக ஒடுக்கப்பட்டு வந்த தேசிய இனங்களின் மிக வளர்ச்சி பெற்ற சுய கௌரவ ஜனநாயக உணர்வு, நேற்று வரை ஒடுக்கி வந்த தேசிய இனங்கள் மதித்து நடந்து, அரசு கட்டுமானம் உட்பட எல்லா விஷயங்களிலும் தங்களது சொந்த அரசு அமைக்கும் அனுபவத்திலும்; அவர்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தின் கீழ் இந்த அனுபவம் என்பது போர், தனிமை, தனித்துவம் சிறப்பான நிலையில் இருக்கும் சிறிய தேசிய இனங்கள் (ஹாலந்து, ஸ்விட்சர்லேண்ட்) குறுகிய தன்முனைப்பு ஆகிய அனைத்தையும் குறிக்கும். ஆனால் சோசலிசத்தின் கீழ் மேற் சொல்லப்பட்ட இந்த பொருளாதார நோக்கங்களை மட்டுமே கொண்டு தனித்து நிற்க தொழிலாளர்களே ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள்; அதற்கு மாறாக அங்கு பல வகை அரசியல் வடிவங்களும், பிரிந்து போகும் உரிமையும், அரசை அமைக்கும் அனுபவம் இருக்கும். (மேற்கண்ட நூல் பக்கம் 230 லிருந்து 234 வரை)
No comments:
Post a Comment