பொருள் (Matter) என்றால் என்ன?

 மார்க்சியம் என்ன சொல்கிறது பொருள் பற்றி?

பொருள் என்பது மனித உணர்வை சாராது சுயேட்சியாய் நிலவுகிற புறநிலை எதார்த்தத்தைக் குறிக்கும் தத்துவ இயல் கருத்தமைப்பு(Category) உலகில் உள்ள எல்லா பொருள்களும் புலப்பாடுகளும் இயல்புகளும் பரஸ்பர தொடர்புகளும் உறவு நிலைகளும் இயக்க வடிவங்களும் தான் பொருள் எனப்படுவது. நம்மைச் சுற்றிலும் உள்ள உலகு அனைத்துமே இயங்கிக் கொண்டிருக்கும் பொருள்தான்- பல்வேறுபட்ட எண்ணிறந்த வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் அமைந்து, நமக்குத் தெரிய வந்திருக்கும் அல்லது இன்னமும் தெரிய வராமலிருக்கும் அதன் எல்லாப் பரஸ்பர தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டு ஓயாது இயங்கும் பொருள்தான் புறநிலைப் பொருள் ஒவ்வொன்றும் முடிவின்றி பல்வேறுபட்ட பரஸ்பர தொடர்புகளைக் கொண்டதாகும் உள்ளுறை மாற்றம் காணவும் பண்பில் மாறுபடுகிற வெவ்வேறு பொருள் வடிவங்களாய் உரு மாற்றம் பெறவும் வல்லதாகும்.

காலத்திலும் விசும்பிலும் பொருள் வரமில்லாதது அதன் கட்டமைப்பு வடிவங்கள் எண்ணிறந்தவை ஆதியும் அந்தமும் இல்லாத நிரந்தரமாய் இயங்குவதும், இயற்கை விதிகளின்படி தானே மாறிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருப்பதும் பொருளுக்குரிய உள்ளார்ந்த இயல்புகளாகும். பொருளைத் தோற்றுவிக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.

பொருள் பல்வேறு வரலாற்று பின்னனிகள்

பொருள் (Matter)

பொருள் என்பது என்ன? என்ற கேள்வி நம்மில் பலருக்கு சாதாரணமான கேள்வியாகத் தெரியலாம். மேலும், கண்ணில் தெரிகின்ற, கையால் தொடுகின்ற எல்லாமே  பொருட்கள்தான் என்ற பதிலும் நம்மிடம் இருக்கிறது.  இந்த பதில் ஓரளவு சரியானதே. ஆனால் பொருள் என்பது என்ன? என்று அறிவியல் ரீதியில் அறிந்து கொள்வதே இங்கு நமது நோக்கமாகும்.

அப்படிப் பார்க்கும் போது,

நிறைகனப்பரிமாணம் மற்றும் தனக்கான இடத்தையும் கொண்டுள்ள எதுவும் பொருள் அல்லது பருப்பொருள்  எனப்படுகிறதுஇது மட்டுமில்லாமல் அதன் (பொருள்களின்செயல்பாடுகளையும் இந்த விளக்கத்தில் சேர்த்து கொள்ள வேண்டும்உதாரணமாக ஒரு எழுதுகோலை நாம் பொருள் என்கிறோம் என்றால் அதனால் எழுதப்படுகிற எழுத்தும் ஒரு பொருள்தான்.

சாதாரண வழக்கத்தில் பொருள் என்று சொல்லும்போது பேனா, பந்து, ஜாடி, செல்போன் போன்ற கண்ணால் பார்க்க முடிகின்ற தொட்டு உணரக்கூடியவற்றையே பொருட்கள் (Things) என்று நாம் குறிப்பிடுகிறோம். அறிவியல் ரீதியில் பொருளானது பருப்பொருள் (Matter) என்று குறிப்பிடப்படுகிறது. பருப்பொருள் என்று சொல்வது பொருள் என்று சொல்வதை விட அதிக அர்த்தம் உடையதாகும்.(இக்கட்டுரையில் பொருள் என்னும் சொல் பருப்பொருள் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுள்ளது

எல்லா பருப்பொருட்களையும் நம்மால் கண்ணால் காணவும் உணரவும் முடியாது. கண்ணால் காணவும் உணரவும் முடியாத பருப்பொருட்களும் இப்பிரபஞ்சத்தில் உள்ளன. அது நம் பூமியிலிருந்து வெகுதொலைவில் இருக்கும் நட்சத்திர கூட்டமாக (Galaxy) இருக்கலாம். அல்லது நம் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளாகவும் (Microorganism)  இருக்கலாம்.

ஒரு காலம் வரையிலும் அந்த நட்சத்திர கூட்டத்தையோ, நுண்ணுயிரிகளையோ மனிதன் கண்டுபிடிக்காமல் இருந்தபோது நம்மை பொருத்தவரை அப்பொருட்கள் இல்லை. அது கண்டுபிடிக்கப்பட்டவுடன்தான் அப்பொருள் இருக்கிறது என்று நமக்கு தெரியவருகிறது. எனவே பொருள் என்பது இப்பிரபஞ்சத்தில் நிரந்தரமாக (இயக்கத்தில்) இருக்கிறது. 

           இந்தப் பிரபஞ்சத்தில் பொருளானது மூன்று நிலைகளிலும் மூன்று வகைகளிலும் உள்ளது. (விஞ்ஞானிகள் பொருட்கள் 7 நிலைகளில் உள்ளது என கண்டறிந்துள்ளனர்ஆனால் நாம் நமக்கு பொதுவாக தெரிந்த வகையில் உள்ளதை பற்றி மட்டும் விவாதிப்போம்)

பொருட்களின் நிலை (States Of States of Matter)

        



 பொருட்களின் மூன்று நிலைகள்

              பொருட்கள் பொதுவாக நமக்கு தெரிந்து திட, திரவ, வாயு என்ற மூன்று நிலையில் உள்ளனபொருட்களின் இந்த மூன்று நிலைளுக்கு காரணம் வெப்பநிலையாகும்வெப்பநிலையை பொருத்தே பொருட்களின் நிலைகள் சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் மாறுபடுகின்றனசூரியனின் பக்கத்து கோள்களான புதனிலும் வெள்ளியிலும் உலோகங்களே உருகி ஓடும் அளவு வெப்பம் உள்ளதுதூரத்தில் உள்ள கோள்களான வியாழன்சனி மற்றும் மற்ற கிரகங்கள் வாயு கோளங்களாக உள்ளனநமது பூமியின் பக்கத்து கோளான செவ்வாய் கிரகம் கூட அந்த தூரத்தில் அமையவில்லைஆனால் நமது பூமியானது சூரியனிடமிருந்து சரியான தூரத்தில் அமைந்திருக்கிறது.

பொருட்கள் இந்த மூன்று நிலைகளில் இருக்க காரணம் பொருட்களின் அணுவானது (Atom) அமைந்திருக்கும் அமைப்பாகும்அணுவே பொருட்களின் அடிப்படை அலகுகாகும். (அணுக்களை பற்றி வேறு பதிவில் விரிவாக காணலாம்). இந்த அணுக்கள் நெருக்கமாக இருப்பவை திடப்பொருட்களாக இருக்கின்றனசற்று இடைவெளிவிட்டு அணுக்கள் அமைந்திருக்கும் பொருட்கள் திரவப் பொருட்களாக இருக்கின்றனநன்றாக இடைவெளிவிட்டு அணுக்கள் அமைந்திருக்கும் பொருட்கள் வாயுக்களாக இருக்கின்றன

இவ்வாறு அணு அமைப்பு அமைந்திருக்க காரணம் நாம் முன்பே பார்த்தபடி சூரியனிடமிருந்து நம் பூமி இருக்கும் தூரம்தான்சூரியனின் வெப்பம் நமக்கு கிடைக்கும் அளவுதான்அவ்வாறு இல்லாவிட்டால் நமது பூமியில் நீர் பனிக்கட்டியாய் உறைந்து போய் இருக்கும் இல்லாவிட்டால் உலோகங்கள் ஆற்றுநீர் போல் ஓடிக்கொண்டிருக்கும்.  அணுக்கள் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அதன் நிலையிலிருந்து சற்று நெகிழ்ந்து கொடுக்கும்வெப்பம் குறைய குறைய நெருக்கமாக ஒட்டிகொள்ளும்சூரிய வெப்பம் பூமியின் நீர் அணுக்களை நெகிழ செய்கிறதுஅதனால்தான் சூரிய குடும்பத்திலேயே நம் பூமியில்தான் நீர்  அதிக அளவு திரவமாக ஓடிக்கொண்டிருக்கிறதுவெப்பம் மேலும் அதிகரித்தால் திரவமானது அதிகம் நெகிழ்ந்து விரிவடைந்து வாயுவாக மாறிவிடுகின்றதுஇந்த அணுக்களின் அமைப்புதான் பூமியில் உயிர்கள் தோன்ற முக்கிய காரணம்.

பொருட்களின் வகைகள் (Types of Matter)

                            


தனிமங்கள்



சேர்மங்கள்


கலவை


      

            இப்பிரபஞ்சத்தில் பொருட்கள் தனிமங்கள் (Elements)சேர்மங்கள் (Compound)கலவை (Mixture)  என்ற மூன்று வகைளில் உள்ளனபொருட்களின் அடிப்படை அலகு அணு என்று முன்பே பார்த்தோம்அதை போலவே மூலக்கூறு என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்நாம் பார்க்கும் பல பொருட்களுக்கு அடிப்படை அலகு மூலக்கூறு எனப்படுகிறதுஉயிர்களின் அடிப்படை அலகு செல்(cell) எனப்படுகிறதுஅப்படியானால் இவையெல்லாம் பொருட்கள் இல்லையாஎன்ற சந்தேகம் நமக்கு வரலாம்அதனை விளக்கமாக பார்க்கலாம்மேலும் எல்லாப் பொருளும் அணுக்களால் ஆனது என்றால் எல்லாப்பொருட்களும் ஓரே வகையினதாக இருக்க வேண்டும் அல்லவாஏன் வெவ்வேறு பொருட்களாக உள்ளனஇதற்கு காரணம் அணுவில் உள்ள முக்கிய அடிப்படை துகள்களான புரோட்டான் (Proton)எலக்ட்ரான் (Electron) ஆகியவற்றின் எண்ணிக்கையே ஆகும்எடுத்துகாட்டாக ஹைட்ரஜன் (Hydragen) வாயுவின் அணுவானது ஒரேயொரு புரோட்டானை மட்டுமே கொண்டுள்ளதுஅப்படியென்றால் ஒரு புரோட்டானை கொண்டுள்ள அனைத்து அணுக்களும் ஹைட்ரஜன் வாயுவாகும். 2 புரோட்டான்களை கொண்டவை ஹுலியம் (Helium) என்ற (வாயுவாகும்பொருளாகும்.  

            ஒரு பொருளை நாம் உடைத்துக் கொண்டே போனால் அது கடைசியில் பகுக்க முடியாமல் போகும்அந்த நிலையில் இருக்கும் அந்த பகுக்க முடியாத கடைசித் துகளின் பெயர்தான் அணு. (அணுவையும் பிரிக்க முடியும் ஆனால் அது நிலையான ஒரு பொருளாக இல்லாமல் துகள்களாகவும் ஆற்றலாகவும் மாறிவிடுகிறது).

            மூலக்கூறு (Molecule) என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வெவ்வேறு அணுக்களின் சேர்க்கையாகும்அப்படியானால் மூலக்கூறையும்  நம்மால் பிரிக்க முடியும் (ஆய்வகத்தில்தான்). அதனை பிரிக்கும் போது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களாக அது உடையும்இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வெவ்வேறு தனிமங்கள் இணைந்து புது பொருட்களை உண்டாக்குகின்றனஅவைதான் சேர்மங்கள் எனப்படுகின்றனஉதாரணமாக நீரை எடுத்துக் கொள்வோம்நீரின் அலகு மூலக்கூறு என்றே சொல்லப்படுகிறது அப்படியானால் நீர் ஒரு சேர்மம் என்பதை அறிந்து கொண்டோம்அதன் குறியீடு H2O என்று கூறப்படுகிறதுஹைட்ரஜன் அணுவும் ஆக்சிஜன் அணுவும் இணைந்து நீர் உண்டாகியிருப்பதை இந்த குறியீட்டை கொண்டு நாம் அறியலாம்உயிர்களின் அடிப்படை அலகான செல்லும் ஓர் சேர்மம்தான்ஆனால் அது நினைப்பதைவிட மிக சிக்கலான சேர்மங்களின் கூட்டாகும்.

            மனித கைகளாலோ அல்லது கருவிகள் கொண்டோ எளிமையாக (ஆய்வகத்தில் இல்லாமல்பிரித்தெடுக்க முடிந்த பொருட்கள் கலவை எனப்படும்அரிசியும் கல்லும் கலந்த கலவையை நம்மால் கைகளாலேயே பிரிக்க முடியும்உப்பும் தண்ணீரும் கலந்த கலவையை வெப்பத்தை கொண்டு தண்ணீரை ஆவியாக்குவதன் மூலம் பிரித்தெடுக்கலாம்இரும்புத் துகளும் மண்ணும் கலந்த கலவையை காந்தத்தை கொண்டு பிரிக்கலாம்.

            ஒரு குறிப்பிட்ட அளவில் வேதியியல் (Chemical) முறையில் கலந்துள்ள பொருள்கள் சேர்மம் எனப்படுகிறதுஅளவு விகிதம் ஏதும் இல்லாமல் பௌதீக (Physical) முறைப்படி கலந்துள்ள பொருட்கள் கலவை எனப்படுகிறது.

வரலாறு (History of Matter)

            பொருட்களை பற்றி விளக்கங்கள் ஆரம்ப காலங்களில் பல நாடுகளில் பல தத்துவவியலாளர்கள் கூறியிருக்கிறார்கள்கிரேக்க நாட்டு தாலஸ் (Theles) என்பவர் நீர் தான் அனைத்து பொருட்களின் அடிப்படை பொருள் என்று விளக்கியிருக்கிறார்அனெக்சிமென் (Anaximenes c.585BCE-528BCE). என்பவர் காற்றே அடிப்படை பொருள் என்று விளக்குகிறார்அடுத்து ஹெராக்லிடஸ் (Heraclitus c. 535 BCE-475 BCE)  என்பவர் நெருப்புதான் அடிப்படையான பொருளாக இருக்க முடியும் என்று கூறுகிறார்ஏனென்றால் நெருப்பு எல்லாப் பொருட்களையும் மாற்றும் திறன் கொண்டதாக இருக்கிறதுஅதனாலேயே நெருப்புதான் அனைத்துப் பொருட்களுக்கும் அடிப்படை என்று அவர் கூறுகிறார்எம்பிடோகில்ஸ் (Empedocles c. 490BCE-430BCE) என்பவர் நீர்நிலம்காற்றுநெருப்பு ஆகிய நான்குமே அடிப்படை பொருட்கள் என கூறுகிறார்.  டெமாக்ரிட்டஸ் (Democritus) என்பவர் இவ்வுலகில் அனைத்து பொருட்களும் கண்ணுக்கு தெரியாத பொருளால் ஆனது என்று கூறி அப்பொருளுக்கு அணு என பெயர் சூட்டினார்.

            பிற்காலங்களில் ரெனெ டெஸ்கார்ட்ஸ் (Rene Descartes (1596-1650) என்பவர் பொருட்களை பற்றி அதிக ஆய்வு செய்து பொருட்களை பற்றி பல நவீன கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

இவர் கருத்துக்களையே ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) அவர்கள் விரிவுபடுத்தி பல ஆய்வுகளை மேற்கொண்டு பொருளை பற்றிய முக்கிய முடிவுகளை விளக்கினார்பொருளே  ஆற்றல் ஆற்றலே பொருள் என்ற இவருடைய சூத்திரம் (E=MC2இன்றும் பொருள் பற்றிய முக்கிய விளக்கமாக உள்ளது.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்